ஞாநியின் கேணி இலக்கியச் சந்திப்பு
வழக்கம்போலவே நண்பர் லோகநாதனும் நானும் இலக்கியம், சினிமா குறித்த தேடலோடு சென்னை பயணப்பட்டோம். நேற்றய(13.10.13) நாளின் திட்டம் முதல் நிகழ்வாக அருணின் சினிமா கண்காட்சி பார்வையிடுதல், இரண்டாவது ஞாநியின் கேணி இலக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளுதல். திட்டமிட்டபடி முதலில் அருணின் கண்காட்சியை பார்த்தோம். அருண் குறுகிய காலத்தின் திட்டமிடுதலில் சினிமாவின் ஆரம்பகாலத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு உள் வெளிநாடுகளில் வெளியிட்ட அஞ்சல் வில்லைகளை ஒட்டி அதற்கான விளக்கங்களை எழுதியிருந்தார்கள். ஆனால், இன்னும்கூட சிறப்பாக செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. சரியான வாய்ப்பும் வசதியும் (பண வசதி) அமைந்திருக்காது என்றே கருதுகிறேன். அதைப் பார்த்துவிட்டு கிளம்பினோம்.
மாலையில் ஞாநியின் இலக்கியச் சந்திப்பில் கலந்துகொண்டோம் ஏறக்குறைய ஐந்துமணிக்கு ஞாநி, கண்மணி குணசேகரன், பாஸ்கர் சக்தி வந்தாகள் வந்தவுடன் ஞாநி கூட்டத்தை தொடங்கினார். முப்பதுகள் தொடங்கி எழுபதுகள் வரை பத்து பத்தான காலகட்டங்களை சுட்டிக்காட்டினார். அக்காலங்களில் தென் தமிழகத்தின் குறிப்பாக தஞ்சாவூர், திருநெல்வேலி பகுதிகளில் இருந்துதான் இலக்கியங்களும் சினிமாவும் வந்துகொண்டிருந்தது. எண்பதுகளுக்குப்பிறகுதான் ஜெயகாந்தன் போன்றோர்கள் வட தமிழகத்தில் இருந்து வந்தார்கள். பிறகு இமயம் உள்ளிட்ட சிலரைக்குறிப்பிட்டார். கண்மணி குணசேகரனைப்பற்றி சொல்லும்போது அருமையாகப் பாடக்கூடியவர். அவரிடம் நல் குரல் வளம் இருக்கிறது. கவிதையில் தொடங்கி சிறுகதை, நாவல் எ ழுதியிருக்கிறார். பணி செய்யும் இடத்திலிருந்து படைப்பை கொண்டுவருகிறவர்கள் மிகக்குறைவு அதிலிருந்து விலகி கண்மணி நெடுஞ்சாலை நாவலைப் படைத்திருக்கிறார். என்கிற அறிமுகவுரையோடு கண்மணி குணசேகரனை பேச அழைத்தார்.
கண்மணி ஒரு கிராமியப்பாடலோடு தன் உரையைத்துவங்கினார். எப்போதுமே மிக இயல்பாக பேசக்கூடியவர். நடைமுறைவாழ்வில் எப்படி புழங்குகிறாரோ, அப்படியே தன் மேடை பேச்சிலும் பிரிதிபளிக்கின்றார். கண்மணியின் உரையில் இருந்து நான் உள்வாங்கிக்கொண்டது. படைப்பு என்பது ஒன்றும் இல்லை. அவரவர் இயல்புக்கு வைக்கப்படுகின்ற ஒரு எழுத்துமுறை. அதற்குமேல் முயற்சிப்பதெல்லாம் வாசகனை தன் வசம் ஈர்ப்பதற்காக தூவப்படும் ருசியுள்ள உணவுத்துகள்கள். என்றுதான் எனக்குத்தோன்றியது. கண்மணி பேசும்போது எதார்த்தமாக எழுதுவது பேசுவது தவிர வேறொன்றும் பெரியதில்லை என்பதுபோல பேசுகின்றார். அது தன்னை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள்ளகவே குறுக்கிவிடும் என்று கண்மணி உணர்ந்துகொள்ள வேண்டும். மற்ற படைப்புகளிலில் இருந்தும் அதன் சுவாரசியப்போக்கை (அவைகளின் தனித்தன்மையை வியக்கவேண்டும்) உள்வாங்கவேண்டும். இல்லை என்றால் பழைய பாத்திரத்தை ஒதுக்குவதுபோல சாதாரணமாக ஒதுக்கிவிட்டுப் போவார்கள். இதை எதற்காக சொல்லுகிறேன் என்றால் சென்ற வருஷம் பாண்டிச்சேரியில் தமுஎகச கூட்டத்திற்கு என்னை காஞ்சி தாமுஎகச கிளை பகேற்பாளராக அனுப்பி வைத்தது. அக்கூட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் கூட கலந்து கொண்டார். அதில் கண்மணி குணசேகரன் பேசினார். அக்குட்டத்தில் பேசிய பாதி உள்ளடக்க விஷயங்கள் ஞாநியின் கூட்டத்திலும் பிரிதிபலித்தார். ஆக இரண்டாவது முறை கண்மணியின் உரையைக்கேட்கிற போது சற்று அறிந்த விஷயத்தையேக் கேட்பதாக இருந்தது. இதற்குத்தான் மற்ற படைப்புகளிலும் கரையவேண்டியிருக்கிறது என்கிறேன்.

பொதுவாக கண்மணியின் உரையை வெளியரங்கத்தில் கேட்கின்றவர்கள் சிரித்து தன் வயிற்றை நோகடித்துக்கொள்வார்கள். அதேக்கண்மணி தன்சொந்த வீட்டின் உறுப்பினர்களோடு தினமும் உரையாடும்போது அந்த உரையில் ஒரு வாய்வியலுக்கான ஆதாரங்கள் இருப்பதாகவே உணருவார்கள். நேற்று நடந்த கூட்டத்தில் நான் உட்பட நிறைய சிரித்தோம். பாஸ்கர் சக்தி கூட விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால், சிரிப்பு முடிந்தபிறகு கேள்விநேரம் வந்தபோது ஞாநி அவர்கள் கேள்வியைக்கேட்கலாம் என்றார். சற்று நேரம் அப்படியே அமைதியாகிவிட்டது. காரணம் 1. வந்திருந்தவர்களில் அதிகமானவர்கள் நகரத்தின் வாலிபர்கள். 2. கணிமணியின் படைப்புகளை அதிகம் வாசித்திருக்க வாய்ப்பில்லை. 3. மூன்று அவரிடம் கேள்வி கேட்டு நமக்கு பயன்படப்போகிறது ஒன்றும் இல்லை என்றுகூட யோசித்திருக்கலாம். இது உண்மைதான் என்பதை சற்று நேர அமைதிக்குப்பிறகு எழுந்த மிக மேலோட்டமான கேள்விகளே சான்றாக இருந்தது. ஏனென்றால் இத்தன்மையை தொடர்ந்து நானும் அனுபவித்திருக்கிறேன். இலக்கிய நன்பர்கள் எனக்குள்குள்ளும் கொஞ்சம் விசயம் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் ஒருவருடன் ஒருவர் தனியாக பேசவேண்டும் என்ற வாய்ப்பு வரும்போது ஒன்று பாராததைபோல் இருந்துவிடுவாகள் அல்லது என்னிடம் மௌனமாக இருந்து நாழிகையைக்கழித்துவிட்டு மறைந்துவிடுவாக்ள நான் புத்தியில்லாமல் முரட்டுத்தனமானவனோ, அல்லது துஷ்ட மிருகமோ அல்ல, இருந்தாலும் என்னிடம் முடிந்தளவு மௌனமாக இருந்துவிடுவார்கள். எனென்றால் என்னிடம் பேச எத்தனிக்கும்போது அவர்களுக்குத்தேவையான சுவாரசியத்தையோ அல்லது என் பேச்சிலிருந்து அவர்கள் எதிர்நோக்கியிருக்கும் அறிவையோ தரமுடியாது என்ற முன்முடிவோடு இருக்கிறார்கள். அதனால், எனக்கு முன்னே வெறுமனே மௌனமாக நின்று நகர்ந்துவிடுவார்கள்.
என்னிடமும் வாய் வார்தையை வலைபோட்டு இழுத்துவருகின்ற திறமைவாய்ந்த இலக்கியம் அறிந்த நண்பர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். நான் சற்று மௌனமாக இருந்தாலும் கேள்வியின் தூண்டிலை என் மூக்கு வழியாக நுழைத்து மூளையில் பதுங்கி இருக்கும் வார்த்தைகளை இழத்துவருவார்கள். அது எனக்கும் அவருக்கும் எந்த காயத்தையும் ஏற்படுத்தாது. மாறாக இருவருக்குமே மிக பயனுள்ளதாக இருக்கும். அதை அனுபவிக்க எங்கள் இருவருககும் கொஞ்சம் பொறுமை மட்டுமே தேவையாய் இருக்கிறது, இவர்கள் இலக்கியத்தைக்கடந்து என் குடும்ப உறுப்பினர்போன்று கொஞ்சமே மெனக்கெட்டு பழகுபவர்கள்.
இந்த ஊடாட்டத்தை இலக்கியம் நோக்கிவருகின்ற அனைவரிடமும் எதிர்பார்க்கமுடியாது.
கண்மணியின் வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுப்பை வாசித்திருக்கிறேன். அதில் முதல் கதையான “கொடிபாதை“ மக்கள் நெருக்கடியின் பேருந்தில் தற்செயலாக நடக்கும் ஒரு பிரவசத்தை பதிவுசெய்வதாகவும் கிராமத்திலிருந்து நகரம் நோக்கி வருபவர்கள் படும் அவஸ்தையை சொல்வதாக இருக்கும். ஆனால், அதற்கு பிறகான கதைகளில் (சமாதானக்கறி) படிப்படியாக கதையில் ஒரு நேர்த்தியைக்கானமுடிகிறது. கதைகளின் வரிகளுக்குள் பல விஷயங்களை கட்டமைத்து வைப்பது போன்ற சுவாரசியங்களை அரங்கேற்றம் செய்திருப்பார்.
அப்படி சிறந்த கதைகளை கட்டமைக்கின்ற கண்மணி குணசேகரனுடைய உரையையோ, அவரின் படைப்பையோ முகவரி கேட்டு வரும் கிராமத்தான் பேச்சாக வரும் சந்ததி எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஜேடி

No comments:
Post a Comment