கரையேற்றம்
கிழே ஆங்கிலத்தில் டிரிங்கிங்வாட்டர் என்று எழுதியிருந்தது. அதற்கு மேலே இவர் களுக்கு தெரியாத மொழியில் எழுதியிருந்தது. சுந்தர் பார்த்தன் குடிநீர் என்கிற வாசகமாகத்தான் என்று யூகித்தான். அதே டேங்கில் சற்று தள்ளி பூனே கார்ப்ரேசன் என்று எழுதியிருந்தது. டேங்கில் தலைகவிழ்ந்த ஐந்து குழாய்கள் எப்போதும் அழுதுக்கொண்டேயிருந்தன. டேங்கின் முன் பாதி டைய்ல்ஸ் ஓடு ஒட்டியிருந்தார்கள். சங்கிலியால் கட்டப்பட்டு சுற்றி சுற்றி ஓய்ந்து போன நாயாக டம்ளர் சங்கிலியோடு சுருண்டுகிடந்தது. கல்வி சுற்றுலா வந்தவர்கள் லாட்ஜை நோக்கி நடந்தார்கள். கண்ணாடிப் போ ட்ட சுகுமாரன் இறங்கிய இடத்திலேயே ஓரங் கட்டிக்கொண்டி ருந்தான். நாலு கால்கள் முளைத்து மேல்கூரையை தாங்கிக்கொண்டு இருந்த்து நிழற் குடை. அதற்குள் சுடிதாரும், ஜீன்சும் போட்ட பெண்கள் எவ்வளவு காற்றை பொட் டலங்கட்டலாம் என்பதாக காத்திருந்தனர். சில பெண்கள் வானத்தின் எல்லா வெள்ளி நட்சத்திரங் களையும் தங்கள் மடியில் கட்டியிருப்பதுபோல் சந்தோஷபேச்சிகளில் முழ்கியிருந்தனர். நகரம் எப்போ துமே திருவிழாவின் தோற்றத்தை தரித்துக்கொள்கிறது . வாலிபர்களில் அசை போடாதவாய் குறைவாகத்தான் இருக்கிறது. சிகப்பில் வெள்ளை நிறத்தை கலந் தது போல் எந்த ஒதுக்குப் புறமான இடங்களிலும் புளிச் புளிசென்று துப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். ஒருவன் பான் மசாலாவை பல்லால் கடித்து வாயில் கொட்டிக்கொள்கிறான். காற்றில் கலந்து வந்த அதன் வாசனை சுந்தருக்கு மயக்கம் தருவதாக இருந்தது. கோடைகால திடிர் மழையில் வெளிச் சத்தை நோக்கிக்கிளம்பும், ஈசல்களாக வாகனங்கள் போவதும் வருவதும் ஈசல்கள் பறந்து வரும்போது தானாக உதிரும் இறக்கைகளாக வாகனத்தின் ஆரன் ஒலிகள் உதிர்ந்து விழு கின்றன. எதையோப்பார்த்து அடம்பிடிக்கும் குழந்தையை ஒரு தாய் தேற்றிச்செல்கின்றாள். கடல் மட்டக்காடுகளும் பெருநகரமும் ஒரே தளத்திதான் இழங்குகிறது. அநேகமாக இரண் டிலுமே ஒன்றை ஒன்று அழித்துக்கொண்டிருப்பதில்தான் செழிப்பான சுழற்சி அடங்கிஇருக்கிறது.
"என்னாக்கூடவே இரு எங்கியும் போயிடாதே என்னிக்கும் பாத்திராதத உனக்கு காட்றேனு நேத்தே சுகுமார் சார் சொன்னாரு' அத உட்டுட்டு இன்னிக்கி உங்ககூட அலையறேன்" என்றான் சுந்தர்.
"இவ்ளோ அலையிரவன் இன்னும் சீக்கிரமா எழுப்பியிருக்கனும் ஸ்கூல்ல இருந்து கெளம்பும் போதே சொன்னேன்யில்ல எப்படியாவது பூனேவுல உனக்குத் தேவையான எடத்துக்கு இட்டும் போறோம், ஆனா அங்க வந்து முடியாது நீங்க ஒன்னா போங்க நான் ஒன்னா வெளிய நிக்கிறே னுலாம் சொல்லக்கூடாது. எவன்னா எந்த எடத்தவேனும்னாலும் சுத்திபாக்கட்டும் நம்ம முனுபே ரும் அந்த எடத்துக்குபோறோம் முடிச்சிட்டு சைலண்டா ரூமுக்கு வந்துடுறோம்."ஜெப்ராஜ் சொல் லி முடித்தார் "தாமு நம்மக்கூடவே ஒட்டிகினு இருப்பான்பா அவன எப்படியாவது கழட்டி உட்டுட் டு நாம வேறரூட்டில போயிடனும் "என்று தாஸ் குரல் உயர்த்திச்சொன்னான்.
தாமு எழுந்திருப்பதுக்கு முன்பாகவே தாஸ் முதல் ஆளாக பாத்ரும் பார்ட்டையெல்லாம் முடித் தான். தாமுவின் சோப்பும் பேஸ்ட்டும் பயன்பட்டது. ஒரு வேலை செய்தால் திருத்தமாக்ச்செய் யவேண்டும் பவுடரும் கொட்டி மடித்துக்கொண்டான். இவை எதுவும் தாமுவுக்கு தெரியாமலே நடந்தது. தெரிந்தாலும் ஒரு குடிகாரன் பெருங் குடிகாரனை பாசமாய் கவனிப்பது போல்தான் ஓரிரு நாள் ஒன்றாய் தங்கிக்கொள்ளும் போது அற்த்தமில்லாத ஒரு பற்றுதல் ஏற்படுகின்றது.
தாஸ், ஜெபராஜ் இருவரையும் பார்த்து "சார் நீங்கபோய் மொதல்ல கெளம்புங்க சார் அப்பிடியே
கொஞ்சம் வாசனை திரவியம் தாங்கசார், அவுங்களாண்ட போனாநாத்தம் அடிக்கப்போகுது. அந்த வார்த்தைகளை மட்டும் சற்று குரல் தாழ்த்திச்சொன்னான். அந்த் இடத்தையும் அவர்களை யும் பார்த்துவிடுவதில் மிகவும் ஆவலாய் இருந்தான் சுந்தர்.
"நீயே இன்னும் கெளம்பாத இருக்கிறியே"ஜெப்ராஜ் கேட்டபோதுதான்.தன்அறையில் பாத்ரூமும் காலியில்லை என்பதில் நொந்துக்கொண்டான். பதட்டமடைந்தவன் பக்கத்து அறையில் சென்று அவசரமாய் குளித்துவிட்டு வந்தான். அவன் முகத்தின் மயிர்கள் வழிக்காமல் வாரத்தைகடந்தி ருந் தது. மயிர்கள் இன்னும் முரட்டுத் தன்மையாய் மாறவில்லை.இருந்தாலும் கன்னத்தொடு உரசும்போது ஈரம் பட்ட குளியல்சோப்பின் வழுவழுத்தன்மையில் கீரல் விழுமோ என்று அஞ்சி சுந்தர் குளிக்கும் முன் வழித்துவிட்டான். நான்கு பேர் படுக்கும் கட்டில் இரண்டு இரண்டு செட் இருந்தது. ஒரு செட்டில் நான்கு நன்பர்களும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். தாஸின் குருப்பில் தாமு மட்டும்தூங்கிக்கொண்டிருந்தான். தாஸின் ஜட்டி கட்டிலின் தலையில் உலர்ந்திருந்தது. சுந்தர் டவலால் தலையை துடைத்துக்கொண்டு வந்தான். ஜெபராஜ் பிரஷ் செய்துக்கொண்டு வெளியே வந்தார். அவர் பையில் இருந்த சோப்பை எடுத்துக்கொண்டு பாத்ரூமில் நுழைந்தார். திருவிழாவின் ராட்டிணத்தில் ஏறத்துடிப்பவன்போல் சுந்தர் "சார்சீக்கிறம் வாங்க சார்"என்ற்வன் மீண்டும் "தயவு செய்து அந்த எடத்துக்கு போய் வர வரைக்கும் எந்த பாட்டிலையும் தொறக் காதிங்க"என்றான்.
ஜெபராஜ் புதிதாக பிரித்த சேண்டில் சோப் சந்தனமும் மல்லியும் குழைத்த வாசானை அறையின் காற்றை அனைத்துக்கொண்டு சுழன்றது.அது சுந்தரின் மூளையை பதம் பார்த்தது. இந்த வாசனை சுலபமாய் அவர்களை மயக்கிவிடுமா? "சார் குளிச்சிட்டு சோப்ப அங்கேயே வச்சிட்டுவாங்க நானும் என் மொகத்துல கொஞ்சம் போட்டுவச்சிக்கிறேன்.ஜெபராஜின் சிரிப்பால் மீசை சற்று விரி வடைந்தது. தலையில் சட்டியை கவிழ்த்துக்கொண்டு குளத்தில் நீர் கோழிழை பிடிக்கச்செல்வது போல் அறை நன்பர்களுக்குத் தெரியாமல் வெளியேரினார்கள்.
ஜெபராஜ் அரை கை சட்டை இன்செய்திருந்தார். சற்று உப்பி இருந்த வயிருஎடுப்பான தோற்றத் தை காட்டியது. தாஸ் சிறு கட்டம் போட்ட முழு கை சட்டை போட்டிருந்தான். முகத்தில் பூசியப்ப வுடர் வெயில் ஏறியதில் திரிதிரியாய் கோடு போட்டிருந்தது. சுந்தர் தாஸை பார்த்து பவுடர் தொடைபா என்றான். தாஸ் சாலையோரத்தில் நின்றிருந்த டூவிலரின் கண்ணாடியைப்பார்த்து துடைத்துக்கொண்டான்."அந்தேபெரிய லாட்ஜில் ரசம் போன கண்ணாடிய வச்சிக்கிறானேடா கம்ம னாட்டிங்க அதான் சரியாவே தொடைக்க முடியல. நீயாவுது சொல்லக்கூடாதா நானு எதையும் முழுசா அனுபவிக்கக்கூடாதுனு உனுக்கு போறாமடா"என்று தாஸ் சுந்தரை கடிந்துகொண்டார்.
ஜெப்ராஜ் சிரித்துக்கொண்டே எதோ ஒரு கடையில் ஜனக்கூட்டத்தோடு கூட்டமாய் கடையை நோக்கி சென்றார்.சுந்தர் கடைபோர்டைப்பார்த்தான். "சார் இதெல்லாம் இப்பவேனாம் சார் அந்த எடம் போய்வந்த பிறகு வச்சிக்கலாம்"சுந்தர் அழுபவன் போல்கேட்டான். கடையை பார்த்த குடி காரன் 'குண்டு மல்லியின் மனத்துக்கு மயங்கும் மங்கையைப் போல்' அதன் சாரத்தை ருசிக்கா மல் திரும்ப மருக்கிறான். அது தனிமனித சுயவிருப்பைச்சார்ந்தது என்பதால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை.பெரிதாக ஜெபராஜின் நலன் கருதியில்லை போகின்ற இடம் விவகாரமானயிடம் இவர் மட்டை போட்டுவிட்டால் நம்மை ஏதாவது வம்பில் மாட்டிவிடப்போகிறார்கள் என்ற பயம்தான். தாஸ் பிரச்சனை என்றால் எந்தப்பக்கம் மறைவான் தெரியாது. கடைக்கு முன் நாலு ஐந்து பிளாஸ்டிக் டம்ளர்கல் முழு குடிகாரனாக உருவம் சிதைந்து அங்கங்கே உருண்டு கிடந்தது .பாட்டில் வாங்கியசிலர் என்ன அவசரமோ அங்கே ஒரு மூலைஇல் நின்று தீரா தாகத்தில் இருப் பவன் போல் மடக்மடக்கென்று ஊற்றிக்கொண்டு சண்டை இட்டு த்துரத்திய மனைவியாக பாட்டிலை கிழேபோட்டு கண்டுகொள்ளமல் போகிறான். ஒருவன் வாங்கிய சப்பை பாட்டிலை தன் மூத்திர பம்ப்புக்குள் நேராக சொரிகிக்கொண்டு பாலுக்குள் தன்னிரக ஜனங்களுக்குள் கலந்து சென்றான்.குடி குடியைகெடுக்கும் என்கிற வாசகத்தை சின்னதாய் வைத்துக்கொண்டு, கடைக் குள்ளிருந்த படித்த வாலிபர்கள் அவசரமாக் காலியாகும் அட்டைப்பெட்டிகளை உள்ளே எடுத்துச்சென்று அடுக்கினார்கள். அறிமுகமில்லாத இருவர் ஒரே இடத்தில உட்கார்ந்து குடிக்கும்போது மாமன் மச்சான் ஆகிவிடுகிறார்கள். இவ்வளவு சீக்கிரத்தில் எவ்வளவு பற்றுதல்? பேசாமல் எல்லாரும் குடிகாரனாக மாறிவிட்டால் சாதி மதம் உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதமில் லாமல் வாழ்வு போகும்போல சாலையில் போகின்ற வருகின்ற மக்கள் கடையின் வியாபாரத் தை பார்த்து நாம ஒரு கடைதிறந்தால் வாழ்க்கையில் சீக்கிரம் முன்நேரிவிடலாம் என்ற ஆசை அரும்பி சிக்கிரத்தில் கருகிக்கொண்டுதான் செல்கின்றது. எத்தனை விதமான சத்தம் எத்தனை வியாபார யுக்த்தி இவைகள் எதையமே தன் முளை கண்டுகொள்ளாமல் ஜெபராஜ் தனதின் தனி உலகின் கதவைத்திறந்தார்.
தாஸும், சுந்தரும் சாலையில் நடந்தார்கள். பிரதான சாலையிலிருந்து பிரியும் சிறிய சந்தை பார்த்த தாஸ் "டே இங்கப்பார்ரா இந்த மாதிரி சந்துலதான் அவுங்கலாம் இருப்பாங்க. உசாரா பாரு அதுக்காக இங்கியே நிக்காத " சுந்தர் ஒவ்வொரு வீட்டின் கதவையும் நோட்டமிட்டான் .
" யாம்பா அந்தமாதிரி கலரா இருப்பாங்களா"
"கலரா இருந்தாதான் உனக்கு புடிக்குமா இல்லனா போகமாட்டியா"
"எங்கிட்ட இல்லாததத்தானே இருக்கிறவங்ககிட்ட எதிர்பார்க்கமுடியும்."இருவரும் வாதம்புரியும் போது ஜெபராஜ் வந்துவிட்டார்.
"அதுக்குள்ளே முளை சூடா இட்டா போலக்கிது. சார் மொகத்துல ஒரு விறைப்பு தெரிது இல்ல," சுந்தர், தாஸிடம் குசுகுசுத்தான்.
எதிரில் ஒரு வாலிபன் உருமாறிய பாம்புத்தோலை தோளில் போ ட்டு கூவிக்கொண்டு வந்தான். ஜெபராஜ் வெறுமனே என்ன விலை என்றார். அவன் one fifti என்றான்."ஏய் பையா எங்க தமிழ் நாட் டிலே fouty rupees இந்த பெல்ட்டுலாம் தெரியுமா"என்று சொல்லி நடந்துக்கொண்டேயிருந்தார்.
"குடிவேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சிடா சாமி. இவ்ளோ அசட்டுதைரியமா பெசவைக்குதே "சுந்தர் வேறுபக்கம் திரும்பி சிரித்தான். ஜெபராஜ் ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தையைமட்டும் புரிந்து கொண்ட வியாபாரி,"பாபு hundred only" என்று அவர்கள் பின்னாடிவந்தான். இவர்கள் திரும்பிவரும் போது வாங்கிக்கொள்வதாக சைகைகாட்டினார்கள். சுந்தர் இருவரையும் விடமுன்னே வேக மாகச்சென்றான். ஜெபராஜ் "அதோ அந்த சின்னத்தெருவுல்தான் நுழயனும்" என்றார்.
"டேய் இருடா அந்த காரும் ஆட்டோவும் போட்டும் நம்ம காஞ்சிபுரம் மாதிரி நெனைச்சிக்காதே " தாஸ் சுந்தருக்கு முன்னே சாலையை கடந்தான்.
"போ அந்த பஸ் வரத்துக்குள்ள போய்டு எப்படி வரானுங்கப்பாரு இரண்டு பக்கம் பார்த்துக்கொண் டே மற்ற இருவரும் ஓடினார்கள். அந்த இடத்தை நெருங்கியதும் சுந்தர் மிகவும் படபடப்பானான்.
"நி போர வேகத்தப்பாத்தா கெடச்சதும் நொறுக்கிடுவ போலகிதே"என்றார் ஜெபராஜ்.
"சுந்தர் அந்த சந்துல நிக்கிறாங்க பாரு அவுங்கதான். ஆனா கையக்காட்டிலாம் கூப்பிடமட்டாங்க நாமளும் எங்கயும் கூட்டிம்போக முடியாது".என்றார் தாஸ்
ஒரு சில பெண்கள் நின்றிருந்தார்கள். சிலர் முகம் தெளிவாய் தெரியவில்லை.பெண்களைப்பார் த்ததும் சுந்தர் சற்று பின்தங்கினான். பக்கத்தில் ஜெபராஜிக்கு வேண்டிய கடையிருந்தது அதில் நுழைந்தார். சுந்தர் எரிச்சலடைந்தான்.
"சார் வேணாம் சார்"என்றான். அவர் குடிக்கக்கூடாது என்பதில் அக்கறை இருந்தாலும் போகிற இடம் விவகாரமான இடம் என்பதால் சற்று பயந்தான்.
"ஏய் வாபா நியும் ஒரு பெக்சாப்புடு அப்பத்தான் அவுங்கலாண்டலாம் சமாளிக்கமுடியும்" ஒன்றில் அடிமையானவன் யோசிக்காமல் எந்தகாலத்தில் விடுதலை கிடைத்தது "நீங்க போங்க சார்" சுந்த ரும்,தாசும் வெளியில் நின்றார்கள். தாஸ் எதோ நினைவுவந்தவனாக் "டேய் வாடா வாய் ஸ்மல் லுக்கு ஏதாவது வாங்கி போட்டுக்குனு வருவோம்.ஜெபராஜ் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பிறகு வந்தார். போதை ஏறி பேச்சி தடுமாறுவது தெரிந்தது.
"வேணான்னு சொன்னா கேக்கிறீங்களா போய் இவ்ளோ நேரம் கழிச்சி வரிங்களே" சுந்தருக்கு குரல் எழுந்தது.
"டேய் நி இலக்கியவாதின்னா பெரிய இதுவா குடிக்கிறதுக்கு கூப்பிட்டா வரமாட்டே பொம்பளை யாண்ட போறதுக்கு மட்டும் அவசரப்படுறியே எதுவா இருந்தாலும் இங்கியே பெசி முடிவுபண் ணிக்குவோம். அவுங்ககிட்ட போயிட்டா ஒண்ணும் செய்யமுடியாது சரியா "ஜெபராஜ் தள்ளாடிக் கொண்டே சொன்னார். உள்ள போனப்புறம் நானு முன்ன போவேன் நி முன்னபோவேன்னுலாம் சொல்லக்கூடாது. நான் வாத்தியாரு நான்தான் மொதல்ல. வயசுலயுஞ்செரி சர்வீசுலயுஞ்செரி நான்தான் மொதல்ல.எனக்கப்புறம் யார்னா போங்க"என்றார்.
"சார் ரொம்ப அநியாயம் சார், உனக்கு காலை எங்க வைக்கிரோம்னே தெரியல, நீங்க மொதல்ல போரீங்களா இதுலக்கூடவா சீனியர் சர்வீஸ் பாப்பிங்க நான் போயிட்டு வந்துடுறேன."என்றான் சுந்தர்.
அதற்குள் "எண்டா வாத்தியார்க்கு அடுத்தது கிளர்க்கு நாந்தான். நி எப்படிப்பாத்தாலும் கடைசில தான்.பதவிலப்பாத்தாலும்,சர்வீஸ்லப்பாத்தாலும் எதுவாயிருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா "
தன் தேவைக்கும் ,புகழுக்கும் முந்திக்கொள்வதில்தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. குருகலான் வழியில் நடந்தார்கள். அதிகமான மேக்கப்பில்லாமல் ஒரு பெண் அழகாய் நின்றிருந்தாள். சற்று தள்ளி இன்னொருத்தி ஜினஸ் பேண்ட் பனியனும் போட்டிருந்தாள்.நல்ல கலரில் ஒருபெண் என வருசை யாய் நின்றிருந்தார்கள். ஜெபராஜை பார்த்தவுடன் ஒருத்தி "ஆய் தமிழ்நாடு "என்று கையைப்பிடித்து இழுத்துச்சென்றாள். இன்னோருப்பெண் தாசை "வா மாமா"என்றாள். சுந்தர் பொறுமையாக வந்தான் தவறு செய்ய நினைக்கும் முன் சரியா என்ற கேள்வி முந்திரிக்கொட் டையாக முன்னாடி வந்து நிற்கிறது. ஜெபராஜ் வேற' நி இன்னா பெரிய வாதியா பேதியானு' சொன் னது இடித்துக்கொண்டு இருந்தது.நமக்குள் நடமாடும் ஆனந்தம், காமம், அமுதம் ,தருமம் என்கிற இலக்கியக்கூறுகள் விலகிடுமோ என்ற குழப்பத்துடன் வந்தான். ஒருத்தி "ஏன்யா தயக்கம் வாயா"
என்றாள்.முன்பு போனவர்கள் வெளியரங்கமான பார்வைக்கு மறைந்துபோயிருந்தார்கள்.அவள் மீண்டும் "இங்க வந்துட்டு ஏன்யா நிக்கிறே"இவனுக்கு உடல் நடுக்கம் கண்டது சமாளித்து "நா.. நா இதுக்கு வரல சும்மா பாக்கலாம்முனு அவுங்கக்கூடவந்தேன்.வெளிய ரெண்டுப்பேரு நிக்கிறாங்க நான்போய் கூட்டிக்கினு வரேன்."என்று சாலையை நோக்கி வேகமாகநடந்தான்.
ஜெபராஜ் நுழைந்த அறை தொங்கல் மறைவில் அலைபாய்ந்தது.வெளிச்சம் லேசாயிருந்தது. ஜெபராஜின் மேலாடைகள் மூளையில் கிடந்தது. அவள் படுக்கை விரிப்பில் இருந்தாள்.ஜெபராஜ் சேப்ட்டி மாட்டுவதற்கு பிரித்துக்கொண்டிருந்தார். பல்லால் கடித்து வாய்புரத்தை பிரித்ததும் அதன் வழவழப்பு கைகளில் பிசுபிசுப்பாய் ஒட்டியது. சேப்ட்டியை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு நடக்கத்தெரியாத குழந்தை ஜட்டி மாட்டுவதுபோல வெகுநேரம் உரையை பிடித்து குனிவதும் சற்று எழுவதும் உரையை மூத்திர பப்ம்புக்கு கிட்டத்தில் கொண்டுசெல்வதும் இவ்வளவும் கண்கள் திறக்காமல் செதுக்கொண்டிருந்தார். உறையை குனிந்து பிடித்திருந்தவர் அப்படியே உட்கார்ந்துவிட்டார். கண்களை திறக்கவில்லை. அவள் இது வேலைக்கு ஆகாது என்று கிட்டத்தில் வந்தாள்."அலோ இங்கபாருயா எதுக்குவந்த" என்று அவர் கிட்டத்தில் உட்க்கார்ந்து கைகளை பிடித்து தன் மார்புகளில் போட்டாள். அவர் கண்களைத்திறந்து "நி அழகா இருக்கே" என்று மிண்டும் கண்களை மூடிக்கொண்டார். அவள் எழுந்து ஜெபராஜின் துணிகளை அவரிடம் போட்டாள். "கெளம்பு பாபு கெளம்பு"என்று அவள் வெளியே வந்துவிட்டாள். ஜெபராஜ் தட்டுத்தடுமாறி துணிகளை மாட்டிக்கொண்டு வெளிய வர அதிகநேரம்பிடித்தது.
பக்கத்து ருமில் புகுந்த தாஸ் அவசரமாக ஆடைகளை கழட்டினான்.அவளுக்கு தமிழ் சரியாக தெரியவில்லை எதோ விட்டு விட்டு பேசினாள்.அது தாசுக்கு சற்ற ஆறுதலாய் இருந்தது. பக்கத்தில் முனகல்சத்தம் கேட்டது தாஸ் அவள் கிட்டத்தில் சென்றதும் "நோ ..நோ. pleas go wash" என்றாள்.என்னடா இது வம்பாப்போச்சி இந்தக்கோலத்தில் எங்கப்போய்கழுவுரது பாவி முண்ட இப்படி சொல்லிட்டாலே பொண்டாட்டி சொல்லும் போதெல்லாம் போடி போக்கத்தவளேன்னு சொன்னேனே பாத்ரும் எந்த மூலைஇல் இருக்குதோ தெரிலயே பதட்டமாய் வந்தான். 'பிறருக்கு நடந்தது போல் தனக்கு நடக்காது என யாரும் நினைக்கக்கூடாது போல' தாஸ் பாத்ரும் தெரியாமல் அளைமோதியபோது எதிரில் ஒருவன் ஜட்டியை மாட்டிக்கொண்டு வந்தான் இவனைப்பார்த்ததும் சிரித்துக்கொண்டே சென்றான்.உன்பொழப்புதான் ஏற்கனவே காரிமுழிதே நீ என்னைப்பார்த்து சிரிச்சிம்போரியா. நி போசொல்லோ நான்சிரிச்சேன், இப்ப நி சிரிக்கிரியா எதுவும் சற்று முன்பின் நடக்குமா? அவள் விவகாரமானவள் தான் குடுத்தப்பணத்துக்கு திருப்தியை அடைந்துவிட்டான். அவள் 'போட்டியில் ஒருவனை வீழ்த்தி அடுத்தவனை தாக்குதலுக்கு அழைப் பதுபோல்' எழுந்தாள் உடல் வேர்த்திருந்தது. தாஸ் மூச்சுவாங்கிகொண்டு விலகிவந்தான். அதன் பிறகு அவள் முகத்தை பார்க்கவேயில்லை.
மூவரும் மெயின்ரோட்டில் நடந்தார்கள்."சார் ரூமுக்கு வந்ததும்' பி. எப்' அப்ளைபண்ணிக்கிராங் களே ஏழுப்பேரு அவுங்கலாண்ட ஆளுக்கு இரநூறு கலைக்சன்பண்ணிக்குடுங்க, இல்ல பி. எப் வர எத்தினி மாசமாகுமோ சொல்லமுடியாது."
தலையாட்டிக்கொண்ட ஜெபராஜ் சுந்தரிடத்தில் "அடுத்த வருஷம் பாம்பே டூர் போடுறேன் அங்க எல்லாம் வெளிநாட்டு பொம்பளைங்கதான் புரிதா" என்றான்.
சுந்தர் காதில் வாங்காதவனாக அடிக்கடி அந்த சந்தை திரும்பி பார்த்துக்கொண்டே வந்தான்.
ஜே.டேனியல்
¦ƒ
No comments:
Post a Comment