Tuesday, August 11, 2015

கவிதை,



அறிமுகமற்றவர்களின் முகங்களைத்
திரும்பச் சாத்தியமற்ற
இறந்தவர்களின் முகத்தை நோக்கவதுபோல்
எந்தத் தயக்கமுமற்று
எவ்வித அச்சங்களுமற்று
எந்தப் புகார்களுமற்று
எந்த இழப்புகளுமற்று
எந்த நிர்பந்தகளுமற்று
எந்தச் சுதந்தரமும் பரிபோகாமல் 
அணுகமுடிகிறது
தற்கால
அறிமுகமானவர்களின் வாசகத்திற்கு 
நேர்மாறாக
ஜேடி

No comments: