தொடர்ச்சி -2 படிமங்கள்
அவளிடம் உண்மையை வரவைக்க முகத்தைச் சற்று கடினமாக்கி "டேய் அத்தையாண்ட அனிதா வயசுக்கு வந்துவிட்டதாக சொன்னீங்களாம்" உண்மையை அறிதலில் படபடப்பானது. கோபத்தை வெளிப்படுத்தி உண்மை யை வரவைத்துவிடலாம் என நினைத்தேன். கோபத்தால் பல நேரம் தோல்விதான்.
இப்படிக்கேட்டதும் மகள் கெக்...கெக்...கெக்கே என்று அடைக்க முடியாமல் சிரித்தாள். ஆண் பிள்ளைகளும் அச்சிரிப்பில் கலந்துக்கொண்டனர். எதற்கு சிரிக்கிறார்கள் என்பது தெரியாமல் நானும் சிரிப்பில் கலந்துக்கொண்டேன். ஒன்று மட்டும் விளங்கியது. எந்த நிர்பந்தமும் இல்லாமல் மனம் ஒன்றி விசாரிக்கும்போது. சுலபமாய் விடைக் கிடைக்கிறது. "வயசுக்கு வந்து ரெண்டு நாலாயிடுச்சாம்".என்று பையன் உடைத்தான். பழையப் படங்களில் உருக்கமான காட்சிக்கு கடல் பொங்கி அப்படியே நிற்குமே, அப்படியான பிம்பம் என்கண் முன் தோன்றியது.
என் மகளிடம் சிரிப்பின் வேகம் குறைந்தது. "இல்ல டாடி இந்தக் குள்ளப்பையன் சொம்மா சொல்றான்" என்றாள்.
பையன் சொல்லுவது உண்மையாய் இருந்தால் எவ்வளவு சோகம் நிறைந்த விஷயம். பெண் தன்மையை எட்டுகின்றபோது எத்தனை விசேஷமாகக் கொண்டாடுவார்கள். இதை ஏன் மறைத்தார்கள். ஒருவேளை பிள்ளைகளின் பிறந்த நாளையும், எந்த பண்டிகை நாளையும் இதுவரை பிரித்தியேக நாளாய் கொண்டாடியதே இல்லை. "அப்பா எனக்குப் பிறந்தநாள் வருக்கின்றது. இந்தப் பண்டிகைக்கு எனக்கு இரண்டு டிரஸ்." எனச்சொல்லும்போது, நீங்கள் மட்டும்தான் இந்த நாளில் பிறந்து இருக்கிறீர்களா? இதே நாளில் பிறந்த நாள் தெரியாது, பெற்றோரே யாரென்று தெரியாது, இல்லாது எத்தனை பிள்ளைகள் நாட்டில் இருக்கிறார்கள் தெரியுமா? பண்டிகை நாளில் தான் புதுத்துணி உடுத்தவேண்டுமா? உடுத்தத் துணியே இல்லாமல் எத்தனைப் பிள்ளைகள் வீதியில் திரிகின்றார்கள் பார்க்கவில்லையா?. என்று எப்போதும் எதிர்மறையாக பேசுவதால் இதையும் விசேஷம் இல்லை என்று நினைத்து விட்டார்களா? மகள் பெரியப் பொண்ணாக ஆளானது உண்மையா? இல்லையா? நான் குழம்பிக் கொண்டிருந்தேன்.
ஆளாவதற்குத் தகுதியான வயதுதான். எப்படி அறிந்துக்கொள்வது. சட்டென ஊகித்தேன். அது அவளுக்குள் நிகழ்ந்திருந்தால் நிச்சயமாக பள்ளிக்கு செல்ல மறுப்பாள். என நினைத்து, நாளைக்கு பள்ளிக்கூடம் இருக்கிறதா? போகனுமா? என்றேன்.
அவள் சவாலாக நினைத்தாளோ என்னவோ "ஆமாம் நாளைக்கு பசுமைப்படை ஒர்க் இருக்கிறது. "காலை எட்டு மணிக்கெல்லாம் போகவேண்டும். என்னை ஏழு முப்பதிற்கெல்லாம் எழுப்பிவிடு" என்றாள். நான் காலையில் தண்ணீர் சுடவைத்திருந்தேன். இன்று நான் எழுப்பாமலே அதிகாலையில் அவள் எழுந்து விட்டாள்."டாடி சேம்பு வேனும், குள்ளன வாங்கியாரச்சொல்லு" என்றாள்.
மாதம் ஒருமுறை யுத்தக்களமாகும் பெண்களின் வயிற்றை, அதிலிருந்து வெளியேறும் வேதனையின் கறைகளை என் மனைவியிடம் கண்டிருக் கிறேன். மனைவி அதை யாருக்கும் தெரியாமல் கழித்துக் கொண்டிருப்பாள். எப்படி மறைத்தாலும் ஏதாவது ஒரு தடம் எனக்குப்புரிபடும். அப்படித்தான் அன்று மகளின் நடையில் சற்று வித்தியாசம் தெரிந்தது. அனால் பள்ளிக்கு போகவேண்டும் என்கிறாளே, உண்மையை அறிய எவ்வளவுப் போராட வேண்டியிருக்கிறது. மாலையில் அக்கா வந்துவிட்டால் எல்லாம் உண்மை விலங்கிவிடும்.
நான் வெளியில் நின்று பல் துலக்கினேன் மகள் பாத்ருமில் குளித்துக்கொண் டிருந்தாள். "ஏய் அனிதா சீக்கிரம் வா. எவ்வளவு நேரம் குளிப்பே. நேரமாவுது இல்ல" என்றேன்.
அவள் இயல்பாகவே நேரம் கடந்து, பள்ளி உடையில் வந்தாள். வெள்ளை நிறக்கோடும், நீலமும் கலந்த மங்கிய டவலில் தலையை வெகுநேரம் துடைத்தாள். கொடியில் போட்டுவிட்டு வீட்டில் நுழைந்தாள். நான் தற் செயலாக திரும்பியபோது டவல் கண்ணில் பட்டது. இரண்டு, முன்று இடங்களில் திட்டுத்திட்டாக அதன் அடையாளம் தெரிந்தது. நான் பிள்ளை களைப் பிரியமாய் கொஞ்ச எத்தனிக்கும்போது பன்னி, எரும என்று பேசிவது வழக்கம். அப்படியே பழகிவிட்டதால் அது கொச்சை வார்த்தையாகவே எனக்குப் படவில்லை. பிள்ளைகளும் அதற்குப் பழகிவிட்டிருந்தார்கள். சற்று பொய் கோபத்தோடு மகளை வெளியே அழைத்து டவலைக்காட்டி "பன்னி இது இன்னா சோப்புப் போட்டு தேச்சி எடுக்கிறத்தானே" என்று கேட்டேன். பெரிய மனுசியானதை இப்போது அவளால் மறைக்க முடியவில்லை. உண்மை வெளிப்பட்டதால் அவள் சட்டென வீட்டில் நுழைந்தாள்.
நான் சற்று நிம்மதியானேன். இருந்தாலும் இப்போதுதான் என் துக்கம் அதிகமானது. ஒரு அகதியின் மன வலியோடு அச்சடங்கைக் கடந்திருப்பாளா? எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருந்திருக்குமா? இரு சக்கர வாகனத்தில் செல்வோரின் சைடுஸ்டாண்டை தள்ளும்படி சுட்டிக்காட்டும் சாதாரணக் கரிசனையாக; பள்ளியில் பெண் ஆசிரியர்கள், மாணவிகள் பெண் தன்மையைக்கடக்க காத்திருக்கும்போது அவர்களின் குடும்பச் சூழலை அறிந்து எதிர்க்கொள்ளவேண்டிய ஆலோசனைகளை கொடுத்திருப்பார்களா? "ஏய் அனிதா சைக்கிளை விட்டிட்டு வா, வண்டியில போலாம்." என்றேன். அவளும் புரிந்துக் கொண்டு அமைதியாக வந்தாள்.
அவசரக்காற்று தள்ளிச்சென்றது. நான் வெறுமனே பேச்சிக்கொடுத்தேன். "வீட்டில் ஒரு செடியைக்கூட வைக்க மாட்டேங்கிற, நீ பசுமைப்படையில சேர்ந்துட்டு காலையில கெளம்பிட்ட. அத்தை சயந்திரம் வந்திடுவாங்க. சனி, ஞாயிறு லீவு வருது, திங்கள் மட்டும் லீவு போட்டிட்டு போதும் சரியா." என்றேன். மகள் ஏற்றுக்கொண்டதைப் போல் தலையாட்டினாள். நான் மீண்டும் "சரி உங்க ஸ்கூல்ல பாத்ரூம் நிறைய இருக்கா?
திடீரென்று எதற்குக் கேட்கிறார் என்று நினைத்திருப்பாள். அவள் ஊங் காட்டிவிட்டு "இருக்குது" என்று தலையசைத்தாள்.
"தண்ணி நல்லா வருமா?"
எல்லாப் பள்ளிகளிலும் குடிநீர், பாத்ரூம் துப்புரவு என்பதுதான் மிகவும் பிரச்சனைக்குரிய தாகவே இருக்கிறது. நிறையக் குறைபாடு இருக்கத்தான் செய்கிறது. ஏதற்காக இப்போது கேட்கிறார் என்று நினைத்திருப்பாள். சற்று மனத்தயக்கத்துடன் "வரும்" என்றாள்.
மீண்டும் கேள்வியைத் தொடங்கினேன். "சரி அந்த நாப்கின் எவ்வளவு இருக்கும்" நான் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறேன். ஆண்பிள்ளைகளை விட அவள்தான் என்னிடம் மிகவும் அரவணைப்புடன் இருப்பாள். அவள் குழந் தையாக இருக்கும் போது கால், கழுவி இருக்கிறேன். குளிக்கவைத்திருக் கிறேன். இந்த நிகழ்வை மேற்கொள்வதில் குழந்தையாகவே இருக்கிறாள். நான் தாயாக மாறினேன். அப்போது வார்த்தைகள் எந்த சிக்கலும் இல்லாமல் ஒரு மெல்லிய அர்த்த முள்ளக் கவிதையாக வந்தது.
"அனிதா,.நாப்கீன் ஒண்ணு வாங்கிப் பயில வச்சிக்கோ. ஸ்கூல்ல போன உடனே, பாத்ரூமுக்குப் போய் நாப்கீன பிரிச்சி ஒண்ணு எடுத்து வச்சிக்கோ. வேஸ்ட்டஎடுத்து ஒரு கவரில் போட்டு, பின் பக்கம் குப்பை இருக்கும் இடத்தில் போட்டுட்டு" என்றேன்."சரி' என்றாள். கடையில் வண்டி நின்றது. ஒரு நாப்கின் குடுப்பா என்றேன். கடைக்காரன் பார்வையில் எதோ கேள்வியை வைத்துக் கொண்டு கொடுத்தான். நான் கருப்பு கவரில் போட்டுக்கொடுக்கக் கேட்டேன். கறுப்புக்கவர் ரகசியங்களை வெளிப்படுத்தத் தயங்குகிறது. பெண் பிள்ளைகள் பள்ளியின் நுழைவாயிலை கடக்கிறார்கள். நான் பார்த்தேன் இதில் எத்தனைக் குழந்தைகள் தங்கள் முதல் அனுபவத்தை பாரத்தோடு கழித்தார்களோ! "சரி அனிதா நான் போகட்டுமா? உள்ளப்போய் நான் சொன்னதை முதலில் செய்." என்று கிளம்பினேன். அவள் நாப்கினை இருக்கிறதா என்று தொட்டுப்பார்த் தாள். பாத்ரூம் இருக்கும் பக்கம் சற்று வேகமாக நடந்தாள்.
மற்ற நாட்களுடன் வித்தியாசம் காட்டவே ஞாயிறில் கூடுதளாக தூக்கம் வருகிறது. பிள்ளைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் காலையில் எழுந்திருக்கும்போதே சற்று முரட்டுத்தனமாக "டேய் கோயிலுக்கு போகணுமே எதுனா பயமிருக்கா. எந்திரிங்கடா போய் குளிச்சிட்டு கெளம்புங்க. என சத்தம் போட்டேன்." வாழ்வின் நிர்பந்தம் சிலவற்றிற்குக் கட்டுப்பட வேண்டிதான் இருக்கிறது. அவசரமாய் பிள்ளைகளை எழுப்பி, சீக்கிரம் வாங்க என்று சொல்லிவிட்டு நான் முதலில் சென்றுவிடுவேன்.
நான் எப்போதுமே பிரசங்கத்தை மட்டும் ஆழ்ந்து கவனிப்பேன். ஆயர் சில நாட்களில் சபையாரின் பிறந்த நாளையும், மண நாளையும் முதன்மைப்படுத்தி வாசிப்பார்கள். சில நாட்களில் பிரசங்கம் முடிந்தபிறகு பிறந்த நாள். மணநாள் வாசிப்பார்கள். இது எந்த அடிப்படையில் நடக்கிறது. ஒருவேளை வசதி படைத்தவர்கள் பிறந்தநாள் என்றாள் கடவுளின் வார்த்தைக்கு முன்னே வாழ்த்துக்களா? எனக்குக் கேள்வியாகவே இருந்தது. சிலர் தலையும் இல்லாமல், காலும் இல்லாமல் பிரசங்கிப்பார்கள். அப்போதெல்லாம் பாதியில் எழுந்து வந்துவிடுவேன்.
ஒரு நாள் ஆயர் அரசாங்கம் உங்களுக்கு அகவிலைப்படி எல்லாம் வாரி வழங்குகிறது. நீங்களும் கடவுளுக்கு அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாக கொடுங்கள் என்று பாதிப் பிரசங்கம் காணிக்கை பற்றியே இருந்தது. 'ஏறிய ஊதியத்திற்கு ஏற்றார்போல் விழுக்காடு ஒதிக்கீடு செய்து லிஸ்ட் தந்து விட்டால், பாவம் ஆயருக்கு இவ்வளவு சிரமம் இருக்காதே' என்று நினைத்தேன்.
இப்படியான எரிச்சலான பிரசங்கத்தின் போதெல்லாம் பாதியில் எழுந்து வந்துவிடுவேன். ஆசீர்வாதம் முடியும் வரை ஒரு ஞாயிறும் இருந்ததில்லை. அதனால் தான் என் நண்பன் சொன்னதுபோல நான் சபிக்கப்பட்டவனாக உறுவாகி இருக்கிறேனா?
புரண்டு, புரண்டு படுத்தேன். என் மனசாட்ச்சி எப்படிப்பட்ட சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கிறவர்களுக்கு வாழ்வு முழுவதும் வசந்த காலம். ஆனால் வாழ்ந்த சுவடே இருக்காது. நீ சட்டென்று எழுந்து இவைகளை ஒரு காகிதத்தில் கிறுக்கிவை என்றது.
நான் சட்டென்று கண்விழித்தபோது வெளிச்சம் அறையை நிறைத்திருந்தது. என் தலைமாட்டில் வெள்ளைக்காகிதங்கள் படிமங்களாவதற்கு காத்திருந்தன.
ஜேடி
முடிந்தது.

No comments:
Post a Comment