Sunday, February 27, 2011

சிறுகதை



                                                  
மசுரு ஊடு

"கடவுளே இன்னக்கி ஒரு நாளு மட்டும்  மழை வராம இருந்தா போதும் கோடிக்கும்புடு போடுவேன்" மும்மாறி, பருவம் என்கிற சொலவடை எல்லாம் பொய்யாகிப்போன காலகட்டத்தில் சூளையில் அடுக்கின எல்லாக்கல்லும் வெந்திடனும் என்ற ஆதங்கத்தில் வேண்டினார் ஜெகனாதன்.  




ஒரு காலகட்டத்தில் தாழ்த்தப்பட்டவன். (மன்னிக்கணும் ஜீவனை தாழ்த்தப்பட்டவன்  என்று நானே சொல்லுவதில் வெட்கப்படுகிறேன்.) பொருள் இல்லாமல் இருந்தான். அத்திப்பூத்தார் போல யாரேனும் ஒரு சிலர் ஜீவனத்துக்கு போதுமானபொருள் சுயமாய் உற்பத்தி செய்கிறவனாக இருந்தாலும்,  சாதியில் ஊறி இருக்கும் உயர்வகுப்பு மதம் தாழ்த்தப்பட்டவனை மதித்ததில்லை. காலப்போக்கில் வரலாறு யாருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. இப்போதெல்லாம் உயர்ந்தவர்களாக சமூகம் அங்கீகரித் தவர்கள் சாதிய பார்வையும், உயர்ந்துவிட்ட தாழ்த்தப்பட்டவன் அவனுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களை இழிவாய் நினைத்தலும் மறைமுகமாக நடந்தேருகிறது. பொருள் வைத்திருப்போர் யாராயினும் அவரிடம் வெளிப்படையன மதிப்பு இருசாராரும் வைக்கிறார்கள். அதை அங்கீகரிக்கும் விதமாகத்தான்  மன்னார்சாமி உடையார் ஜெகனாதனுக்கு  சூளைபோட்டுக் கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.

"யோவ் பொக வெளிய போகுதுபாருயா. சேத்தவாரி பூசுயா. சூளைகல்லு வேகறவரைக்கும் தண்ணி சாப்பிடாதேனு சொன்னா கேக்கிறியாய்யா, மண்ணாபோன
மன்னார்சாமி." என்று சத்தம்போட்டார் ஜெகநாதன்.

எந்த சூழளிலும்,  எல்லா நேரத்திலும்,  சாதியிலும்
நகைச்சுவை மனிதர்கள் இருக்கிறார்கள் போல. சாதிக்கொடி குரூரமாக பறக்கும் சமயத்திலும், இவர் சேரிக்கு வரும்போது அவரால் யாருக்கும் மனக்கஷ்டங்கள் ஏற்பட்டதில்லை. ஒருவேளை அச்சமயத்தில் சேரிகளிலும் குத்தகைக்கோ, சொந்தமாகவோ ஒருசிலர் கழனிகளை பயிர்செய்தனர். அதில் மன்னார்சாமி  அரிகளை வாரிக் கொள்ளவருவார். அதனாலோ என்னவோ அவரால் எந்த பிரச்சனையும் சேரியில் வந்ததே இல்லை. எல்லோரிடத்திலும் நகைச்சுவையாய் பேசுவார். வாலிபர்கள்,  பசங்கள் அவரிடம் உரிமையாக சித்தப்பா, மாமா, யோ, என்று அவரவர் வயதுக்கு ஏற்றார்போல உறவு வைத்து அழைப்பார்கள். இருந்தாலும் உயர்சாதிக்காரர் என்பதை அவர்கள் மனசு சொல்லிக்கொண்டே இருக்கும். பசங்களே  அவரிடம் அப்படி உரிமை எடுத்துக்கொள்ளும்போது.   கூலி கொடுக்கும் முதலாளியான ஜெகநாதன் சற்று ஏச்சிப்பேசுவது இயல்பானது தான்.

தள்ளாடியபடியே
மன்னார்சாமி  குழைத்த சேற்றை இரு கைகளாலும் அள்ளி பூசினார்.சூளை நான்கு பக்கமும் நெருப்பு பிடித்துவிட்டது போல. ஈரமாய் இருந்த சேறு தீட்சனையில் வறண்டிருந்தது. அவர் வேட்டியில் யாரோ பூசி விட்ட சேறாகத்தான் இருக்கும், அங்கங்கே திட்டு திட்டாய் கறைபடிந்திருந்தது. "யோ. பொக எங்க போது, நீ எங்க பூசுறயா." என்று கத்திய  ஜெகநாதன் வேலை செய்தவர்க்கு  கூலியை எண்ணி கொடுத்துக்கொண்டிருந்தார்.



சூளை போடுவதற்கு ஐந்தாயிரம் பணம் தன் அப்பாவிடம் கொடுத்துவிட்டதால் சூளையில் தமக்கும் பங்குண்டு என்ற எண்ணத்தோடு பார்வையிட வந்திருந் தான் ஜீவன்.சூளையிலிருந்து வெண் புகை வானம் ஏறியது. கடைசி நாள் வேலை என்பதால் வேலைசெய்த எல்லோருக்கும் சாப்பாடு போட்டார்கள். சாப்பிட்ட இலைகள் அவரவர் மனசு சொன்னபடி அங்கங்கே சுருட்டி வீசி இருந்தார்கள். ஒரு சில இலையில் கத்திரிக்காய்  தோல் கிடந்தது.  கருவேப் பிலை மனித நாவின் ருசிக்காக கொதிக்கும் எண்ணையில் புரண்டு  தன் நிறத்தை மாற்றிக்கொள்ளாமல் மணத்தை  குழம்பில் கரைத்துக்கொள்கிறது. குழம்பு தாளிப்புக்கு முக்கியமானதாய் தேடுகின்ற கருவேப்பிலை. சாப்பிடும் போது ஒதுக்கிவிடும் அவலம் நடந்துவிடுகிறது. தேவைப்படும்போது முக்கியமாய் நினைத்து பயன் படுத்திவிட்டு, முடிந்த பிறகு அறிமுகமில்லாத  எதோ ஒன்றுபோல பயனற்றதாய் ஒதுக்கிவிடுவது போன்ற ஒரு கொடூர செயலை மனிதனைத்தவிர எந்த உயிரினத்தாலும்  செய்யவேமுடியாது. ஆக ஒவ்வொரு மனிதனும் எதோ ஒன்றை ஒதுக்கி,  ஏதோ ஒன்றின் மீது தன் சர்வாதிகாரத்தை திணித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.   புற்களின்  மீது கிடந்த எச்சில் இலையை  நாய் ஒன்று நக்கிக்கொண் டிருந்தது.  


ஜீவன் வந்ததை பார்த்த ஜெகநாதன்  "இவன்தான் என் சின்னபையன்  டவுனுல வேலைசெய்றான். அங்கியே தங்கியிருக்கிறான்". என்று சூளையை பார்க்க வந்த பக்கத்தூர் கன்னியப்பனிடம்  அறிமுகம் செய்துவைத்தார். இதை  பார்த்துவிட்ட மன்னார்சாமி வந்தவன்  சூளைக்கு சொந்தக்காரன் என்று கண்டு  "வா தம்பி நல்லபடியா சூளைய கொளுத்தியாச்சி. என்னா  வெறுங் கையோட  வரே வரும்போது ஒரு மினி பாட்டிலாவது வாங்கி வரக்கூடாது." என்று இன்னும் தடுமாற்றம் குறையாத நிலையில்  கேட்டார்.


ஜீவன் கிராமத்தில் வாழ்ந்தபோது  கேலி கிண்டல் செய்து பழகியவர்கள் பேசியவர்கள். வெளியூரில் தங்கி  வேலை செய்து திரும்பியபோது மரியாதை தருகிறார்கள். மரியாதை பெற்றுக்கொள்ள நினைக்கிறவன் எத்தனை பேரின் சுதந்தரத்தை பறிக்கவேண்டி இருக்கிறது. மரியாதை மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் பயன்படுகிறது?. ஜீவன் அப்பாவிடம் பேசிவிட்டு  "நேரமாச்சி நான் வரேம்பா" என்று கிளம்பினான்.


இருசக்கர வாகனத்தில் சென்றபோது பரந்த பூமி பசுமையாய் தெரிந்தது. நீலமும், வெண்மையும் கலந்த வளைவான வானம் சுற்றி பூமியில் சொருகி வைத்திருந்தது. இயற்கையில் லயித்துப்போன ஜீவன் கற்பனையில் முழ்கினான். அப்பாவிடம் கல்லுவாங்கி,  நகரத்தின் ஒதுக்குப்புறமாய் தான் வாங்கிய பிளாட்டில் எப்படியாவது ஒரு வீடு கட்டிவிடவேண்டும். வீடு பூமியில் வாழநினைக்கிற ஒவ்வொருவருக்கும் கனவு திட்டம்தான். அதுவும் பெண்களுக்கு எதிர் வீட்டைவிட  கூடுதலான பரப்பு வேண்டும்.   கற்பனை எவ்வளவு தூரத்தையும்  மின்சாரப் பாய்ச்சலாய் தொட்டுவிடுகிறது. ஜீவன் நகரத்தின் வீடுகளை மாடளுக்காக  பார்த்துக்கொண்டே வந்தான்.  


உயிர் ஊசலாடுகிறபோது உறவுகளின் உதவிகள்போலவும்,  அரசிடம்  யானை, குதிரை எல்லாமில்லாமல்,  கோழி மேய்க்கிறவர்கள் சிக்கனமாய் இருந்தாலும் மிஞ்சப்போகிறது கூடுதளாக ஒன்றுமில்லை. பாக்கட் பிளைடு வாங்கி  முகத்தில் அங்கங்கே ரத்தம் கசிய வீட்டில்  சேவிங்செய்வது, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே அசைவம் காட்டுவது இப்படியான கெடுபிடிகளை கடைபிடிக்கும் போதுதான்  சில தள்ளு சீட்டு, சில்லு தங்கக்காசு சேர்க்க முடிகிறது. நீண்ட நாள் தவத்திற்கு பிறகு இவைகளை வைத்து ஜீவன் கட்டடம் உருவாக்கி விட்டான். இரும்பு கிரில்போட்டு வைத்திருந்தான். அறைகளுக்கு கதவு போட்டிருந்தான். தற்செயலாக வந்த நண்பர் வீட்டை பார்த்துவிட்டு   "டே என்னடா வீட்ட இப்படி வச்சிங்கிற. கெவர்மென்டுல எதுக்கெடுத்தாலும் லோன்தரான். ஆப்பீஸ்ல  சேலரி சர்டிகேட் வாங்கி,  லோன போட்டு பூசு வேலை எல்லாம் முடிச்சி. மேல  ரெண்டு ரூம்போட்டு. கிரகபிரவேசம் வைடானா. வீட்ட இப்படி வெச்சிங் கிறியே." என்று இலவசமான சலுகையாக ஆலோசனைகள் வழங்கினார்.


சாப்பாடு பரிமாறிக்கொண்டு இருந்த ஜீவன் மனைவி 'இவ்வளவு சுலபமான வழி இருக்க ஆறு, ஏழு மாசமாக வீட்டு வேலையே செய்யாமல் போட்டுவச்சிக் கிறாரே இந்த ஒதவாக்கர மனுஷன்' என்று தன் மனதில் திட்டிக்கொண்டிருந் தாள். நண்பர் போனபிறகுதான் கத்தி, கரண்டி வார்த்தைகளாக பறக்கப் போகிறது  ஜீவன் அவசரமாய் நண்பருடனே கிளம்பிவிட்டான். ஜீவன் மனைவி "நீங்க எங்க போறிங்க. அண்ணன்தான் வண்டி எத்தாந்துகிறாரே." 

"இல்ல...இல்ல  போயிட்டு வந்திடுறேன்." என்று இருவரும் கிளம்பினார்கள். சற்று தொலைவில் வந்தவுடன்  "ஏம்பா  என் ஒய்ப் முன்னாடி அவ்ளோ ஈசியா சொல்லிட்டே லோன் கெடச்சிடுமாபா"


"நாளைக்கே பேங்குல போய் கேளு. மேனேஜர் நம்ம ஆபீசுக்கு அடிக்கடி வரவர்தானே கண்டிப்பா கெடைச்சிடும்." 


நம்பிக்கை யூட்டும் வாரத்தைகள் மனிதனுக்கு எவ்வளவு உத்வேகத்தை கொடுக்கிறது. ஜீவன் இன்று பேங்கில் நுழையும் வரை அந்த வேகம் நீடித்திருந்தது. வங்கி வாசலில் அவன் தேவைக்கு அதிகமான லட்சங்கள் கடனாக தரப்படும் என்ற விளம்பரபேனர் புத்தம்புதிதாக தொங்கியிருந்தது. எந்த இடத்திலும் தனிப்பட்ட முறையில்  அறிமுகமான ஆள் இருந்தால்,  அங்கு சுலபமான முறையில் பயனடைய மனசு அங்கலாய்க்கிறது. அறையில் மேனேஜரை  பார்த்ததும் ஜீவனுக்கு உள்ளுக்குள் சந்தோசம். வணக்கம் செலுத்தி உள் நுழைந்தான்.  "இன்னாப்பா, இன்னா விஷயம்" என்றார் மேனேஜர்.


"வீடுக்கட்ட லோன் குடுக்குரீங்களானு, கேக்கலாம்னு வந்தேன் சார்."


"யாருக்கு லோனு"   


"எனுக்குதான்யா.ஏற்கனவே ரெண்டு ரூம் போட்டிருக்கேன். ஆனா பூசுவேலை   சன்னல் கதவு எதுவுமே செய்யல நீங்க லோன் குடுத்தா. இன்னும் ரெண்டு ரூம் போட்டு வீட்ட முடிச்சிடுவேன்."


தன் மேசைமீது சில பைகளும்,  ஷ்டேட்மென்டும் பில்லுகளும்  நிறைந் திருந்தது. தொலைபேசியில்  அழைப்பதாக உதவியாளர் சைகை காட்டுகிறார். அடிக்கடி கணினியில் பார்வையிடுகிறார். பேங்கு வேலை  சாதகமாய்  அமைவதற்கு   மேனேஜரின் மனநிலை இனங்கண்டு வாடிக்கையாளர் பேசவேண்டி  இருக்கிறது. இவைகளை கடந்து உன் மொத்த சம்பளம் எவ்வளவு என்று கேட்டவர்  "அந்த சம்பளத்துக்கெல்லாம்  அவுசிங் லோன் வராது. வேற ஏதாவது வருமானம் உண்டா."


"என் ஒய்ப் வீட்ல கடை வச்சிங்கிராங்க" 


"அப்பிடியா சரி நான் சொல்றத எல்லாம் கொண்டுவா" என்று லிஸ்ட்டு போட்டார். ஆடிட்டரின் அஸஸ்மென்ட் வாங்கி எனச்சி, உன் ஆபீஸ்ல பே சர்ட்டிபிகேட் வாங்கிவா பிறகு பார்க்கலாம்." உறுதியாக ஆவணங்கள் சேகரிக்க சொல்லுகிறவர், பார்க்கலாம் என்ற வார்த்தையை கூடவே சேர்த்து சொல்லுவது ஜீவனுக்கு பயமாக இருக்கிறது. சமாளித்து "சரி வரேன்யா"என்று கிளம்பினான்.


தான் பனி செய்யும் இடத்திலும் போராடித்தான் தனக்கானதை பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகாரிகளின் செயலை  காதலாக ஏற்றுக்கொள்வதும், மேடையில் வாழ்த்துக்கவிதை பாடவும் செய்கிறவர்களுக்கே நல்லமுட்டை. மற்றவர்க்கு நல்ல ஓட்டுக்குள் கெட்டகருதான் மிஞ்சுகிறது. பே  சர்ட்டிபிகேட் வாங்கிவந்தவன்  வங்கியில் நுழைந்தான்.


"என்னய்யா சர்டிகேட்  வாங்கிட்டியா."



"அமாம் சார்" என்றவன் ஜீவன் சர்ட்டிபிகேடை மேனேஜரிடம் நீட்டினான்.அதை சரி பார்த்த மேனேஜர் "சரி இதோடு உன் பிளாட் பட்டாவையும் வைத்து எண்ணை விற்கும் தெருவில் இருக்கும் எங்க மெயின் பிரான்ச் மேனேஜர் பத்மனிடம்  கொடு. இப்பவே போ நான் போன் பண்ணிபேசுகிறேன்." என்றார். ஒரு பேங்கு இன்னொரு பேங்கை கைகாட்டினாலும்,  பத்மன் என்றதும் ஜீவ னுக்கு சந்தோசம். நல்ல அறிமுகமானவர்   உடனே அந்த பிரான்ச் போனான். 


"இன்னாப்பா லோனா. நீ நேரா இங்க வரவேண்டித்தான". என்று  ஜீவன் கையில் இருந்த பேப்பரை வாங்கினார். இதை எல்லாம் வச்சிக்கோ இன்னும் எங்க இஞ்ஜினியர் கையில பிளான்வாங்கு, பிளாட்டுக்கு அப்புருவல் வாங்கு இதெல்லாம் வாங்கினு எங்க பேங்க்வக்கிலிடம் ஒப்பீனியன், வில்லங்கம் எல்லாம் வாங்கி வந்தாலும் உன் பேவுக்கு முன்று லச்சமெல்லாம் கெடைக்காது. இரண்டு லச்சம்தான் தருவேன். எல்லா பேப்பரும் ரெடி பண்ணிக்கினு வா" என்று லோன் பாம் கொடுத்தான்.    


பாம் கையில் வந்ததும் ஜீவனுக்கு சந்தோசம். இருந்தாலும் எல்லா பேப்பர் தயார் செய்யவேண்டுமே, பணம் எப்படி சமாளிப்பது என்று சங்கடப்பட்டான். பணம் வருகின்ற வழி தெரிந்ததும், தைரியமாக  முன்  பணம்  கடனாக வாங்கினான். நாவலில்  வரும் கிளைக்கதைகள் போல் ஒவ்வொரு பேப்பர் கேட்டு ஒவ்வொரு பணமுதலாளிகளின்  வீடுகளில் கால்கடுக்கவும், திரும்பத் திரும்ப வரவைத்தும் கடைசியில் . ஒண்ணு,  சங்கரலிங்கம் இஞ்சினியருக்கு  ஆயிரத்து ஐநூறு. இரண்டு, அரசின் கெடுபிடிகளை காட்டி பஞ்சாயத்து தலைவர்  நான்காயிரம் பெற்றபிறகே பிளான் அப்ருவல் பேப்பராக வந்தது.  முன்று, சட்டத்தின் ஓட்டைவழியாக வந்த பங்களாவா? என்று வியக்கு மளவுக்கும் உயர்வகை நாயின்  மிரட்டல் இருந்தது.  அதற்கு பயந்த பிறகே பணம் ஆயிரம் கை மாறுகிறது. பிறகு லீகல் ஒப்பீனியன் ஒரு ஜெராக்ஸ் பிரிதியாக கைக்கு வருகிறது.


எல்லா ஆவணங்களும் கைக்கு வந்ததில் நிம்மதியாய் இருந்தாலும். பேங்கின் வாசலை மிதிக்கும் போது பதட்டம் கூடிவிட்டது. ஜீவன் உள்ளே நுழையும் போது பத்மன் வெளியே வந்தார். "வணக்கய்யா. எல்லா பேபர்சும் கொண்டாந் திட்டேன்."   



"ஏம்பா (நடந்துகொண்டே) என்ன பாக்காதே நான் போயிக்கிட்டே இருப்பேன். உள்ள பீல்டாபீஸரு  இருப்பாரு, அவருகிட்ட காமி." மொத்த பேன்களும் வேகமாக சுற்றுவதை வைத்து வங்கி பரபரப்பாக இயங்கிறது என்று கணக்கிடு கிறார்கள் போல. ஆளில்லாத இடத்திலும் பேன் சுற்றியது.  அந்த இடத்தில் தனக்கு சாதகமாக ஒரு காரியத்தை சாதித்துக்கொள்ள நினைக்கிறபோது. தேவையில்லாமல் (பதட்டம் என்பதைவிட) பணிவு அதிகமாக வருகிறது.  ஏன் அப்படி இருக்கவேண்டும் என்று நினைத்தான். லோனை  நம்பி ஐயாயிரம் கடன் வாங்கியிருப்பதை நினைத்துக்கொண்டான். முதல் தாக்குதல் அவன்மீது நடத்தவே எந்த இடத்திலும் கடைநிலை  உழியரை வாசலில் நிற்கவைக்கிறது அதிகாரகங்கள். எதோ பயில் கொண்டுவந்தவனும் அந்த வங்கிக்கு அவனைத்தான் வாரிசாக நேமித்திருப்பதுபோல்,  வங்கி அதிகாரம் அவனிடம் பிரயோகிக்கும் அதிகாரத்தை, அவன் வங்கி வருவோரிடம் அப்பாவியாக பயன்படுத்துகிறான்.  


"யாருபா.என்ன வேணும்" என்றான்.


"பீல்டாபீஸரை பாக்கணும் சார்."  


"அதோ ரூம்ல ஒக்காந்து இருக்காரு பாரு  அவர்தான். அப்படி கதவோரமா நில்லு. பாப்பாரு." 


கதவோரம் நிற்பவர்கள் அதிக மனஉளைச்சலை சந்திக்கவேண்டியிருக்கும். ஜீவனும் சந்தித்தான். வந்தவர்கள் சிலர் நேராக உள்ளே நுழைந்தார்கள். நேரம் கழித்து அழைப்பு வந்தது. உள்ளே நுழைந்தான். "சார் மேனேஜர் உங்களை பார்க்க சொல்லிட்டு போனார்சார்".  என்று  பேபர்சை நீட்டினான். 


அடுக்காககொடுத்த பேபர்சை மொத்தமாக ஒருமுறை   எந்திரன் 'சிட்டி'யைப் போல்  பார்த்துவிட்டு. ஜீவன் பே சர்டிபிகேட்டின் பதவியின் பெயரை  மட்டும் இரண்டாம் வகுப்பு தமிழ் வழியில்  மனப்பாடம் செய்யும் குழந்தைபோல் திரும்ப திரும்ப பார்த்தார். அதன் மீது அவர் செலுத்திய  இழிவான பார்வை அவர் கண்ணில் தெரிந்தது.  அப்பார்வையின் அர்த்தம் விளங்கிக்கொண்ட  ஜீவனுக்கு வாங்கிய கடந்தான் நாபகம் வந்தது.


"ஏம்பா உனக்கெல்லாம் ஐம்பதாயிரம் தான் வரும்." என்றவர் உடனே பேப்பரை தூர வைத்துவிட்டார்.


"சார்.மேனேஜர் ரெண்டு லட்சம் தரேன்னார்சார்." 


"யோ அவரு தரேன்னு சொன்னா அவராண்ட போய் வாங்கிக்க. உனுக்கு அவ்ளோதான் வரும். இஷ்டம்னா இங்க  வாங்கிக்க.  இல்லனா வேற பேங்குல போய் வாங்கிக்க."


மறுநாள் ஜீவன் பத்மனைப்  பார்த்து பேசினான். "ஏம்பா பீல்டாபீஸரிடம் என்னமோ மொரப்பா பேசினியாமே.    அவரு சீனியர் மேனேஜரிடம் பேசினாராம்,  உனக்கு அவ்வளவுதான் வருமாம். போதும்னா சொல்லு. பாக்கலாம். அதுகூட இப்ப ஒன்னும் பேசமுடியாது.  நாளைக்கு வா." என்றார். ஒரு சுமுகமாய் நடக்கிற விஷயமென்றால்  அதற்கு சாக்கு போக்குகளே கிடையாது. நடக்காத விஷயத்துக்கு காரணங்கள் புதுசு புதுசாக முளைக்கிறது. இரண்டு  முன்று நாள் கடந்து மீண்டும் மேனேஜர் சொன்ன தேதியில் வந்து நுழைந்தான்.


நிமிர்ந்து பார்த்தவன்  "என்னவேணும்" என்றான். அதற்குள் கணவனும் மனைவியுமாக மேனேஜர் அறையில்  நுழைந்தார்கள். இருவரும் பளபளப்பாய் இருந்தனர். இவர்கள் நேற்று வந்தவர்கள் தானே என்று ஜீவன் யோசித்தான். "தம்பி கொஞ்சம் வெளிய இரு கூப்பிடுறேன்" என்றான். ஜீவன் வெளிய வந்தான்.


"நாளை உங்கள் வீடு விசிட்டிங் வருவார்கள். மறுநாள் உங்களுக்கு செக்கு குடுத்துடுவோம்." என்று சிரித்தான். கணவன் மனைவி சந்தோஷத்தில் முகம் மலர்ந்தது. கணவன் பக்கத்தில் இருந்தபோதும் அவன் மனைவியை மேனேஜர் அண்ணம்போல் அழகாக பிரித்து பார்வையால் மேய்ந்துகொண்டிருந்தார். பார்வையை மேயவிடுவதற்கு அனுமதிப்பதற்காகவே அக்குடும்பத்துக்கு பல லட்சம் தாரளாமாய் அனுமதிக்கப்படுகிறது.     பெண் தனியாக செல்வதில் கூட சில நேரம் பெண்ணுக்கு சாதகமாகவோ சாதகமில்லாமலோ நடந்துவிடலாம். கணவன்  மனைவியாக சேர்ந்து, அதுவும் ஆண் தலைமை ஏற்றிருக்கும் இடத்துக்கு செல்லும்போது, எந்த வேலையும்  தொண்ணுறு விழுக்காடு அவர்களுக்கு சாதகமாகவே முடியும்.  


வெளியே வந்து கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டிருந்த ஜீவனுக்கு கோபம் தலைக்கேறியது. விளங்க்கிகொள்ளமுடியாத திருட்டை கண்டுபிடிக்க குற்றவாளியின் நினைவுகளை அறிந்துகொள்ள எந்திரம் வைத்து  சோதனை செய்வதைவிட. ஒரு அதிகாரியாய் வருவோரிடம்  அவன்  பழிவாங்கும் குணம் உடையவனா? புகழ்ச்சியை அதிகமாக விரும்புகிறானா? பெண் போதைக்கு  அடிமையா?  என அவன் தலையை சோதனை செய்துவிட்டு அதிகாரியாய்  நியமித்தால்  சிறப்புடையதாய் இருக்கும். என்று நினைத்தான். அக்குடும்பம் வெளியே போனதும் ஜீவன் உள்ளே நுழைந்தான்.


"ஏம்பா நான் உனக்கு எப்படியாவது லோன் தரணும்னு நெனைச்சேன். பீல்டாபீஸர மொரச்சிட்டயாமே. சே. உனக்கு உதவி செய்யலாமுன்னு நெனைச்சேன் இப்படி பண்ணிட்டியே. இனிமே என்னால ஒன்னும் செய்ய முடியாது.வேற எங்கனா முயற்சி செய்துபாரு."என்றான்.


"சார் வேற எங்க போகமுடியும். நீங்க தரேன்னு சொன்னதுனாலதான சார் பேப்பர்லாம் ரெடிபன்னேன். தெரிஞ்சவரே  இப்படி சொல்றீங்களே. எல்லா பேப்பர்லயும் கொட்டையா போடுறான், எஜுகேசன் லோன் எந்த பேங்கும் இல்லன்னு சொல்லகூடாதுன்னு. போய் கேட்டா உன் வார்டு எது, அங்கபோய் கேளுன்றான். வருஷாவருஷம் வட்டி கட்டனும். கெவர்மென்டு தள்ளிடும்னு கனவுலாம் கானக்கூடாது. லோனுனு கேக்கும்போதே அவன் சொல்ற  ஆயிரத்தெட்டு ரூல்ஸ கேட்டு கஞ்சிக்கு செத்த பெற்றோர் தலதெறிக்க ஓடாம இருக்கவே முடியாது. இல்லையே சார் நேத்துகூட  மந்திரி பேட்டி குடுத்தாறேனு கேட்டா. எங்க ஜி.ஒ காட்டு. மந்திரி சொன்னா மந்திரிய போய் கேளுன்னு சொல்றாங்க. படிக்கிற லோனுக்கே அவ்ளோ பிரச்சனை இருக்கு. வீட்டுக்கு எப்பிடிசார் குடுப்பாங்க. நீங்களே ஒதவி பன்னுங்கசார். அனேகமாக கெஞ்சினான். அந்த நேரம் சுயமரியாதை, ஒரு மயிரும் தெரியவேயில்லை.


மேனேஜர்  சீட்டு, ஜீவனை அறிமுகமில்லாதவனாக மாற்றி துரத்தியது. 'விளம்பரங்களுக்காக தனியார் மட்டுமல்ல, அரசும் தங்களை வாழ்வித்துக் கொள்ள ஆடையில்லா நடிகையின் உடலைத்தேடுகிறது '.என்று நினைத்தவன் காலங்கடந்து  குடும்ப நல சேமிப்பு நிதியிலிருந்து கடனாக  எடுத்து இருப் பதையேசரிசெய்து   குடிபுக முடிவு செய்தான். நடந்தும் அதுதான்.


முன்கதவின் குறுக்கே கட்டப்பட்டு கட்செய்த ரிப்பன் இருபுறமும் தொங்கிக் கொண்டிருந்தது.வெளியே வாழைமரத்தில் கட்டப்பட்ட நல்வரவு சீரியல் பல்பு இன்னும் எரிந்தது. "யோ.யார்யா இந்த வீடு கட்ட மண்ண கல்லாக்கியதே நான்தான்யா  எனக்கே டிப்பன் வைக்கலையா கூப்பிடுடா அந்த ஜீவன" என்று சத்தம் போட்டார் மன்னார்சாமி.


பக்கத்து இலையில் உட்கார்ந்திருந்தவன் "யாம்பா வச்சியிருக்குற எடத்த உட்டுட்டு.  வைக்காத எடத்துல தேடுனா எங்கே இருக்கும்" என்றான். 


கைக்கு வந்ததை சாப்பிட்டு கை கழுவ சென்ற மன்னார்சாமி வீட்ட பார்க்கணும்  என்று அடம்பிடித்து உள் அறையில் நுழைந்தான். சாபிட்ட குழந்த தண்ணீரை சிந்திவிட்டிருந்தது. அதன் மீது கால் வைத்ததும் மன்னார்சாமிக்கு வழுக்கி விட்டது. 


"டே,  இன்னாடா மசுரு ஊடு கட்டிக்கிறான் நடக்கும்போதே நகுறுது." என்றார் மன்னார்சாமி.


மன்னார்சாமி சொன்னது உண்மை என்பது  ஜீவனுக்கு மட்டுந்தான் புரிந்தது.                        


நம்புழுதி       










                                                                                                                        



Monday, February 21, 2011

பாடும் பறவை

                      'ட்விட்டரை'  பயனுள்ளதாய் செய்து பார்க்கவே 


பயன்படுத்தி கைவிடும் பொருளாய் மனிதனை உற்பத்திசெய்யும் ஆலயங்கள், குறைவுபடாத உற்பத்தியை நிர்வகிக்க ஆயரை வேலைக்கு அழைக்கிறது.

நிர்பந்தங்கள் பிணைக்கப்பட்ட உறவில் நியாயமான உண்மை கடைபிடித்தல்.
வெள்ளிக்கனிமம் இலையில் பூத்த மலைகளின் மரங்கள்போல், சொர்கம்தான்.

வண்ணங்கள் கோர்த்த பூக்கள், சாலரங்களில் மாலையாய் தொங்கும். தேனிருந்த அதன் துவாரங்களைத்தேடி வருவதில்லை. செத்த பூக்களிடம் மிச்சம் கண்ட ஈக்கள்.

கடைபிடித்தல்,சுமத்தல், ஏற்றுக்கொள்ளுதல் இவைகளைக்கடந்து யாரும் யாருடனும் அறிமுகப்படுத்தி ஒன்றிக்கொள்ளும் ட்விட்டரின் கட்டமைப்பாக,சமூகம்ஏன்?

வசீகரப்படுத்தும் காலையில் பூக்கும் பூக்களின்அழகு. எதுவரை அதன் நிலைப்புத்தன்மை, ருசிக்கவேண்டும் அழகை, வாழ்க்கையின் இருப்பை, இல்லாமையை.

எரிந்த குப்பையின் புகைகூட வானம் ஏறுகிறது. அடங்கா பசியுடனே அசைவற்று பிணமான என் உடலில் இருந்து பிரிந்த உயிரைத் தவிர.

மேசையின் ட்ராயரை தன் வயிறுமுட்ட லேசாக திறந்து வைக்கிறார். வயிறு வலித்துவருபவன் சுதந்தரமாய் சிரித்த காந்தியை திணிக்கிறான். A.T.M ல் வந்துடும்போ.

மஞ்சல் நிறம் மாறாத மனைவியின் தாலிக்கயிறாகவே மதிக்கிறார். அரசு அலுவலர், தன் மேசைமீது காலம் கடந்து கிடக்கும் பைலின் முடிச்சை.

யுகம் கடந்த மரம், இன்னும் பருக்க. மழைவேண்டி, வானம் நோக்கி யாசகம் கேட்கிறது. குழந்தையின் உள்ளங்கையாய் விரிந்து துளிர் விடும் இலைகள்.

எந்த மிருகத்தையும் விட வீரம் நிறைந்தது, அதிபர்களிடம் சித்திரவதைக்கு பாடம் கற்றது. நானே உலகை ஆளும் கர்த்தா என்பவனின் ரத்தம் உறிஞ்சும் கொசு.

நல்ல மனிதன் மண்ணில் புதைந்த பொன். யாரும் கணக்கிடாமல் மறைந்தாலும், ஒருநாள் புதையலைப்போல் வெளிப்படுவான்.

கொள்ளை லாபம்தராததை, வியாபாரியும்,புகழ்நாடியும் ஏற்றுக்கொள்வ தேயில்லை. பயித்தியமும்,வாழ்வறிந்தவனும் அதை தேடி, தொழுது ஏற்கிறான்.

 பூமியில் வேர்பதிந்த விருட்ச்சம்போல், வீழ்த்தும் நாள் குறித்துவிட்டு வளர்ச்சியை தளராது தொடர்கிறது உடலில் ஊறிவிட்ட தீராதநோய்.

நம்புழுதி

Friday, February 18, 2011

கவிதை

    உருமாறும் வெண்குதிரை   


வெண்குதிரை 
இந்நிலத்தை தன் பிடரியால் 
பெருக்கிக்கொண்டிருந்தபோது 
என் கொள்ளுத்தாத்தா 
ஊர் தலைவர் வீட்டுக்குப் பின்னால்  
சாணியை பெருக்கிவாரினார்.

அக்குதிரை 
பின்னந்தொடையில் ஈட்டிபாய்ந்து 
கொட்டடிக்கோட்டையை
விட்டு ஒடியபோது.
தாத்தா 
உள்ளூர் மயில்களின் அசைவில் 
உதிரும் இறகுக்காக வாதாடினார்.

புத்தக இடுக்குகளில் 
மயில் இறகை சுமந்த அப்பா 
வெண்குதிரையின் எச்சத்தில் முளைத்த 
A முதல் D வரை எழுத்தை 
முட்டி மோதிக்கற்றுக்கொண்டார்.

சாது, தீது, ரோகம் 
உடைந்து கலந்து குழைந்து 
பதியம் போட்ட விதைப்போல்
இலக்கு, அறம் தரித்த  இயல்கள்
முளைக்கும்போதே முற்றிய கைகளுடன் 
மனித அடையாளத்தில் 
அடிக்கடி மதம்பிடிக்கும் 
தற்போது கிராமங்களை சூரையாடும்   
உள்ளூர் யானையாய் வளர்ந்துவிட்டது.

அறயியல் அரசமரம்
அதன் அடிவேரை
துடைத்து சுத்தம் செய்யத்தெரிந்த
யாருக்கும்   நிழல் தருகிறது.
இலக்கு இயல் ஆலமரமாய் 
ஆயிரம் விழுதுடன் குழுக்குழுவாய் 
வேர்தரித்துக்கிடக்கிறது. 
விழுதை கண்ட என் கண்கள் 
கிழிந்த புடவையில் 
தூளிக்கட்டி தாய் பாடிய 
வார்த்தை நினைவு வந்தது.
குடுகுடுப்பைக்காரனின் கினுகினுப்பைக்கேட்டு 
ஓடிவரும் குழந்தையாக 
ஓடிவந்து விழுதைப்பிடித்தேன் 
வாழ்க்கையை  தரிசிக்க.

என் கைப்பட்டதும் சுருண்டு 
உயர்ந்து அதன் பிறப்பிடத்தில் நின்றது
ஏன் இப்படி? தீ இட்டது போல் பட்டதா என்றேன்.

இல்லை இல்லை 
அதெல்லாம் மறந்துவிட்டோம் 

முன்னோர்கள் ஊன்ருகோளின்
சுற்றளவை, வைரத்தை, உறுதிப்பாட்டை
ஆய்வு செய்து உள்வாங்கி வா
உள்ளன்பாய் ஏற்றுக்கொள்வோம்
என சாரைப்பாம்பாய் விரைந்து ஏறி 
தலைதூக்கி பிரிந்த கரும் நாக்கு
வெளியில் நீட்டி எச்சரித்தது 
கைகொடுக்க மறுத்த விழுது. 


பாம்பானாலும் நாக்கில் 
விழுந்த வார்த்தைக்கு விஷமில்லை 
உண்மைதான் சொன்னாய் நண்பா 
தேடித்தேடி தேடிப்பிடித்தால் 
குடியுயர்ந்தோர், படிப்புயர்ந்தோர்
உழைப்பு, மனசாட்சி,  கற்பனைக் கலந்து
அவரவர் ருசிக்கு பெயர்வைத்து   
இதிகாசங்கள், வரலாறுகள், இலக்கியங்களும் 
வேரறுந்த காய்ந்த கோரைப்பல்லுள்ள
முள்ளில் சிக்கிய கதராடையாய் கிடக்கிறது
எந்த நாளும் சமூக நலனிலிருந்து பிரிக்கமுடியாததாய்.

ஆக மூலத்தை கண்டுபிடித்தேன். 
விடமாட்டேன் வருகிறேன் என்றபோது
முன்னேயும்  பின்னேயும் 
நவீனங்கள் ஈட்டியாய் கூர்பாயும்
கரை சேரவழியுண்டு 
குறுக்கே கால்பதித்தால் 
இசங்களும், இருத்தலும் 
தலை மறைக்க சுவர் எழுப்பி 
மந்திரங்கள் ஓதி நிற்கிறது.

அவன் வென்குதிரையாய் வந்தபோது 
கொள்ளுத்தாத்தா செய்ததை 
உள்ளிருப்போன் வெண்மயிலாய் மாறி
ஏன் என் கொள்ளுப்பேரனிடம்
திரும்ப பெற முயற்சிக்கிராய்.

வேண்டாம் வேண்டாம் 
சூதுகள் வேண்டாம்  
பழங்கள் வருஷிக்கும் காடுகளும் இல்லை
வனவாசம் போக யாரும்  பாண்டவர் இல்லை.

இலக்கியம் தந்த முன்னோர்கள் 
தாங்கிய அணிகளன்களோடு
கூர்த்தீட்டீய  விமர்ச்சனங்களை அங்கீகரித்து
ஒன்று பட்ட சமூக பரப்புக்கு
இணைந்தே  கைகொடுப்போம். 
நான் எப்போதும்  கையை உயர்த்துகிறேன்
குதிரையாய் மாறாமல் நண்பனாய் இருப்பதற்கு.  
 









Tuesday, February 15, 2011

சிறுகதை

                                                                   கலவி

"மலர் உன் விழிகளில் ஒரு சொட்டு கண்ணீர் வழிகின்ற நாளில் என் உயிர் பிரிந்திருக்கும்.  அதை மட்டும் மனதில் வைத்துக்கொள். கவின் இந்த வார்த்தைகளை சொன்னபோது  அவன் தோளில் சாய்ந்தாள். அவளின் புத்தகப்பை சற்று தள்ளி இருந்தது.  

காட்டு வேலமரங்களைக் கொண்ட பெரிய ஏரி காய்ந்து கிடந்தது. செங்கல்பட்டிலிருந்து அரக்கோணம் மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாய் அமைப்பதற்கு வேலைகள் தொடங்கியது. அதன் வழிகளில் இருக்கும் ஏரிகளில் எல்லாம் ஒரு ஒழுங்கு இல்லாமல் எங்கு வசதியோ அங்கே மண்ணை வாரிக்கொண்டார்கள். பயிருக்கு பாசன வசதிதரும் மதகு எங்கோ மேடாய் கிடந்தது. ஏரிக்குள் ஏரியாக காலம் கடந்து பெய்த மழையின் தண்ணீர் பயனற்று நடுவில் தேங்கியிருந்தது. நாணல் வகையைச்சார்ந்த புற்கள் திட்டுத்திட்டாக உயர்ந்து வளர்ந்திருந்தது. அது பூத்தப்பூ கரும்பு பூவின் சாயலில் இருந்தது. அந்த தண்ணீரை தொட்டு கிழக்கிலிருந்து கிளம்பியக்காற்று மேற்கை நோக்கி ஓயாத பயணத்திலிருந்தது. அந்த சிறிய நீர்நிலை  பார்வைக்கு அழகாய்யும்,  ஆய்வுக்குரியதாகவும் இருந்தது. ஆக காற்றும் கடலும் எண்ணிலங்கா  லேகியோனின் உள்ளடக்கமா? மலர், கவின்  இருவரும் நீர் நிலையில் கால்களை தொங்கவிட்டு உட்கார்ந்திருந்தனர்.

அவளது வலது கை அவன் கழுத்தை சுற்றி  இருந்தது பார்வை அலைகளையே பார்த்தது.  எந்த அலை முதலில் தோன்றியது எது கடைசிவரை வந்து கரை சேர்கிறது என்று கண்கொட்டாமல் பார்த்தாள். "அலைகள் சுருள் கதவு மாதிரி வருது இல்ல." என்றவள் ''கவின் உண்மைய சொல்லணும் எனக்கு முன்னால வேற  ஒரு பொண்ணு உன்னோடு பழகும் சந்தர்ப்பம் கெடச்சிருந்தா  அந்த பொண்ணத்தான் காதலிச்சிருப்பே இல்ல'' யார் யாருக்கு என்கிற வார்த்தை பழசானாலும் இப்பவும் பழமையில்  நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதுதான் முதல் நம்பிக்கைகுரிய  வார்த்தை. அவன் அவளின் தாடையைபிடித்து உற்றுப்பார்த்தான். அப்படி பார்ப்பது இல்லை என்பதற்கும், ஆம் என்பதற்கும் பொதுவானது என்பதை இலக்கியவாதியாய் இருந்தால்  கண்டுபிடித்து விடுவான்.  "மலர்  குட்டிப்போட்ட பூனைமாதிரி என்னையே  சுற்றும் மாமம் பொண்ணு இருந்தும்  உன்னைத்தான் நொடி முல்லா சுத்தினேன். என் ஆரம்பமும் முடிவும் நீதான் மலர்." என்று சொன்னதின் மூலம் அவர்கள் உறவை மேலும் உறுதி செய்துக்கொண்டான்.

காதலிலும், குடும்பத்திலும்  வார்த்தைகள் பகிர்தல் குறைவேக்கூடாது.  கவின் வாத்தைகளால் மலைரை இறுக்கினான். அவளின் கை அவனை இறுக்கியது.  நல்ல சந்தர்ப்பம்  அவன் அவளின் திரட்ச்சிகளை தொட முற்பட்டான்.  அவள் செல்லமாக கைமீது  போட்டு, தமிழ் மூதாதையர்களின் நம்பிக்கைக்கு உரியவளானாள். இது எல்லாமே உனக்குத்தாண்டா அதற்கு நேரம் வரும்போது ஒரு ஆரஞ்சி பழத்தோலாக உரித்துக்கொள் இப்போது வேண்டாம்" என்றாள். அவன் எமார்ந்தவனாக அவள் கையை விலக்கினான். சற்று முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டான்.

ஜி மெயில் திருப்பிவிடுகிறதுபோல அவள் ஒன்றுதலின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதுபோல் உணர்ந்தாள். "சரி போலாம்பா நேரமாச்சி கூட வந்த  பசங்க வீட்டுக்கு போய  சேர்ந்துட்டு இருப்பாங்க. நாளைக்கு பார்க்கலாம்" என்று எழுந்து பையை எடுத்தாள்.  அவன் மண் கட்டிகளை எடுத்து நீரில் எறிந்தான். அவன் போட்ட கல்லுக்கு நாணல் புற்களில் சிக்கிய நீர்பாசி ஒன்று சிதறியது. தொடர் அலைகள் ஓரத்தின் மணலை துல்லியமாக சலித்தது. அவன் முச்சிவிட்டு எழுந்தான். தன் விருப்பு நிறைவேறாமல் போனாலும்  அவள் சொன்ன வார்த்தை ஆறுதலாய் இருந்தது.

இருவரும் கிளம்பினார்கள். மலர்  ஆடைகளை சரி செய்துக்கொண்டாள். கையில் இருந்த கர்சிப் கீழே விழுந்து  பறந்தது. மலர் சற்று வேகமாக சென்று பிடித்தாள். சாலையில் பேருந்து சென்றது. அது எக்ஸ்பிரஸ் என்பதால் தங்கள் பகுதியை சார்ந்தவர்கள் செல்ல வாய்ப்பில்லை. இருவரும் தைரியமாக சாலையை நோக்கி நடந்தார்கள்.

"கவின் நாளைக்கு ஹால்டிக்கட் வாங்க போகணும் நீயும் வரியா" என்றாள். அவன் முகத்தில் படிந்திருக்கும் கோபம் மறைந்ததா என்று பார்த்தாள். இழந்த வாய்ப்பு எப்படியும் கைகூடும் என்று மனதில் ஆசையை பதுக்கினான். ''மலர் நான் +2 படிச்சதிலிருந்தே எவ்வளவு நேசித்தேன். பெயிலானப்போ எங்கப்பா, நீதான் அந்த பொண்ணாக்கூடவே  சுத்திறியே நீ எங்க பாஸ்பண்ணப்போற.அவளாக்கூட சுத்துறதாயிருந்தா நீ மறுபடியும் பரிச்சை எழுத தேவையில்ல. எதாவது வேலைக்குபோனு சொல்லிட்டாரு. நானும்  வேலைக்கு போகுறேன். அப்படிப்பட்ட என்னப்போயி சந்தேகப்படுறியே. சின்ன ஆசைய மறுக்கிறியே. அவளிடம் இரக்கமான வார்த்தையை வீசினான். A.B.C.D. வைட்டமின் கலந்த நிலாச்சோறு போல் ஏதோ  அவளுக்குள் இதயம் மட்டுமல்ல, ரத்த நாளங்கள் எல்லாம் பாய்ந்தது.

"டே  நீ ஆம்பள சொல்லிட்டே என்னால சொல்ல முடியலடா." அவள் படக்கென்று மார்பை விலக்கினாள். முதலில் காதலிக்க தொடங்குகிறவன் பெண்ணின் காலையும் கைகளையும் முழுசாக பார்க்கவேண்டும். அதன் பிறகும் ஈர்ப்பு  தொடர்ந்தால்  நல்லதுதான். "இது பார்வைக்கு மாறுபடும்  வெறும் சதைடா. பயன்பாடு வரும்போது மட்டும் தான் நிரம்பிய ஐஸ்கிரிமா நெனைக்கணும். மற்ற நேரம் என் கையை பிடித்து ஒரு அலோ சொல்லுவது போலதான் அதுவும்."   இதை சொலும்போது சாலையில் டுவீலர் வந்தது. இருவரும் ஒதுங்கி நடந்தார்கள்.  இதுக்குத்தான் உனக்கு கோபமா. வா நாளைக்கு ஹால்டிக்கட் வாங்கினு அப்படியே சினிமாவுக்கு போகலாம். அங்க நீ என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ. ஆனா ஏமாத்தி விட்டுட்ட, நான் உயிரோடு இருக்கமாட்டேன். இருவரும் மாறி மாறி சபதம் செய்துக்கொண்டார்கள்.  சாட்சி இல்லாதபோது சபதங்கள் வெகு சாதாரனமாகதான் புழக்கமாகிறது. நாணல் புற்களும் மனித உரு எடுக்காமல் இருந்ததற்கு ஏகசந்தோசத்தில் சிரித்து தலையசைத்தது. ஊரின்   எல்லை நெருங்கியதும்  கவின் பின் தங்கினான். மலர் நடை வேகமானது.

பால்கனி டிக்கட்தான் வாங்கினான் கிராமங்களைகடந்து நகரத்திற்கு வரும் நபர்கள் அதிகம்தான். அதனால் எச்சரிக்கையாக இருக்க நினைத்தான். இருவரும் கண் நோவு வந்தவர்கள் போல் யாரையும் துணிந்து பார்க்க அச்சப்பட்டார்கள். இன்னும் தியேட்டரில் அனுமதிக்கவில்லை. கவின் வெளியில் நொறுக்குத்தீனி வாங்கிவர போனான். பகலிலும் இருளைப்பிரியாத இடங்கள் இருக்கத்தான் செய்கிறது.  மலர் சற்று அச்சத்துடன்தான் ஒதுங்கி நின்றாள். கவின் வந்தான்.கதவு திறக்கப்பட்டது. வேகமாக உள்ளேபோனார்கள். தியேட்டரின் உச்சியில் c.l.f பலப் மெல்லிய வெளிச்சத்தை உமிழ்ந்திருந்தது.  இவர்கள் பார்வை மற்றவர்மீது இருக்கவேண்டும். அடுத்தவர் பார்வை இவர்கள்மீது படவே கூடாத இடத்தை தேடிபிடித்தார்கள்.

மலருக்கு இந்த இடம் பிடிக்கவில்லை இருந்தாலும் உட்கார்ந்திருந்தாள்.தன்னை இன்று ஏதோ செய்யப்போகிறான் என்ற பயமிருந்தது. அவன் கைநிறைய தின்பண்டம் வைத்திருந்தான். சற்று உள்வாங்கியது போன்று வெண் திரை இருந்தது. தியேட்டர்கள்    பெரும்பாலும் இருக்கை நிறைவது கடினம்தான். விழுந்து, துரத்தி, ஆளைவெட்டி காதலிப்பதென்றால் ஆண், பெண், கிழங்கள், வாலிபர்கள் என்று சற்று நிரம்புகிறது. தமிழ்நாடு நல்ல விஷயம்  சொல்லுகிறவர்களை  சீக்கிரம்  மூட்டைகட்டி வீட்டுக்கு அனுப்பிவிடுகிறது. இவர்கள் பாதுகாப்பான இருக்கையில் அமர்ந்தார்கள்.  இருக்கையின் கீழே  செவனப் பாட்டில் கிடந்தது. சோளப்போரிகள் சிதறிக்கிடந்தது. எச்சில் தொட்டியை தவிர மற்ற இடங்களை சுற்றி சிவந்த நிறத்தில் துப்பிவைத்திருந்தார்கள். வியாபார நோக்குகொண்ட சினிமா நாட்டின் வளர்ச்சிக்கு பத்து விழுக்காடு பயன்பட்டதென்றால், முப்பது விழுக்காடு எளியோரின் வாழ்வாதாரத்தை, கலாச்சாரத்தை  ஒழித்துக்கட்டியது.

டிஜிட்டல் சத்தம் திரையில் வந்தது. கவின் சற்று குரலுயர்த்தி   பேசவேண்டியிருந்தது. அவனுக்கு படத்தின் காட்சிகள் வெறுமையாய் இருந்தது. தங்களை யாராவது பார்க்கிறார்களா என்பதை உறுதி செய்தான். பார்த்தாலும் இந்த இருளில் ஒன்றும் தெரியப் போவதில்லை. மலர்தான் கடைசி இருக்கை அவன் வசதிக்கு மாறாக வலதுகையில் தின்பண்டம் வைத்திருந்தான். அடிக்கடி அவளிடம் நீட்டினான். இடது கை அவள் தொடைப்பகுதியை நெருங்கியது. அவள்  வலதுகையால் அவன் கையை அழுத்தினாள். அவன் உருவி மீண்டும் சற்று உள்நோக்கியே பயணித்தன. இருவரின் வாயும் அசைப்போட்டிருந்தது. திரையில் ஆவேசம் பொங்கும் காட்சிகள் காதை  பிளந்தது.

இவர்களுக்கு பதட்டமான நிலையில் மெய்மறந்தார்கள். அவள் இரண்டு முறை தடுத்தாள். பிறகு அதில் ஆழ்ந்துவிட்டாள். அவன் வசதியாக கால்மீது கால் போட்டுக்கொண்டான். அவளும் இயல்பாக அவனை தொட்டுக்கொண்டாள். முதல் உறவுகளில் முழுமையான இடுபாடு கொண்டவர்கள் குறைவுதான். எவனோ ஒருவன் சிகரட் பிடித்ததால் தியேட்டர் ஊழியன் முகத்தில் வெளிச்சம் அடித்து எழுபினான்.சிகரட் பிடித்தவன்  இவர்கள் வழியாக வந்தான். இருவரும் ஒழுங்கை கடைபிடிக்க நேர்ந்தது. எவ்வளவு எடஞ்சல் பண்ராங்கையா என வடிவேல் மாதிரி சொல்லிக்கொண்டான். ஒருமுறை கிடைக்கு சந்தர்ப்பம் மீண்டும் கிடைப்பது சந்தேகம்தான். கவின் மீண்டும் தேடல்களில் ஈடுபட்டான். அவள் அந்தரங்கம் ஈரம் கசிந்திருந்தது.

தன்னோடு ஒத்து வருகிறாள் என்பதில் இவனுக்கு சந்தோசம். மேலும் கிளர்ச்சியை தொடங்கும் போது. இடைவெளி ஆரம்பமானது. தியேட்டர் காரன் ஏனோ அவசரமில்லாமல் தான் உச்சந்தலைக்கு மேல்  எரியும் லைட்டை போடுகிறான். மலர் சற்று ஏளனமாக சிரித்தாள். "என்னோடு ஒன்றினாய்  என்று உன்னில் வழிந்த திரவம் சொல்லுகிறது. நிமிடங்கள் கடந்து அதிலிருந்து விலகியதும், நான் மட்டுமே ஏமார்ந்து விட்டக்தாக்ச சிரிக்கிறாயே. அதில் உனக்கு பாதிப்பு இல்லையா?" என மலரிடம் நேரடியாகவே கேட்டான். அவள் சி என்று முகம் சுளித்தாள். மீண்டும் தொடங்கியது. "கவின் நம்மை யாரோ கவனிப்பதாக பயமாக இருக்கிறது. படத்தை பார். நாளைக்கு மாலை எங்க சித்தப்பா வீட்டு பக்கத்தில ஒதுக்குப்புறமா இருக்குதே குடிசை, அங்க வந்துடு உனக்கு தேவையானது முழுமையா தரேன்." என்றாள் மலர். கவின் மனம் தாளாது துள்ளியது.

ஒவ்வொரு வீட்டிலும் அப்பாக்கள் மத்தியில் பிள்ளைகளை நடத்திச்செல்ல,  அம்மாக்கள் பொருளை தராசு தட்டில் நிருக்கும் வியாபாரியாகத்தான் இருக்கிறார்கள். மலர் வருவதை அவள் அம்மா பார்த்தாள். அவளை வீட்டில் நுழையவிடாமல் பின் பக்கமாக இழுத்துச்சென்றாள். அவளிடம் ஏதாவது பூவோ, பொருளோ புதிதாக இருக்கிறதா பார்த்தாள். இன்னும் வாடாமல் இருந்த பூவை எடுத்து வீசினாள். பின்பக்கம் பாத்திரம் தேய்க்க வைத்திருந்த தண்ணீர் குடத்தை தூக்கி இடுப்பில் வைத்து "போ... போடி" என்று வீட்டில் போகச்சொன்னாள். மலருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் அம்மா சற்று பின்தங்கி வந்தாள்.பாத்திரம் கழுவ வைத்திருக்கும் தண்ணீரை அம்மா ஏன் வீட்டிற்குள் தூக்கிச் செல்ல  சொல்கிறாள்.  குழம்பிக்கொண்டு வாசலை தாண்டிச் சென்றாள். 

சேரில் உட்கார்ந்திருந்த மலரின் அப்பா ஆவேசமாக வந்து "வாடி ஓடுகாலிநாயே "என்று தலைமயிரைய் பிடித்து இழுத்து  உதைத்தான். மலர் எதிர்ப்பார்க்கவில்லை. இடுப்பில் இருந்தகுடம் நழுவி மூலையில் இருந்த டீ வி டேபிள் கால்கள் மீது விழுந்தது. டேபிள் சாய்ந்து கூடவே டீ வியும்  விழுந்து உடைந்தது. ஒன்றை ஒன்று எதிர் எதிர்ப்புறமாய் பார்த்திருந்த பொம்மைக்குருவி தலைகீழாய் விழுந்தது. அவனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. "உன்ன இன்னையோட வெச்சி கொளித்திர்ரேண்டி தேவிடியா இதுக்குள்ள ஊரல் எடுத்துக்கிச்சா. அந்தபிச்சக்கார பையனோட போகாதே போகாதேன்னு சொன்னா, திருட்டுத்தனமா சினிமாவுக்கு போகிறியா" என்று பிடி உருவிக்கொண்ட தலை மயிரை இன்னும் இறுக்கமாக சேர்த்துப் பிடித்து எட்டி உதைத்தான்.

அவன் மனைவி "ஐயோ என் சாமி.. கொண்ணுடாதையா" என்று கதறினாள். உன்னைத்தாண்டி ஒதைக்கனும் பொண்ணா வளத்துக்கிற" என்று கோபம் இவள் பக்கம் திரும்பியது. கொட்டிய  தண்ணீர்  வீடுமுழ்வதும் பரவியது. மலர் கையிக்கும் கயிறுக்கும் உள்ள இணைப்பின்    பொம்மலாட்ட பொம்மையாக திண்டாடினாள்.  ஒருகட்டத்தில் தள்ளு முள்ளுக்கிடையில்  ஆட்பட்ட போதும் மலரின் முடியை விடாது இருந்ததால். அவன் தடுமாற்றத்துக்கு எல்லாம் மலர் சுழன்றாள். அப்போது நிலை தடுமாறி இரண்டு கால்களையும் விரிய தூக்கிவிட்டாள். விலக்க  வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் எல்லோர் கண்ணிலும் பட்டது. ஒரு பத்தாண்டு முந்தைய கிராம  பெண்களாய் இருந்தால் நிச்சயம் கருமை படர்ந்த இடம் வெளிப்பட்டு இருக்கும்.    மலர் நீல நிற உள்ளாடை அணிந்திருந்தாள். பெண்களுக்கு அது பலவகையில் வசதியானதுதான். ரொம்ப காலமாய்  புழக்கத்திலிருந்த ஏளனம் செய்யும்  பழமொழியை உடைக்கவும் அது பயனுள்ளதாய் இருக்கிறது. அவள் அம்மா ஓடிவந்து "அடப்பாவி விடுய்யா...விடுய்யா" என்று கத்தி அவசர அவசரமாக மலரின் விலகிய ஆடையை சரிசெய்தாள். மலரின் அப்பா  "உண்மையிலே ரோசம் உள்ளவளாய் இருந்தால் பொழுது விடியிறதுக்குள்ள நீ பொணமா இருக்கணும்." அதன் பிறகு ஒருவார்த்தை பேசவில்லை. மலரின் தலைமயிரை விட்டுவிட்டான். 

பாத்ரூம் வென்டிலேட்டர் வழியாக வெளியே வானத்தைப்பார்த்தாள். நீல நிறத்தில் திட்டுத்திட்டான மேகங்கள் அழுக்கு நுரையாய் கடந்தது. நடு இரவில் மலரின் அலறல் சத்தம் கேட்டது. எழுந்தவர்கள் குரல் வரும் திசை தேடினார்கள்.  ஆக்ரோஷமாக பாத்ரூமில் தீ அலைந்து எரிவது தெரிந்தது. பார்த்தவர்கள்   ஐயோ.. ஐயோ என்று கத்திக்கொண்டு எதை எடுப்பது, எப்படித்திறப்பது என்று திண்டாடினார்கள். ஒருவன் ஓடிவந்து கதவை உடைத்தான்.மலர் கரிக்கட்டையாக விழுந்தாள். பாத்தரும் மூலையில்  வாலியில் நிறைந்திருந்த தண்ணீர் கொஞ்சமும் குறையாமல் இருந்தது. பத்து லிட்டர் கேனில் நிறம்பியிருந்த மண்ணெண்ணெய் மொத்தமும் காலியாகியிருந்தது. காலியான கேன் எரிந்துகொண்டிருந்தது. மருத்துவமனைக்கு துக்கிச்சென்றார்கள்.

இரவு தன் மெளனத்தை இழந்து கொண்டிருந்தது. பியூட்டிபாரில் இருந்த அதிகாலை, வெளியே காலெடுத்து வைத்தது.கொஞ்சமும் கரிசனையில்லாத இயற்கைகள்தான். எந்த துக்கத்துகாகவும் தன் நிலையை நிறுத்தவோ, மாற்றிக்கொள்ள மறுக்குறது. மனிதன் அதனிடம்  இருந்துதான் கண்டுகொள்ளாமையை கண்டுபிடிது கடைபிடிக்கிறானா? அப்பகுதி மனிதர்களுக்கு அழுகுரலும் அதிர்ச்சியுமாகவே விடிந்தது. கவின் தன் வாலிபத்தை செயல் படுத்தி பார்ப்பதற்கான கனவுலகில் இரவு முழுவதும் திளைத்திருந்தான். மலர் சினிமா தியேட்டரில் கொடுத்த வாக்குறிதியை அடிக்கடி நினைத்துப்பார்த்தான். நான்  அழகு நிறைந்தவன், அறிவாளி அதனால்தான் மலர் என் பேச்சை மதிக்கிறாள், காதலிக்கிறாள். இந்த நாளில் நிறைவேறப் போகின்றதை மறக்கவே முடியாது. என்றெல்லாம் அவன்  மனசு அங்கலாய்த்தது.  

கவின் குடும்பத்தார் முன் கூட்டியே செய்தியை அறிந்து கவினிடம் பேசி எப்படியாவது  பக்கத்தூரில்  இருக்கும் சித்தி வீட்டிற்கு கொண்டுபோய் விட்டு பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவின் அம்மா அவனிடம் பேசினாள். "அம்மா, இன்னா அந்தபக்கம்  அழற சத்தம் கேட்குது" என்றான். மலரின் மீது வெறுப்பு எண்ணத்தை பதியவைக்க அவனிடத்தில் "இம் கொழுப்பு ஏறுனா அப்படித்தான் பண்ணிக்குவாங்க. நீ உள்ள போடா அவுங்க அப்பன் எதுனா சொல்லியிருப்பான்." அவள் மறுபடியும் "நீ உள்ள போடா "என்று சாமர்த்தியமாக அவனை உள்ளே தள்ளி வந்தாள் கவின் அம்மா.

கவின் அண்ணன் "பொறுக்கி  அப்பவே சொன்னாங்க, அந்த பொண்ணு சவகாசம் வேணாம்னு. கேட்டியா" என்று வாசல் தாண்டியவனை எட்டி அடித்தான். அவனுக்கு இன்னும் கலியாணமே ஆகவில்லை. அவன் வயதொத்த  சிலருக்கு நடந்திருந்தது. காதலிலும் நம்பிக்கை இலை என்று இல்லை. அப்படி வாய்ப்பு எதுவும் இதுவரை அமையவில்லை. அவனே "எதுனா போலிஸ் கேஸ் ஆச்சினா என்ன செய்யிறது." என்று மீண்டும் அடிக்க ஓடினான். கவின் அம்மாவும், கூடினவர்களும் தடுத்தார்கள். கவினுக்கு இன்னும் என்ன நடந்தது என்று தெரியாதவனாய் "என்ன ஆச்சி எதுக்கு என்ன அடிக்கிறீங்க" என்றான் சத்தமாக. தடுத்தவர்களை திமிறிக்கொண்டு "பொறுக்கி நீ சினிமாவுக்கு கூட்டிக்கினு போனியே அவ கிருஷ்ணாயில் ஊத்தி கொளுத்திக்கினாடா. சாவாளோ, பொழப்பாளோ தெரிலடா" என்று பனியன் பிடித்து இழுத்தான். கவின் பனியன் கந்தலானது. வாடிவாசல் கட்டவிழ்ந்த காளையை போல் எல்லோரையும் மீறி 'மலர்... மலர்' என்று கத்திக்கொண்டு  வெளியே ஓடினான். பின்னாக ஓடியவர்கள் "டே...டே...  கவின் அவளை ஆஸ்ப்பத்திரிக்கு கூட்டிம்போய் இருக்கிறாங்கடா." என்றார்கள்.  கவினுக்கு அந்த வார்த்தைகள் காற்றில் விழுந்ததுபோல் இருந்திருக்கும், உடனே  'யு' வளைவாக திரும்பி மருத்துவமனைக்கு  செல்லும் வழியாக ஓடினான். பின்னாக வந்தவர்கள் அவனை மடக்கிப்பிடித்தார்கள். "டே...ஒண்ணுமில்லடா லேசான காயந்தான். ரெண்டு நாள் வெச்சிருந்து  அனுப்பிடு வாங்கடா" 

"இல்ல நீங்க பொய் சொல்றீங்க என் மலருக்கு ஏதோ ஆயிடுச்சி.  அவ இல்லனா நான் செத்துடுவேன்." என்று உதைத்துக்கொண்டு அழுது முரண்டு பிடித்தான். கவின் மதிக்கின்ற சிலர் அவனை  சில வார்த்தைகளால் நம்பவைத்தார்கள். பொய்களை பெரியவர்கள் தான் பழக்கப்படுத்துகிறார்கள். "பொட்டச்சி கொழுப்பேறி போனாப்போறா.  ஆம்பள  நீ ஏண்டா இப்பிடி பேய்  அறைஞ்சவன் மாதிரி ஓடுறே. என்றாள் ஒரு கிழவி. கவினை குண்டுக்கட்டாக தூக்கிவந்து வீட்டில் இறக்கினார்கள். கவின் சற்று ஆவேசமாக "உங்க எல்லாருக்கும்  சொல்றேன் அந்த பொண்ணு  எப்பிடி வந்தாலும் அவளதான் கட்டிக்குவேன்.ஏதாவது தகராறு பண்ணிங்க நான் இருக்க மாட்டேன்"

"உன் இஸ்டண்டா எப்பா. இத்தாட நாங்க எதுவு சொல்லமாட்டோம் பொண்ணு வரட்டும் பேசிக்கலாம். நீ மொதல்ல கெளம்பு. ஒருவாரம் உங்க சித்தி வீட்டுக்கு போயி இரு. அவனுங்க நம்பமேல திரும்பிடுவானுங்க. அவ வீட்டுக்கு வந்ததும் மெதுவா பேசி முடிவு பண்ணலாம்."என்று கவினுக்கு முக்கிய நபர் சமாதான சொல்லி அழைத்துச்சென்றார்கள்.

மனிதன் தன் காரியத்திற்கு பிரச்சனை வருகிறதென்றால் சடங்கை  தூக்கி குப்பையில் போடுகிறான். அதையே  மீதி நேரம் தெய்வமாகவும் கடைபிடிக்கிறான். மரித்துவிட்ட மலரை  மூச்சி விடாமல் எரித்துவிட்டார்கள். கவினுக்கு எந்த தகவலும்  கிடைக்காமல் இருக்க கவனமாக பார்த்துக்கொண்டார்கள். கவினால் அங்கு இருக்க முடியவில்லை. எந்தநேரமும் நோட்டமிடுகிறார்கள். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கைலியோடு இருந்தவன் பாத்ரூம்  போய்வருவதாக கிளம்பினவன்    சித்தி வீட்டுக்கு தெரியாமல் வந்துவிட்டான்.

கவின் கிராமத்திற்குள் செல்லும் முன்பாக எதிரில் வந்த பையனிடம் கேட்டான்.அவன் இயல்பாக "அது நேத்தே செத்துப்போச்சி சுடுகாட்டுலதான் கொண்டாந்து எரிச்சிட்டாங்க" என்று சொன்னவன்  சாலையில் சிற்றுந்தை பார்த்ததும் நிறுத்தச்சொல்லி  ஓடினான்.   கவின்  உள்ளுக்குள் கத்திக்கொண்டே கழனிகளின் குறுக்காக இறங்கி சுடுகாடு  நோக்கி ஓடினான்.சுடுகாட்டை சுற்றி காம்பவுண்டு போட்டிருந்தது. அதன் கடைசியில் எரிமேடை  இருந்தது. உள்ளே நுழைந்தான். எங்கே மலர் என்று கண்கள் தேடியது. அங்கு மெல்லிய சாம்பல் புதியதாய் இருந்தது. என் மலர் அதுவாகத்தான் இருக்கும் அதன் பக்கத்தில் காய்ந்து நிறம் மாறாத உதிர்ந்த மாலைகள் சில கிடந்தன. சில கொம்புகள் எரிந்தும் எரியாமலும் கிடந்தது. சுற்றி இருந்த புண்டுகளும், புற்களும் தீக்காயம் பட்டிருந்தது.

"மலர் ஏன் என்னை விட்டு போயிட்டே. சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனே. அய்யோ இந்த சதையும் உடலும்  உனக்குதாண்டானு சொன்னியே. அந்த சதைகளா இப்படி சாம்பலா இருக்கிறது. ராத்திரிவாடா உனக்கு தேவையானதை எல்லாம் தரேன்னு சொன்னியே."என்றவன் சட்டை,கிழித்து  எறிந்தான். கைலியை அவிழ்த்து தூர எறிந்தான். அந்த சாம்பலை அடித்து மலர்... மலர் என்று தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டான். சாம்பல் மீதே படுத்துக்கொண்டான். கத்தினான். கைகளை அடித்தான். சுடுகாடு  கிராமத்தை விட்டு சற்று தள்ளி இருந்ததால் அது  யாருக்கும் கேட்கவில்லை. அவன் அடித்தபோது சாம்பல் சிதறி பறந்தது. மலர் உன் ஈரம் படிந்த உடலை எனக்கு இப்படி சாம்பலாக்கி கொண்டாயே" என்று தன் இடுப்புப் பகுதியை ஓணான் தலையைப்போல் தூக்கி... தூக்கி அழுத்தினான். அவன் கைக்கு சிறு எலும்புத்துண்டுகள்  கிடைத்தது.  உட்கார்ந்து  எடுத்து கடித்து மென்றான். சற்று நேரத்தில் தின்றுவிட்டான் இன்னும் ஏதேனும் கிடக்கிறதா என்று தேடினான். இன்னொரு சில துண்டுகள் கிடைத்தது. அதையும் தின்றான். ஒரு கை சாம்பல் அள்ளித்தின்றான். மீண்டும் அதன் மீது படுத்து இப்படியும் அப்படியும் புரண்டான். கைலியை கிழித்து    கூடாரத்துக்குள் முடிந்து  தொங்கிவிட்டான். அவன் உடல் முழுவதும்  மலரின் சாம்பல் வெள்ளை உள்ளாடையாக பூத்திருந்தது.  கவின் ஜட்டியின் நடுப்பகுதி மட்டும்  ஈரமாய்  இருந்தது.                                   

           



Saturday, February 12, 2011

நன்றி. ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=12209



--
Sent via http://www.addtoany.com

அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு வெ.நாராயணன்  கடிதம் படித்து மகிழ்ந்தேன். நான் சில நாட்களாக மிகவும் யோசித்தேன். இலக்கியத்தில் இன்றைய கட்டத்தில் ஆளுமைகளாய் இருப்பவர்கள் கடந்த காலத்தில் மதிப்புக்குரிய வெ.நாராயணன் நடத்திய கூட்டங்களுக்கு வந்தவர்கள்தான்  என்கிறார்களே. அவர்களுடைய வலைதளங்களில் இதுவரை நான் பார்த்த அளவில் யாருமே எழுதவில்லையே. ஏன் இப்படி மறந்துவிடுகிறார்கள். என்று வருத்தப்பட்டதுண்டு. தன் வாழ்வுநிலையை தனக்காக மட்டும் கடக்காதவன் மறைந்து போவதில்லை. என்பதை நீங்கள் மீண்டும் நிருபித்து உள்ளீர்கள்.காஞ்சிபுரத்தின் இலக்கிய நண்பர்கள் சார்பாக நன்றி. 

     

Tuesday, February 8, 2011

கவிதை

என் மனைவி அடிமையாக்குகிறாள்

ஒருமுறைக்கூட
அவளாக அழைக்கவேமாட்டாள்
தானாக இழுப்பாள் 
கதவுகளைத்திறந்து
ரகசியங்களை செலுத்தவேண்டும்.

எத்தனை திறமைசாளி 
அவள் வெளிப்படித்தும் விஷயங்கள் 
உலகத்தில் யாராலும் செய்யவேமுடியாது.

அவள் மேடு பள்ளங்களைக் கடந்தும் 
தன் மேனியில் 
வளரும் தன்மை கொண்ட 
அத்தனையும் அழகுதான்.

கற்பனைகெட்டாத 
அர்த்தங்கள் அவளிடத்தில் இருக்கிறது.       

மூர்க்கமுடன் தொடும்போது 
அவளைவிட அசிங்கம் பிடித்தவள்  
இருக்கவேமுடியாது.

உறவுகளின்  
உணர்வுக்கேற்றபடி நடந்துகொள்கிறாள்.

தன்னிடம் 
இருக்கும் நேரம் தவிர்த்து 
எஞ்சிய நேரத்தையும்  வேற்றாளிடம் 
விடமனசு வருவதேயில்லை.
 
அவள் உடலில் பாயும்
சிறிய உபாதையை 
தாங்கவே மாட்டாள் 
செத்தவள் போல்  கிடப்பாள். 

நானாக விரும்பி மணந்ததால்
பிரியமுடியவில்லை 
இத்தனை ஆளுமைகொண்டவளிடம் 
என் ஆண் ஆளுமை 
எடுபடவேயில்லை.

அதற்காக எப்போதும் 
எச்சரிக்கையாகவே இருக்கிறேன்  
எனக்கான அவமானங்களை  இழக்காமல்
நான் மனைவியாகக்கருதும் 
'இன்டர்நெட்'டுடன்.
 



Thursday, February 3, 2011

பாடல்

த.மு.எ.க.ச காஞ்சி மாவட்ட சுற்றறிக்கைக்காக எழுதப்பட்டது 
.

வேட்டையாடுமுன்  கூட்டம் கூடிடும்
காட்டு ஓநாய்கள் ஊலையிடுகின்றதே

புல்லை சமைக்கும் நிலங்கள்
தீப்பற்றி எரிகிறதே
புள்ளயை சுமக்கும் தலையில்
தினம் செங்கல் விடிகிறதே --வேட்டை

பூமி இழுக்கா தூரத்தில்
பொருள் விலை பறக்கிறதே
சாமியை காட்டும் தரிசனமாய்
தினம் திட்டங்கள் பிறக்கிறதே--வேட்டை

கறைகள் படிந்த கரங்கள்
கறுப்பு பணம் மீட்குமோ
கரைந்து அழுது தேவைக்கேட்டால்
கைநீட்டி ஒழுகுமோ--வேட்டை

நம்புழுதி