கண்ணி வெடி
அந்தப்புரத்து அம்மணிகளை திகட்டாமல் நேசிப்பதுபோல் பெருமுதலாளிகளை தூசு படியாமல் காக்கின்றார்கள் அதிகாரமுதலாளிகள். நேர்மையாளனுக்கும் மக்களுக்குமிடையில் விஷப்பாம்பின் பிம்பத்தை நிறுத்துகிறார்கள். உழைப்பாளி, பொரிஉருண்டையை தங்கமுட் டை யாய் பெற்றுக் கொள்ள ஓடிவரச்செய்கிறார்கள். மதுவும்,மாதுவும் குழைத்து குடித்து உச்சத்தை அடைந்து பதவி மயக்கத்தில் களித்து ஆணையிடுகிறார்கள். கேள்வியாளர்களை ஒழித்துவிட அதிகார ஆழ்மனசு குறைபாடுகளோடு ஒட்டிப்பிறந்த உடல்களைப்போல் வளர்ச்சியில் மையம்கொள்கிறது. சூரியக்கதிர்களுக்கு தங்களை குளிர்ச்சியால் போர்த்திக்கொண்டு, வான் இருண்ட்பின்பும் வெளிச்சம் போடுகிறார்கள் உழைப்பவன் மனம்நோக. பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர்களை ஒத்தவன் உயரமாய் வளர்ந்திருந்தான் புல்லாக, பார்கிற அவர்கள் பரிசீலிக்கவே மருக்கிறார்க்ள். சிருபாண்மையான எழுத்தாளனை விலைபேசிவிட துடிக்கிறார்கள்.
எழுத்தாளன் முகங்களில் குழந்தைதோற்றங்கள் எப்போதும் இருக்காது என்று தெரிந்தும் ஆருடத்துனையுடன் மிரட்டநினைக்கிறார்க்ள். சதா காகிதங்களை ஆயுதங்களாக்கிக் கொண்டிருப்பதால் தீவிரமாய் கண்காணிக்கப்படுகிறோம். அதிகாரம், ஆயுதம், ஆலையாளர் யாவரும் சேர்ந்து எழுத்தாளன் விரும்பும் வெள்ளை காகிதத்துக்கு தடைவிதிக்கிறார்கள். எழுத்தாளனுக்கு உச்சங்களில் சுரந்து உள்ளங்கையில் உதிரும் வார்த்தைகள் எங்கேனும் கண்ணிவெடியாய் புதைந்துகிடக்கும் என்பதைமறந்து போகிறார்கள்.
அழுத்தம் கொடுக்கும்போது ?
ஜே. டேனியல்
கைபேசி: 9445726354
கைபேசி: 9445726354
No comments:
Post a Comment