எப்போதும் வாங்காத வீட்டின் வாசலில் தயிர்க்கூடையை ஓரமாகா இறக்கினாள். அவள் விட்டுக்காரரின் டவலாகத்தான் இருக்கும். இவள் அவருக்கு மடிந்து கிடப்பதுபோல் அவர் டவல் இவள் தலைக்கு மேலும் அன்னக்கூடைக்கு கீழுமாக சுருண்டு கிடந்தது. குனியுமுன்னே சீமாடுகோள் கீழே விழுந்து மண்ணுளிப்பாம்பாக நீண்டுவிட்டது. அன்னக்கூடைக்குள் ஒரு குண்டான் மூடியிருந்தது. அதன் மீது சில்லரைகள் கிடந்தது. உழைத்து மொழுப் மொழுப்பான கொட்டாங்கச்சி அன்னக்கூடைக்கும் குண்டனுக்கும் இடையில் இடுக்கி இருந்தது. இன்னொரு பக்கத்தில் கையை துடைக்க கந்தை துணி ஒன்று பதுங்கியிருந்தது. பத்தும் ஐந்தும் சில்லரை அன்னக்கூடைக்குள் கிடந்தது. அவள் கூடையின் பக்கத்தில் வெறுந்தரையில் படுத்துவிட்டாள்.
அந்த வீட்டுக்காரி உருவத்திற்கு ஏற்றார்போல் பொட்டு பெரியதாக வைத்திருந்தாள். அவள் வெளியே வந்தாள். படுத்துக்கிடந்த தயிர்க்காரியை பார்த்து சற்று அதிர்ந்தாள். கிட்டத்தில் வந்தவள் எழுப்பாமல் தயிர் குண்டானின் மூடியை திறந்துப் பார்த்தாள். பாதி காலியாகியிருந்தது. எந்திரம் கட்செய்யும் ஒழுங்காக தயிர் பில்லைகள் மோரோடு பினைந்திருந்தது. நெய்யாக மாறும் பசை குண்டானில் ஒட்டியிருந்தது. அது தயிர் இருந்த அடையாளத்தைக் காட்டியது. இவளுக்கு வேரென்ன பிரச்சனை ஏன் படுத்துவிட்டாள். வீட்டில் இருந்த தன் மருமகளை அழைத்து "கொஞ்சம் தண்ணி மொண்டாம்மா" என்று பதட்டத்துடன் சொன்னாள். தன் வீட்டு எதிரில் இப்படி கிடப்பதால் ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடந்துவிட்டால் என்ற பயம் உள்ளுக்குள். "ஏம்மா. தயிர்க்காரம்மா "என்று பதட்டத்துடன் எழுப்பி முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.
படுத்துக்கிடந்தவள் ஆக்கோரஷமாக எழுந்து "போடி பாதகத்தி. நான் தயிர்காரம்மா இல்லடி. உன் அம்மா வந்திருக்கிறேன்டி. உன் வாசளுக்கு நேரா மாசக்கணக்கிலே நெறமாச கர்பிணியா நின்னுங்கெடுக்கிறேனே, அத கவனிக்காம இவுளுக்கு தண்ணி கொண்டாந்து தெளிக்கிறியா?" என்று தலையை இப்படியும் அப்படியும் சிலுப்பினாள். அன்னியன் படத்தில் விக்கிரம் போல் மயிர்கள் பிரிந்து விட்டது. முகப்பக்கம் அவ்வளவாக விழவில்லை. சொம்புத் தண்ணிர் தலைதெறிக்க விழுந்து உருண்டது. மருமகள் பயந்தாள் தயிர்க்காரியின் வாய்ச்சொல்லை கவனித்தார்கள்.
தெருவில் இருந்த ஆண்கள் கூடிவிட்டார்கள். "இன்னாம்மா இன்னா ஆச்சி" என்று கேட்பதற்குள் "அடே, புடிங்கிகளே.உங்களுக்கு கூடவாடா பார்வ இல்ல. ரோட்டுல போற வர பதினாறு வயசுப் பொண்ணுங்களக்கூட பத்திக்கிறா மாதிரி பாக்கிறிங்க.ரோட்டுப் பக்கத்தில நிக்கிற என்ன தெரியலையா. அடே, என் வயிற போறவன் வரவனெல்லாம் பாக்கிறானேடா என் வயித்த மூடி வெக்கலனா, உங்க பொண்டாட்டி புள்ள குட்டிங்க வயிறெல்லாம் வெடிக்க வச்சிடுவேண்டா."
இப்படி கத்தியதும் கூடியிருந்தவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்ல ஆரம்பித்தார்கள். தயிர்க்காரி கண்ணை மூடிக்கொண்டு கையை மேலே தூக்கி சற்று முன்னும் பின்னும் நடந்தாள். அதற்குள் யாரோ ஒருவர் பக்கத்தில் கைக்கு எட்டும்படியாக ஒரு கொத்து ஒடித்தார். "அடே, யார்ரா அவன் கொழுந்த ஒடிச்சது. என் வெரல ஒடிக்கிறா மாதிரி இருக்குடா" ஒருத்தன் "யோ, யார்யா அது. அம்மா கண்ணு முன்னாலேயே ஒடிக்கிறது. வேற எங்கனா போயி ரெண்டு கொத்து ஒடிச்சாய்யா. அம்மாவுக்கு ரெண்டு கையிலயும் குடுக்கலாம்." என்றான்.
தன் அனுபவத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பெரியவர் "அம்மா இவ்ளோ நாளா ஏதோ நெழல் தரவளாத்தான் பாத்தோம். ஏனோ நீ இந்த அவதாரம் எடுத்துக்கிற எங்கள ஒன்னும் பண்ணிடாதம்மா நாளைக்கே உனக்கு பட்டாடசாத்தி, பண்ணீர் மாலைப்போட்டு வலகாப்பு செய்திடுறோம் ."
"பெரியவுரே தள்ளிப்போ அப்பால. நாளைக்குனு நல்லாத்தான் சொல்றே. அதுக்குள்ள ஆத்தாவுக்கு கோவம் வந்து எதுனா பண்ணிடுச்சினா, இன்னிக்கே செய்துடனும்." என்று மற்றவர்களின் நல்ல விஷயங்களையும் தள்ளிவிட்டு தவறானதாய் இருந்தாலும் தனதை மட்டும் நிறுவுபவனாகச் சொன்னான். பெண் பகுதியிலிருந்து அநேகமாக பல்லில்லாத கிழவியாகத்தான் இருக்கவேண்டும். பேச்சு தெளிவில்லாமல் பிறந்தது. "செய்யும்போது செய்யுங்கபா. வெறும் வயித்த காட்டிக்கினு நிக்கிறா. மொதல்ல யாருவீட்டிலனா புது பொடவ இருந்தா கொண்டாங்கபா. மொதல்ல அம்மாவயித்துக்கு சுத்திவுடுவோம்."
"அதுக்குத்தான்யா ஒரு வாழ்ந்து கெட்ட வயசானவங்க வேணும். கரைட்டா சொன்னது பாரு கெழவி. கூட்டத்தில் யாரோ ஒரு வாலிபன் சொன்னான். அது நக்கல் போலவும் இருந்தது. ஜனங்கள் கூடிப்பேசிக்கொண்டார்கள். தெருவில் இவ்வளவு என்று பாகம் வைத்தார்கள். பெண்கள் அவரவர்கள் வேகமாக செயலில் இறங்கினார்கள். இரண்டு பெண்கள் தண்ணீர் குடத்தை எடுத்துக்கொண்டு பம்ப்பு குழாய்க்குச் சென்றார்கள்.இரண்டு பேர் சில்லரை கடைக்கு வேணாம் மொத்தவியாபார கடைக்கு பொவோம் என்றார்கள். மஞ்சல் தூள் இரண்டு கிலோ, குங்குமம் அரைக்கிலோ, கற்பூரம் கால் கிலோ போதும் என்று வாய்கணக்காகப் போட்டார்கள். ஆம்பிளைகள் யார்பா போனது. வசூல் ஆனவரிக் கும் எடுத்தும் போயி பூவு, மாலை, தாலிலாம் வாங்கிக்கினு வாங்கப்பா" என்று அடையாளம் கானமுடியாத குரல் சொன்னது. அந்த இடத்தில் ஜனங்கள் குறுக்கும் நெடுக்குமாக மிதந்தார்கள்.
தயிர்காரி அன்னக்கூடையை தன் கிட்டத்தில் ஓரமாக வைத்து உட்கார்ந்தாள். அவள் பக்கத்தில் யாரும் இல்லை. அவளுக்கு சற்று நாவரண்டது போல் இருந்தது. தன் கூடையில் இருந்த கொட்டாங்கச்சியை எடுத்து தயிரை ஒரு கலக்கு லேசா கலக்கி இரண்டு வாய் மொண்டு உற்றிக்கொண்டாள். அமைதியாக சீமாடுகோள் சுற்றி தலையில் வைத்துக்கொண்டு கிளம்பினாள்.
பெரியப்பொட்டுக்காரியின் நாலாவது வீட்டுக்காரி விளக்குமாரை எடுத்து வந்து, அந்த இடத்தை சுற்றி பெருக்கினாள். இதுவரை பெரிய பொட்டுக்காரியும், அவளும் கூடிப்பேசிய நாளே இல்லை. அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள். ஒரு முரை நாளாவது வீட்டுக்காரிக்கு அவள் கணவன் புடவை எடுத்து வந்தான். அந்த வாரத்திலே பெரிய பொட்டுக்காரி அதே புடவை போலவே கட்டியிருந்தாள். அதற்கு பிறகுதான் இப்படி தொடர்ந்தது. அதோடு இன்று தான் பெரிய பொட்டுக்காரியின் வசலுக்கு வந்தாள்.
"இரும்மா, தண்ணி எத்தாரப் போயிக்கிறாங்க. ஒரு நாலடி உயரத்துக்கு சுத்தி தண்ணி ஊத்தி கழுவிட்டு அப்புறம்மா பெருக்கலாம்." என்று பெரிய பொட்டுக்காரிதான் அவளிடம் சொன்னாள். மூன்று நான்கு குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து வைத்தார்கள். ஒருவன் எங்கிருந்தோ மூன்று புதிய செங்கல் கொண்டுவந்து வைத்தான். அவன் அதிக நேரம் டீக்கடைகளில் நிற்பான். இதற்கிடையில் வாயோடு வாய் கடந்து கடந்து பல மையில் சுற்றளவில் சங்கதி பரவிற்று. வாசனை கண்டுவிட்ட எறும்பு கூட்டமாக வரிசை வரிசையாய் வரத்தொடங்கி விட்டார்கள்.
இபோது சுற்றி தண்ணீர் ஊற்றினார்கள்.ஒருத்தி லேசாகத் தேய்த்தாள். லேசாக தூள் பெயர்ந்து விழுந்தது. தண்ணீர் ஊற்றியவள் பாத்துடி அம்மாவின் தோல்பிச்சிக்கிது" என்றாள். இடுப்பில் டவல் கட்டிக்கொண்ட ஒருத்தி ஈரத்தோடு மஞ்சல் தூளை நிறைய எடுத்து பூசினாள். மறந்துட்டேன் தண்ணீர் ஊற்றும் முன்னே ரோட்டில் போவோர் வருவோர் கர்ப்பத்தை பார்த்து விடாதபடி இரண்டு பேர் புது சேலையை பிரித்து மறைவாக பிடித்திருந்தார்கள். மஞ்சல் பூசியபிறகு கர்ப்பத்தின் மீதி குங்குமம் அள்ளி அப்பினார்கள். மறைவுக்கு பிடித்திருந்த புடவையை சுற்றி கட்டிவிட்டார்கள். நிறைய பேர் மூன்று மீட்டர் சுற்றளவுள்ள சரிகை வைத்த பாவாடை மினிமினுப்புடன் தைத்து வந்தார்கள். அப்படியே மேலே மேலே கட்டிவிட்டார்கள். திடீர் குருக்களாகிய சில பெண்கள் சுறு சுறுப்புடன் வேலை செய்தார்கள். வருபவர்கள் தேங்கா, பழம், பூ, கற்பூரம் கொண்டு வருகிறார்கள். இடம் இன்னும் பூஜைக்காக முழுமையாக ஆய்த்தமாக வில்லை. கூட்டத்த குறைக்க பூசை ஒரு பக்கம். வேலை ஒரு பக்கம் நடந்தது. அதை வாங்கி பூசைக்கு பயன்படுத்திவிட்டு, பதிலுக்கு குங்குமம் திருநீரு கொடுத்தார்கள். நான்காய் மடித்த நீண்ட தாலிக்கயிற்றில் உயர் வகை, நடுத்தரம், சாதாரனம். சிறியது பெரியது என்று வித்தியாசமில்லாமல் அந்த கயிற்றில் நுழைத்தார்கள். இரண்டரை மீட்டருக்கு வளையல் நிறைந்து விட்டது. நான்கு பேராக பத்திரமாக பிடித்து கர்ப்பத்திற்கு மேலே கட்டினார்கள். இரண்டரை மீட்டர் நீளமான கயிறு முடிச்சிப்போடும் அளவுதான் மிச்சமிருந்தது. மூன்று செங்கல் கழுவி நட்டார்கள். குழத்த மஞ்சல் பூசி குறுக்காக குங்கும கோடுகள் போட்டார்கள்.
வந்தவர்கள் எல்லாம் தேங்காயும் கற்பூரமும் கொண்டு வந்தார்கள். அந்த இடம் சுற்றி கற்பூரம் கலந்த வாசனையும் கரும் புகையும் வந்தது.வத்தியின் வாசனை கமகமத்தது. பெரியப் பொட்டுகாரியும் இன்னும் சில பெண்களும் ஜனங்களை கட்டுப்படுத்த போராடினார்கள். " இருங்கம்மா. அம்மா, எல்லார் கற்பூரத்தையும் ஏத்துக்குவா.பெரிய பொட்டுக்காரிக்கு கடவுள் வசனமோ, பாட்டோ, மந்திரமோ எதுவும் தெரியவில்லை. "அம்மா அவுங்கள காப்பாத்தும்மா. ஆத்தா இவுங்கள காப்பாத்தும்மா" என்று மட்டும் சொல்கிறாள். திரையரங்கின் எலி பொந்துக்குள் கையை விடுவதுபோல் சிலருக்கு தட்டில் வைத்திருக்கும் குங்குமம் திருநீரை அந்த நெரிசலிலும் கையை நுழைத்து கொடுத்துவிடுகின்றாள். அவர்கள் சற்று தள்ளி இருப்பதால் காப்பாத்து என்று சொல்ல வில்லை. சிலர் முட்டி மோதி பக்தியோடு முன்னே வந்து விடுகிறார்கள்.தேங்கா கற்பூரம் நிறைந்த தட்டை கொடுக்கிறார்கள். கொடுத்தவர்கள் தெய்வத்திடமிருந்து எதோ மாற்று வேண்டி ஆவலுடன் நிற்கிறார்கள். அவர்கள் ஆவலை பூர்த்திசெய்ய முடியவில்லை. அந்த அதிருப்தி விஷ்வரூபம் எடுக்காமல் இருக்க, அவர்களுக்கு மட்டும் நெற்றியில் பொட்டிட்டு, குங்குமம், திருநீர், பிரசாதமாகவும் கொடுத்து "ஆத்தா இவுங்களை காப்பாத்தும்மா" என்று அனுப்பிவிட்டாள். தட்டில் சில ரூபா நோட்டுகளும் இருந்தது.
சத்தத்துடன் கூட்டமும் அதிகமானது. பத்திரிகையாளர்கள் சிலர் வந்து கேமராவை இரு கைகளாலும் உயரத்தூக்கி படமெடுத்தார்கள்.அவர்களின் முகத்த்தில் ஏதோ பிரம்மை படிந்திருந்தது. இப்படியும் அப்படியும் நடந்து மிரண்டு மிரண்டு படமெடுத்தார்கள்.எப்படி எக்கினாலும் கர்ப்பத்தை முழுமையாக படமெடுக்க முடியவில்லை. பத்திரிகையாளர் வந்தவுடன்.இன்னும் கூட்டத்தில் பர பரப்பு அதிகமானது.சாலையின் இரு ஓரங்களிலும் திடீர் கடைகள் தோன்றியிருந்தது. குருவிக்காரர் கள் பின்னு, மணி, சீப்பு சுற்றிச் சுற்றி விற்று வந்தார்கள்.
புதிதாக அந்த சாலையில் வந்தவர்கள் "இன்னாங்க சங்கதி' என்று வாய்பிளந்து கேட்கிறார்கள். சிலர் இரு சக்கர வாகணங்களில் போவோர் கூட்டத்தினின்று சற்று விலகி ஓரமாகச்சென்று விசாரிக்கிறார்கள். விஷயம் தெரிந்து கொண்டபிறகு எத்தனையோ பரபரப்புகளில் இதுவும் ஒன்று என்று உச்கொட்டி சென்றார்கள். பத்திரிகையாளர்களில் சிலர் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நடந்து படங்களை பதிவு செய்தார்கள். அதில் ஒருவர் அந்த வீதில் அடிக்கடி சுற்றியவர்தான். ரோட்டின் முகப்பிலேயே இருக்கிறது. எத்தனையோ நாள் இப்பகுதியில் போகிறோம் வருகிறோம். இதை கவனிக்க வில்லையே. இதற்கு முன் இப்படி இருந்திருக்குமோ. அப்படியெல்லாம் இருக்காது என்று சொன்னால் பெரியபொட்டுக்காரியின் விளக்குமார்தான் பிய்ந்து விடும்.
எல்லா இடங்களிலும் ஆளுமை செய்ய பெண்கள் குறைவகவே வருகிறார்கள். என்பதை மறுக்குமளவுக்கு கூட்டங்கூட்டமாய் வருகிறார்கள். இப்போது எல்லார் கையிலும்ஒரு தாலிக்கயிர் இருந்தது. அந்த கயிற்றின் நடுவில் மஞ்சல் கிழங்கு கட்டப்பட்டு இருந்தது. வளையளிலும் புடவையிலும் தாலியை குத்தினார்கள். பூவும் குத்தி விட்டார்கள். கலர்க்கலரான ரிப்பன் காற்றில் கூத்தாடியது. நகைகளால் அலங்கரித்த அம்மன் போட்டா ஒன்று பச்சை நிறப்பட்டுப் புடவையில் ஜொலித்தது. அதை மஞ்சல் பூசிய கல்லுகள் பக்கத்தில் வைத்தார்கள். பொழுது மாலையைத் தொட தொடங்கியிருந்தது. இப்பொது காற்று பலமாக வீச ஆரம்பித்தது. சிலர் வான் மேகத்தை கணித்து இரமணரானார்கள். சிலர் மழை வாசனை வருகிறது என்றார்கள். காற்றில் உதிர்ந்த சிறு சிறு பழுப்பு நரம்பு போன்ற இறகு மேலிருந்து கழன்று விழுந்தது.
தூரல் வந்துவிட்டது. ஜனங்கள் அங்கங்கே நனையாமல் இருக்க இடம் தேடி பதுங்கினார்கள். அந்த நேரம்பார்த்து சரக்கு லாரி ஒன்று வந்தது. அதைப்பார்த்ததும் சிலர் எரிச்சலடைந்தார்கள். பெரிய பொட்டுக்காரி "யோ, இந்தப்பக்கம் ஏன்யா வந்திங்க. ஒதுங்கிப் போயா' என்று மேலேப்பார்த்தாள். லாரிக்காரன் நாம் ஓரமாகத்தானே போகிறோம் என்று நினைத்தார். லாரிசரக்கில் குறுக்காக ஒரு கயிறு கட்டியிருந்தது. கொழுந்துகள் இல்லாதவை மாட்டி கொண்டு கீழே விழுந்தது.விழுந்த வேகத்தில் இரண்டு மூன்று துண்டுகளாக முறிந்து புரண்டு விழுந்தது. ஒரு துண்டு கீழே வைத்திருந்த போட்டாவின் காலடியில் விழுந்தது. பெரிய பொட்டுக்காரி பார்ககவில்லை. இப்போது பெரிய மாலையைக் கொண்டுவந்தார்கள். இதை எப்படி போடுவது என்று யோசித்தார்கள். மாலை அதிக வெயிட் அந்த கயிற்றில் கட்டலாம் ஆனால் நிற்காது. பொட்டுக்காரி "ஆணி அடித்து அழகாய் மாட்டிவிடலாம் ."என்றாள். மாலை நன்றாக பூத்திருந்தது. தேடிப்பிடித்து ஆணிகளை கொண்டுவந்தான். ஆணியை கையில் வாங்கியவன். "சுத்தி எத்தாரலையா" என்றான். "அட, இன்னாபா நீ. இந்தா. இந்த கல்லுல நெருக்கு பச்சமரத்துல சல்லுனு எறங்கும்."
பொட்டுக்காரி "எப்பா வயித்துக்கு கொஞ்சம் மேலே, ஜான் எடவெளி வெச்சி இந்தப் பக்கம் ஒன்னு, கொஞ்சம் தள்ளி அந்த பக்கம் ஒன்னு அடி" என்றாள். மீண்டும் அவளே "ஆம், போதும் இரண்டுபேரும் மாலையப்புடுச்சி நடுப்புற போடுங்க" என்று சற்று தூர நின்று பார்த்தாள். மாலைப்போட்டவர்களில் ஒருவன் 'நார்ப்பது வருஷத்திற்கு மேலாக இது கர்பம்மாதிரி தான் தெரியுது' என்று தனக்குள் நினைத்தான்.
நம்புழுதி

சத்தத்துடன் கூட்டமும் அதிகமானது. பத்திரிகையாளர்கள் சிலர் வந்து கேமராவை இரு கைகளாலும் உயரத்தூக்கி படமெடுத்தார்கள்.அவர்களின் முகத்த்தில் ஏதோ பிரம்மை படிந்திருந்தது. இப்படியும் அப்படியும் நடந்து மிரண்டு மிரண்டு படமெடுத்தார்கள்.எப்படி எக்கினாலும் கர்ப்பத்தை முழுமையாக படமெடுக்க முடியவில்லை. பத்திரிகையாளர் வந்தவுடன்.இன்னும் கூட்டத்தில் பர பரப்பு அதிகமானது.சாலையின் இரு ஓரங்களிலும் திடீர் கடைகள் தோன்றியிருந்தது. குருவிக்காரர்
புதிதாக அந்த சாலையில் வந்தவர்கள் "இன்னாங்க சங்கதி' என்று வாய்பிளந்து கேட்கிறார்கள். சிலர் இரு சக்கர வாகணங்களில் போவோர் கூட்டத்தினின்று சற்று விலகி ஓரமாகச்சென்று விசாரிக்கிறார்கள். விஷயம் தெரிந்து கொண்டபிறகு எத்தனையோ பரபரப்புகளில் இதுவும் ஒன்று என்று உச்கொட்டி சென்றார்கள். பத்திரிகையாளர்களில் சிலர் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நடந்து படங்களை பதிவு செய்தார்கள். அதில் ஒருவர் அந்த வீதில் அடிக்கடி சுற்றியவர்தான். ரோட்டின் முகப்பிலேயே இருக்கிறது. எத்தனையோ நாள் இப்பகுதியில் போகிறோம் வருகிறோம். இதை கவனிக்க வில்லையே. இதற்கு முன் இப்படி இருந்திருக்குமோ. அப்படியெல்லாம் இருக்காது என்று சொன்னால் பெரியபொட்டுக்காரியின் விளக்குமார்தான் பிய்ந்து விடும்.
எல்லா இடங்களிலும் ஆளுமை செய்ய பெண்கள் குறைவகவே வருகிறார்கள். என்பதை மறுக்குமளவுக்கு கூட்டங்கூட்டமாய் வருகிறார்கள். இப்போது எல்லார் கையிலும்ஒரு தாலிக்கயிர் இருந்தது. அந்த கயிற்றின் நடுவில் மஞ்சல் கிழங்கு கட்டப்பட்டு இருந்தது. வளையளிலும் புடவையிலும் தாலியை குத்தினார்கள். பூவும் குத்தி விட்டார்கள். கலர்க்கலரான ரிப்பன் காற்றில் கூத்தாடியது. நகைகளால் அலங்கரித்த அம்மன் போட்டா ஒன்று பச்சை நிறப்பட்டுப் புடவையில் ஜொலித்தது. அதை மஞ்சல் பூசிய கல்லுகள் பக்கத்தில் வைத்தார்கள். பொழுது மாலையைத் தொட தொடங்கியிருந்தது. இப்பொது காற்று பலமாக வீச ஆரம்பித்தது. சிலர் வான் மேகத்தை கணித்து இரமணரானார்கள். சிலர் மழை வாசனை வருகிறது என்றார்கள். காற்றில் உதிர்ந்த சிறு சிறு பழுப்பு நரம்பு போன்ற இறகு மேலிருந்து கழன்று விழுந்தது.
தூரல் வந்துவிட்டது. ஜனங்கள் அங்கங்கே நனையாமல் இருக்க இடம் தேடி பதுங்கினார்கள். அந்த நேரம்பார்த்து சரக்கு லாரி ஒன்று வந்தது. அதைப்பார்த்ததும் சிலர் எரிச்சலடைந்தார்கள். பெரிய பொட்டுக்காரி "யோ, இந்தப்பக்கம் ஏன்யா வந்திங்க. ஒதுங்கிப் போயா' என்று மேலேப்பார்த்தாள். லாரிக்காரன் நாம் ஓரமாகத்தானே போகிறோம் என்று நினைத்தார். லாரிசரக்கில் குறுக்காக ஒரு கயிறு கட்டியிருந்தது. கொழுந்துகள் இல்லாதவை மாட்டி கொண்டு கீழே விழுந்தது.விழுந்த வேகத்தில் இரண்டு மூன்று துண்டுகளாக முறிந்து புரண்டு விழுந்தது. ஒரு துண்டு கீழே வைத்திருந்த போட்டாவின் காலடியில் விழுந்தது. பெரிய பொட்டுக்காரி பார்ககவில்லை. இப்போது பெரிய மாலையைக் கொண்டுவந்தார்கள். இதை எப்படி போடுவது என்று யோசித்தார்கள். மாலை அதிக வெயிட் அந்த கயிற்றில் கட்டலாம் ஆனால் நிற்காது. பொட்டுக்காரி "ஆணி அடித்து அழகாய் மாட்டிவிடலாம் ."என்றாள். மாலை நன்றாக பூத்திருந்தது. தேடிப்பிடித்து ஆணிகளை கொண்டுவந்தான். ஆணியை கையில் வாங்கியவன். "சுத்தி எத்தாரலையா" என்றான். "அட, இன்னாபா நீ. இந்தா. இந்த கல்லுல நெருக்கு பச்சமரத்துல சல்லுனு எறங்கும்."
பொட்டுக்காரி "எப்பா வயித்துக்கு கொஞ்சம் மேலே, ஜான் எடவெளி வெச்சி இந்தப் பக்கம் ஒன்னு, கொஞ்சம் தள்ளி அந்த பக்கம் ஒன்னு அடி" என்றாள். மீண்டும் அவளே "ஆம், போதும் இரண்டுபேரும் மாலையப்புடுச்சி நடுப்புற போடுங்க" என்று சற்று தூர நின்று பார்த்தாள். மாலைப்போட்டவர்களில் ஒருவன் 'நார்ப்பது வருஷத்திற்கு மேலாக இது கர்பம்மாதிரி தான் தெரியுது' என்று தனக்குள் நினைத்தான்.
நம்புழுதி
No comments:
Post a Comment