Sunday, June 12, 2016

சிறுகதை தொகுப்பு    -  மையம்

பதினைந்து கதைகள் 

பல முகங்களைக்கொண்ட கதைகள்.  2011க்கு பிறகு உருவான கதைகள்.  சில அறிமுகமில்லாத நண்பர்கள் இணைய இதழ் மற்றும் சிறு இதழ்களில் வர உதவினார்கள். என் வலைப்பதிவிலும் இடுகையாகப் போட்டிருக்கிறேன். ஆனால், அக்கதைகளை பலமுறை சிதைத்து, அதன் போக்குகளையே முற்றிலும் மாற்றி மாற்றி மீண்டுமாக புத்துயிர்கொடுத்துள்ளேன். இருந்தாலும் ஒரு கதை என் மனதின் அமைதிநிலையை குலைத்து எழுந்த முதல் கருத்து பொரியில் இருந்து மாறாமல், அக்கருத்தை நிரூபணம் செய்ய முனைந்திருக்கின்றேன். அதே நிலையில் கதை வாசிப்புக்கும், வாசக நிரப்பலுக்கும் இடங்களை விட்டு, லகுவான முறையில் இக்கதைகளை என் மன நிறைவாக முடித்துள்ளேன்.

இவைகளை புத்தக விற்பனை உத்திக்காக பயன் படுத்த வில்லை. ஏனென்றால் என்னிடம் விற்பதற்கான பிரிதிகளே இல்லை. இருந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து வாசிக்கக் கேட்போருக்கு மட்டுமே விற்க முனைகின்றேன். 


No comments: