'ட்விட்டரை' பயனுள்ளதாய் செய்து பார்க்கவே
நிர்பந்தங்கள் பிணைக்கப்பட்ட உறவில் நியாயமான உண்மை கடைபிடித்தல்.
வெள்ளிக்கனிமம் இலையில் பூத்த மலைகளின் மரங்கள்போல், சொர்கம்தான்.
வண்ணங்கள் கோர்த்த பூக்கள், சாலரங்களில் மாலையாய் தொங்கும். தேனிருந்த அதன் துவாரங்களைத்தேடி வருவதில்லை. செத்த பூக்களிடம் மிச்சம் கண்ட ஈக்கள்.
கடைபிடித்தல்,சுமத்தல், ஏற்றுக்கொள்ளுதல் இவைகளைக்கடந்து யாரும் யாருடனும் அறிமுகப்படுத்தி ஒன்றிக்கொள்ளும் ட்விட்டரின் கட்டமைப்பாக,சமூகம்ஏன்?
வசீகரப்படுத்தும் காலையில் பூக்கும் பூக்களின்அழகு. எதுவரை அதன் நிலைப்புத்தன்மை, ருசிக்கவேண்டும் அழகை, வாழ்க்கையின் இருப்பை, இல்லாமையை.
எரிந்த குப்பையின் புகைகூட வானம் ஏறுகிறது. அடங்கா பசியுடனே அசைவற்று பிணமான என் உடலில் இருந்து பிரிந்த உயிரைத் தவிர.
மேசையின் ட்ராயரை தன் வயிறுமுட்ட லேசாக திறந்து வைக்கிறார். வயிறு வலித்துவருபவன் சுதந்தரமாய் சிரித்த காந்தியை திணிக்கிறான். A.T.M ல் வந்துடும்போ.
மஞ்சல் நிறம் மாறாத மனைவியின் தாலிக்கயிறாகவே மதிக்கிறார். அரசு அலுவலர், தன் மேசைமீது காலம் கடந்து கிடக்கும் பைலின் முடிச்சை.
யுகம் கடந்த மரம், இன்னும் பருக்க. மழைவேண்டி, வானம் நோக்கி யாசகம் கேட்கிறது. குழந்தையின் உள்ளங்கையாய் விரிந்து துளிர் விடும் இலைகள்.
எந்த மிருகத்தையும் விட வீரம் நிறைந்தது, அதிபர்களிடம் சித்திரவதைக்கு பாடம் கற்றது. நானே உலகை ஆளும் கர்த்தா என்பவனின் ரத்தம் உறிஞ்சும் கொசு.
நல்ல மனிதன் மண்ணில் புதைந்த பொன். யாரும் கணக்கிடாமல் மறைந்தாலும், ஒருநாள் புதையலைப்போல் வெளிப்படுவான்.
கொள்ளை லாபம்தராததை, வியாபாரியும்,புகழ்நாடியும் ஏற்றுக்கொள்வ தேயில்லை. பயித்தியமும்,வாழ்வறிந்தவனும் அதை தேடி, தொழுது ஏற்கிறான்.
பூமியில் வேர்பதிந்த விருட்ச்சம்போல், வீழ்த்தும் நாள் குறித்துவிட்டு வளர்ச்சியை தளராது தொடர்கிறது உடலில் ஊறிவிட்ட தீராதநோய்.
நம்புழுதி
1 comment:
நன்று
Post a Comment