காப்பி அடிக்கத்தெரியாத தெய்வத்திருமகள்
காஞ்சிபுரம் 'தரை'யரங்கம் அமைப்பைத் தொடங்கி ஒண்ணரை ஆண்டுகள் கடக்கும் தருவாயில் தொடர்ந்து வாரம் தோரும் ஞாயிறு அன்று ஒரு உலகத்திரைப் படம் திரையிடுகிறோம் இதுவரை ஏறக்குறைய எண்பது படங்கள் திரையிடப்பட்டது. ஒண்ணரை வருடத்தில் எண்பது ஞாயிறா என்று அதிர்ந்துவிட வேண்டாம். அரசு விஷேச விடுமுறை நாட்களில் (வீடுகளின் வேலைகளை கவனிக்காது திட்டுவாங்கிக்கொண்டுதான்.) ஒன்றிரண்டு படங்கள் சேர்த்துதான் இந்தக் கணக்கு.
அப்படி பார்த்தப் படங்களில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காடு உலக சினிமாவிலிருந்து அப்படியே தமிழில் கையாளப்படுகிறது. அதில் ஒரு சிலப்படங்கள் காட்சிக்கு காட்சி எந்த மாற்றமும் இல்லாமல் (பாடல்கள், சண்டைகள் தவிர்த்து) அப்படியே பயன்படுத்துகிறார்கள். சிலப்படங்கள் கலை நேர்த்தியான காட்சிகளை மட்டும் உருவிக்கொள்கிறார்கள்.சிலப் படங்கள் அழகிய மூலக்கதையை உருவி தனக்குத்தெரிந்த சந்திரமுகியின் விகாரமான வேசத்தைப் போட்டுவிடுகிறார்கள்.
I am sam
முதல் காட்சியிலேயே இனிமையான பின்னனியுடன் தொடங்குகிறது. ஒரு சிறிய டப்பாவில் பல பிராண்ட் மாத்திரைக்ள் ஒழுங்கற்றுக் கிடக்கிறது. அதை மிகவும் சரியாக அடுக்குகின்ற, டேபிலில் சிந்திக்கிடக்கும் தண்ணீரைத் துடைக்கின்ற கைகள் குலோசப்பில் தெரிகிறது, இந்த ஒரு காட்சிதான் படத்தின் மொத்தக் கதைக்கும் முடிவுக்கும் ஆணிவேர். தன் முதளாலியோ, நிர்வாகமோ கட்டளையிடாமல் இப்படிப்பட்ட ஒரு செயலை தெளிவான மனநிலையில் இருக்கிறவன் மனமுவந்து செய்வது கடினம். அப்படிப் பட்டசெயலை செய்கிற ஒருவன் எப்படி இச்சமூக வாழ்வியலுக்கு பொருத்தமற்றவனாக இருக்கமுடியும் என்ற கேள்வியை முதளிலேயே எழுப்பி, படத்தின் ஊடாக தொடர்ந்துவந்து, எதிர்வாதமே எழாதவண்ணம் படத்தை நிறைவுசெய்கின்றார்.
மனநலம் குன்றியவன் உடல் மொழி, செயல், ஆய்வுப்பூர்வமாக எப்படியிருக்கவேண்டும் என்பதை, இயக்குநர் மிகவும் தீர்க்கமாக முடிவு செய்திருக்கிறார்கள். சாமாக வருகின்ற நாயகன் நேர்த்தியான ஒரு மாற்றுதிறனாளியாக வாழ்ந்திருக்கின்றார். தன் வாலிப பருவத்தை கடக்கின்ற போது எந்த மனிதனுக்கும் ஏதோ ஒரு நிலையில் அவனவனுக்கான துணை ஒன்று அமைந்துவிடுகிறது. அதன்பிறகு இருவருக்குமான ஏற்றமும், இறக்கமும், இருப்பதும், இல்லாமல்போவதும் நடந்தேறிவிடுகிறது. சாமுக்கு அப்படி கிடைத்த மனைவி முதல் குழந்தையை மருத்துவமனையில் பிரசவிக்கிறாள். ஒரு திறமையான மாற்றுத்திறனாளி, தான் அச்சமயத்தில் செய்யும் வேலையில் மட்டுமே முழுகவனம் செலுத்துவான். அப்படிததான் சாம் தன் வேலையில் முழ்கி இருந்தான். அவர் நண்பர்கள் நினைவுப் படுத்துகிறார்கள். உடனே கடையின் மேலாடையைக்கூட கழட்டாமல் ஓடுகிறான். நர்ஸ் என்ன சாம் இவ்வளவு பொறுபில்லாமல் தாமதமாக வருகிறாய் என்று திட்டுவாள். உடனே சாம் ‘am sarry' என்று வருந்துவார். சாம் மனைவியை அதிர்வுடன் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார். அவள் வேதனையோடு கத்தி குழந்தையை பிரசவிக்கும்போது, அவள் சத்தத்தோடு கூடவே சேர்ந்தார்போல சாமும் கத்துவார். பிறர் துக்கப்படும்போது அழுவதும், சிரிக்கும் போது சிரிப்பதும், ஒரு குழந்தையின் தன்மையாகும் அதை சரியாக செய்திருக்கிறாகள். ரத்தப் பிசு பிசுப்பு மறையாதக் குழந்தையை சாம் பார்கும்போது அவர் வாய் தழுதழுத்துக் குழையும் காட்சிகள் அற்புதம்.
மருத்துவமனைவில் இருந்து சாமும் மனைவியும் வீட்டுக்கு கிளம்புவார்கள். குழந்தையை சாம் வைத்திருப்பார். கூடவே வரும் மனைவி பஸ் வருவதைப்பார்த்து சற்று முன் சென்று நிறுத்தச்சொல்வாள். சாம் சற்று வேகமாகச்சென்று பஸை நிறுத்துவார். சாம் மனைவி அவரை விட்டு ஓடி மனித மந்தையில் மறைந்துவிடுவாள். அவள் திடிரென்று தன்னைவிட்டு ஓடுகிறதை சாம் பார்பார். பஸ் கிளம்பிவிடும். சில நிமிடத்திற்குள் என்ன நடந்ததென்று விளங்காமல் நிராதரவாக நின்று ‘ரெபெக்காள் பஸ் இஸ் கோயிங்‘ என்று கத்தும்போது சாமின் அப்பாவித்தனமான நடிப்பு அபாரம். இப்படியான மனிதர்களுடன் தான் பூமீ நிற்காமல் சுத்துகிறதென்று, கேமராவை சுற்று வட்டத்தில் அலையவிடுவார்கள்.
குழந்தையை வீட்டுக்கு கொண்டுவந்து விடுவார். இரவில் குழந்தை அழுதுகொண்டேயிருக்கும். சத்தத்தைக்கேட்டு பக்கத்துவீட்டு அன்னாள் உதவிக்கு வருவாள். குழந்தை பசியால் அழுகிறது. சாம் குழந்தை பசியால் அழுகிறது இதுகூட தெரியாமல் குழந்தையை எப்படி வளர்ப்பாய், குழந்தைக்கு இரண்டு மணிக்கு ஒருதரம் பால் கொடுக்கவேண்டும் என்று அன்னாள் சோல்லும்போது, குழந்தையின் வேதனையை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்வார். அன்னாவிடமும், குழந்தையைத்தொட்டும் ஐயம் சாரி, என்று வருந்தி மண்ணிப்பு கோறுவார்.(சொல்லுவதை செய்யுமாம் கிளிப்பிள்ளை. இந்த சாதாரணத்தை தெய்வத்திருமகள் குழுவினர் யோசிக்கவேயில்லை.) குழந்தை தூங்குகிறதைப் பார்த்ததும் சாம் பேச்சை மெதுவாகபேசுகிறார். பார்க்கவரும் நண்பர்களை குழந்தை தூங்குகிறது மெதுவாக பேசுங்கள் என்று பணிக்கின்றார்.
தன் மகள் லூசி இப்போது வளர்ந்துவிடுவாள். அவள் கேட்கும் கேள்விகளுக்கு தனக்குத்தெரிந்த பதிலை சாம் சொல்லுவதும். ஒரு கட்டத்தில், லூசி அப்பா நீ மற்ற அப்பாக்களைப் போல் இல்லை. நீங்கள் வித்தியாசமாய் இருக்றீர்கள் என்று சொல்லும்போது, ‘சாம் சற்று குற்ற உணர்வில் i am sarry. என்று சொல்லுவார். உடனே குழந்தை பரவாயில்லைப்பா என்று சமாளித்து சாமின் கையைத்தொட்டு ஆறுதல்படுத்தும் இப்படியான கலந்துரையாடும் காட்சிகள் படத்தின் உச்சங்கள். பள்ளியில் சேர்த்து சமூகத்துடன் கலக்கும்போதுதான் பிரச்சனை தொடங்குகிறது. தன் வயதொத்த பிள்ளைகளாலும், சமூகத்தாலும் சாம் மனநலமில்லாதவர் என்று அறியப் படுகிறார். சாமால் குழந்தையை சரியாக வளர்க்கமுடியாது என்று சாமிடமிருந்து குழந்தையை போலீஸ் பிரிக்கிறது, அதற்கு மேல் சாம் யதார்த்மாகவே நீதிமன்றம் தேடிப்போகின்ற வாய்ப்பு அமைகிறது.
(தெய்வத்திருமகளின் தந்தை தெருவில் போகிற வருகிறவர்களை எல்லாம் ‘அநேகமாக பிச்சை எடுக்கிறவர்கள் நிலமை போல்‘ பார்பது எரிச்சளைத்தான் கிளப்புகிறது. ‘ஒரு வேளை ஐயம் சாம் பார்க்காதவற்களுக்கு இரக்கம் ஏற்படும்‘. தான் மட்டுமல்லாது தன் சந்ததியும் சுகபோகவாழ்வை அனுபவிக்க சமச்சீரை எதிர்க்கின்றவர், பத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளை நடத்துகிற பண முதளியின் மகள், இப்படியான தொண்ணூறு விழுக்காடு மாற்றுத் திறனாளியை, காதலித்தாள், ஓடி அவள் இஷ்டமாக வாழ்க்கையை அமைத்துக்கொண்டாள். பெரிய மனது பண்ணி கிருஷ்ணாவோடு வாழ தன்மகளை விட்டுவிட்டார். சரி அப்படியே முட்டாள் தனமாக நம்பிவிடலாம். ஆனால் பிளாஷ்பேக்கில் நல்லவர் போல் நடித்து ஒரு அப்பாவியை அழைத்துச்சென்று திக்குத்தெரியாத இடத்தில் இறக்கிவிட்டு போகிற மனநிலை கொண்டவர். ஆரம்பத்தில் வெறுமனே வாழவிட்டார் எண்பதெல்லாம் நம்புவதற்கில்லை. அதன் பின்னனியாக சொல்லும் விஷயமே கதையில் வளிய ஒட்டவைத்தது இருப்பதை காட்டிக்கொடுக்கிறது.)
வக்கிலாக வருகின்ற ரீட்டாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். முதலில் வெறுப்பை காட்டுவதுபோல் இருந்தாலும் பிறகு இலவசமாக ஆஜராக ஒப்புக்கொள்கிறார். அதன் பிறகு கோர்ட்டின் விவாதங்கள். ஒரு மாற்றுத்திறனாளியின், (சமூகத்தால் கண்டுகொள்ளப்படாத) பக்கங்களை பிரித்துப்போடுகிறது. ரீட்டா ‘சாம் கடந்த ஏழு வருடங்களாக குழந்தையை உண்மையிலேயே மிகவும் பொறுப்பாக கவனித்துவந்தார். குறைபாடு இருக்கலாம், ஆனால் கவுன்சிலிங்மூலம் சரிசெய்துவிடலாம்‘ என்று வாதிடுவார். ஆனால் எதிர்வாதி ‘இவரே ஒரு குழந்தைத்தனமானவர் இவரால் நிச்சயம் குந்தையை பாதுகாக்கவோ அதற்கு நல்ல எதிர்காலத்தை உறுவாக்கித்தரவோ முடியாது‘ என்று வாதிடுவார். ஆரம்த்தில் சாம் சற்று தெளிவான பதில் சொல்வார்.பிறகு எதிரி வக்கில் அவரை வேண்டுமென்றே குழப்பும் விதமாக கேள்விகளை வேகப்படுத்துவார். சாம் அந்த நேரத்தில் உறிய பதிலை எடுக்க முடியாமல் அழுது தினறும் காட்சியைப்பார்க்கும்போது நம்மையறியாமல் வேதனை பீரிட்டு எழுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை முழுமையானவராக நிறுபிக்க முடியாமல் போகிறது. இறுதி தீர்ப்பு வரும்வரை காவல் துறை கண்கானிப்பில் குழந்தைக்கு கல்வியும், பாதுகாப்பும் தரவேண்டும் என்று கோர்ட் உத்தரவிடுகிறது.
குழந்தையும், சாமும் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டிருப்பார்கள். போலீஸ் இருவரையும் வளுக்கட்டாயமாகப் பிரிப்பார்கள். வக்கில் ரீட்டா ஒன்றும் செய்யமுடியாதபடி பார்த்துஅழுவாள். போலீஸ் சாமிடமிருந்து, லூசியை கூட்டிச்செல்வார்கள். அடுத்தக்காட்சி ரீட்டாவின் வீட்டில் அவர் குழந்தை தனியாக படுத்திருப்பதைக் காட்டுவார். ரீட்டா மிகுந்த குற்ற உணர்வோடு மெதுவாக குழந்தையின் பக்கத்தில் படுத்து தலையில் முத்தமிடுவாள். இக்காட்சிதான் இச்சமூகத்திற்கான சாட்டையடி. ‘எப்போதும் பாசப்பிணைப்பில் உடனுக்குடன் அதன் தேவையை நிறைவேற்றி சந்தோசமாய் வைத்திருக்கும் சாமை மனநோயாளி என்று அவரிடமிருந்து குழந்தையை பிரிக்கிறது, ரீட்டாவால் அவர் குழந்தையை ஒருநாளும் அதன் சாதாரண உணர்வை அறிந்து முழுமையாக அன்புசெலுத்த முடியவில்லை. வேலை வேலை என்று ஓடுவதால் அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. ஆனால் அவள் எல்லா விதத்திலும் பர்பெக்ட் எனும்படியாக காட்சி அமைந்திருக்கும்.
கோர்ட் உத்தரவுப்படி குழந்தை பாதுகாப்பில் இருந்தாலும். சாம் அடிக்கடி லூசியை தேடிவருவதும், லூசி இரவில் அப்பாவை தேடிவருவதும் பாசப்பிணைப்பின் போராட்டங்கள். இவர்கள் அன்பில் உருகிப்போன பாதுகாவளரே போலீஸ் கண்கானிப்பையும் மீறி இரவில் தூங்கும்போது. குழந்தை தூக்கிச்சென்று சாமிடம் கொடுப்பாள். அக்காட்சி மனதை கனக்கச்செய்கிறது. இதையே கோர்ட்டின் இறுதி தீர்ப்பாக சூசகமாக வைத்துவிடுகறார்கள். அதனால்தான் கோர்ட் இறுதி தீர்ப்பின் காட்சியை வைக்கவில்லை. பசுமை நிறைந்த வாலிபால் மைதானத்தில் குழந்தைகளுக்கு சாம் பயிற்சி தருவார். பார்வையாளர்களுக்கு மத்தியில் லூசி ஒரு வெற்றிகோல் போடுகிறாள். சந்தோஷத்தில் குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு வாழ்க்கையின் வட்ட சுற்றளவில் பாதியை வெற்றியுடன் கடந்து விட்டார்கள் என்பதை காட்டும்விதமாக கேமராவை மிகஉயரத்தில் வைத்து வாலிபால் கிரவுண்டின் வட்டத்தை காட்டுவார்கள். சாம் குழந்தைகளுடன் வட்டத்தில் பாதியில் கடந்து ஓடிவரும்போது படம் நிறைவுறுகிறது.
I am sam ற்கும் தெய்வத்திருமகளுக்கும் சம்மந்தமே இல்லை. அது தமிழ் படமாய் இருப்பதனால்,
முரண்
மாற்றுத்திறனாளி ஒரு திறமையில் குறைவுள்ளவராய் இருந்தால், மற்றொரு திறமை கூடுதளாக இருக்கும். இதில் விக்ரமின் கதாப்பாத்திரத்தை நிர்மாணிப்பதில் தெளிவில்லாமல் இறங்கியிருக்கிறார்கள். விக்ரமனின் பாத்திரம் தொத்தித் தொத்தி பேசுகிறவரா? அப்படி இருந்தால் அப்பாத்திரம் சற்று சுறு சுறுப்பாய் இருந்திருக்கும். மூளைவளற்சி குறைவுள்ளவரா? அதாவது குழந்தைத் தன்மையா? சாதாரணமாக ஒரு குழந்தையின் இயல்பு இரு குழந்தைகள் விளையாடுகிறது. அதில் ஒன்றின் கையிலிருந்து ஏதாவது ஒரு பொருளை பிடுங்கினால் இன்னொன்று சடாரென்று அதன் கையை பிடித்து கடித்துவிடுகிறது இல்லை அடித்துவிடுகிறது. ஆக அதற்கு இழப்பு வரும்போது கோபம் பீரிட்டு வருகிறது. அந்த குழந்தையின் தன்மைக்காகவாவது விக்ரமின் பாத்திரம் அமைத்திருக்கலாம். மிகவும் பயந்த சுபாவம் என்று பாத்திரம் அமைக்கப்பட்டதா? அப்படியானால் சம்மந்தமில்லாத இடத்தில் குருவிக்குஞ்சை பூனை கடிக்க முற்படும்போது பூனையை மிரட்டி குருவிக்குஞ்சை காப்பாற்றி உயரமான மரத்தில் ஏறி அதன்கூட்டில் வைப்பதற்கு பயந்த சுபாவப்பாத்திரத்தால் எப்படிமுடிந்தது.
வாகனங்களே செல்லாத நேரத்தில் ரெட் சிக்னல் விழுந்தபோதும் கிரீன் சிக்னலுக்காக நிற்கிற அளவுக்கு போக்குவரத்து விதிகள் தெரிகிறபோது, திருடுகிறவனே தனக்கான பணத்தை எடுத்துக்கொண்டு மீதியை வைப்பதுகூட தெரியவில்லையா? போலீஸ் ஸ்டேஷனின் போலீஸ்காரர், போய் வக்கீலை பார் என்று சொல்லும்போது எதுவுமே தெரியாமல் தவிப்பது மிகவும் முரணானது.
சமூகத்தில் எல்லா விதத்திலும் புறந்தள்ளுகிற மாற்றுத்திறனாளி பொருளாதாரத்திலும் குறைவுள்ளவர்.ஆக சற்று உடல் எடை குறைவான ஆளை தேர்வு செய்திருக்கவேண்டும். ஒருவேளை பணக்கார வீட்டு மாற்றுத் திறனாளியாய் இருந்திருநதால் விக்கிரம் மாதிரி திடகாத்திறமாய் இருப்பவர் பொருத்தமாய் இருப்பார். எந்தக்கோர்ட் வாதப் பிரிதிவாதத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அதிலும் ஒரு ஏழையைக் குற்றவாளிக்கூண்டில் பேசவோ, சைகைசெய்யவோ அனுமதிக்கிறது. அதன் உணர்வுகளில் கிறங்கி ஏழைக்கு சாதகமாய் எங்கே தீர்ப்பு சொல்லப்படுகிறது.
ஒற்றுமை
“மூலக்கதை. I am sam மில் நாயகனுக்கு நான்கு நண்பர்கள். உருவ ஒற்றுமையுடன். அதில் ஒருவன் தடித்த கண்ணாடி போட்டிருப்பான். ஒருவன் நெடுமரமாய் இருப்பான், தெய்வத்திருமகளிலும் அப்படியே. குழந்தைக்கு ஷு வாங்கும்போது பணம்தருவது. பலூன் பறக்கவிட்டுச்செல்வது (பலூனில் இரண்டிற்கும் எண்ணிக்கையில் வித்தியாசம் உண்டு). குழந்தையுடன் கேள்வி பதில் உரையாடல். முக்கியமாக இரண்டிலும் பெண்கள் குழந்தைகள். பிரவசத்திலே ஆரம்பித்து ஒரே வயதில் கதைமுடிகிறது. கோர்ட் காட்சிகள் கிளைமாக்ஸ். விக்ரமுக்கு உதவுகிறது பெண் லாயர்.“ என்று எதிலும் வித்தியாசம் இல்லை.
வேற்றுமை
விக்ரம் ஜோடி இறந்துவிடுகிறாள். அதில் ஓடிவிடுகிறாள். ஒட்டவைத்த காதல் பின்னனி. தமிழ் படமாய் இருப்பதால் மாற்றுத்திறனாளியை ஒன்றுக்கும் உதவாத ஜடமாய் நிர்மாணித்து, குழந்தை காலம் முழுக்க பழிசொல்லுக்கு ஆளாகும்படி இரவல் வாழ்வு வாழ சுலபமாய் பாதுகாவளரிடம் ஒப்படைத்து விடுவது.
விக்ரம் நடிப்பு சிறப்பானது. சற்று அதிகமாகவே உழைத்திருக்கிறார். இப்படத்திற்காக நிறைய மாற்றுத்திறனாளியை சந்தித்தேன் என்கிறார். I am sam நாயகன் கைத்தட்டல், இரண்டு முழங்கைகள் மேலே தூக்கி நடப்பது போன்ற நுனுக்கங்களையும் பார்க்காமல் இருந்திருக்கமாட்டார். இருந்தாலும் ஐயம் சாம் நாயகனின் ஒரு சிரிப்பை ஈடுசெய்யவில்லை. அனுஷ்கா. நாசர் அவர்கள் பங்கை திருப்தியாக நிறைவேற்றி யிருக்கிறார்கள். இசை சில இடங்களில் கேட்கும் படியாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக சேர்ந்து செய்த சூது அறியாமல் குழந்தை இயல்பான நடிப்பை வெளிக்காட்டியதை பாராட்டலாம். அதற்கு தெரியுமா இது காப்பி அடிக்கப்பட்டவை, அடிக்கப்படாதவை என்று மிகவும் யதார்த்தமாக தன் நடிப்பை வெளிப்டுத்தியிருக்கிறது.
ஜேடி
Thursday, July 28, 2011
Friday, July 22, 2011
கவிதை
சமச்சீர்
திறந்துகிடக்கும்
மூத்திரக்கதவை மூடிவைக்க
வேலை செய்யாத ஜிப்பை
நடுவாக நிறுத்தியுள்ளான்
எட்டாம் வகுப்பு மாணவன்
ஜெபத்திற்கு
மண்டியிடுவது போல
வீட்டுக் கதவின்
சாவி தூவாரத்தின் வழியாய்
அறையின் உள் நிகழ்வுகளை
ஆராய்வதுபோல்
அம்மாணவனை நோக்கினால்
ஜட்டியில்லாமல்
அம்மணம் தெளிவாய் தெரியும்
வகுப்பறையில்
மூன்றுபேர் அமரும் பெஞ்சில்
தினந்தோறும் அமர்கிறவர்கள்தான்
மதிய இடைவேளையில்
ஒருவன் உயர்ரக பதார்த்தத்துடன்
எப்போதும் சாப்பிடும் நண்பருடன் சென்றுவிட்டான்
இரண்டாமவன் ரசத்தின் முகத்துடன்
சாம்பார் பெயருடன்
மிதக்கும் முட்டையோடு
வேண்டா வெறுப்பாக சாதம் வாங்கினான்
மூன்றாமவன் நிர்பந்தப் படுத்தி
தினித்ததைப்போல்
மதிய உணவு இடைவேளையை வெறுக்கிறான்
வெறுமனே நேரத்தை கழிக்க
வகுப்பறையை விட்டு வெளியேறுகிறான்
கடை வீதியில்
பசியைத்தூண்டும் பொருட்களில்
பார்வையில் பசியாரி
டீக்கடை முதளாலியின்
வசை மொழியை வாங்கிக்கொண்டு
டம்ளர் தண்ணீரோடு
மீண்டும் வகுப்பறை பெஞ்சை நிறப்பினார்கள்.
இதன் உச்சகட்டமாக
பதினோராம் வகுப்பு மாணவன்
சீருடையின் வண்ணம் மாறாவண்ணம்
புட்டத்தில் ஒட்டுத்துணி தைத்துள்ளான்
காலைத்தொழுகையில்
எல்லோரும் சீருடையில் இருப்பது
மிகவும் அழகுதான் என்றார்கள்
பள்ளிக்குள்ளும் பள்ளிக்கு வெளியிலும்
சமமாய் மதிக்கின்ற சீரான மனம்
மனிதனுக்கு போதிக்காத வரை
சமச்சீரும் சீருடைத்தன்மைதான்
இருந்தாலும்
அழகுக்காக வேண்டூம்தான்
சமச்சீர்.

Sunday, July 17, 2011
நாவல்
போக்கு
மலரில் இதழ் 2 சுயபோதை
ஒரு வேளை, ஐதீகத்தில் ஊறிப்போன நகரம் என்பதால் எந்த நேரத்திலும் கச்சேரி, ஜீஸஸ் மேனிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கு ஆபத்து நேரலாம். அதிலிருந்து அவர்களை பாதுகாக்கவே தலைமை ஆசிரியர்களுக்கு முதல் தளத்தில் அறை ஒதுக்கியுள்ளார்கள் போல.
கடும் முயற்சிக்குப் பிறகே இடத்தேர்வு முடிவு எடுத்திருக்கலாம். ஸ்காட் லாந்து மிஷினரிகள் முதலில் வாலாஜாபாத் வந்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் காஞ்சிபுரம் வந்துள்ளார்கள். வந்தவர்கள் தாங்கள் இதுவரை அறிந்திராத தெய்வங்களை விக்கிரகங்களாக கணக்கிட்டுக் கண்டார்கள். இவைகளிலிருந்து விடுபட தங்களுடைய நம்பிக்கைக்குறிய தெய்வத்தை அறிமுகப் படுத்தவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள். அதை எப்படி செயல்படுத்துவது. ஆய்வு நடத்திக்கொண்டே காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில், பத்து கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு பகுதியில் உள்ள முத்துவேடு என்ற கிராமம் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார்கள். அங்கு முதலில் ஒரு மருத்துவ முகாகமைத் தொடங்கி பின்னாளில் அதை நம்பிக்கைக்குறிய சபையாக நிறுவியிருக்கிறார்கள்.
தங்களுடைய ஆண்மீக நிறுவனத்தை காஞ்சிபுரத்தில் நிறுத்தவேண்டு மென்பது ஆங்கிலேய மிஷினரிகளின் முக்கியத் திட்டம் அதற்கான வெள்ளோட்டமாகதான் காஞ்சிபுரத்திற்கு மேற்கில் முத்துவேட்டில் ஒரு சபை. கிழக்கில் வாலாஜாபாத்தில் ஒரு சபை என்று நிறுவினார்கள். அதன் பிறகுதான் காஞ்சிபுரத்தில் நேரடியாக மதத்தின் பெயரால் கால்பதிக்க முடியாது என்று அச்சப்பட்டார்கள். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு பள்ளியின் பெயரில் மிஷினரிகள் காஞ்சிபுரத்தில் நுழைகிறார்கள். அக்கால கட்டத்தில் இன்றய தாலுக்கா அலுவலகம் முழுவதுமே மிஷினரிகள் கயையகம் இருந்ததாகச் சொல்கிறார்கள். தற்போதய கச்சேரி தபால் அலுவலகத்தில்தான் முதன் முதலில் ஏழு பிராமண பிள்ளைகளை வைத்து ஜீஸஸ் ஐஸ்கூல் தொடங்கப்பட்டது. நகர பேருந்து நிறுத்தம் அருகில் அரசாங்க அலுவலகங் களுக்குச் சரியான இடம் இல்லாததால், ஒரு சிறியப் பள்ளிக்கு இவ்வளவு இடம் தேவையில்லை என்று காலப்போக்கில் தாலுக்கா, தாபால், காவல் நிலையம், கோர்ட் என மிஷினரிகள் வைத்திருந்த நிலத்தை, அரசு கையகப் படுத்திக்கொண்டது. கடைசியாகதான் மேற்கிற்கும், வடக்கிற்கும் இடைப் பட்ட ஒரு முலையில் ஜீஸஸ் ஐஸ்கூல் அமைந்து விட்டது.
மிஷினரிகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் உதவியுடன் மண்டபம் கட்டினார்கள். அம்மண்டபத்தில் உயர்ஜாதிப் பிள்ளைகள் பயின்றார்கள். மதவாதிகளுக்குள் வெறுப்பு இருந்தாலும் வெளியில் காட்டாத நிலையில் இருந்தார்கள். மிஷினரிகள் சற்று காலூன்றி ஆசுவாசம் அடைந்தார்கள். அதன் பிறகு தாங்கள் நோக்கத்தை பள்ளியின் மண்டபத்திலேயே தொடங்கினார்கள். மானவர்களிடம் பேசி பெற்றோரை ஞாயிறு தொழுகைக்கு வரவைத்தார்கள். ஆங்கிலேயர்க் கல்வி புதிதாக சிறப்பாய் இருக்கிறது என்று பரவலாகப் பேசப்பட்டு பிள்ளைகள் அதிகமாக வரத் தொடங்கினார்கள். ஆனால் உயர் சாதியின் ஒரு பெற்றோரைக்கூட மதம் மாற்ற செய்யமுடியவில்லை.
மிஷினரிகள் காஞ்சிபுரத்தின் மதவாதிகளிடம் மிகவும் சோர்ந்துபோனார்கள். தாங்கள் வந்ததின் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அதற்கு யார் சரியான நபர்கள், என்று யோசித்தார்கள் அப்போதுதான் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சாதியின் கீழ்நிலையில் உள்ளவர்களை பள்ளிக்ககுள் இழுத்தால்தான் தங்களுடைய சேவை நிறைவேறும் என்பதை உணர்ந்தார்கள். அதை செயல்படுத்தும் விதமாக குறிப்பிட்ட வருஷத்திலிருந்து தாழ்த்தப் பட்ட வகுப்பினரின் பிள்ளைகளை பள்ளிச்சேர்க்கையில் அனுமதித்தார்கள். பள்ளியில் கீழ் ஜாதிப்பிள்ளைகள் சேர்க்கிறார்கள் என்று கேள்விப் பட்டவுடன் உயர் ஜாதிப் பெற்றோர் பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை நிறுத்தி விட்டார்கள். அவர்களே பள்ளி வளாகத்திற்கு வந்து சண்டையிட்டார்கள்.
திடிரென்று மாணவர் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. ஆனால் மிஷினரிகள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எதிர்ப்பிபுகள் வந்தால்கூட நாம் எடுத்த முடிவில் உறுதியாய் இருப்பது என்று தீர்மானமாய் இருந்தார்கள். அப்போது தாழ்த்தப்பட்ட பெற்றோர் சிலர் ஞாயிறு தொழுகைக்கு வந்துகொண்டு இருந்தார்கள். உற்சாகம் அடைந்த மிஷினரிகள் எல்லா மதத்தினரையும், சாதியினரையும் தொடர்ந்து சேர்த்தார்கள். மதத்தை தூக்கிப்பிடிப்பவர்களின் மத்தியில் எதிர்ப்பு அடிக்கடி கிளம்பினாலும், மற்ற மக்கள் கல்வி தரமாய் இருக்கிறது என்று ஆதரவு அளித்தார்கள். மிஷினரிகள் இரண்டு குதிரைப் பூட்டிய சார்ட் வண்டியில் சுலபமாய் பயணம் செய்தார்கள். ஞாயிறு தொழுகைக்கு கூட்டம் அதிகமானதால் கல்வியும், மதத்தையும் தனித் தனியாகப் பிரித்து, மதத்தை வேறு இடத்திற்கு மாற்றினார்கள்.

மஞ்சல் நீர் கால்வாய்க்கு மேலே பல்லவர்கள் இருந்தார்கள், என்பதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றது. 1839திற்கு முன்னிலிருந்து அப்பகுதியின் வழி வழியாய் வருபவர்களின் வாய்மொழித் தகவலாய் இருக்கிறது. அப்பகுதி இன்னும் ஆய்வுக்குறிய பகுதியாகவே இருக்கிறது என்பதால் நம்பித்தான் ஆகவேண்டும். அப்பகுதியில் உள்ள நிலங்களை யாருக்கும் அதிகாரப் பூர்வமாக விற்கவோ, வாங்கவோ இன்றுவரை அங்கு தடையிருக்கிறது. இதே விதிதான் சுமார் நூற்று எழுபத்திரண்டு வருஷங்களுக்கு முன்பாகவும் கடை பிடித்திருக்கிறார்கள். அதனால்தான் ஜீஸஸ் பள்ளியை மஞ்சல் நீர்கால் வாய்க்கு கீழ் பக்கமாகவே நிறுவியிருக்கிறார்கள்.
கடும் முயற்சிக்குப் பிறகே இடத்தேர்வு முடிவு எடுத்திருக்கலாம். ஸ்காட் லாந்து மிஷினரிகள் முதலில் வாலாஜாபாத் வந்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் காஞ்சிபுரம் வந்துள்ளார்கள். வந்தவர்கள் தாங்கள் இதுவரை அறிந்திராத தெய்வங்களை விக்கிரகங்களாக கணக்கிட்டுக் கண்டார்கள். இவைகளிலிருந்து விடுபட தங்களுடைய நம்பிக்கைக்குறிய தெய்வத்தை அறிமுகப் படுத்தவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார்கள். அதை எப்படி செயல்படுத்துவது. ஆய்வு நடத்திக்கொண்டே காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில், பத்து கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு பகுதியில் உள்ள முத்துவேடு என்ற கிராமம் ஒன்றை தேர்வு செய்திருக்கிறார்கள். அங்கு முதலில் ஒரு மருத்துவ முகாகமைத் தொடங்கி பின்னாளில் அதை நம்பிக்கைக்குறிய சபையாக நிறுவியிருக்கிறார்கள்.
தங்களுடைய ஆண்மீக நிறுவனத்தை காஞ்சிபுரத்தில் நிறுத்தவேண்டு மென்பது ஆங்கிலேய மிஷினரிகளின் முக்கியத் திட்டம் அதற்கான வெள்ளோட்டமாகதான் காஞ்சிபுரத்திற்கு மேற்கில் முத்துவேட்டில் ஒரு சபை. கிழக்கில் வாலாஜாபாத்தில் ஒரு சபை என்று நிறுவினார்கள். அதன் பிறகுதான் காஞ்சிபுரத்தில் நேரடியாக மதத்தின் பெயரால் கால்பதிக்க முடியாது என்று அச்சப்பட்டார்கள். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு பள்ளியின் பெயரில் மிஷினரிகள் காஞ்சிபுரத்தில் நுழைகிறார்கள். அக்கால கட்டத்தில் இன்றய தாலுக்கா அலுவலகம் முழுவதுமே மிஷினரிகள் கயையகம் இருந்ததாகச் சொல்கிறார்கள். தற்போதய கச்சேரி தபால் அலுவலகத்தில்தான் முதன் முதலில் ஏழு பிராமண பிள்ளைகளை வைத்து ஜீஸஸ் ஐஸ்கூல் தொடங்கப்பட்டது. நகர பேருந்து நிறுத்தம் அருகில் அரசாங்க அலுவலகங் களுக்குச் சரியான இடம் இல்லாததால், ஒரு சிறியப் பள்ளிக்கு இவ்வளவு இடம் தேவையில்லை என்று காலப்போக்கில் தாலுக்கா, தாபால், காவல் நிலையம், கோர்ட் என மிஷினரிகள் வைத்திருந்த நிலத்தை, அரசு கையகப் படுத்திக்கொண்டது. கடைசியாகதான் மேற்கிற்கும், வடக்கிற்கும் இடைப் பட்ட ஒரு முலையில் ஜீஸஸ் ஐஸ்கூல் அமைந்து விட்டது.
மிஷினரிகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் உதவியுடன் மண்டபம் கட்டினார்கள். அம்மண்டபத்தில் உயர்ஜாதிப் பிள்ளைகள் பயின்றார்கள். மதவாதிகளுக்குள் வெறுப்பு இருந்தாலும் வெளியில் காட்டாத நிலையில் இருந்தார்கள். மிஷினரிகள் சற்று காலூன்றி ஆசுவாசம் அடைந்தார்கள். அதன் பிறகு தாங்கள் நோக்கத்தை பள்ளியின் மண்டபத்திலேயே தொடங்கினார்கள். மானவர்களிடம் பேசி பெற்றோரை ஞாயிறு தொழுகைக்கு வரவைத்தார்கள். ஆங்கிலேயர்க் கல்வி புதிதாக சிறப்பாய் இருக்கிறது என்று பரவலாகப் பேசப்பட்டு பிள்ளைகள் அதிகமாக வரத் தொடங்கினார்கள். ஆனால் உயர் சாதியின் ஒரு பெற்றோரைக்கூட மதம் மாற்ற செய்யமுடியவில்லை.
மிஷினரிகள் காஞ்சிபுரத்தின் மதவாதிகளிடம் மிகவும் சோர்ந்துபோனார்கள். தாங்கள் வந்ததின் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அதற்கு யார் சரியான நபர்கள், என்று யோசித்தார்கள் அப்போதுதான் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சாதியின் கீழ்நிலையில் உள்ளவர்களை பள்ளிக்ககுள் இழுத்தால்தான் தங்களுடைய சேவை நிறைவேறும் என்பதை உணர்ந்தார்கள். அதை செயல்படுத்தும் விதமாக குறிப்பிட்ட வருஷத்திலிருந்து தாழ்த்தப் பட்ட வகுப்பினரின் பிள்ளைகளை பள்ளிச்சேர்க்கையில் அனுமதித்தார்கள். பள்ளியில் கீழ் ஜாதிப்பிள்ளைகள் சேர்க்கிறார்கள் என்று கேள்விப் பட்டவுடன் உயர் ஜாதிப் பெற்றோர் பள்ளியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை நிறுத்தி விட்டார்கள். அவர்களே பள்ளி வளாகத்திற்கு வந்து சண்டையிட்டார்கள்.
திடிரென்று மாணவர் எண்ணிக்கை பாதியாக குறைந்தது. ஆனால் மிஷினரிகள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எதிர்ப்பிபுகள் வந்தால்கூட நாம் எடுத்த முடிவில் உறுதியாய் இருப்பது என்று தீர்மானமாய் இருந்தார்கள். அப்போது தாழ்த்தப்பட்ட பெற்றோர் சிலர் ஞாயிறு தொழுகைக்கு வந்துகொண்டு இருந்தார்கள். உற்சாகம் அடைந்த மிஷினரிகள் எல்லா மதத்தினரையும், சாதியினரையும் தொடர்ந்து சேர்த்தார்கள். மதத்தை தூக்கிப்பிடிப்பவர்களின் மத்தியில் எதிர்ப்பு அடிக்கடி கிளம்பினாலும், மற்ற மக்கள் கல்வி தரமாய் இருக்கிறது என்று ஆதரவு அளித்தார்கள். மிஷினரிகள் இரண்டு குதிரைப் பூட்டிய சார்ட் வண்டியில் சுலபமாய் பயணம் செய்தார்கள். ஞாயிறு தொழுகைக்கு கூட்டம் அதிகமானதால் கல்வியும், மதத்தையும் தனித் தனியாகப் பிரித்து, மதத்தை வேறு இடத்திற்கு மாற்றினார்கள்.
ஜேடி
Thursday, July 14, 2011
கவிதை
மனிதன் தொடங்குகிறான்
வாழ்ந்ததை திரும்பிப்பார் என்று,
தொடங்கிய இடத்திற்கே நகர்கிறான்
அங்கிருந்து
ஆயுதம் கண்டடையும் விதமாக
ஒருமிருகத்தை கொல்ல பழகுவதுபோல்
மனிதன் தலையை வீதியில்
கல்லால் நசுக்கி தொடங்குகிறான்.
தாகம்
கொஞ்சம் தண்ணீர் தாருங்கள் என்று
வாசல் கதவண்டையில் வருகிறான்
சற்று மனமிரங்கி
உள் தாழ்ப்பாள் திறக்கப்பட்டது
காதுகளும், கழுத்தும் அறுக்கப்பட்டு
துடிக்கிறாள் வயது முதிர்ந்த பாட்டி
எந்த பதட்டமும் இல்லாமல்
தண்ணீரைக் குடித்து
வாழவேண்டும் என வெளியேறுகிறான்.
தீயை பரிசோதிக்க
கூரைவீட்டின் தாழ்வாரத்தில்
தீப் பந்தத்தை வைக்கிறான்
கொழுந்துவிட்டு எரிகிறதா தூரம் நின்று பார்க்கிறான்
உள்ளே குழந்தையோடு அலறல் கேட்கிறது
இவன் உரத்த சிரிப்பில்
அது வெளியில் கேட்கவே இல்லை.
உடன் பிறந்தவன் தானே என்று
வீட்டு பத்திரம்
அவனே வைத்திருக்க விட்டுவிட்டான்
சமீபத்தில்
அப்பா ஏற்கனவே எனக்கு
எழுதிவைத்துவிட்டார் என
பூர்வீக வீட்டிற்கு
தற்போது அவன் பேரில் இருக்கும்
பத்திரத்தை நீட்டி
இவனை வெளியே துரத்துகிறான்.
மனிதன் தொடங்குகிறான்
மீண்டும் முதலிருந்து.

Monday, July 11, 2011
நாவல்
மலரில் -இதழ் 1 போக்கு
அவரவர் வீட்டு வாசலுக்கு நேராக நின்று சிலர் வேடிக்கைப் பார்த்தார்கள். மாலா தலை தெறிக்க ஓடினாள். தெருவில் படுத்திருந்த நாய் பயந்து ஓடியது. நாய் படுத்திருந்த இடத்தில் தூசுகள் பறந்தன. அவள் ஓடிய வேகத்தில் ஒரு வீட்டின் கூரையில் உரசிவிட்டாள். வீட்டுக்காரிப் பார்த்தாள். மாலா பயந்து ஓடிவருவதற்காக பரிதாபப் பட்டாலும் தன் வீட்டு கூரை முறிந்து கொட்டியதில் உள்ளுக்குள் திட்டினாள். எந்தவீட்டிலும் அடைக்களம் கொடுக்க பயந்தார்கள். சிலர் தடுக்க நினைத்தார்கள். பின்னாக அவள் அப்பா துரத்திவந்தான். அந்த தெவிடியா வாழாம வரதுக்கு நீங்கதான் காரணம் என்று பழியை நம்மீது சுமத்துவான் என்பதற்காக யாரும் தடுக்கவில்லை.
அவரவர் வீட்டு வாசலுக்கு நேராக நின்று சிலர் வேடிக்கைப் பார்த்தார்கள். மாலா தலை தெறிக்க ஓடினாள். தெருவில் படுத்திருந்த நாய் பயந்து ஓடியது. நாய் படுத்திருந்த இடத்தில் தூசுகள் பறந்தன. அவள் ஓடிய வேகத்தில் ஒரு வீட்டின் கூரையில் உரசிவிட்டாள். வீட்டுக்காரிப் பார்த்தாள். மாலா பயந்து ஓடிவருவதற்காக பரிதாபப் பட்டாலும் தன் வீட்டு கூரை முறிந்து கொட்
சண்முகம் மாலாவை எட்டிப் பிடித்தான். அவள் முந்தானை கைக்கு சிக்கியது. மாலா யாரோ சுற்றிவிட்டது போல் கயிறு பிரிந்த பம்பரமாக சுற்றி ஓடினாள். ஜாக்கட், பாவாடை மட்டுமே இருந்தது. தற்செயலாக பார்க்கும் ஆண்களின் பார்வைக்கே தன் மார்பகங்களின் ஆடைகளை சரிசெய்வாள். அப்படி சரிசெய்யாவிட்டால் எதிரில் வருபவன் அவனவன் குளதெய்வங்களை வேண்டாமல் இருக்கமாட்டான். யார் கரங்கள் ரத்த புஸ்டியாய் இருக்கிறதோ என்று பெறுமூச்சிதான் விடவேண்டும். ஆனால் மாலா இப்போது அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவள் அதிகப் படியாக கால் எவ்வளவு எட்டிப்போடமுடியுமோ அவ்வளவு எட்டிப் போட்டு ஓடினாள்.
சண்முகம், அக்கா வீட்டுக்காரரான ஞாணராஜிக்கு மட்டுந்தான் சற்று பயப் படுவான். ஞாணராஜ் வீட்டில் இருக்கும்போது அந்த வீட்டு பக்கம் போகமாட்டான், இதை மாலா தெரிந்து வைத்திருந்தாள். தெருவழியே நேராக ஓடி இடது பக்கமாக திரும்பியதும் ஞாணராஜ் வீடு. மாலாவின் நல்ல நேரம் ஞாணராஜ் எருதுகளுக்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தார். அவள் வேகத்துக்கு ஓடி வர முடியாத சண்முகம் எதிரே வந்த காங்கனை பார்த்து ''டே... டே அவள மடக்கி புடிடா, இன்னையோட கண்ட துண்டமா வெட்டிப் போட்டுடுறேன். மாலா வேகமாக ஓடினாள். தெவிடியா மாப்பி ளையப் புடிக்கலனா கலியாணத்துக்கு முன்னாடியே சொல்லி யிருக்கனும். இப்ப வந்து நான் வாழமாட்டேன்னா என்ன அர்த்தம். ஏன் அவுனுது சின்னதா இருக்குதா?'' என்று திட்டிக்கொண்டு துரத்திவந்தார். அதிகமாக மூச்சிவாங்கியது. சண்முகத்தின் பின்னாக ஓடிவந்த மாலாவின் பெரியப்பா சற்றுநின்ற நேரம்பார்த்து கையிலிருந்த கொம்பை பிடுங்கினார். மாலாவை தன் சொந்த மகளாக நேசித்தவர். அவருக்கு ஒரே பையன். அதனால் மாலாதான் நாகரத்தினத்திற்கு எல்லா உதவிகளையும் செய்துவந்தாள். பெரியப்பாவீட்டில்தான் காலை வாசல் பெருக்குவது, தண்ணீர் எடுத்து வைப்பது எல்லா வேலைகளையும் செய்வாள். சண்முகத்தின் மனை விக்கும், நாகரத்தினத்தின் மனைவிக்கும் எந்த சண்டையும் இருக்காது. சிறு வயதிலிருந்து தன் குடும்பத்தோடு ஊடாடிக்கொண்டு இருந்ததால் மாலா வின் கலியாணத்திற்கு ஏறக்குறைய எல்லா செலவுகளையும் நாகரத்தினமே பார்த்தார்.
ஆண்களும், பெண்களும் கூட்டமாக கூடிவிட்டார்கள். மாலா ஓடிவந்து ஞாணராஜின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாள். ஞாணராஜ் தன் தோளில் இருந்த துண்டைக் கொடுத்து '' நீ வீட்டுக்குள்ள போ'' என்று அனுப்பினார். மாலா ஓடிவந்து ஞாணராஜிடம் தஞ்சமடைந்தபோது தொட்டியில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த எருதுமாடுகள் மிரண்டன. ஞாணராஜ் மாடுகளை தைலமரத்தில் கட்டுவதற்கு இழுத்துவந்தார். ''என்னடா இது, உன் பொண்டாட்டியா இவ. ஒரு எடத்துல கட்டிக்குடுத்த பொண்ண இப்படி தொரத்திக்கினு வர. அசிங்கமாயில்ல '' என்றார்.
சண்முகம் கோபத்தை அடக்கிக்கொண்டு "கலியாணம் பண்ணவனைவிட்டு அடிக்கடி ஆத்தா ஊட்டுக்கு ஓடியாறாளே அவள என்ன செய்யறது. அவ சரிப்பட்டு வரமாட்டா மாமா. அவள உயிரோடு வைக்கக்கூடாது. அவள அனுப்பு நீ, நான் பாத்துக்கிறேன்" என்று ஆவேசமானான். அவன் சொல்வதில் ஏதோ நியாயம் தெரிய ஞாணராஜ் தன் குரலை தாழ்த்தி "ஏம்பா நான் பேசி, அவ வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யிறேன் நீ போப்பா" என்றார்.
வேடிக்கை பார்க்க வந்தவர்கள் ஒன்றும் நடக்கவில்லை என்பதால் அவரவர் ஏமாற்றம் கண்டு திரும்பினர். நடந்தோ, நடக்காமலோ இருக்கும் ஒரு விஷயத்தை ஆராய்ந்து அறியாமல் யூகத்தின் அடிப்படையில் கேட்போருக்கு சுவாரசியம் குறையாமல் சொல்வது மனிதர்களின் இயல்பாய் இருக்கின்றது.
கூடிக்கூடிப் பேசிக்கொண்டார்கள். அந்தப் பொண்ணும், ரமேஷும் காதலிச் சாங்க அதுதெரியாம கலியாணம் செஞ்சிட்டாங்க.அவளால ரமேஷ மறக்க முடியல. எதையும் வெளியில சொல்லவும் முடியல. கலியாணமான ஆறுமாசம் இப்படித்தான், இரண்டு வாரத்துக்கு ஒரு முறைன்னு தாய் வீட்டுக்கு ஓடிவந்திடுவா.இதுவரைக்கும் அவ வீட்டுக் காரனாக்கூட படுக்கவே இல்லையாம். மாலா வீட்டுக்காரன் பார்வைக்கு எடுப்பா இருக்க மாட்டான்.ஆனா நல்ல உழைப்பாளி.முணு மாசத்துக்கு முன்னால் அவளுக்கு பேய் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள். தேடிப்போன மந்திர வாதிகளெல்லாம் அவள் உடளை உருகுலைத்து அனுப்பியதுதான் மிச்சம். ஊரில் சிலர் எப்படியிருந்த பொண்ணு இப்படி ஆன மர்ம்மென்ன என்றும் சிலர் அவளுக்கு ரமேஷ் பித்து பிடித்துவிட்டது என்றும் பேசிக் கொண்டார்கள். இதன்பிறகுதான் அவசர அவசரமாய் ரமேஷுக்கு கலியாணம் முடித்தார்கள். ஏறக்குறைய ரமேஷ் வீட்டாரின் காதுகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். மாப்பிள்ளையும் பொண்ணும் ஊரில் வந்தபோது தான் ரமேஷுக்கு கலியாணம் நடந்ததே தெரியும். யாருக்கும் தெரியாமலே சாமார்த்தியமா நடத்திட்டாம்பாரு. பொண்ணு சொந்தமாயிருக்கவே கப்பு சிப்புனு முடிச்சிட்டாங்க" என்று நாய்கர் வீட்டு வயல்களிலும். அம்பேத்கர் நகர் குடிநீர் கிணறுகளிலும் ஓயாத பேச்சாய் இருந்தது.
ஞாணராஜ் மாலாவிடம் சற்று நயமாக பேசினார். அவருக்கு ரமேஷின் சங்கதியும் தெரிந்திருந்தது. "எது எப்படியோ, அவன் ஒரு வாழ்வை தொடங்கிவிட்டான். சின்ன வயதில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமல்ல. ஆனா உனக்கும் ஒரு வாழ்க்கை தலையில் விழுந்திருக்கு மறந்திடாதே. அவன் உன்னை உண்மையாய் விரும்பியிருந்தா இவ்வளவு அவசரமாக வேற ஒரு கலியாணம் பண்ணியிருப்பானா. மாலா நீ யோசித்துப்பாரு, நான் சொல்றேன்னேனு அவசரப்படாதே. இது ரொம்ப நாளைக்கு வாழப் போரவாழ்க்கை. நான் கட்டாயப்படுத்தவே இல்லை. உன் வாழ்க்கை நல்ல படியாய் அமைவதில் உன்னை விட யாருக்கு அதிக அக்கறை இருக்கப்போகிறது. மாலா நீ ஒரு வாரம் இரண்டுவாரம் கூட இங்கேயே இரு. ஆனா, இதுவே நிரந்தரம் இல்ல தெரிஞ்சிக்கோ".என்று குருவி தன் குஞ்சின் வாயில் உணவை தினிப்பதுபோல் தினித்தார்.
நீண்ட நேரங்கழித்து ஞாணராஜ் வெளியே வந்தார். பரபரப்புடன் காத்திருந்த வேடிக்கையாளர்கள், அவர் முகத்தையே நோக்கினார்கள். சற்று முகமலர் சியாய் இருந்தது. சண்முகத்திடம் "ஏம்பா இனிமே பிரச்சனை ஒண்ணியும் இல்ல. ரெண்டுவாரம் இங்க தங்கியிருந்து. அப்புறமா அவுங்க ஊட்டுக்கார ரோடு போய் வாழ்தாம்" என்றார். மாலா, சண்முகத்தின் வீட்டில் நுழையவே இல்லை. நாகரத்தினத்தின் வீட்டிலேயே இருந்தாள்.......
----------------------------------------
தொடர்ந்து வரும்......

Subscribe to:
Posts (Atom)