அன்புள்ள அண்ணனுக்கு
அன்புள்ள அண்ணனுக்கு தம்பி எழுதுவது. நாங்கள் இங்கு நலமுடன் இருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும். அப்படி சொல்வதில் உண்மை இல்லை என்பது உனக்கு தெரியும். இருந்தாலும் உன் மனம் புண்படக் கூடாதென்றே அப்படி குறிப்பிட்டேன். ஒரே மாதத்தில் நீ எழுதியக் கடிதங்கள் மூன்றும் கிடைத்தன. ஆனால் பதில் எழுதக்கூடிய மனநிலை எனக்கு வரவே இல்லை. உன் கடைசி கடிதம் படிக்கும்போது என் கண் பொங்கி எழும்பாத கடலாக மாறி சமநிலை கொண்டதாகவே ததும்பிக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் கடிதத்தின் எழுத்துக்கள் பழுதுபட்ட கண்ணிற்கு தெரிவதுபோல் மங்கலாகவே தெரிந்தது.
நீ குறிப்பிட்டதுபோல யார் இழப்புகளையும் ஓரளவு சீக்கிரத்தில் சமாளிக்கலாம் குடும்ப தலைவியின் இழப்பைத்தவிர, என்ற உன் வார்த்தை மீண்டும் மீண்டும் என் மனதை ஏங்கவைத்துவிட்டது. என்னை ஆறுதல் படுத்த எழுதிய உன் வார்த்தைகளே, நான் பதில் எழுதமுடியாதபடி என்னை துக்கத்தில் ஆழ்த்திவிட்டது.
அன்புள்ள அண்ணா, என் இழப்பை தாங்கிக்கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. உலகில் எதுவும் நிரந்தரம்மல்ல என்பதை அறிந்த உடன் பிறப்புகள் ஆபத்தில் உதவிக்கொள்கிற பண்புடையவர்கள் என்பதை உன் ஆறுதல், உதவிகளின் மூலமாக புரிந்து கொண்டேன். உன் உதவிக்கரம் இல்லாமல் இருந்திருந்தால் எண் நிலமையை எண்ணிப்பார்க்கவே முடிய வில்லை. ஒரு கட்டத்தில் என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். இப்பொழுது மற்றவர்களின் வாழ்வை உற்று நோக்குகின்றேன். நீ சொன்னதுபோல சிறு வயதில் நம் கிராமத்தில் எல்லா தகப்பனும் தங்கள் பிள்ளைகளை பொறுப்பில்லாமல் கூலி வேலைகளுக்கும், ஆண்டை வீடுகளுக்கும் அனுப்பினார்கள். படிக்கவைக்க வேண்டும் என்ற எண்ணம் அநேகருக்கு வரவே இல்லை. அக்காலங்களில் நம் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தாலும், அப்பா படி, படி என்று பள்ளி படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அனுப்பினார்.
நமக்கென்று சொத்து எதையும் வைக்கவில்லை என்றாலும், ஒரு வேலையை பெறுகிற தகுதிக்கு படிக்கவைத்துவிட்டார் என்பதை எப்போதும் நினைக்கத் தான் வேண்டியிருக்கிறது. மேலும் சிறுவயதில் சகோதரன், சகோதரி எல்லோ ரிடத்திலும் அன்பு செலுத்துதல் என்ற உறவின் மகத்துவத்தை அடிக்கடி பேசி வளர்த்தார். அந்த வளர்ப்புதான் இந்த நாள்வரை நம் சகோதரத்துவத்தில் முற்றிலும் பிரிவினை இல்லாது வாழ்வை கடத்தமுடிகிறது. சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் இருக்கலாம், அது பெரிய பாதிப்பை இதுவரை ஏற்படுத் தவில்லை. அப்படி இருப்பது மிகவும் உன்னதமான நிலைதான்.
அண்ணா நீ டில்லியிலிருந்து தமிழ் நாட்டுக்கு சீக்கிரம் மாறுதல் பெற்றுவர வேண்டும், ஏனென்றால் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். உன் பிள்ளைகள், என் பிள்ளைகள் என்று இதுவரை பிரித்து பேசியதே இல்லை. சிறுவய திலிருந்து என்னிடம் வளருவதால் என்னையும் ஒரு தகப்பன் தகுதியில்தான் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுடைய எண்ணங்கள் மனிதனு டைய இயல்பான வாழ்வைக் கெடுக்கின்ற பல ஊடகங்களில் பதிந்து தீவிரமாய் அலைகிறது. தற்போது வளர்ந்த பிள்ளைகளை கட்டுப்படுத்துவதில் என்னிடம் சுணக்கம் இருக்கிறது.
இந்த நேரத்தில் தான் தகப்பனின் கண்டிப்பு, கண்காணிப்பு தேவைப்படுகிறது. ஒருவேளை நீ ஊதியத்தில் குறைவு ஏற்படுமோ என்று தயங்கினால், எதிர்காலத்தில் பிள்ளைகளால் அதிக இழப்பை சந்திக்க நேரிடும். இதை என் பாரம் கழித்துக் கொள்ளசொல்லவில்லை. பள்ளிக்கு வருகிறேன் என்று தினந்தோறும் வீட்டிலிருந்து வந்து, பள்ளியை கட்டடித்துவிடும் பிள்ளைகள் ஒருகட்டத்தில் வருகை பதிவேட்டால் மாட்டிக்கொள்ளும்போது தலைமை ஆசிரியரிடம் விசாரனைக்கு வருவார்கள். அப்படி வருகிற பிள்ளைகளின் தகப்பன்கள், நீண்ட நாள் இடைவெளிவிட்டு வீட்டிற்கு வருகிறவர்களாக இருக்கிறார்கள். அல்லது தகப்பனே இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். தாய், தகப்பன் இருந்தும் ஓயாத கவனிப்பில் இருக்கிற பிள்ளைகள் பள்ளியை கட்டடிக்கவில்லையா? என்ற கேள்வி உனக்கு எழலாம். அனால் அப்படி நடப்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.
மேலும் அண்ணன் அறியவேண்டியது. நம் பெரியப்பா மிகவும் உடல் சுகவீனப்பட்டுவிட்டார். எந்த நேரத்திலும் அவர் மூச்சி நிற்கலாம். இதை இவ்வளவு அலட்சியமாக சொல்லுவதற்கு காரணம், முதிர்ந்த வயது காரணமாய் இருந்தாலும், அவர் குடும்பத்திலேயே பெற்ற பிள்ளைகள் இருவரையும் சமமாக கருதவில்லை. ஏமார்ந்தவனை தூரதிலேயும், உதைப்பவனுக்கு சொகுசையும் தந்துவிட்டார். இதனால் சகோதரர்களுக்குள் நிரந்தர பகைமையை வைத்துவிட்டார். அதனாலே எனக்கு அவர்மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது.
உறவுகளை, அதற்குள் கடமையை நிர்நித்தவன் யார் என்றே தெரியவில்லை. அவன் மிகவும் புத்திசாலியா அல்லது உலகை கெடுக்க வழிவகுத்தவனா? ஒவ்வொருவருக்குமான கடமைக்கான செயல்பாட்டால்தான் வாழ்வியல் அடுக்குகள் உறுதியாய் நிற்கின்றன. அதன் மூலமாகவே எல்லா பேதங்களும், வஞ்சனைகளும், அழித்தொழிப்புகளும் சார்பு நிலைகொண்டு நடந்தேறுகிறது. மனித வாழ்வியலுக்கு ஒரு பொதுத்தன்மையான புதிய உறவுமுறையை கட்டமைத்தால் என்ன? என்று கூட தோன்றுகின்றது. கூட பிறந்திருந்தாலும் அப்போது நான் உனக்கு தம்பியாக இல்லாமல் போகலாம். உனக்கு யாரோ ஒருவர் அண்ணனாக்கூட வரலாம். அண்ணா, என்ன சிரிப்பு வருகிறதா? பயன் தராதபோது தகப்பனாக. தாயாக, தங்கையாக இருந்தாலும் உறவை சீக்கிரம் துண்டித்துவிடுகிற மனிதன், லாபம் தருகின்ற உறவை கணவனாக, மனைவியாக பற்றுறுதியுடன் ஏற்றுக் கொள்கிறபோது. அதைவிட லாபம் தருகின்ற ஒரு புதிய உறவின் அமைப்பை, காலப்போக்கிலாவது உருவாக்கிக்கொள்ளமாட்டன் என்பதில் என்ன நிச்சயம்?
அண்ணா நீ சீக்கிரம் மாறுதல் பெறுவதற்கு முயற்சி செய். மற்றவை நேரில். நேரில் இவ்வளவு சுதந்தரமாய் பேசமுடியுமா என்று மனதிற்குள் நினைக்கிறேன். நீ இயல்பாய் பேசுவாய் நான்தான் சற்று சங்கடப்படுவேன். நேரம் கிடைக்கும்போது பதில் எழுதவும்.
இப்படிக்கு
உன் அன்பை மறவாத தம்பி.
ஜே டி

1 comment:
கடித் இலக்கியம்
Post a Comment