கலவி
"மலர் உன் விழிகளில் ஒரு சொட்டு கண்ணீர் வழிகின்ற நாளில் என் உயிர் பிரிந்திருக்கும். அதை மட்டும் மனதில் வைத்துக்கொள். கவின் இந்த வார்த்தைகளை சொன்னபோது அவன் தோளில் சாய்ந்தாள். அவளின் புத்தகப்பை சற்று தள்ளி இருந்தது.
காட்டு வேலமரங்களைக் கொண்ட பெரிய ஏரி காய்ந்து கிடந்தது. செங்கல்பட்டிலிருந்து அரக்கோணம் மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாய் அமைப்பதற்கு வேலைகள் தொடங்கியது. அதன் வழிகளில் இருக்கும் ஏரிகளில் எல்லாம் ஒரு ஒழுங்கு இல்லாமல் எங்கு வசதியோ அங்கே மண்ணை வாரிக்கொண்டார்கள். பயிருக்கு பாசன வசதிதரும் மதகு எங்கோ மேடாய் கிடந்தது. ஏரிக்குள் ஏரியாக காலம் கடந்து பெய்த மழையின் தண்ணீர் பயனற்று நடுவில் தேங்கியிருந்தது. நாணல் வகையைச்சார்ந்த புற்கள் திட்டுத்திட்டாக உயர்ந்து வளர்ந்திருந்தது. அது பூத்தப்பூ கரும்பு பூவின் சாயலில் இருந்தது. அந்த தண்ணீரை தொட்டு கிழக்கிலிருந்து கிளம்பியக்காற்று மேற்கை நோக்கி ஓயாத பயணத்திலிருந்தது. அந்த சிறிய நீர்நிலை பார்வைக்கு அழகாய்யும், ஆய்வுக்குரியதாகவும் இருந்தது. ஆக காற்றும் கடலும் எண்ணிலங்கா லேகியோனின் உள்ளடக்கமா? மலர், கவின் இருவரும் நீர் நிலையில் கால்களை தொங்கவிட்டு உட்கார்ந்திருந்தனர்.
அவளது வலது கை அவன் கழுத்தை சுற்றி இருந்தது பார்வை அலைகளையே பார்த்தது. எந்த அலை முதலில் தோன்றியது எது கடைசிவரை வந்து கரை சேர்கிறது என்று கண்கொட்டாமல் பார்த்தாள். "அலைகள் சுருள் கதவு மாதிரி வருது இல்ல." என்றவள் ''கவின் உண்மைய சொல்லணும் எனக்கு முன்னால வேற ஒரு பொண்ணு உன்னோடு பழகும் சந்தர்ப்பம் கெடச்சிருந்தா அந்த பொண்ணத்தான் காதலிச்சிருப்பே இல்ல'' யார் யாருக்கு என்கிற வார்த்தை பழசானாலும் இப்பவும் பழமையில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதுதான் முதல் நம்பிக்கைகுரிய வார்த்தை. அவன் அவளின் தாடையைபிடித்து உற்றுப்பார்த்தான். அப்படி பார்ப்பது இல்லை என்பதற்கும், ஆம் என்பதற்கும் பொதுவானது என்பதை இலக்கியவாதியாய் இருந்தால் கண்டுபிடித்து விடுவான். "மலர் குட்டிப்போட்ட பூனைமாதிரி என்னையே சுற்றும் மாமம் பொண்ணு இருந்தும் உன்னைத்தான் நொடி முல்லா சுத்தினேன். என் ஆரம்பமும் முடிவும் நீதான் மலர்." என்று சொன்னதின் மூலம் அவர்கள் உறவை மேலும் உறுதி செய்துக்கொண்டான்.
காதலிலும், குடும்பத்திலும் வார்த்தைகள் பகிர்தல் குறைவேக்கூடாது. கவின் வாத்தைகளால் மலைரை இறுக்கினான். அவளின் கை அவனை இறுக்கியது. நல்ல சந்தர்ப்பம் அவன் அவளின் திரட்ச்சிகளை தொட முற்பட்டான். அவள் செல்லமாக கைமீது போட்டு, தமிழ் மூதாதையர்களின் நம்பிக்கைக்கு உரியவளானாள். இது எல்லாமே உனக்குத்தாண்டா அதற்கு நேரம் வரும்போது ஒரு ஆரஞ்சி பழத்தோலாக உரித்துக்கொள் இப்போது வேண்டாம்" என்றாள். அவன் எமார்ந்தவனாக அவள் கையை விலக்கினான். சற்று முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டான்.
ஜி மெயில் திருப்பிவிடுகிறதுபோல அவள் ஒன்றுதலின் முகத்தில் தண்ணீர் தெளிப்பதுபோல் உணர்ந்தாள். "சரி போலாம்பா நேரமாச்சி கூட வந்த பசங்க வீட்டுக்கு போய சேர்ந்துட்டு இருப்பாங்க. நாளைக்கு பார்க்கலாம்" என்று எழுந்து பையை எடுத்தாள். அவன் மண் கட்டிகளை எடுத்து நீரில் எறிந்தான். அவன் போட்ட கல்லுக்கு நாணல் புற்களில் சிக்கிய நீர்பாசி ஒன்று சிதறியது. தொடர் அலைகள் ஓரத்தின் மணலை துல்லியமாக சலித்தது. அவன் முச்சிவிட்டு எழுந்தான். தன் விருப்பு நிறைவேறாமல் போனாலும் அவள் சொன்ன வார்த்தை ஆறுதலாய் இருந்தது.
இருவரும் கிளம்பினார்கள். மலர் ஆடைகளை சரி செய்துக்கொண்டாள். கையில் இருந்த கர்சிப் கீழே விழுந்து பறந்தது. மலர் சற்று வேகமாக சென்று பிடித்தாள். சாலையில் பேருந்து சென்றது. அது எக்ஸ்பிரஸ் என்பதால் தங்கள் பகுதியை சார்ந்தவர்கள் செல்ல வாய்ப்பில்லை. இருவரும் தைரியமாக சாலையை நோக்கி நடந்தார்கள்.
"கவின் நாளைக்கு ஹால்டிக்கட் வாங்க போகணும் நீயும் வரியா" என்றாள். அவன் முகத்தில் படிந்திருக்கும் கோபம் மறைந்ததா என்று பார்த்தாள். இழந்த வாய்ப்பு எப்படியும் கைகூடும் என்று மனதில் ஆசையை பதுக்கினான். ''மலர் நான் +2 படிச்சதிலிருந்தே எவ்வளவு நேசித்தேன். பெயிலானப்போ எங்கப்பா, நீதான் அந்த பொண்ணாக்கூடவே சுத்திறியே நீ எங்க பாஸ்பண்ணப்போற.அவளாக்கூட சுத்துறதாயிருந்தா நீ மறுபடியும் பரிச்சை எழுத தேவையில்ல. எதாவது வேலைக்குபோனு சொல்லிட்டாரு. நானும் வேலைக்கு போகுறேன். அப்படிப்பட்ட என்னப்போயி சந்தேகப்படுறியே. சின்ன ஆசைய மறுக்கிறியே. அவளிடம் இரக்கமான வார்த்தையை வீசினான். A.B.C.D. வைட்டமின் கலந்த நிலாச்சோறு போல் ஏதோ அவளுக்குள் இதயம் மட்டுமல்ல, ரத்த நாளங்கள் எல்லாம் பாய்ந்தது.
"டே நீ ஆம்பள சொல்லிட்டே என்னால சொல்ல முடியலடா." அவள் படக்கென்று மார்பை விலக்கினாள். முதலில் காதலிக்க தொடங்குகிறவன் பெண்ணின் காலையும் கைகளையும் முழுசாக பார்க்கவேண்டும். அதன் பிறகும் ஈர்ப்பு தொடர்ந்தால் நல்லதுதான். "இது பார்வைக்கு மாறுபடும் வெறும் சதைடா. பயன்பாடு வரும்போது மட்டும் தான் நிரம்பிய ஐஸ்கிரிமா நெனைக்கணும். மற்ற நேரம் என் கையை பிடித்து ஒரு அலோ சொல்லுவது போலதான் அதுவும்." இதை சொலும்போது சாலையில் டுவீலர் வந்தது. இருவரும் ஒதுங்கி நடந்தார்கள். இதுக்குத்தான் உனக்கு கோபமா. வா நாளைக்கு ஹால்டிக்கட் வாங்கினு அப்படியே சினிமாவுக்கு போகலாம். அங்க நீ என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ. ஆனா ஏமாத்தி விட்டுட்ட, நான் உயிரோடு இருக்கமாட்டேன். இருவரும் மாறி மாறி சபதம் செய்துக்கொண்டார்கள். சாட்சி இல்லாதபோது சபதங்கள் வெகு சாதாரனமாகதான் புழக்கமாகிறது. நாணல் புற்களும் மனித உரு எடுக்காமல் இருந்ததற்கு ஏகசந்தோசத்தில் சிரித்து தலையசைத்தது. ஊரின் எல்லை நெருங்கியதும் கவின் பின் தங்கினான். மலர் நடை வேகமானது.
பால்கனி டிக்கட்தான் வாங்கினான் கிராமங்களைகடந்து நகரத்திற்கு வரும் நபர்கள் அதிகம்தான். அதனால் எச்சரிக்கையாக இருக்க நினைத்தான். இருவரும் கண் நோவு வந்தவர்கள் போல் யாரையும் துணிந்து பார்க்க அச்சப்பட்டார்கள். இன்னும் தியேட்டரில் அனுமதிக்கவில்லை. கவின் வெளியில் நொறுக்குத்தீனி வாங்கிவர போனான். பகலிலும் இருளைப்பிரியாத இடங்கள் இருக்கத்தான் செய்கிறது. மலர் சற்று அச்சத்துடன்தான் ஒதுங்கி நின்றாள். கவின் வந்தான்.கதவு திறக்கப்பட்டது. வேகமாக உள்ளேபோனார்கள். தியேட்டரின் உச்சியில் c.l.f பலப் மெல்லிய வெளிச்சத்தை உமிழ்ந்திருந்தது. இவர்கள் பார்வை மற்றவர்மீது இருக்கவேண்டும். அடுத்தவர் பார்வை இவர்கள்மீது படவே கூடாத இடத்தை தேடிபிடித்தார்கள்.
மலருக்கு இந்த இடம் பிடிக்கவில்லை இருந்தாலும் உட்கார்ந்திருந்தாள்.தன்னை இன்று ஏதோ செய்யப்போகிறான் என்ற பயமிருந்தது. அவன் கைநிறைய தின்பண்டம் வைத்திருந்தான். சற்று உள்வாங்கியது போன்று வெண் திரை இருந்தது. தியேட்டர்கள் பெரும்பாலும் இருக்கை நிறைவது கடினம்தான். விழுந்து, துரத்தி, ஆளைவெட்டி காதலிப்பதென்றால் ஆண், பெண், கிழங்கள், வாலிபர்கள் என்று சற்று நிரம்புகிறது. தமிழ்நாடு நல்ல விஷயம் சொல்லுகிறவர்களை சீக்கிரம் மூட்டைகட்டி வீட்டுக்கு அனுப்பிவிடுகிறது. இவர்கள் பாதுகாப்பான இருக்கையில் அமர்ந்தார்கள். இருக்கையின் கீழே செவனப் பாட்டில் கிடந்தது. சோளப்போரிகள் சிதறிக்கிடந்தது. எச்சில் தொட்டியை தவிர மற்ற இடங்களை சுற்றி சிவந்த நிறத்தில் துப்பிவைத்திருந்தார்கள். வியாபார நோக்குகொண்ட சினிமா நாட்டின் வளர்ச்சிக்கு பத்து விழுக்காடு பயன்பட்டதென்றால், முப்பது விழுக்காடு எளியோரின் வாழ்வாதாரத்தை, கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டியது.
டிஜிட்டல் சத்தம் திரையில் வந்தது. கவின் சற்று குரலுயர்த்தி பேசவேண்டியிருந்தது. அவனுக்கு படத்தின் காட்சிகள் வெறுமையாய் இருந்தது. தங்களை யாராவது பார்க்கிறார்களா என்பதை உறுதி செய்தான். பார்த்தாலும் இந்த இருளில் ஒன்றும் தெரியப் போவதில்லை. மலர்தான் கடைசி இருக்கை அவன் வசதிக்கு மாறாக வலதுகையில் தின்பண்டம் வைத்திருந்தான். அடிக்கடி அவளிடம் நீட்டினான். இடது கை அவள் தொடைப்பகுதியை நெருங்கியது. அவள் வலதுகையால் அவன் கையை அழுத்தினாள். அவன் உருவி மீண்டும் சற்று உள்நோக்கியே பயணித்தன. இருவரின் வாயும் அசைப்போட்டிருந்தது. திரையில் ஆவேசம் பொங்கும் காட்சிகள் காதை பிளந்தது.
இவர்களுக்கு பதட்டமான நிலையில் மெய்மறந்தார்கள். அவள் இரண்டு முறை தடுத்தாள். பிறகு அதில் ஆழ்ந்துவிட்டாள். அவன் வசதியாக கால்மீது கால் போட்டுக்கொண்டான். அவளும் இயல்பாக அவனை தொட்டுக்கொண்டாள். முதல் உறவுகளில் முழுமையான இடுபாடு கொண்டவர்கள் குறைவுதான். எவனோ ஒருவன் சிகரட் பிடித்ததால் தியேட்டர் ஊழியன் முகத்தில் வெளிச்சம் அடித்து எழுபினான்.சிகரட் பிடித்தவன் இவர்கள் வழியாக வந்தான். இருவரும் ஒழுங்கை கடைபிடிக்க நேர்ந்தது. எவ்வளவு எடஞ்சல் பண்ராங்கையா என வடிவேல் மாதிரி சொல்லிக்கொண்டான். ஒருமுறை கிடைக்கு சந்தர்ப்பம் மீண்டும் கிடைப்பது சந்தேகம்தான். கவின் மீண்டும் தேடல்களில் ஈடுபட்டான். அவள் அந்தரங்கம் ஈரம் கசிந்திருந்தது.
தன்னோடு ஒத்து வருகிறாள் என்பதில் இவனுக்கு சந்தோசம். மேலும் கிளர்ச்சியை தொடங்கும் போது. இடைவெளி ஆரம்பமானது. தியேட்டர் காரன் ஏனோ அவசரமில்லாமல் தான் உச்சந்தலைக்கு மேல் எரியும் லைட்டை போடுகிறான். மலர் சற்று ஏளனமாக சிரித்தாள். "என்னோடு ஒன்றினாய் என்று உன்னில் வழிந்த திரவம் சொல்லுகிறது. நிமிடங்கள் கடந்து அதிலிருந்து விலகியதும், நான் மட்டுமே ஏமார்ந்து விட்டக்தாக்ச சிரிக்கிறாயே. அதில் உனக்கு பாதிப்பு இல்லையா?" என மலரிடம் நேரடியாகவே கேட்டான். அவள் சி என்று முகம் சுளித்தாள். மீண்டும் தொடங்கியது. "கவின் நம்மை யாரோ கவனிப்பதாக பயமாக இருக்கிறது. படத்தை பார். நாளைக்கு மாலை எங்க சித்தப்பா வீட்டு பக்கத்தில ஒதுக்குப்புறமா இருக்குதே குடிசை, அங்க வந்துடு உனக்கு தேவையானது முழுமையா தரேன்." என்றாள் மலர். கவின் மனம் தாளாது துள்ளியது.
ஒவ்வொரு வீட்டிலும் அப்பாக்கள் மத்தியில் பிள்ளைகளை நடத்திச்செல்ல, அம்மாக்கள் பொருளை தராசு தட்டில் நிருக்கும் வியாபாரியாகத்தான் இருக்கிறார்கள். மலர் வருவதை அவள் அம்மா பார்த்தாள். அவளை வீட்டில் நுழையவிடாமல் பின் பக்கமாக இழுத்துச்சென்றாள். அவளிடம் ஏதாவது பூவோ, பொருளோ புதிதாக இருக்கிறதா பார்த்தாள். இன்னும் வாடாமல் இருந்த பூவை எடுத்து வீசினாள். பின்பக்கம் பாத்திரம் தேய்க்க வைத்திருந்த தண்ணீர் குடத்தை தூக்கி இடுப்பில் வைத்து "போ... போடி" என்று வீட்டில் போகச்சொன்னாள். மலருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவள் அம்மா சற்று பின்தங்கி வந்தாள்.பாத்திரம் கழுவ வைத்திருக்கும் தண்ணீரை அம்மா ஏன் வீட்டிற்குள் தூக்கிச் செல்ல சொல்கிறாள். குழம்பிக்கொண்டு வாசலை தாண்டிச் சென்றாள்.
சேரில் உட்கார்ந்திருந்த மலரின் அப்பா ஆவேசமாக வந்து "வாடி ஓடுகாலிநாயே "என்று தலைமயிரைய் பிடித்து இழுத்து உதைத்தான். மலர் எதிர்ப்பார்க்கவில்லை. இடுப்பில் இருந்தகுடம் நழுவி மூலையில் இருந்த டீ வி டேபிள் கால்கள் மீது விழுந்தது. டேபிள் சாய்ந்து கூடவே டீ வியும் விழுந்து உடைந்தது. ஒன்றை ஒன்று எதிர் எதிர்ப்புறமாய் பார்த்திருந்த பொம்மைக்குருவி தலைகீழாய் விழுந்தது. அவனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. "உன்ன இன்னையோட வெச்சி கொளித்திர்ரேண்டி தேவிடியா இதுக்குள்ள ஊரல் எடுத்துக்கிச்சா. அந்தபிச்சக்கார பையனோட போகாதே போகாதேன்னு சொன்னா, திருட்டுத்தனமா சினிமாவுக்கு போகிறியா" என்று பிடி உருவிக்கொண்ட தலை மயிரை இன்னும் இறுக்கமாக சேர்த்துப் பிடித்து எட்டி உதைத்தான்.
அவன் மனைவி "ஐயோ என் சாமி.. கொண்ணுடாதையா" என்று கதறினாள். உன்னைத்தாண்டி ஒதைக்கனும் பொண்ணா வளத்துக்கிற" என்று கோபம் இவள் பக்கம் திரும்பியது. கொட்டிய தண்ணீர் வீடுமுழ்வதும் பரவியது. மலர் கையிக்கும் கயிறுக்கும் உள்ள இணைப்பின் பொம்மலாட்ட பொம்மையாக திண்டாடினாள். ஒருகட்டத்தில் தள்ளு முள்ளுக்கிடையில் ஆட்பட்ட போதும் மலரின் முடியை விடாது இருந்ததால். அவன் தடுமாற்றத்துக்கு எல்லாம் மலர் சுழன்றாள். அப்போது நிலை தடுமாறி இரண்டு கால்களையும் விரிய தூக்கிவிட்டாள். விலக்க வந்தவர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் எல்லோர் கண்ணிலும் பட்டது. ஒரு பத்தாண்டு முந்தைய கிராம பெண்களாய் இருந்தால் நிச்சயம் கருமை படர்ந்த இடம் வெளிப்பட்டு இருக்கும். மலர் நீல நிற உள்ளாடை அணிந்திருந்தாள். பெண்களுக்கு அது பலவகையில் வசதியானதுதான். ரொம்ப காலமாய் புழக்கத்திலிருந்த ஏளனம் செய்யும் பழமொழியை உடைக்கவும் அது பயனுள்ளதாய் இருக்கிறது. அவள் அம்மா ஓடிவந்து "அடப்பாவி விடுய்யா...விடுய்யா" என்று கத்தி அவசர அவசரமாக மலரின் விலகிய ஆடையை சரிசெய்தாள். மலரின் அப்பா "உண்மையிலே ரோசம் உள்ளவளாய் இருந்தால் பொழுது விடியிறதுக்குள்ள நீ பொணமா இருக்கணும்." அதன் பிறகு ஒருவார்த்தை பேசவில்லை. மலரின் தலைமயிரை விட்டுவிட்டான்.
பாத்ரூம் வென்டிலேட்டர் வழியாக வெளியே வானத்தைப்பார்த்தாள். நீல நிறத்தில் திட்டுத்திட்டான மேகங்கள் அழுக்கு நுரையாய் கடந்தது. நடு இரவில் மலரின் அலறல் சத்தம் கேட்டது. எழுந்தவர்கள் குரல் வரும் திசை தேடினார்கள். ஆக்ரோஷமாக பாத்ரூமில் தீ அலைந்து எரிவது தெரிந்தது. பார்த்தவர்கள் ஐயோ.. ஐயோ என்று கத்திக்கொண்டு எதை எடுப்பது, எப்படித்திறப்பது என்று திண்டாடினார்கள். ஒருவன் ஓடிவந்து கதவை உடைத்தான்.மலர் கரிக்கட்டையாக விழுந்தாள். பாத்தரும் மூலையில் வாலியில் நிறைந்திருந்த தண்ணீர் கொஞ்சமும் குறையாமல் இருந்தது. பத்து லிட்டர் கேனில் நிறம்பியிருந்த மண்ணெண்ணெய் மொத்தமும் காலியாகியிருந்தது. காலியான கேன் எரிந்துகொண்டிருந்தது. மருத்துவமனைக்கு துக்கிச்சென்றார்கள்.
இரவு தன் மெளனத்தை இழந்து கொண்டிருந்தது. பியூட்டிபாரில் இருந்த அதிகாலை, வெளியே காலெடுத்து வைத்தது.கொஞ்சமும் கரிசனையில்லாத இயற்கைகள்தான். எந்த துக்கத்துகாகவும் தன் நிலையை நிறுத்தவோ, மாற்றிக்கொள்ள மறுக்குறது. மனிதன் அதனிடம் இருந்துதான் கண்டுகொள்ளாமையை கண்டுபிடிது கடைபிடிக்கிறானா? அப்பகுதி மனிதர்களுக்கு அழுகுரலும் அதிர்ச்சியுமாகவே விடிந்தது. கவின் தன் வாலிபத்தை செயல் படுத்தி பார்ப்பதற்கான கனவுலகில் இரவு முழுவதும் திளைத்திருந்தான். மலர் சினிமா தியேட்டரில் கொடுத்த வாக்குறிதியை அடிக்கடி நினைத்துப்பார்த்தான். நான் அழகு நிறைந்தவன், அறிவாளி அதனால்தான் மலர் என் பேச்சை மதிக்கிறாள், காதலிக்கிறாள். இந்த நாளில் நிறைவேறப் போகின்றதை மறக்கவே முடியாது. என்றெல்லாம் அவன் மனசு அங்கலாய்த்தது.
கவின் குடும்பத்தார் முன் கூட்டியே செய்தியை அறிந்து கவினிடம் பேசி எப்படியாவது பக்கத்தூரில் இருக்கும் சித்தி வீட்டிற்கு கொண்டுபோய் விட்டு பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவின் அம்மா அவனிடம் பேசினாள். "அம்மா, இன்னா அந்தபக்கம் அழற சத்தம் கேட்குது" என்றான். மலரின் மீது வெறுப்பு எண்ணத்தை பதியவைக்க அவனிடத்தில் "இம் கொழுப்பு ஏறுனா அப்படித்தான் பண்ணிக்குவாங்க. நீ உள்ள போடா அவுங்க அப்பன் எதுனா சொல்லியிருப்பான்." அவள் மறுபடியும் "நீ உள்ள போடா "என்று சாமர்த்தியமாக அவனை உள்ளே தள்ளி வந்தாள் கவின் அம்மா.
கவின் அண்ணன் "பொறுக்கி அப்பவே சொன்னாங்க, அந்த பொண்ணு சவகாசம் வேணாம்னு. கேட்டியா" என்று வாசல் தாண்டியவனை எட்டி அடித்தான். அவனுக்கு இன்னும் கலியாணமே ஆகவில்லை. அவன் வயதொத்த சிலருக்கு நடந்திருந்தது. காதலிலும் நம்பிக்கை இலை என்று இல்லை. அப்படி வாய்ப்பு எதுவும் இதுவரை அமையவில்லை. அவனே "எதுனா போலிஸ் கேஸ் ஆச்சினா என்ன செய்யிறது." என்று மீண்டும் அடிக்க ஓடினான். கவின் அம்மாவும், கூடினவர்களும் தடுத்தார்கள். கவினுக்கு இன்னும் என்ன நடந்தது என்று தெரியாதவனாய் "என்ன ஆச்சி எதுக்கு என்ன அடிக்கிறீங்க" என்றான் சத்தமாக. தடுத்தவர்களை திமிறிக்கொண்டு "பொறுக்கி நீ சினிமாவுக்கு கூட்டிக்கினு போனியே அவ கிருஷ்ணாயில் ஊத்தி கொளுத்திக்கினாடா. சாவாளோ, பொழப்பாளோ தெரிலடா" என்று பனியன் பிடித்து இழுத்தான். கவின் பனியன் கந்தலானது. வாடிவாசல் கட்டவிழ்ந்த காளையை போல் எல்லோரையும் மீறி 'மலர்... மலர்' என்று கத்திக்கொண்டு வெளியே ஓடினான். பின்னாக ஓடியவர்கள் "டே...டே... கவின் அவளை ஆஸ்ப்பத்திரிக்கு கூட்டிம்போய் இருக்கிறாங்கடா." என்றார்கள். கவினுக்கு அந்த வார்த்தைகள் காற்றில் விழுந்ததுபோல் இருந்திருக்கும், உடனே 'யு' வளைவாக திரும்பி மருத்துவமனைக்கு செல்லும் வழியாக ஓடினான். பின்னாக வந்தவர்கள் அவனை மடக்கிப்பிடித்தார்கள். "டே...ஒண்ணுமில்லடா லேசான காயந்தான். ரெண்டு நாள் வெச்சிருந்து அனுப்பிடு வாங்கடா"
"இல்ல நீங்க பொய் சொல்றீங்க என் மலருக்கு ஏதோ ஆயிடுச்சி. அவ இல்லனா நான் செத்துடுவேன்." என்று உதைத்துக்கொண்டு அழுது முரண்டு பிடித்தான். கவின் மதிக்கின்ற சிலர் அவனை சில வார்த்தைகளால் நம்பவைத்தார்கள். பொய்களை பெரியவர்கள் தான் பழக்கப்படுத்துகிறார்கள். "பொட்டச்சி கொழுப்பேறி போனாப்போறா. ஆம்பள நீ ஏண்டா இப்பிடி பேய் அறைஞ்சவன் மாதிரி ஓடுறே. என்றாள் ஒரு கிழவி. கவினை குண்டுக்கட்டாக தூக்கிவந்து வீட்டில் இறக்கினார்கள். கவின் சற்று ஆவேசமாக "உங்க எல்லாருக்கும் சொல்றேன் அந்த பொண்ணு எப்பிடி வந்தாலும் அவளதான் கட்டிக்குவேன்.ஏதாவது தகராறு பண்ணிங்க நான் இருக்க மாட்டேன்"
"உன் இஸ்டண்டா எப்பா. இத்தாட நாங்க எதுவு சொல்லமாட்டோம் பொண்ணு வரட்டும் பேசிக்கலாம். நீ மொதல்ல கெளம்பு. ஒருவாரம் உங்க சித்தி வீட்டுக்கு போயி இரு. அவனுங்க நம்பமேல திரும்பிடுவானுங்க. அவ வீட்டுக்கு வந்ததும் மெதுவா பேசி முடிவு பண்ணலாம்."என்று கவினுக்கு முக்கிய நபர் சமாதான சொல்லி அழைத்துச்சென்றார்கள்.
மனிதன் தன் காரியத்திற்கு பிரச்சனை வருகிறதென்றால் சடங்கை தூக்கி குப்பையில் போடுகிறான். அதையே மீதி நேரம் தெய்வமாகவும் கடைபிடிக்கிறான். மரித்துவிட்ட மலரை மூச்சி விடாமல் எரித்துவிட்டார்கள். கவினுக்கு எந்த தகவலும் கிடைக்காமல் இருக்க கவனமாக பார்த்துக்கொண்டார்கள். கவினால் அங்கு இருக்க முடியவில்லை. எந்தநேரமும் நோட்டமிடுகிறார்கள். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கைலியோடு இருந்தவன் பாத்ரூம் போய்வருவதாக கிளம்பினவன் சித்தி வீட்டுக்கு தெரியாமல் வந்துவிட்டான்.
கவின் கிராமத்திற்குள் செல்லும் முன்பாக எதிரில் வந்த பையனிடம் கேட்டான்.அவன் இயல்பாக "அது நேத்தே செத்துப்போச்சி சுடுகாட்டுலதான் கொண்டாந்து எரிச்சிட்டாங்க" என்று சொன்னவன் சாலையில் சிற்றுந்தை பார்த்ததும் நிறுத்தச்சொல்லி ஓடினான். கவின் உள்ளுக்குள் கத்திக்கொண்டே கழனிகளின் குறுக்காக இறங்கி சுடுகாடு நோக்கி ஓடினான்.சுடுகாட்டை சுற்றி காம்பவுண்டு போட்டிருந்தது. அதன் கடைசியில் எரிமேடை இருந்தது. உள்ளே நுழைந்தான். எங்கே மலர் என்று கண்கள் தேடியது. அங்கு மெல்லிய சாம்பல் புதியதாய் இருந்தது. என் மலர் அதுவாகத்தான் இருக்கும் அதன் பக்கத்தில் காய்ந்து நிறம் மாறாத உதிர்ந்த மாலைகள் சில கிடந்தன. சில கொம்புகள் எரிந்தும் எரியாமலும் கிடந்தது. சுற்றி இருந்த புண்டுகளும், புற்களும் தீக்காயம் பட்டிருந்தது.
"மலர் ஏன் என்னை விட்டு போயிட்டே. சொல்லியிருந்தா நானும் வந்திருப்பேனே. அய்யோ இந்த சதையும் உடலும் உனக்குதாண்டானு சொன்னியே. அந்த சதைகளா இப்படி சாம்பலா இருக்கிறது. ராத்திரிவாடா உனக்கு தேவையானதை எல்லாம் தரேன்னு சொன்னியே."என்றவன் சட்டை,கிழித்து எறிந்தான். கைலியை அவிழ்த்து தூர எறிந்தான். அந்த சாம்பலை அடித்து மலர்... மலர் என்று தன் உடல் முழுவதும் பூசிக்கொண்டான். சாம்பல் மீதே படுத்துக்கொண்டான். கத்தினான். கைகளை அடித்தான். சுடுகாடு கிராமத்தை விட்டு சற்று தள்ளி இருந்ததால் அது யாருக்கும் கேட்கவில்லை. அவன் அடித்தபோது சாம்பல் சிதறி பறந்தது. மலர் உன் ஈரம் படிந்த உடலை எனக்கு இப்படி சாம்பலாக்கி கொண்டாயே" என்று தன் இடுப்புப் பகுதியை ஓணான் தலையைப்போல் தூக்கி... தூக்கி அழுத்தினான். அவன் கைக்கு சிறு எலும்புத்துண்டுகள் கிடைத்தது. உட்கார்ந்து எடுத்து கடித்து மென்றான். சற்று நேரத்தில் தின்றுவிட்டான் இன்னும் ஏதேனும் கிடக்கிறதா என்று தேடினான். இன்னொரு சில துண்டுகள் கிடைத்தது. அதையும் தின்றான். ஒரு கை சாம்பல் அள்ளித்தின்றான். மீண்டும் அதன் மீது படுத்து இப்படியும் அப்படியும் புரண்டான். கைலியை கிழித்து கூடாரத்துக்குள் முடிந்து தொங்கிவிட்டான். அவன் உடல் முழுவதும் மலரின் சாம்பல் வெள்ளை உள்ளாடையாக பூத்திருந்தது. கவின் ஜட்டியின் நடுப்பகுதி மட்டும் ஈரமாய் இருந்தது.
No comments:
Post a Comment