Sunday, September 26, 2010

திரை என்கிற 'தரை'

காஞ்சியில் சில நண்பர்களால் 'தரை' என்கிற திரையமப்பு தொடங்கப்பட்டுள்ளது.2010 ஜூன் முதல் டிசம்பர் முடிய என்கிற  ஒரு வருடத்திற்கான திட்டத்துடன் தொடங்கியிருக்கிறார்கள். 'ரன் லோல ரன்' இதில் தொடங்கி ரன்னாகிக்கொண்டிருக்கிறது. இதில் தேர்ந்தெடுத்த உலக சினிமாவை வாரந்தோறும் திரையிடுகிறார்கள். இவர்கள் வீதியில் கிடக்கும் காய்ந்த சருகுகளில் இலக்கிய எழுத்தைப்பார்த்தாலும் தூசுத்துடைத்து அதன் வீரியமிக்க கருத்துக்களை விவாதிக்கும் வே.நாராயணன் அவர்களின் பாரம்பரியத்தில் வந்தவர்கள். தற்போது இலக்கிய படைப்புகளின் பார்வையில் பரந்து விரிந்திருப்போர், சந்தர்ப்ப சூழ்நிலையால் பார்வையின் இடுக்குகளில் மறைந்திருப்போர் எழுத்துக்களின் நாடித்துடிப்பை ரத்தம் வடியாமல், சீழ்பிடிக்காமல் படைப்பை லேசர் ஆபரேசன் செய்கிற விர்ப்பன்னர்கள். (ஆனால் மதிப்புக்குரிய (படைப்பாளியை)  சுந்தரராமசாமியை விவாத்தத்தின் முலம் கண்ணிர் சிந்தவைத்தது. சற்று மனவருத்தத்தை தரக்கூடியதாகத்தான் எனக்குத்  தோன்றுகிறது) அமைப்புகள் தொடர்ந்து நடத்துவதில் இழப்புகளை தாம்பத்திய குறைபாடு போல் மெளனமாய் வைத்துக்கொண்டு, மேலும் இலக்கியத்தை பலரும் ருசிக்கச்செய்வதில்  அரசுக்கு ஆதரவாய் தண்டோரா போடுபவன்போல் உற்சாகமாய் செயல்படுகிறோம். இதன் ஒரு பகுதியாகத்தான்  'தரை' அமைப்பின் செயல் தொடர்கிறது.

கடந்த ஞாயிறு  19.9.2010 ஆறுமணியளவில் திரையிடப்பட்ட சீனப்படம் 'The Rood Home' எச்சை உறிஞ்சிக்கொள்ளும் முத்தங்களும்,வாழ்க்கை ஓடுகிற வேகத்துக்கு உணர்வுகளை அலையவிடாமல் ஒருவர்மீது வைக்கும் உண்மையான அன்பு எந்த கஷ்ட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாது என்பதை மிகவும் யதார்த்தமாக படம்பிடித்துள்ளார்கள். சந்தோசமான மனித வாழ்வுக்கு இயற்கையை மாற்ற முயற் சிக்கும் போதுதான் பிரச்சனைவருகிறது. படத்தில் மனசின் சூழலுக்கு   ஏற்றது   போல்    கலர் மாற்றியமைத்ததில் படத்துக்கு எந்த வலுவும் சேர்த்தது போல் தெரியவில்லை.  இறந்த மனிதன் உடல் சாந்தியடையும் என்ற நம்பிக்கையில் உயிரோடு இருப்பவனை கஷ்ட்டப்படுத்துவது எப்படி சரி என்று தெரியவில்லை. இதுதான் படத்தின் குறை.

அதற்கடுத்ததாக 'The Father'  Iran படம். தன்னை பாசமாய் நடத்தியத் தந்தை திடிரென்று மரணத்தை தழுவுகின்றார். தன் குடும்பத்தை காப்பாற்ற சிறுவன் நகரத்துக்கு சென்று ஒரு கடையில் வேலைசெய்கின்றான்.பல வருடங்கள் கழித்து தன் தாயும்,தங்கையும் பார்க்க வருகிறான்.வரும்வழியில் ஒரு கால்வாயில் தண்ணீர் அருந்தும்போது. தந்தையின் போட்டோ தண்ணிரில் விழுந்துவிடுகிறது. தந்தையின் ஞாபகம் வரும் போதெல்லாம் அந்தப்போட்டோவை பார்த்து ஆருதலடைந்தவன். வானத்தின் உயரத்தில் பருந்து சிறகை அசைக்காமல் பறப்பதுபோல் ஓடுகிற தண்ணிரில் போட்டோ மிதந்துச்செல்கிறது. சிறுவன் பின்தொடர்ந்து ஓடுகிறான். ஆறுதலாய் இருந்த ஒரே உறவும் மறைந்ததற்கான காட்சிப்படுத்துதல் அது. தமிழ் படங்களில் சோகத்தை வெளிப்படுத்த கத்திக்கதறி, புரண்டு, அழுதும் கூட பார்வையாளனுக்கு ஏற்படுத்த முடியாத ஒரு வலியை தண்ணிரில் மிதந்து மறையும் போட்டோ ஏற்ப்படுத்திவிடுகிறது.

தாய் தன் அப்பாவுக்கு  செய்த சேவையை இப்போது வேறு ஒருவருக்கு செய்கிறாள் என்பதை நேரடியாக பார்கின்றபோது. தான்  வாங்கிவந்த துணி மணிகள்  எல்லாம் வீசி எறிந்துவிட்டு ஓடுகிறான். சிதைந்த துணி மணிகள் சிறுவனின் ஆக்ரோஷமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. தமிழ்படத்தில் நூறு வாகனத்தில்  கத்தியும், உருட்டுக்கட்டையும் ஒரு ஐநூறுபேர் வண்டியில் நிறப்பிகூச்சல் போட்டால் தான்  வில்லன் கோபமாய் துரத்துகிறான் என்பதை வெளிப்படுத்திக் காட்டமுடயும். தனக்கு ஆதரவு தருகிற மனுஷனோடு தன்னை மகன் பார்த்து விட்டு ஓடுவதை, பார்க்கும் தாயின் முகத்தில் வாழ்வு எவ்வளவு சிக்கலான கொடூரங்கொண்டது  என்பதை தெளிவுபடுத்துகிறது.

அடாவடி போலீஸ்க்காரனையே இதுவரை திரையில்  பார்த்திருப்போம்.   நியாமான மனித உணர்வை வெளிப்படுத்தும் போலீஸ், அவருக்குள்ளும் இயலாமை, சிறுவனுக்கும் மரியாதை கொடுக்கும் முறை எல்லா உத்தியோகத்தை போல அதுவும் ஒரு வாழ்வாதாரத்துக்கான வேலை, இதற்ககு சமூக அக்கறை சற்று கூடுதளாக இருந்தால் போதுமானது.பெருசா தியாகம் செய்கிற பணி, போற்றப்பட வேண்டியபணி என்றெல்லாம் கிடையாது என்பதை அதில்வரும் போலீஸ் பாத்திரம் நிறுவுகிறது.

தாயின் அன்பும் தங்கையின் பாசமும் இந்த போலீஸ்சால்தான் கிடைக்காமல் போகிறது என்று போலீசை பழிவாங்க நினைக்கிறான். அதில் தோல்விகண்டு அதற்கான நேரங்கிடைக்கும், அப்போது நிறைவேற்றலாம் என்று சிறுவன்  மீண்டும் நகரத்திற்கு சென்றுவிடுகின்றான்.

சின்னப்பையன் தானே மனசை மாற்றி தன் குடும்பமாக இணைத்துக்கொள்ளலாம் என போலீஸ் நினைக்கிறான். அதில் பலமுறை  தோல்வி கண்டதும்  இனி தண்டனை தான் சரியான தீர்வு என்று கோபத்துடன்  போலீஸ் விலங்கை எடுத்துக்கொண்டு சிறுவனைத்தேடி  நகரத்திற்கு வருகிறான். தொடர்ந்து தேடலுக்குப்பிறகு சிறுவனை விலங்கிட்டு அழைத்துச் செல்கிறான். போகும்போது, தன் கிராமத்துக்கு போகிற வழியை தவறவிட்டு பாலைவனத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். எந்தப்பக்கமும் வழி தெரிய வில்லை. வாழ்வு நிர்கதியாய் மாறுகிறபோது. எதிரெதிர் என்னங்கோண்டவர்களை சூழ்நிலை  எப்படி ஒத்த கருத்துக்கு மாற்றுகிறது. என்பதின் பதிவுடன் படம் நிறைவுபெறுகிறது.

நிறைவுக்காட்சியின் முத்தாய்ப்பு.  ஆரம்பத்தில் கால்வாயில் தந்தையின் போட்டோ காணாமல் போகிறபோது கைவிடப்பட்டநிலையை குறிக்கிறது. பாலைவனத்தில் போலீஸ் மயக்கமடைந்து விழுகின்றான். சிறுவன் மனம்மாறி தண்ணீரைத்தேடி ஓடுகிறான். தூரத்தில் ஒரு கால்வாயில் தண்ணீர் போகிறது. போலீஸ்க்காரனை இழுத்துச்சென்று பாதி  முகம் நனையும்படி  கால்வாயில் போட்டான். தானும் தண்ணீரில் முகம் முழுகும்படியாக விழுகிறான். போலீஸ்காரன் பாக்கட்டிலிருந்து , தாய், தங்கை யனைவரும் சந்தோசமாய் இருக்கும் குருப்போட்டோ தண்ணிரில் மிதந்துவந்து சிறுவனின் முகத்தில் முட்டுகிறது. சிறுவன் போட்டோவை எடுத்து  பார்க்கும்போது, போலிசை ஏற்றுக்கொண்டான். என்று  புரியவைப் பதோடு படம் நிறைவுபெறுகிறது.
                                                  படங்கள் வினையாற்றுகிறது.
ஏறக்குறைய இருபத்தி அந்து வருடங்களாக தமிழ்,மற்றும் ஆங்கிலஆக்க்ஷன், படங்கள் தீவிரமாக பார்த்துள்ளேன். இதுவரை ஏதாவது வினையாற்றிதா என்றால் மிகவும் குறைவுதான். அனால் ஜுன் 2010 முதல் காஞ்சிபுரம் தரை அமைப்பில் ஞாயிறு  தோறும் போடப்படும் படங்கள் (உலக படங்கள்) வினையாற்றுகின்றன. அவைகள் உணர்வுகளை வெளிப்படுத்துவதுடன்  பரிமாறுகின்றன. வினைகளை தனியாகவே எழுதலாம்.                           'தரை' தொடர்ந்து உற்சாகமாய் செயல்படவேண்டும்.

நம்புழுதி        

Wednesday, September 22, 2010

கட்டுரை

                                    ஆதிதிராவிடன் சலுகை சாதியல்ல

எங்கள் பாட்டன் பூட்டன் எல்லாம் அவமானங்களையும், பிறருக்கு உழைப்பை வழங்கியுமே தங்கள் வாழ்வை கழித்தார்கள். குத்துபட்ட முருங்கை மரத்தில் கசியும் பிசின்போல்' எப்போதும் கசக்கி பிழிதலையே உணர்ந்தார்கள். அதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்பதில் உறுதிகொண்டு சிலநேரம் சந்தோசம் பலநேரம் கசப்பிலும் காலம் கடத்தினார்கள். மின்சாரம் பாய்ந்த  உடலில் ரத்தக்கடத்தல்  நின்றுவிடுவது போல் மதிப்புக்குரிய முன்னாள் பண்ணையாளர், உயர்சாதி என தங்களை எப்போதும் விளம்பரப்படுத்திக்கொள்ளும் மனிதத்தன்மையில் நம்பிக்கையில்லாத நண்பர்களும் சேர்ந்து புதயலை தோண்டுவதாக எளியவர்களின் உழைப்பை பிழிந்து தங்களுக்கு செல்வம் சேர்த்துக் கொண்டார்கள். இதில் மின்சாரம் பாயாமலே உழைப்பாளியின் ரத்தம் சுண்டிவிட்டது. வாழ்வின்  சுவாரசியத்தை சற்றும் ருசிக்காமல்  கொடூரங்களை சுமந்தே 'பூட்டன்' மறைந்துவிட்டான். வெள்ளைக்காரன் தரிசனத்தால் 'பாட்டன்' கடைசி காலத்தில் சற்று நிம்மதியடைந்தான். அதனாலே அப்பன் பெயர் மாறியது. எறும்பு  தன் இரையை இழுதுச்செல்வதாக  வாழ்வு நகர்ந்தது. பெயர் மாற்றிக்கொண்டதால் வெள்ளைக்காரன் மோட்ச்சம் போகும் வழியை எல்லார்க்கும் காட்டும் பொறுப்பை சிலரிடம் தந்தான். பொறுப்பு, மையம், புள்ளி, மதிப்புடையது, மதிப்பில்லாதது என தன்னைத்தான் கட்டி நிருவனமயமாய் தொடர்கிறது. மாமன், மச்சான் தெரிந்தவர்கள், உண்டியலை எந்த வழியிலேனும் சம்பாதித்து நிறப்புகிறவர்கள், சாதிக்காரன் என்று பொறுப்பை பிரித்துக்கொண்டு அமைப்பைத் தொடர்ந்து  நடத்துகின்றோம்.

எந்த அறிஞர்களாலும்  கண்டுபிடிக்கமுடியாத  ரிப்பேர் ஆகாத ஒரே மெஷின்தான் அந்தக்கால அம்மா. விசேஷ நாட்களில் தேர்ந்த மஞ்சள் கிழங்கை உரசி பூசிய வெளுத்த முகத்தின் அழகும், கிளிமார்க் சிக்காயில் ஊரி கருத்த முடியில் மிச்சமாய் நின்ற வாசமும்,  ஆண்டை வீட்டின் மாட்டுக்கொட்டாயின் சாணத்தில் கரைந்து நாற்றமாய் உருமாறி வெளியேறும் தினந்தோறும்.       

அண்ணன் சமயக்கொள்கையை பரப்புகிற ஆயர் பொறுப்பில் அமர்த்தப்படுகின்றான். பிறகு அவன் சபைமக்களிடம் பேசும்போது. உங்களை ஆளுகிற அதிகாரம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. என்கிற தொனியிலேயே பேசி செயல்படுகிறார். கிராமங்களுக்கு செல்லும்போது கொழுத்தக்கன்றுகள் அளவுக்கு நாட்டுக்கோழிகளை அடிக்கத்தூண்டுகிறார்கள். 'செத்த பொணத்தை பருந்து தின்பதுபோல்' எழை கிராமக் குழந்தைகளை ஏக்கத்தோடு பார்க்கவைத்து தின்கிறார்கள். அரிசி மூட்டைக்கு மேல் சட்டியையும், கிழ் இரண்டு கொம்பு சொருகியது போல் அண்ணனுக்கு உருவம் மாறிவிட்டது. ஆசீர்வாதங்களை பொழிவதற்காக அவரே  கையேந்துகிறார் என்று கடவுள்   மீது பழியைப்போட்டு  வடக்கிலும், தெற்கிலும் வீடும் நஞ்ஜையும் வாங்கிப்போட்டார். அவர் செயல்பாடுகளை விமர்சிக்கும்  யாரையும் பழிவாங்கி ஏப்பம்விடுவார்.

தம்பி,  பள்ளி  படிப்பை  விட்டு  ஷகிலாவின்  படத்தை காலாவதியான திரையரங்கத்தில்
தேடுகிறான். வீட்டில் தந்தைக்கு அடங்கி நடப்பவன்போல் நடந்து. தன் பணியை செய் தாலும்  வஞ்சகமுள்ள எஜமானி வேலையாளை எப்படி பேசுவாளோ அதைபோல் அதைவிட கேவலமாய் தன் தாயை பேசக்கற்றுக்கொண்டான். ஒட்டகம் தொண்டை தண்ணியாக' தந்தை வைத்திருப்பதை    ஏமாறும்போது எந்த மன உறுத்தலும் இல்லாமல் பணப்பையை சுருட்டிவிடுகிறான். மற்றவர்களின் மனநோவுப்பற்றி கவலையில்லை  பொய்களை உண்மைபோல் குரல் உயர்த்தி பேசுகிறான்.

அக்காவும்,தங்கையும் தட்டுத்தடுமாறி படிக்கிறார்கள்.அடுக்குமாடியின் கண்ணாடி சன்னலை உற்று பார்த்துக்கொண்டே வருகிறார்கள். இவர்கள் தலைக்கு எண்ணெய் பூசிக்கொண்டு போவதால் இவளைச்சார்ந்தவளின் தலை எண்ணெயில்லாமல் சருகு போல் பறக்கும் பட்சத்தில் கேலிசெய்கிறார்கள். முன்னணி நடிகையின் நகை அலங்க்கரங் களுக்காக ஏங்குகிறார்கள். இக்காலத்திலும் கிராமத்தில் முல்லுகளை சுள்ளியை அடுப்பில் வைத்து ஊதி ..ஊதி புகையில் மூச்சுமுட்டும். அது வயதானவர்களுக்குதான் என்று ஒதுக்குவதுபோல்   சமூக அக்கறை, அரசியல், இலக்கியம் சார்ந்த எதையும் புறந்தள்ளிவிடுகிறார்கள்.

மாமன், யார் முடங்கினாலும் கண்டுகொள்ளாமல் தான் முன்னேற அதிகாரம் உள்ளவர்களின் உறுப்பை உருவிக்கொண்டே கிடக்கிறார்கள். கிருத்தவ நிறுவனம் தன் மனைவிக்கு புடவைதந்தால் தன் பெயரை மாற்றிக்கொள்கிறார். அரசாங்கம் அடுப்புதரும்போது எச்சறிக்கையாக சலுகை மதத்தை பதிவுசெய்கிறார். தினந்தோறும் பஞ்சு சிகரட்டும், மாமிமுசம், மதுவும்  இல்லாமல்  அவரால் வாழமுடியவில்லை.

பெரியப்பா பிள்ளைகள் பாட்டன் சம்பாதித்த முன்று சென்ட் வீட்டு மனையை  இரண்டு தலைமுறையினர் ஆண்டு,  தற்போது  குடும்ப அட்டையில்  தலைவர்களாய் வர்ணிக் கப்படுகிறவர்கள் நான்கு குடும்பமானபோது அதேமனையில்  பாகம்பிரிக்க அடித்துக் கொள்கிறார்கள். அந்த களேபரங்களில் சகோதரர்களின் ரத்தமும்,  சதையும்  பரிபோகிறது ஆயரிடம் முறையிடும்போது. தன்மேனியை குன்டூசியும் தீண்டாமல் பாதுகாத்து  இயேசுவின் ரத்தமும் சதையும் பெற்றுக்கொள்ள வாருங்கள். எனஅழைக்கிறார்.

நகரங்கடந்து பெண் கொண்டும்  கொடுத்தும் வாழ்கிறார்கள். சூலாயுதங்களில் பக்தி கொண்ட சொந்தக்காறர்கள். வாலிபர்கள் நல்ல ஆடைகளை உடுத்திக்கொள்ள சினிமாவை பார்த்து பழகுகிறார்கள். நல்ல அந்தஸ்த்து நிறைந்த காதலியை தேடி அலைகின்றார்கள். சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள  தன் மானத்தை மறந்து. நாக்கு தரையில் படும்படி குனிந்து விடுகிறார்கள். பஞ்சாயத்து செய்தபிறகு தங்கள் பாகமென்று கட்டாயமாய்  மறைமுகமாக பெற்றுக்கொள்கிறார்கள். தாய், தகப்பன் கஷ்ட்டத்தை பெற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள்  சீக்கிரத்தில் கட்டாயமாக மறந்துவிட,  விடா முயற்ச்சிசெய்கிறார்கள். காதுகளை அகலமாய் விரித்து தன்னை புகழ்ந்துகொண்டே இருக்க வேண்டுமென்று  எதற்கும் அடிமையாக துணிகிறார்கள். லாபம் ஈட்டமுடியாத சமூகப்பணியில், அறிவை வளர்த்துக்கொள்கிற முயற்சியில், மானத்தை இழந்து போகாததில், மனசாட்சியை மதிப்பதில், எதிலும் நீதியை மறந்து போகாமல் இருத்தலில் மிகமிக பின்தங்கியநிலையில் இருக்கிறோம்,  இனியும்  சலுகை சாதி என்று சொல்லிக்கொள்வதில் மார்தட்டி நிற்கக்கூடாது.   ஆதிதிராவிடன் சலுகை சாதி மட்டுமல்ல  எல்லா நிலைகளிலும் நீதியை முன்னிலைபடுத்தி சமூகத்தை சமன் செய்துக்கொண்டு செல்கின்ற ஆளுமை வாய்ந்தவன். நீதியும், சமூக அக்கறையும் உயர்வர்க்கத்துக்கு மட்டுமல்ல  எனக்கும் வேண்டும்.   எல்லாம் செழிப்பாக்க.



   நம்புழுதி
                                       

Monday, August 30, 2010

சிறுகதை


                                               பூட்டப்படாத வீடும் வெளியும்

குளத்தில் இரண்டு பிடி பொரியை  அள்ளித்தூவினார். இன்னும் சற்றுத்தள்ளி கொஞ்சம் தூவினார்.கோயிலுக்குச்சொந்தமான ஒவ்வொருபொருளிலும் கடவு ளின் நுண் துகலாவது இருக்கும் என்றுதான். இங்குவருகின்ற  எல்லோரும் நினைக்கின்றார்கள்.நான்கு பக்கமும் நூறடி சதுரப்பரப்பில் குளம்.இரண்டு படி விட்டு நீர் நிரம்பி இருக்கின்றது. வானம் தன் இயல்பான நிறத்தை மாற்றிக் கொள்ளவே மறுக்கிறது .எப்போதும்போல் அதேநிறத்தையே நிறைவாய் வைத் திருக்கிறது.வெண்குதிரை புறா நாரை கொக்கு ராட்சஷ உருவம்கொண்டு வெண்மேகங்களில் குவியல் குவியலாய் சிறகுடன் பறந்து மிதக்கிறது. எதோ ஒரு மூலையிலிருந்து நிரந்தர இடம்தேடி நின்று நின்று எழும்பிப்கொண் டிருந்தது. முட்டைபோல் திட்டாய் தங்கியிருக்கும் கரும்மேகம். வான் ஊர்தியைவிட வேகமாய் கீழ் வானத்தின் பல திக்குகளிலிருந்து, கண்ணுக்கு தெரியாமல்   படர்ந்து வந்த  செந்நிறம்கலந்த மேகங்கள்   கருமேகத்தை அழுத்தி மறைத்துவிட்டதை. இந்த 2009 அதிகாலையில்      குளத்து  தண்ணீரில்    முழுமையான அழகுடன் அதனதன் நிறம் மாறாமல் தெளிவாய்காட்டிக் கொடுத்தது.
 மீன்கள் ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டு பொரிகளை சாப்பிட்டது. தட்டிப்பரித்துக்கொள்வதில் நம்பிக்கை வைக்கும் எவற்றுக்கும்  பெரியது சிறியது என்ற வித்தியாசம் இல்லை.  சிந்தனை எல்லாவற்றிக்கும் ஒரே மாதிரிதான். பலம் பலமின்மையால் சிலதுக்குக்கிடைத்தும் சிலதுக்கு  கிடைக்காமலும் போகின்றது. கிடைக்காத மீன்களுக்கு பொரியில்லை என்றாலும் அதே குளத்தில் ஏதொ ஒன்று வயிற்று பாட்டுக்குகிடைக்கின்றது. தொடர்ந்து வாழ்கின்றது. மீன்களின் பசிசண்டையில் குளத்தில் மிதந்திருந்த வானத்தின் அழகு பிம்பம் தடுமாறிப்போனது. பக்கத்தில் ஒருவர் தண்ணீரில் இறங்கினார். இருகைகளாலும் அள்ளி முகத்தை கழுவினார். இன்னொரு முறை வலது கையில் அள்ளி தலைமீது தெளித்துக்கொண்டபோது தோளில் போட்டிருந்த சின்ன துண்டு குளத்தில் விழுந்து மிதந்தது. சற்று அவசரமாய் அதை எடுத்தபோது தடுமாறிப்போனார்."நகரீஷ்வரா உன்னைத்தான் பாக்க வந்திருக்கிறேன்பா" என்று சற்று மெல்ல குரலில் சொல்லிக்கொண்டு கரை ஏறினார்.பக்கத்தில் ஒரு தம்பதிகள் குழந்தைகளை  தண்ணீர்பக்கம்  வராமல் தடுத்தனர். தங்கள் தலையில் தண்ணீர் அள்ளி தெளித்துக்கொண்டு குழந்தைகளின் தலையை தங்கள் ஈரக்கைகளால் துடைத்தார். அப்பா மகனையும் அம்மா மகளையும் அழைத்துக்கொண்டு படியேறினார்கள். பக்கத்தில் முக்கியமான கடைகள் நிறைந்த பிரதான சாலை. கனரகவாகன  பேருந்து சென்றதால் குளத்தில்  படியேறியவர்கள் கால்கள் அதிர்வை உணர்ந்தது. சற்று வயதில் மூத்தவர்கள் தனித்தனியே வருகிறார்கள், போகிறார்கள். ஒரு முதியவர் பொறுமையாக படிகளை நிதானித்து மூன்றாவது படியில் இறங்கி மூழ்கினார். மேல் ஏறியவர் படியில் வேட்டியை அவிழ்த்துப்பிழிந்தார்.பிரித்து தோளின்மீது போட்டு கரையேறினார். ஏறியவர் நின்று கிழக்குப் பக்கமாக முழங்கால் முடங்கி வணங்கினார். பாதி வயதை கடந்தவர்கள் தான் அநேகர் கடவுள் இருப்பிடம் தேடிவருகிறார்கள். மனிதனுக்குசாவு இல்லை என்று ஆனால் அவரவர்களே கடவுள்களாய்  இருந்து விட்டுப்போகலாம். குளத்திற்கு தெற்கில் பெரிய ஆலமரத்தில் இரண்டு பையன்கள் இரு வேருக்கிளைகளில் ஏறி எதையோ கிறுக்கிக்கொண்டிருந் தார்கள்.சிறிய பிள்ளைகளும் மரத்தில் ஏறும் படியாக மரக்கிளைகள் கிட்டத்தில் பிரிந்திருந்தது.மரத்தை சுற்றி  மேடை இருந்தது. சிலர் அதில் உட்கார்ந்து ஆன்மீகத் தோடு தங்கள் குடும்பக்கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் மரத்தில் ஏறும் பசங்களைப் பார்த்து விட்டார். "டே...டே... வாளுப் பசங்களா,உழப்போரிங்க ஏறங்குங்கடா"  என்று சத்தம் போட்டார். அவர் போட்டசத்தத்தில் குயிலோடு சேர்ந்து,கிளிகளும் கத்திக்கொண்டு பறந்தது. நகரம் போடும் சத்தத்தில் பறவைகள் அலறல் யார் காதிலும் விழ வில்லை.
உலக உருண்டைப்போல் அமைக்கப்பட்ட விளையாட்டுக்கூண்டில்  இளம் தம் பதிகளில் ஒருவள் குழந்தையை ஒவ்வொருப்படியாக ஏற்றிப்பிடித்தாள். ஒரு கொம்பில் புடலங்காய், பூசணிக்காய், இதயம் வடிவில் பலூன் கட்டியிருந்தது. பலூன்காரன் அப்போதுதான் 'டர்ர்ர்..க்கி...' என்று பலுனை தேய்த்து சத்தம் எழுப்பினான். குழந்தை  பலுன்காரன் சத்தம்கேட்டு திரும்பிப்பார்த்தது. மனித இயல்பே இயல்பில் முரண்படுதல்தானா? கேட்காத குழந்தைக்கு கொடுத்து பழ க்கப்படுத்துவது,கேட்கின்ற குழந்தைக்கு மறுப்பது.அடக்குவது.நான் பொய்யா சொல்றேன்.  அதன் அம்மா ஒரு பலுனை வாங்கி குழந்தையிடம் கிக் ...பிக்...என்று தேத்தாள் சத்தம் கேட்டு சறுக்கு மரம் விளையாடிக்  கொண்டிருந்த பெரியப்பய்யன் ஓடிவந்தான். "அப்பா எனக்கு பலுனு "
"வேனா...வேனா....ஒடச்சிடுவ "பையன் கையையும், காலையும் உதைத்துக் கொண்டு அழுதான்.சற்று  பொராட்டத்திற்குப் பிறகு வெற்றிகண்டு மீண்டும் சறுக்கு மரத்திற்க்கு ஓடினான். நீண்டு வளர்ந்து தலைவிரித்தாடும் ஈச்ச்சமரத்தில் குலைகள் அடுக்கியிருந்தது. புளியமரத்தில் வாழைகளாய் நீண்டு பழங்கள் தொங்கியிருந்தது. வெள்ளிமுலாம் பூசியதுபோல் இரும்பு மின்கம்பம் மின்னியது. கம்பத்தின் உச்சியின் கண்ணாடி குடுவையில் சூரியனை அடைத்து வைத்திருந்தது. சுச்சி போட்டதும் கோயில் எல்லைமுழுதும் பகலுக்கு மாறியது. பிரியாணி சாப்பிட்டு  பிடாபோட்ட வயாக ஆலமரத்தில் படும் வெளிச்சத்தால் இலைகள் சிவந்திருந்தது. வெளிச்சம் பார்த்துவரும் வெண்தும்பிகளாக விளையாட்டுப் பிள்ளைகள் வருகிறார்கள். எதற்கோ  விடுதலை வேண்டி குளித்த சோப்பின் வாசத்தோடு கருவறையை சுற்றுகிறார்கள். சிரித்த முகத்துடன் பார்க்கும்  பூவும், அதன் வாசத்தொடும் வந்து கருவறையின்  முன்  நிற்கும் போது 'நகரீஸ்வரர் முகம் பிரகாசிக்கிறது. அருள் பொழிகிறார்' என்று பேசி நடக்கிறார்கள்.
கோயில் எல்லை சுவற்றிற்கும் புளியமரத்திற்கும்  இடையில் கோணிகள் போட்டு முடியிருந்தார்கள்.அதை  இருபகுதியாக்கி இருகுடும்பங்கள் இருந்தது கோயில் சொத்துக்களை பாதுகாக்கின்றதுபோல இந்த குடும்பங்களையும் தான் தான் பாதுகாக்கவேண்டியிருக்கிறது என்று பெருமையாக சொல்லிக் கொள்வார். இன்று குளத்தின் ஒரு மூலையிலிருந்து கோயில் இடத்தை பார்க்கின்றார். அவருக்கு மின்னல் கீற்றுபோல உதித்ததுதான் இந்த எண்ணம், அப்பா கொண்டாந்து சேத்துட்டுபோன சுடலை  மட்டும்தான் எப்பவும்போல இருக்கிறான்.
குளத்தில் கால்பாகத்திற்கு மேல் சொழைப்புல்  நல்ல வளமாக  வளர்ந்திருந் தது. சுடலை புல்  அறுத்துப்போட்டு நிமிர்ந்தபோதுதான், எஜமான் தன்னை கவணிப்பதாக உணர்ந்தான்.ஒரு விளையாட்டு அரங்கத்தில் அமரும் பென்சை போல குளத்தின் படிகள் இருந்தது. உறுதியான பாறைகளால் செதுக்கப்பட்ட படிகள் இன்னும் ஆழகுடன்தான் இருந்தது. மழை என்பவள் பருவமடையா தவளாகவே இருக்கிறாள். மக்களின் கஷ்டங்கள் அவளுக்கு புரிவதே இல்லை.  
குளம் வள்ளல் பரம்பரைதான், தண்ணிரை எல்லாம் ஆவியாக்கிவிட்டு இன்று ஏதொ ஒரு முலையில் சேரும் சகதியுமாய் இருக்கின்றது. மழைகாலங்களில் சாலையிலிருந்து கழிவுகளும் ,சகதியுமாய் கலந்து விழுந்து குளத்தின் சேற் நல்ல உரமாகிப்போய் இருந்தது. குளத்தின் படிகளில் அங்கங்கே பூண்டுகள் முளைத்திருந்தது.குளத்தில் கார் டயர்களும் டூவிளர் டயர்களும் முழ்கிதன் கருமேனியை அழுக்கோடு காட்டியிருந்தது. பச்சைத்தவளைகள் கொழு கொழு வென்று பதட்டமில்லாத இடத்தில் பாதுகாவலனைப்போல் உட்கார்த்திருந்தது. சேற்றை தழுவிக்கொள்ளும் விரால்மீன் தன் பெருத்த உடலால் மென்மையான  சேற்றை கலங்கடித்துச்சென்றது.
சுடலை குளத்தில் ஓரமாகபுல்லை அறுத்துக்கொண்டிருந்தான். எந்தகிராமம் சென்றாலும் ஆள் உயரத்துக்கு கழுத்து நிறைய தங்கத்தை கோத்ததுபோல் வயல்களில் பொன்னிவிளைச்சல் கம்பீரமாய் நின்றிருக்கும்.சுடலை இன்று கோயில் குத்தகைதாரரின் பசு மாடுகளுக்கு வயல்வெளி தேடிச்செல்லாமல் குளத்திலேயே அறுத்துக்கொள்வது சற்று சுலபமாய் இருந்தது. குத்தகைதாரர் கோயிலின் மொத்த இடங்களையும் பார்த்தார். 'எந்த தீர்மானமும் இல்லாமல் காலம் ஏன் இப்படி? எங்கேதான் ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு பதினைந்து வருடம் இத்தனைச்சிக்கிரத்தில்  கடந்தகாலமாய் மாறிவிட்டதா?' ஆலமரப் பக்கம் வந்தார். ஒரு கிளையில் பெண்ணின் முகமும், இன்னொரு கிளையில் ஆங்கில எழுத்தும் உப்பி மரத்தோடு அதுவும் வளர்திருந்தது. மரத்தைச் சுற்றியிருந்த மேடை உடைந்து சிதைந்திருந்தது. அதில் இருந்த ஈச்சமரம், முதியோர்  இல்லத்தை தேடுகிற வயதை எட்டியிருக்கலாம். தினந்தோறும் உதிரும் சருகுகளை கொளுத்தி கொளுத்தி புளிமரத்தின் ஒரு பகுதி தீந்து இருந்தது. அதன் காய்கள் காசநோய்க்கு ஆளாகியிருந்தது.சறுக்குமரத்தில் பூசியவண்ணங்கள் இல்லை.அதன்தாங்கிகள் இடுப்பொடிந்த நிலைதான். உலக உருண்டைபோல் செய்திருந்த விளையாட்டு சாதனம்,இப்போது தெருஓர பயித்தியக்காரனாக கேட்பாரற்று கிடந்தது. மைதானமாய் இருந்த நடுப் பகுதியில் குச்சிகளை நட்டு பிளாஸ்டிக்காகிதங்களை போட்டு முடியிருந் தார்கள். கோழிகூண்டை விட சற்று உயரமாய் இருந்தது இரு குடும்பங்களும். ஒருவாசலில் கந்தையை போட்டு இரு குழந்தைகளை கிடத்தியிருந்தார்கள். ஒரு குழ்ந்தை கை காலை உதைத்துக்கொண்டு மரத்தையே பார்த்தது. இன்னொன்று பக்கவாட்டில் படுத்து தூங்க்கிக்கொண்டுடிருந்தது.குப்பைகளை கொளுத்திய கரியில் இன்னும் இரு குழதைகள் விளையாடிக் கொண்டிருந்தது. உடல்முழுக்க கரி திட்டு திட்டாய் அப்பிக் கொண்டு கிடந்தது.அக்குழந்தைகளை குளிக்கவைக்க மாட்டார்களா என்ற கேள்வியைத்தான் எழுப்பும். வயிறு முட்டிக்கொண்டு இருந்து. ஒருவள் பக்கத்தில் அடுப்பில் சாப்பாடு செய்துக்கொண்டு இருந்தாள். அப்போது ஏதொ கரிக்கந்தைய இடுப்பில் சொருகி  இருப்பதுபோல்  ஒரு குழந்தையை  பிடித்திருந்தாள்.  சந்தை முதலாளிகளின் வியாபாரக்கூச்சல் சாலையில் கவர்ச்சியான வாகனத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த பெண்கள் பொத்தலும் கந்தலையுமே உடுத்தியிருந்தார்கள்.கழுத்தில்  மஞ்சள் கயிறு புத்தம் புதிதாக இருந்தது.
சுடலை புல்லு கட்டை குத்தகைதாரர் விட்டின் வாசலில் போட்டு பசு மாடுகளுக்கு கொஞ்சம் போட்டான்.அவன் தலைமயிர் கருப்பும்,வெள்ளையும் கலந்து சுருள் சுருளாய் இருந்தது. குத்தகைதாரர் முகம் சற்று விரக்தியைக் கண்டிருந்தது. சுடலையின் எதிர் புறமாக வந்தார்."சொடலை சாப்பிட்டுவடா. அந்த வெறகுலாம் பொளந்துடு, உன் பொண்டாட்டிய சாணிலாம் வாரிட்டு எடத்தலாம் சுத்தம் பன்னச்சொல்லு. நானுபோயி குத்தகப்பணம் கட்டிட்டு வந்துடுறேன்."
சுடலை சங்கடத்துடன் "சாமி சேட்ட ஊட்டு கல்யாணமா ,என்பொண்டாட்டி லைட் தூக்க போறா .அவ போட்டும் நானு ஒண்ணா மாட்டுக்கொட்டாவ சுத்தம் பண்ணிடுறேன்."
"அப்பிடியா செரி செரி பாத்துக்கோ, சொடல முக்கியமானத மறந்துட்டேன். உங்க அண்ணன அனுப்பி நம்ம செட்டியார் ஊட்டு தோட்டத்துல அடிக்கடி பாம்பு வருதாம்.பக்கத்திலதான்  அதன் பொந்து இருக்குதாம், அத புடுச்சி அடிச்சிப்போட்டு  வந்துடச்சொல்லு"
சுடலையிடம்  சொல்லிவிட்டு குத்தகைதாரர்  கிளம்பும்போது. சுடலையின் அண்ணன் மகனும் அவன் மனைவியும் வந்தார்கள். துணியில் கட்டியி ருந்தது.மீனாகதான் இருக்கும் என்பதை குத்தகைதாரர் விளங்கிக்கொண்டார். இருந்தாலும் தன் எஜமான் தனத்தை வெளிப்படுத்தினார். "டேய் இங்க வாட சயந்திரம் நம்ம செட்டியார் வீட்டுத்தொட்டத்துல பாம்பு வருதாம், அது அங்கி யேதான் இருக்குதுபோல அத புடுச்சி அடிச்சிட்டு வந்துடு.வரட்டுமா."என்று முடிப்பதற்குள்.
"இல்லபா நானு மீனு புச்சாந்துகிறேன், அத போயி வித்துட்டுவரனும்.நாங்க சாப்பிட்டு போலாம்னு வந்தோம்.எங்கப்பா வந்தா அனுப்புங்கோ" என்று மனைவியுடன் நடந்துக்கொண்டே இருந்தான்.
சற்று தொலைவில் சென்றுவிட்டசுடலையை சத்தமாக அழைத்த குத்தகை தாரர் "டேய் சொடல பாத்தியாட. நான் சொல்றதை  எங்கனா மதிக்கிறானா பாத்தியா" கோயில் எடத்துல இருந்த எல்லாரையும் காலிபண்ணிட்டேன் 
உங்களை மட்டும்  யேண்டாவச்சிங்கிறேன். ஒரு வருஷமா ரெண்டு வருஷமா பாஞ்சிவருஷம். யாருநீங்க குடியிருக்கும் சேத்து வாடகைகட்டுவான்"
கரியநிறத்திற்கு மாறியிருந்த இரண்டு வெள்ளை கோழிகுஞ்சி  பக்கத்தில் மலைபோல கொட்டிய சாணிக்குள் இரைதேடி ஓடிவந்தது."சாமி சின்ன பய்யன் தெரியாம சொல்டான் பெர்சா எத்துக்காதிங்க."
"இல்ல சொடல அந்த பையனுக்கு இன்னா? ஒரு இருபது வயசிருக்கும் இல்ல. ஒரு நாலு வருஷமாவே பய்யன் ஒரு மாதிரியாதான் இருக்கான்.தெனாவட் டான பார்வை உனக்காகவும் ,உன் அண்ணனுக்காகவுதான் பாக்குறேன். நானு உங்கள யாரோனாப்பாக்குறேன்.எந்த நல்லது பொல்லது செய்தாலும் உங்கள உட்டுட்டு சாப்புடுறோமா.வெளி நாட்டுல வேலசெய்துங்களே என் ரெண்டு பசங்க அதுங்க கூட எப்பப்பாரு உங்கள விசாரிச்சிகினுதான் கெடுக்குதுங்க."
"சாமி எங்கண்னுக்கு, எனுக்கு முன்னாடி கல்யாணம் ஆனாகூட எனக்கப்புறம் ரொம்ப நாள் கழிசிதான் கொழந்த பொறந்தது.அதனால பையன செல்லமா வளத்துடாறு. நானு அண்ணா வந்துதும் அனுப்புறேன். நீங்க அதலாம் மன்சில வெச்சிக்காதிங்க"
குத்தகைதாரர் முகம் மிகவும் இயல்பாயிருந்தது."இல்ல சொடல நானு முடிவுபண்ணிட்டேன்.உங்க அண்ணன் அவன்பொண்டாட்டி,நீ உன் பொண் டாட்டிமட்டும் இருங்க.அவனும் அவன் பொண்டாட்டியும் இருக்கக்கூடாது. தோ உங்காட்ட சொல்லிட்டேன்.உங்க அண்ணனாண்டையும் சொல்லிடுறேன். அவுங்க இந்த எடத்துல இருக்கக்கூடாது. நானு போயி குத்தகப்பணம் கட்டிட்டு வந்துடுறேன்."வேகமாகச்சென்றார்.
சாணத்தில் பெரிய பெரிய புழுவாக இருந்தது.இரு கோழிக்குஞ்சுகளுக்கு நல்ல இரை கிடைத்தது. சுடலையின் மனைவி பாத்திரத்தை கழுவி ஊற்றினாள்.ஒரு கோழிக்குஞ்சு நனைந்தது. அலறி குதித்த குஞ்சு சிலுப்பியது. சற்று தள்ளி உட்கார்ந்திருந்த சுடலையின் பார்வைக்கு இப்பொது கோழிக்குஞ்சி வெள்ளை 
யாக தெரிந்தது.
"சித்தப்பா ,நாங்க மீனு வித்துட்டு அப்பிடியே சினிமாவுக்கு போயிட்டு வரோம் அப்பவாண்ட சொல்லு "என்றான்.
அண்ணன்மகன் வேட்டியும் சற்று வெள்ளையாக இருந்தது. நாம ஒருநாளும் இப்படி வெள்ளையா கட்டினதேயில்லையே! எவ்வளவு காலம் கடந்து போச்சி, அண்ணன மகன் சொன்னது சரிதானோ? நான்கூட இந்த வார்த்தையை        பாஞ்சிவருஷத்துக்கு முன்னாடி சொல்லியிருக்கனுமோ?   என்று தனக்குள் நொந்துக்கொண்ட சுடலை  "டே  ராஜா வாங்கடா குள்சிடுங்க, ஒடம்புலாம் அயுக்கா இருக்குதுபாரு" என்று முதல் முறையாக தன் பிள்ளைகளை குளிக்க அழைத்தான்.    
                                                -------------------------------------------------
                                                                                                                                                               
                              

Sunday, August 29, 2010

கண்ணி வெடி

அந்தப்புரத்து   அம்மணிகளை    திகட்டாமல்    நேசிப்பதுபோல்     பெருமுதலாளிகளை  தூசு  படியாமல் காக்கின்றார்கள் அதிகாரமுதலாளிகள். நேர்மையாளனுக்கும் மக்களுக்குமிடையில்  விஷப்பாம்பின் பிம்பத்தை   நிறுத்துகிறார்கள்.  உழைப்பாளி, பொரிஉருண்டையை     தங்கமுட் டை யாய்   பெற்றுக் கொள்ள ஓடிவரச்செய்கிறார்கள். மதுவும்,மாதுவும் குழைத்து குடித்து உச்சத்தை   அடைந்து பதவி மயக்கத்தில் களித்து ஆணையிடுகிறார்கள். கேள்வியாளர்களை ஒழித்துவிட அதிகார ஆழ்மனசு  குறைபாடுகளோடு  ஒட்டிப்பிறந்த  உடல்களைப்போல் வளர்ச்சியில் மையம்கொள்கிறது.  சூரியக்கதிர்களுக்கு  தங்களை  குளிர்ச்சியால் போர்த்திக்கொண்டு, வான் இருண்ட்பின்பும் வெளிச்சம் போடுகிறார்கள் உழைப்பவன் மனம்நோக. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர்களை ஒத்தவன்  உயரமாய் வளர்ந்திருந்தான் புல்லாக, பார்கிற அவர்கள்  பரிசீலிக்கவே மருக்கிறார்க்ள். சிருபாண்மையான எழுத்தாளனை   விலைபேசிவிட துடிக்கிறார்கள்.

எழுத்தாளன் முகங்களில் குழந்தைதோற்றங்கள் எப்போதும்  இருக்காது என்று தெரிந்தும்  ஆருடத்துனையுடன்  மிரட்டநினைக்கிறார்க்ள். சதா காகிதங்களை ஆயுதங்களாக்கிக் கொண்டிருப்பதால்  தீவிரமாய் கண்காணிக்கப்படுகிறோம். அதிகாரம், ஆயுதம், ஆலையாளர்  யாவரும் சேர்ந்து  எழுத்தாளன்  விரும்பும்  வெள்ளை  காகிதத்துக்கு தடைவிதிக்கிறார்கள்.  எழுத்தாளனுக்கு  உச்சங்களில் சுரந்து உள்ளங்கையில் உதிரும்  வார்த்தைகள்   எங்கேனும் கண்ணிவெடியாய் புதைந்துகிடக்கும்  என்பதைமறந்து போகிறார்கள்.
                      அழுத்தம் கொடுக்கும்போது ?                                                                        

                                                                                             ஜே. டேனியல் 
                                                                                                                        கைபேசி: 9445726354

கவிதை

உலகம் கைவிடாது

எங்களுக்கு மட்டும்தான்
உலகம்
எரிமலைக்குழம்பை குடிக்கக்கொடுக்கிறது
நாங்கள் மட்டும்தான்
காடுகளில்
கொடிய மிருகங்களைவிட
பாதுகாப்பாய் அடைக்கப்படுகிறோம்
சுத்திகரித்து அனுப்பப்படும்
பார்வையாளர்கள்
அதிசயத்தை வியப்புடன்
கான்பதுபோல்
கண்டு செல்கிறார்கள்
மண் புழுக்களைப்போல்
நுரைத்தள்ளி
உருண்டையாக
நெளிந்துகிடக்கின்றோம்
எதிர்காலத்தை கால்நடை
பவுண்டுகளில் கடக்கின்றோம்
எங்கள் உயிர் நிமிடத்தில்
பிறிந்து விடவில்லை
அப்படி இருந்தால்
ஒருவேலை சந்தோஷப்படுவோம்
பாறைகளை
தங்கள்தேவைக்கேற்ப்ப
சந்தோஷமாய்
உடைத்துக்கொள்வது போல்
எங்கள் அங்கத்தை குறைத்து
உயிரோடுவிடுகிறார்கள்
எங்கள் மனம்
தெளிவாய் இருந்தாலும்
பயித்தியங்களின்
உடைகளை
எங்களுக்கு
கட்டாயப்படுத்துகிறார்கள்.
முடக்கிப்போட
பால் மனம் கழிக்கா
குழந்தைகளின்
குரல் வலையில்
கத்தி வைக்கிறார்கள்.
இனி தனித்தனியான
குழிவெட்டுவது
சிறமமென்று
நீண்ட குழிக்குள் 
கழிவுகளைப்போல்
கோட்டிமூடுகிறார்கள
நாற்றம் அவர்கள்  நாசிக்கு
ஏறுமென்று.
மிச்சமிருப்பவர்க்கு
துணிகள் தருகிறார்கள்
மானத்தை மறைக்க,
ஆனால், என் தாயோடு
நானுந்தான் உறுப்புகளை
இழந்து நிற்கிறோமே?
                                                                            
       தொடுதல் வேண்டும்
 தடுமாறிக்கொண்டேயிருக்கிறது
வாழ்க்கை
யாரைக் குறைசொல்வது
போகும் இடமே தெரியவில்லை
எங்கே முடியுமென்பதும்
துளங்கவில்லை
வாழ்வது வீனானதோ?
விக்கித்து தவிக்கிறது
மனசுமட்டுமல்ல
சதை பிண்டங்களும்தான்
யாருடனும் 
ஊடாடவேத்தோன்றவில்லை,
நாளை மனிதனுக்காக
மிச்சம் வைக்க
தேடல்களில் புதைந்து போகின்றவர்களை தவிர்த்து.
காடுகளை,மலைகளை,ஆறுகளை, நாடுகளை,
கடல்அலையை,அதன்நுரையை,சிதையும்சிறார்களை
கொடூரமான சுகபோகிகளின் மனப்போக்கை
வீதியின் சுவர்களில்  தொட்டுவைக்கவுமே  மனசுத்துடிக்கிறது.

தோழிகளின், தோழர்களின் சிறைகாரம்,அலங்காரம்,
வசீகரமான புதுப்புது புத்தக அவதாரங்களிதான்
தினந்தினம் செத்துபோகிறேன்
வாழ்க்கை மிகவும் லேசானதாயிருக்கிறது
என்னைச்சுற்றி பாடமெடுக்கும் கதாப்பாத்திரங்களால்.                  
                   புத்தகம்                      

எங்கள் உலகம்
கொட்டிக்கிடக்கிறது
மலைபோல
தாகமே எடுக்காமல்
அனைத்துப்பசியையும்
காற்றில் ஓட்டுகிறது
மூழ்கிவிட்டால்
அடங்காமல் 
வளர்ந்துகொண்டேயிருக்கிறது
மிதந்து வந்து
அறிவை சூடாக்கும்
புத்தகப்பரப்பு

சிறுகதை

கரையேற்றம்

கிழே   ஆங்கிலத்தில்  டிரிங்கிங்வாட்டர்  என்று  எழுதியிருந்தது. அதற்கு மேலே  இவர் களுக்கு தெரியாத மொழியில் எழுதியிருந்தது. சுந்தர் பார்த்தன் குடிநீர் என்கிற வாசகமாகத்தான் என்று  யூகித்தான். அதே டேங்கில்  சற்று  தள்ளி  பூனே கார்ப்ரேசன்  என்று  எழுதியிருந்தது.  டேங்கில்  தலைகவிழ்ந்த ஐந்து குழாய்கள் எப்போதும்   அழுதுக்கொண்டேயிருந்தன.  டேங்கின் முன் பாதி  டைய்ல்ஸ்  ஓடு  ஒட்டியிருந்தார்கள். சங்கிலியால்  கட்டப்பட்டு  சுற்றி சுற்றி ஓய்ந்து  போன நாயாக டம்ளர்  சங்கிலியோடு சுருண்டுகிடந்தது. கல்வி சுற்றுலா வந்தவர்கள் லாட்ஜை நோக்கி  நடந்தார்கள். கண்ணாடிப் போ ட்ட  சுகுமாரன்  இறங்கிய   இடத்திலேயே  ஓரங் கட்டிக்கொண்டி ருந்தான். நாலு  கால்கள்  முளைத்து  மேல்கூரையை  தாங்கிக்கொண்டு  இருந்த்து  நிழற் குடை. அதற்குள் சுடிதாரும்,  ஜீன்சும் போட்ட   பெண்கள் எவ்வளவு   காற்றை  பொட் டலங்கட்டலாம் என்பதாக காத்திருந்தனர். சில பெண்கள்  வானத்தின் எல்லா வெள்ளி  நட்சத்திரங் களையும்  தங்கள்  மடியில் கட்டியிருப்பதுபோல்  சந்தோஷபேச்சிகளில்  முழ்கியிருந்தனர். நகரம் எப்போ துமே  திருவிழாவின் தோற்றத்தை தரித்துக்கொள்கிறது  . வாலிபர்களில் அசை போடாதவாய்  குறைவாகத்தான்  இருக்கிறது. சிகப்பில் வெள்ளை  நிறத்தை கலந் தது போல் எந்த ஒதுக்குப் புறமான  இடங்களிலும் புளிச் புளிசென்று  துப்பிக்கொண்டேயிருக்கிறார்கள்.  ஒருவன்  பான் மசாலாவை   பல்லால்   கடித்து    வாயில் கொட்டிக்கொள்கிறான். காற்றில் கலந்து  வந்த அதன்   வாசனை   சுந்தருக்கு  மயக்கம்   தருவதாக   இருந்தது.   கோடைகால  திடிர் மழையில் வெளிச் சத்தை  நோக்கிக்கிளம்பும், ஈசல்களாக  வாகனங்கள்  போவதும் வருவதும்   ஈசல்கள்  பறந்து  வரும்போது   தானாக   உதிரும்   இறக்கைகளாக  வாகனத்தின்   ஆரன்    ஒலிகள்  உதிர்ந்து  விழு கின்றன. எதையோப்பார்த்து  அடம்பிடிக்கும் குழந்தையை ஒரு   தாய்  தேற்றிச்செல்கின்றாள். கடல் மட்டக்காடுகளும்  பெருநகரமும்   ஒரே  தளத்திதான் இழங்குகிறது.  அநேகமாக        இரண் டிலுமே ஒன்றை ஒன்று அழித்துக்கொண்டிருப்பதில்தான் செழிப்பான சுழற்சி அடங்கிஇருக்கிறது.
"என்னாக்கூடவே   இரு எங்கியும்   போயிடாதே என்னிக்கும்   பாத்திராதத    உனக்கு        காட்றேனு நேத்தே  சுகுமார் சார் சொன்னாரு' அத  உட்டுட்டு  இன்னிக்கி உங்ககூட அலையறேன்" என்றான் சுந்தர். 
"இவ்ளோ அலையிரவன் இன்னும் சீக்கிரமா எழுப்பியிருக்கனும்  ஸ்கூல்ல இருந்து கெளம்பும் போதே சொன்னேன்யில்ல  எப்படியாவது பூனேவுல  உனக்குத் தேவையான எடத்துக்கு இட்டும் போறோம்,  ஆனா அங்க  வந்து  முடியாது  நீங்க  ஒன்னா போங்க நான் ஒன்னா வெளிய நிக்கிறே னுலாம் சொல்லக்கூடாது. எவன்னா எந்த எடத்தவேனும்னாலும்  சுத்திபாக்கட்டும் நம்ம முனுபே ரும் அந்த எடத்துக்குபோறோம் முடிச்சிட்டு சைலண்டா ரூமுக்கு வந்துடுறோம்."ஜெப்ராஜ் சொல் லி முடித்தார் "தாமு நம்மக்கூடவே ஒட்டிகினு இருப்பான்பா அவன எப்படியாவது கழட்டி உட்டுட் டு நாம வேறரூட்டில  போயிடனும் "என்று தாஸ் குரல் உயர்த்திச்சொன்னான்.
தாமு எழுந்திருப்பதுக்கு முன்பாகவே  தாஸ் முதல் ஆளாக பாத்ரும் பார்ட்டையெல்லாம்   முடித் தான். தாமுவின்  சோப்பும்  பேஸ்ட்டும்  பயன்பட்டது. ஒரு வேலை செய்தால் திருத்தமாக்ச்செய் யவேண்டும்  பவுடரும் கொட்டி மடித்துக்கொண்டான்.  இவை   எதுவும்   தாமுவுக்கு  தெரியாமலே நடந்தது.  தெரிந்தாலும் ஒரு குடிகாரன் பெருங் குடிகாரனை பாசமாய்  கவனிப்பது போல்தான்  ஓரிரு நாள் ஒன்றாய் தங்கிக்கொள்ளும் போது அற்த்தமில்லாத ஒரு பற்றுதல் ஏற்படுகின்றது. 
தாஸ், ஜெபராஜ்  இருவரையும்  பார்த்து "சார் நீங்கபோய் மொதல்ல கெளம்புங்க சார்  அப்பிடியே
கொஞ்சம்  வாசனை  திரவியம்  தாங்கசார்,    அவுங்களாண்ட   போனாநாத்தம்   அடிக்கப்போகுது. அந்த வார்த்தைகளை மட்டும் சற்று குரல் தாழ்த்திச்சொன்னான். அந்த் இடத்தையும் அவர்களை யும்  பார்த்துவிடுவதில் மிகவும்  ஆவலாய் இருந்தான் சுந்தர்.
"நீயே இன்னும் கெளம்பாத இருக்கிறியே"ஜெப்ராஜ் கேட்டபோதுதான்.தன்அறையில்  பாத்ரூமும் காலியில்லை என்பதில் நொந்துக்கொண்டான். பதட்டமடைந்தவன் பக்கத்து அறையில் சென்று அவசரமாய் குளித்துவிட்டு வந்தான். அவன் முகத்தின் மயிர்கள் வழிக்காமல் வாரத்தைகடந்தி ருந் தது.  மயிர்கள் இன்னும்  முரட்டுத் தன்மையாய்  மாறவில்லை.இருந்தாலும் கன்னத்தொடு உரசும்போது  ஈரம் பட்ட குளியல்சோப்பின் வழுவழுத்தன்மையில் கீரல் விழுமோ என்று  அஞ்சி சுந்தர்  குளிக்கும்  முன்   வழித்துவிட்டான்.   நான்கு  பேர்  படுக்கும்  கட்டில்  இரண்டு  இரண்டு செட் இருந்தது. ஒரு  செட்டில்  நான்கு  நன்பர்களும்  தூங்கிக்கொண்டிருந்தார்கள்.     தாஸின்   குருப்பில் தாமு  மட்டும்தூங்கிக்கொண்டிருந்தான். தாஸின் ஜட்டி கட்டிலின் தலையில்  உலர்ந்திருந்தது.         சுந்தர் டவலால்  தலையை  துடைத்துக்கொண்டு வந்தான்.  ஜெபராஜ் பிரஷ்  செய்துக்கொண்டு வெளியே வந்தார். அவர்  பையில் இருந்த  சோப்பை   எடுத்துக்கொண்டு  பாத்ரூமில்  நுழைந்தார்.   திருவிழாவின்   ராட்டிணத்தில்   ஏறத்துடிப்பவன்போல்  சுந்தர் "சார்சீக்கிறம் வாங்க சார்"என்ற்வன் மீண்டும் "தயவு  செய்து   அந்த  எடத்துக்கு  போய்    வர  வரைக்கும்    எந்த  பாட்டிலையும்   தொறக் காதிங்க"என்றான்.
 ஜெபராஜ் புதிதாக  பிரித்த சேண்டில் சோப் சந்தனமும் மல்லியும் குழைத்த வாசானை அறையின் காற்றை அனைத்துக்கொண்டு சுழன்றது.அது சுந்தரின் மூளையை பதம் பார்த்தது. இந்த வாசனை சுலபமாய்  அவர்களை  மயக்கிவிடுமா?     "சார்   குளிச்சிட்டு    சோப்ப   அங்கேயே   வச்சிட்டுவாங்க நானும்  என் மொகத்துல கொஞ்சம்  போட்டுவச்சிக்கிறேன்.ஜெபராஜின் சிரிப்பால் மீசை சற்று விரி வடைந்தது.   தலையில்  சட்டியை கவிழ்த்துக்கொண்டு  குளத்தில் நீர் கோழிழை பிடிக்கச்செல்வது போல்  அறை நன்பர்களுக்குத் தெரியாமல் வெளியேரினார்கள். 
ஜெபராஜ் அரை கை சட்டை இன்செய்திருந்தார். சற்று உப்பி இருந்த  வயிருஎடுப்பான தோற்றத் தை  காட்டியது. தாஸ் சிறு  கட்டம்  போட்ட முழு கை சட்டை போட்டிருந்தான். முகத்தில்  பூசியப்ப வுடர் வெயில்  ஏறியதில்  திரிதிரியாய்  கோடு  போட்டிருந்தது.  சுந்தர்  தாஸை  பார்த்து     பவுடர் தொடைபா என்றான். தாஸ் சாலையோரத்தில் நின்றிருந்த  டூவிலரின் கண்ணாடியைப்பார்த்து  துடைத்துக்கொண்டான்."அந்தேபெரிய லாட்ஜில் ரசம் போன கண்ணாடிய வச்சிக்கிறானேடா கம்ம னாட்டிங்க அதான் சரியாவே தொடைக்க முடியல. நீயாவுது சொல்லக்கூடாதா நானு எதையும் முழுசா அனுபவிக்கக்கூடாதுனு  உனுக்கு போறாமடா"என்று தாஸ் சுந்தரை கடிந்துகொண்டார். 

ஜெப்ராஜ்  சிரித்துக்கொண்டே எதோ ஒரு கடையில் ஜனக்கூட்டத்தோடு  கூட்டமாய் கடையை நோக்கி சென்றார்.சுந்தர் கடைபோர்டைப்பார்த்தான். "சார் இதெல்லாம் இப்பவேனாம் சார் அந்த எடம் போய்வந்த பிறகு வச்சிக்கலாம்"சுந்தர் அழுபவன் போல்கேட்டான்.  கடையை பார்த்த குடி காரன்  'குண்டு மல்லியின் மனத்துக்கு மயங்கும் மங்கையைப் போல்'   அதன் சாரத்தை ருசிக்கா மல் திரும்ப மருக்கிறான். அது தனிமனித சுயவிருப்பைச்சார்ந்தது என்பதால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை.பெரிதாக ஜெபராஜின் நலன் கருதியில்லை  போகின்ற இடம் விவகாரமானயிடம் இவர்  மட்டை  போட்டுவிட்டால்  நம்மை  ஏதாவது  வம்பில்     மாட்டிவிடப்போகிறார்கள்      என்ற பயம்தான். தாஸ் பிரச்சனை என்றால் எந்தப்பக்கம் மறைவான் தெரியாது. கடைக்கு  முன் நாலு ஐந்து பிளாஸ்டிக்  டம்ளர்கல்  முழு குடிகாரனாக  உருவம் சிதைந்து அங்கங்கே  உருண்டு கிடந்தது .பாட்டில் வாங்கியசிலர்  என்ன அவசரமோ அங்கே ஒரு  மூலைஇல்  நின்று தீரா தாகத்தில் இருப் பவன் போல் மடக்மடக்கென்று ஊற்றிக்கொண்டு  சண்டை  இட்டு த்துரத்திய மனைவியாக பாட்டிலை கிழேபோட்டு   கண்டுகொள்ளமல் போகிறான். ஒருவன் வாங்கிய சப்பை பாட்டிலை  தன் மூத்திர பம்ப்புக்குள்  நேராக சொரிகிக்கொண்டு பாலுக்குள் தன்னிரக ஜனங்களுக்குள்  கலந்து சென்றான்.குடி குடியைகெடுக்கும்  என்கிற வாசகத்தை சின்னதாய் வைத்துக்கொண்டு,    கடைக் குள்ளிருந்த படித்த வாலிபர்கள்  அவசரமாக் காலியாகும் அட்டைப்பெட்டிகளை உள்ளே எடுத்துச்சென்று அடுக்கினார்கள். அறிமுகமில்லாத இருவர் ஒரே இடத்தில உட்கார்ந்து குடிக்கும்போது மாமன் மச்சான் ஆகிவிடுகிறார்கள். இவ்வளவு சீக்கிரத்தில் எவ்வளவு பற்றுதல்? பேசாமல் எல்லாரும் குடிகாரனாக மாறிவிட்டால்  சாதி மதம் உயர்ந்தவன் தாழ்ந்தவன்  பேதமில் லாமல்  வாழ்வு போகும்போல  சாலையில்  போகின்ற வருகின்ற மக்கள் கடையின்   வியாபாரத் தை  பார்த்து நாம ஒரு கடைதிறந்தால்  வாழ்க்கையில் சீக்கிரம் முன்நேரிவிடலாம்  என்ற ஆசை அரும்பி சிக்கிரத்தில் கருகிக்கொண்டுதான் செல்கின்றது. எத்தனை விதமான சத்தம் எத்தனை  வியாபார  யுக்த்தி  இவைகள் எதையமே  தன் முளை கண்டுகொள்ளாமல் ஜெபராஜ்  தனதின் தனி உலகின் கதவைத்திறந்தார்.      
 தாஸும், சுந்தரும் சாலையில்  நடந்தார்கள். பிரதான சாலையிலிருந்து   பிரியும் சிறிய சந்தை பார்த்த  தாஸ் "டே இங்கப்பார்ரா  இந்த மாதிரி சந்துலதான் அவுங்கலாம் இருப்பாங்க. உசாரா பாரு அதுக்காக இங்கியே நிக்காத " சுந்தர் ஒவ்வொரு வீட்டின் கதவையும் நோட்டமிட்டான் .
" யாம்பா அந்தமாதிரி கலரா இருப்பாங்களா"
"கலரா இருந்தாதான் உனக்கு புடிக்குமா   இல்லனா  போகமாட்டியா"
"எங்கிட்ட இல்லாததத்தானே இருக்கிறவங்ககிட்ட எதிர்பார்க்கமுடியும்."இருவரும் வாதம்புரியும் போது  ஜெபராஜ் வந்துவிட்டார்.
"அதுக்குள்ளே முளை  சூடா இட்டா போலக்கிது. சார் மொகத்துல ஒரு விறைப்பு தெரிது  இல்ல," சுந்தர், தாஸிடம் குசுகுசுத்தான்.
எதிரில் ஒரு வாலிபன் உருமாறிய  பாம்புத்தோலை  தோளில் போ ட்டு கூவிக்கொண்டு வந்தான். ஜெபராஜ் வெறுமனே என்ன விலை என்றார். அவன் one fifti என்றான்."ஏய் பையா எங்க தமிழ் நாட் டிலே  fouty rupees  இந்த பெல்ட்டுலாம் தெரியுமா"என்று சொல்லி  நடந்துக்கொண்டேயிருந்தார்.

"குடிவேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சிடா சாமி. இவ்ளோ அசட்டுதைரியமா பெசவைக்குதே "சுந்தர் வேறுபக்கம்  திரும்பி சிரித்தான். ஜெபராஜ் ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தையைமட்டும் புரிந்து கொண்ட வியாபாரி,"பாபு hundred only" என்று அவர்கள் பின்னாடிவந்தான். இவர்கள் திரும்பிவரும் போது வாங்கிக்கொள்வதாக   சைகைகாட்டினார்கள். சுந்தர் இருவரையும் விடமுன்னே  வேக மாகச்சென்றான். ஜெபராஜ் "அதோ அந்த சின்னத்தெருவுல்தான் நுழயனும்" என்றார். 

"டேய் இருடா அந்த காரும் ஆட்டோவும் போட்டும் நம்ம காஞ்சிபுரம்  மாதிரி நெனைச்சிக்காதே " தாஸ் சுந்தருக்கு முன்னே சாலையை கடந்தான்.
"போ அந்த பஸ் வரத்துக்குள்ள போய்டு எப்படி வரானுங்கப்பாரு இரண்டு பக்கம்  பார்த்துக்கொண் டே  மற்ற  இருவரும்  ஓடினார்கள். அந்த இடத்தை நெருங்கியதும் சுந்தர் மிகவும் படபடப்பானான்.
"நி போர வேகத்தப்பாத்தா  கெடச்சதும்  நொறுக்கிடுவ போலகிதே"என்றார் ஜெபராஜ். 
"சுந்தர் அந்த சந்துல நிக்கிறாங்க பாரு அவுங்கதான். ஆனா கையக்காட்டிலாம் கூப்பிடமட்டாங்க நாமளும் எங்கயும் கூட்டிம்போக முடியாது".என்றார் தாஸ் 
ஒரு சில பெண்கள் நின்றிருந்தார்கள். சிலர்  முகம் தெளிவாய் தெரியவில்லை.பெண்களைப்பார் த்ததும் சுந்தர் சற்று பின்தங்கினான். பக்கத்தில் ஜெபராஜிக்கு வேண்டிய கடையிருந்தது  அதில்  நுழைந்தார். சுந்தர் எரிச்சலடைந்தான்.
"சார்  வேணாம் சார்"என்றான்.  அவர்  குடிக்கக்கூடாது  என்பதில்  அக்கறை  இருந்தாலும்   போகிற இடம்  விவகாரமான இடம் என்பதால் சற்று பயந்தான்.
"ஏய் வாபா நியும் ஒரு பெக்சாப்புடு அப்பத்தான் அவுங்கலாண்டலாம் சமாளிக்கமுடியும்" ஒன்றில்  அடிமையானவன் யோசிக்காமல் எந்தகாலத்தில்  விடுதலை கிடைத்தது "நீங்க போங்க சார்" சுந்த ரும்,தாசும் வெளியில் நின்றார்கள். தாஸ் எதோ நினைவுவந்தவனாக் "டேய் வாடா வாய் ஸ்மல் லுக்கு ஏதாவது வாங்கி போட்டுக்குனு வருவோம்.ஜெபராஜ் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பிறகு  வந்தார். போதை ஏறி பேச்சி தடுமாறுவது தெரிந்தது.
"வேணான்னு சொன்னா  கேக்கிறீங்களா  போய் இவ்ளோ நேரம் கழிச்சி வரிங்களே" சுந்தருக்கு குரல் எழுந்தது.
"டேய்  நி இலக்கியவாதின்னா பெரிய இதுவா குடிக்கிறதுக்கு கூப்பிட்டா வரமாட்டே பொம்பளை யாண்ட போறதுக்கு  மட்டும் அவசரப்படுறியே எதுவா  இருந்தாலும் இங்கியே பெசி முடிவுபண் ணிக்குவோம். அவுங்ககிட்ட போயிட்டா ஒண்ணும் செய்யமுடியாது  சரியா "ஜெபராஜ்  தள்ளாடிக் கொண்டே சொன்னார். உள்ள போனப்புறம் நானு முன்ன போவேன் நி முன்னபோவேன்னுலாம் சொல்லக்கூடாது. நான் வாத்தியாரு நான்தான் மொதல்ல. வயசுலயுஞ்செரி சர்வீசுலயுஞ்செரி நான்தான் மொதல்ல.எனக்கப்புறம் யார்னா போங்க"என்றார்.

"சார் ரொம்ப அநியாயம் சார், உனக்கு காலை எங்க வைக்கிரோம்னே தெரியல, நீங்க மொதல்ல போரீங்களா இதுலக்கூடவா  சீனியர் சர்வீஸ் பாப்பிங்க நான் போயிட்டு வந்துடுறேன."என்றான் சுந்தர்.
அதற்குள் "எண்டா வாத்தியார்க்கு அடுத்தது கிளர்க்கு  நாந்தான். நி எப்படிப்பாத்தாலும் கடைசில தான்.பதவிலப்பாத்தாலும்,சர்வீஸ்லப்பாத்தாலும் எதுவாயிருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா "

தன் தேவைக்கும் ,புகழுக்கும்  முந்திக்கொள்வதில்தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. குருகலான் வழியில் நடந்தார்கள். அதிகமான  மேக்கப்பில்லாமல் ஒரு பெண்   அழகாய் நின்றிருந்தாள். சற்று தள்ளி இன்னொருத்தி ஜினஸ் பேண்ட் பனியனும் போட்டிருந்தாள்.நல்ல கலரில் ஒருபெண் என வருசை யாய்  நின்றிருந்தார்கள். ஜெபராஜை பார்த்தவுடன் ஒருத்தி  "ஆய் தமிழ்நாடு "என்று கையைப்பிடித்து இழுத்துச்சென்றாள். இன்னோருப்பெண் தாசை  "வா மாமா"என்றாள்.   சுந்தர் பொறுமையாக  வந்தான் தவறு செய்ய நினைக்கும் முன் சரியா என்ற கேள்வி முந்திரிக்கொட் டையாக முன்னாடி வந்து நிற்கிறது. ஜெபராஜ் வேற' நி இன்னா பெரிய வாதியா பேதியானு' சொன் னது இடித்துக்கொண்டு இருந்தது.நமக்குள் நடமாடும் ஆனந்தம், காமம், அமுதம் ,தருமம்  என்கிற இலக்கியக்கூறுகள் விலகிடுமோ என்ற குழப்பத்துடன் வந்தான். ஒருத்தி  "ஏன்யா தயக்கம் வாயா" 
என்றாள்.முன்பு போனவர்கள் வெளியரங்கமான  பார்வைக்கு  மறைந்துபோயிருந்தார்கள்.அவள் மீண்டும் "இங்க வந்துட்டு ஏன்யா நிக்கிறே"இவனுக்கு உடல் நடுக்கம் கண்டது  சமாளித்து  "நா.. நா இதுக்கு  வரல சும்மா பாக்கலாம்முனு  அவுங்கக்கூடவந்தேன்.வெளிய ரெண்டுப்பேரு  நிக்கிறாங்க நான்போய் கூட்டிக்கினு வரேன்."என்று சாலையை நோக்கி வேகமாகநடந்தான். 

ஜெபராஜ் நுழைந்த அறை தொங்கல் மறைவில் அலைபாய்ந்தது.வெளிச்சம் லேசாயிருந்தது. ஜெபராஜின் மேலாடைகள்  மூளையில் கிடந்தது. அவள் படுக்கை விரிப்பில் இருந்தாள்.ஜெபராஜ் சேப்ட்டி மாட்டுவதற்கு  பிரித்துக்கொண்டிருந்தார். பல்லால் கடித்து     வாய்புரத்தை  பிரித்ததும் அதன் வழவழப்பு கைகளில் பிசுபிசுப்பாய் ஒட்டியது. சேப்ட்டியை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு  நடக்கத்தெரியாத குழந்தை  ஜட்டி மாட்டுவதுபோல வெகுநேரம் உரையை பிடித்து குனிவதும் சற்று எழுவதும் உரையை மூத்திர பப்ம்புக்கு கிட்டத்தில் கொண்டுசெல்வதும் இவ்வளவும் கண்கள் திறக்காமல் செதுக்கொண்டிருந்தார். உறையை  குனிந்து பிடித்திருந்தவர் அப்படியே உட்கார்ந்துவிட்டார். கண்களை திறக்கவில்லை. அவள் இது வேலைக்கு ஆகாது என்று கிட்டத்தில் வந்தாள்."அலோ இங்கபாருயா எதுக்குவந்த" என்று அவர் கிட்டத்தில் உட்க்கார்ந்து கைகளை பிடித்து தன் மார்புகளில் போட்டாள். அவர் கண்களைத்திறந்து "நி அழகா  இருக்கே" என்று மிண்டும் கண்களை மூடிக்கொண்டார். அவள் எழுந்து ஜெபராஜின் துணிகளை அவரிடம் போட்டாள். "கெளம்பு பாபு கெளம்பு"என்று அவள் வெளியே வந்துவிட்டாள். ஜெபராஜ் தட்டுத்தடுமாறி துணிகளை மாட்டிக்கொண்டு  வெளிய வர அதிகநேரம்பிடித்தது.

பக்கத்து ருமில்  புகுந்த தாஸ் அவசரமாக ஆடைகளை கழட்டினான்.அவளுக்கு தமிழ் சரியாக தெரியவில்லை எதோ விட்டு விட்டு பேசினாள்.அது தாசுக்கு சற்ற ஆறுதலாய் இருந்தது. பக்கத்தில் முனகல்சத்தம்  கேட்டது  தாஸ் அவள் கிட்டத்தில் சென்றதும்  "நோ ..நோ. pleas go wash" என்றாள்.என்னடா இது வம்பாப்போச்சி இந்தக்கோலத்தில் எங்கப்போய்கழுவுரது  பாவி முண்ட  இப்படி சொல்லிட்டாலே  பொண்டாட்டி சொல்லும் போதெல்லாம் போடி போக்கத்தவளேன்னு சொன்னேனே பாத்ரும் எந்த மூலைஇல் இருக்குதோ தெரிலயே  பதட்டமாய் வந்தான். 'பிறருக்கு  நடந்தது போல் தனக்கு நடக்காது என யாரும் நினைக்கக்கூடாது  போல'  தாஸ் பாத்ரும் தெரியாமல் அளைமோதியபோது எதிரில் ஒருவன் ஜட்டியை மாட்டிக்கொண்டு வந்தான் இவனைப்பார்த்ததும்  சிரித்துக்கொண்டே சென்றான்.உன்பொழப்புதான்  ஏற்கனவே காரிமுழிதே நீ என்னைப்பார்த்து சிரிச்சிம்போரியா. நி போசொல்லோ நான்சிரிச்சேன், இப்ப நி சிரிக்கிரியா எதுவும் சற்று முன்பின் நடக்குமா? அவள் விவகாரமானவள் தான் குடுத்தப்பணத்துக்கு திருப்தியை அடைந்துவிட்டான். அவள் 'போட்டியில் ஒருவனை வீழ்த்தி அடுத்தவனை தாக்குதலுக்கு அழைப் பதுபோல்' எழுந்தாள் உடல் வேர்த்திருந்தது. தாஸ் மூச்சுவாங்கிகொண்டு விலகிவந்தான். அதன் பிறகு அவள் முகத்தை பார்க்கவேயில்லை.
மூவரும் மெயின்ரோட்டில் நடந்தார்கள்."சார் ரூமுக்கு வந்ததும்' பி. எப்' அப்ளைபண்ணிக்கிராங் களே ஏழுப்பேரு  அவுங்கலாண்ட ஆளுக்கு   இரநூறு  கலைக்சன்பண்ணிக்குடுங்க, இல்ல பி. எப் வர எத்தினி மாசமாகுமோ சொல்லமுடியாது."
தலையாட்டிக்கொண்ட ஜெபராஜ் சுந்தரிடத்தில் "அடுத்த வருஷம் பாம்பே டூர் போடுறேன் அங்க எல்லாம் வெளிநாட்டு பொம்பளைங்கதான் புரிதா" என்றான். 
சுந்தர் காதில் வாங்காதவனாக அடிக்கடி அந்த சந்தை திரும்பி பார்த்துக்கொண்டே வந்தான்.
 ஜே.டேனியல்

¦ƒ