Tuesday, December 21, 2010

கவிதை

கிறிஸ்மஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கூர்வாளின்
இடையறாத  வீச்சில்
இறைமரம் இரத்தம் சிந்தும்.

கிளைகள் முறிந்து கூடுகள் சரிந்து
சின்னப் பறவைகளும் 
வனத்துப் பூச்சிகளும்
குட்டி அணில்களும்
உள்ளும் புறமும்
அகதிகளாக  அலைந்து திரியும்.

காலத்தின் கோலத்தால்
அகதிகளே வாளாவதும்
அகதிகளாக  வாளாவதும் நிகழ்ந்துவிடும்.

குருதிநின்று கிளையும் கூடும்  மீண்டும் மரத்தில் தோன்ற
வாளை வீசிவிட்டு
தொலைத்த கிறிஸ்தவ அருமருந்தை
மீட்டுப் பெற வேண்டும்-
பிறப்பை நோக்கிய உள்முகப்  பயணத்தால்

அ.எக்பர்ட் சச்சிதானந்தம்.

   சிறுகதை எழுத்தாளர்.

கணையாழி தொடங்கி 'நுகம்' சிறுகதை தொகுப்புடன் நின்ற எழுத்துப்பணி
மீண்டும் தொடங்கியதில் மகிழ்ச்சி.
நம்புழுதி

1 comment:

DANIEL JAMES said...

அதிகாரத்தின் வாலாய் இருப்பவர்களே, அச்சாயல் மீது கொண்ட வேட்கையால் நாவரண்டு கிடக்கிறார்கள். நானே அவரென்று. வாள் வீசுகிறார்கள் வலியற்றோர்மீது.
தங்கள் பிறப்பை, அன்பை மையமாக வைத்து உள்முகப் பயனம் மேற்கொண்டால்,
சமுதாயதில் நீங்கள் ஆவலுரும் மகிழ்ச்சி
நிறைந்த சமவாழ்வு பூமியில் பழக்கப்படும்.

நன்றி.