Showing posts with label குறிப்பு. Show all posts
Showing posts with label குறிப்பு. Show all posts

Thursday, February 2, 2017

“அண்ணே, கெட்டவங்களுக்குதான் நல்ல காலமா இருக்குண்ணே“.

“அடே..பூசணி மண்டையா. ஒத்தச் செடி நட்டாமாதிரி சொன்னா எப்புடிடா. மனுசங்கள்ல, கொழந்தைகள் இருக்கிறான்(ள்), வாலிபன், வயசானவன் இருக்கிறான்(ள்).
எத்தனை வெரைட்டி. கிட்டக்க வாடா. தெளிவாச் சொல்லு. நல்லவங்க யாரு? கெட்டவங்க யாரு? அதுக்கு வயசு அளவு வச்சியிருக்கிறியா? சாதி அடையாளம் இருக்கா? சாமி சாயல் இருக்கா?

“அண்ணே, நீங்கத் தெளிவுண்ணே. பள்ளியின், கோயிலின் சொத்துக்களை, வாரி ஊழல் வாதிக்கு எறைக்கிறாமாதிரி. வார்த்தைகளைப் பிரிச்சி போடுறீங்கண்ணே. “

அது இருக்கட்டும். சொறியாம சொல்றா, சொரக்கா மண்டையா.

“அண்ணே அண்ணே, அந்தாக்குச்சி ஐசு வாங்கிக்குடுங்கண்ணே. சப்பிக்கினே, சாலாக்காச் சொல்லுவேன்ல்ல“.

“டே, ஊன் அக்கப்போரு தாங்கமுடியலயடா, அவஅவன் இமயத்திலயும், கூட்டு ஜெபமுன்னும், பள்ளிவாசல்னும் தவமிருந்தாத்தான் ஞானம் வரும்ங்கிறான். நீ குச்சி அய்சு சப்பிக்கினு ஞானத்தை விளக்கப்போறீயா. அதையும், நான் கேட்கணுமாடா. நீ சொல்லவே வேணாண்டா.

“என்னண்ணே, இப்படிக் கோச்சிக்கிறீங்க. அம்பது பைசாதானேன்ணே. சரி அதுவும் வேணாம் விசயத்தைக் கேளுண்ணே. கொழந்தைங்க கணக்குல இல்லண்ணே. வாலிபத்தில இருந்து, வயோதிகம் வரையான மனிதர்கள் என்ற அடையாளத்தை மட்டும் வச்சிக்குவோம். சாதி, சாமி எல்லாருக்கும் பொது. இதன் அடிப்படையில் கெட்டதை விரும்புறவங்களாம், நல்லவங்கண்ணே. நல்லதை மட்டுமே செய்யிறவங்களாம் கெட்டவங்ண்ணே.

“அடே, ஞானசூன்யம்எப்படிடா அதைக் கண்டுபிடிச்சே.
எனக்கு விளக்கமாச் சொல்லு பார்ப்போம்.

1. கேடுள்ளம் கொண்டவர்களுக்கு அதாவதுண்ணே, வாழ்வதற்கு எத்தனை வகையானச் சந்தர்ப்பங்கள் அமைகின்றதோ, அத்தனை வகையையும், சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் இயல்புடையவர்களுக்கு, (இனம் இனத்தோடு சாரும் என்பதுபோல்) கேடுள்ளம் கொண்டோர் இயல்பாகவே சுகபோகத்தை அள்ளித் தருகின்றார்கள்.

2. கேடுள்ளம் கொண்டவர்கள், நல்ல விசயத்தை விரும்புகின்றவர்களைப் பார்த்ததும் குனிந்து, பணிந்து நேர்பட புகழ்ந்து, உபசரிக்கும்போது நல்லதை (நல்லதை மட்டும் செய்கிறவர்கள் அல்ல) விரும்புகிறவர்களும் கேடுள்ளமான ஊழல் வாதிகளை எல்லா இக்கட்டிலிருந்தும் காப்பாற்றி, கோயிலின், பள்ளியின் பொது சொத்தில் தன்னால் முடிந்ததை எழுதிவைத்துவிடுகிறார்கள்ண்ணே. அப்போ கேடுள்ளம் கொண்டவங்களுக்கு எப்பவும் நல்ல காலமாகவே அமைந்திருப்பது இயல்புதானேண்ணே.

Monday, November 18, 2013

குறிப்பு,

                                                    90 விழுக்காடு


கிராமம் முழுக்க ஊதாரி குடிகார வாலிபர்கள்  90 விழுக்காடு உருவாகிவிட்டனர். என்று நினைக்கிறேன்.  இந்த சமூகம் என்னதான் பயிற்றுவிக்கிறது தெரியவில்லை.  அதற்கு யார் காரணம்? எது காரணம் அருதியிட்டு சொல்லவே முடியவில்லை.  சொஞ்சம் கூட சிந்திக்கிற அறிவை பயன்படுத்தவே இல்லையா? தாயின் மனவேதனையைப்பற்றி, தகப்பனின் பொருளாதார சிக்கலைப்பற்றி எதையாவது யோசிக்கிறார்களா? நம்முடைய வாழ்வில் யாரையெல்லாம்  மன வேதனைக்குள்ளாக்குகிறோம். நாம் உழைக்கிறோமே அந்த உழைப்பு சுரண்டப்படுகிறதா?  அல்லது சரியாகத்தான் கிடைக்கிறதா?   வஞ்சனையுடன் நம்மை ஆளுகை செய்கிறவர்கள் யார்? நமக்குள்ளே நம்மை காட்டிக்கொடுக்கிறவன் யார்?   அதிகாரம் யாரிடம் இருக்கிறது? அது நினைத்தால் சமான்யன்  ரோட்டில் நடமாடுவது சாத்தியமா? விடியும் நாட்கள் எல்லாம் சந்தோசம் மட்டுமே இருக்கும். அதை மீறி எதுவுமே நடக்காது என்ற தைரியமா?  இப்படி எதையுமே யோசிக்கத் திராணி அற்றவர்களாகத்தான் மேற்கூறிய 90 விழுக்காடு கிராம வாலிபர்கள் வளர்த்தெடுக் கப்படுகிறார்கள்.  இதற்குத்  தாய்த்தகப்பனாக  உலகமயம், ஊடுகளில் விரியும் ஊடகம் இருந்து வருகிறது.

பையன்கள் படிக்கும்போதே சகலத்தையும் செயலாக்கத்திற்கு கொண்டுவருகிறார்கள். பெரும்பாலும் முடிந்தவரைப் படிப்பது, வரவில்லை என்றால்  பாட்டன் வீட்டு பயிர் நிலம்போல தெரிந்த கம்பெனிகளுக்கு போவது. ரத்தம்  உறிஞ்சினாலும் பரவாயில்லை அவன் போடும் பிச்சைக்காசைக் கொண்டுவந்து வீட்டுக்கு கொஞ்சம் போட்டுவிட்டு, கூட்டாக சேர்ந்து தண்ணி அடிப்பது. சீட்டாடுவது. ரவுடித்தனங்களில் தன் பேச்சை நகர்த்துவது. சில நேரம் அதை செயல்படுத்தி பார்ப்பது.  தொடர்ந்து  இந்தக்  காரியங்களில் ஈடுபடுகிறார்கள். 

இவர்களை யார், எந்த அமைப்பு, எந்த மதம், எந்த பண்பாடு நல்வழிப்படுத்துகிறது? அது தேவை இல்லையா? ஏன் தேவையில்லை? இப்படிப்போனால் மிருகத்தைவிட கேவலமான                   நிலமைக்கு  மனித இனம் மாறுவதற்கு வாய்ப்பில்லையா? 

அப்பட்டமான முட்டாள் தனங்களை  மதங்கள் மூலமாக மனிதனுக்கு புகுத்துகிறார்கள் என்பதற்காக   கடவுளர்களை வெறுத்துவிடலாம், அந்த வெறுப்பின் கருத்துப்  பரப்பல்தான் நியாயமான நம்பிக்கையினால் ஏற்படுகின்ற அறத்தைக்கூட மனிதனிடம் இருந்து முற்றிலும் எடுத்துப்போட்டுவிட்டதா? 

மனிதனின் வாழ்வியலில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்ற மூடத்தனங்கள் முற்றிலும் ஒதுக்கப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், மனிதனிடம்  நியதியை  கட்டமைப்பதற்கு என்ன வழிவகை, எதின் மூலம்  வழிகாட்டப்படுகிறது. சமூகத்தில் அதற்கான தகுதி எந்த அமைப்பிடம், எந்த அரசிடம், எந்த இனக்குழுவிடம் இருக்கிறது. வழிகாட்டி இல்லாமல் புதிய புதிய சட்டங்கள் இயற்றப்டுவதால் மட்டும் நியதியை சமூகத்தில் மனிதனிடம் நடைமுறைப்படுத்த முடியுமா? 

குறைந்த பட்சம் பள்ளிகளில் அதற்கான   கொள்கை முடிவுகள் எதுவும் இல்லையா? அல்லது அதை உருவாக்க சாத்தியமே கிடையாதா? ஒரு மொழியை பயிற்றுவிப்பதுபோல் பிஞ்சு மனதில் தங்கும்படி மனித வாழ்வியல் நியதியைக் கற்றுக்கொடுப்பது குற்றமா? கலை பண்பாடுகளில், இலக்கியங்களில் அறம் சார்ந்த விஷயங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது. மனித மனத்தை யோசிக்கச்செய்வதற்குக்கூட நியதிகளை படைப்புகளில் சேர்க்கக்கூடாது. அப்படிச் சேர்த்தால் அது படைப்பு கிடையாது என்று குப்பையில் தள்ளுகிற நிலைதான் தொடர்ந்து இருக்கிறது. 

மனிதனின் மனம் இல்லாமல் வெறும் காகிதங்களை  உற்பத்தி செய்துகொண்டிருந்தால் எதிர்காலத்தில்  அவனின் நிலை என்னவாக இருக்கும். கடந்த காலங்களில்  நீதிக்கதைகள், அறநெறி புத்தகங்கள் அதிக புழக்கத்தில் இருந்தபோதும், அதைப்பற்றி பேச்சுக்கள் தாராளமாய் நடமாடியபோதும்.   அக்கால மக்களின் மனநிலை எப்படி இருந்தது. ஒரு வேளை தற்போது அறிவுஜீவிகளால் அத்தன்மை வாய்ந்த எழுத்துக்களை புறந்தள்ளுவதால்தான்  மனிதத்தன்மை அருகிவருகிறதா? கலை, இலக்கியப் படைப்புகளில் தேவைப்படாத ஒழுக்கவிதிகள், அறநெறிகள் தனிப்பட்ட மனிதன் வாழ்வில் கடைபிடிக்கவேண்டும் என்று கூறுவது சரியா? இலக்கியங்களுக்கு மனிதனின் வாழ்வை சீர்படுத்துகிற வல்லமை உண்டு என்று வாதாடும்போது   அதில் நெறிபடுத்துகிற எழுத்துக்களை காய் மறைவாய், இலை மறைவாய் மனிதனின் மண்டையில் பதியவைப்பதில் என்ன தவறு? 

இப்படியான பயிற்றுவித்தலை எந்த சமூக அமைப்பும், கலை, இலக்கியங்களும் தற்கால இளைய   சந்ததிக்குக்  கற்றுக்கொடுக்கவே இல்லை. அதன் சாபக்கேடுதான் பொதுவாக, சற்று கூடுதலாக கிராமங்களில் 90 விழுக்காடு இளைஞர்கள்  காட்டு மிருகங்களாக உருவாகும் சூழல் பெருகிக்கொண்டே வருகிறது.

காரணம் என்ன? எது?ஏன்?  பேசவேண்டும்.

ஜேடி 




Saturday, October 26, 2013

குறிப்பு, .


                                                கரும்புள்ளி

தமிழர் முதல் சமணர் பாறை வெடி வைத்து தகற்கப்பட்டு காணாமல் போகிறது. தொல்லியல் துறை கண்டுகொள்ள வில்லை. திணமலர் செய்தி. மனோன்மணி முகப்புத்தகத்தில் ஒருவரின் கமெண்ட் ‘பத்து ஆண்டுகளுக்கு முன்பே தினமணியில் இது சார்ந்த செய்தி படித்ததுபோல் நாபகம்‘. என்று கூறுகிறார்.

ஆக வசதிபடைத்த தனியாள், தங்கள் எதிர்கால சந்ததிகளின் நோய்ப்பாதுகாப்புக்காக, பூமியிலிருக்கும் எந்த செல்வங்களையும், எந்த மனிதர்களின் உழைப்பையும் வதம் செய்து பறித்துக்கொள்ள அரசியல் வாதிகளின் குழந்தை மனசு காலங் காலமாகத் துணையிருக்கிறது.

கொள்ளையர்கள், சப்பிவிட்டு நரம்புத்தசையுடன் கூடிய எலும்பைப் போடுகிறார்கள். அதை, அரசியல் வாதிகள், அதிகாரிகள் தங்கள் பரம்பரை சொத்தான வெள்ளித்தட்டுகளில் வாங்கிப் பதப்படுத்துகிறார்கள்.

பீகாரிலும், கர்நாடகாவிலும் குறைந்த பட்சம் சிறையில் அடைக்கிறார்கள், கைது செய்கிறார்கள். தமிழகத்தில் இதுவரை எந்த அரசியல்வாதிக்கும், அந்தப் புணிதப்பயணம் கிடைக்கவேயில்லை. என்ன காரணம் என்றால் தழிழகத்தில் ஆட்சியாளர்களும், கட்சியாளர்களும் எப்போதுமே இளகிய மனசும், நாகரீக செயலும் உடையவர்களாம். ஆனால், அநேகமாக இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் அதிகமாக கட்சிக்குள்ளிருந்து, கட்சி. கொள்கைக்குள்ளிருந்து, கொள்கை என்று சாதிவாரியாக. மத வாரியாக. உணர்வு வாரியாக, (உட்கட்சி பூசலாக) மொழிவாரியாக நாளுக்கு நாள் கட்சிகளும், கொள்கைகளும் குட்டி போட்டுக்கொண்டே இருக்கிறது. 

குட்டிகள் வளர வளர தமிழக பொதுமக்களின் கல்லா பெட்டிகள், முட்டை மந்திரமாக காணாமல்போகிறது. மக்களின் இல்லங்கள் வெறுமனையாகும் நிலை வரும்போது கொள்ளையர்கள் இயற்கை வளங்களை நோக்கி போர் தொடுக்கிறார்கள். தொடர்ந்து போர் தொடுப்போருக்கு கட்டளைக்காரணியாக ஆட்சியாளர்களும், வழி நடத்தும் தளபதிகளாக பல அதிகாரிகளும் தொடர்ந்து இருப்பதால். தேசியக்கொள்கையாக பெரிய அளவில் வளங்களும், பிட்பாக்கட் தன்மையாக, தனி வீட்டில் எண்பது வயதுக்கிழவி கற்பழிக்கப்படுவதும். கண்ணாமூச்சி விளையாட்டுபோல நடுரோட்டில் ஓட ஓட விரட்டி கொலைசெய்வதும். எல்லாமே தொடர்ந்து நடக்கின்றது.

கட்சி நடத்த, குடும்பம் நடத்த பணப்பேயை தேவதையாக எண்ணும்வரை இந்திலை மாற வாய்ப்பே இல்லை. குறைந்த பட்சம் கிடைத்தது போதும் என்றும், அல்லது மேற்கொண்டு எண்ணுவது அடிப்படையில் நியாயமான எண்ணமாக இருப்பது அவசியம். அத்தன்மை இல்லாதபோது, தமிழனுக்கு மட்டுமல்ல மானிடத்திற்கே மிகப்பெரும் கரும்புள்ளி. 

ஜேடி




Monday, October 14, 2013

குறிப்பு

ஞாநியின் கேணி இலக்கியச் சந்திப்பு

வழக்கம்போலவே நண்பர் லோகநாதனும் நானும் இலக்கியம், சினிமா குறித்த தேடலோடு சென்னை பயணப்பட்டோம். நேற்றய(13.10.13) நாளின் திட்டம் முதல் நிகழ்வாக அருணின் சினிமா கண்காட்சி பார்வையிடுதல், இரண்டாவது ஞாநியின் கேணி இலக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளுதல்.  திட்டமிட்டபடி முதலில் அருணின் கண்காட்சியை பார்த்தோம்.  அருண் குறுகிய காலத்தின் திட்டமிடுதலில் சினிமாவின் ஆரம்பகாலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு உள் வெளிநாடுகளில் வெளியிட்ட அஞ்சல் வில்லைகளை ஒட்டி அதற்கான விளக்கங்களை எழுதியிருந்தார்கள்.  ஆனால், இன்னும்கூட சிறப்பாக செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. சரியான வாய்ப்பும் வசதியும் (பண வசதி)  அமைந்திருக்காது என்றே கருதுகிறேன்.  அதைப் பார்த்துவிட்டு கிளம்பினோம்.

மாலையில் ஞாநியின் இலக்கியச் சந்திப்பில் கலந்துகொண்டோம்  ஏறக்குறைய ஐந்துமணிக்கு ஞாநி, கண்மணி குணசேகரன், பாஸ்கர் சக்தி வந்தாகள் வந்தவுடன் ஞாநி கூட்டத்தை தொடங்கினார். முப்பதுகள் தொடங்கி எழுபதுகள் வரை பத்து பத்தான காலகட்டங்களை சுட்டிக்காட்டினார். அக்காலங்களில் தென் தமிழகத்தின்   குறிப்பாக தஞ்சாவூர், திருநெல்வேலி பகுதிகளில் இருந்துதான் இலக்கியங்களும் சினிமாவும் வந்துகொண்டிருந்தது. எண்பதுகளுக்குப்பிறகுதான் ஜெயகாந்தன் போன்றோர்கள் வட தமிழகத்தில் இருந்து வந்தார்கள். பிறகு இமயம் உள்ளிட்ட சிலரைக்குறிப்பிட்டார். கண்மணி குணசேகரனைப்பற்றி சொல்லும்போது  அருமையாகப் பாடக்கூடியவர். அவரிடம் நல் குரல் வளம் இருக்கிறது. கவிதையில் தொடங்கி சிறுகதை, நாவல் எ ழுதியிருக்கிறார். பணி செய்யும் இடத்திலிருந்து படைப்பை கொண்டுவருகிறவர்கள் மிகக்குறைவு அதிலிருந்து விலகி கண்மணி நெடுஞ்சாலை  நாவலைப் படைத்திருக்கிறார்.  என்கிற  அறிமுகவுரையோடு கண்மணி குணசேகரனை பேச அழைத்தார்.

கண்மணி ஒரு கிராமியப்பாடலோடு தன் உரையைத்துவங்கினார். எப்போதுமே  மிக இயல்பாக பேசக்கூடியவர். நடைமுறைவாழ்வில் எப்படி புழங்குகிறாரோ, அப்படியே தன் மேடை பேச்சிலும் பிரிதிபளிக்கின்றார். கண்மணியின்  உரையில் இருந்து நான் உள்வாங்கிக்கொண்டது. படைப்பு என்பது ஒன்றும் இல்லை. அவரவர் இயல்புக்கு வைக்கப்படுகின்ற ஒரு எழுத்துமுறை. அதற்குமேல் முயற்சிப்பதெல்லாம்  வாசகனை தன் வசம் ஈர்ப்பதற்காக தூவப்படும்  ருசியுள்ள உணவுத்துகள்கள். என்றுதான் எனக்குத்தோன்றியது.  கண்மணி பேசும்போது  எதார்த்தமாக எழுதுவது பேசுவது தவிர வேறொன்றும் பெரியதில்லை என்பதுபோல பேசுகின்றார். அது தன்னை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள்ளகவே குறுக்கிவிடும் என்று கண்மணி உணர்ந்துகொள்ள வேண்டும்.   மற்ற படைப்புகளிலில் இருந்தும் அதன் சுவாரசியப்போக்கை (அவைகளின் தனித்தன்மையை வியக்கவேண்டும்) உள்வாங்கவேண்டும். இல்லை என்றால் பழைய பாத்திரத்தை ஒதுக்குவதுபோல  சாதாரணமாக ஒதுக்கிவிட்டுப் போவார்கள்.  இதை எதற்காக சொல்லுகிறேன் என்றால் சென்ற வருஷம் பாண்டிச்சேரியில் தமுஎகச கூட்டத்திற்கு என்னை காஞ்சி தாமுஎகச கிளை பகேற்பாளராக அனுப்பி வைத்தது. அக்கூட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் கூட கலந்து கொண்டார். அதில்  கண்மணி குணசேகரன் பேசினார். அக்குட்டத்தில் பேசிய பாதி உள்ளடக்க விஷயங்கள்  ஞாநியின் கூட்டத்திலும் பிரிதிபலித்தார்.  ஆக இரண்டாவது முறை கண்மணியின் உரையைக்கேட்கிற போது சற்று அறிந்த விஷயத்தையேக் கேட்பதாக இருந்தது. இதற்குத்தான் மற்ற படைப்புகளிலும் கரையவேண்டியிருக்கிறது என்கிறேன். 

 பொதுவாக கண்மணியின் உரையை வெளியரங்கத்தில்  கேட்கின்றவர்கள்  சிரித்து தன் வயிற்றை நோகடித்துக்கொள்வார்கள். அதேக்கண்மணி  தன்சொந்த வீட்டின் உறுப்பினர்களோடு தினமும் உரையாடும்போது  அந்த உரையில் ஒரு வாய்வியலுக்கான ஆதாரங்கள் இருப்பதாகவே உணருவார்கள்.  நேற்று நடந்த கூட்டத்தில்  நான் உட்பட நிறைய சிரித்தோம். பாஸ்கர் சக்தி கூட விழுந்து விழுந்து சிரித்தார்.  ஆனால், சிரிப்பு முடிந்தபிறகு  கேள்விநேரம் வந்தபோது ஞாநி அவர்கள் கேள்வியைக்கேட்கலாம்  என்றார்.  சற்று நேரம் அப்படியே அமைதியாகிவிட்டது.  காரணம் 1. வந்திருந்தவர்களில்  அதிகமானவர்கள் நகரத்தின் வாலிபர்கள்.  2. கணிமணியின் படைப்புகளை அதிகம் வாசித்திருக்க வாய்ப்பில்லை. 3. மூன்று அவரிடம் கேள்வி கேட்டு  நமக்கு பயன்படப்போகிறது ஒன்றும் இல்லை   என்றுகூட யோசித்திருக்கலாம். இது உண்மைதான் என்பதை சற்று நேர அமைதிக்குப்பிறகு  எழுந்த  மிக மேலோட்டமான கேள்விகளே சான்றாக இருந்தது. ஏனென்றால்   இத்தன்மையை தொடர்ந்து நானும் அனுபவித்திருக்கிறேன்.   இலக்கிய நன்பர்கள் எனக்குள்குள்ளும் கொஞ்சம் விசயம் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் ஒருவருடன் ஒருவர் தனியாக பேசவேண்டும் என்ற வாய்ப்பு வரும்போது   ஒன்று பாராததைபோல்  இருந்துவிடுவாகள் அல்லது என்னிடம்  மௌனமாக இருந்து நாழிகையைக்கழித்துவிட்டு  மறைந்துவிடுவாக்ள நான் புத்தியில்லாமல் முரட்டுத்தனமானவனோ, அல்லது துஷ்ட மிருகமோ அல்ல, இருந்தாலும் என்னிடம் முடிந்தளவு மௌனமாக இருந்துவிடுவார்கள். எனென்றால் என்னிடம் பேச எத்தனிக்கும்போது அவர்களுக்குத்தேவையான சுவாரசியத்தையோ அல்லது என் பேச்சிலிருந்து அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் அறிவையோ தரமுடியாது என்ற முன்முடிவோடு இருக்கிறார்கள்.  அதனால், எனக்கு முன்னே வெறுமனே மௌனமாக நின்று நகர்ந்துவிடுவார்கள்.

என்னிடமும்   வாய் வார்தையை வலைபோட்டு இழுத்துவருகின்ற  திறமைவாய்ந்த இலக்கியம் அறிந்த நண்பர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். நான் சற்று மௌனமாக இருந்தாலும்  கேள்வியின் தூண்டிலை என்  மூக்கு வழியாக நுழைத்து மூளையில் பதுங்கி இருக்கும்  வார்த்தைகளை இழத்துவருவார்கள். அது எனக்கும் அவருக்கும் எந்த காயத்தையும் ஏற்படுத்தாது. மாறாக இருவருக்குமே மிக பயனுள்ளதாக இருக்கும். அதை அனுபவிக்க எங்கள் இருவருககும் கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவையாய் இருக்கிறது, இவர்கள் இலக்கியத்தைக்கடந்து என் குடும்ப உறுப்பினர்போன்று கொஞ்சமே மெனக்கெட்டு  பழகுபவர்கள்.

இந்த ஊடாட்டத்தை இலக்கியம் நோக்கிவருகின்ற அனைவரிடமும் எதிர்பார்க்கமுடியாது.

கண்மணியின் வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுப்பை வாசித்திருக்கிறேன். அதில் முதல் கதையான “கொடிபாதை“  மக்கள்  நெருக்கடியின் பேருந்தில் தற்செயலாக நடக்கும்  ஒரு பிரவசத்தை பதிவுசெய்வதாகவும் கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வருபவர்கள் படும் அவஸ்தையை சொல்வதாக இருக்கும்.  ஆனால், அதற்கு பிறகான கதைகளில் (சமாதானக்கறி) படிப்படியாக கதையில் ஒரு நேர்த்தியைக்கானமுடிகிறது.   கதைகளின்  வரிகளுக்குள் பல விஷயங்களை கட்டமைத்து வைப்பது போன்ற சுவாரசியங்களை அரங்கேற்றம் செய்திருப்பார்.

அப்படி சிறந்த கதைகளை கட்டமைக்கின்ற கண்மணி குணசேகரனுடைய உரையையோ, அவரின் படைப்பையோ   முகவரி கேட்டு வரும்  கிராமத்தான் பேச்சாக வரும் சந்ததி எடுத்துக்கொள்ளக்கூடாது. 

ஜேடி