Monday, January 31, 2011

ஹைக்கூ

ஏறக்குறைய முப்பது வருடங்களாய் இலக்கியத்துறையில்  வாசித்தும், விவாதித்தும் தொடர்ந்து கூட்டங்களையும் நடத்திவரும் நண்பர்களில் தனித்துவம் மிக்கவர் புல்வெளிகாமராஜ். அரசு  சார்பு நிலையில் நூலக  புத்தகம் வாங்கும், இவர் குடும்பம் சார்ந்தும், விருப்பு சார்ந்தும், எத்துனை எதிர்ப்பு  வந்தாலும் எப்படிப்பட்ட  புத்தகத்தையும் வாங்கும் பழக்கம் உள்ளவர்.   உடனே குறைத்து மதிப்பிட வேண்டாம்,  தமிழகத்தின் இல்லாமல் போன, இருக்கின்ற  அத்தனை எழுத்தாளர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர். தற்போதைய நிலையில் ஒரு படைப்பு வருகிறதென்றால், ஐம்பது வருடம் முன்பு அதன் சாயலில் உள்ள படைப்பை மேற்கோள் காட்டுபவர். காஞ்சியின் திறந்தவெளி நூலகம். கணக்கு  வைக்காமல் புத்தகம் இரவல் வழங்குபவர். இது மேடை நாகரீகம் அன்று, உண்மையை சொல்வதில் என் மீது  குற்றம் சுமத்தினால்  அதைப்பற்றி    எனக்கு கவலை இல்லை.  சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பவர். இப்படைப்பாளியின் கடந்தவார ஹைக்கூ படைப்புகளைத்தொடர்ந்து   இந்த வாரமும்  வருவதில் பெருமை அடைகிறோம்.  

இந்த வாரம்   கடவுள் புகழ் பாடுதல்   படைப்பாளி : புல்வெளி காமராஜ்
...............................................................................................................................
ஏசு ஜீவிக்கிறார் 
ஸ்டிக்கர் ஒட்டிவைத்தவர் 
டீ விற்கிறார்./          மடியிலிருப்பவர்கள்
                                   தாரமா? தங்கையா? குழம்புகிறார் 
                                    பிள்ளையார்./            இன்னமும் அதே கோவணமா 
                                                                         கசக்கி  காயப்போடு  
                                                                         பழனி முருகா./
கடல்நீர் கரிக்க 
காரணம் 
கடவுள் முத்திரமா?./    வெட்டிய தலையோடு நிற்கிறாள் 
                                           ஏன் கைது செய்யவில்லை?
                                           மா காளியை./            இன்னமும் 
                                                                                 சைட் அடித்துக்கொண்டே 
                                                                                 பிள்ளையார்./   
ஏக்கமாய் பார்க்கிறான் சலுன்காரன் 
சிவபெருமானின் 
சடைமுடியை./      ஈவ்டீசிங் செய்த 
                                   முதல் நபர் 
                                    வள்ளி-முருகன்./     நீண்ட காலமாய் செவிடு
                                                                        வைத்தியம் பார்க்கக்கூடாதா
                                                                        சண்டிகேஸ்வரா./
'Blue cross' புடுங்குகிறதா 
எல்லா சாமியும் 
விலங்குகள் மேலே./    தூதனுப்பிய அனுமானைக்காணோம்
                                           கொடுத்தனுப்பிய கணையாழி 
                                            பத்து சவரமாம்./    உதவி செய்ததற்கு தண்டனை
                                                                              முதுகில் சூட்டுத்தழும்புடன் 
                                                                               அணில்கள்./  
கண்ணன் வாயைத்திறந்தான்
யசோதை வியந்தாள் 
மூன்றுபல் சொத்தை./    எய்ட்ஸ் பரிசோதனைக்கு 
                                             உடனே அனுப்புங்கள் 
                                             இந்திரனை./  ஒவ்வொரு வாரமும் 
                                                           பாவங்களை ரெனீவல் செய்கிறார்கள் 
                                                                         சர்ச்சுகளில்./   
................................................................................................................................                       நம்புழுதி

2 comments:

பல்லவர்கள் said...

நன்று.மேலும் தொடர வாழ்த்துக்கள்

DANIEL JAMES said...

படைப்பாளியை உள் வாங்கியதற்கு நன்றி தோழரே. தொடர்ந்து உங்கள் பார்வைமட்டுமள்ள படைப்பும் அளிக்கவேண்டும்.