உலகம் கைவிடாது
எங்களுக்கு மட்டும்தான்
உலகம்
எரிமலைக்குழம்பை குடிக்கக்கொடுக்கிறது
நாங்கள் மட்டும்தான்
காடுகளில்
கொடிய மிருகங்களைவிட
பாதுகாப்பாய் அடைக்கப்படுகிறோம்
சுத்திகரித்து அனுப்பப்படும்
பார்வையாளர்கள்
அதிசயத்தை வியப்புடன்
கான்பதுபோல்
கண்டு செல்கிறார்கள்
மண் புழுக்களைப்போல்
நுரைத்தள்ளி
உருண்டையாக
நெளிந்துகிடக்கின்றோம்
எதிர்காலத்தை கால்நடை
பவுண்டுகளில் கடக்கின்றோம்
எங்கள் உயிர் நிமிடத்தில்
பிறிந்து விடவில்லை
அப்படி இருந்தால்
ஒருவேலை சந்தோஷப்படுவோம்
பாறைகளை
தங்கள்தேவைக்கேற்ப்ப
சந்தோஷமாய்
உடைத்துக்கொள்வது போல்
எங்கள் அங்கத்தை குறைத்து
உயிரோடுவிடுகிறார்கள்
எங்கள் மனம்
தெளிவாய் இருந்தாலும்
பயித்தியங்களின்
உடைகளை
எங்களுக்கு
கட்டாயப்படுத்துகிறார்கள்.
முடக்கிப்போட
பால் மனம் கழிக்கா
குழந்தைகளின்
குரல் வலையில்
கத்தி வைக்கிறார்கள்.
இனி தனித்தனியான
குழிவெட்டுவது
சிறமமென்று
நீண்ட குழிக்குள்
கழிவுகளைப்போல்
கோட்டிமூடுகிறார்கள
நாற்றம் அவர்கள் நாசிக்கு
ஏறுமென்று.
மிச்சமிருப்பவர்க்கு
துணிகள் தருகிறார்கள்
மானத்தை மறைக்க,
ஆனால், என் தாயோடு
நானுந்தான் உறுப்புகளை
இழந்து நிற்கிறோமே?
தொடுதல் வேண்டும்
தடுமாறிக்கொண்டேயிருக்கிறது
வாழ்க்கை
யாரைக் குறைசொல்வது
போகும் இடமே தெரியவில்லை
எங்கே முடியுமென்பதும்
துளங்கவில்லை
வாழ்வது வீனானதோ?
விக்கித்து தவிக்கிறது
மனசுமட்டுமல்ல
சதை பிண்டங்களும்தான்
யாருடனும்
ஊடாடவேத்தோன்றவில்லை,
நாளை மனிதனுக்காக
மிச்சம் வைக்க
தேடல்களில் புதைந்து போகின்றவர்களை தவிர்த்து.
காடுகளை,மலைகளை,ஆறுகளை, நாடுகளை,
கடல்அலையை,அதன்நுரையை,சிதையும்சிறார்களை
கொடூரமான சுகபோகிகளின் மனப்போக்கை
வீதியின் சுவர்களில் தொட்டுவைக்கவுமே மனசுத்துடிக்கிறது.
தோழிகளின், தோழர்களின் சிறைகாரம்,அலங்காரம்,
வசீகரமான புதுப்புது புத்தக அவதாரங்களிதான்
தினந்தினம் செத்துபோகிறேன்
வாழ்க்கை மிகவும் லேசானதாயிருக்கிறது
என்னைச்சுற்றி பாடமெடுக்கும் கதாப்பாத்திரங்களால்.
புத்தகம்
எங்கள் உலகம்
கொட்டிக்கிடக்கிறது
மலைபோல
தாகமே எடுக்காமல்
அனைத்துப்பசியையும்
காற்றில் ஓட்டுகிறது
மூழ்கிவிட்டால்
அடங்காமல்
வளர்ந்துகொண்டேயிருக்கிறது
மிதந்து வந்து
அறிவை சூடாக்கும்
புத்தகப்பரப்பு
2 comments:
அன்புள்ள டேனியல், உங்கள் நம் புழுதி வலைப்பூவிற்கு எனது வாழ்த்துக்கள். தரும.இரத்தினகுமார்.
தோழரே நன்றி. உங்களின் தேர்ந்த ஆய்வுகளை கற்றுக்கொள்ளவே ஆசைப்படுகிறென்.
Post a Comment