Monday, May 28, 2012

சிறுகதை


                                        கொள்ளி


அழகாக எரிந்துகொண்டிருந்தான். அவனை அப்படித்தான் ஒப்புமைச் செய்யவேண்டும். முக்கிய வேலை செய்துகொண்டிருக்குபோது, அதைச் சற்றுநேரம் நிறுத்திவிட்டு  கண்ணில் படுகின்ற காகிதங்கள், குப்பை கூளங்களைக் குவியலாக்கி கொளுத்திவிடுவான்.

இப்படிச் சொல்வதால் அவனை பயித்தியம் என்று நினைத்துவிடாதீர்கள். ஆனால், பயித்தியக்கூறுகள் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. அத் தன்மை இல்லாத மனிதர்கள் யாராவது உண்டா? அவன் மற்றவர்களைப் போலவே எல்லா வேலைகளையும் ஒழுங்காகவேச் செய்தான். கடை முதலாளி எப்போதும் அவனை பாஸ் என்றுதான் அழைப்பார். மதிப்பு அடிப்படையில் அந்தப் பெயர் அமைந்ததாகத் தெரியவில்லை. தன்னிடம் வேலை செய்யும் நபருக்கு அப்படி ஒரு பெயர் வைத்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். அதனால் முதலாளி முற்போக்கான சிந்தனை உடையவர் என்று நினைத்து விடவேண்டாம். இருபத்திமூன்று வயதேதான் ஆகிறது என்றாலும் மதவாதிகளைவிடத் தீவிரமான அனுஷ்டானங்களைக் கடைபிடிப்பவர். (பரம்பரையாக திராவிடக் கட்சிகளில் முக்கியமாக உழல்பவர்.) அப்படி இருந்தும் தன் பணியாளனுக்கு பாஸ் என்று பெயர் வைத்து அழைக்கிறார் என்றால், அதற்கானத் தகுதி வேலையாளிடம் ஏதோ ஒருவகையில் இருக்கவேண்டும். ஒரு வேளை அப்படி இல்லை என்றாலும் தான் வியாபாரம் நடத்துவதில் அவன் மூலமாக கூடுதலான லாபம் கிடைக்கவேண்டும். அப்போதுதான் அப்படி அழைக்க வாய்ப்புண்டு.

மூன்று சக்கர ட்ரே சைக்களில் இருபத்தியைந்து லிட்டர் கேண்களை அடுக்கி அதன் மீது தவலைகளையும் வைத்துக்கொண்டுவருவான். அதைபோல காலை, மாலை  இரண்டுவேலை  தண்ணீர் எடுப்பது. இரண்டுவேலை பாத்திரங்கள் கழுவுவது. வெங்காயம் அரிவது இவனின் அன்றாட வேலையாகும். எல்லா வேலைகளையும்விட வெங்காயம் அரிவதுதான் அவனுக்கு மிகப்பிடித்தமான வேலை.  கடை முதலாளி இம்மூன்று வேலைகள் தவிர்த்து, மக்களோடு உரையாடும் எந்த வேலையுமே அவனுக்கு விடமாட்டார். பொதுவாகப் பெண்கள் கடைக்கு வந்தால் முதலாளி உடனே பாஸிடம் வெங்காய பேஸனைக்கொடுத்து கடைக்கு வெளியே அனுப்பிவிடுவார்.  கடையில்  சம்பளம் கொடுக்கிறார்கள். அது தற்போது சங்கங்களால் தீர்மானிக்கப்பட்டதாக இருக்காது. முதலாளியும் முழுதாக அவன் உழைப்பை சுரண்டிக்கொள்கிறார் என்று சொல்ல முடியாது. பாஸ்சுக்கு வெளியிடங்களில் ‘டீ’ மாஸ்டருக்கு என்ன சம்பளம். எடுபிடி வேலை செய்கிறவர்களுக்கு என்ன சம்பளம் என்பது தெரிந்திருந்தது. அவன் சம்பளத்தைப்பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை.

பாஸ் இயல்பான மாநிறத்திலிருந்து, படிப்படியாக இந்த கறுப்பு நிறத்திற்கு வந்துசேர்ந்திருக்கிறான் என்பதை எந்த நபரும் பார்த்தவுடன் சொல்லி விடலாம். முகத்தில் சதை ஒட்டி கன்ன எலும்புகள் துருத்திக்கொண்டிருந்தது. சின்ன கண்கள் இரண்டும் உள் அடங்கியிருந்தது. கீழ் உதடு சற்று பருத்து தொங்கியது போன்று இருந்தது. அவன் மூக்கின் துவாரங்கள் அதிகமாக தெரியாதபடிச் சப்பையாக இருந்து, கிளி மூக்குபோல முனைக் கூராக இருந்தது. குட்டி நாய்வாலின் முனையைப்போல் மீசை மேல்நோக்கி மடிந்திருந்தது. கழுத்தில் எதோ தாயத்துக் கட்டியிருந்தான். அடர்த்தியான முடி உருண்டையாக வாரியிருந்தான். வலக்கையில் ஒரு அங்குல அகலத்தில் செப்பு தகடு அணிந்திருந்தான். இடக்கையில் கறுப்பில் ஒன்று, சிகப்பில் ஒன்று கயிர்கள் கட்டியிருந்தான், மேலும் சில்வர்,  காப்பர், ரப்பர் இவற்றில் தலா ஒரு வலையம் போட்டிருந்தான். சட்டை எப்போதும் லேசாக அழுக்கைப் பூசியிருக்கும். பேண்ட் முட்டிக்குக்கீழ்  மடித்துவிட்டிருப்பான்.  மூன்று, நான்கு நாட்கள் அதேத் துணிகள் போட்டிருப்பான்.  கடையில் நடமாடும்போது கெட்டவாடை அடிக்கிறது என்று யாருமேச் சொன்னதில்லை. அதை நானும் ஊகித்திருக்கிறேன்.  மாலை வேலைகளில் மட்டும் லேசான வேர்வை வாசம் வரும். அது எல்லா மனிதர்க்குள்ளும் வித்தியாசப் படுந்தானே.

மதிய வேளைகளில் கடையில் பார்சல் சாப்பாடு, லெமன், தக்காளி, தயிர் சாப் பிட்டு போடுவது, வேஷ்ட்  கேணில் நிரம்பிவிடும். அதை குப்பைப் பகுதிக்கு எடுத்துச் செல்வான். மொத்தமாகக் கொட்டிவிட்டு வந்துவிட மாட்டான். அதிலிருக்கும், சாதம் மடித்தக் காகிதங்கள் ஒவ்வொன்றாக எடுத்து உதறிவிட்டு காகிதத்தைக் கீழேக்குவியலாகப் போடுவான். கொஞ்சம் சேர்ந்தவுடன்  அதைக் கொளுத்தி, அது எரிந்து கொண்டிருக்க மேலும் ஒவ்வொன்றாக எடுத்துப்போடுவான். தீ வேகமாக எரியும். அதன் பிறகு கேணைக் கழுவிக்கடைக்குள் கொண்டுவருவான். 

அடுத்த வேலையாக மதியம் தண்ணீருக்குக் கிளம்புவான்  தாலுக்காபீஸை விட்டு வெளியேரும்  மூலையில் சைக்களை நிறுத்தி அங்கு கிடக்கும் சிறு சிறு காகிதங்கள், அசோக மரத்தின் காய்ந்த இலைகள் என்று ஒன்று சேர்த்து கொளுத்திவிடுவான். அந்தக் குச்சியிலேயே ஒரு பீடியைப் பத்தவைப்பான். சற்று நேரம் தனிந்தபிறகு கிளம்புவான். எந்த மூலையில் பாலாற்றுத்தண்ணீர் வரும் என்பது அவனுக்குத்தெரியும்.  எல்லாவற்றிலும் தண்ணீர் பிடித்தபிறகு அந்தச் சுற்று வட்டாரத்தில் எப்படியும் இரண்டு இடங்களிலாவது கொளுத்தி விடுவான். தொடர்ந்து ஏன் அப்படிச் செய்கிறான் என்பதை யாருமே கவனிக் கவில்லை. கவனித்திருந்தாலும் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று யாரும் கேட்டதில்லை. மேலும் சிறு செடியில் ரோஜாக்கள் பூப்பதுபோல்  நெருப்பின் மிதமான ஜீ”வாலை எரிவதால் எதோ தூய்மைப் படுத்துகிறான் என்ற அடிப்படையில் கண்டுகொள்ள மாட்டார்கள். பொதுவாக அவரவற்கு ஆபத்துவராத எதையும் கண்டுகொள்வதில்லை அது வேறுவிஷயம். எந்தத்தெருவிற்குச் சென்று தண்ணீர் பிடித்தான் என்பது முதலாளிக்கு தெரியாது. நான்கு மணிக்குள் எல்லா பாத்திரத்தையும் நிரப்பிக்கொண்டு வரும்போது முதலாளி நிம்மதியடைவான். பாஸ் சற்றுநேரம் பொறுத்து, வெறும் டிக்காஷனை போட்டுக்குடிப்பான்.

அடுத்த வேலையாக, முதலாளி பேஷன் நிறைய இருக்கும் வெங்காயத்தை வடைக்குத் தோதாக நறுக்கக் கொடுப்பான்.  அந்த வேலையை செய்யத் தோதான இடம், கடையை ஒட்டி தாசில்தார் ஜீப்நிறுத்தும் கொட்டகைதான்  இரவில் அவன் படுக்கும் இடமும் இதுதான். முதலில் பச்சமிளகாய் காம்புகளை நீக்கி குவியலாக வைப்பான், இப்போது வெங்காயம் தோலுரித்து சற்றுத்தள்ளி வைப்பான். குவியல் சேர்ந்தவுடன் கொளுத்திவிடுவான். தினமும் இப்படித்தான் நடக்கும். அந்தக்கொட்டகையில் இரண்டு மூன்று இடங்களில் கொளுத்திய சாம்பல்கள் இருக்கும். இன்று கொளுத்திய வெங்காயத்தோலில் சிலது ஈரத்தின் காரணமாக எரியவில்லை என்றால், அப்படியே விட்டுவைப்பான். மறுநாள் அதைத்தொடருவான். நேற்று வைத்த பச்சைமிளகாய்க் காம்புகளைச் சேர்த்து எரிப்பான். சில நேரங்களில் மெல்லிய ராகத்தில் சினிமாப் பாடல் பாடுவான். அது அவனுக்கு மட்டுந்தான் கேட்கும். சில நேரம் மிக மிகக் கேவலமான வார்த்தைகளால் பேசிக்கொண்டிருப்பான். ஆனால், வேலை பாட்டுக்கு நடக்கும். அவன் ஆட்களைப்பார்த்து பேசுவதுபோல் இருக்காது. சற்று, உற்று நோக்கினால்தான் இவ்வளவு ஆபாசமான வார்த்தைகளும் பெண்ணைப் பற்றியதாக இருக்கும். அப்படிப் பேசும்போது வார்த்தைகளைப் பல்லைக்கடித்து, அழுத்தம் கூட்டிப்பேசுவான். அவன் வாய் ஓயவே ஓயாது, அந்தநேரம் பார்த்து ஒரு பெண் முகத்தைப் பார்த்துவிட்டால் போதும் துண்டுபடும் வெங்காயத்தைத் தாண்டி நறுக்க உதவும் கட்டைக் கூட வெட்டுபடும்.  சொல்லவே வாய்க்கூசும் வார்த்தைகள் கூலிங்பாட்டில் கேஸ் பிரஸர்போல வெளியேறும்.

நடக்கும்போதும், உட்காரும்போதும், வேலைச்செய்யும்போதும் பெண்களின் முகத்தைப் பார்த்துவிட்டால் அந்தரங்கங்களின் பாகங்கள் சின்னா பின்ன மாகாமல் போகாது.  அவன் அதிகமாகப் பிரயோகிப்பது ‘பன்னித் தெவிடியா, பன்னி ஜென்மம்’ இவைகள் வராமல் அவன் ஆக்ரோஷம் நிறைவடையாது. அவைகளை ஒன்றிரண்டு கோடிட்டுக்காட்டலாம் என்றால்கூட, என்னமோ எனக்குள் மட்டும்தான் வன்மம் இருப்பதாக கண்டுபிடிப்பார்கள். சில அறிவு ஜீவி வாசகர்கள். அதனால், பத்து நாட்கள் தண்ணீரே வராத சுழலில், மறைமுகமாக உறவு வைத்துள்ள பெண்கள் நான் முன்னால் வந்தேன், நான்தான் முன்னால் வந்தேன் என்ற பிரச்சனை வருகிறது. அப்போது அவர்கள் வாயிலிருந்துப் புரப்படும் வார்த்தைகளை  நீங்களே கற்பனைச் செய்துக்கொள்ளுங்கள்.அவன் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான் பெண்களைப் பார்த்தால் எதற்காக அப்படி ஒரு ஆவேசம் எழுகிறது, என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன் ஒன்றுமே விளங்கவில்லை. பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருக்கிறான். ஜெராக்ஸ் எடுக்க இரண்டுப் பெண்கள் வந்து நிற்கிறார்கள். பாத்திரத்தை சாதாரணமாகக் கழுவிக் கொண்டிருந்தவன். வெறி பிடித்துபோல் தேய்க்கிறான். நங் நங் என்று இடிக்கிறான்.  எப்போதும்போல், கேட்கமுடியாத வசவுகள். சில வார்த்தைகள் அப்பெண்களில் காதுகளில் விழுகிறது. அப்பெண்கள் அவனைப்பார்க்கிறார்கள். ஆனால், அவன் பாத்திரத்தையேப் பார்த்து தேய்கிறான். அப்பாத்திரத்திற்கு உயிர் இருந்தால் அவனின் இடித்தலால் தாங்க முடியாமல் அழுது கண்ணீர் வடிக்கும். பால் குண்டான்களைக் கழுவும் முன் அதிலிருக்கும் பால் ஏடுகளை சுரண்டி சற்று தள்ளியிருக்கும் கல்லின்மீது வைக்கிறான். ஒரு நாய் ஓடிவந்து தின்றுவிட்டு ஓடிவிடுகிறது.

இன்னொரு நாள் சைக்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வந்து நின்றான். மற்ற நாட்களைவிட  இன்று  மூன்று மணிக்குள்ளாக தண்ணீர் கொண்டுவந்தான். வண்டியிலிருந்து குடத்தை இறக்கி கடைக்குள் தூக்கிவரும்போது வழியில் ஒருவர் கவனிக்காமல் நின்றிருந்தார் “ ஊம்...ஊம் என்று குரல் எழுப்புவான். வழியில் நிற்பவர் சற்று பதட்டமடைந்து விரைவாக வழிவிட்டார். சில சமயங்களில் கூட்டநெரிசலில்  யாராவது கவனிக்காமல் நின்றுவிட் டிருந்தால் பெண்களை வாழ்த்தும் அதே வார்த்தைகளால் பொழிந்து தள்ளிவிடுவான். எந்தப் பிரச்சனையும் வராது. வழியில் நின்றவர் யாரை சொல்லுகிறான் என்று தெரியாமல்  மிரண்டுவிடுவார். பாஸ் தண்ணீர்க் குடத்தைப்பார்த்துப்  பல்லைகடித்து பேசிக்கொண்டிருப்பான்.

தண்ணீர் ஊற்றிவிட்டு ட்ரே சைக்கிளை மரத்தடியில் நிறுத்திப் பூட்டுபோடுவான். அங்கு சற்று முன் கொளுத்திய குப்பை எரிந்து முடிந்து கடைசிப் புகையை வெளியேற்றிக் கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் வந்தால் குப்பை அரைகுறையாய் எரிந்தபடி இருக்கும், அதன் புகை கடைக்குள் வருகிறதென்று, இவன் தொல்லை தாங்க முடியவில்லையே என்று முதலாளி  தண்ணீர் ஊற்றி அணைத்திருப்பார், அது பாதி எரிந்தும் எரியாமலும் இருக்கும். கடையின் பின்பக்கம் தாசில்தார் ஜீப்பின் கொட்டகையில் நேற்றய வெங்காயத்தோல் பாதி எரியாமல் இருக்கும், சட்டை பாக்கட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து கொளுத்துவான். சரியாகப் பற்றாது. தீப்பெட்டியில் குச்சி தீர்ந்துபோயிருக்கும்.  உடனே கால்  சட்டையிலிருந்து பெட்டியை எடுப்பான். அதிலும் ஒன்றிரண்டு குச்சிதான் இருக்கும். காற்று பலமாக இருப்பதால் அதுவும் ஏமாற்றிவிடும். கொட்டகையின் கீழே மூலையில் தன்னுடைய படுக்கையின் மெத்தையாக ஒரு கையிலி சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அதைக் கிளறுகிறான் சிறியதும் பெரியதும் மாக இரண்டு சீப்புகள், ஒரு துண்டு கண்ணாடி,சின்ன கத்தி, ஒரு சிகரட், பற்கல் துலக்கும் பிரஸ், கோல்கேட் பவுடர், ஒரு ரூபாய் தேங்கா எண்ணை கவர். இவைகள் கிடக்கின்றது. அவசரமாக தீப்பெட்டியைத் தேடினான். எழுந்து வேகமாப் சென்றான். சாமான் துலக்கும் இடத்திற்கு கூரையின் மேற்பகுதியில் இருந்து ஒரு தீப்பெட்டியை எடுத்து வந்தான். அப்போது வழியில் பறந்து வந்த காகிதத்தைக் கொண்டு வெங்காயத்தோலின், அடியில் சொருகி  பற்றவைத்தான். லேசாகத் தீப்பிடித்தது. “ பன்னி ஜென்மம், பன்னித்தெவிடியா” என்ற வாசகம் மந்திரங்கள் போல்சொல்லிக் கொண்டேவந்தான். புகை மட்டுப்பட்டு  நன்றாகத் தீப்பிடித்தது. தீயை வளர்க்கும் விதமாக பக்கத்தில் இருந்த மிளகாக் காம்புகளையும் வெங்காயத் தோல்களையும் தீக்கு மேலே மேலே வைத்தான். தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது.

ஏறக்குறைய ஒருமாதமாக அவனை அக்கடையில் ஆய்வுசெய்கிறேன். ஆனால் இந்த முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம் எனக்குள் திரும்பத் திரும்ப நினைவு வந்துகொண்டேயிருந்தது. அவனை, இதே தாலுக்கா வளாகத்தில் தான் பார்த்திருப்பதாக நாபகம். ஆமாம் அதேதான். ஒரு முறை ஏதோ சிலப் போராட்டங்களின் கண்துடைப்பாக திடீரென்று மணல் வண்டிகளைப் பிடித்து தாலுக்காபீஸ் முழுக்க நிறுத்தியிருந்தார்கள். (லாரிகள் பிடிபடவில்லை.) மாடுகள் ஏதோ அலுவலக வேலைவேண்டி நேர்முகத்தேர்வுக்கு வந்திருப் பதுபோல் அந்தந்த வண்டிகளில் கம்பீரமாக நின்றிருந்தது. அப்போதுதான் இவன் தன் கொழு கொழு எருதுகளை வைக்கோலால் அதன் முதுகைத் தேய்த்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் யாரும் செய்யாததை அவன் செய்திருந்தான். அவன் மாட்டின் கால்குளம்பில் புதிதாக லாடம் கட்டியிருப்பான்போல புதிதாக ஆணி கால்குளம்பின்மீது சுருண்டிருந்தது. அப்படியே ‘டீ’க்கடைக்கு வந்து, அப்போதிருந்த முதிர் வயது முதலாளியிடம் என்னத் தலைவரே உங்க ஆட்சியில தப்பு செய்கிற மனுஷங்களைப் பிடிக்கமாட்டாங்களா? வயித்துப்பிழப்புக்கு போராடுகிற வாயில்லா ஜீவன்களைத்தான் பிடிப்பாங்களா?’ என்று ஜோக்கடித்தான். அவைகள் எல்லாம் ஞாபகம் வந்தது.

அப்படித் துடுக்குத்தனமாக  இருந்தவன்தான். இந்த நிலைமைக்கு ஏன் வந்தான் கடையின் முதலாளியை கேட்டுவிடவேண்டும் என்று முயற்சி செய்யும் போதெல்லாம் அவர்களின் வியாபாரத் தீவிரம் தடுத்துக்கொண்டேயிருந்தது. அவர்களையும் குறைசொல்ல முடியாது. விபாரத்தில் சற்று முகம் கொடுத்துப் பேசினால் பத்து ரூபாய்க்கு சாப்பிட்டு, ஏழுரூபாய் பணம் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். அதற்காகவே முதலாளிகள் யாரிடமும்  முகம் கொடுத்துப் பேசுவதேயில்லை. அவர்கள் ஓய்வாக இருப்பதைக் கணித்து, சற்று  நிதானமாகவே பாஸின் கடந்த கால வாழ்வை விசாரித்தேன்.

முதலாளி, இன்று மதியநேரத்தில் சற்று மகிழ்ச்சியாக இருந்தார். அதற்கு முன் பாஸைப் பற்றி அடிக்கடி நான் சில குறிப்பு அறிவதுபோல கேட்டிருக்கிறேன். முதலாளியும் குளுபோல சில விஷயம் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் இன்று, கூட்டம் இல்லாமல் இருந்ததால் கேட்டவுடன் சொன்னார்.  “அவுங்க குடும்பத்தில ஏதோ பிரச்சனைணா? நல்லாதான் சம்பாதிச்சான், உனுக்குக்கூட தெரியுமே மணல் ஓட்டுனது. அவுங்க பொண்டாட்டி சரியில்ல. அந்தாள மதிக்கவேயில்ல. சொந்தக்காரப் பையன்னு செலவில்லாம, எப்படியோ கட்டிவச்சி வீட்டோட மாப்பிள்ளையாக் கிட்டாங்க. பாலாறு பக்கத்தில வீடு இருந்ததால, பொண்ணுக்கு அப்பாதான் ஒரு மாட்டுவண்டி வாங்கிக் குடுத்தாரு. அதெல்லாம் செய்த ஒண்டிக் கட்டையான மாமனாரும் போய் சேர்ந்துட்டாரு. வண்டி மாட்டவச்சி நல்லாதான் பொழைச்சான். அந்தப் பொம்பளைக்கு  ஏற்கனவே எதிர்வீட்டுக் காரனோட தொடர்பு. எதிர் வீடு என்பதால் ரொம்ப நாள் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் அவளுக்குப் பிடித்தமான வாழ்வு மறைமுகமாகத் தொடர்ந்து இருந்தது. ஒரு கட்டத்தில் அக்கம் பக்கம் நபர்கள். இவனிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னவுடன்  மனைவியைக் கேட்டதேயில்லை. எப்படியாவது போகட்டும் என்று இல்லை. மனைவியை நேசித்திருந்தான்.  இவனே அவளை விட்டு, வாங்கி சாப் பிடுகிறான் என்று சொன்னபோதுதான். மனைவியை கேட்கிறான். அவள் எந்தத் தடையும் இல்லாமல், ஆமாம் நான் அப்படித்தான் நடப்பேன் உனக்கு விருப்பம் இருந்தால் இரு இல்லையானால் உன் வழியைப் பார்த்துக்கொண்டு போ என்று சொல்லிவிட்டாள். அதைக்கேட்டவன் மறுவார்த்தை ஒன்றுமே பேசவில்லை. ஆனால், எப்போதும் போல் இருந்தான். ஒரு நாள் பகலிலேயே எதிர் வீட்டுக்காரன் இவன் வீட்டிற்குள் இருந்திருக்கிறான். இந்தாளு வண்டிய நிறுத்திட்டு  வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். எதிர் வீட்டுக்காரன் சற்று அவசரம் காட்டி தன் துணிகளை அலங்கோலமாகப் போட்டுக்கொண்டு வெளியேறினான். ஆனால், தலைத்தெறிக்க ஓடவில்லையாம். மனைவி  அவசர அவசரமாகத் தன் ஆடைகளைச் சரிசெய்து கொண்டாளாம். அவன் அவளை ஒன்றுமே கேட்கவில்லையாம் நேராக சமையலறைக்குச் சென்று தண்ணீர் மொண்டுக் குடித்துவிட்டு வெளியேறினானாம். அதற்குள் அவள் சடார் என்று அடுப்படிக்குள் நுழைந்து கிரோஸின் தலையில் ஊற்றி கொளித்திக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாளாம். ஐயோ குய்யோ என்று ஜனங்கள் கூடினார்களாம். அவள் கணவன் ஐய்யய்யோ என்று அடித்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று பெர்ட்சிட் எடுத்துவந்திருக்கிறான். அவள் மேல் போர்த்தி அணைக்கப்போகும்போது. அவள் சத்தமாக உன் சந்தேகபுத்தி இனியாவது நிம்மதியாக இருக்கட்டும், என்று சற்று  தெருவில் ஓடினாளாம். இவன்   திகைத்து நின்று மீண்டும் ஓடி அவள் மீது பெர்ட்சிட்டை போட்டு மூடி நெருப்பை அணைத்தபின்  மருத்துவனைக்குத் தூக்கிச்சென் றார்களாம். ஆனால், வழியிலேயே இறந்துவிட்டாளாம்.  பிறகு அங்கிருக்கும் மக்கள் பிணத்தை ரொம்ப நேரம் வைத்திருக்கக்கூடாது, என்று அவசர அவசரமாக தூக்கிச் சென்று கொளுத்தி விட்டார்களாம். அதற்கு, இந்த ஆள்தான் கொள்ளி வைத்தாராம்.”


ஜே. டேனியல்






Monday, May 21, 2012

கவிதை



பிணம் நண்மை செய்கிறது

இந்தப் பிணம்
நேற்று வேலா ஓட்டலில்
கனந்து எரியும்
அடுப்புக்கு முன்னால் நிற்பவனின்
உடலில் ஊற்றெடுத்துக் கழியும்
சிறு ஆறுகளைத்
துடைத்தெடுக்க
ஆர்வம் காட்டிக்கொண்டேயிருந்தது.

இரண்டு இட்டிலி
மட்டும் போதும் என்று
ஓட்டல் தட்டுகளில் சுடச்சுட
உப்பியிருக்கும் மெதுவடையையேப்
பார்த்துக்கொண்டிருக்கும்
வாலிபனுக்கு மெதுவடையோடு
ஒரு மசால் தோசையும்
கொடுங்கள் என்று சொல்ல வேண்டும்போல் இருந்தது.

பால்கட்டிக்கொண்டிருக்கும்
அடையாளத்தை மார்பின் முனையில்
காட்டிக்கொண்டிருக்கும்
இலையெடுக்கும் பெண்ணிற்கு
கையில் இருக்கும் எல்லாத்தொகையும்
கொடுத்து போ இனி வராதே
எனச் சொல்ல மனம் துடித்துக்கொண்டிருந்தது.
இவன் மனிதனே அல்ல இறைவன்
என்று சத்தமாக சொன்னபோது

பக்கத்திலிருந்தவன் சொன்னான்
ஆமாம் ஐயா நேற்று முன்தினம்
மருத்துவர் இருபத்திநான்கு மணிநேரம்
எச்சரிக்கைத் தந்திருந்தார்
மனைவியைக்கூட
நேற்றுதான் அவ்வளவு பாசமாக
வேலா ஓட்டலுக்கு அழைத்துச்சென்றார்
பாவம் அதிகாலை மரணம்
நம்பவே முடியவில்லை.
------------------------------------------

ஜேடி

Thursday, May 17, 2012

கட்டுரை

                                                          அதிகாரம் நல்லது

தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களில் பள்ளிகள், மருத்துவமனைகள், மதம் என்று முப்பிரிவுகளைக் கொண்ட கிறித்தவ சிறுபான்மையினரின் நிர்வாகம் இருக்கிறது. இந்நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இருக்கிறார்கள். அவ்வூழியர்களைத் தன் மனத்தெளிவுக்கு ஏற்றார்போல கிடுக்கிப்பிடிப் போடவும், சுதந்தரமாகத் திரியவிடவும் முழு வல்லமையைக் கொண்டது. ஆங்கிலேயர் தலித் என்ற பெயர் புழங்காதபோது, அத்தன்மையுள்ளவர்களை நாடியது முற்றிலும் அவர்கள் மூலமாக தன் மதத்தை நுழைக்க அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்கள். தன் சொல்பேச்சைத் தட்டாத குழந்தைக்கு ஒரு தேன்மிட்டாய் கூடுதலாய்க் கொடுப்பதில் என்ன தவறு என்ற அடிப்படையில்தான் ஆங்கிலேயனுக்கு தலித்துகளுடனான உறவு இருந்திருக்கமுடியும்.

இருபது வருஷங்களுக்கு முன் வெண்மையை ஒளிரும் கறுப்பு சூரியனாக பேராயர் அசரியா பதவி ஏற்றார். தன் எஜமானின் அசைவுகளைக் கணிக்கவும், முகம் சுழிப்போருக்கு எதிராக மிரட்டும் கூரியப்பற்களைக் கொண்டுத்துரத்தும் வல்லமைக்கொண்ட உயரிய வகை நாயாக கழுத்தில் சங்கலி இல்லாமலே  அவர்கையில் மிகப் பாசமாக அடங்கியிருந்தது அதிகாரம். ஆனால், அந்த அதிகாரத்தை அவர் எப்படிச் செயல்படுத்தினார் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பேராயராகப் பொறுப்பேற்றவுடன் தலித் மக்களை விஷேஷித்த வண்ணமாகக் கையில் எடுத்தார். கிராமப்புரங்களே அவரின் சிறப்பான பார்வையாய் இருந்தது. முதல் வேலையாக தன் நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும் ஆலயங்களின் போதகர்கள் வழியாக கிராமக் குடும்பங்களை ஆய்வுசெய்தார். அவர்களின் வாழ்வாதாரங்கள் உயர்வதற்கு பல்வேறு திட்டங்களைப் புகுத்தினார். படிக்கும் பிள்ளைகளாக இருந்தால், அவர்களை நகரத்தில் உயர்ந்து நிற்கும் கல்விக்கூடங்களில் இலவசமாய் நுழைத்தார்.  வாலிபப் பெண்கள் வீட்டில் ஆடுமாடுகளை மேய்க்கக்கூடாது என்று  அவரவர் தகுதிக்கேற்ப ஆசிரியர் பயிற்சி, மற்றும் செவிலியர் தகுதி பெறச்செய்தார்.

புதிதாக, ஆரம்பநிலைப் பள்ளியில் வேலைக் கிடைத்து கிராமங்களிலேயே பணிசெய்யும் ஆசிரியர்களை மேல்நிலைப் பள்ளிகளில் நகரத்திற்கும். நகரத்தின் தாளாளர், கல்வி அலுவலர் அவர்களின் நிரந்தர காக்காய்களாய் இருக்கும் நிரந்தர நகர  மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களை ஆரம்பநிலைப் பள்ளிகளுக்கும் மாற்றினார். நகரத்திலிருந்து சென்றவர்கள் வந்து முறையிட்டபோது, ‘ஏம்பா நீங்க எத்தனை வருஷங்கள் இங்கேயே இருக்கிறீர்கள். உங்களுடையத் திறமை கிராமப்புர மாணவர்களுக்கும் கிடைக்கணும் இல்லையா, அதேபோல அந்த கிராமத்திலேயே வேலை செய்யிற ஆசிரியர்கள் நகரத்திற்கு வந்தால் அவர்களும் கொஞ்சம் திறமையை வளர்த்துக்கொள்ள உதவியாய் இருக்காதா? கொஞ்சநாள் போங்க என்று சமாதானம்தான் அவர்களுக்கு பதிலாகக் கிடைத்தது.

ஆங்கலேயர் தமிழனிடம் பேராயப் பதவியை ஒப்படைத்த பிறகும் ஆலயப்பொறுப் புகளிலும், பள்ளிகளிலும்  பலன் அடைந்த சந்ததியே திரும்பத் திரும்பப் பலன் ஆனுபவித்து வந்தது.  அதை மீறி  கிராமங்களில் இருந்து வந்த சில புத்திசாலிகள் ஆயர்களையோ, உயர் அதிகாரிகளையோ சொக்குப்பொடிப் போட்டு சில பதவிகளை வாங்கிக்கொள்வார்கள். அதுவும் இருப்பதிலேயே கடைநிலை வேலைதான் பள்ளிகளில் அமர்த்தப்பட்டார்கள். முழுக்க முழுக்க வசதி படைத்தவர்களே பள்ளி, ஆலயம் ஆகியப்பதவிகளில் அமர்த்தப் பட்டார்கள்.

வழமையை உடைத்தவர் இந்த அதிகாரம் படைத்த அசரியாதான். ஏற்கனவே இருந்த பெருச்சாளிகள் தங்கள் பிள்ளைகளுக்காக வேலைக்கேட்டு வந்தார்கள் ‘ டே, நீ ஒரு உயரிய பதவியில் இருக்கிற, உன் பொண்டாட்டி நல்ல வேலை செய்றா, இப்போ உன் புள்ளைக்கு  வந்திட்டியா? உனக்கு மனசாட்சியே இல்லியாடா? உன் குடும்பமே மேல மேல வந்தா, கிராமத்திலே கஞ்சிக்குச் செத்து, வெயிலுக்குக் காஞ்சி, மொதல் மொதல் பையனை ஆசை, ஆசையாய் படிக்கவெச்சி, ஆவலோடு ஒரு வேலைக் கிடைக்காதானு காத்துக்கிடக்கிறானே அவனுக்குக் குடுக்கக்கூடாதா?  அவன் சாகனுமா?  ஓடிப்போடா இன்னுங்கொஞ்ச நேரம் நின்ன, உன் வேலையையும் புடுங்கிடுவேன்’ என்று சொன்னவர்தான். அவர் அப்படியேச்சொன்னார்.

அவர் நிர்வாகத்தில் இயங்கும் பள்ளிகளில் மேல்நிலை ஆசிரியர் முதல், கடைநிலை ஊழியர் வரை தேடித்தேடி கிராமப்புர தலித் மக்களையே வேலையில் அமர்த்தினார். சற்றுக் காலப்போக்கில் வழி வழியாய் வந்த பெருச்சாளிகள்  ஆலயங்களிலும், பள்ளிகளிலும் கழிவு நீர் ஓட்டை எதுவும் இல்லாததால். தங்கள் உறவினர்களை நுழைக்க ஏழை உரு எடுத்து வரத்தொடங்கினர். சிலரின் நல்ல நேரம் வேலையும் வாங்கிவிட்டார்கள். சிலரின் கெட்டநேரம் கத்தீட்ரல் சாலைவரை கழுத்திலும், காதிலும், கையிலும் தொங்கிய நகைகள் அவரின் அலுவலகத்துக்கு முன்பாக வந்தபோது  கழட்டித் தங்கள் மார்பக அறைகளிலும், பர்ஸ்சுகளிலும் போடுவதை சிலநேரம் வீட்டிலிருந்து பார்த்துவிடுவார். வேலை கேட்பவர்கள் பரம ஏழைகள்போல் நடிப்பதைப் பார்த்து இவ்வளவு சேர்த்து வைத்து என்னத்தை தூக்கிப்போகப் போகிறார்கள். வந்தவர்களை ஒரு அரைவிடுவார். ‘மரியாதையாக பையில இருக்கிற நகை எல்லாம் எடுத்துப்போடுங்க. இல்ல, போலீஸக் கூப்பிட்டு என்வீட்டு நகையை திருடிவச் சிங்கிறாங்கனு சொல்லிடுவேன். ஓடிப்போயிடுங்க. என் முகத்திலயே முழிக்காதிங்க.’ என்பார்.   முன்னே எதார்த்த நடிப்பால்  காரியத்தை சாதித்துக் கொண்டவர்கள் எப்போதாவது உண்மை தெரியும் பட்சத்தில் மீண்டும் வாய்பு வரும்போது,  அந்த அரையைச் சேர்த்து வாங்கிதான் ஆகவேண்டும்.

அவர் வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி வந்துகொண்டிருந்தார். திடீரென ஒரு பெண் அவரின் காலில் விழுந்துவிட்டாள். அவர் பதரிவிட்டார். அவள் மிகவும் பயபக்தியோடு எழுந்தாள். பாளார் அரை கன்னம் மின்னலைச் சந்தித்ததுபோல் இருந்தது. உடனே காவலாளியைக் கூப்பிட்டு “ டே.. டே முட்டாள்களா இப்படித்தாண்டா ஒரு பெண் கால்ல விழுந்து ராஜிவ் காந்திய கொண்ணுப்புட்டாங்க. அவள கேட்டுக்கு அப்பால துரத்திட்டு வாங்க. என்றார். ஆனால், ஒருமாதம் கழித்து அந்தப்பெண்ணின் பெயரைச்சொல்லி அழைத்து ஒரு வேலை போட்டுக்கொடுத்தார் என்பது தான் வரலாறு.  தலைமை ஆசிரியரோ, ஆயர்களோ பதவிக்கு ஆசைப்பட்டு அவருக்குத்தெரியாமல்  அவர் அலுவலகத்தில் சுற்றும்போது தற்செயலாக அவர்பார்த்து விட்டால்  பாம்பின் தலையைக் கண்டவர்போல ஓடிவருவார். லாபம் தேடிவந்தவர் கையில் காலில் விழுந்து ‘பீ’ உருட்டி வண்டுபோல் உருண்டு வந்து தன்நிலையில் வந்து விழுவார். என்ன வேடிக்கை என்றால் நேற்று யாருக்கும் தெரியாமல் ‘பீ’ உருண்டையாக வந்து விழுந்தவர்.  இன்று அவரதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் ‘நேற்றுதான் பேராயரை சந்தித்துவிட்டு வந்தேன் பள்ளியில் யார் உன்பேச்சை மதிக்கவில்லை என்றாலும் என்னிடத்தில் பெயரை சொல் என்று சொல்லியிருக்கிறார். அதனால் பார்த்து நடந்துக்குங்க’ என்று அவருக்குக் கீழ் இயங்கும் பணியாளர்களை மிரட்டுவார்கள்.

ஆலயங்களின் பணியில் போதகர்கள் தங்கள் மனைவியர்களுக்கு வேலை கேட்டுப்போவார்கள். ஆயர் பணி, ஆசையை அகற்றியப்பணி நீங்கள் வரும்போதே பணமோ என்று வரவேண்டாம். உங்களுக்கு நல்ல சலுகைகள் வழங்கப்படுகிறது. அதுவே போதும் என்று நிம்மதி கொள்ளுங்கள். என்பார். அதுவுமல்லாமல் யாராவது காணிக்கை கையாடல், பெண்களிடம் சபலம் ஆலயச்சொத்துக்களைக் குறிவைத்தல் போன்ற சந்தேகம் எழுமாயின் அவர்களை வருமானம் இல்லாதச் சபைகளில் போட்டு மிரட்டி வைப்பார். தனக்கு இட்டப்பணியை எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் செய்கிற நபர்களை. அங்கீகரித்து சிறப்பு செய்த நிகழ்வுகளும் நடந்திருக்கிறது.

அவருக்கு, தோட்டக்காரர், காவலர், பெருக்குபவர், இவர்கள்தான் மிக நெருக்கமான நண்பர்கள். அலுவலக  நடவடிக்கைகளைக்குறித்து பேசாத நாளே இல்லை. அலுவலகம் முடிந்த நேரங்களில் காவலரை அழைத்து ‘ டே. போயி காபி வாங்கியாறியா? சூடா சுண்டல் இருக்குண்டா வாங்கியா நாம எல்லாரும் சாப்பிடலாம்.’   யாராவது கொடுக்கும் துணிமணிகளை ‘டே இந்தா இத உங்கப்பாவாண்ட கொண்டுபோய் கொடு. இந்தப்பழங்களை உன் பிள்ளைகளிடம் கொடு’ என்பார். இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது எதேச்சியாக உனக்கு சம்பளம் என்னத் தறாங்க என்று கேட்டு அதிர்ந்துவிட்டார். ‘டே கூப்பிடுடா அந்த பைனான்ஸ ஆபீஸரை. யோ, என்னய்யா சம்பளம் குடுக்குறீங்க. நாலு வருஷமா வேலை செய்யிறான் வெறும் 750 தான். இதை வெச்சி அவன் குடும்பத்தை எப்படியா நடத்துவான். உங்க சம்பளத்தை மட்டும் ஏத்திக்கிறீங்க. யோ இந்த மாசத்திலிருந்தே 1250 ரூபாய் தரனும் (1993-ல்). இந்த மாசத்திலயிருந்து பி. எப் எல்லாருக்கும் பிடிக்கனும். ஒரு வாரத்துல இதை எல்லாம் முடிக்கணும்.’ இதைச் சொல்லி முடித்துவிட்டு இந்த சம்பளமும் பத்தாதுதான் என்ன செய்யிறது, நாமும் ஏழை ஜனங்கக் குடுக்கிற காணிக்கத்துட்ட வச்சித்தானே செய்யவேண்டியிருக்குது. என்று சொல்லிவிட்டு சம்பளம் ஏத்திட்டாங்கனு வீன் செலவு செய்யாதே’. என்பார்.

இவர் பொதுவாக மதம் சார்ந்த தலித் மக்களுக்கு மட்டுமே உதவி செய்தவரல்ல பொதுவாக தலித் இளைஞர்கள் படிக்கவேண்டும், முக்கியமாக நல்ல ஒழுக்கங்களை கையாளவேண்டும் என்று மதத்திற்கு அப்பார்ப்பட்டு பொதுவானத் திட்டங்களைத் தீட்டி செய்லபடுத்தினார். அவருடைய அதிகாரத்தின் நாட்களில் காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர் மாவட்டத்தின் கிராம தலித் இளைஞ்ர்கள் ஒரு பைசா செலவில்லாமல் அவர் நிர்வகிக்கும் பள்ளிகளில் அரசு நிதியில் வழங்கும் வேலையைத் தந்து உதவினார். அவருக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை அப்படித்தான் செய்து நிறைவேற்றினார். அன்று வேலைவாங்கியவனுக்கு கற்பித்தல் முறையாக தன் பாக்கட்டிலிருந்து பயணச் செலவையும், அப்போதைய சாப்பாட்டுச் செலவையும் பிறருக்கு உதவும் பழக்கம் வரட்டும் என்பதற்காகச் செய்தார். அதைத்தன் சொந்த பணத்தைக்கொண்டு கொண்டுத் தொடங்குவார். ஆனால் அவரால் நன்மையைப்பெற்ற யாருமே அதைக் கடைபிடிக்கவில்லை.

(18,5,2012 இன்று மண் அதிகாரத்தைத் தாங்கப்போகும்) தலித் ரத்னா ‘மா.அசரியா’வின் அதிகாரம் நல்லது.

ஜே. டேனியல்

Tuesday, May 8, 2012

சிறுகதை




         அடையாள வில்லை


 “என்னங்க இது, இந்தக்கடவுள் இல்லாத சிஸ்டத்தை எல்லாம் கொண்டாந்துட்டாரு. நேற்றுவரைக்கும் நான் நினைச்ச நேரத்துல நினைச்ச இடங்களில் காணிக்கையப் போட்டுவிட்டு, நிம்மதியா என் வேலையைப் பார்ப்பேன். இவர் வந்து, இந்த முறையை ஒவ்வொருவரின்  கட்டாயமாக்கிட்டாரே. என்னங்க அநியாயம்’ என்று வரிசையில் நிற்கும் முதல் நபர் ஆதங்கப்பட்டார்.  

இரண்டாம் நபர், விளம்பர நிறுவனத்தால் நிறுபிக்கப்பட்ட சோப்பில் வெளுத்த ஜிப்பா அணிந்திருந்தார். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட்ட மூக்குக் கண்ணாடி. எப்போதும் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் தோல். மூக்குக்கு கீழே ஒழுங்கு செய்யப்பட்ட அழகிய மீசை, நீண்ட கழுத்து, கழுத்தில் நெஞ்சிக்குழிச் சற்றுத் துருத்தலாக இருந்தது. இவர் இதற்கு முன் பேசிய முதல் நபரை முறைத்துவிட்டார். “நீங்கள் சற்று வாய்பேசாமல் இருந்தால் நலமாக இருக்கும். இந்தத் திட்டத்தைப்பற்றி முழுமையாக உங்களுக்கு தெரியாது என்றே நினைக்கிறேன். நீங்கள் சொல்லுவதுபோல வருஷத்தில் ஒரு முறையோ அல்லது நாம் நினைத்தபோதோ எந்த உண்டியல்களிலாவது பணத்தை நிறப்பிவிட்டபின் நீயோ அல்லது நானோ மரிக்காமல் இருந்து விடுகிறோமா?. மறுமையில் இடம்பிடித்துக்கொள்ள, நான், நீ என்று போட்டிப்போட்டுக் கொடுக்கிறோம். அப்படி நிச்சயமில்லாத ஒன்றில் முழு நம்பிக்கை வைத்து அள்ளி அள்ளிக் கொடுத்துச் செத்துப்போவதைவிட,  இந்தக் கடவுள் மறுமைக்கு உறுதிப் பத்திரத்தைத் தருகிறார். மேலும், இதற்கு முன் மரித்தவர்கள் மறுமையில் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் அவர் ஹாட்டிஸ்கிலிருந்து லைவாகப் போட்டுக் காட்டுகிறார். அதனால் தாங்கள் இப்படிப்பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இங்கு  ஒழுங்குப் பணியில் ஈடுபட்டிருக்கும் கண்காணிப்புக் குழுவின் காதில் விழுந்தால்  வரிசையிலிருந்து விலக்கிவிடப் போகிறார்கள்”

மூன்றாவது நபராக நின்றிருந்தவரின் கால்களில் தரமான செருப்பு இருந்தது. முழுக்கை சட்டைபோட்டு, இன்செய்து பெல்ட்டுக் கட்டியிருந்தார். அடிக்கடி கையை நீட்டிப் பேசும்போது கையில் இருந்த தங்கக்காப்பு ஏறுவதும், இறங்கு வதுமாக இருந்தது. இடது விரலில் இந்திய்ககொடியின் மேல்வண்ணத்தை ஒத்தைக்கல் மோதிரமாகப் போட்டிருந்தார். சட்டைப் பாக்கட்டில் வைத்திருந்தப் பணம் பளிச்சென்று தெரிந்தது. முன் நின்றவர்களைப்பார்த்து “சார் பேசிக்கொண்டே நகர்ந்துபோங்க சார். பின்னாடி இருக்கிறவங்க என்ன நெருக்கிக் கொண்டே வராங்க. “முதல் நிற்பவர் சொல்கிறபடி இந்தக் கடவுளின் சட்டதிட்டங்கள் கடுமையானதாகத்தான் இருக்கிறது. சினிமாக் கொட்கைகளுக்குப் போனேன்னா. கூட்டங்களைப்பார்த்து பயந்து முந்நூறோ, நாநூறோக் கொடுத்து பிளாக்கில் டிக்கட்ட வாங்கிக்கிணு போயிடுவேன். ஆனால், இங்கு கூட்டத்தை வழி நடத்தவோ ஒழுங்கு படுத்தவோ யாருமே இல்லை. இருந்தாலும் மிகக் கண்ணியமாக  நடந்துக்கொள்ள வேண்டியி ருக்கிறது. கடவுள் ஏதோ ஒரு அறையில் உட்கார்ந்துக் கொண்டு,  கூட்டத்தின் கடைசி நபரையும் தொழில் நுட்பத்தை வைத்துக் கண்காணிக்கிறார். வேண்டியவர், வேண்டாதவர் என்று யாருக்கும் சலுகை வழங்குவதில்லை. ஏதோ ஒரு சூட்சமத்தை வைத்து நிர்வகிக்கின்றார். ஆனால் சரியாகத்தான் இருக்கிறது.  நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் இக்கடவுளைப்பற்றிக் கேள்விப்பட்டபோது என் மேனேஜரிடம் டோக்கன் போட்டுவரும்படி அனுப்பினேன். என்ன போதகத்தைக் கேட்டானோத் தெரியவில்லை. ‘சார் உங்களுக்காக நான் வரிசையில் நின்று பதிவுசெய்து வில்லை வாங்கிவருவது மிகவும் சுலபம். ஆனால்,  அந்தப் பலன் உங்களுக்கு வந்து சேராது என்கிற பட்சத்தில், அதை நீங்களே செய்வதுதான் உசிதம்.’ என்று எனக்கே புத்திசொல்லுகிறான். அதனால் இன்று, நானே வருசையில் நிற்க வந்திருக்கிறேன்.”

“அப்படியா, சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்போல.”

“சார், உங்கள் தீர்ப்புச் சரியானதாகக்கூட இருக்கட்டும் ஆனால், நான் சொல்ல வதந்ததை சொல்லி முடித்து விடுகிறேன்.” என்று மூன்றாம் நபர் சொல்லத்தொடங்கினார். இங்கு நடைமுறைப்படுத்துகிறச் செயல்கள் மிக வெயிப்படையானது. ஆதாவது, நமக்கு ஒரு பணி இடப்படுகிறது. அந்தப் பணிசார்ந்த மதிப்பெண்கள் உடனே வெளியரங்கத்தில் திரையிடுகிறார்கள். நான்கு கட்டம், ஒவ்வொருக் கட்டத்திலும்  ஒரு தலைப்பு. அதாவது, முதல் கட்டத்தில் ‘மறுமையின் நன்மைக்கான மதிப்பெண்’ (சுருக்கமான முறையில் ம.ந.ம), அடுத்தக்கட்டதில் தலைப்பு ‘இடங்கள்’ மூன்றாவது கட்டத்தில் மறுமையின் தீமைக்கான மதிப்பெண்  (சுருக்க முறையில் ம.தீ.ம) நான்காவது கட்டத்தில் ‘இடங்கள்’   அதற்குக்கீழ் காலத்தில்  ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி முதலில் மார்க், அடுத்து இடங்கள், அடுத்து மார்க், அடுத்து இடங்கள் இப்படி மூன்று தகுதியின் இடங்கள் கொடுக்கப்படுகிறது.

இன்னும் சரியாகப் புரியவில்லைதானே கொஞ்சம் கவணியுங்கள் உதாரணத்திற்கு ஒரு நபர் செய்த பணியின் நிமித்தமாக  மதிப்பெண் எழுபத்தி ஐந்து எடுத்துவிட்டால்  முதல் வரிசை தலைப்புக்குக்கீழ் கட்டத்தில்  மதிப்பெண் எழுபத்தி ஐந்து என்றும், அடுத்தக்கட்டத்தில் இடங்கள் என்பதற்கு நேராகக்கீழ் ‘மகுடம்’ என்று வரும். மேலும் இந்நபர் இழந்துவிட்ட இருபத்திஐந்து மதிப்பெண் மூன்றாவது  (ம.தீ.ம) என்ற கட்டத்திற்குக்கீழ் ‘ஏக்கம்’  என்று வரும். இப்படி மூன்று தகுதி இடங்களை இந்தக் கடவுள் வகுத்து வைத்திருக்கிறார். என்ன சார் ஒரு மாதிரியாப் பார்க்கிறீங்க இவ்வளவுதூரம் சொல்றானே இவன் இதுக்கு முன்னாடி வந்திருப்பானா? என்றுதானே யோசிக்கிறீங்க.”

இரண்டாம் நபருக்கு, இவன் சொல்லுவது மிகையாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தாலும்,  மறுத்துச்சொல்வதற்கு வரிசைக்காறர்களிட்ம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால்,  சற்று மழுப்பலாகச் சிரித்துவிட்டு “இல்ல சார், நான் ஏன் உங்களைத் தப்பா நினைக்கப்போறேன். கடவுளின் சட்டதிட்டங்களைத்தானே சொல்றீங்க. நீங்க சொல்லுங்க சார். ஆனா ஒண்ணுமட்டும் சந்தேகமாக இருக்கிறது. அதமட்டும் கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும். இந்தக் கடவுளாண்ட உலகத்தின் எந்த மனுஷனாக இருந்தாலும் ஒரு முறைதான் வருசையில் நிற்கமுடியும் என்று சொல்றாங்களே. உங்களுக்கு எப்படி இவ்வளவு துள்ளியமாகக் கடவுளின் சட்டதிட்டங்களெல்லாம் தெரியுது”

மூன்றாம் நபர் சற்று முன் பின் பார்த்தார். அவருக்கு திருப்தி ஏற்பட்டபிறகே சொல்ல ஆரம்மித்தார். “சார் என் நிலமை அப்படி மாட்டவேண்டியதாயிடுச்சி என் மனைவி இந்த ஏரியாவின் நகரமன்றத் தலைவிசார். எங்க எல்லைக்குட்பட்ட எந்த இடத்தில ஒரு கம்ப நடணும்னாலும் எங்களாண்ட கேட்டு அதற்காகப் பெரியத்தொகையைக் கட்டிவிட்டுதான் வேலையைத் தொடங்குவார்கள், ஆனா இவுங்க எதோ புதுவிதமான தொழில் நுட்பத்தில் ஒரே வாரத்துல பெரியப்பெரிய டென்டா போட்டுட்டாங்க. பார்க்கிறதுக்கு காத்துல அலைபாய்ரா மாதிரிதான் இருக்குது,  ஆனா, நீங்களே பாருங்களேன் நமக்கு இடதுகைப்பக்கமா நிக்குற வேம்பு மரத்தின் கிளைகள் எப்படி மடிஞ்சி மடிஞ்சி சாயுது. அவ்வளவு ஏன் நுழைவாயிலுக்கு முன்னாடி இருக்குதே ஆலமரம் அதன் வீழுதுகள் எப்படி ஒண்ணோடு முட்டி, புது விரல்களைப்போல் துளிர்க்கும் விழுதுகள் எல்லாம் அந்தமேடைமேலையே கொட்டிக்கிடக்குது பாருங்க சார். இயற்கைகள் இப்படி ஆட்டம் போட்டாலும், துணியால் ஆன கூடாரம்போலதானே இருக்குது, டென்ட்டு எதாவது அசையுதாப் பாத்திங்களா? எந்தப்புயலும் ஒண்ணும் செய்யமுடியல பாருங்க. சரி அதை விடுங்க நாம விஷயத்துக்கு வருவோம்.  என் மனைவி என்ன அனுப்பிவச்சா. அப்பத்தான் இந்தக்கடவுள் சொன்னார் ‘பூமியின் மனிதர்கள் மறுமையின் சட்டதிட்டங்களை மதிக்கவில்லை. நான் நிர்னயித்த ஆயுள்நாட்களை மீறி பூமியிலேயே அதிநவீன சிகிச்சைகளை மேற்கொண்டு தாங்களகவே சுயமாக தங்கள் ஆயுள்நாட்களை நீட்டித்துக் கொள்கிறார்கள். வருமையில் இருக்கும் மக்கள் நான் நிர்னயித்த தேதியில் சரியாக வந்துவிடுகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மட்டும் நான் நிர்னயித்த நாளுக்கு முன்பாகவே வந்துவிடுகிறார்கள். இதில் குறிப்பாக இலக்கியவாதிகள் இன்னும் மோசம் இவர்கள் மற்றவர்கள் வாழ்வை கண்காணித்துக்கொண்டே கிடந்து தங்கள் வாழ்வை கவணிக்காததால் அவர்களும் நாங்கள் அழைக்காத நாளுக்கு முன்பாகவே வந்துவிடுகிறார்கள். வந்தவர்கள் அங்கு வந்து சும்மா இருப்தில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்கள்  சீக்கிரம் வந்துவிட்டதற்காக அவர்களை அழைத்துக்கொண்டு என்னிமே’ “கடவுளே இதுதான் உங்கள் நீதியா? வசதியுள்ளவர்கள் உங்கள் சட்டத்தை மீறி பூலோகத்திலேயே தங்கிவிடுகிறார்கள். வசதியற்ற இந்த அப்பாவிகள் உங்கள் அழைப்புக்கு முன்னதாகவே வந்துவிடுகிறார்கள். இதற்கு உங்களிடம் நேர்மையான திட்டமில்லையா? என்று  எனக்கு முன்பாகவே நின்று போராடுகிறார்கள். அதனால் சில சீர்திருத்தங்கள் செய்வதற்காகவே இந்த பூமியின் பயணம்’ என்றார்  “இந்த இலக்கியவாதிகள் எங்க இருந்தாலும் சொம்மா இருக்கமாட்டானுங்க போல அங்கப்போய் கலகம் பண்ணி கடவுளை தொந்தரவு செய்ததால, அவரு சில சட்டத்திருத் தங்களைச் செய்துக்கொண்டு பூமியில் நேரடியா ஒவ்வோரு வருக்கும் ஆயுளைக் கண்காணித்து அதை முடிக்கும் சான்றும், மறுமையில் அவர்கள் தங்கும் இடத்தையும் இந்த டெஸ்டிங் மூலமா செயல்படுத் துகிறாராம்.’ சார் அதுகூட பராவாயில்ல சார். வந்தற்கான காரணத்தை பொருமையாகச் சொன்னக்கடவுள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து,  ‘நீதான் மொதல்ல வரிசையில நிற்கவேண்டிய ஆளுண்ணு  பேசி அனுப்பினாரு சார்.” என்றான்.

கேட்டுக்கொண்டிருந்த இரண்டாம் நபருக்கு லேசான சிரிப்பு எழுந்தாலும், கூடவே பயமும் தொடர்ந்ததால் சமாளித்தார். “சார், இச்சட்டதிட்டங்கள்  சரியாக புரியாததால் பயத்தைத்தருகிறதா? அல்லது உண்மையிலேயே கடுமையானதா?  எனக்கு  விளங்கவில்லை,  இன்னுங் கொஞ்சம் சொல்லுங்கள் சார். பிலீஸ்” என்றார். கெஞ்சினார் என்றுகூட சொல்லலாம்.

மூன்றாமவர் “சார் உங்களுக்கு புரியவில்லை என்றாள். நான்தான் சரியாகச் சொல்லவில்லை.  சொல்லத்தெரியவில்லை என்றுகூடச் சொல்லலாம். ஆனால், அந்தக்கடவுள் வகுத்திருக்கும் திட்டம் மிகச் சரியானதாக, தெளிவானதாக இருக்கிறது.  நீங்கள் அந்த ஹாலுக்குச்சென்று  அங்குத் திரையிடப்படுகின்றதை ஒரு முறை பார்த்துவிட்டால் எல்லாம் புரிந்துவிடும் இருந்தாலும் முயற்சிச் செய்துப்பார்க்கிறேன். நீங்கள் இதை ஒரு அறிமுகமாகத்தான் வைத்துக்கொள்ளவேண்டும் “முதல் தகுதியைப்பற்றி சொன்னேன் இல்லையா அதேபோல இரண்டாம் தகுதி, வரிசை இரண்டு தலைப்புக் கட்டம்  ‘ம.ந. ம’ அதற்குக்கீழ்  மதிப்பெண் ‘ஐம்பது’, அதற்கு அடுத்தக் கட்டம் ‘இடங்கள்’ என்பதற்கு நேராகக்கீழ் ‘ஆர்பரிப்பு’, அதற்கு அடுத்தக் கட்டம் ம.தீ.ம  ‘ஐம்பது’ அதற்கு அடுத்து  ‘இடங்கள்’ என்ற கட்டத்திற்கு நேராகக்கீழ் ‘அவமானம்’. பிறகு, மூன்றாம் தகுதி   முதல் கட்டம்  ‘ம.ந. ம’ - ‘இருபத்திஐந்து’  இரண்டாம் கட்டம் ‘இடங்கள்’- ‘ஆசுவாசம்’  மூன்றாம் கட்டம்- ம.தீ.ம ‘எழுபத்திஐந்து’ நான்காம் கட்டம் ‘இடங்கள்’- ‘கொல்லொப்பிடம்’ இப்படியாக அந்த ஹாலின் திரைக் கட்டங்களுக்குள் வந்துகொண்டேயிருக்கும். இந்தக் கடவுளின் நம்பகத்தன்மை என்ன வென்றாள் ஆயுளை முடித்த பிறகு மறுமைக்கு வரவேண்டிய இடத்தை முன்கூட்டியேத் தெரிவித்து அடையாள வில்லையைக் கையில் தந்துவிடுகிறார். அந்த அடையாள வில்லையில் தேதியும் மாதமும் குறிப்பிடப்படாமல் குறிப்பிட்ட வருஷம் மட்டும் அச்சடிக்கப்பட்டுள்ளதுதான் சிறப்புக்குறியது.
.
முதலாம் நபர், கவுண்டரில் ஒண்ணாம் எண் கொண்ட வில்லையை வாங்கினார். அந்த வில்லையை கையில் வாங்கியதும் சதுரமும் இல்லாமல், வட்டமும் இல்லாமல் இருக்கும் அதன் அழகிய வடிவத்தைப்பார்த்தார். மனிதனைவிட கடவுள் ரசனை மிகுந்தவர்தான், இந்த வில்லைக்கூட என்ன அழகுடன் வடிவமைத்திருக்கிறார். தன் மனதுக்குள் பெருமைப் பட்டாலும் வில்லையை கையில் வாங்கியபோது பதட்டம் அவர் முகத்தில் தெரிந்தது. “எந்த மகராசன், எனக்கு வச்சிட்டுபோயிருக்கிறானோ? என்று தனக்குள்ளாகவே முனகிக்கொண்டார்.

இரண்டாம் நபர், முதலாம் நபரைப்பார்த்து “என்ன சார் எவ்வளவு பெரிய ஆட்சியாளர் நீங்க. நீங்களே இப்படி உங்களுக்குள்ளாகவே  பேசிக்கினா,  எங்களமாதிரி தொழில் முனைவோரெல்லாம்   எம்மாத்திரம். கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னால்  என்ன ?  நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்”

முதல் நபருக்கு ஏனோ பேச்சி எழவில்லை. அதற்குள் மூன்றாம் நபர்   “ஏன் சார் அவசரப்படுறீங்க, அந்த    அறைக்குள் நுழைந்தவுடன் எல்லாம் தெளிவாகிடும். இனிமேல் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். அப்படி பேசினா உங்கள் வில்லையை ரத்துச்செய்ய நேரிடலாம்.”

பெரிய ஹால் சுற்றுப்பகுதிமுழுக்க மூங்கில்களால் பிண்ணப்பட்டு  இருந்தது. இடையிடையில் பெரிய சன்னல்கள். ஹாலுக்கு இரண்டு பக்கம் வழி, வழிக்கு ஒருவர் என, இரண்டு வழிகளிலும் காவலர்கள் மட்டும் நின்றிருந்தார்கள். அவர்கள் கையில் ஆயுதங்கள் எதுவும் இல்லை. ‘மாறாக, நீங்கள் பிரித்தியேகமாக விரும்பும் எதையும், மிகச்சுலபமாகப் பெறுதற்கான நேர்மையான வழியை எங்களால் நிச்சயம் காட்டமுடியும். என்ற வாசகம் அவர்கள் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் பதியப்பட்டிருந்தது.’ பந்திக்கு அழைக்கப் பட்டவர்கள் பின் வாசல் வழியாய் வந்து ஹாலில் பந்தி சாப்பிட்டு, முன் வாசல் வழியாய் வெளியே வரவேண்டும். சாப்பிட்டவர்கள் வெளியே வரும்போது. டோக்கன் வாங்கிக் கொண்டு நிற்பவர்களுடன்  முதல் நபர், முதல் நபருக்கும், இரண்டாம் நபர், இரண்டாம் நபருக்கும், மூன்றாம் நபர் மூன்றாம் நபருக்கும் இப்படி வரிசை மாறாமல். ஒருவர், ஒருவருக்கு மட்டுமே கைக்குளுக்கவேண்டும். அன்றய தினம் எத்தனை பேர் வரிசையில் நிற்கிறார்களோ, அத்தனை எண்ணிக்கையுள்ள நபர்கள்தான் ஹாலில் சாப்பிட அனுமதிக்கப்படுவார்கள். சாப்பிட்ட எல்லா நபரும் வெளியேறிய பிறகு, ஆறுபேர்க் கொண்டக்குழு அவசர அவசரமாக ஹாலில் நுழைவார்கள். அதில் ஒருவர் மடிக்கணினி வைத்திருக்கிறார். இன்னொருவர் சிறிய பிரிண்டர் தன் தோளில் மாட்டியிருக்கிறார். நான்கு பேர் சீன உணவு சாப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் குச்சியை வைத்துக்கொண்டு முதல் இலையை ஆய்வுசெய்கிறார்கள். ஒருவர் வடக்குத் தெற்காக இருக்கும் இலையைத் திடிரென  ஒரு பக்கமாகக் கையில் தூக்கிப்பார்க்கின்றார். கிழிசல்கள் எதுவும் இல்லை. என்பதைத்தெரிவிக்கிறார். இன்னொருவர் தன் குச்சியில் மிச்சமிருந்த சாதத்தையும் சாப்பிடப்படாமல் இருந்த காய்கறிகளையும் கிளறி குறிப்பெடுத்தார். உடனே தனது ஆய்வை கணினி வைத்திருப்பவரிடம் சொல்லுகின்றார். மொத்தமாக ஆய்வு முடிந்தபின்பு, குழுத்தலைவர் கணினி வைத்திருந்தவரை இதுவைரை பதிவுசெய்த குறிப்புகளைக் கேட்கின்றார். கடைசியாகச் சில மாற்றங்களைச் செய்து பிரிண்ட்டுக்குக் கட்டளை இடுகின்றார். உடனே பிரிண்ட் தனது கிரிச்.. கிரிச்.. என்ற சத்தத்துடன் வெளியே வருகிறது. பிரிண்ட் வைத்திருப்பவர் கிழித்து தலைவரிடம் தருகிறார். தலைவர் ஒருமுறை வாசித்து கடவுளின் பெஸிமன் ஸீலைக்குத்தி முதல் இலையில் பின் அடிக்க உத்தரவிடுகிறார். ஆய்வுக்குழு அடுத்த இலைக்குப்போகிறார்கள். இப்படியே எல்லா இலைக்கும் குறிப்புகள் தொங்கவிட்டுச் சற்று நேரத்தில் ஆய்வுக்குழு வெளியேறுகிறது.

இப்போது முன்வாசலில் இருக்கும் காவலர் வில்லை வாங்கி நிற்பவர்களை உள்ளே அழைக்கிறார்.  பசுமை மாறாத மூங்கில் நேராகப்பெறுக்கள் குறிபோல அடிக்கப்படாமல், வலைந்து வலைந்து குறுக்கும் நெடுக்குமாக மூங்கில் தடுப்பு நெய்யப்பட்டிருந்தது அதன் அழகில் மயங்கிக்கொண்டே முதலாம் நபர் உள்ளேப் போனார்.  டேபில்களில் எச்சில் இலைகள் சிலது மடிக்கப்பட்டும் சிலது மடிக்கப்படாமல் விரிந்த நிலையிலும் வரிசையாக ஒரு நீதையைச்சொல்லக் காத்திருப்பதுபோல் இருந்தது. முதலாம் நபர் எச்சில் இலையிடம் வந்தார் . திடீரென இன்டர்காமில்  கடவுளின் செய்தி வந்துக் கொண்டிருந்தது. ‘நண்பர்கள் கவணிக்கவும்  தயவுசெய்து இலையில் தொங்கிக் கொண்டிருக்கும் குறிப்புகளை எடுத்து தங்கள் பாக்கட்டுகளில் வைத்துக்கொள்ளவும். புனிதத் தட்டை எடுத்து அதற்கான தேனாற்றில் சேர்த்துவிட்டபிறகு குறிப்புகளைக் கண்காணிக்கும் பணியாளரின் முன்னிலையில் உங்கள் குறிப்புகளை வாசிக்கவும். அவர்கள் உங்களைச் சரியாக நடத்துவார்கள். ஒருவேளை உங்களுக்குச் சந்தேகம் எழுமாயின் அச் சந்தேகங்கள் நிவர்த்திச் செய்யப்பட்டு, நியாமானத் தீர்ப்புதான் வழங்கப் படிருக்கிறது என்பதை  நீங்கள் ஆமோத்தப் பிறகுதான், உங்களின் ஆயுளுக்குப்பின்பான அடையாள வில்லையை உங்களிடம் தரப்படும். மேலும் அதில் எந்த குழப்பமோ, மாற்றமோ இல்லாத வகையில் மறுமையில் வந்துசேரவேண்டியத் தெளிவான முகவரி தரப்படும். ஆகவே இது மிக அவசியம். இவ்வொழுங்கை சரியாகக் கடைபிடியுங்கள்”. என்று தன் இன்டர்காமை ஆப்செய்தார்.


ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட எச்சில் இலைகளை எடுத்து தேனாற்றில் (ஒதுக்குப்புறமானக் குழி) போட்டபிறகு குறிப்புகளுடன் வரிசையாக வந்தார்கள். முதலாம் நபர் குறிப்பை கண்காணிப்புப் பணியாளரிடம் வாசித்து முடித்தார்.

பணியாளர் “மதிப்புக்குறிய அய்யா  தாங்கள் ம.ந.ம வில் ஐம்பது மதிப்பெண். ம.தீ.ம வில் ஐம்பது மதிப்பெண் பெற்றுள்ளீர்கள். ஆகையால் நீங்கள் ‘ஆர்ப்பரிப்பு’ ‘அவமானம்’ சரிசமமாக அனுபவிக்க வேண்டியுள்ளது. ஒருவேளை நீங்கள் எதை முதலில் அனுபவிக்க விருப்பப்டுகிறீர்களோ அதை முதலிலோ அல்லது அதற்கடுத்தோ அனுபவிக்கலாம். அது உங்கள் விருப்பம்தான்.

முதலாம் நபர் ஆர்ப்பரிப்பு என்று சொன்னபோது  அவர் முகத்தில் சற்று சந்தோஷம் தெரிந்தது. பிறகுச் சோகமானார் அவர் அப்படியே இருந்து விடவில்லை. பேசத்தொடங்கினார். “அய்யா எந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை வழங்குகிறீர்கள் நான் ஆட்சியாளனாய் இருந்தாலும் என்னுடைய சுக துக்கங்களை அநேகநேரம் மக்களுக்காக இழந்திருக்கிறேன். ஒரு வேளை என் அதிகார மோகத்தில் சிலருக்கு பாதகமாக செய்திருக்கலாம். ஆனால், தனிப்பட்ட நிலையில் இச்சமூகத்திற்கு பயன் உள்ளவனாக இருந்திருக் கிறேனே  அதை கணக்கில் எடுத்துக்கொண்டு  முதல் தரத்தைத் தரக்கூடாதா? ”

“அய்யா மாற்றியமைக்கிறப் பணி எங்களுகுறியதல்ல. கடவுள்தான் அதற்கு முழுப் பொறுப்பு. உங்கள் வாக்குமூலத்தைத்தான் நீங்கள் எடுத்த எச்சில் இலை பிரிதிபலிக்கிறது. அந்த இலையில் சாப்பிட்டவன் தனக்கு கிடைத்துவிட்டதென்று  மிகவும் அலட்சியமாக சாப்பிட்டிருக்கிறான். முதலில் பந்திக்கு அழைத்தவனை மதிக்கவில்லை. மதித்திருந்தால் வைத்த சாப்பாட்டில் கால் பகுதியை வைத்திருப்பானா?  முக்கியமாக டம்ளரில் வைத்தத் தண்ணீர் அப்படியே இருக்கிறது. இரண்டாவது சமையர்காரனின் உணர்வுகளை புரிந்துக்கொள்ளாமல் காய்களை அப்படியே ஒதுக்கிவிட் டிருக்கிறான்.பிறர் பெருமையாக நினைக்கவேண்டும் என்பதற்காக அவனுக்கு வைத்த லெக்பீஸை, பக்கத்து இலைக்காரனுக்கு வைத்திருக்கிறான். கடவுள் ஒவ்வொரு லெக்பீஸிலும் ஒரு எண்ணைப் பதித்திருக்கிறார். ஆய்வு செய்தபோது இவனுக்கு வைத்த லெக்பீஸ் பக்கத்து இலையில் கூடுதலாக இருந்தது. இவன், திடிரென அவனுக்கு கொடுத்ததின் மூலம் பல தீமையானக் காரியம் அரங்கேறுகிறது. வைத்தபிறகு என்னசெய்யமுடியும் அதையும் சேர்த்து சாப்பிட்டுவிட்டான். ஆனால், அதன்பிறகு இப்படியான பந்திகளில்  திடிரென ஏதாவது கிடைக்கும் என நம்பி அவனுக்கானதை அவனேத் தேடிக்கொள்ளும் ஆர்வத்தைக் குறைத்துவிட்டது.  லெக்பீஸ் சாப்பிடுகிறவர் கள்தான் இந்த ஹாலில் அனுமதிக்கப்படுகிறார்கள், அப்படி இருக்கும்போது இவன் ஏன்? அவனுக்கு வைத்ததை இன்னொருவனுக்கு வைக்கவேண்டும். திடீரென ஒன்றை கூடுதலாகவைத்து  அவன் வயிற்றை பெருக்கடித் துவிட்டான். இன்னொரு முறை நியாமானபடி பரிமாரியும் ஏற்கனவே கூடுதலாகச் சாப்பிட்டவன் இப்போது வயிறு நிறையாமல் சண்டையிடுகிறான். இந்த நேரம் பந்தி செய்கிறவனுக்கு கூடுதல் செலவீனத்திற்காக கடன் வாங்கவேண்டி யிருக்கிறது. சில நேரம் திருப்பித் தரமுடியாமல் கொள்ளையடிக்கவோ, ஏமாற்றவோ வேண்டியிருக்கிறது. அவன் செய்த செயலிலேயே இவ்வளவு மோசமான விளைவுகள் நிகழ்ந்திருக்கிறதென்றால். நீங்கள் செய்த பாதகத்தால் அதன் விளைவுகளை மதிப்பிட காலஅவகாசம் அளவற்றதாகத் தேவைப்படும், இருந்தாலும் கடவுள் அதை மிகத்துள்ளியமாக தன் ஹாட்டிஸ்கில் அதற்கான முழு ஆதாரத்தையும் வைத்திறார். இதற்கு மேலும் உங்களின் மறுமைக்கான இடத்தேர்வுச் சரியானது அல்ல என்று நீங்கள் நினைத்தால் கடவுளின் அறைக்குச்சென்று உங்களுக்கான விளக்கத்தைப் பெறலாம். ஆனால், நீங்கள்  அதற்கான அடையாள வில்லையைப். பக்கத்துக் கவுண்டரில் பெறவேண்டும்.”

“அய்யா நான் சற்று யோசிக்கலாமா?”

“அப்படியென்றால் அந்த இருக்கையில் அமருங்கள்.”

இரண்டாம் நபர் வந்து அவருடைய குறிப்புச்சீட்டை வாசித்து முடித்தார்.

“வாருங்கள் அய்யா நீங்கள் ம.ந.ம-வில்  எழுபத்திஐந்து பெற்றதால் பிரதானமாக ‘மகுடம்’ என்பதற்கான இடத்தைப் பெறுகிறீர்கள், ம.தீ.ம-வில் இருபத்திஐந்து பெற்றுள்ளதால், ‘ஏக்கம்’ என்கிற நிலையும் வந்திருக்கிறது அதையும் ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும்”

அய்யா, கடவுள் மனிதனுக்கு  மூன்று இடங்களைத்தான்  வகுத்துவைத் துள்ளார். அதில் நான் முதன்மையான இடத்தை அடைந்திருக்கிறேன். கடவுள் தகுதியில்லாமல் இந்த இடத்தை எனக்குக் கொடுத்திருக்கமாட்டார். இருந்தாலும் அந்த இருபத்திஐந்திற்கு வழங்கிய ஏக்கத்தை ஏன் நான் அனுபவிக்கவேண்டும்.  அதை, அனுபவிக்காமல் இருக்க அதிலிருந்து விலக்கு அளிக்கக்கூடாதா?. நான் மகுடத்தில் முழுமைக் கானமுடியாதா?

“அய்யா, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக விளக்கங்களைத்தந்தால் எங்கள் பணியைக் குறித்த நேரத்தில் முடிக்முடியாதல்லவா? மனிதனிடம் இருக்கும் ஒரு மாபெரும் குறை எல்லாவற்றையும் முழுமையாக அனுபவித்துவிடவேண்டும், முழுமையாக வாழவேண்டும், முழுமையாகச் செய்யவேண்டும். நீங்களே யோசித்துப்பாருங்கள் லட்சக்கணக்கான வருஷங்கள் கடந்தபின்பும் ஒவ்வொரு பொருளிலும், ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்யமுடியாதவைகள் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. அப்போது இதுவரை வாழ்ந்த மனிதன் எதையும் முழுமையாக செய்யவில்லை என்பதைத்தானே காட்டுகிறது. இப்பிரபஞ்சத்தின் அளவிடமுடியாதப் பரப்புகளைப் புரிந்துகொள்ள மனிதனின் ஆயுள் குறைந்த பட்ச்சம் ஆயிரம் வருஷமாவது ஆரோக்கியத்துடன் வாழ்தலுக்கான உத்திரவாதம் வேண்டும். ஒருவேளை அப்படி இருந்தால், அதுவும், ஒரு மனிதன் குறிப்பாக ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் ஓரளவேணும் முழுமையாக செய்யமுடியும்.  வாழ்வது முப்பது வருஷமோ நாற்பது வருஷமோ, அதில் புத்திதெளிவதற்கே இருபது வருஷம் ஓடிவிடும் இருக்கிற சொற்ப நாட்களில் உலகத்தின் எல்லாப் பக்கங்களையும் முழுமையாக அனுபவித்து விடவேண்டும் என்பது உங்களுக்கே அபத்தமாக இல்லையா அய்யா? ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் எதையுமே முழுமையாக செய்யமுடியாதவன் மனிதன், அப்படியிருக்க நான் செய்வதெல்லாம் முழுமை என்று யாராவது சொன்னால் அது ஏமாற்றுவேளைதான். இவ்வளவு சொல்லியும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் ஒன்றை நான்கேட்கிறேன்.  ஒருமுறை தயாரிக்கப்படுகிற பொருள் கடைசிவரை எந்த மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து அதேமுறையில் தயாரிக்கப்படுகிறதா? அடிக்கடி அதனுடைய நிலைகளை மாற்றுகிறார்கள் அல்லவா? இந்த வகையில் பார்த்தாலும் எதுவுமே முழுமைக்கிடையாது. அதனால், இருக்கிறவரை அவர்களால் ஆன பங்கை இந்த பூமிக்கு வழங்கிச்செல்கிறார்கள். அதில் சிலர் கூடுதல் சிலர் குறைவு அவ்வளவுதான்.


உங்களுக்கு அதிகமான விளக்கம் தந்துவிட்டதால், நீங்கள் எடுத்த எச்சில் இலைக்கான விளக்கம் சற்றுக் குறைவாகத்தான் சொல்லமுடியும். ஆதாவது உங்களுக்கான இலையில் சாப்பிட்ட நபர் மிகச்சரியாக சாப்பிட்டு இறுக்கிறார். அவருக்குக் கொடுக்கப்பட்ட சாப்பாடு சரியாகச்  சாப்பிட்டு இருக்கிறார். மிச்சம் எதையும் வைக்கவில்லை. வைத்த காய்களை ஒதுக்கிவிடவில்லை. ஆனால், சாப்பிட்டபிறகு மிக அலட்சியத்தோடு இருந்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது.  இலைகளை தாருமாறாகக் கழியவிட்டிருக்கிறார். அவர் சாப்பிட்ட எச்சில்கள் பென்ச்சுகளில் ஒட்டிக்கிடக்கிறது. இதன் மூலமாக அங்குப்பணிபுரியும் தொழிளாளர்களுக்கு கூடுதலான வேலை பளுவை ஏற்படுத்திவிட்டார். முக்கியமாக இவரும் தண்ணீரை குடிக்கவில்லை.   ஆக நாங்கள் நிர்மானித்த மகுடம்’ என்கிற இடத்தை அடைந்தாலும், கூடவே ஏக்கம்’ என்கிற பலன்களையும் ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும். சரியா அய்யா,” என்றுக்கேட்டவர். “தங்கள் மறுமையின் தங்கும் அடையாள அட்டையை  பெற்றுக் கொள்கிறீர்களா? என்று கேட்டார். இரண்டாம் நபர் கையை கவுண்டருக்குள் நீட்டினார்.  பெற்றுக்கொணடு, முதல் நபர் உட்கார்ந்த இடத்திற்கு வந்தார்.

மூன்றாம் நபர் கவுண்டர் முன் தன்குறிப்பை வாசித்தார்.

கவுண்டரின் உள்ளிருந்தவர், வெளியில் இருந்த நபரை சற்று எச்சிரிக்கையுடன் நோக்கினார்.  “அய்யா தங்களுக்கு ம.ந.ம-வில் இருபத்தி ஐந்து  பெற்று ‘ஆசுவாசம்’ என்ற தகுதியையும்,  ம.தீ.ம - வில் எழுபத்தி ஐந்து பெற்று ‘கொல்லொப்பிடம்’ என்ற இடத்தையும் பெற்றுள்ளீர்கள். தங்களுக்கான வில்லையை தந்துதவட்டுமா? இல்லை ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா?”

“நானும் பார்க்கிறேன் நீங்கள் ஒருதலைப்பட் சமாகத்தான் செய்கிறீர்கள். எனக்கு முன்னிருந்த நபர்களுக்கு மிக நீண்டதொரு விளக்கத்தை கொடுத்தீர்கள். ஆனால் எனக்குமட்டும்  வில்லையைக் கொடுத்து கொல்லிடத்திற்கு அனுப்பமுற்படுகிறீர்கள். உங்களிடம் எனக்கான நீதி மழுங்கடிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ஆகையால், நான் நேரடியாக கடவுளைப் பார்க்கப்போகிறேன். எனக்கு அவரை சந்திப்பதற்கான வில்லையைத்தாருங்கள்.”

“அய்யா ஏன் இப்படிப் பதட்டப் படுகிறீர்கள். நீங்கள் நினைப்பதுபோல் கொல் லிடமல்ல. ஒப்பான இடம் அவ்வளவுதான். முன்பு வந்தவர்களுக்கு மட்டுமல்ல, தேவை இருக்குமானால் உங்களுக்கும் அதை விட கூடுதலான விளக்கம் தரப்படும். உண்மையைச் சொல்லப்போனால் நீங்கள் ஏற்கனவே கடவுளிடம் நேரடியான சந்திப்பைச் செய்தவர்கள். சட்டதிட்டங்கள் உங்களுக்குத் தெரியும்.  இருந்தாலும் நீங்கள் இத்தகுதியைப் பெற்றதற்கான காரணத்தைச் சற்று ஆராய்ந்த பிறகு அதில் ஏற்புடையதாக இல்லை என்றால் நீங்கள் கடவுளைச் சந்திக்கலாம்.  அய்யா தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது நீங்கள் எப்போதும் உங்கள் சுயசிந்தையை நம்புவதேயில்லை. பிறரைப்பார்த்தே உங்களுக்கானப் பாதையை வகுத்துக் கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்கிறீர்கள்.பிறர் செய்வதில் நிறைய குளறுபடிகள் இருக்கிறது என்று தெரிந்தும்  அவன் செய்கிறான் அதனால் நாமும் செய்வோம் அவனுக்கு வரப்போவதுதானே நமக்கு வரப்போகிறது என்று நினைக்கிறீர்கள். இங்கே ஒன்றை சரியாக கவணிக்கவேண்டும். ஒருவேளை அவன் செய்தது அவனுக்கே தவறு என்று தெரியாத பட்சத்தில் செய்திருக்கலாம். அதனால், அவனுக்கு அதற்கான தகுதியின் இடங்கள் சிறப்பாகக்கூடக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதை கண்காணித்து நீங்களும் செய்ததால் நீங்கள்தான் முதன்மைக் குற்றவாளியாகிறீர்கள். இப்படிச் செய்து செய்துதான் இன்று இந்தத் தகுதியை அடைந்துள்ளீர்கள்.  அதையேதான் உங்களுக்கான இலையும் காட்டிக்கொடுக்கிறது. அந்த இலையில் சாப்பிட்டவன் ஒழுங்காக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். திடிரென்று பந்தியாளனை அழைத்து கூடுதலாக சாப்பாடு வாங்கி வாங்கி தன் சேமிப்புக்காகிதத்தில் நிறப்பிக்கொண்டான். இத்தனைக்கும் அவனுக்கு குடும்பம்கூட இல்லை. எதற்காக அப்படிச் செய்ய வேண்டும். சாப்பாடு ஒருவேளைக்குப் பிறகு அதன் தன்மை கெடப் போகின்றது.  கெடப்போகிற போருளையே இப்படி சேர்க்கிறா னென்றால் மற்றவை நினைத்தால் உங்களுக்கே பயமாக இல்லையா?  மேலும், அவன் சாப்பிட்ட இலையை  மிகவும் அலங்கோலமாக திறந்தே விட்டுச்சென் றிருக்கிறான். ஆகையால்தான் உங்களுக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது.”

முன்றாம் நபர் மறுமையில் தங்குவதற்கான அடையாள வில்லையை வாங்கிக்கொண்டு ஏற்கனவே இருந்த நபர்களைநோக்கிச் சென்றான். அப்போது கடவுள் வரிசையை பார்வையிட வந்தார்.  வில்லையை வாங்கிக்கொண்டு நின்ற மூவரில் கடைசியாக வந்தவன் கடவுளிடம் கேட்டான் “அய்யா,  யாரோ செய்த செயலுக்காக, எங்கள் மீது தீர்பெழுதப்படுகிறதே”

“அடையாள வில்லையை வாங்கிக்கொண்டீர்களா? நீங்கள், அவர்களுக்கு மாற்றானவர்கள் இல்லை. வில்லை பத்திரம்” என்றார்.


ஜே.டேனியல்









Saturday, May 5, 2012

புரிந்துணர்ந்தது



வழக்கு எண் 18/9













சாமான்ய மனிதர்களின் (நடிகர்களின்) கூட்டு வெற்றி. தமிழ்த் திரையுலகின் சில யதார்த்தப் போக்கை இன்னும்கூட சற்று யதார்த்தமாய் பேசவைத் திருக்கிறது. கடந்த வாரத்திற்கு முன் நாள், நண்பர் படத்திற்கு அழைத்தார் திரையரங்கத்திற்கு போன போது ரிலீஸாகி நான்கு நாட்கள்கூட ஆகாதப்படத்தை எடுத்துவிட்டு இருந்தார்கள். பாவம் விபாரி என்னசெய்வான். சரி அதுதான் போகட்டும் கடந்த வாரத்தில்,  அந்த நண்பரை ‘படம் பார்த்துக் கதை சொல்’ என்றப் படத்திற்கு நான் அழைத்தேன் இத்தனைக்கும் மூன்றாவது நாளோ என்னவோப்போனோம். அதுவும் எடுத்துவிட்டு இருந்தார்கள். மனசு மிகவும் நொந்துவிட்டது. அந்த நேரத்தில்தான் நண்பர் வழக்கு எண்18/9 திற்கு அழைத்தார், இந்த முறை முன்முடிவோடு ரிலீஸான முதல்நாளே சென்றுவிட்டோம். அதனால் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் படத்தைப் பார்க்கநேர்ந்தது. 

வழக்கில் மாட்டப்போகும் குடும்பம் ஈச்சம்குளம் எனும் கிராமத்தில் வாழ்கிறது. அக்குடும்பத்திற்கு கந்துவட்டி கடன் கொடுத்தவன் வந்து கடன்கேட்டு மிகக்கேவலமாகப்பேசி மிரட்டுகிறான். அப்போதெல்லாம் ஒளிந்திருக்கும் கணவன் மனைவியை விபச்சாரி தொழில் செய்யக்கூட உன் உடம்பு தேராது. என்று சொல்லும் போதுமட்டும் கத்தியை உருவிக்கொண்டு கந்துவட்டிக் கொடுத்தவனை கொல்ல ஓடிவருகிறான்.(பல படங்களில் பார்த்ததால் அது பெரிதாக வருத்தப்படவைக்கவில்லை.)  கந்துவட்டிக் காறர்கள் அவனை மிதித்து துவைத்து விடுகிறார்கள். கந்துவட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழையும்போதே பள்ளியில் விளையாடிக்கொண்டிருக்கும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ‘ஸ்ரீ’ (படத்தில் பெயர்வேறு) பார்க்கிறான். நம் வீட்டிற்குதான் போகிறார்கள் என்று ஊகித்து ஓடிவருவதற்குள் மேல் குறிப்பிட்டது நடந்து முடிந்துவிட்டது. இப்போது வீட்டிற்குள் தன் அப்பா குடும்பத்தோடு தற்கொலை செய்துக்கொள்ளலாம் என பேசும்போது பையன் கேட்டுவிடுகிறான். நான் வேலைக்குப் போய் காப்பாற்றுகிறேன் என்று வேகமாக போகிறான். (இவைகளை எல்லாம் இன்னும் சற்று புதுவிதமாக அமைத்திருந்தால் படத்திற்கு இன்னும் கூடுதல் பலம் கிடைத்திருக்கும்) குடும்பத்தைக் காப்பாற்ற சிறுவன் வடமாநிலம் அனுப்பப்படுகிறான். அங்கு சிறு குழந்தைகளைச் சித்ரவதை செய்து  தொழில் நடத்தும் கூட்டத்தில் மாட்டிக்கொள்கிறான். வடமாநிலத்தைச் சேர்ந்த முதலாளி  ‘ஸ்ரீ’ யின் தாய், தந்தை விபத்தில் இறந்து போனதைக்கூட சொல்லாமல் மறைத்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில்  அவன் நண்பன் வந்து உன் தாய் தந்தை இறந்துவிட்டார்கள் என்றத் தகவலைச் சொல்லும்போது ‘ஸ்ரீ’ கோபமடைந்து முதலாளியை அடிக்க முற்படுகிறான். பிறகு அதிலிருந்து தப்பித்து சென்னைக்கு ஓடிவந்துவிடுகிறான். இங்கு சிறு கேள்வி எழுகிறது ‘ஸ்ரீ’ யின் தாய் தந்தை இறந்துவிட்டதாகச் சொல்லவருகிற நபர், எந்த முகாந்தரமும் இல்லாமல் திடீரென அவனிடம் வந்து தகவல் சொல்லுகிறான்,  தப்பித்து வரும்போதும் அவன் கூட வரவில்லை. மேலும் சமீபத்தில் வடமாநிலத்தவர் இங்கு சுடப்பட்டநிலையில். வடமாநிலத்தில் தமிழகப் பிள்ளைகளை வைத்துக்கொடுமைப் படுத்துவதுபோல் காட்டியிருப்பது அதற்கான நியாயம் கற்பிக்கும் செயலாக இருக்குமோ என சந்தேகம் எழுப்புகிறது. ‘ஸ்ரீ’ அறிமுகமாகியிருக்கும் சென்னை வாலிபரின் நடிப்பும், அதில் வரும் ஒவ்வொரு நடிகர்களும் தங்கள் பங்குக்கு மிகச்சரியாகச் செய்துள்ளார்கள்.

கதையின் முக்கியப் பாத்திரமாக இல்லாமல் போனாலும்  மிக முக்கியப் பங்கைச் சேர்த்திருப்பது. வேலைக்கார பெண்ணின் தாயாக வரும் கதாப்பாத்திரம் மற்றும்  ‘ஸ்ரீ’ யுடன் தெரு ஓர டிபன் கடையில் கூட வேலைக்குச்சேரும் ஒருச் சின்னப்பையன். இருவரும் போட்டிப் போட்டு யாதார்த்த நடிப்பை பின்னுகிறார்கள்.   இதுவரை வந்த தமிழ்ச்சினிமாக்களில் யதார்த்தமாக பேசும் வார்த்தைகளை (கைத, சோமாறி,  பேமானி,) இப்படி மிகக்கேவலமாக பேசும் நிலையில்தான் வைத்திருந்தார்கள். முதல் முறையாக மனித இயல்பின் கோபத்தில் ஏற்படுகின்ற வார்த்தைகளை மிக யதார்த்தமாக அதிலும் ரசிக்கும் படியாகவும் அமைத்திருப்பது மிக அருமையான புதுமை. இயக்குநர், அந்த அம்மாவையும், சின்ன பையனையும் உங்கள் விருப்பம் போல செய்யுங்கள் என அதிகமான சுதந்தரம் கொடுத்து விட்டிருப்பார்போல அவரின் நம்பிக்கையை வீனடிக்காமல் செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு பையனின் சிறு சப்ஜெக்டை மட்டும் சொல்லுகிறேன். 

இயல்பாகவே அவன் ஒரு கூத்துக்கலைஞன். தற்போது தொழில் சரியாக இல்லாமல் சென்னைக்கு வந்து தள்ளுவண்டியில் ‘ஸ்ரீ’ யோடு வேலைக்கு சேருகிறான். நாளடைவில் சின்னப்பையனுக்குள் இருக்கும் திறமையை  நினைத்துப் ‘ஸ்ரீ’ பெருமையடைகிறான். அந்தக்கடைக்குவரும் சினிமா போட்டோகிராப்பரிடம் சொல்லி எப்படியாவது சினிமாவில் சேர்க்கலாம் என்பது ‘ஸ்ரீ’யின் ஆசை. அந்தப்பிரகாரம் முதலாளிக் குத்தெரியாமல் போட்டோ எடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் முதலாளிக்குத் தெரியவர போட்டோ எடுத்தவனோடு சின்னப்பையனையும் திட்டித்தீர்க்றான். பேச்சி ஆவேசம் அடைய முதலாளி அடிக்கக் கை ஓங்குகிறான், அந்த நேரம் சின்னப்பையன் ஆவேசம் கொண்டவனாக “அடிக்கிறவேலை எல்லாம் வெச்சிக்காதிங்க பிடிக்கலனா எனக்கு கணக்குப்பார்த்து அனுப்புங்க” என்பான் ‘ஸ்ரீ’ “டே என்னடா முதலாளியப்போய்”  என்று ஆரம்பிக்கும்போதே  அவனையும் “யோ, நீ யார்யா இதுலத் தலையிட” என்று  எதிர்த்துப்பேசிவிட்டு போய்விடுவான். பிறகு ஒரு நாள் அவனைத் தனியாகப்பார்த்து  அவனை எதிர்த்துப் பேசியதற்கான காரணத்தைக் கூறும்போது ஆடியன்சை ஒட்டுமொத்தமாக அழவைத்து விடுகிறான். (இது போன்ற படங்களைத்  தீயேட்டரில் சென்றுப் பார்ப்பது அல்லது அப்பட்ங்களைக் கூட்டாகப்பார்த்து விவாதிப்பதுதான் அதுபோன்றக் கலைஞர்களை வளர்த்தெடுப்பதற்கு, அல்லது  நாமே கலைஞர்களாக மாறுவதற்கும் உதவியாக இருக்கும். அதை செய்யாத பட்சத்தில், மற்ற எந்த சாக்குப்போக்கு சொல்லாடல்களை பேசுவது,  காலங்காலமாய் பிரமாண்டங்களை ஏகோபித்து வரவேற்று விசிலடிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளின் செயல்களுக்குத் துணைபோகிறவர்களாகத்தான் கலையை ரசிக்கிறவர்களும் செய்கிறார்கள் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.)

வீட்டில் வேலைசெய்கிறப் பெண் மிக அழகுடன், மேக்கப் இல்லாமலே வெளுத்து நிற்கிறக்கலர். இவள் வேலைசெய்கிற அதேவீட்டில் பனிரெண்டாம் வகுப்புப் படிக்கிற வசீகரிக்கும் உடல் அமைப்பைக்கொண்ட இன்னொருப் பெண். தமிழகத்தில் சினிமா வரலாற்றில் கதாநாயகிகளை மிக தைரியமாக கருப்பு நிறத்தில் அறிமுகப் படுத்தியவர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் என்று சொல்கிறார்கள். கடைநிலையில் வேலைசெய்கிற கதாநாயகனுக்கு கருத்த பெண்தான் கதாநாயகியாக போடனுமா? என்ற கேள்விக்கு நியாயம் இருந்தாலும், நடுத்தர வர்கப்பெண்கள் ஏன் கருப்பாக இருக்கவே மாட்டார்களா? பணக்காரப்பைன் கருப்பான பெண்ணை காதலிக்க வேமாட்டானா? எங்கே காதலிக்கிறான் அவன் கைபேசியில் காதலிப்பதாக் கூறும் பெண்ணின் பெயரை ‘ஐட்டம்’ என்று தானே பதிவுசெய்து வைத்திருக்கிறான். அவனுக்குத்தேவை கவர்ந்திழுக்கும் பெருத்த சதைகள். அது கருப்பாக இருந்தால் என்ன, சிவப்பாக இருந்தால் என்ன.  ஆனால்,  தமிழ் சூழலில் கதாநாயகிகளை வெளியிடங்களில் இருந்து இறக்குமதிச்செய்யும் நிலை மட்டும் இன்னும் மாற்றம் வரவேயில்லை. பாலாஜி சக்திவேலும் அதைக்கடைபிடிக்கிறார். வேலைச்செய்கிற பெண்ணாக இருந்தாலும், பணக்காரவீட்டுப் பெண்ணாக இருந்தாலும் வயதிற்கு மீறியசதைகளுடன் துருத்திக்கொண்டு இருக்கவேண்டும். இப்படிதான் நதாநாயகித்தேர்வு இருக்கிறது.

பணம் விளையாடும் பிள்ளைகளிடம் இரக்கமற்ற கலாச்சார சீரழிவுகளும் சேர்ந்தே விளையாடுகிறன. பாதி வயதைக்கூட கடக்காத பெண்பிள்ளைகளும் ஆண்பிள்ளைகளும் சேர்ந்து செய்கிற பித்தலாட்டங்கள் வெளிநாடுகளின் கலாச்சாரத்தை ரசித்து ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு கூட அருவருப்பை ஊட்டும். என்பதை நிதர்சன உண்மையாய் வைக்கிறார் பாலாஜி சக்திவேல். நடுத்தர வீட்டுப்பெண்ணை, ஒரு கல்வி முதலாளிப் பையன் காதலிப்பதாக நடித்து ஆசைக்காட்டி பீச்சிக்கு அழைத்துச்செல்கிறான். அங்கு அவளுக்குத் தெரியாமல் செக்ஸியானப்படங்களை எடுப்பதும், ஆனால் நல்லவன் போல் நடித்து அவளிடம் நன்மதிப்பைப் பெற்றபிறகு தன் தேவையைப் பூர்த்தி செய்துக்கொள்வது என்பதும் அவன் திட்டமாக இருக்கிறது. அவளைக் கடலில் குளிக்கவிடுகிறான். ஓட்டலில் ரூமெடுத்து தங்குகிறார்கள் (சார் நீங்க நினைக்கிறாமாதிரி எல்லாம் ஒண்ணும் நடக்கலசார் அதான் பாலாஜி) அவன் நல்லவன் போல் வெளியே இருக்கிறான். ஆனால் கைப்பேசியை மட்டும் அவளுக்குத் தெரியாமல் ஆன்செய்து கண்ணாடி முன் வைக்கிறான். அதுதெரியாமல் தன் அம்மனத்தை கண்ணாடி முன் அவளே ரசித்துக்கொள்கிறாள். இந்த நாளில் இதுபோதும் என்று கிலம்பிவிடுகிறார்கள். வரும் வழியில் அவள் அவனின் கண்ணியத்தை மெச்சி இப்படிப்பட்ட நல்லவன் கிடைக்கமாட்டான் என்று தன் காதலை சொல்லிவிட வாய் எடுக்கிறாள். அந்நேரம் பார்த்து கார் பழுதாகி நின்றுவிடுகிறது. அவன் பக்கத்தில் மெக்கானிக்கை கூட்டிவர போகின்றான். சும்மா இருக்கும நேரத்தில் அவள் அனுடைய கைபேசியை கிளறுகிறாள். படிப்படியாக அவன் சுயரூபம் தெரியவருகிறது. கண்ணாடியில் பிரிதிபலித்தது முதல் எல்லா ஆபாசங்களும் புற்றீசல்போல் கிளம்பிக்கொண்டேயிருந்தது, இவளுக்கு அழுகையும் வேதனையும் பொங்கிக் கொண்டுயிருக்கிறது. அப்போது அவன் மெக்கானிக்கைக் கூட்டிக்கொண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறான். பதரிப்போன அவள் புத்திசாளித்தனமாக வேகவேகமாக எல்லாவற்றையும் நீக்கம் செய்துவிட்டு சிம்கார்டை கழட்டிஎடுத்துக்கொண்டாள். வண்டி சரியாகிவிட்டது ‘வேறு எங்காவது போகலாமா’ என்கிறான். அவள் சாதுர்யமாக ‘வீட்டுக்குப்போகலாம்’ என்கிறாள். அவனும் இன்னொரு நாளைக்குப் பார்த்தால்போகிறது என்று கிளம்புகிறார்கள். அவள் வீடு கிட்டத்தில் வந்ததும் அவனிடம் சொல்லிக்கொள்ளாமல் வேகமாகக் கதவைச்சாத்திவிட்டு போகிறாள். அவனுக்குப் பிறகுதான் விஷயம் தெரிந்தது. அவள், அவன் முகத்தில் விழிப்பதில்லை. அவன் வெறிப்பிடித்தவனாக மாறிப்பழிவாங்க நினைக்கிறான். அவன் ஆசை நிறைவேறாத பட்சத்தில்  அவள்  முகத்தில் திராவகம் வீசிசிதைக்கத் திட்டமிட்டு  வீட்டிற்குச்சென்று காலிங்பெல்லை அழுத்துகிறான். பாவம் அப்பாவி வேலைக்காரப்பெண் வந்துக்கதவைத் திறக்கிறாள். யார் என்று கூட பார்க்காமல் முகத்தில் வீசிவிட்டு ஓடுகிறான்.

இந்த திராவகவீச்சிற்கும் இல்லிக் கடையில் வேலைசெய்யும் ‘ஸ்ரீ’ க்கும் என்னத்தொடர்பு, இயக்குநர் இக்கதையை மிக சாமர்த்தியமாக  எப்படி நகர்த்திச் செல்கிறார்  என்பதே சவாலானது. ஆதாவது இட்லிக்கடையில் வேலைசெய்யும் ‘ஸ்ரீ’   வேலைக்காரப்பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் கெட்டவன் போன்ற நிகழ்வே தானாக நிகழ்ந்துவிடுகிறது. அந்தப்பெண்ணின் தாய் ‘ஸ்ரீ’ பார்த்தாலே அசிங்கமாகத் திட்டித்தீர்ப்பாள். அந்த நிலையில் ‘ஸ்ரீ’ யின் மீது சந்தேகம் கொள்கிறார்கள். கைதான ‘ஸ்ரீ’ வெளிப்படையாக உண்மையை சொல்லுகிறான். அதேபோல பணக்காரப்பெண் சொல்லும் போதும் உண்மை வெளிப்படையாகத் தெரிகிறது. திராவகம் வீசியவனும் தன் தவறை எந்த பிடிவாதமும் இல்லாமல் நான் தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறான். ஆனாலும் பணமும்,  அதிகார வர்க்கங்களும் தங்கள் சுயநலத்திற்காக எவ்வளவு சுலபமாக சாமான்யர்களை சட்டத்தில் சிக்கவைக்கிறார்கள். ஏமாற்றுக்காரர்களுக்கு சுதந்தரமான இடம் பூமியில் எப்போதும் இயல்பானதா? என்ற கேள்விகளுக்கு பதில் நீங்களே அப்படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். போலீஸ் அதிகாரியாக வரும் நபருக்கு எல்லா விஷயங்களும் தெரியும். அவர்  நாயகமா, வில்லத்தனமா என்று அவசரமாகப்பிரித்து எடைபோட்டுவிடமுடியாது. அப்படி அசத்தியிருக்கிறார்.

நா.முத்துக்குமாரின் ஒரே பாடல் வரிகள் பல காட்சிகளில் திரும்பத் திரும்பத்வந்தாலும் ரசனை குறையவில்லை. ஒளிப்பதிவு சிறப்பாக வந்திருக்கிறது. விசாரனையின்போது கேமராவின் கோணம் மாறுபட்டு வருது வித்தியாசமாக இருந்தது. இசையில் நமக்கு பிரித்தியேகமான ஞானம் இல்லை என்றாலும் பராவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பாலாஜி சக்திவேல்  இதுபோன்ற வாழ்வின் பல பரினாமங்களை தமிழக மக்களுக்கு படைப்புகளாகத் தரவேண்டும் என வாழ்த்துவோம். நான் சாதாரணமானவன் என்கிற நினைப்பு கொண்ட கலைஞனை  வாழ்த்தினால்  வீழ்ந்துவிடமாட்டான்.

ஜேடி