34 வது கதவு
உருது மூலம் ஆங்கிலம் வழித்தமிழில்
நசிம் காரல் புல்வெளி கமராசன்
விடியற்காலை நேரம். அணைக்கட்டின் நீர்மட்டம் குறிக்கப் போனவன் உறைந்து போனான். அணைக்கதவின் ஓரம் மிதக்கும் பிணம், உடலில் தொண்டை கிழிந்து தலை வெறும் தோலால் ஒட்டிக்கொண்டு தொங்கியது. பயத்திலும் படபடப்பிலும் அணைக்கட்டு சுவரை பிடித்துக்கொண்டு கொஞ்சநேரம் நின்றிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக பயம் குறைந்ததும் பிணத்தை கிட்டத்தில் பார்த்தான். அது ஒரு பெண்ணின் சடலம். சிவப்பு நிற ஸ்கர்ட் அணிந்திருந்தாள். அவளுடைய அடர்த்தியான முடி அவிழ்ந்து தண்ணீரில் ஆடிக்கொண்டிருந்தது. தீ நிற உடல் சகதி நீரில் மின்னிக் கொண்டிருந்தது.
சிக்கலில் மாட்டிக்கொள்ளாதபடி கதவை திறந்து விட்டுவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அவனது மனசாட்சி தடுத்தது. இந்த செயலுக்கு கடவுளின் தீர்வு கடுமையாக இருக்கும் எனவே புகார் தந்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தான். சுபேதாரே விசாரித்து இதை செய்த குற்றவாளிக்கு தண்டனை தரட்டும் என்று நினைத்தபடியே தன் அறைக்கு வந்து கதவை மூடினான்.
கதவை மூடும்போது இதை மேலதிகாரியான சர்வேயரிடம் சொல்லவேண்டும் என்று முடிவு செய்து சர்வேயரின் குடியிருப்புக்குச் சென்றான். கதவைத்தட்டினான். சர்வேயர் நேற்று முழுவதும் சுக்குர் பகுதி முழுவதும் பார்த்துவிட்டு பின்னிரவில்தான் தூங்கியிருந்தார். எனவே சாதாரணமன தட்டல்கள் அவரை எழுப்ப போதுமான தாயில்லை. ஆனாலும் அவர் எழுந்து வரும்வரை அளவீட்டாளன் கதவை விடுவதாயில்லை. சர்வேயர் கண்களைக் கசக்கியபடியே வந்து கதவைத்திறந்தார். கண்ணில் இருந்த எரிச்சல் வார்த்தைகளுக்குள் தாவியது.
"என்னய்யா விஷயம்? டேம்ல விரிசல் விட்டுடுச்சா?" என்றார்.
"இல்லீங்க ஐயா, ஆனா.... ஒரு பொண்ம் கேட்டுல மாட்டியிருக்குங்கையா" என்றான்.
"அதுக்கு என்ன ஏன் எழுப்பினே? நான் என்ன சுபேதாரா? கோபம் கொப்பளித்தது.
"ஐயா,இத காவல் நிலையத்துல தான் சொல்லனும் அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒருவார்த்தை... "என்று இழுத்தான். மேலும் அள்வீட்டாளன் "இப்பவே நேரமாயிடுச்சி" என்றான்.
"நல்ல வேள சாயந்திரம் வந்து சொல்லாம விட்டியே, கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும். காவல் நிலையம் போறியா போ! போ! தினம் உன்னை வரச்சொல்லி இழுத்தடிக்குப் போறாங்க" என்றார் சர்வேயர்.
"நீங்கக சொல்றது சரிதான். ஆனா இத சொல்லாம விடக்கூடாதே" என்றான் அள்வீட்டாளன்.
"சரி எப்பிடியோ போ! ஆனா என்ன இழுத்துவிட்டுடாத" என்றார்.
"சே! சே! அப்பிடியெல்லாம் செய்யமாட்டேன் ஐயா. உங்க பேரே வெளிய வராது. நான் பொனத்தப் பாத்ததும் நேரா இங்கதான் வர்ரேன்னு சொல்லிடுவேன்." என்றான்.
"அது தான் சரி அப்படியே செய்" என்றவர் கதவை இழுத்து சாத்திவிட்டு மீண்டும் தூங்கப்போனார்.
அணைக்கட்டுக்கு வந்தவன், சுக்குர் நோக்கி நடக்கத்துவங்கினான். கொஞ்ச தூரம் நடந்ததும் அந்த வழியாக ஒரு லாரி வரும் வெளிச்சம் தெரியவே கைகளை அசைத்து நிறுத்தினான். ஓட்டுநர் நல்லவனாக இருந்ததால் உடனே நிறுத்தி ஏற்றிக்கொண்டான். நடப்பதில் இருந்து காப்பாற்றிய ஓட்டுநரை வாழ்த்தினான். கடவுள்தான் லாரிக்காரனை நிறுத்தச்சொல்லி தனக்கு உதவியதாக நினைத்துக்கொண்டான். கொஞ்ச நேரத்தில் வண்டி காவல் நிலை வாசலில் நின்றது. அளவீட்டாளன் நன்றி தெரிவித்தபடி இறங்கினான்.காவல் நிலைய வாசலில் ஒரு ஜமேதார் நின்றிருந்தார். அவனிடம் சுபேதார் இருக்கிறாரா என விசாரித்தான்.
" சார் இன்வெஸ்டிகேஷனுக்கு போயிருக்கார்" என்றான் ஜமேதார்.
"இங்கபாருங்க ஜமேதார். நான் கட்டாயம் சுபேதாரைப்பார்க்கணும். எதுவும் சாக்கு சொல்லாதிங்க என்றான் உறுதியாக"
"ஏன் அவரைப்பார்க்கணும். எதாவது புகார் தரணுமா?" என்றார்.
"ஆமாங்க" என்றான் அளவீட்டாளன்.
"இப்ப நாங்க எதுவும் கேசையும் எடுக்கமாட்டோம் ரெண்டு மூணுநாள் கழிச்சி வாங்க. இந்த வருஷம் முடிய கொஞ்ச நாள்தான் இருக்கு ஏற்கனவே பல கேசுங்க பாக்கியிருக்கு" என்றான் ஜமேதார்.
"இது ஒன்னும் சில்லரை திருட்டு இல்லீங்க கொலை சமாசாரம்."
"நீ கொலை பண்ணிட்டியா? எங்கடா ஆயுதம்" என்று ஜமேதார் பாய்ந்தார்.
"அத சுபேதார்கிட்டே சொல்றேன். அவர முதல்ல பாக்க விடுங்க" என்றான்.
"இந்த மாதிரி சின்ன விஷயத்துல அவர் தலையிடமாட்டாரு. நான் இங்க எதுக்கு இருக்கேன்" என்றார் ஜமேதார்.
"ஜமேதார் இங்க பாருங்க, பிடிவாதமா பேசாதிங்க. நானும் உங்களப்போல ஒரு அரசு ஊழியந்தான்."
"இருக்கட்டுமே நீ என்ன வானத்துல இருந்து குதிச்சி வந்துட்டயா என்ன நடந்ததுனு சொல்லேன்"
"அத நான் சுபேதார்கிட்ட சொல்றென் அப்போ நீங்களும் வந்து கேட்டுக்குங்க " என்றான் அளவீட்டாளன்.
ஜமேதார் இனிமேலும் ஒன்றும் செய்யமுடியாது என்றுணர்ந்து தயக்கத்துடன் சுபேதாரின் இருப்பிடத்துக்கு அழைத்துச்சென்றார். சுபேதார் அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து வந்து டீ குடித்துகொண்டிருந்தார். ஜமேதார் அவருக்கு ஒரு வணக்கம் செலுத்திவிட்டு
"ஐயா ஒரு ஆள் உங்கக்கிட்ட புகார் கொடுக்க வந்திருக்கான்..." என்றார்.
"சுபேதார் ஜமேதாரை ஒரு கோபப்பார்வை பார்த்தபடி முட்டாளே அவன் ஏன் இங்க கூட்டி வந்த" என்று எரிந்து விழுந்தார்.
"ஐயா நான் எவ்வளவு சொன்னேங்க . நீங்க கேஸ் 224ய விசாரிச்சிசுக்கிட்டிருக் கிறீங்கன்னு சொன்னேங்க, ஆனாஅவன் அரசு ஊழியராம் ஒரு கொலைகேசாம் அதுதான் என்னால ஒண்ணும் செய்யமுடியல.." என்று ஜமேதார் சுபேதாரிடம் கூறினார்.
"கொலையா? சந்தையிலேயா? ஆனா ராத்திரி முழுக்க அங்கதான சுத்திக்கிட்டிருந்தேன்." என்று ஆச்சரியமாக கேட்டார் சுபேதார்.
"ஐயா! எங்க நடந்ததுன்னு தெரியாது. அவனேதான் சொல்வானாம்." ஜமேதார் புகார் கொடுக்க வந்த அளவீட்டாளனைப்பார்த்து தலையசைத்தான்."வா இங்க வந்து சார்க்கிட்ட நடந்தத சொல்லு. ஒண்ணும் பயப்படாத உண்மைய சொன்னா உனக்குதான் நல்லது" என்றார் ஜமேதார்.
"எங்க வேலை செய்யிறே? என்று அளவீட்டாளனை சுபேதார் கேட்டார். அளவீட்டாளன் அவரை நோக்கி முன் நகர்ந்து. "ஐயா,நான் சுக்குர் அணைக்கட்டின் அளவீட்டாளன் என்று அறிமுகப்படுத்தினான்.
"என்ன நடந்ததுன்னு இப்ப சொல்லு " என்றார் சுபேதார்.
"ஐயா நான் தண்ணீர் மட்டம் அளக்க காலையில் போனேங்க. இதுதான் என் வழக்கமான வேலைங்க அப்போ அணைக்கட்டு கதவுக்கிட்ட ஒரு பொணம் மாட்டியிருந்துதுங்க. அந்த பொணத்தோட தொண்டை கிழிஞ்சி உடம்போட வெறும் தோல்தான் ஒட்டியிருந்தது" என்று அளவீட்டாளன் விவரித்தான்.
"பெண்ணா, ஆணா? என்று சுபேதார் கேட்டார்.
"ஒரு பொண்ணு பொணம் சார்" என்றான் அளவீட்டாளன்.
"உடம்ப மீனு தின்னுட்டிருக்குமே! சரியா அடையாளம் கண்டுபிடிக்கமுடியுதா?
"இல்ல ஐயா.உடம்பு நல்ல நிலையில்தான் இருக்குங்க"
"யாராவது வந்து உன்ன விசாரிச்சாங்களா?"
"இல்லிங்க யாரும் வந்து என்கிட்ட கேக்கலீங்க"
"கோராகான், யாராவது ஸ்டேஷனுக்கு வந்து காணொம்னு புகர் தந்தாங்களா?" என்று சுபேதார் ஜமேதாரைக் கேட்டார்.
"இல்லையா, இது வரைக்கும் யாரும் வரலீங்க"
சுபேதார் மீண்டும் அளவீட்டாளனைப் பார்த்து கேட்டார் "பிணத்தை எப்போது பார்த்த?"
"விடியர்காலையிலங்க ஐயா"
'யாராவது கூட இருந்தாங்காளா?"
"இல்லீங்க, நான்மட்டும்தான் தனியா இருந்தேன்."
"யார்க்கிட்ட யெல்லாம் இதப்பத்தி சொன்னே?"
"யார்க்கிட்டயும் சொல்லீங்க!நேரா இங்க தான் வரேங்க"
"எங்க இருக்கிறே?"
"அணைக்கட்டுல குடியிருப்பு இருக்குங்க அங்கவே தங்கி இருக்கேங்க"
"குடும்பத்தோடு இருக்கியா? தனியா இருக்கியா? "
"தனியாதான் இருக்கேங்க"
"அப்பிடியா, உன்னப்பாத்தா விளையாட்டுக்காரப் பையனாட்டம் தெரியுதே"
"ஐயா நீங்க சொல்லுறது எனக்குப் புரியலிங்க" என்று அளவீட்டாளன் அமைதியாகக் கேட்டான்.
"ஓ! இத நீ அவ்வளவு சீக்கிறம் புரிஞ்சிக்கமாட்டே, நேரம் வரும்போது கவனிக்கிற விதத்துல கவனிச்சா கிளிப்பிள்ளைபோல கக்க வேண்டியத கக்குவ" என்றார் சுபேதார்.
"ஐயா உங்க சந்தேகத்துக்கு எந்த அடிப்படையும் இல்லீங்க. நீங்க நினைக்கிறமாதிரி நானே கொலைப் பண்ணியிருந்தா கதவை திறந்து உடம்பை வெளிய விட்டுட்டுப்போகாம உங்ககிட்ட வந்து புகாரா கொடுப்பேன் அய்யா என்ன யார் பாக்கப்போறாங்கனு இத செஞ்சியிருக்கலாமே." என்றான் அளவீட்டாளன்.
"நீ சொல்றதுலேயும் அர்த்தமிருக்கு. அத நான் மனசுலயும் வச்சிருக்கேன். இப்ப அவ எப்படி இருந்தான்னு சொல்லு". என்றார் சுபேதார்.
"ஐயா, என்க்கு ரொம்ப பயமா இருந்ததால கிட்டப்போயி பாக்கலிங்க. ஆனா அவளுக்கு நீண்ட தலைமுடி தொள தொளன்னு சிவப்பு கலர் ஸ்கர்ட்..."
"நல்லது, கேஸ முடிச்ச மாதிரிதான்" என்று வியந்தார் சுபேதார்.
"எப்படி கேஸ் சுலபமா முடிஞ்சிடுச் சீங்கிறீங்க ஐயா"
"யரோ ஒருத்தன் தன் கொரவத்தை காப்பாத்திக்க விபச்சாரியை கொன்னுருக்கான்."
அளவீட்டாளனுக்கு தலைகால் எதுவும் புரியவில்லை. "ஐயா யாரோட மானத்தை காப்பாத்த இத செஞ்சாங்க"என்று கேட்டான்.
"யோவ் நீ ஒரு முட்டாள்யா. உனக்கு இது புரியாது. இந்த பொறிக்கிங்க தன்னை பழிக்கிற யாரையும் தொண்டைய அறுத்துடுவாங்க." இப்போதுதான் அளவீட்டாளனுக்கு சுபேதார் பேசுவது புரிந்தது.
"ஐயா எந்த புனித புத்தகம் இப்படி செய்ய சொல்லுதுங்க" என்று அளவீட்டாளன் கேட்டான்.
"பலுச்சிஸ்த்தான் காரனுங்களூக்கு சட்டத்தைப்பத்தியெல்லாம் தெரியாது.கொலை செய்யறது ஞாயம்னு நெனைக்கிறவனுங்க அவனுங்க" என்றார் சுபேதார்.
"ஆனா சட்டப்படி குற்றம்தான். இது 302 படி குத்தம்தான் ஆனா நாம குற்றவாளிய எங்க போய் தேடுறது.?இந்த மாதிரி பொம்பளைங்களை அப்பா அண்ணந்தம்பி சொந்தக்காரங்க கூட கைகழுவி விட்டுருப்பாங்களே, யாராவது சொந்த்தக்காரன் வரானான்னு பார்ப்போம்". என்றார் சுபேதார்.
"ஆனா ஐயா, நீங்க விழிப்பா இருந்தா இந்த மாதிரி குற்றம் செஞ்சிட்டு தப்பிக்க முடியாதில்லையா"
"கட்டயமா. சரியானபடி ஆய்வு செஞ்சா எப்பேர்ப்பட்ட தந்திரமானவனும் எங்கிட்ட மாட்டாம தப்பிக்க முடியாது. என் அனுபவதில எப்பேர்ப்பட்ட கொலைகாரனும் பன்னீர்லேயே குளிச்சிட்டு ஆயிரக்கணக்கான கூட்டதில ஒளிஞ்சிகிட்டிருந்தாலும் என்னால நொடியில அவன அள்ளிடுவேன். இழுத்தாந்து காதை பிடிச்சி திருகி மவனே உண்மைய சொல்டான்னு கவனிச்சா கக்கிடுவான்." என்றார் சுபேதார்.
" ஐயா! இத எப்படி கண்டுபிடிப்பீங்க?" என்று அளவீட்டாளன் கேட்டான்.
"ரத்தவாடையா, ரத்தவாடை எந்தக்கொலைகாரனும் ரத்தவாசனையை கழுவ முடியாது.
" அப்படின்னா இதயும் தயவுசெஞ்சி ரத்தவாடை வச்சி கண்டுபிடிங்களேன்."
"யோ எவன் மேல நான் கைய வைப்பேன். எல்லா பலுச்சிஸ்தான் மேலயும் ரத்தவாடை வீசுதே"
"அய்யோ அந்த பொண்ணு பாவங்க எவனோ அவளை பலவந்தப்படுத்தி கொன்னு தண்ணியில வீசியிருக்கானுங்களே"
"அப்படிக்கூட நடந்திருக்கலாம், ஆனா அப்படி நடந்திருக்க சந்தர்ப்பம் குறைச்சல்தான்"
"ஐயா நீங்க வீசாரணைய ஆரம்பிச்சா எல்லாம் தன்னால வருமே. கடுகு தாளிப்பையும், கொலையையும் மூடிமறைக்க முடியாதுங்களே"
"செய்யலாம். கேஸ்ல நுழையறதுக்கு கடவுளே தடை போடுறாரே! இது என் சொத்தையெல்லாம் சாப்பிட்டுடுமே."
"எப்படிங்கையா?"
"யோவ் அனாத பொணத்த ஆய்வு செய்யிறது விளையாட்டில்ல.மொதல்ல பொணத்த தூக்கி வரவங்களுக்கு கூலிய கொடுக்கணும்; போட்டோ எடுக்க, ஜீப்பை வாடகைக்கு எடுக்க; பொணத்தை எரிக்க எல்லாத்துக்கும் மேலே அதிகாரிங்க. ஒவ்வொரு நாளும் விளக்கம் கேப்பாங்க. ஏன்யா உனக்கு இது? பேசாம கேட்ட தொறந்து விட்டுட்டு போகவேண்டியதுதான அது பாட்டுக்கு மிதந்து போயிருக்குமே"
"ஐயா அதெப்படிங்க அப்பிடி ஒரு பாவத்தை செய்யறது கடவுளே மன்னிக்கமாட்டாரே"
"எனக்கு யார் பாவம் செய்தவங்கன்னே தெரியல உன் பாவமோ என் பாவமோ ரெண்டு பேரு கஷ்டப்படுறோம். யோவ் கொலை கேசுல் புகார் கொடுக்கறது லேசுயில்ல. தெனம் அலையோ அலைன்னு அலைஞ்சி ச்சீபோன்னு கடைசியில நீயே விட்டுடுவ சொல்லிட்டேன்."
"ஐயா நான் இதப்பத்தி கவலைப்படைலீங்க, ஆனா இந்த மாதிரி குத்தம் நடக்கக்கூடாதுங்க தயவு செய்து என்புகாரை எழுதிக்கிங்க"
"சரி நீயும் விடறதா இல்லை. உன்க்கு சின்ன வயசுல சமூதாயபால ஊத்திட்டாங்க போலிருக்கு"என்றார் சுபேதார்.
"நீங்க என்னவேனா சொல்லுங்க தயவு செஞ்சி புகாரை எடுத்துக்குங்க" என்று மீண்டும் கெஞ்சினான். அளவீட்டாளன்.
"கோராகான், சீனியர் முனிஹ்சியை கூப்பிடுங்க ஸ்டேட்மெந்த் எழுதட்டும்'"என்று காவலருக்கு ஆணையிட்டார்.
முன்ஷி பேப்பர், பென்சில் கார்பன் பேப்பருடன் வந்து சுபேதாரின் எதிரில் இருந்த ஸ்டுலில் உட்கார்ந்தார். தாள்களை கார்பன் வைத்து வரிசையாக அடுக்கினார். பென்சிலை தயார்படுத்திக்கொண்டு சுபேதார் சொல்ல காத்திருந்தார்.
"முன்ஷி, முதல்ல புகார் கொடுகறவரோட பேரை எழுதுங்க" என்றபடி அள்வீட்டாளனைப் பார்த்து "என்னய்யா உன்பேரு?"என்று கேட்டார்.
"குலாம், முகமது அப்பா பேரு நூர் முகமது ஐயா"என்றார் அளவீட்டாளன்.
"எழுதுங்க முன்ஷி, குலாம், முகமது தகப்பனார் பெயர் நூர் முகமது, அணைக்கட்டு அளவீட்டாளன். சுக்குர் அணைக்கட்டு பதிவு எண் 203, புகார் அளிக்கும் நேரம் 6.15 மணி விசாரணை தூரிதமாக செய்யனும். நம்ம பக்கத்தில எந்த தாமதமும் இருக்கக்கூடாது. ஆமாம் பாடி எங்க கெடுக்குதுன்னே.... "என்று சுபேதார் அளவீட்டாளனைப் பார்த்து கேட்டார்.
"ஐயா சுகுர் அணைக்கட்டுல முப்பத்து நாலாவது அணைக்கட்டுல மாட்டியிருக்குங்க" என்றான்.
இதைக்கேட்டதும் சற்று யோசித்த சுபேதார்முன்ஷியைப்பார்த்து "முன்ஷிசார் இவர் சொல்ற இடம் நம்ம எல்லைக்குள் வருதான்னு கொஞ்சம் போய் பாத்துட்டு சொல்லுங்க" என்றார் சுபேதார்.
முன்ஷி மின்னல் போல வேகமாக எழுந்து உள்ளே சென்று ஒரு பதிவேட்டுடன் வெளியே வந்தார்."அது நம்ம காவல் நிலையத்துல இல்லையா" என்றார்.
"அதுதானே பார்த்தேன்" என்றபடி சுபெதார் "யோவ் இப்ப நீ போகவேண்டியது ரோஹ்ரி காவல் நிலையத்துக்கு. நீபார்த்த 34வது கேட் எங்க எல்லை கெடையாது. முப்பத்து மூணு வரைக்கும் எங்களோட எல்லை "என்றார் சுபேதார் சிரித்தபடி.
"ஐயா என்னங்க இது ?" என்றான் அளவீட்டாளன்.
"என்ன நம்பலைனா நீயே போய் பதிவேட்டை பார்த்துக்க" என்றார் சுபேதார்.
"ஐயா ஒரே ஒரு கதவுதானுங்களே வித்தியாசம்"
"யோவ் ஒரு கதவுன்னாலும் சும்மா இல்லை. மயிரிழை வித்தியாசம் இருந்தாக்கூட கதயே வேற இனி ஒரு இன்ச்சிகூட என்னால ஒன்னும் செய்ய முடியாது. அது யாரோ ஒருத்தரோட பொறுப்பு ஏன் எனக்கு அது.?"என்றார்சுபேதார்.
"அப்ப நான் என்ன பண்றதய்யா" என்று அளவீட்டாளன் கேட்டான்.
"ரோஹ்ரி நிலையத்துக்கு போயி அங்க பூகார் குடு "
"அவங்க என் புகாரை எடுத்துக்கலைனா என்ன செய்யிறதுங்க? என்றான் அளவீட்டாளன்.
"அதெப்படி மாட்டேன்னு சொல்வாங்க இது அவங்க எல்லையாச்சே" என்றார் சுபேதார்.
"அளவீட்டாளன் ரோஹ்ரி காவல நிலையத்தை நோக்கிப் புறப்பட்டான். அங்கே போய் சேரும்போது நடுப்பகலாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருதான். அதன் பிறகுதான் சுபேதாரைப் பார்க்கவே முடிந்தது. அவரிடம் அணைக்கட்டில் கிடக்கும் பிணத்தைப்பற்றி சொன்னான்.
"யோவ் பொணம் எங்கமாட்டியிருக்குதுன்னே?" என்றார் அந்தகாவல் நிலைய சுபேதார்.
"ஐயா, சுக்குர் அணைக்கட்டுல 34 வது கதவுலங்க" என்றான்.
"முன்ஷி இது நம்ம எல்லையா பாருங்க" என்றார் சுபேதார்.
முன்ஷி" ஆமாங்க இது நம்ம எல்லைதானுங்க" என்றார்.
அளவீட்டாளனை நோக்கி திரும்பியசுபேதார் "நீ பொணத்த எத்தனை மணிக்குப் பார்த்தே?"
"விடியற் காலையிலங்கையா"
"இவ்வளவு நேரம் என்ன செஞ்சிக்கிட்டிருந்தே? நடுப்பகல்ல வந்திருக்க"
"அளவீட்டாளன் அமைதியாய் இருந்தான்.
"யோவ் கேட்டதுக்கு பதில் சொல்லுய்யா இல்லன்னா குத்தம் உம்மேல வரும் ஜாக்கிரத" என்று எச்சரித்தார் சுபேதார்.
அளவீட்டாளனால் தன்னை மேலும் கட்டுப்படுத்த இயலவில்லை. அவனுடைய மரியாதைக்கு குந்தகம் வரும் நிலையிலும் "ஐயா நான் ஒரு நிமிஷங்கூட தாமதிக்கலீங்க, உடனே ஓடிப்போய் சுக்குர் காவல் நிலையத்துலதானுங்க சொன்னேன். அங்கிருந்த சுபேதார்தான் ரொம்பநேரம் உட்காரவச்சி விசாரிச்சிட்டு அவரு இப்பதான் இங்க அனுப்பிவச்சார்சார்." என்றான்.
"ஏன் அவரு உன்னை இங்க அனுப்பிச்வச்சாரு?" என்று சுபேதார் கேட்டார்.
"அவரு அந்த இடம் எங்க எல்லையில வரலன்னு சொல்லி அனுப்பிவச்சிட்டாருங்க" என்றான் அளவீட்டாளன்.
"எங்களோடதோ, அவரோடதோ அவரும் என்னைப்போல அரசு பணியாளர் தானே. கொலைய முதல்ல அவர்கிட்டதான் சொல்லியிருக்கே. சட்டப்படி புகாரை எழுதி பதிவு செஞ்சுட்டு பொணத்தை பிணப்பரிசோதனைக்கு அனுப்பி யிருக்கணும் அப்புறமா அந்த பேப்பரையெல்லாம் எனக்கு அனுப்பி இருக்கனு மில்லையா?" என்றார் சுபேதார்.
"ஆமாங்கையா, நானும் எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தேங்க அவரு கேட்கலையா"
"என்ன சொன்னாரு"
இந்தவழக்கு எடுத்துக்கிட்டா அவருக்கு நெறைய செலவு ஆகுமாங்க"
"அப்பிடியா! நல்லாதான்யா சொல்ற. பாடிய யாராவது தேடிவந்திருந்தா அப்ப எல்லைப் பிரச்சனையே பார்க்காம வழக்க எடுத்துக்கிட்டுருக்க மாட்டாராமா" என்று சுபேதார் கேட்டார்.
"எல்லாம் கடவுளுக்குத்தாங்க வெளிச்சம் " என்றான் அளவீட்டாளன்.
"ஏன்யா கடவுள கூப்பிடுற? உனக்குத்தெரியாதா?" என்று சுபேதார் கேட்டதற்கு அளவீட்டாளன் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான்.
"சரி... இப்ப சொல்லுய்யா? பொணம் 34வது கதவுலதான் இருக்குதுன்னு உனக்கெப்படி தெரியும்?"என்று சுபேதார் கேட்டார்.
"நானே பார்த்தங்க'
"யோவ் பொணத்த பார்க்கிறத விட்டுட்டு கதவ எண்ணிகிட்டே இருந்தியா?"
"அதெல்லாம் எண்ணவேண்டிய அவசியமில்லைங்க. என் மனசுல அச்சடிச்ச மாதிரி இருக்குங்க."
"ஆனாலும் நீ ஏன்யா தப்பா சொல்லக்கூடாது"
"இல்லீங்கையா, நான் ஒன்னும் குருடன் இல்லீங்க"
"தண்ணியில பொணம் மெதந்தது போயிருக்கலாம் இல்லியா? யார் கண்டது கடவுளுக்குதான் தெரியும்" என்றார் சுபேதார்.
"ஆமாங்க கடவுளுக்குத்தான் தெரியும் ஆனா அது எப்படிங்க நடக்கும் "
"சரி சரி நான் விசாரிச்சிக்கிறேன்" என்றவர் "முன்ஷி... முன்ஷீ.." என்று அழைத்தார். "சொல்லுங்கையா" என்று முன்ஷி அவர் முன் வந்து நின்றான்.
"முன்ஷி,அடையாளம் தெரியாத பொணத்தை வச்சிகிட்டு விசாரிக்கறது ரொம்ப தொல்லை ஆனா இந்த நல்ல மனுஷனை அலயவிடக்கூடாது நான் சொல்றத எழுதிக்கோங்க.அதோட இவர் சொன்னா எடத்துக்கு யாரையாவது அனுப்பிச்சி பொணம் அங்கதான் இருக்கான்னு பார்த்திட்டு வாங்க நேரத்தை வீணாக்காதிங்க" என்றார் சுபேதார்.
"அதெல்லாம் தேவையில்லீங்க அந்த பொணம் அதே கதவுக்கிட்டதாங்க இருக்கு" என்று தான் சொன்னதை வலியுறுத்தி அளவீட்டாளன் சுபேதாரிடம் சொன்னான்.
"யோவ் என்ன செயிறதுன்னு எங்களுக்கு தெரியும்? இருக்குதோ மெதந்து போயிட்டதோ? யார் கண்டது." என்றார் சுபேதார்.
"சரி ஐயா உங்க திருப்திக்கு நீங்க போய் பார்த்துக்கங்க" என்றான் அளவீட்டாளன்.
சுபேதார் முன்ஷியைப்பார்த்து "யாருக்கும் இது தெரியக்கூடாது. படகுகாரன்கிட்ட சத்தம் போடாதேன்னு முன்கூட்டியே சொல்லிடுங்க. சரியா எண்ணி பார்த்திட்டு வந்து சேருங்க' என்றார்
"சரிங்கையா அப்படியே செஞ்சிடுறேன் " என்றார் முன்ஷி.
"யோவ் இந்தாள கூப்பிட்டுக்கிட்டு போங்கையா.சாப்பிட்டானோ, சாப்பிடலியோ தெரியல" என்றார் சுபேதார்.
"எனக்கு பசிக்கலையா" என்றான் அளவீட்டாளன்.
"யோவ் வெட்கப்படாத சாப்பிடுயா. கடவுள் தர ரொட்டிய. முன்ஷி எனக்கு ஓட்டல்ல சாப்பாடு சொல்லிட்டு இவருக்கும் வாங்கித்தாங்கய்யா . நல்லமனுஷன். இவன் தான் கொலைக்கேசுக்கு சாட்சி. ரொம்ப தைரியமான ஆள்தான்."என்றான் சுபேதார்.
"சந்தேகமில்லைங்க நீங்க சொன்னது சரிதாங்க. இதுக்கு ரொம்ப தைரியம் வேனுங்க" ஆமோதித்த முன்ஷி "வாங்க தம்பி சாப்பிடலாம் "என்று அழைத்தார்.
சுபேதார் முன்ஷியும் அவனைப் பாராட்டியதில் களைப்பே போய்விட்டது. தன்னை சுத்திவிட்டதற்காக சுக்குர் காவல் நிலைய சுபேதார் மீது கோபமாக வந்தது. முன்ஷியின் அறைக்கு வந்தவன் ரொட்டிகளை சாப்பிட்டான். காலை நீட்டி சாய்ந்ததில் தூக்கம் வந்துவிட்டது. சுபேதார் அழைத்ததாக கூறினார். அறைக்குள் நுழைந்ததும் சுபேதார் அளவீட்டாளனைப் பார்த்து " யோவ் பொணம் 33வது கதவுக்கிட்ட இருக்குதாம் அது எங்க எல்லைல வரலியே" என்றார்.
"அது எப்படிங்கையா நானே பார்தேனே 34வது கதவுகிட்டதான இருந்தது "
"இதப்பாருய்யா நீ மறந்திட்டிருக்கலாம் இல்லன்னா ஒரு வேள பொணமே தண்ணியில மெதந்து போயிருக்கலாம் "
"ஐயா எனக்கு என்ன நடக்குதுன்னே புரியல தலையே சுத்துது "என்றான் அளவீட்டாளன்.
சுக்குர் சுபேதார் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன எனக்கு சம்பநந்தம் இல்லாத எல்லையில நான் எப்படி பொறுப்பேத்துக்க முடியும்?"
"ஆனா ஐயா கதவுல தான் ஒட்டியிருந்தது எப்படி நகந்திருக்கும்னு எனக்கு புரியலீங்க" என்று சுபேதாரைப்பார்த்து அளவீட்டாளன் கேட்டான்.
"இங்கபாருய்யா இப்ப நீ வீட்டுக்குப்போ. நிதானமா எல்லா கதவையும் எண்ணு. உண்மையிலே அந்த பொணம் 34வது கதவுல இருந்தா என்கிட்ட ஒருவார்த்த சொல்லி அனுப்பு நான் வந்து விசாரிச்சிக்கிறேன் சரியா?" என்றார் சுபேதார்.
அளவீட்டாளன் வெளியே வந்தான். சுக்குர் நோக்கி நடந்தான் ஆனால் பெரிய பாதையில் செல்லாமல் அணைக்கட்டுக்குபோகும் குறுக்கு வழியில் நடந்தான். சரியாக எண்ணிப்பார்த்து விட்டு பிறகு சுக்குர் சுபேதாரைப்பார்ப்பது எனத்தீர்மானித்தான்.34வது நோக்கி நடந்தான் அங்கே பிணம் இல்லை. கொஞ்சம் நடந்து 33வது கதவில் எட்டிப்பார்த்தான். அங்கே பிணம் இருந்தது. அங்கேதான் இருக்கிறதா என்று உறுதிப்டுத்திக்கொண்டான்.
சந்தேகத்தை தீர்த்துக்கொண்டு மீண்டும் சுக்குர் காவல நிலையத்துக்கு வந்தான். தூரத்தில் இவன் வருவதைப்பார்த்த சுபேதார் "அட எழவே இவன் ஏண்டா திரும்ப வர்ரான்"என தலையில் அடித்துக்கொண்டார்.
உள்ளே நுழைந்ததும் அளவீட்டாளன் சுபேதாரைப்பார்ப்பது "ஐயா, ரோஹ்ரி காவல நிலையத்துக்கு போயிருந்தேன் அங்கிருந்த சுபேதார் ஒரு ஆளை அனுப்பி அணைக்கட்ட பார்த்துட்டு வரச்சொன்னார். அந்த பொணம் 33வது கேட்லதான் இருக்குதாம் அதுதான் அவர் இங்க அனுப்பிவச்சாரு"என்றான் அளவீட்டாளன்.
"உட்காருய்யா...."என்றார் சுபேதார் கோபமாக.
"நீ வேலையில இருக்கும் போது உன் எடத்துலதான் கொலை நடந்திருக்கு. நீ ஒரு இடத்தில் இருந்து பிணத்தை இன்னொரு இடத்துக்கு நகர்த்திட்டு வந்திருக்கே இது கொலை பண்ணதுக்கு சமமான குத்தம். முன்ஷி இந்த குத்தத்துக்கு என்ன செக்ஷன் சொல்லுங்க என்றார் சுபேதார்.
"யோவ் இங்க வாய்யா என்ன செக்ஷன்னு சொல்றேன்" என்றான்முன்ஷி.
"ஐயா விட்டுடுங்கையா! அது எங்குத்தம் தாங்க" என்ற அளவீட்டாளன் உடைந்து கெஞ்சினான்.
"சந்தேகமில்ல நீதான் குத்தவாளி. அதுமட்டுமல்ல இந்த காவல் நிலையத்துக்கும் அந்த காவல் நிலையத்துக்கும் சண்டயமூட்டிவுடுற. ரெண்டு ஆப்பீசரு நடுவுல மாட்டுனா காணாம போய்டுவே" என்று எச்சரித்தார் சுபேதார்.
"ஐயா அப்படியெல்லாம் இல்லீங்க என்ன நம்புங்க நான் ஒண்ணும் சண்ட மூட்டலீங்க அதுமாதிரி பொணத்தயும் நான் நகர்த்தவே இல்லீங்க" என்றான் அளவீட்டாளன்.
"பின்ன எப்படி 33வது எடத்துக்குப்போச்சி?"என்று எரிந்து விழுந்தார் சுபேதார்.
"கடவுள் மேல சத்தியங்க. எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. எனக்கு ஒண்ணும் ஓடலீங்க. நானே காலையில என் கண்ணாலே பார்த்தேங்க பொணம் 34வது கதவுலதாங்க இருந்தது. ஆனா ரோஹ்ரிக்கு போய்வ்ந்து பார்க்கிறேங்க 33வது கதவுல இருக்குதுங்க."
"பிண்ண யார்யா நகர்த்திவிட்டது பிசாசா?" என்றார்.
"ஐயா ரோஹ்ரி சுபேதார் சொன்னாருங்க. ஆத்து வெள்ளத்துல அடிச்சி நகர்ந்திருக்கும்னு...."என்று அளவீட்டாளன் இழுத்தான்
சுபேதார் கொஞ்சநேரம் யோசித்தார். எதயோ தியானம் செய்வதுபோல் இருந்தவர் நினைவுக்கு வந்து "ஆமாய்யா ஆறுன்னா ராஜாமாதிரிய்யா? என்றார்.
"ஐயா அப்படின்னா என் புகாரை எடுத்திக்கிறீங்களா? ஐயா இப்பவே நேரமாயிட்டுதுங்க" என்றான்.
"ஆமாம்,இப்பவே ராத்திரியாயிடுச்சி இப்பபோய் எவன் பொணத்த கொண்டுவருவான்?' என்று சுபேதார் கேட்டார்.
"அப்ப நான் என்னசெய்யட்டுங்கையா "என்றான் அளவீட்டாளன்.
"காலையில வா நான் ராத்திரி புகாரை தயார் பண்றேன். நீ வந்து கையெழுத்து போட்டுவிட்டு போய்விடு" என்றார் சுபேதர்.
"ஆனா ஐயா ரெண்டு நாளும் பொண்ம் தண்ணியில கிடந்தா அடையாளமே தெரியாத போயிடுங்களே" என்றான் அளவீட்டாளன்.
"இத பாருய்யா இந்த ராத்திரியில என்னாலஒண்ணும் செய்யமுடியாது.காலையில வா" என்றார் சுபேதார்.
மறுநாள் காலை,சுக்குருக்கு புறப்பட தயாரானான். கதவு 33அடையும்போது பிணத்தை எட்டிப்பார்க்க தோன்றியது.பிணம் இப்போது அடையாளம் தெரியாமல் போயிருக்கும் என்று நினைத்தான். சுவற்றில் கைவைத்து எட்டிகீழே பார்த்தான். அவன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை. அங்கே பிணம் இல்லை.அவன் அடுத்த கதவுக்குச்சென்று பார்த்தான். அங்கே 34வது கதவில் பிணம் மாட்டியிருந்தது.அவன் ஒரு கணம் நடைபாதையில் நின்றான். அவன் சுக்குருக்கும் செல்லவில்லை ரொஹ்ரிக்கும் செல்லவில்லை. இரு திசைகளிலும் இருண்டிருந்தன. இருதலைக்கொள்ளியாக என்ன செய்வது என யோசித்துகொண்டிருந்தான் சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் அக்கம் பக்கத்தில் இல்லை. சுவற்றில் ஏறி சாவியின் மீது கையை வைத்தான்.
காலை சிற்றுண்டிநேரம் அள்வீட்டாளன் தன் அறையை நோக்கி சென்று கொண்டிருந்தான். சர்வேய்ர் கேட்டார். "குலாமு, எந்த சுபேதார்கிட்ட பிணத்த ஒப்படைத்த"
அளவீட்டாளன் சொன்னான் " ரெண்டு சுபேதாரும் வாங்கவில்லை. அதனால பினத்தை காட்டாத்துல ஒப்படச்சிட்டேங்க இன்னேரம் அரபிக்கடலுக்கு போய் சேர்ந்திருக்கும்"
நம்புழுதி

2 comments:
கதை நன்று.
தன் மண்ணுக்கேற்றபடி படைப்பை மொழிமாற்றம் செய்ய, இதன் மூலம் அவருக்கு உத்வேகத்தை தந்ததற்கு நன்றி.
Post a Comment