Wednesday, January 19, 2011

கவிதை

     நிகழ்வுகள்

கம்பிச்சக்கர வாகனத்தில்
வசதியற்ற பின்யிருக்கை
ஒற்றை ஸ்தனம்
கோழை போர் வீரனின்
கூர் ஈட்டியாய்
முதுகை பதம் பார்க்கும்

கடைக்கடையாய்
திரிந்து பூட்டிய
வளையல் கோர்த்த வலக்கை
சத்தமின்றி
வயிறை இறுக்கி  நழுவ
வீரியத்தின் கதவு திறக்கும்

தோலில் சாய்ந்து
கழுத்துப்பட்டையை நிரப்பிய
மல்லியின் வாசம்
மறையும் முன்
பிறப்பின் பயன்முடித்தேன்-என
மரணிக்கபிரியப்படும்

சாய்வு மலைகளின் குளிர்ச்சியில்
நீண்ட எல்லை கடக்க
இறுக்கமான தடைகள்
முட்டிக்  கடக்க
விருப்பத்துடன் கை கோர்க்கும்.

கிறுக்கி
தடங்கள் இன்றி மறையும்
மின்னல் கோடாய்
அறிமுகமில்லாதவர்களாக 
முகம் திருப்பி
நிகழ்வுகள் அழிய
வெட்கமில்லாமல் மறைகிறோம்
நீயும் நானும். 


நம்புழுதி 

Saturday, January 15, 2011

'துயில்' என் பார்வையில்

                                        எஸ்.ராவின்     'துயில்'           

எஸ்.ராமகிருஷ்ணன் 'துயில்', வாசகன் என்ற அடிப்படையில் என் பார்வையில் ஆச்சரியங்களும் சிலகேள்விகளும் எனக்குள் எழுகின்றது. எஸ்.ரா அவர்களின் எழுத்தாற்றல் உலகறிந்து சிறப்புமிக்கது, பொறுப்புள்ளது. 

சிறுகதைகள், கட்டுரைகள் எழுதும்போதும் உலக திரைப்படங்களை அறிமுகப் படுத்தும்போதும் ஓடும் நீரோடையின் கீழ் கிடக்கும் சின்னச்சின்ன கூழாங் கல்லுகள், மணல் தரைகள், புல், பூண்டுகள் தெளிவாய்தெரியும் தன்மை  கொண்டதாகவே  நான் பார்க்கிறேன். ஒரு எஞ்சின், இரு பெட்டிகளை இழுத்துக்கொண்டு போகும் தொடர் வண்டிதான் 'துயில்' நாவல். எஞ்சின் என்பது சின்னராணி,அழகர். இரு பெட்டிகள் ஏலன் பவர், கண்டலு அக்கா அந்தபெட்டியின் பாதுகாப்பான சரக்குகளாக பல உதிரி கிளைக் கதைகளைக்  கொண்டுள்ளது.
 
சின்னராணி, அழகர் கணவன் மனைவி. செல்வி அவர்கள் மகள் இவர்கள் மூவரும் தெக்கோடு மாதாக்கோயில் திருவிழாவில் கடற்கன்னி ஷோ போட்டு பிழைப்பு தேட  ஆத்திக்குளம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறார்கள். சின்னராணி வாழ்வெல்லாம்  எதையோ யோசித்துக்கொண்டே இருக்கிறாள். 'அப்படி என்ன தான் யோசிப்பாள். அதைப்பற்றி அழகர் கேட்டுக்கொள் வதில்லை. கேட்டாலும் அவள் பதில் சொல்வதில்லை.' (பக்கம்25) இப்படித்தான்  அவர்கள் குடும்ப வாழ்வு  முழுதும் நடந்தேறுகிறது.

'அப்பா ஏமாந்து அழகருக்கு தன்னை கலியாணம் செய்துகொடுத்துவிட்டார். அழகர், தான் ஊர் ஊராகச்சென்று  சைக்களில் பாத்திர வியாபாரம் செய்பவன் என்று ஏமாற்றிவிட்டான். இப்போது, தன்னை  பல ஊர்களுக்கு கூட்டிச்சென்று  மனிதர்கள் முன்னாள்    காட்சி பொருளாகக்காட்டி  பிழைப்பு நடத்துகிறான்.' என்ற வெறுப்பு  அவளுக்குள்ளாகவே தொடர்ந்து  நெருப்பு மூட்டம்போல் புகைந்து கொண்டேயிருக்கிறது. வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களை, செயல்பாடுகளை இழந்துவிட்டால் வாழ்வே இழந்துபோகின்ற அவலமும் நடந்தேறிவிடுகிறது.

தனக்கு அழகர் கிடைத்திருக்காவிட்டால் தன் தோழி நங்காவின் கதிதான் நமக்கும் ஏற்பட்டிருக்குமோ என சின்னராணி, அழகர் தன்னை பெண்பார்க்க வந்ததை   நினைப்பார்கிறாள்.  'நங்கா கருத்த தோற்றம்.  உருவம் பெருத்தவள். அவளுக்கேற்றபடி எல்லாம் பெருத்து இருந்தது. ஆனால் தன்னை பராமரிப்பதில் அக்கறை இல்லாதவள். அவள் யாருக்கும் கவர்ச்சியை ஏற்படுத்தவில்லை.அந்த ஊரில் எந்த ஆணும் அவளைக்கண்டு கொள்ளாததால் அவளுக்கு ஏற்பட்ட காமத்தை அடக்கவே முடியவில்லை. தன் உறுப்புகளுக்கு மரியாதை தராத ஆண்களை அவமானப்படுத்த எண்ணுகிறாள். அவர்களை காறி துப்புகிற விதமாக. நங்கா  தன்னை முழு நிர்வாணியாக்கிக்கொண்டு  வெட்டவெளியில் கோயில் மரத்தில் தூக்கிட்டுக்கொள்கிறாள்'. நங்காவின்  இறப்பை நினைத்துதான்  சின்னராணி,  அழகரை எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டாள்' என்பது.  எத்தனை நூற்றாண்டுகளைக் கடந்தாலும் பொருளாதாரத்தில் பிந்தங்கிய கடைநிலை பெண்களுக்கான வாழ்வு அமைவதில்:  இன்னும் அவலநிலை, உச்சம் தொட்டதாகத்தான் இருக்கிறது.

இதேபோல தகப்பனை நினைக்கும்போதும், அண்ணனை நினைக்கும்போதும்  உயிர் உள்ள கதைகள் பிறக்கின்றன. அவர்களின் கதையாடல்களின் மூலமாக ஆழமான மனித மன உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. காலத்தின் பொருளாதார சூழல்களை  பிரிதிபளிக்கிறது. 'காட்டில் ஒவ்வொரு மரமும், ஒரு போர் வீரனைப்போல் யுத்தம் நடத்துகிறது. அதன் வேர்கள் பூமியின் பாறைகளை  உடைக்கிறது. தண்ணீர் தேடி அலைகிறது. ஒரு துரவியைப்போல் தவமிருக்கிறது'. (பக்கம்71)  என்கிற  கதைகளோடு ஒன்றிவிடுகிற  கவித்து வமான கதைகள் நிறம்பியிருக்கிறது.

'சின்னராணிக்கு  அடர்ந்த  தலைமயிர்,  அதை பராமரிக்க அவளுக்கு ஏரிச்சலாய் இருந்தது. அதே தெருவில் ஒரு டீச்சர் இருந்தாள். அவள் எப்போதும் சீப்பும் கையுமாகத்தான் இருந்தாள். செம்பருத்தி எண்ணையைதான் தலைக்கு வைப்பாள். ஒரு முடியும் கழிந்து வராமல் இருந்தது'. (பக்கம் 106) என்பது  சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் சொல்ல முடியாதபடி  கிடக்கிறதை அறியலாம்.
 
சாதியின் கோர முகம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு கிளை கதை 'ஒரு உயர் சாதி கிழவி தன் கர்ப்பிணி மருமகளை அழைத்துக்கொண்டு  பஞ்சம் பிழைக்க வருகிறாள்.வெகுதூரம் நடந்ததால் சோர்ந்து போகிறார்கள். பக்கத்தில் மாடிவீடுகள்  தென்படுகிறது   கிழவி  மரு மகளை ஒரு இடத்தில் விட்டு விட்டுப்போகிறாள். தன்  சாதி ஒத்த வீடுகள்தான் என்று சற்று நிம்மதியாய் சென்று ஒரு வீட்டின் கதவை வெகுநேரம் தட்டுகிறாள்.உள்ளேயிருந்து ஒரு பெண் வருகிறாள். கிழவி  கம்மங்கஞ்சி கேட்கிறாள்.வீட்டுக்காரி வாய்க்கு வந்தபடி அசிங்கமாக திட்டுகிறாள். ஒரு வேளை தன்னை தாழ்ந்தசாதி என்று  நினைத்து திட்டுகிராளோ,  யோசித்த கிழவி நானும் உன் சாதிதாம்மா என்று சொல்லுகிறாள். அப்போதும் வீட்டுக்காரி திட்டி போடி போய் தெரு மண்ணை சாப்புடு என்று துரத்துகிறாள். கிழவி திட்டிக்கொண்டே திரும்புகிறாள். இதற்கிடையில் மருமகள் சற்று தள்ளி எதிரே இருந்த குடிசை பகுதிக்குச்சென்று  கஞ்சி வாங்கி குடிக்கிறாள். அக்குடிசையின் எதிரே பன்றிகள் மேந்துகொண்டிருக்கிறது. தான் விட்ட இடத்தில் மருமகளை காணாது கிழவி தேடுகிறாள்.பிறகு குடிசைபகுதியை நோக்கி நடக்கிறாள்.மருமகள் கஞ்சி குடித்துக்கொண் டிருந்தாள். பார்த்து ஆவேசமடைந்த கிழவி கஞ்சியை தட்டி விட்டு சாதி கெட்ட சாதியில வந்து கஞ்சி குடிக்கிறியா, அதவிட பன்னி பீயதுன்னு  என்று  கண்டமேனிக்கு திட்டி கூட்டிச்செவாள். வழிஎங்கும் வாக்குவாதம் கோபங்கள் இருக்கிறது. ஒருகட்டத்தில் வெகு தூரம்நடந்து ஒரு ஓடையில் போகும்போது கிழவி காணவில்லை.மருமகள் சற்று யூகித்து திரும்பும்போது கிழவி பெரிய பாறாங்கல்லை துக்கிவைத்துக்கொண்டிருக்கிறாள்.  பசியின் கொடுமையால் கஞ்சிவாங்கி குடிச்சிட்டேன் மன்னிச்சிடும்மா, உங்கவாரிசு வயித்துல இருக்குது' என்று கெஞ்சுகிறாள். கிழவி மிகவும் மூற்கமாக கிழேதள்ளி தலையில் பாறாங்கல்லை போட்டுவிடுவாள். தானும் நாண்டுக்கொண்டு  செத்துப் போவாள்.'பெண்களை தாய் என்றும் தெய்வம் என்றும்  சித்தரிப்புகள்  இருந்தபோதும். கட்டமைத்து வைத்த சாதி பிடியிலிருந்து பெண்களும் விடுபட முடியவில்லை. குடும்ப கெளரவத்துக்காக பெண்களும்கூட  அதை சமூகத்தில் பாதுகாக்கிறார்கள். என்பதை இக்கிளைக்கதை தெளிவாக்குகிறது. 

இடையிடையில்  அழகரின் கடந்த காலங்கள் நினைவுகளாக வந்து போகிறது. சிறுவயதில் வீட்டைவிட்டு ஓடிப்போகிற அழகர் காமக்கூடல் தொழில் செய்வோரிடம் எடுபிடி வேலையில்  சேருகிறான். அங்குள்ள பெண்களின் பின்னணிக்கதைகள் பல பதிவாகிறது. அத்தொழிலை நடத்தும் ஜிக்கி குடும்ப பின்னணி பரிதாபத்துக் குரியதாய்  மாறியபோதுதான் ஜிக்கி அத்தொழிலை நடத்துகிறாள்.என்பது பின்வரும் அவளின் கதை யில் தெரிகிறது. முக்கியமாக பெண்களின் நெருக்கடி, மன ஓட்டங்கள் நாவலில் பதிவாகிறது.

ஒரு கட்டத்தில் அழகர் காமக்கூடல் விடுதியில் ராமி என்ற பெண்ணை படுக்கை அறையில் அவளுக்கு தெரியாமல் பார்க்கிறான். அதை பார்த்துவிட்ட ராமி 'ஏண்டா திருட்டுத்தனமா பாக்கிற'  என்று உள்ளே அழைத்து  அவள் நிர்வாணமாகி  அவனையும் நிர்வாணமாக்கி காமக்கூடல் புரிந்து, 'இதுதாண்டா வேற  ஒண்ணும் இல்ல'  என்று சொல்லும்போது இதற்காக  எத்தனை உயிர்கள், எத்தனை குடும்பங்கள் வாழ்விழந்து சிதறிப்போய் இருக்கிறது. என்று வாசகனை சிந்திக்கவைக்கிறது.

அழகர் சின்னராணிக்கு முதல் முதல் கடற்கன்னி வேஷம் போட்டு தொட்டியில் படுக்கவைப்பான். அவள் வெட்கத்தால் கண்ணைமூடி படுத்துக்கிடப்பாள். 'இப்படி இருந்தாள் நீ உயிரோடு இருக்கிறயா, செத்துக்கிடக்கிறயானு தெரியாது. கொஞ்சம் கண்ணைத்திறந்து அப்பப்போ வாலை ஆட்டிக்காட்டு' (பக்கம் 145)  என்று சொல்லும்போது சிறந்த கலையம்சத்தை வெளிப்படுத்துகிறது.  
                                                இரண்டு
ஏலன் பவர், ஞானத்தந்தை இவர்கள் கடிதங்கள் மூலமாக  விவாதிக்கப்படும்  கருத்துக்கள் மிகவும் முக்கியமானது. மதங்கள் தங்கள் கற்பிதங்களாலும், கட்டுப்பாட்டாலும். ஒரு சாதாரண மனிதனைக்கூட எப்படி தங்கள் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. 'நோய்மையின் காரணமாக தன் உயிரையே இழக்க நேரிடும்  பட்சத்திலும், மத நிர்பந்தங்களில் இருந்து  வெளி ஏறமுடியாதபடி  இருக்கிறார்கள்.' என்பதை  ஏலன் பவர், ஞானத்தந்தைக்கு எழுதும்போது  ஆணித்தரமாய் குறிப்பிடுகிறார். 

ஏலன் பவர்,தெக்கோடு மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்ய வருகிறார். மக்களை தேடிச்சென்று வலிய மருத்துவம் பார்க்க முற்படுகிறார். அங்கு இருக்கும் பழமை வாதிகள் மிரட்டலால் அவரிடம் யாரும் மருத்துவம் பார்க்க வரவில்லை. இலவசமாய் மக்களின் உயிர்காக்க அந்த மக்களிடமே மருத்துவம் பார்க்கிறேன் என்று பிச்சைகேட்கிறார். 'நோய்மைக்கு சரியான சிகிச்சை தனக்கு தெரிந்திருந்தும்  புசாரிகளாலும், மந்திரக்காரர்களாலும் அவர் கண்முன்னே நோயாளிக்கு விஷத்தை உற்றுவதுபோல் செய்கிறார்களே' என்று வேதனைப்பட்டு.  ஞானத்தந்தைக்கு கடிதம் எழுதுகிறார். 'நான் வெற்றி பெறமுடியவில்லை எனில்,  தெக்கோட்டிலேயே  இறந்து போவேன். எனக்காக கல்லறை கட்டுவதற்குக்கூட ஒரு ஆள் இருக்கமாட்டார்கள் என்று நன்றாகத்தெரியும்.'(பக்கம்211)  எவ்வளவு  சோகமான, வேதனைத்தருகின்ற வெளிப்பாடு. நாட்டை தூக்கிநிறுத்துகிறேன், புரட்டிபோடுகிறேன் என்று சொல்பவர்கள்கூட  இந்த வாழ்வை வாழமுடியாது. பதிலுக்கு ஞானத்தந்தை எழுதும் கடிதம் முக்கியமானது. மத சார்பு நிலை கொண்டதாக சில இருந்தாலும் 'நிறைய படித்தவர்கள் எதையும் சிக்கலாக் கிவிடுவார்கள் என்பது உன் விசயத்தில் உண்மையாக இருக்கிறது.' (பக்கம்391) ஆழ்ந்த சிந்தனை கருத்துகளும் உள்ளது. ஏலன் பவர் தான் சார்ந்த மதத்தின் மூட பழக்கங்களையும் விர்ச்சிக்காமல் இல்லை. தன்னுடைய இடையறாத முயற்சியால் வெற்றி பெறுகிறார். ஆனால் உதவி வேலைக்காக வைத்திருந்தவனே  அவரை கொல்லுகிறான்.
                                                    மூன்று 
கொண்டலு அக்கா இந்த பகுதி இல்லையென்றால் நாவல் வெற்றி பெற்றிக்கமுடியாது. எட்டூர்மண்டபம் வரும் ஒவ்வொரு  நோயாளிகளுக்குள்ளும், வாழ்விழந்த, வாழ்வை அறிந்துகொள்ள முடியாத  ஒரு சோகக்கதை இருக்கிறது.

'சிவபாலன் எந்த குறைபாடும் இல்லாமல் இருந்தான். தன் இரு கைகளும் வேர்த்து வழிந்துகொண்டே  இருக்கும். நாளடைவில் நாற்றம் எடுத்துவிட்டது. தான் ஒரு ஆடிட் செய்யும் அரசு அதிகாரி என்றும், தான்வாங்காத லஞ்சப்பணமில்லை.எல்லாவற்றையும் மள மளவென்று  இழந்துதான் இங்கு வந்தேன்.' என்று சொல்லும் அவன் கதையைப் படித்தால் ஸ்பெக்ட்ராம், எந்த ஊழல் பேர்வழியும் சற்று யோசிப்பான்.

கொண்டலு அக்கா ரோகிகளுக்கு தீர்வு சொல்லும்போது. சாவின் முடிவைத்தேடி ஓடுவோரும், வாழ்வை திரும்பி பார்க்க பழகுவார்கள். எல்லா நோய்மைக்கும் காமம் தான் காரணமென்றும். அதிலிருந்து விடுதலை பெற வழிகளையும் ஆராய்கிறது. நாவல்  நிறைவை எட்டுகின்றபோது. சின்னராணி இன்னொரு வித்தைக்காட்டியால்  கற்பழிக்கப்படுகிறாள். எதிர்ப்பார்ப்புகள், ஏக்கங்கள் மத்தியிலும்  வாழ்வை நிறைவு செய்ய முடியாதவளாகவே தொடர்ந்து வாழ்ந்தவள்.   கடைசியில் ஆவேசம் கொண்டவளாக கற்பழித்தவர்களை கொலைசெய்து ஜெயிலுக்குப்போகிறாள். அழகர் அவளை மீட்க்க முடியாத நிலையில் நாவல் முடிகிறது.  
                                        நான் விளங்கிக்கொண்டது.
 எஸ்.ரா அவர்கள். வாழ்வியல் ஆழங்களை. கலையம்சங்களை, மனஓட்டங்களை தெளிவு படுத்துவதுபோல்,  காட்ச்சிப்படுத்துதலில்  செய்யவில்லை.    உறுதியான கல்லுகளால் காங்கிரிட்டால் கட்டடம் கட்டப்பட்டு,  அவசரத்தில் சரிவர பூசுவேளை  செய்யாமல் வண்ணம் தீட்டியதுபோல் உள்ளது நாவல் முடிவு.   எஸ்.ரா மனித வாழ்வை அலசிச்செல்லும், அதே பாணியை   கதை  பாத்திரங்களும், சுவாரசியம் குறையாது கையிலெடுத்துக்கொள்கிறது .
முகப்பு அட்டையில் சேவல், மரத்தின் உச்சாணியில் இருக்கிறது. சேவலின்  தன்மையில் ஒன்று, மனிதனை தூக்கத்திலிருந்து (விடியலைச் சொல்லும்) எழுப்புவதாக அறியப்படுகிறது.

சின்னராணி அதேயிடத்தில் கற்பழிக்கப்பட்டு, வாழ்விழந்து போகிறாள். ஏலன்பவர் சிறப் பான சேவைசெய்தும் கொல்லப்படுகிறார்.ஜிக்கி வாழ்வைப் போராடி வாழ்ந்து கடைசியாக அழகரைப்பார்த்தும்.வெறுமையாய் மறைந்துபோகிறாள் கொண்டலுஅக்கா பாராமரிப்பில் இருந்து கிளம்பும் ரோகிகளின்  நோய்மைக்கு தீர்வு கிடைத்ததாக தெரியவில்லை. இதையெல்லாம் கோபுரத்தின்  உச்சியிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் மாதா, நம்பி வரும் மனிதனுக்கு ஒரு சாதாரண சேவல் செய்கின்ற எழுப்புதல் (சுகம், ஆறுதல் நோக்கிய ஆரம்ப விடியல் ) பணியைக்கூட செய்யாமல் துயில் கொண்டிருப்பதை சுட்டுவதாகவே எனக்கு படுகிறது. 

'துயில்' படிக்க பிரித்தால்  தூக்கத்தைத்தொளைத்து, வாழ்வியலை, நோய்மையின் ஆழங்களை அறிந்துகொள்ள பெரும் பங்காற்றும். அவர் வார்த்தையில் சொல்லவேண் டுமென்றால், 'ஒரு சிறுவனை கைப்பிடித்து  அழைத்துக்கொண்டு போவதைப்போல'  நாவலின்  ஒரு பக்கமும்  விடுபடாமல் படிக்கும் முடிவுக்கு அழைத்துச்செல்லும்.
    
நம்புழுதி             

Thursday, January 13, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்

                      இழந்தாலும் மீட்ப்போம்
   
கம்பு, சோளம், கேழ்வரகு 
நவதானியங்கள்
மண்ணை அலங்கரித்த
பசுமைகானாது
பறவைகளின் மிஞ்சிய  இறகுகள்
தூசிபடிந்த மரங்களின் இலைக்ளிலும்
வண்ணம்பூசி
அளந்து நடப்பட்ட கல்லுகளின் மீதும்
எச்சமாய் ஒட்டிக்கிடக்கிறது.

இழந்ததெல்லாம் பழயன
என கழித்திடாது
புதிய வடிவம் கொடுத்து
அறிவிற்குகந்ததாய்
மீட்டுரு வாக்கம் கண்டு
வெற்றிபெருதலே
தமிழன் புத்தாண்டு
தழைக்கும் புத்தாண்டாய் மலரும்
அப்புத்தாண்டை நோக்கிப் பயணிப்போம்.

தமிழர்கள் அனைவருக்கும், மற்றும்   நம் சந்தோசத்தை ஆவளுடன் எதிர்நோக்கும் மனிதனாய் பாவிக்கும் யாருக்கும், எந்த நாட்டவருக்கும்.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  நம் புழுதி

Thursday, January 6, 2011

சிறுகதை

                                                       34 வது கதவு
உருது மூலம்                                                               ஆங்கிலம் வழித்தமிழில் 
நசிம் காரல்                                                                  புல்வெளி கமராசன் 

விடியற்காலை  நேரம். அணைக்கட்டின் நீர்மட்டம் குறிக்கப் போனவன் உறைந்து போனான். அணைக்கதவின் ஓரம் மிதக்கும் பிணம், உடலில் தொண்டை கிழிந்து  தலை வெறும் தோலால் ஒட்டிக்கொண்டு தொங்கியது. பயத்திலும் படபடப்பிலும் அணைக்கட்டு சுவரை பிடித்துக்கொண்டு கொஞ்சநேரம் நின்றிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக பயம் குறைந்ததும் பிணத்தை கிட்டத்தில் பார்த்தான்.  அது ஒரு பெண்ணின் சடலம். சிவப்பு நிற ஸ்கர்ட் அணிந்திருந்தாள். அவளுடைய அடர்த்தியான முடி அவிழ்ந்து தண்ணீரில் ஆடிக்கொண்டிருந்தது.  தீ நிற உடல் சகதி நீரில் மின்னிக் கொண்டிருந்தது.

சிக்கலில் மாட்டிக்கொள்ளாதபடி கதவை திறந்து விட்டுவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அவனது மனசாட்சி தடுத்தது. இந்த செயலுக்கு கடவுளின் தீர்வு கடுமையாக இருக்கும் எனவே புகார் தந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான். சுபேதாரே விசாரித்து இதை செய்த குற்றவாளிக்கு தண்டனை தரட்டும் என்று நினைத்தபடியே தன் அறைக்கு வந்து கதவை மூடினான்.

கதவை மூடும்போது இதை மேலதிகாரியான சர்வேயரிடம் சொல்லவேண்டும் என்று முடிவு செய்து சர்வேயரின் குடியிருப்புக்குச் சென்றான். கதவைத்தட்டினான். சர்வேயர் நேற்று முழுவதும் சுக்குர் பகுதி முழுவதும் பார்த்துவிட்டு பின்னிரவில்தான் தூங்கியிருந்தார். எனவே சாதாரணமன  தட்டல்கள் அவரை எழுப்ப போதுமான தாயில்லை. ஆனாலும் அவர் எழுந்து வரும்வரை  அளவீட்டாளன் கதவை விடுவதாயில்லை. சர்வேயர் கண்களைக்  கசக்கியபடியே வந்து கதவைத்திறந்தார். கண்ணில் இருந்த எரிச்சல் வார்த்தைகளுக்குள் தாவியது. 

"என்னய்யா விஷயம்? டேம்ல விரிசல் விட்டுடுச்சா?" என்றார்.

"இல்லீங்க ஐயா, ஆனா.... ஒரு பொண்ம் கேட்டுல மாட்டியிருக்குங்கையா" என்றான்.

"அதுக்கு என்ன ஏன் எழுப்பினே? நான் என்ன சுபேதாரா? கோபம் கொப்பளித்தது. 

"ஐயா,இத காவல் நிலையத்துல தான் சொல்லனும் அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒருவார்த்தை... "என்று இழுத்தான். மேலும் அள்வீட்டாளன் "இப்பவே நேரமாயிடுச்சி" என்றான். 
"நல்ல வேள சாயந்திரம் வந்து சொல்லாம விட்டியே, கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும். காவல் நிலையம் போறியா போ! போ! தினம் உன்னை வரச்சொல்லி இழுத்தடிக்குப் போறாங்க" என்றார் சர்வேயர்.
"நீங்கக சொல்றது சரிதான். ஆனா இத சொல்லாம விடக்கூடாதே"  என்றான் அள்வீட்டாளன்.
"சரி எப்பிடியோ போ! ஆனா என்ன இழுத்துவிட்டுடாத" என்றார்.
"சே! சே! அப்பிடியெல்லாம் செய்யமாட்டேன் ஐயா. உங்க பேரே வெளிய வராது. நான் பொனத்தப் பாத்ததும் நேரா இங்கதான் வர்ரேன்னு சொல்லிடுவேன்." என்றான்.
"அது தான் சரி அப்படியே செய்" என்றவர் கதவை இழுத்து சாத்திவிட்டு மீண்டும் தூங்கப்போனார்.

அணைக்கட்டுக்கு வந்தவன், சுக்குர் நோக்கி நடக்கத்துவங்கினான். கொஞ்ச தூரம் நடந்ததும் அந்த வழியாக ஒரு லாரி வரும் வெளிச்சம் தெரியவே கைகளை அசைத்து நிறுத்தினான். ஓட்டுநர் நல்லவனாக இருந்ததால் உடனே நிறுத்தி ஏற்றிக்கொண்டான். நடப்பதில் இருந்து காப்பாற்றிய ஓட்டுநரை வாழ்த்தினான். கடவுள்தான்  லாரிக்காரனை நிறுத்தச்சொல்லி தனக்கு உதவியதாக நினைத்துக்கொண்டான். கொஞ்ச நேரத்தில் வண்டி காவல் நிலை வாசலில் நின்றது. அளவீட்டாளன்  நன்றி தெரிவித்தபடி இறங்கினான்.காவல் நிலைய வாசலில் ஒரு ஜமேதார் நின்றிருந்தார். அவனிடம் சுபேதார் இருக்கிறாரா என விசாரித்தான்.

" சார் இன்வெஸ்டிகேஷனுக்கு  போயிருக்கார்" என்றான் ஜமேதார்.

"இங்கபாருங்க ஜமேதார். நான் கட்டாயம் சுபேதாரைப்பார்க்கணும். எதுவும் சாக்கு சொல்லாதிங்க என்றான் உறுதியாக"

"ஏன் அவரைப்பார்க்கணும். எதாவது புகார் தரணுமா?" என்றார்.

"ஆமாங்க" என்றான் அளவீட்டாளன்.

"இப்ப நாங்க எதுவும் கேசையும் எடுக்கமாட்டோம் ரெண்டு மூணுநாள் கழிச்சி வாங்க. இந்த வருஷம் முடிய கொஞ்ச நாள்தான் இருக்கு ஏற்கனவே பல கேசுங்க பாக்கியிருக்கு"  என்றான் ஜமேதார்.

"இது ஒன்னும் சில்லரை திருட்டு இல்லீங்க கொலை  சமாசாரம்."

"நீ கொலை பண்ணிட்டியா? எங்கடா ஆயுதம்" என்று ஜமேதார் பாய்ந்தார்.

"அத சுபேதார்கிட்டே  சொல்றேன். அவர முதல்ல பாக்க விடுங்க" என்றான்.

"இந்த மாதிரி சின்ன விஷயத்துல அவர் தலையிடமாட்டாரு. நான் இங்க எதுக்கு இருக்கேன்" என்றார் ஜமேதார்.

"ஜமேதார் இங்க பாருங்க, பிடிவாதமா பேசாதிங்க. நானும் உங்களப்போல ஒரு அரசு ஊழியந்தான்."  

"இருக்கட்டுமே நீ என்ன வானத்துல இருந்து குதிச்சி வந்துட்டயா என்ன நடந்ததுனு சொல்லேன்"

"அத நான் சுபேதார்கிட்ட சொல்றென் அப்போ நீங்களும் வந்து கேட்டுக்குங்க " என்றான் அளவீட்டாளன்.
ஜமேதார் இனிமேலும் ஒன்றும் செய்யமுடியாது என்றுணர்ந்து தயக்கத்துடன் சுபேதாரின் இருப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். சுபேதார் அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து டீ குடித்துகொண்டிருந்தார். ஜமேதார் அவருக்கு ஒரு வணக்கம் செலுத்திவிட்டு

"ஐயா ஒரு ஆள் உங்கக்கிட்ட புகார் கொடுக்க வந்திருக்கான்..." என்றார்.

"சுபேதார் ஜமேதாரை ஒரு கோபப்பார்வை பார்த்தபடி முட்டாளே அவன் ஏன் இங்க கூட்டி வந்த" என்று எரிந்து விழுந்தார்.

"ஐயா நான் எவ்வளவு சொன்னேங்க . நீங்க கேஸ் 224ய விசாரிச்சிசுக்கிட்டிருக் கிறீங்கன்னு சொன்னேங்க, ஆனாஅவன் அரசு ஊழியராம் ஒரு கொலைகேசாம் அதுதான் என்னால  ஒண்ணும் செய்யமுடியல.." என்று ஜமேதார் சுபேதாரிடம் கூறினார்.
"கொலையா? சந்தையிலேயா? ஆனா ராத்திரி முழுக்க அங்கதான சுத்திக்கிட்டிருந்தேன்."  என்று ஆச்சரியமாக கேட்டார் சுபேதார்.

"ஐயா! எங்க நடந்ததுன்னு தெரியாது. அவனேதான் சொல்வானாம்." ஜமேதார் புகார் கொடுக்க வந்த அளவீட்டாளனைப்பார்த்து தலையசைத்தான்."வா இங்க வந்து சார்க்கிட்ட நடந்தத சொல்லு. ஒண்ணும் பயப்படாத உண்மைய சொன்னா உனக்குதான் நல்லது" என்றார் ஜமேதார்.

"எங்க வேலை செய்யிறே? என்று  அளவீட்டாளனை சுபேதார் கேட்டார். அளவீட்டாளன் அவரை நோக்கி முன் நகர்ந்து. "ஐயா,நான் சுக்குர் அணைக்கட்டின் அளவீட்டாளன் என்று அறிமுகப்படுத்தினான்.

"என்ன நடந்ததுன்னு இப்ப சொல்லு " என்றார் சுபேதார்.

"ஐயா நான் தண்ணீர் மட்டம் அளக்க காலையில் போனேங்க. இதுதான் என் வழக்கமான வேலைங்க அப்போ அணைக்கட்டு கதவுக்கிட்ட ஒரு பொணம் மாட்டியிருந்துதுங்க. அந்த பொணத்தோட தொண்டை கிழிஞ்சி உடம்போட வெறும் தோல்தான் ஒட்டியிருந்தது" என்று அளவீட்டாளன் விவரித்தான்.

"பெண்ணா, ஆணா? என்று சுபேதார் கேட்டார்.

"ஒரு பொண்ணு பொணம் சார்" என்றான் அளவீட்டாளன்.

"உடம்ப மீனு தின்னுட்டிருக்குமே! சரியா அடையாளம் கண்டுபிடிக்கமுடியுதா?

"இல்ல ஐயா.உடம்பு நல்ல நிலையில்தான் இருக்குங்க"

 "யாராவது வந்து உன்ன விசாரிச்சாங்களா?"

 "இல்லிங்க யாரும் வந்து என்கிட்ட கேக்கலீங்க"

"கோராகான், யாராவது ஸ்டேஷனுக்கு வந்து காணொம்னு புகர் தந்தாங்களா?" என்று சுபேதார் ஜமேதாரைக் கேட்டார்.
 "இல்லையா, இது வரைக்கும் யாரும் வரலீங்க"

சுபேதார் மீண்டும் அளவீட்டாளனைப் பார்த்து கேட்டார்  "பிணத்தை எப்போது பார்த்த?"

"விடியர்காலையிலங்க ஐயா"

'யாராவது கூட இருந்தாங்காளா?"

"இல்லீங்க, நான்மட்டும்தான் தனியா இருந்தேன்."

"யார்க்கிட்ட யெல்லாம் இதப்பத்தி சொன்னே?"

"யார்க்கிட்டயும் சொல்லீங்க!நேரா இங்க தான் வரேங்க"

"எங்க இருக்கிறே?"    

"அணைக்கட்டுல குடியிருப்பு இருக்குங்க அங்கவே தங்கி இருக்கேங்க"

"குடும்பத்தோடு இருக்கியா?  தனியா இருக்கியா? "

"தனியாதான் இருக்கேங்க"

"அப்பிடியா, உன்னப்பாத்தா விளையாட்டுக்காரப் பையனாட்டம் தெரியுதே"

"ஐயா நீங்க சொல்லுறது எனக்குப் புரியலிங்க" என்று அளவீட்டாளன் அமைதியாகக் கேட்டான்.

"ஓ! இத நீ அவ்வளவு சீக்கிறம் புரிஞ்சிக்கமாட்டே, நேரம் வரும்போது கவனிக்கிற விதத்துல கவனிச்சா கிளிப்பிள்ளைபோல  கக்க வேண்டியத கக்குவ" என்றார் சுபேதார்.

"ஐயா உங்க சந்தேகத்துக்கு எந்த அடிப்படையும் இல்லீங்க. நீங்க நினைக்கிறமாதிரி நானே கொலைப் பண்ணியிருந்தா கதவை திறந்து உடம்பை வெளிய விட்டுட்டுப்போகாம உங்ககிட்ட வந்து புகாரா கொடுப்பேன் அய்யா என்ன யார் பாக்கப்போறாங்கனு  இத செஞ்சியிருக்கலாமே." என்றான் அளவீட்டாளன்.

"நீ சொல்றதுலேயும் அர்த்தமிருக்கு. அத நான் மனசுலயும் வச்சிருக்கேன். இப்ப அவ எப்படி இருந்தான்னு சொல்லு". என்றார் சுபேதார்.

"ஐயா, என்க்கு ரொம்ப பயமா இருந்ததால கிட்டப்போயி பாக்கலிங்க. ஆனா அவளுக்கு நீண்ட தலைமுடி தொள தொளன்னு சிவப்பு கலர் ஸ்கர்ட்..."  

"நல்லது, கேஸ முடிச்ச மாதிரிதான்" என்று வியந்தார் சுபேதார்.

"எப்படி கேஸ் சுலபமா முடிஞ்சிடுச் சீங்கிறீங்க ஐயா" 

"யரோ ஒருத்தன் தன் கொரவத்தை காப்பாத்திக்க விபச்சாரியை கொன்னுருக்கான்."
அளவீட்டாளனுக்கு தலைகால் எதுவும் புரியவில்லை. "ஐயா யாரோட மானத்தை காப்பாத்த இத செஞ்சாங்க"என்று கேட்டான்.

"யோவ் நீ ஒரு  முட்டாள்யா.  உனக்கு இது புரியாது. இந்த பொறிக்கிங்க தன்னை பழிக்கிற யாரையும் தொண்டைய அறுத்துடுவாங்க." இப்போதுதான் அளவீட்டாளனுக்கு  சுபேதார் பேசுவது புரிந்தது.

"ஐயா எந்த புனித புத்தகம் இப்படி செய்ய சொல்லுதுங்க" என்று அளவீட்டாளன் கேட்டான்.

"பலுச்சிஸ்த்தான் காரனுங்களூக்கு சட்டத்தைப்பத்தியெல்லாம் தெரியாது.கொலை செய்யறது ஞாயம்னு நெனைக்கிறவனுங்க அவனுங்க" என்றார் சுபேதார்.

"ஆனா சட்டப்படி குற்றம்தான். இது 302 படி குத்தம்தான் ஆனா நாம குற்றவாளிய எங்க போய் தேடுறது.?இந்த மாதிரி பொம்பளைங்களை அப்பா அண்ணந்தம்பி சொந்தக்காரங்க கூட கைகழுவி விட்டுருப்பாங்களே, யாராவது சொந்த்தக்காரன் வரானான்னு   பார்ப்போம்". என்றார் சுபேதார்.

"ஆனா ஐயா, நீங்க விழிப்பா இருந்தா இந்த மாதிரி குற்றம் செஞ்சிட்டு தப்பிக்க முடியாதில்லையா"

"கட்டயமா. சரியானபடி ஆய்வு செஞ்சா எப்பேர்ப்பட்ட தந்திரமானவனும் எங்கிட்ட  மாட்டாம தப்பிக்க முடியாது. என் அனுபவதில  எப்பேர்ப்பட்ட கொலைகாரனும் பன்னீர்லேயே குளிச்சிட்டு ஆயிரக்கணக்கான கூட்டதில ஒளிஞ்சிகிட்டிருந்தாலும் என்னால நொடியில அவன அள்ளிடுவேன். இழுத்தாந்து காதை பிடிச்சி திருகி மவனே உண்மைய சொல்டான்னு கவனிச்சா கக்கிடுவான்." என்றார் சுபேதார்.

" ஐயா! இத எப்படி கண்டுபிடிப்பீங்க?" என்று அளவீட்டாளன் கேட்டான்.

"ரத்தவாடையா, ரத்தவாடை எந்தக்கொலைகாரனும்  ரத்தவாசனையை கழுவ முடியாது.

" அப்படின்னா இதயும் தயவுசெஞ்சி ரத்தவாடை வச்சி கண்டுபிடிங்களேன்."

"யோ எவன் மேல நான் கைய வைப்பேன். எல்லா பலுச்சிஸ்தான் மேலயும் ரத்தவாடை வீசுதே"

"அய்யோ அந்த பொண்ணு பாவங்க எவனோ அவளை பலவந்தப்படுத்தி கொன்னு தண்ணியில வீசியிருக்கானுங்களே"

"அப்படிக்கூட நடந்திருக்கலாம், ஆனா அப்படி நடந்திருக்க சந்தர்ப்பம் குறைச்சல்தான்"

"ஐயா நீங்க வீசாரணைய ஆரம்பிச்சா எல்லாம் தன்னால வருமே. கடுகு தாளிப்பையும், கொலையையும் மூடிமறைக்க முடியாதுங்களே"

"செய்யலாம். கேஸ்ல நுழையறதுக்கு கடவுளே தடை போடுறாரே! இது என் சொத்தையெல்லாம் சாப்பிட்டுடுமே."

"எப்படிங்கையா?" 

"யோவ் அனாத பொணத்த ஆய்வு செய்யிறது விளையாட்டில்ல.மொதல்ல பொணத்த தூக்கி வரவங்களுக்கு கூலிய கொடுக்கணும்; போட்டோ எடுக்க, ஜீப்பை வாடகைக்கு எடுக்க; பொணத்தை எரிக்க எல்லாத்துக்கும் மேலே  அதிகாரிங்க. ஒவ்வொரு நாளும் விளக்கம் கேப்பாங்க. ஏன்யா உனக்கு இது? பேசாம கேட்ட தொறந்து விட்டுட்டு போகவேண்டியதுதான அது பாட்டுக்கு மிதந்து போயிருக்குமே"

"ஐயா அதெப்படிங்க அப்பிடி ஒரு பாவத்தை செய்யறது கடவுளே மன்னிக்கமாட்டாரே"

"எனக்கு யார் பாவம் செய்தவங்கன்னே தெரியல உன் பாவமோ என் பாவமோ ரெண்டு பேரு கஷ்டப்படுறோம். யோவ் கொலை கேசுல் புகார் கொடுக்கறது லேசுயில்ல. தெனம் அலையோ அலைன்னு அலைஞ்சி ச்சீபோன்னு கடைசியில நீயே விட்டுடுவ சொல்லிட்டேன்."

"ஐயா நான் இதப்பத்தி கவலைப்படைலீங்க, ஆனா இந்த மாதிரி குத்தம் நடக்கக்கூடாதுங்க தயவு செய்து என்புகாரை எழுதிக்கிங்க"

"சரி நீயும் விடறதா இல்லை. உன்க்கு சின்ன வயசுல சமூதாயபால ஊத்திட்டாங்க போலிருக்கு"என்றார் சுபேதார்.
"நீங்க என்னவேனா சொல்லுங்க தயவு செஞ்சி புகாரை எடுத்துக்குங்க" என்று மீண்டும் கெஞ்சினான். அளவீட்டாளன்.

"கோராகான், சீனியர் முனிஹ்சியை கூப்பிடுங்க ஸ்டேட்மெந்த் எழுதட்டும்'"என்று காவலருக்கு ஆணையிட்டார்.
முன்ஷி பேப்பர், பென்சில் கார்பன் பேப்பருடன் வந்து சுபேதாரின் எதிரில் இருந்த ஸ்டுலில் உட்கார்ந்தார். தாள்களை கார்பன் வைத்து வரிசையாக அடுக்கினார். பென்சிலை தயார்படுத்திக்கொண்டு சுபேதார் சொல்ல காத்திருந்தார்.

"முன்ஷி, முதல்ல புகார்  கொடுகறவரோட பேரை எழுதுங்க" என்றபடி அள்வீட்டாளனைப் பார்த்து "என்னய்யா உன்பேரு?"என்று கேட்டார்.

"குலாம், முகமது அப்பா பேரு நூர் முகமது ஐயா"என்றார் அளவீட்டாளன்.

"எழுதுங்க முன்ஷி, குலாம், முகமது தகப்பனார் பெயர் நூர் முகமது, அணைக்கட்டு அளவீட்டாளன். சுக்குர் அணைக்கட்டு பதிவு எண் 203, புகார் அளிக்கும் நேரம் 6.15 மணி விசாரணை தூரிதமாக செய்யனும். நம்ம பக்கத்தில எந்த தாமதமும் இருக்கக்கூடாது. ஆமாம் பாடி எங்க கெடுக்குதுன்னே.... "என்று சுபேதார் அளவீட்டாளனைப் பார்த்து கேட்டார்.

"ஐயா சுகுர் அணைக்கட்டுல முப்பத்து நாலாவது அணைக்கட்டுல மாட்டியிருக்குங்க" என்றான்.

இதைக்கேட்டதும் சற்று யோசித்த சுபேதார்முன்ஷியைப்பார்த்து "முன்ஷிசார் இவர் சொல்ற இடம் நம்ம எல்லைக்குள் வருதான்னு கொஞ்சம் போய் பாத்துட்டு சொல்லுங்க" என்றார் சுபேதார்.

முன்ஷி மின்னல் போல வேகமாக எழுந்து உள்ளே சென்று ஒரு பதிவேட்டுடன் வெளியே வந்தார்."அது நம்ம  காவல் நிலையத்துல இல்லையா" என்றார்.

"அதுதானே பார்த்தேன்" என்றபடி சுபெதார் "யோவ் இப்ப நீ போகவேண்டியது ரோஹ்ரி காவல் நிலையத்துக்கு. நீபார்த்த 34வது கேட் எங்க எல்லை கெடையாது. முப்பத்து மூணு வரைக்கும் எங்களோட எல்லை "என்றார் சுபேதார் சிரித்தபடி.

"ஐயா  என்னங்க இது ?"   என்றான்  அளவீட்டாளன்.   

"என்ன நம்பலைனா நீயே போய் பதிவேட்டை பார்த்துக்க" என்றார் சுபேதார்.

"ஐயா ஒரே ஒரு கதவுதானுங்களே வித்தியாசம்"

"யோவ் ஒரு கதவுன்னாலும் சும்மா இல்லை. மயிரிழை வித்தியாசம் இருந்தாக்கூட கதயே வேற இனி ஒரு இன்ச்சிகூட என்னால ஒன்னும் செய்ய முடியாது. அது யாரோ ஒருத்தரோட பொறுப்பு ஏன் எனக்கு அது.?"என்றார்சுபேதார்.

"அப்ப நான் என்ன பண்றதய்யா" என்று அளவீட்டாளன் கேட்டான்.

"ரோஹ்ரி நிலையத்துக்கு போயி அங்க பூகார் குடு " 

"அவங்க என் புகாரை  எடுத்துக்கலைனா என்ன செய்யிறதுங்க? என்றான் அளவீட்டாளன்.

"அதெப்படி மாட்டேன்னு சொல்வாங்க இது அவங்க எல்லையாச்சே" என்றார் சுபேதார்.

"அளவீட்டாளன் ரோஹ்ரி காவல நிலையத்தை நோக்கிப் புறப்பட்டான். அங்கே போய்  சேரும்போது நடுப்பகலாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருதான். அதன் பிறகுதான் சுபேதாரைப் பார்க்கவே முடிந்தது. அவரிடம் அணைக்கட்டில் கிடக்கும் பிணத்தைப்பற்றி சொன்னான். 

"யோவ் பொணம் எங்கமாட்டியிருக்குதுன்னே?" என்றார் அந்தகாவல் நிலைய சுபேதார்.

"ஐயா, சுக்குர் அணைக்கட்டுல 34 வது கதவுலங்க" என்றான்.

"முன்ஷி இது நம்ம எல்லையா பாருங்க" என்றார் சுபேதார்.

முன்ஷி" ஆமாங்க இது நம்ம எல்லைதானுங்க" என்றார்.

அளவீட்டாளனை நோக்கி திரும்பியசுபேதார் "நீ பொணத்த எத்தனை மணிக்குப் பார்த்தே?"

"விடியற் காலையிலங்கையா" 

"இவ்வளவு நேரம் என்ன செஞ்சிக்கிட்டிருந்தே? நடுப்பகல்ல வந்திருக்க"

"அளவீட்டாளன் அமைதியாய் இருந்தான்.

"யோவ் கேட்டதுக்கு பதில் சொல்லுய்யா இல்லன்னா குத்தம் உம்மேல வரும் ஜாக்கிரத" என்று எச்சரித்தார் சுபேதார்.

அளவீட்டாளனால் தன்னை மேலும் கட்டுப்படுத்த இயலவில்லை. அவனுடைய  மரியாதைக்கு குந்தகம் வரும் நிலையிலும் "ஐயா நான் ஒரு நிமிஷங்கூட தாமதிக்கலீங்க, உடனே ஓடிப்போய் சுக்குர் காவல் நிலையத்துலதானுங்க சொன்னேன். அங்கிருந்த சுபேதார்தான் ரொம்பநேரம்  உட்காரவச்சி விசாரிச்சிட்டு அவரு இப்பதான் இங்க அனுப்பிவச்சார்சார்." என்றான்.

"ஏன் அவரு உன்னை இங்க அனுப்பிச்வச்சாரு?" என்று சுபேதார் கேட்டார்.

"அவரு அந்த இடம் எங்க எல்லையில வரலன்னு சொல்லி அனுப்பிவச்சிட்டாருங்க" என்றான் அளவீட்டாளன்.

"எங்களோடதோ, அவரோடதோ அவரும் என்னைப்போல அரசு பணியாளர் தானே. கொலைய முதல்ல அவர்கிட்டதான் சொல்லியிருக்கே. சட்டப்படி புகாரை எழுதி பதிவு செஞ்சுட்டு  பொணத்தை பிணப்பரிசோதனைக்கு அனுப்பி யிருக்கணும் அப்புறமா அந்த பேப்பரையெல்லாம் எனக்கு அனுப்பி இருக்கனு மில்லையா?" என்றார் சுபேதார்.

"ஆமாங்கையா, நானும் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தேங்க அவரு கேட்கலையா"

"என்ன சொன்னாரு" 
இந்தவழக்கு எடுத்துக்கிட்டா அவருக்கு நெறைய செலவு ஆகுமாங்க"

"அப்பிடியா! நல்லாதான்யா சொல்ற. பாடிய யாராவது தேடிவந்திருந்தா அப்ப எல்லைப் பிரச்சனையே பார்க்காம வழக்க எடுத்துக்கிட்டுருக்க மாட்டாராமா" என்று சுபேதார் கேட்டார்.

"எல்லாம் கடவுளுக்குத்தாங்க வெளிச்சம் " என்றான் அளவீட்டாளன்.

"ஏன்யா கடவுள கூப்பிடுற? உனக்குத்தெரியாதா?" என்று சுபேதார் கேட்டதற்கு அளவீட்டாளன் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான்.

"சரி... இப்ப சொல்லுய்யா? பொணம் 34வது கதவுலதான் இருக்குதுன்னு உனக்கெப்படி தெரியும்?"என்று சுபேதார் கேட்டார்.

"நானே பார்த்தங்க'

"யோவ் பொணத்த பார்க்கிறத விட்டுட்டு கதவ எண்ணிகிட்டே இருந்தியா?"

"அதெல்லாம் எண்ணவேண்டிய அவசியமில்லைங்க.  என் மனசுல அச்சடிச்ச மாதிரி  இருக்குங்க."

"ஆனாலும் நீ ஏன்யா தப்பா சொல்லக்கூடாது"

"இல்லீங்கையா, நான் ஒன்னும் குருடன் இல்லீங்க"

"தண்ணியில பொணம் மெதந்தது போயிருக்கலாம் இல்லியா? யார் கண்டது கடவுளுக்குதான் தெரியும்" என்றார் சுபேதார்.

"ஆமாங்க கடவுளுக்குத்தான் தெரியும் ஆனா அது எப்படிங்க நடக்கும் "

"சரி சரி நான் விசாரிச்சிக்கிறேன்"  என்றவர் "முன்ஷி... முன்ஷீ.." என்று அழைத்தார். "சொல்லுங்கையா" என்று முன்ஷி அவர் முன் வந்து நின்றான்.
"முன்ஷி,அடையாளம் தெரியாத பொணத்தை வச்சிகிட்டு விசாரிக்கறது ரொம்ப தொல்லை ஆனா இந்த நல்ல மனுஷனை அலயவிடக்கூடாது நான் சொல்றத எழுதிக்கோங்க.அதோட இவர் சொன்னா எடத்துக்கு யாரையாவது அனுப்பிச்சி பொணம் அங்கதான் இருக்கான்னு பார்த்திட்டு வாங்க நேரத்தை வீணாக்காதிங்க" என்றார் சுபேதார்.                                       

"அதெல்லாம் தேவையில்லீங்க அந்த பொணம் அதே கதவுக்கிட்டதாங்க இருக்கு" என்று தான் சொன்னதை வலியுறுத்தி அளவீட்டாளன் சுபேதாரிடம் சொன்னான்.

"யோவ் என்ன செயிறதுன்னு  எங்களுக்கு தெரியும்?  இருக்குதோ மெதந்து போயிட்டதோ? யார் கண்டது." என்றார் சுபேதார்.

"சரி ஐயா உங்க திருப்திக்கு நீங்க போய் பார்த்துக்கங்க" என்றான் அளவீட்டாளன்.

சுபேதார் முன்ஷியைப்பார்த்து  "யாருக்கும் இது தெரியக்கூடாது. படகுகாரன்கிட்ட சத்தம் போடாதேன்னு முன்கூட்டியே சொல்லிடுங்க. சரியா எண்ணி பார்த்திட்டு வந்து சேருங்க' என்றார்

"சரிங்கையா அப்படியே செஞ்சிடுறேன் " என்றார் முன்ஷி.

"யோவ் இந்தாள கூப்பிட்டுக்கிட்டு போங்கையா.சாப்பிட்டானோ, சாப்பிடலியோ தெரியல" என்றார் சுபேதார்.

"எனக்கு பசிக்கலையா" என்றான் அளவீட்டாளன்.

"யோவ் வெட்கப்படாத சாப்பிடுயா. கடவுள் தர ரொட்டிய. முன்ஷி எனக்கு ஓட்டல்ல சாப்பாடு சொல்லிட்டு இவருக்கும் வாங்கித்தாங்கய்யா . நல்லமனுஷன். இவன் தான் கொலைக்கேசுக்கு சாட்சி. ரொம்ப  தைரியமான ஆள்தான்."என்றான் சுபேதார்.
"சந்தேகமில்லைங்க  நீங்க சொன்னது சரிதாங்க. இதுக்கு ரொம்ப  தைரியம் வேனுங்க" ஆமோதித்த முன்ஷி "வாங்க தம்பி சாப்பிடலாம் "என்று அழைத்தார்.

சுபேதார்  முன்ஷியும் அவனைப் பாராட்டியதில் களைப்பே போய்விட்டது. தன்னை சுத்திவிட்டதற்காக சுக்குர் காவல் நிலைய சுபேதார் மீது கோபமாக வந்தது. முன்ஷியின் அறைக்கு வந்தவன் ரொட்டிகளை சாப்பிட்டான். காலை நீட்டி சாய்ந்ததில் தூக்கம் வந்துவிட்டது. சுபேதார் அழைத்ததாக கூறினார். அறைக்குள் நுழைந்ததும் சுபேதார் அளவீட்டாளனைப் பார்த்து " யோவ் பொணம் 33வது கதவுக்கிட்ட இருக்குதாம் அது எங்க எல்லைல வரலியே" என்றார்.

"அது எப்படிங்கையா நானே பார்தேனே 34வது கதவுகிட்டதான இருந்தது "

"இதப்பாருய்யா நீ மறந்திட்டிருக்கலாம் இல்லன்னா ஒரு வேள பொணமே தண்ணியில மெதந்து போயிருக்கலாம் "

"ஐயா எனக்கு என்ன நடக்குதுன்னே புரியல தலையே சுத்துது "என்றான் அளவீட்டாளன்.
சுக்குர் சுபேதார் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன எனக்கு சம்பநந்தம் இல்லாத எல்லையில நான் எப்படி பொறுப்பேத்துக்க முடியும்?"

"ஆனா ஐயா கதவுல தான் ஒட்டியிருந்தது எப்படி நகந்திருக்கும்னு எனக்கு புரியலீங்க" என்று சுபேதாரைப்பார்த்து அளவீட்டாளன் கேட்டான்.

"இங்கபாருய்யா இப்ப நீ வீட்டுக்குப்போ. நிதானமா எல்லா கதவையும் எண்ணு. உண்மையிலே அந்த பொணம்   34வது கதவுல இருந்தா என்கிட்ட ஒருவார்த்த சொல்லி அனுப்பு நான் வந்து விசாரிச்சிக்கிறேன் சரியா?" என்றார் சுபேதார்.

அளவீட்டாளன் வெளியே வந்தான். சுக்குர் நோக்கி நடந்தான் ஆனால் பெரிய பாதையில் செல்லாமல் அணைக்கட்டுக்குபோகும்  குறுக்கு வழியில் நடந்தான். சரியாக எண்ணிப்பார்த்து விட்டு பிறகு சுக்குர் சுபேதாரைப்பார்ப்பது எனத்தீர்மானித்தான்.34வது நோக்கி நடந்தான் அங்கே பிணம் இல்லை. கொஞ்சம் நடந்து 33வது கதவில் எட்டிப்பார்த்தான். அங்கே பிணம் இருந்தது. அங்கேதான்  இருக்கிறதா என்று உறுதிப்டுத்திக்கொண்டான்.

சந்தேகத்தை தீர்த்துக்கொண்டு மீண்டும் சுக்குர் காவல நிலையத்துக்கு வந்தான். தூரத்தில் இவன் வருவதைப்பார்த்த சுபேதார் "அட எழவே இவன் ஏண்டா திரும்ப வர்ரான்"என தலையில் அடித்துக்கொண்டார்.

உள்ளே நுழைந்ததும் அளவீட்டாளன் சுபேதாரைப்பார்ப்பது "ஐயா, ரோஹ்ரி காவல நிலையத்துக்கு போயிருந்தேன் அங்கிருந்த சுபேதார் ஒரு ஆளை அனுப்பி அணைக்கட்ட பார்த்துட்டு வரச்சொன்னார். அந்த பொணம் 33வது கேட்லதான் இருக்குதாம் அதுதான் அவர் இங்க அனுப்பிவச்சாரு"என்றான்  அளவீட்டாளன்.

"உட்காருய்யா...."என்றார் சுபேதார் கோபமாக.

"நீ வேலையில இருக்கும் போது உன் எடத்துலதான் கொலை நடந்திருக்கு. நீ ஒரு இடத்தில் இருந்து பிணத்தை இன்னொரு இடத்துக்கு நகர்த்திட்டு வந்திருக்கே இது கொலை பண்ணதுக்கு சமமான குத்தம். முன்ஷி இந்த குத்தத்துக்கு என்ன செக்ஷன் சொல்லுங்க என்றார் சுபேதார்.

"யோவ் இங்க வாய்யா என்ன செக்ஷன்னு சொல்றேன்" என்றான்முன்ஷி.

"ஐயா விட்டுடுங்கையா! அது எங்குத்தம் தாங்க" என்ற அளவீட்டாளன் உடைந்து கெஞ்சினான்.

"சந்தேகமில்ல நீதான் குத்தவாளி. அதுமட்டுமல்ல இந்த காவல் நிலையத்துக்கும்  அந்த காவல் நிலையத்துக்கும் சண்டயமூட்டிவுடுற. ரெண்டு ஆப்பீசரு நடுவுல மாட்டுனா காணாம போய்டுவே" என்று எச்சரித்தார் சுபேதார்.

"ஐயா அப்படியெல்லாம் இல்லீங்க என்ன நம்புங்க நான் ஒண்ணும் சண்ட  மூட்டலீங்க அதுமாதிரி பொணத்தயும் நான் நகர்த்தவே இல்லீங்க" என்றான் அளவீட்டாளன்.

"பின்ன எப்படி 33வது எடத்துக்குப்போச்சி?"என்று எரிந்து விழுந்தார் சுபேதார்.

"கடவுள் மேல சத்தியங்க. எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.  எனக்கு ஒண்ணும் ஓடலீங்க. நானே காலையில என் கண்ணாலே பார்த்தேங்க பொணம் 34வது கதவுலதாங்க இருந்தது. ஆனா ரோஹ்ரிக்கு போய்வ்ந்து பார்க்கிறேங்க 33வது கதவுல இருக்குதுங்க."

"பிண்ண யார்யா நகர்த்திவிட்டது பிசாசா?" என்றார்.

"ஐயா ரோஹ்ரி சுபேதார் சொன்னாருங்க. ஆத்து வெள்ளத்துல அடிச்சி நகர்ந்திருக்கும்னு...."என்று அளவீட்டாளன் இழுத்தான்

சுபேதார் கொஞ்சநேரம் யோசித்தார். எதயோ தியானம் செய்வதுபோல் இருந்தவர் நினைவுக்கு வந்து "ஆமாய்யா ஆறுன்னா ராஜாமாதிரிய்யா? என்றார்.

"ஐயா அப்படின்னா என் புகாரை எடுத்திக்கிறீங்களா? ஐயா இப்பவே நேரமாயிட்டுதுங்க" என்றான்.

"ஆமாம்,இப்பவே ராத்திரியாயிடுச்சி இப்பபோய் எவன் பொணத்த கொண்டுவருவான்?' என்று சுபேதார் கேட்டார்.

"அப்ப நான்  என்னசெய்யட்டுங்கையா "என்றான் அளவீட்டாளன்.

"காலையில வா நான் ராத்திரி புகாரை தயார் பண்றேன். நீ வந்து கையெழுத்து போட்டுவிட்டு போய்விடு" என்றார் சுபேதர்.

"ஆனா ஐயா ரெண்டு நாளும் பொண்ம் தண்ணியில கிடந்தா அடையாளமே தெரியாத போயிடுங்களே" என்றான் அளவீட்டாளன்.

 "இத பாருய்யா இந்த ராத்திரியில என்னாலஒண்ணும் செய்யமுடியாது.காலையில வா" என்றார் சுபேதார்.

மறுநாள் காலை,சுக்குருக்கு புறப்பட தயாரானான். கதவு 33அடையும்போது பிணத்தை  எட்டிப்பார்க்க தோன்றியது.பிணம் இப்போது அடையாளம் தெரியாமல் போயிருக்கும் என்று நினைத்தான். சுவற்றில் கைவைத்து   எட்டிகீழே பார்த்தான். அவன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை. அங்கே பிணம் இல்லை.அவன் அடுத்த கதவுக்குச்சென்று பார்த்தான். அங்கே 34வது கதவில் பிணம் மாட்டியிருந்தது.அவன் ஒரு கணம் நடைபாதையில் நின்றான். அவன் சுக்குருக்கும் செல்லவில்லை ரொஹ்ரிக்கும் செல்லவில்லை. இரு திசைகளிலும் இருண்டிருந்தன. இருதலைக்கொள்ளியாக என்ன செய்வது என யோசித்துகொண்டிருந்தான் சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் அக்கம் பக்கத்தில் இல்லை. சுவற்றில் ஏறி சாவியின் மீது கையை வைத்தான்.
காலை சிற்றுண்டிநேரம் அள்வீட்டாளன் தன் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான். சர்வேய்ர் கேட்டார். "குலாமு, எந்த சுபேதார்கிட்ட பிணத்த ஒப்படைத்த"
அளவீட்டாளன் சொன்னான் " ரெண்டு சுபேதாரும் வாங்கவில்லை. அதனால பினத்தை காட்டாத்துல ஒப்படச்சிட்டேங்க இன்னேரம் அரபிக்கடலுக்கு போய் சேர்ந்திருக்கும்"

  நம்புழுதி  
                    

Thursday, December 30, 2010

சிறுகதை

                                            நாற்பதைக் கடந்தவள்.                                  

எப்போதும் வாங்காத வீட்டின் வாசலில் தயிர்க்கூடையை   ஓரமாகா இறக்கினாள். அவள் விட்டுக்காரரின் டவலாகத்தான் இருக்கும். இவள் அவருக்கு மடிந்து கிடப்பதுபோல் அவர் டவல் இவள் தலைக்கு மேலும் அன்னக்கூடைக்கு கீழுமாக சுருண்டு  கிடந்தது. குனியுமுன்னே சீமாடுகோள் கீழே விழுந்து மண்ணுளிப்பாம்பாக   நீண்டுவிட்டது. அன்னக்கூடைக்குள் ஒரு குண்டான் மூடியிருந்தது. அதன் மீது சில்லரைகள் கிடந்தது. உழைத்து மொழுப் மொழுப்பான கொட்டாங்கச்சி அன்னக்கூடைக்கும் குண்டனுக்கும் இடையில் இடுக்கி இருந்தது.  இன்னொரு பக்கத்தில்  கையை துடைக்க கந்தை துணி ஒன்று பதுங்கியிருந்தது. பத்தும் ஐந்தும் சில்லரை அன்னக்கூடைக்குள் கிடந்தது. அவள் கூடையின் பக்கத்தில் வெறுந்தரையில் படுத்துவிட்டாள்.

அந்த வீட்டுக்காரி உருவத்திற்கு ஏற்றார்போல் பொட்டு பெரியதாக வைத்திருந்தாள். அவள் வெளியே வந்தாள். படுத்துக்கிடந்த தயிர்க்காரியை பார்த்து சற்று அதிர்ந்தாள். கிட்டத்தில் வந்தவள் எழுப்பாமல் தயிர் குண்டானின் மூடியை திறந்துப் பார்த்தாள். பாதி காலியாகியிருந்தது. எந்திரம் கட்செய்யும் ஒழுங்காக தயிர் பில்லைகள் மோரோடு  பினைந்திருந்தது. நெய்யாக மாறும்  பசை குண்டானில் ஒட்டியிருந்தது. அது தயிர் இருந்த அடையாளத்தைக் காட்டியது. இவளுக்கு வேரென்ன பிரச்சனை ஏன் படுத்துவிட்டாள். வீட்டில் இருந்த தன் மருமகளை அழைத்து "கொஞ்சம் தண்ணி மொண்டாம்மா" என்று பதட்டத்துடன் சொன்னாள். தன் வீட்டு எதிரில் இப்படி கிடப்பதால் ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடந்துவிட்டால் என்ற பயம் உள்ளுக்குள். "ஏம்மா. தயிர்க்காரம்மா "என்று பதட்டத்துடன் எழுப்பி முகத்தில் தண்ணீர்  தெளித்தாள். 

படுத்துக்கிடந்தவள் ஆக்கோரஷமாக எழுந்து "போடி பாதகத்தி. நான் தயிர்காரம்மா இல்லடி. உன் அம்மா வந்திருக்கிறேன்டி. உன் வாசளுக்கு நேரா மாசக்கணக்கிலே நெறமாச கர்பிணியா நின்னுங்கெடுக்கிறேனே, அத கவனிக்காம இவுளுக்கு தண்ணி கொண்டாந்து தெளிக்கிறியா?" என்று தலையை இப்படியும் அப்படியும் சிலுப்பினாள். அன்னியன் படத்தில் விக்கிரம் போல் மயிர்கள் பிரிந்து விட்டது. முகப்பக்கம் அவ்வளவாக விழவில்லை. சொம்புத் தண்ணிர் தலைதெறிக்க  விழுந்து உருண்டது. மருமகள் பயந்தாள்  தயிர்க்காரியின் வாய்ச்சொல்லை கவனித்தார்கள்.
  
தெருவில் இருந்த ஆண்கள் கூடிவிட்டார்கள். "இன்னாம்மா இன்னா ஆச்சி" என்று கேட்பதற்குள் "அடே,  புடிங்கிகளே.உங்களுக்கு கூடவாடா பார்வ இல்ல. ரோட்டுல போற வர பதினாறு வயசுப் பொண்ணுங்களக்கூட பத்திக்கிறா மாதிரி பாக்கிறிங்க.ரோட்டுப் பக்கத்தில நிக்கிற என்ன தெரியலையா. அடே, என் வயிற போறவன் வரவனெல்லாம் பாக்கிறானேடா   என் வயித்த மூடி வெக்கலனா, உங்க பொண்டாட்டி புள்ள குட்டிங்க   வயிறெல்லாம்  வெடிக்க வச்சிடுவேண்டா."

இப்படி கத்தியதும் கூடியிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்ல ஆரம்பித்தார்கள். தயிர்க்காரி கண்ணை மூடிக்கொண்டு கையை மேலே தூக்கி சற்று முன்னும் பின்னும் நடந்தாள். அதற்குள் யாரோ ஒருவர் பக்கத்தில் கைக்கு எட்டும்படியாக ஒரு கொத்து ஒடித்தார். "அடே, யார்ரா அவன் கொழுந்த ஒடிச்சது. என் வெரல ஒடிக்கிறா மாதிரி இருக்குடா" ஒருத்தன் "யோ, யார்யா அது. அம்மா கண்ணு முன்னாலேயே ஒடிக்கிறது. வேற எங்கனா போயி ரெண்டு கொத்து ஒடிச்சாய்யா.  அம்மாவுக்கு  ரெண்டு கையிலயும் குடுக்கலாம்." என்றான்.

தன் அனுபவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பெரியவர் "அம்மா இவ்ளோ நாளா ஏதோ நெழல் தரவளாத்தான் பாத்தோம். ஏனோ நீ இந்த அவதாரம் எடுத்துக்கிற எங்கள ஒன்னும் பண்ணிடாதம்மா நாளைக்கே உனக்கு பட்டாடசாத்தி, பண்ணீர் மாலைப்போட்டு வலகாப்பு செய்திடுறோம் ."

"பெரியவுரே தள்ளிப்போ அப்பால. நாளைக்குனு  நல்லாத்தான் சொல்றே. அதுக்குள்ள ஆத்தாவுக்கு கோவம் வந்து எதுனா பண்ணிடுச்சினா, இன்னிக்கே செய்துடனும்." என்று மற்றவர்களின் நல்ல விஷயங்களையும் தள்ளிவிட்டு தவறானதாய் இருந்தாலும் தனதை மட்டும் நிறுவுபவனாகச் சொன்னான். பெண் பகுதியிலிருந்து அநேகமாக பல்லில்லாத கிழவியாகத்தான் இருக்கவேண்டும். பேச்சு  தெளிவில்லாமல் பிறந்தது. "செய்யும்போது செய்யுங்கபா. வெறும் வயித்த காட்டிக்கினு  நிக்கிறா. மொதல்ல யாருவீட்டிலனா புது பொடவ இருந்தா கொண்டாங்கபா. மொதல்ல அம்மாவயித்துக்கு சுத்திவுடுவோம்." 

"அதுக்குத்தான்யா ஒரு வாழ்ந்து கெட்ட வயசானவங்க வேணும். கரைட்டா சொன்னது பாரு கெழவி. கூட்டத்தில் யாரோ ஒரு வாலிபன் சொன்னான். அது நக்கல் போலவும் இருந்தது. ஜனங்கள் கூடிப்பேசிக்கொண்டார்கள்.  தெருவில் இவ்வளவு என்று பாகம் வைத்தார்கள். பெண்கள் அவரவர்கள் வேகமாக செயலில் இறங்கினார்கள். இரண்டு பெண்கள் தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு பம்ப்பு குழாய்க்குச் சென்றார்கள்.இரண்டு பேர் சில்லரை கடைக்கு வேணாம் மொத்தவியாபார கடைக்கு பொவோம் என்றார்கள். மஞ்சல் தூள்  இரண்டு கிலோ, குங்குமம் அரைக்கிலோ, கற்பூரம் கால் கிலோ போதும்  என்று வாய்கணக்காகப் போட்டார்கள். ஆம்பிளைகள் யார்பா போனது. வசூல் ஆனவரிக் கும் எடுத்தும் போயி பூவு, மாலை, தாலிலாம் வாங்கிக்கினு வாங்கப்பா" என்று அடையாளம் கானமுடியாத குரல் சொன்னது. அந்த இடத்தில் ஜனங்கள் குறுக்கும் நெடுக்குமாக மிதந்தார்கள்.

தயிர்காரி அன்னக்கூடையை தன் கிட்டத்தில் ஓரமாக வைத்து உட்கார்ந்தாள். அவள் பக்கத்தில் யாரும் இல்லை. அவளுக்கு சற்று நாவரண்டது போல் இருந்தது. தன் கூடையில் இருந்த கொட்டாங்கச்சியை எடுத்து தயிரை ஒரு கலக்கு லேசா கலக்கி இரண்டு வாய் மொண்டு உற்றிக்கொண்டாள். அமைதியாக சீமாடுகோள் சுற்றி தலையில் வைத்துக்கொண்டு கிளம்பினாள்.

பெரியப்பொட்டுக்காரியின் நாலாவது வீட்டுக்காரி விளக்குமாரை எடுத்து வந்து, அந்த இடத்தை சுற்றி பெருக்கினாள். இதுவரை பெரிய பொட்டுக்காரியும், அவளும் கூடிப்பேசிய நாளே இல்லை. அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள். ஒரு முரை நாளாவது வீட்டுக்காரிக்கு அவள் கணவன் புடவை எடுத்து வந்தான். அந்த வாரத்திலே பெரிய பொட்டுக்காரி  அதே புடவை போலவே  கட்டியிருந்தாள். அதற்கு பிறகுதான் இப்படி தொடர்ந்தது.  அதோடு இன்று தான் பெரிய பொட்டுக்காரியின் வசலுக்கு வந்தாள்.

"இரும்மா, தண்ணி எத்தாரப் போயிக்கிறாங்க. ஒரு நாலடி உயரத்துக்கு சுத்தி தண்ணி ஊத்தி கழுவிட்டு அப்புறம்மா பெருக்கலாம்." என்று பெரிய பொட்டுக்காரிதான் அவளிடம் சொன்னாள். மூன்று நான்கு குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து வைத்தார்கள். ஒருவன் எங்கிருந்தோ மூன்று புதிய செங்கல்  கொண்டுவந்து வைத்தான். அவன்  அதிக நேரம் டீக்கடைகளில் நிற்பான்.  இதற்கிடையில் வாயோடு வாய் கடந்து கடந்து  பல மையில் சுற்றளவில் சங்கதி பரவிற்று. வாசனை கண்டுவிட்ட  எறும்பு கூட்டமாக வரிசை வரிசையாய் வரத்தொடங்கி விட்டார்கள்.

இபோது சுற்றி தண்ணீர் ஊற்றினார்கள்.ஒருத்தி லேசாகத் தேய்த்தாள். லேசாக  தூள் பெயர்ந்து விழுந்தது. தண்ணீர் ஊற்றியவள் பாத்துடி அம்மாவின் தோல்பிச்சிக்கிது" என்றாள். இடுப்பில் டவல்  கட்டிக்கொண்ட ஒருத்தி  ஈரத்தோடு மஞ்சல் தூளை  நிறைய எடுத்து பூசினாள். மறந்துட்டேன் தண்ணீர் ஊற்றும் முன்னே ரோட்டில் போவோர் வருவோர் கர்ப்பத்தை  பார்த்து விடாதபடி இரண்டு பேர் புது சேலையை பிரித்து மறைவாக பிடித்திருந்தார்கள். மஞ்சல் பூசியபிறகு கர்ப்பத்தின்   மீதி குங்குமம் அள்ளி அப்பினார்கள். மறைவுக்கு பிடித்திருந்த புடவையை சுற்றி கட்டிவிட்டார்கள். நிறைய பேர் மூன்று மீட்டர் சுற்றளவுள்ள  சரிகை வைத்த பாவாடை மினிமினுப்புடன் தைத்து வந்தார்கள். அப்படியே மேலே மேலே கட்டிவிட்டார்கள். திடீர் குருக்களாகிய சில பெண்கள் சுறு சுறுப்புடன் வேலை செய்தார்கள். வருபவர்கள் தேங்கா, பழம், பூ, கற்பூரம் கொண்டு வருகிறார்கள். இடம் இன்னும் பூஜைக்காக முழுமையாக ஆய்த்தமாக வில்லை. கூட்டத்த குறைக்க பூசை ஒரு பக்கம்.  வேலை ஒரு பக்கம் நடந்தது.     அதை வாங்கி பூசைக்கு பயன்படுத்திவிட்டு, பதிலுக்கு  குங்குமம் திருநீரு கொடுத்தார்கள். நான்காய் மடித்த நீண்ட தாலிக்கயிற்றில்  உயர் வகை, நடுத்தரம், சாதாரனம். சிறியது பெரியது என்று வித்தியாசமில்லாமல் அந்த கயிற்றில் நுழைத்தார்கள். இரண்டரை மீட்டருக்கு வளையல்  நிறைந்து விட்டது. நான்கு பேராக பத்திரமாக பிடித்து கர்ப்பத்திற்கு  மேலே கட்டினார்கள். இரண்டரை மீட்டர் நீளமான கயிறு முடிச்சிப்போடும்  அளவுதான் மிச்சமிருந்தது.  மூன்று செங்கல் கழுவி நட்டார்கள். குழத்த மஞ்சல் பூசி  குறுக்காக குங்கும கோடுகள் போட்டார்கள்.

வந்தவர்கள்  எல்லாம் தேங்காயும்  கற்பூரமும் கொண்டு வந்தார்கள். அந்த இடம் சுற்றி கற்பூரம் கலந்த வாசனையும் கரும் புகையும் வந்தது.வத்தியின் வாசனை கமகமத்தது. பெரியப் பொட்டுகாரியும் இன்னும் சில பெண்களும் ஜனங்களை கட்டுப்படுத்த போராடினார்கள். " இருங்கம்மா.  அம்மா, எல்லார் கற்பூரத்தையும் ஏத்துக்குவா.பெரிய பொட்டுக்காரிக்கு கடவுள் வசனமோ, பாட்டோ, மந்திரமோ எதுவும் தெரியவில்லை. "அம்மா அவுங்கள காப்பாத்தும்மா. ஆத்தா இவுங்கள காப்பாத்தும்மா" என்று மட்டும் சொல்கிறாள்.  திரையரங்கின் எலி பொந்துக்குள் கையை விடுவதுபோல் சிலருக்கு தட்டில் வைத்திருக்கும் குங்குமம் திருநீரை அந்த நெரிசலிலும்   கையை நுழைத்து கொடுத்துவிடுகின்றாள். அவர்கள் சற்று தள்ளி இருப்பதால் காப்பாத்து என்று சொல்ல வில்லை. சிலர் முட்டி மோதி பக்தியோடு  முன்னே வந்து விடுகிறார்கள்.தேங்கா கற்பூரம் நிறைந்த தட்டை கொடுக்கிறார்கள். கொடுத்தவர்கள்  தெய்வத்திடமிருந்து  எதோ மாற்று வேண்டி ஆவலுடன் நிற்கிறார்கள். அவர்கள் ஆவலை பூர்த்திசெய்ய முடியவில்லை. அந்த அதிருப்தி  விஷ்வரூபம் எடுக்காமல் இருக்க, அவர்களுக்கு மட்டும்  நெற்றியில் பொட்டிட்டு, குங்குமம், திருநீர்,  பிரசாதமாகவும்  கொடுத்து "ஆத்தா இவுங்களை காப்பாத்தும்மா"  என்று அனுப்பிவிட்டாள். தட்டில் சில ரூபா நோட்டுகளும் இருந்தது.

சத்தத்துடன்  கூட்டமும் அதிகமானது. பத்திரிகையாளர்கள் சிலர் வந்து கேமராவை இரு கைகளாலும் உயரத்தூக்கி படமெடுத்தார்கள்.அவர்களின் முகத்த்தில் ஏதோ பிரம்மை படிந்திருந்தது. இப்படியும்  அப்படியும் நடந்து மிரண்டு மிரண்டு படமெடுத்தார்கள்.எப்படி எக்கினாலும் கர்ப்பத்தை  முழுமையாக படமெடுக்க முடியவில்லை. பத்திரிகையாளர் வந்தவுடன்.இன்னும் கூட்டத்தில் பர பரப்பு அதிகமானது.சாலையின் இரு ஓரங்களிலும் திடீர் கடைகள்  தோன்றியிருந்தது. குருவிக்காரர்கள் பின்னு, மணி, சீப்பு  சுற்றிச் சுற்றி விற்று வந்தார்கள்.

புதிதாக அந்த சாலையில் வந்தவர்கள் "இன்னாங்க சங்கதி' என்று  வாய்பிளந்து கேட்கிறார்கள். சிலர் இரு சக்கர வாகணங்களில் போவோர் கூட்டத்தினின்று சற்று விலகி ஓரமாகச்சென்று விசாரிக்கிறார்கள். விஷயம் தெரிந்து கொண்டபிறகு எத்தனையோ பரபரப்புகளில் இதுவும் ஒன்று என்று உச்கொட்டி  சென்றார்கள்.  பத்திரிகையாளர்களில் சிலர் இந்தப்பக்கமும்  அந்தப்பக்கமும்  நடந்து படங்களை பதிவு செய்தார்கள். அதில் ஒருவர் அந்த வீதில் அடிக்கடி சுற்றியவர்தான். ரோட்டின் முகப்பிலேயே இருக்கிறது. எத்தனையோ நாள் இப்பகுதியில் போகிறோம் வருகிறோம். இதை கவனிக்க வில்லையே. இதற்கு முன் இப்படி இருந்திருக்குமோ. அப்படியெல்லாம் இருக்காது என்று சொன்னால் பெரியபொட்டுக்காரியின் விளக்குமார்தான் பிய்ந்து விடும்.

எல்லா இடங்களிலும்  ஆளுமை செய்ய பெண்கள் குறைவகவே வருகிறார்கள். என்பதை மறுக்குமளவுக்கு கூட்டங்கூட்டமாய் வருகிறார்கள். இப்போது எல்லார் கையிலும்ஒரு தாலிக்கயிர் இருந்தது. அந்த கயிற்றின் நடுவில் மஞ்சல் கிழங்கு கட்டப்பட்டு இருந்தது. வளையளிலும்  புடவையிலும் தாலியை குத்தினார்கள். பூவும் குத்தி விட்டார்கள்.  கலர்க்கலரான ரிப்பன் காற்றில் கூத்தாடியது. நகைகளால் அலங்கரித்த அம்மன் போட்டா ஒன்று  பச்சை நிறப்பட்டுப் புடவையில் ஜொலித்தது.    அதை மஞ்சல் பூசிய கல்லுகள் பக்கத்தில் வைத்தார்கள். பொழுது மாலையைத் தொட தொடங்கியிருந்தது. இப்பொது காற்று பலமாக வீச ஆரம்பித்தது.  சிலர் வான் மேகத்தை கணித்து  இரமணரானார்கள். சிலர் மழை வாசனை வருகிறது என்றார்கள். காற்றில் உதிர்ந்த  சிறு சிறு பழுப்பு  நரம்பு போன்ற இறகு  மேலிருந்து கழன்று  விழுந்தது.

தூரல் வந்துவிட்டது. ஜனங்கள் அங்கங்கே நனையாமல் இருக்க  இடம் தேடி பதுங்கினார்கள்.  அந்த நேரம்பார்த்து சரக்கு லாரி ஒன்று வந்தது. அதைப்பார்த்ததும்  சிலர் எரிச்சலடைந்தார்கள். பெரிய பொட்டுக்காரி "யோ, இந்தப்பக்கம் ஏன்யா வந்திங்க. ஒதுங்கிப் போயா' என்று மேலேப்பார்த்தாள். லாரிக்காரன் நாம்  ஓரமாகத்தானே போகிறோம் என்று நினைத்தார். லாரிசரக்கில்  குறுக்காக ஒரு கயிறு கட்டியிருந்தது. கொழுந்துகள் இல்லாதவை மாட்டி கொண்டு கீழே விழுந்தது.விழுந்த வேகத்தில் இரண்டு மூன்று துண்டுகளாக முறிந்து புரண்டு விழுந்தது. ஒரு துண்டு கீழே வைத்திருந்த  போட்டாவின் காலடியில் விழுந்தது. பெரிய பொட்டுக்காரி பார்ககவில்லை. இப்போது பெரிய மாலையைக் கொண்டுவந்தார்கள். இதை எப்படி போடுவது என்று யோசித்தார்கள். மாலை  அதிக  வெயிட் அந்த கயிற்றில் கட்டலாம்  ஆனால் நிற்காது. பொட்டுக்காரி "ஆணி அடித்து அழகாய் மாட்டிவிடலாம் ."என்றாள். மாலை நன்றாக பூத்திருந்தது. தேடிப்பிடித்து ஆணிகளை கொண்டுவந்தான். ஆணியை கையில் வாங்கியவன். "சுத்தி எத்தாரலையா" என்றான். "அட, இன்னாபா நீ.  இந்தா. இந்த கல்லுல நெருக்கு   பச்சமரத்துல சல்லுனு எறங்கும்."

பொட்டுக்காரி "எப்பா வயித்துக்கு கொஞ்சம் மேலே, ஜான் எடவெளி வெச்சி இந்தப் பக்கம் ஒன்னு, கொஞ்சம்  தள்ளி அந்த பக்கம் ஒன்னு அடி" என்றாள். மீண்டும் அவளே "ஆம், போதும் இரண்டுபேரும் மாலையப்புடுச்சி நடுப்புற போடுங்க" என்று சற்று தூர நின்று பார்த்தாள். மாலைப்போட்டவர்களில் ஒருவன் 'நார்ப்பது வருஷத்திற்கு மேலாக இது கர்பம்மாதிரி தான் தெரியுது' என்று தனக்குள் நினைத்தான்.

நம்புழுதி 

Tuesday, December 21, 2010

கவிதை

கிறிஸ்மஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கூர்வாளின்
இடையறாத  வீச்சில்
இறைமரம் இரத்தம் சிந்தும்.

கிளைகள் முறிந்து கூடுகள் சரிந்து
சின்னப் பறவைகளும் 
வனத்துப் பூச்சிகளும்
குட்டி அணில்களும்
உள்ளும் புறமும்
அகதிகளாக  அலைந்து திரியும்.

காலத்தின் கோலத்தால்
அகதிகளே வாளாவதும்
அகதிகளாக  வாளாவதும் நிகழ்ந்துவிடும்.

குருதிநின்று கிளையும் கூடும்  மீண்டும் மரத்தில் தோன்ற
வாளை வீசிவிட்டு
தொலைத்த கிறிஸ்தவ அருமருந்தை
மீட்டுப் பெற வேண்டும்-
பிறப்பை நோக்கிய உள்முகப்  பயணத்தால். 

அ.எக்பர்ட் சச்சிதானந்தம்.

   சிறுகதை எழுத்தாளர்.

கணையாழி தொடங்கி 'நுகம்' சிறுகதை தொகுப்புடன் நின்ற எழுத்துப்பணி
மீண்டும் தொடங்கியதில் மகிழ்ச்சி.
நம்புழுதி

Saturday, December 11, 2010

சிறுகதை

               இரு பக்கங்களைக் கையாளும் மெளனத்தீ

வருஷத்தில் ஒரு நாள் இப்படித்தான் பிள்ளைகளுக்கு தோட்டம்  துறவுகள் மீது ஒரு பிடிப்பு வரவேண்டும் என்பதற்காக டிராக்டரில் குட்டிக் குழந்தைகளுடன் பம்ப்பு செட்டிற்கு  வந்து தங்கிவிட்டு போவார்கள். நகரத்தின் எல்லை முடியும் வரை அவர்களுக்கு தேவையானதை வாங்க டிராக்டர் தள்ளி நிற்கும். ஒரு வழியாக வந்து நின்றது. அன்று காலை தொடங்கி மாலை வரை எல்லோருக்கும் எல்லா வேலைகளும் அங்கேதான். அவர்கள் வந்தாலே ஜெயிந்திக்கும், சக்திவேலுக்கும்தான் மூச்சிவிடமுடியாத வேலை. இந்த முறை புதுசாக நடேசன் மனைவியும் வந்திருந்தாள். அனைவரும் தங்கள் மதிப்பைக் காட்டிக்கொள்ள துடித்தனர். அதற்கு சக்திவேலும் ஜெயிந்தியும் பயன் பட்டார்கள். போதா குறைக்கு ஒன்பதாவது படிக்கும் தங்கள் மகளையும் இன்று பள்ளிக்கு அனுப்பவில்லை. நடேசன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தென்னந்தோப்புக்கு சென்றான்.   

பண்ணக்காரர் "போங்க, காலில ஆளுக்கு ரெண்டு எளனி குடிச்சிட்டு வாங்க. காலில ஜில்லுனு இருக்கும்." என்றான். சொன்னதும் கூட்டமாக தோப்புக்குள் சென்றார்கள். நடேசன் " டே வேலு வாடா, தேங்கா  அறத்துப்போடு" என்றான்.

சக்திவேல் மோட்டார் போட்டதும் தண்ணிர் தொட்டிக்குள் பீச்சி அடித்தது. அதைப் பார்த்ததும் பண்ணக்காரர் குட்டிகளுக்கு சந்தோசம். கைக்கு எட்டும்படியாக இருந்த தொட்டியின் கிட்டத்தில் ஓடிச்சென்று தண்ணீரைத்    தட்டி தட்டி   சத்தம் போட்டார்கள். பம்ப்பு செட்டை ஒட்டி வழு வழுப்பான திண்ணை இருந்தது.  பண்ணக்காரர் களைத்துப் போனவராய் திண்ணையில் சாய்ந்து ஓய்வெடுத்தார். திண்ணையில் உட்கார்ந்தால்  தோப்பும், மொத்த நிலமும் கண் பார்வையில் வரும். பண்ணக்காரர் மனைவி சிறுப் பிள்ளைகளை கிணற்றுப்பக்கம் போகாமல் தடுத்து தோப்புக்குள் கூட்டிச்சென்றாள். பம்ப்பு செட்டை சுற்றி இயற்கை வளங்கள் சூழ்ந்திருந்தது. இரண்டு ஜோடி மாடுகள் தனித்தனி மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவைகளால் அசைபோடுவதை நிறுத்த முடியவில்லை.

வேலு தன் மகளை கத்தி எடுத்து வரும்படி பணித்தான். தென்னை மரங்கள் ஒழுங்கான வருசையில் இருந்தது. தோப்புக்குள் வந்தவர்கள் மரத்தின் காய்களைப்பார்த்து " எனக்கு இந்த மரம், எனக்கு இந்த மரம் "என்று இரண்டு மூன்று மரங்களில் நின்றார்கள். சில பெரியவர்கள் செய்தது குழந்தைத் தனமாகவும் இருந்தது. நடேசனும் அவன் மனைவியும்  ஒரு மரத்தில் நின்றார்கள். வேலுவும் அங்கேதான் நின்றான். சாரதா இரண்டு கத்திகளை எடுத்து வந்தாள். வேலு கத்தியை வாங்கி இடுப்பில் சொருகினான். லாவகமாக மரம் ஏறினான். சற்று மேலே ஏற ஏற கீழே நின்றவர்களுக்கு வேலுவின் ஜட்டிக்குள் உப்பிகொண்டு இருந்தது தெரிந்தது. ஜெயிந்தி "இந்த மனுஷன் சோமகட்டு கட்டிக்கினு ஏறக்கூடாது." என்று நினைத்தாள்.

நடேசன் மனைவியும் பார்த்தாள். நடேசன் அவன் மானைவியைப் பார்த்தான். அவள் வேறு பக்கம் முகத்தை திருப்பினாள். மரங்கள் இருபது அடி உயரம் வளர்ந்து இருக்கும். வேலு மட்டைகளை பிடித்து ஏறி குருத்து மட்டையில் உட்கார்ந்தான். நல்ல இளனி குலையாய் வெட்டினான். தோப்பில் தரை சற்று ஈரமாய் இருந்தது. இளனி குலை கீழே விழுந்தும் சிதறவில்லை. ஆனால் தொப்புல் கொடி அறுந்து நான்கு மூலைக்கும் ஓடியது. ஜெயிந்தி ஒரு பக்கம், சாரதா ஒரு பக்கம் ஓடினார்கள். குலை விழுந்ததும் வேறு மரத்தண்டையில் நின்றிருந்த சிறுவர்கள் இங்கு ஓடிவந்தார்கள். நடேசன் பக்கமாய் ஓடிவந்த இளனியை ஜெயிந்தி குனிந்து எடுத்தாள். உள் ஆடை அணியாத அவள் மார்பு சாய்ந்து நிமிர்ந்தது. பக்கத்தில் உருண்டு ஓடும் இளனியை யாரும் குனிந்து எடுக்கவில்லை. ஜெயிந்தியும் சாரதாவுமே பொறுக்கிச் சேர்த்தார்கள். வேலு இறங்கினான்.

பிள்ளைகள் பெரிய இளனியாக  ஒன்று இரண்டு எடுத்து வைத்திருந்தார்கள். சக்திவேல் கையில் வைத்தவாறே வெட்டிக்கொடுத்தான். கத்தி மிகவும் சார்ப்பாக இருந்தது, தொழில் தெரிந்த வியாபாரியைப்போல் அவன் வெட்டு 'சரக்' என்று விழுந்தது. கையை மடித்து வெட்டும்போது  கையில் எழும் குன்றைக் கண்டு பண்ணக்கார  ஆட்கள் சற்று உள்ளுக்குள் அதிசயத்தார்கள். ஜெயிந்தியும் காய்ந்த தென்ன மட்டைமீது வைத்து நிதானமாய் வெட்டிக்கொடுத்தாள். அவளின் வெட்டுக்கள் இளனியில் சற்று சிலுமல்களாக இருந்தது. அதனால் பிள்ளைகள் சக்திவேல் வெட்டும் இளனிக்காகவே காத்திருந்தனர். ஜெயிந்தியின் ஒன்று இரண்டு இளனியை பெண்கள் வாங்கிக் கொண்டார்கள். மூன்றாவது இளனியை வெட்டி எழுந்தாள். நடேசன் வாங்க ஆய்த்தமானான். கத்தியை கீழே வைத்து இரண்டு கைகளாலும் நீட்டினாள். இளனியில் இருந்து வழிந்த தண்ணீர் ஜெயிந்திக்கு சில் உணர்வை எழுப்பியது. நடேசன் வாங்கும்போது விரல்கள் ஜெயிந்தியின் விரல்களைத் தொட்டது.  அவனுக்குள்ளும் அதே உணர்வு  எழும்பியது. சாரதா சாப்பிட்ட இளனி குடுக்கைகளை, பொறுக்கி ஓரமாகப்போட்டாள். மூவரும் உர்ச்சாகமாய் வந்தவர்களுக்கு நாள் முழுக்க பணிவிடை செய்தார்கள். டிராக்டர் கிளம்பியது.  

சக்திவேல் தன் குடும்பத்தோடு மனம் கசந்து, வெளியூரிலிருந்து மனைவி,தனது மகளையும் அழைத்துக்கொண்டு இரண்டு வருஷங்களுக்கு முன் பிழைப்பு தேடிவந்தான். வந்த இடத்தில் சிலர்  பண்ணையாரிடம் அழைத்து வந்தார்கள் பண்ணக்காரர், "என் பம்ப்பு செட்டாண்டையே வீடு கட்டித்தாறேன்  அதில் தங்கி தோட்டந் துறவுகளை பாத்துக்கோ" என்றார்.அதிலிருந்து இரண்டு வருஷங்களாய் இந்த குடிசையிலேதான் குடும்பம்.குடிசை நான்கடி மண் சுவற்றால் எழும்பி அதன் மேல் தென்னங்கீற்றுகளால் வேயப்பட்டு இருந்தது.  சிறிய கதவு குடிசையின் நடுவாக இருந்தது. முக்கால் அடிப்பலகை மூன்றை இனைத்த பலகை இனைப்பிலேயே இடைவெளி இருந்தது. கதவுக்கு வெளியிலிருந்து கூர்ந்து கவனித்தால் குடிசைக்குள் ஒட்டு மொத்த இடமும் தெரிந்துவிடும் ஜெயிந்தி சிறிய குடிசைக்குள் பொருட்களை சுத்தமாக வைத்திருந்தாள். அடுப்பு குடிசைக்கு வெளியே போட்டிருந்தாள். பம்ப்பு செட்டை ஒட்டியிருந்த திண்ணைக்கு சற்றுத்தள்ளி பக்கவாட்டில் இருந்தது. குடிசைக்கும் நகரத்திற்கும்  நான்கு கிலோமிட்டர்   தூரம் இருக்கும். பண்ணக்காரர்  சக்திவேலுக்கு ஒரு சைக்கிள் கொடுத்திருந்தார். அவனுக்கு வருஷத்துக்கு இவ்வளவு நெல், மாதம் இவ்வளவு சிறு தொகை பேசியிருந்தார்கள்.' வீட்டின் சின்னப் பிள்ளைகளை கடைக்கு அனுப்புவது போல' ஜெயிந்தியின் சாரதாவின் உழைப்புகள் கணக்கில்  வராது. சக்திவேல் ஜெயிந்தியை அன்பாக பார்த்து கொண்டான். எப்பவாவது நகரத்திற்கு சென்று வரும்போது பொரி உருண்டை குழி பணியாரம் வாங்கி வருவான். குடியோ ஊதாரித்தனமோ இல்லை. சில நேரம் கூலியாட்கள் வேலை முடிந்து சாராயக்கடைக்கு  போகும்போது வேலு ஒதுங்கிவிடுவான். ஜெயிந்தியும் துடுக்குத் தனமாக பேசியது கிடையாது.  எந்த வேலையானாலும் சுத்தமாக செய்வாள். மகளின் நகர்புரத்து படிப்புக்கும், தான் குடியிருக்கும் இடத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதாலும் ஜெயிந்தி சற்று நிம்மதியாகவே இருந்தாள். இந்த வருஷமும் கடந்தது..


பண்ணக்காரர் நகரில் பெரிய கடை துவங்கினார். மகன் நடேசனை கொஞ்சநாள் நிலங்களை கவனிக்கச் சொன்னார். நகர்புரத்தில் முக்கிய பள்ளியில் படித்தவன் என்றாலும் விவசாயத்தை கவனிக்க மறுப்பு ஏதும் சொல்லவில்லை. பண்ணக்காரர் "கொஞ்ச நாள் பார்ரா, கடைய ஸ்டெடிபண்ணிட்டு உன்ன கடையில உட்கார வச்சிடுறேன்" என்றார். நடேசன்  டூவீலரில் வந்து கிணற்றுக்கு ஓரமாக நிறுத்தினான். சாரதா பள்ளிக்குச் சென்றாள். அவன் பார்த்தான். அவள் பார்க்காமல் போனாள்."வேலு"  என்று நடேசன் குடிசயைப்பார்த்து அழைத்தான். ஜெயிந்தி குடித்த கஞ்சியை விட்டு வெளியே வந்தாள்."தோ கடைக்கு போயிக்கிறாங்க வந்துடுவாங்க" என்றாள். "வந்தா மோட்டார் போட்டுட்டு மண் வெட்டிய எடுத்துக்கினு அந்த கோணத் தளையாண்ட  வரச்சொல்லு"  என்றான். "சரிங்க" என்று ஜெயிந்தி குடிசைக்குள் சென்றாள்.  சற்று நேரத்தில் சக்திவேல் வந்தான்.

"தோபாரு சின்ன மொதலாளி வந்திருக்காரு" என்று ஜெயிந்தி சொல்லி முடிக்கும் முன்னே  வாசலில் கிடந்த மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வேலு வேகமாகச் சென்றான்.  " இங்கப்பாரு ஒருவையா கஞ்சி குடிச்சிட்டு போயேன்."  என்றாள். இரண்டு தென்னை மரங்களை படுக்கவைத்ததூரம் சென்ற வேலு ஜெயிந்தி எருது மாட்டுக்கு கொஞ்சம் வெக்கா புடுங்கிப் போடுமா.  எட்டயிருந்தேப் போடு அந்த செவளையான் தளையாட்டும் பாத்துமா" என்று சொன்னவன் சாப்பிடுவதற்கு பதில் சொல்லவில்லை.

நடேசன் புகை விட்டுக்கொண்டு வரப்பில் நடந்தான். அவன் ஊதிய புகையைவிட சட்டை வெண்மையாயிருந்தது. பதினைந்து ஏக்கருகுக்குமேல் கடல் பரப்பு பச்சை நிறத்திற்கு மாறியிருப்பதுபோல் இருந்தது. பயிர் நெல் கதிரை தொண்டையில் வைத்திருந்தது. "வேலு கொஞ்ச நாளைக்கு அப்பா வரமாட்டாரு. நாந்தான் வருவேன். மதியானம் போயி வீட்டுல சாப்பாடு வாங்கியாந்துடு. உன் பொண்டாட்டிய செட்ட சுத்தம் பண்ணச்சொல்லு. உள்ளயிருக்கிற கயித்துக்கட்டில கெணத்துக்கு பக்கமாயிருக்கிற புங்கமரத் தாண்ட போட்டுடுடா"           

"செர்தாங்க" 

"இந்தா,வரச்சொல்ல பிள்டர் கோல்டு பிளாக்  ஒரு பாக்கட் வாங்கிக்கினுவா மறந் திடப்போற" மறந்திடப்போற என்பதற்கு சோம்பேரித்தனமாய் இருக்கக் கூடாது என்று எச்சரிப்பதாகக் கூட  இருக்களாம் என்று வேலு நினைத்தான்.பதிலேதும் சொல்லாமல் காசை வங்கிக்கொண்டான். சில நாள் கழிந்தது. நடேசன் திண்ணையில் சாய்ந்திருந்தான். கிணற்றின் சுவரோரமாக பாம்பு ஒன்று சென்றதை பார்த்துவிட்டான். "பாம்புபுடா... பாம்புடா... வேலு... வே.. வெலு" என்றதும் "இன்னாங்க நீங்கதானே காபி வாங்கியாற அனுப்பிச் சிங்கிளாமே"

"பாம்பு... எம்மாம்பெரிய பாம்பு போது பாருமே" என்றான். பாம்பைப் பார்த்தவள்  ஓடிச்சென்று வெறகுக்கட்டையில்  ஒன்று உருவிவந்து மண்டையைப் பார்த்து போட்டாள். பாம்பு சுருண்டது. ஜெயிந்தி நடேசன் அளறல் கண்டு சிரித்துக் கொண்டாள். அவனுக்கு தன் இயலாமையில் முகம் சுருங்கிப்போனது. தன் பலவீனத்தை மறைக்க ஜெயிந்தியை புகழ்ந்தான். அவள் மார்பின் ஆடையை இழுத்து விட்டுக்கொண்டாள். சக்திவேல் காஃபி வாங்கி வந்தான். ஜெயிந்தி பாம்பை கொம்பில் தூக்கிச்சென்றாள்.

"எங்க இருந்தது இன்னாப் பாம்புமா எம்மாம்பெருசா இருக்குது, போட்டு வாமா. கைய கழுவிக்கினு மொதலாளிக்கு காஃபி ஊத்திக்குடு.   நானு   பாம்ப  கொளித்துட்டுவாரேன்".   
நடேசனுக்கென்று பம்ப்பு செட்டில் இருந்த டம்ளரை தொட்டியில் அலசி காஃபி கொடுத்தாள். "போதும்..போதும் நீங்க கொஞ்சம் சாப்பிடுங்க"  என்றான். நம்மிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்று நினைத்தாள். காஃபியை நீட்டியபோது அதற்கு விடை கிடைத்து. சக்திவேல் வந்தான் "கட்டுபன்னி பாம்பு மொதலாளி" என்றான். ஜெயிந்தி   "இத அப்பிடியே மூடி வெய்யி அப்புறமா சாப்புடுவாரு" என்று எச்சில் டம்ளரை வாங்கினாள்.

'ஏமே எத்தும்போயி ஆளுக்கு கொஞ்சம் ஊத்திக்குடிங்க, எனக்கு போதும்" 

"ஏமா என்றாரா, ஏமே என்றாரா " கூப்புடுதளில் என்னயிருக்கிறது.என்று நினைத்தவன். "சரி எத்தாம்மா" என்றான் வேலு.

தினமும் நடேசன் இரண்டு வேளை காஃபிக்கும் மதியம் சாப்பாட்டுக்கும் வீட்டுக்கு அனுப்பினான். மதியானம் சாப்பாடு மிச்சம் வைக்கிறது. இரண்டு வேளையும் காஃபிகொடுப்பது  வேலுவின் வேலையை லேசாக்குவது. என்று வாரம் கடந்தது. மழைக் காலத்தில் குடிசைக்குள் சமையல் செய்வதற்கு சிறிய இரட்டை அடுப்பு போட்டு வைத்திருந்தாள். அதன் மீது புதிதாக  ஒரு இட்டிலி குண்டான் இருந்தது. கூரையின் ஓட்டையிலிருந்து சூரிய வெளிச்சம் சிறிய வட்டமாக அதன் மீது விழுந்திருந்தது. நடேசன் குடிசைக்குள் இருந்தான்.

"நான் பித்து எடுத்துப்போய் இதுக்கு சம்மதிக்கல நாங்க பிழைப்புத்தேடித்தான் வந்தோம் உங்கப்பா ஒதவி செஞ்சாரு. நாங்க அதிகமா ஒழைக்கிறோம்  'அவன் அதைக்காதில் வாங்கவில்லை ஜாக்கட் கொக்கிகளைத் தேடினான். அவள் தொடர்ந்தாள் "நீங்க அதிகமா என்னை ஜாடை மாடையாத் தொந்தரவு செய்யிறீங்க" அவன் புடவையை கலைந்து பாவாடையின் நாடாவை அவிழ்த்தான். "எப்பா ஒரே சிகரட் நாத்தம்" கதவு சாத்தியிருந்தது. வேலு சைக்கிளை வைக்கோல்  போர்  பக்காக நிருத்தினான். குடிசைக்கு அருகில் வந்தான். பேச்சுக்குரல் கேட்டது. மெல்ல உட்கார்ந்து கதவு இடுக்கில் பார்த்தான். மயக்கத்தில் மார்புகளை கவ்விக்கொண்டிருந்தான். அவள் பேசினாள் "என் ஊட்டுக்காறு  இந்த விஷயத்துல கூட எந்த கொறையும் வக்கல.என் திருப்தியக் கேட்டுத்தான் வெலகிப் போவாரு. இந்த குடிசை இருப்புக்குக்  கூட எங்க  உங்களால  ஆபத்து வந்துடுமோனுதான் சம்மதிச்சேன். நீங்க செஞ்சது எனக்கு எதுவுமே தோனல"  

சக்திவேலின் கண்களிலிருந்து வழிந்தக்கண்ணீர் குடிசையின் வாசலில் விழுந்தது. துடத்துக்கொண்டு சைக்கிளை தள்ளிக்கொண்டு மறைவாகப் போனான். நடேசன் சற்று நேரத்தில் வெள்ளை மனிதனாக வெளியே வந்தான். சட்டையை கழட்டி பம்ப்பு செட்டில் மாட்டினான். தொட்டியில் கை கால்களை கழுவினான். சக்திவேல் இப்போதுதான் வருவதுபோல வந்தான்.

"இன்னா வேலு,  இவ்ளோ நேரம் " என்றான் நடேசன். "வீட்டாண்ட கொஞ்சம் வேலை உட்டுட்டாங்க. அதான் லேட்டாயிடுச்சி அப்பிடியே திண்ணையில ஒக்காந்து சாப்பிடுறீங்களா. இருங்க ஜெயிந்திய தண்ணி எத்தாறச் சொல்றேன்".

"வேலு வேனா...வேனா நான் புடிச்சி வெச்சிங்கிறேன்"

அவன் மறு வார்த்தை பேசவில்லை குடுசைக்குள் நுழைந்தான்.தான் விட்ட கண்ணீர் துளி அடையாளத்தை பார்த்தான் வற்றிப்போய் லேசான ஈரம்  மட்டும்  இருந்தது.
"ஏம்மா ராத்திரி படுத்த பாயை நடுப்புறவே சாத்தி வச்சீக்கீற"
"கொழந்திய எடுத்து வைக்கச்சொன்னேன்  மரந்துட்டாப்போலக்கீது. நானும் கவனிக்கல. கஞ்சி போடட்டுமா"
"நாயா பேயா ஒயக்கிறோம் கஞ்சிதான் நமக்கு கெடைக்குது இல்ல. நம்ம கொழந்திக்காவுது நல்ல வாழ்வு அமைஞ்சா நல்லா இருக்கும். ஜெயிந்தி மொதலாளி  சாப்பிடுராறு ஏதாவுது வேனுமானு கேளுமா" 

"சாப்பிடச்சொல்லோ இன்னேத்துக்கு கூப்ட்டா போலாம் நீ சாப்புடு"என்றாள். நடேசன் மீன் குழம்புவாசத்தை காற்று குடிசைக்குள் கொண்டுவந்தது. இப்படி விதவிதமா சாப்பிட்டுத் தான் தெனவு எடுக்கிறாப் போலக்கீது. என்று வேலு நினைத்தான். 'ஒழைகிற மனுஷனுக்கு இப்படி வாசம் வராப்போல ஒரு நாளும் செஞ்சிப் போட வாய்க்கலையே' என்று தன்னை நொந்துகொண்டாள். சாரதா இன்று மதியத்துக்கு மேல் வந்து விட்டாள். வீட்டுக்குள் போவதைப் பார்த்த நடேசன் " சாரதா இங்க வா, இதை எடுத்தும் போ" என்றான். குடிசைக்குள் நுழைந்த சாரதா பையை வாசளிலே வைத்துவிட்டு வந்தாள். நாடேசன் பாத்திரங்களை மூடி  "இந்தா கொண்டுபோய் சாப்புடுங்க "என்று கொடுத்தான். அவளுக்கு ரத்தம் கொடிநரம்புகளிலும் தடையில்லாமல் பாய்கின்ற வயசு. கைகள் புதிய புத்தகத்தின் மேல் அட்டையைப்போல் வழு வழுப்பாய் இருந்தது. அவனுக்கு கண்கள் உறுத்தின. அவளிடத்திலிருந்து வாங்குவதாய் இருந்தால் தான் கைகளின் பரிசத்தை உணரமுடியும் என்று நினைத்தான்  "கொஞ்சம் வச்சிட்டு வாமா செட்டுல சிகரட் இருக் குது பாரு எடுத்தாயேன்." சாரதா பம்ப்பு செட்டில் போனாள். அதில் மாட்டியிருந்த நடெசன் வெள்ளைச் சட்டை தாழம்பூ வாசத்தை பரப்பியது. கூடவே மூடிக்கிடக்கும் அறையின் வாசமும் கலந்திருந்தது. சிகரட் பாக்கட்டை கொடுத்தாள் அவன் மென்மையை உணர்ந்து கொண்டான்.  சாரதா மிச்சங்களை குடிசைக்குள் கொண்டுவந்தாள். : "இன்னாமா பொழுதோட வந்துட்ட" என்றான் வேலு.  காலாண்டு பரிச்சை தொடங்கிச்சி இல்ல அதான்.  நடேசன் வைத்த சாதத்தை வேலுவுக்குபோட கிண்ணியை எடுத்தாள். வேலு தடுத்தான். " எனக்கு கஞ்சியே போடுமா" என்றான். சாரதாவுக்குப் போட்டாள் " போதுமா நீ கொஞ்சம் சாப்பிடு' என்றாள் சாரதா. உயர்வகை மீனாகத்தான் இருந்தது. ஒருத்துண்டை சாரதாவின் தட்டில் போட்டாள். இன்னொரு துண்டு  பாத்திரதில் தெரிந்தது.  "அப்பா நல்லா இருக்குப்பா இந்தா கொஞ்சம் சப்பிட்டுப்பாரேன்." என்று  மீனைப்பிட்டு சாரதா நீட்டினாள். வேலு வுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. ஏதோ வேண்டாததைக்கொடுப்பது போல  தடுத்து "நீ சாப்பிடுமா"என்றான் "இந்தப்பொண்ணு அவுங்க அப்பன மட்டும் கேக்குது பாத்தியா" என்று நினைப்பதற்குள் "அம்மா நீயாவுது சாப்புடுமா, ரொம்ப நல்லா இருக்குதும்மா" ஜெயிந்தி பாத்திரத்தில் இருந்த இன்னொருத்துண்டையும் போட்டாள்.

"சாப்பிட்டு மீதிய நாயிக்கு போட்டுடு" என்று வேலு குடித்து விட்டு வைத்த கிண்ணியிலேயே கஞ்சியை போட்டாள். அவன் கடித்து வைத்த வெங்காயதையே கடித்துக்கொண்டு சாப்பிட்டாள். அவளால் அதன் ருசியை எதனோடும் ஒப்பிட முடியவில்லை.  வாரம் கடந்து விட்டது. "ஏண்டா வேலு இவ்ளொ மாங்காய் கெடக்குதே கொஞ்சம் அறுத்து ஊறுகா போட்டு வச்சிக்கக்கூடாது. இன்னிக்கு டவுனுல கொஞ்சம்  வேல இருக்குது  நான் வீட்டுக்குப்போறேன். நாளைக்கு ஆளுங்க வருவாங்க தோப்ப மட்டக்கழிக்க நானும் காலில வந்துடுறேன்" என்று நடேசன் வேலுவுக்கு சொல்லிவிட்டு வண்டியை மிதித்தான். அவன் வார்த்தைகளை வேலுவின் காது கேட்டதே தவிர,  பார்வை வயல்வெளியிலும் தோப்பிலும் சுற்றியது. நடேசன் இரண்டுமுறை மிதித்தும் வண்டி ஆன் ஆகவில்லை. இப்போதுதான் வேலுவின் பார்வை அவன் மீது வந்தது. இருவரும் ஒரே திசையை நோக்கி நிற்பதால் அவன் முகம் வேலுவுக்கு பக்கவாட்டில் தெரிந்தது. திடீரென ஒரு நிமிடம் குடிசைக்குள் தன் மனைவியின் மார்புகளை மாறி மாறி கவ்விய வாய் பிம்பம் நினைவு வந்தது. வண்டி ஆன் ஆனது "சரி வேலு வரேன் "என்றான்  வேலு "சரி மொதலாளி"என்றான்.

சாரதா காலாண்டு விடுமுறையில் வீட்டில் இருந்தாள். ஜெயிந்தி சில நாள் கூலி வேலைக்கு போவாள். சாரதா வீட்டில் இருப்பதால்நான் வெளியே வேலைக்குப் போனால் செலவுக்கு ஆகும் என்று ஜெயிந்தி வேலுவோடு பெசினாள். அதன்படி மூன்று நாட்களும் தொடர்ந்து வேலைக்கு போனாள். " அப்பா எனக்கு நெறைய எழுதுற வேலை இருக்குப்பா, எனக்கு எந்த வேலையும் உடாத" என்றாள் சாரதா. வைக்கோல் போருக்கு பின்புறமாக இருக்கும் மாமரத்தின் நிழலில் உட்கார்ந்து எழுதினாள். புங்க மரத்தின் நிழலில் நடேசன் ஓய்வெடுத்தான். ஒருநாள் பெண் பிள்ளைகளுக்கு பிடிக்கின்ற தின் பண்டங்களை  தான் சாப்பிடுவது போன்ற பாவனையுடன் சாரதா வின் பார்வையில் சென்று கொடுத்தான். மறு நாள் புதிய பேனா ஒன்று கொடுத்தான் . அவள் சிறுப்பகுதியை  பிடித்து வாங்கினாள்." இது அப்பா, அம்மாவுக்கு தெறிய வேண்டாம், மொதலாளியாண்ட கேட்டியானு உன்ன திட்டுவாங்க. வேற ஏதாவது வேனுமா கேளு. நான் வாங்கித்தாரேன். என்னப்பாடம் படிக்கிறக்காட்டு" 

அவள் புத்தகத்தை மட்டும் காட்டாமல் தன் கையெழுத்தையும் காட்ட நோட்டை நீட்டினாள். அவனுக்கு எது வசதியோ அதை உரசிக்கொண்டு வங்கினான். இன்னொரு நாளை தனக்கு சாதகமாக ஏற்படுத்திக்கொண்டான். "வேலு பெட்ரோல் போடவே மறந்துட்டேன். ரெண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கிக்கினு, அப்பிடியே மெடிக்கல்ல இந்த மாத்திரைய வாங்கிக்கினு  வரச்சொல்லோ காஃபி வாங்கிக்கினு வா. எனக்கு தலைய வலிக்குது லேசா ஜொரம் அடிக்குறா மாதிரி இருக்குது. நான் செட்டுக்குள்ளயே படுக்குறேன்.

"சாரதா அழுக்குத்துணிகளை தோய்ப்பதற்காக எடுத்துப்போட்டாள். 'ஏம்மா நானு டவுனுக்கு போயிட்டு வாரேன். மொதலாளி அனுப்புறாரு' என்று சைக்கிளை தள்ளினான். சாரதா அன்னக்கூடையில் கொண்டுவந்து துணியை தண்ணிரில் நனைத்து தொட்டிக்கு பக்கத்திலிருந்த  கல்லின் மீது வைத்தாள்.  நடேசன் திண்ணையில் உட்கார்ந்தான். இரு வேறு  கருத்துக்கொண்ட வார்த்தைகளை பூடகமாக பேசினான். சல..சலவென்று தொட்டியில் விழும் தண்ணீர் அலை அலையாய் கால்வாயில் ஓடிக்கொண்டிருந்தது. கால்வாயின் இரு ஓரங்களிலும் பிள்ளையாருக்கு பிடித்த புல் நீரின் ஆக்ரோஷ வரவில் திக்கு முக்கு ஆடிக்கொண்டிருந்தன.

"சாரதா என்னது ஒரே ஒரு துணிய மட்டும் கொஞ்சம் தோச்சிக்குடுத்துடேன். 'எழுந்து செட்டுக்குள் வந்தான். சாரதா கோயில் சுண்டல் வாங்குபவர் போலதான் ஆர்வமாய் செட்டின் வாசலில் வந்து நின்றாள்.அவன் அதற்குள் சட்டையை கழட்டிவிட்டு பணியனை கழட்டினான்.அதை கட்டிலின்  மேலே போட்டான். மோட்டார் சற்று சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அறுத்தக்கோழியை சுத்தப்படுத்தி குழைத்த மஞ்சல் தடவியது போல்  அவன் மார்பு இருந்தது. அவள் சற்று வேறு பக்கமாக திரும்பினாள்." வா சாரதா உள்ளவா இதச்சாப்பிட்டு  இந்த பணியனை மட்டும் தோச்சிக்குடு" அவள் பணியனை தோய்க்கத்தான் கழட்டினார்போல என்று உள்ளே போனாள். அவன் ஒரு ஆப்பிளைக்கொடுத்தான் மெல்ல தொடுதளோடு அனைத்துக்கொண்டான். அவள் பதட்டமடைந்து அவனிடத்திலிருந்து விடுவித்துக்கொள்ள நினைத்தாள். என்ன வார்த்தைகளாலோ  அது நடைபெறவில்லை. போர்வையைக் கழட்டி கட்டிலின் மீதுப் போட்டான். அவனுக்கு விருப்பம்போல நடந்துக்கொண்டிருந்தது. வேலு  சைக்கிளை நடேசன் வண்டியிடம் நிறுத்தி விட்டு பெட்ரோல் போட வண்டி சாவியை  வாங்க வந்தான். ஜாக்கட் கொக்கிகள் கழட்டப்பட்டு, உள்ளாடை மேலெ  தள்ளப்பட்டு நடேசன் அசைந்தான். சாரதா சில்லென்று வழிந்ததை உணர்ந்து. பின்பக்கம் கைவைத்துப் பார்த்தாள். பச்சை ரத்தம். பயந்தாள். திமிற முடியாதவளாக "அணா ரத்தம்ணா. என்ன உடுனா. என்ன உடுணா" "மூச்சிவாங்கிக்கொண்டே " அது ஒன்னுமில்ல சாரதா மொதல்ல அப்பிடித்தான் வரும்" என்று நிமிர்ந்தான். வேலு நின்றிருந்தான். கதவு முழுதும் சாத்தப்படாமல் இருந்தது. வேலு உடனே குடிசைக்குள் வந்து உட்கார்ந்துக் கொண்டான். சாரதா நம்ம கேட்டதால் விட்டு விட்டார் என்று துணிகளை சரிசெய்தாள். சில்லென்று வழிந்ததை பாவாடையில் துடைத்துக் கொண்டு அவன் பணியனை எடுத்தாள்."வேனாம் நீ போ நானு அவசரமா வீட்டுக்கு போகனும் அப்புறம்  பாத்துக் களாம்"  என்றான்.           

சரதா முழுவதுமாக சாப்பிடமுடியாமல் போன பாதி ஆப்பிளை கடித்துக்கொண்டே துணி துவைக்க வந்தாள். நடேசன் அவசரமாக சட்டை மாட்டினான். வேலு வாங்கிவந்த பெட்ரோலை ஊற்றிக்கொண்டு சென்று விட்டான். குடிசையில்   கிடந்த சாரதவின் நோட்டு புத்தகம் காற்றில் பிரிந்து பிரிந்து  மூடியது.  கையெத்து அச்சு ஒழுங்காய் இருந்தது. வேலு டவளை ஒரு மூலையில் போட்டு படுத்துக்கொண்டான். கூலி  வேலையை முடித்து ஜெயிந்தி வந்தாள். வேலு என்றைக்குமில்லாமல் படுத்திருந்ததால் தொட்டுப்பார்த்தாள். ஜுரம் லேசாக  இருந்தது. தட்டினாள். "இன்னா ஜொரமா அடிக்குது. மாத்திர வாங்கியார்ட்டா."   

புரண்டு படுத்தவன் "  வேனாம் இப்பத்தான் மொதலாளி மாத்திரைக் குடுத்தாரு." மூன்று நாளாக நடேசன் பம்ப்பு செட்டின் பக்கம் வரவில்லை  வேலுவும் இரண்டு மூன்று நாளாய் படுக்கையை விட்டு எந்திரிக்கவில்லை. ஜெயிந்தி வேலைக்கு போகவில்லை சாரதா பள்ளிக்குப்போனாள்.  நடேசன் பம்ப்பு செட்டிற்கு வந்தான் வேலுவை தனியாக அழைத்தான் "ஏதோ தப்பு நடந்துப்போச்சி. மனசுல எதையும் வச்சிக்காத. உன் பொண்ணுக்கு வேண்டிய எல்லா உதவியும்  நான் செயிறேன். எப்போதும் போல இரு. இத வச்சிக்கோ" என்று நூறு ரூபாய் கட்டில் பாதியை வேலுவின் கையில் திணித்தான். வேலுவின் கை பணத்தை இருக்கமாய் பிடிக்க வில்லை. பாக்கட்டிலும் வைக்க வில்லை. "வேலு கதிர் விளைச்சல்ல குருவிங்க நெறைய எறங்குது கொம்புல துணியக்கட்டி கழணிக்கு ரெண்டு மூணு நட்டுவுடு வேலு"  

"எல்லா கழனிக்கும் நடனுமாங்க" என்று மட்டும் கேட்டு குடிசை பக்கமாக திரும்பினான். முகத்தில் இறுக்கத்தைதவிர எந்த பிரிதிபலிப்பும் இல்லை. வேலு நான் டவுனுவரைக்கும் போயிட்டு வரேன்" என்று நடேசன் கிளம்பினான். கூரையில் இருந்த கத்தியை எடுத்தான். மெல்லிய கொம்புகளை சீவி அடுக்கினான். சன்ன மணலை கையில் ஜலித்து. கொம்பில் வைத்து கத்தியைத்  தீட்டினான்.  மிகவும் சார்பானது. பெரிதாக இருந்த ஒரு கொம்பின் முனையை சரிசெய்து  கத்தியை கூரையில் கொண்டுபோய் சொருகினான்.   கொம்பில் துணிகளைக் கட்டி தூக்கிச்சென்று நட்டான் . அநேகமாக எல்லாம் நடப்பட்டது. நடேசன் வந்தான். நாம சொன்னவேலை எல்லாம் சரியாகச் செய்திருக்கிறான். வேலு எப்போதும் அமைதியாகத்தானே  இருப்பான். அந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டான். என்பதில் சற்று நிம்மதி அடைந்தான். நான்கு நாட்களுக்கு மேலானதால் வேலைகள் சகஜமாகிப்போனது. சற்று பயந்தும் இருந்தான். பம்ப்பு செட்டில் ஓய்வெடுக்கும் போது உள் பக்கமாக தாழிட்டு படுத்தான்.

இரவில் குடிசை உலகத்தோடு தொடர்பில்லாமல் இருந்தது.  கறுப்பு வெள்ளை  நிறத்தில்  நாய் வாசல் பக்கமாக படுத்திருந்தது. சாரதா குடிசைக்குள் ஒரு பக்கமாகத் தூங்கினாள். குடுவை விளக்கின் மெல்லிய மஞ்சல் வெளிச்சம் குடிசைக்குள் மட்டும் இருந்தது. வேலு சுவற்றில்  சாய்ந்து உட்கார்ந்திருந்தான். ஜெயிந்தி படுத்திருந்தாள். மஞ்சல் வெளிச்சத்தில் கூரையில் சொருகியிருந்த கத்தியின் கூர் மின்னியது. வேலு படுத்து ஜெயிந்தியை அனைத்தான். அவள் திரும்பி அவள் முகத்தைப்பார்த்து "கொழந்த முழிச்சிக்க போது" என்றாள். கொழந்த நல்லா தூங்குதுமா." என்று விளக்கை அனைத்தான். விளக்கு கரி நெருப்பைக்காட்டி அணைந்தது. புகையை கக்கியது. " இன்னா இன்னிக்கி ரொம்ப வெறுப்புல  செய்யிறா மாதிரி செயிற. இத்தனை வருஷத்துல இன்னைக்கு ஏதோ பழிவாங்குறா மாதிரி செயிற."

'அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லமா" என்று விலகி மல்லாந்துப் படுத்தான். ஜெயிந்தி நாளைக்கு சாரதாவைக் கூட்டிக்கினு நம்ம ஊருக்கு போமா நம்ம பந்தத்தப்பாத்து ரொம்ப நாளாச்சி."
பிழைப்புக்காக வந்த நாள் முதல் இப்படி கேட்டதில்லை. ஏன் இப்படி சொல்லுகிறார் என்று கேள்வி எழுந்தாலும்,  இதுவரை கேட்காமல் இப்போதுச் சொன்னபோது. ஜெயிந்தி பதில் ஏதும் பேசவில்லை. நடேசன் திண்ணையில் உட்கார்ந்திருந்தான். இரண்டு மணிக்குமேல் வேலுவை அழைத்தான். "வேலு போயி காஃபி வாங்கியாடா" என்றான். அவன் குரலில் பழைய சத்தம் இருந்தது. வேலு காசை வாங்கிக்கொண்டு "ஒரு கப் போதுமில்ல" என்று கிளம்பினான்.

நடேசன் திண்ணையிலேயே சாய்ந்தான் அப்படியே தூங்கிவிட்டான். மோட்டார் ஓடிக்கொண்டிருந்தது. தொட்டியில் எப்போதும் போல்  தண்ணீர் கொட்டியது. பம்ப்பு செட்டின் மொத்தக்காட்சியை மேலே இருந்து படமெடுத்தால் ஒரு குட்டி தீவு போல் தெரியும். அடிக்கடி பறவைகள் மரங்களில் அமரும்போதும், கிளம்பும் போதும் சத்தம் வரும் மற்ற நேரங்களில் அமைதியில் ஆழ்ந்துவிடும்.

சக்திவேல் வந்தான். நடேசன் நல்ல உறக்கத்தில் இருந்தான். சடாரென்று குடிசைக்குள் நுழைந்தான் கூரையில்  சொருகி வைத்திருந்த கத்தியை உருவி  வந்தான். நடேசன் திண்ணையின் விளிம்பில் தலையை வைத்திருந்தான். ஏறக்குறைய வாய் தானாகத்திறந்து கொள்ளும் அளவுக்கு கழுத்து சாய்ந்திருந்தது. கிட்டத்தில் வந்து பக்கவாட்டில் நின்றவன் ஓங்கி ஒரே வெட்டு சாய்த்துப்போட்டான். தலைத்துண்டாகி விழுந்து இரண்டு சுற்று உருண்டு ஒரு காது பக்கம் தரையில் பட்டு சாய்ந்திருந்தது. ஒரு நிமிடம் கழுத்திலிருந்து நாளாபக்கமும் ரத்தம் பீச்சியடித்தது. வெள்ளைச்சட்டையில் ரத்தம் படவேயில்லை சற்று நேரத்தில் அடங்கிய ரத்தம் உடல் மீது வழிந்து சட்டையை நனைத்தது. கைகளும் கால்களும் உதைத்துக்கொண்டும், துடித்துக்கொண்டதிலும்  தலையில்லா உடல்  திண்ணையில் சாய்ந்தது.

வேலு குடிசைக்குள்   நுழைந்தான் இட்லி குண்டானையும் ஒரு உரக்கோணியையும் எடுத்து வந்தான். கீழேக்கிடந்த தலையின் மயிரைப்பிடித்து தூக்கினான். தன் முகத்துக்கு நேராக நிறுத்தினான். காரி துப்பினான். "நீ சொகுசா வாழ என் ஒழைப்பும் காரணம்னு  தெரிஞ்சிதான் ராத்திரிப் பகலா ஒழைச்சேன். நீயே என் வாழ்வை வேதனைப்படுத்தி அழிச்சதால நானே உன்ன வெக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்." தலையைப்பார்த்து பேசினான்.
இட்லி குண்டானில் தலையை வைத்து மூடினான். கோணியில் கட்டி சைக்கிளில் வைத்து கிளம்பினான்.  நகரின் நெரிசலில் வேகமாக வந்தவன். காவல் நிலையம் பெயர் பலகையைப்பார்த்து, உள்ளே நுழைந்தான்.     
நம்புழுதி
     நன்றி
'உன்னதம்'