Tuesday, October 22, 2013

கட்டுரை

                                                          தண்ணீர்

(குறிப்பு- முகவுரை, முடிவுரை தவிர்த்து, சிறு தலைப்புகளாக வருவது பொறியாளர் திரு. அ. வீரப்பன் உரையின் சாரம்.)

குட்டையளவு தண்ணீர் இருந்துவிட்டால்கூட  போதும் மனிதர்கள் தாய், தந்தையை பூமி விடுதியில் விட்டு, நமக்கு சொர்க்கம் பக்கத்தில் இருக்கிறது என்று செவ்வாய் கிரகத்தில் குடியேறி விடுவார்கள்.  கடந்த காலங்களில் பேராசை கொண்ட அரசர்கள் படையெடுத்து  மனிதனை அடிமைப்படுத்தி, உழைப்பைச் சுரண்டினார்கள். அக்கால மனிதனும், தற்கால மண், மலைகள்போல் எதுவுமே செய்ய முடியாமல் கிடந்தார்கள். தற்போது மனிதன் விழித்துக் கொண்டான். அனால், பேராசைகொண்ட வளர்ந்த நாட்டின் முதலைகள் வாய் மூடிக்கிடக்கும் இயற்கை வளங்களை சுரண்டத் தொடங்கிவிட்டார்கள். 

'சில பிச்சைக்காரன் பிச்சை எடுத்த பணத்தை தன் சேமிப்புக் கணக்கில் சேர்ப்பதுபோல்‘ இயற்கையின் கால்களைப்பிடித்து கெஞ்சி, பிச்சையாக பெற்ற வளங்களை மக்களிடம் விற்று தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.

தண்ணீர் பற்றாக்குறைக்கு அரசியல்வாதிகளேக் காரணம்

ஏறக்குறைய 1979 வாக்கில் தமிழக அரசின் நீர்வளத்துறையின் பொறியாளர் திரு.மோகன கிருஷ்ணனை, திரு. எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக மாநில முதல்வரிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு உடன் அழைத்துச்சென்றார். அங்கு சென்றதும் நாங்கள் முதல்வர்களாக பேசிவிட்டு வருகின்றோம். பிறகு அதிகாரிகள் உட்பட பேசலாம் என்று பொறியாளரை வெளியே விட்டுச்சென்றார். பேச்சு வார்த்தை முடிந்து வெளியே வந்த எம். ஜி.ஆர் மோகன கிருஷ்ணன்  இந்த பிரச்சனை இரு மாநிலம், அதன் மக்கள் சார்ந்த பிரச்சனை. இதை பொறுமையாகத்தான் பேசவேண்டும் என்று வந்துவிட்டார். இதேபோலத்தான் கடந்த நாற்பது வருஷங்களாக வழி வழியாக வருகின்ற அரசியல் தலைவர்கள் அவர்கள் ஓட்டு லாபத்திற்காக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுகிறார்கள். பற்றாக்குறைக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசியல் வாதிகளுக்கு தவறான வழிகளைக்காட்டி,கெடுக்கிறார்கள்.

தீராத சண்டை

5.6டீ.எம்.சி தண்ணீருக்கு முல்லை பெரியாரில் சண்டை இடுகின்றோம்.  (நமக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைக்காக போராடவேண்டும். ஆனால் அதுமட்டுமே நிரந்தர தீர்வாகுமா) நம்மிடமிருந்து 260 டீ. எம். சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது அதைக்குறித்து எந்த அரசியல் ஆட்சியாளர்களிடமும் எதிர்காலத் திட்டம் இல்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் நீர் மேலாண்மையில் கொஞ்சம்கூட அக்கறை அற்றவர்களாக இருக்கிறார்கள்.  வெறுமனே தங்களுடைய பெருமைக்காக எங்கோ ஒரு அணைக்கட்டின் பலகையைத் திறந்தால்கூட நான் ஆணையிட்டுள்ளேன். எனதரசு உத்தரவிட்டுள்ளது என்று மார் தட்டிக்கொள்கிறார்கள்.

பொறியாளர்களை மதிப்பதில்லை.

நீர் மேலாண்மைக்கென்று அதிகாரிகள் இருக்கின்றார்கள், ஆனால் எந்த அரசுகளும் அவர்களை மதிப்பதே இல்லை. அவர்களை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை.ஒரு திட்டமிட்ட வேலையை வகுக்கச் சொல்வதுமில்லை மாறாக தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக அந்த அதிகாரிகளை வைத்திருக்கிறார்கள்.

நம்மிடம் போதுமான தண்ணீர் இல்லையா? 

தமிழகம் முழுக்க 214 பெரிய அணைக்கட்டுகள் மணல் குவியலை குவித்துக்கொண்டு கிடக்கிறது. அவைகளை அள்ளினால் ஏறக்குறைய 150 டீ.எம்.சி தண்ணீரை சேமிக்கமுடியும். 39000 பெரிய ஏரிகள் இருக்கின்றது,19000 சிறிய ஏரிகள் மற்றும் குளங்கள் குட்டைகள் கிடக்கின்றன. இவைகளை தூர் வாரி  ஆழப்படுத்தினால் ஆண்டுக்கு 250 டீ.எம்.சி தண்ணீர் கிடைக்கும். இவைகளை தூர் வாருவதற்கு அரசு செலவிடவேண்டியதில்லை. அதில் இருக்கும் மணல்களை அள்ள அனுமதி அளித்தால் தனியார்களே குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து அள்ளிச்செல்வார்கள். நீர் தேக்கத்திற்கு பயனுள்ளதிற்கு தடையை விதித்துவிட்டு ஆற்றுப்  படுகை, தாதுமணல் மலைகளை வாரிக்கொள்வதற்கு தாராலமாக அனுமதியளிக்கிறது. இந்த அரசுகளை என்னவென்று சொல்வது. ஆக சுலபமாக பெறவேண்டியத் தண்ணீர் அக்கறையற்ற நிலையில் வீணாகப்போகின்றது.

தீர்வு 

1. நீர் மேலாண்மை  பொறியாளர்களின் ஆலோசனையை அரசியல்வாதிகள் அலட்சியப்படுத்தாமல் புதிய செயல்வடிவத்தை ஊக்கப்படுத்தவேண்டும்.

2. ஒரு அணையில் தண்ணீர் திறந்தால், கடைமடைக்கு வருவதற்குள் ஆறு, ஏழு நாட்கள் ஆகின்றது.  அதிக நீரும் வீணாகிறது. இந்நிலையை தவிற்க நீர் வரத்து வழிகளை, சிறமம் பாராது லைனிங் செய்யவேண்டும்.

3.ஆற்று மணலையும், நிலத்தடி நீரையும் எடுப்பதற்கு எக்காரணத்தைக் கொண்டும் தனியார் துறைக்கு அனுமதி வழங்கக்கூடாது.


முடிவுரை

1. சண்டை குணம் படைத்தவன் எதிராளியை திருடன், அயோக்கியன் என்பான் அதைபோல கர்நாடகா, கேரளா கொடுக்கவில்லை என்று தொடர்ந்து வாதிடுகின்றோம் (அ.வி ) நமக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைக்காக போராடவேண்டும். அதில் கருத்துவேறுபாடு இல்லை. ஆனால் அது மட்டுமே நிரந்தர தீர்வாகுமா) நம் நீர் நிலைகளை குப்பைக்கொட்டும் இடங்களாக அலட்சியப் படுத்துகின்றோம்.

2. அணைக்கட்டுகள், ஏரிகள், குளம், குட்டைகளில் படிந்து கிடக்கும் மணல் வண்டல்கள் எல்லாவற்றையும் வாரி  சுத்தப்படுத்தினால் நமக்கு தேவையான தண்ணீரை சேமிக்க முடியும்.

3.மணல், மலை, நீர் வளங்களை தனியாருக்கு வழங்கினால் நமக்கும், எதிர்வரும்  சந்ததிக்கும் வாழ்வாதாரம் பறிபோகின்றது.

பொதுவாக மக்களை நேசிக்கின்றவன் முடிவுரையின் முதல் நிலையின் நியாயத்தை ஏற்று, இரண்டாம் நிலையைப் பெற்றுக்கொள்ள, மூன்றாம் நிலையை உணரும்போது ஒருவன் தானாகவே போராட உந்தப்படுகின்றான். போராட்டம் ்நிச்சயம்   வெற்றியை  வென்றெடுக்கும் .


ஜேடி














No comments: