மெய்படுமா க(ள,ல,ன)வுகள
பகுதி -1
ஜேடி
பகுதி -1
பழக்கமான பையன் டீக்கடை வைத்திருக்கிறான். அக்கடை வாசல், தினமும் அரைமணி நேரம் பேசுவதற்கான இடமாக மாறிவிட்டது. விடுமுறை நாளானாலும் ஏதோ ஒரு ஆமானுஷ்ய சக்தி கடைமுன் அழைத்துவிடுகிறது. அதன் முதலாளி என்னைவிட பனிரெண்டு வயது குறைவானவன். ஏறக்குறைய பதினெட்டு வருஷமாக பழகுகிறேன்.
நேற்று முன்தினத்தில் இருந்து என்னைப் பார்த்ததும் மௌனமாக சிரிக்கிறான். எப்போதுமே அப்படி செய்பவன் அல்ல. நேற்றும் இரண்டு முறை டீசாப்பிடும்போதும் சிரித்தான். அவன் விஜயகாந்த் ரசிகர். நான் எதிர்மறையாக எனக்கு ரஜினிகாந்த்தான் பிடிக்கும் என்று சொல்லி சில நேரம் நகைச்சுவை செய்துகொள்வோம். இரண்டு நாள் டீக்கடையில் கூட்டம் அதிகம் நானும் சரியாக கவனிக்கவில்லை. நேற்று மாலை கடைக்கு போகும்போது.
“அண்ணா, எதுக்கு உன்ன பார்த்ததும் சிரிக்கிறேன், தெரியலையா?“ என்றான்.
முன் நாள் காலையில்,“நாங்க ஆட்சியை பிடிச்சி காட்ரோம்னு நீ சொன்ன, அதுக்கு நான் சிரிச்சேன். இன்றைக்கு என்னை பார்த்தும், உனக்கே சிரிப்பு சிரிப்பா வருதுபோல“ என்றேன்.
“அட அத உடுணா. நீ என் கனவில வந்தணா.“
“அப்படியா உன் கனவுல வரமாதிரியா, என்னயே நெனைச்சி படுக்கிற“
“எப்பிடி வந்தேனு கேளு.
“ஆங். எப்பிடி... எப்பிடி..“
வெடித்த சிரிப்புடன் “அட குடிச்சிபுட்டு சுய நினைவே இல்லாம, கடைக்கு முன்ன படுத்துங் கெடக்குறணா“
No comments:
Post a Comment