புல்வெளி காமராஜ்
கூப்பிய கைக்குள்
குறுவாள்
கவிதையில் பூடகம். தமிழரை வாழ்வோடு கலக்காததால்
கரைந்துபோகிறார்
பிள்ளையார். பெப்சி குடித்ததால்
செத்தது
கோலிசோடா.
அம்மா பெயரை இனிசியலாய்
எப்படிபோடுவாய்?
ஐயப்பா. யாகத்தீயில்
பொசுங்குகிறது
தமிழர் திருமணம். ஓம்சக்தி பக்த்தர்
ஷாக் அடித்து செத்தார்
மின்சக்தி.
அண்ணாநாமம்
கழகங்களால்
அண்ணாவுக்கேநாமம். வாக்குச்சாவடி
வாக்களித்தபின்
சாவடி. அரசுவேலை கிடத்தும்
தெளிவில்லை
. டாஸ்மார்க்.
யுத்தபூமி
முதலில் செத்தது
சமாதானம். உழைப்பாளி உடல்
முதலாளி மூளை
இந்தியக் கம்யூனிசம். மனிதனை நம்பாது
தூக்கில் தொங்குகிறது
டம்ளர்.
1 comment:
தவறுதலாக மறுமொழி கழிக்கப்பட்டது.பல்லவ நண்பர்களுக்கு,நன்றி
Post a Comment