பூட்டப்படாத வீடும் வெளியும்
குளத்தில் இரண்டு பிடி பொரியை அள்ளித்தூவினார். இன்னும் சற்றுத்தள்ளி கொஞ்சம் தூவினார்.கோயிலுக்குச்சொந்தமான ஒவ்வொருபொருளிலும் கடவு ளின் நுண் துகலாவது இருக்கும் என்றுதான். இங்குவருகின்ற எல்லோரும் நினைக்கின்றார்கள்.நான்கு பக்கமும் நூறடி சதுரப்பரப்பில் குளம்.இரண்டு படி விட்டு நீர் நிரம்பி இருக்கின்றது. வானம் தன் இயல்பான நிறத்தை மாற்றிக் கொள்ளவே மறுக்கிறது .எப்போதும்போல் அதேநிறத்தையே நிறைவாய் வைத் திருக்கிறது.வெண்குதிரை புறா நாரை கொக்கு ராட்சஷ உருவம்கொண்டு வெண்மேகங்களில் குவியல் குவியலாய் சிறகுடன் பறந்து மிதக்கிறது. எதோ ஒரு மூலையிலிருந்து நிரந்தர இடம்தேடி நின்று நின்று எழும்பிப்கொண் டிருந்தது. முட்டைபோல் திட்டாய் தங்கியிருக்கும் கரும்மேகம். வான் ஊர்தியைவிட வேகமாய் கீழ் வானத்தின் பல திக்குகளிலிருந்து, கண்ணுக்கு தெரியாமல் படர்ந்து வந்த செந்நிறம்கலந்த மேகங்கள் கருமேகத்தை அழுத்தி மறைத்துவிட்டதை. இந்த 2009 அதிகாலையில் குளத்து தண்ணீரில் முழுமையான அழகுடன் அதனதன் நிறம் மாறாமல் தெளிவாய்காட்டிக் கொடுத்தது.
மீன்கள் ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டு பொரிகளை சாப்பிட்டது. தட்டிப்பரித்துக்கொள்வதில் நம்பிக்கை வைக்கும் எவற்றுக்கும் பெரியது சிறியது என்ற வித்தியாசம் இல்லை. சிந்தனை எல்லாவற்றிக்கும் ஒரே மாதிரிதான். பலம் பலமின்மையால் சிலதுக்குக்கிடைத்தும் சிலதுக்கு கிடைக்காமலும் போகின்றது. கிடைக்காத மீன்களுக்கு பொரியில்லை என்றாலும் அதே குளத்தில் ஏதொ ஒன்று வயிற்று பாட்டுக்குகிடைக்கின்றது. தொடர்ந்து வாழ்கின்றது. மீன்களின் பசிசண்டையில் குளத்தில் மிதந்திருந்த வானத்தின் அழகு பிம்பம் தடுமாறிப்போனது. பக்கத்தில் ஒருவர் தண்ணீரில் இறங்கினார். இருகைகளாலும் அள்ளி முகத்தை கழுவினார். இன்னொரு முறை வலது கையில் அள்ளி தலைமீது தெளித்துக்கொண்டபோது தோளில் போட்டிருந்த சின்ன துண்டு குளத்தில் விழுந்து மிதந்தது. சற்று அவசரமாய் அதை எடுத்தபோது தடுமாறிப்போனார்."நகரீஷ்வரா உன்னைத்தான் பாக்க வந்திருக்கிறேன்பா" என்று சற்று மெல்ல குரலில் சொல்லிக்கொண்டு கரை ஏறினார்.பக்கத்தில் ஒரு தம்பதிகள் குழந்தைகளை தண்ணீர்பக்கம் வராமல் தடுத்தனர். தங்கள் தலையில் தண்ணீர் அள்ளி தெளித்துக்கொண்டு குழந்தைகளின் தலையை தங்கள் ஈரக்கைகளால் துடைத்தார். அப்பா மகனையும் அம்மா மகளையும் அழைத்துக்கொண்டு படியேறினார்கள். பக்கத்தில் முக்கியமான கடைகள் நிறைந்த பிரதான சாலை. கனரகவாகன பேருந்து சென்றதால் குளத்தில் படியேறியவர்கள் கால்கள் அதிர்வை உணர்ந்தது. சற்று வயதில் மூத்தவர்கள் தனித்தனியே வருகிறார்கள், போகிறார்கள். ஒரு முதியவர் பொறுமையாக படிகளை நிதானித்து மூன்றாவது படியில் இறங்கி மூழ்கினார். மேல் ஏறியவர் படியில் வேட்டியை அவிழ்த்துப்பிழிந்தார்.பிரித்து தோளின்மீது போட்டு கரையேறினார். ஏறியவர் நின்று கிழக்குப் பக்கமாக முழங்கால் முடங்கி வணங்கினார். பாதி வயதை கடந்தவர்கள் தான் அநேகர் கடவுள் இருப்பிடம் தேடிவருகிறார்கள். மனிதனுக்குசாவு இல்லை என்று ஆனால் அவரவர்களே கடவுள்களாய் இருந்து விட்டுப்போகலாம். குளத்திற்கு தெற்கில் பெரிய ஆலமரத்தில் இரண்டு பையன்கள் இரு வேருக்கிளைகளில் ஏறி எதையோ கிறுக்கிக்கொண்டிருந் தார்கள்.சிறிய பிள்ளைகளும் மரத்தில் ஏறும் படியாக மரக்கிளைகள் கிட்டத்தில் பிரிந்திருந்தது.மரத்தை சுற்றி மேடை இருந்தது. சிலர் அதில் உட்கார்ந்து ஆன்மீகத் தோடு தங்கள் குடும்பக்கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் மரத்தில் ஏறும் பசங்களைப் பார்த்து விட்டார். "டே...டே... வாளுப் பசங்களா,உழப்போரிங்க ஏறங்குங்கடா" என்று சத்தம் போட்டார். அவர் போட்டசத்தத்தில் குயிலோடு சேர்ந்து,கிளிகளும் கத்திக்கொண்டு பறந்தது. நகரம் போடும் சத்தத்தில் பறவைகள் அலறல் யார் காதிலும் விழ வில்லை.
உலக உருண்டைப்போல் அமைக்கப்பட்ட விளையாட்டுக்கூண்டில் இளம் தம் பதிகளில் ஒருவள் குழந்தையை ஒவ்வொருப்படியாக ஏற்றிப்பிடித்தாள். ஒரு கொம்பில் புடலங்காய், பூசணிக்காய், இதயம் வடிவில் பலூன் கட்டியிருந்தது. பலூன்காரன் அப்போதுதான் 'டர்ர்ர்..க்கி...' என்று பலுனை தேய்த்து சத்தம் எழுப்பினான். குழந்தை பலுன்காரன் சத்தம்கேட்டு திரும்பிப்பார்த்தது. மனித இயல்பே இயல்பில் முரண்படுதல்தானா? கேட்காத குழந்தைக்கு கொடுத்து பழ க்கப்படுத்துவது,கேட்கின்ற குழந்தைக்கு மறுப்பது.அடக்குவது.நான் பொய்யா சொல்றேன். அதன் அம்மா ஒரு பலுனை வாங்கி குழந்தையிடம் கிக் ...பிக்...என்று தேத்தாள் சத்தம் கேட்டு சறுக்கு மரம் விளையாடிக் கொண்டிருந்த பெரியப்பய்யன் ஓடிவந்தான். "அப்பா எனக்கு பலுனு "
"வேனா...வேனா....ஒடச்சிடுவ "பையன் கையையும், காலையும் உதைத்துக் கொண்டு அழுதான்.சற்று பொராட்டத்திற்குப் பிறகு வெற்றிகண்டு மீண்டும் சறுக்கு மரத்திற்க்கு ஓடினான். நீண்டு வளர்ந்து தலைவிரித்தாடும் ஈச்ச்சமரத்தில் குலைகள் அடுக்கியிருந்தது. புளியமரத்தில் வாழைகளாய் நீண்டு பழங்கள் தொங்கியிருந்தது. வெள்ளிமுலாம் பூசியதுபோல் இரும்பு மின்கம்பம் மின்னியது. கம்பத்தின் உச்சியின் கண்ணாடி குடுவையில் சூரியனை அடைத்து வைத்திருந்தது. சுச்சி போட்டதும் கோயில் எல்லைமுழுதும் பகலுக்கு மாறியது. பிரியாணி சாப்பிட்டு பிடாபோட்ட வயாக ஆலமரத்தில் படும் வெளிச்சத்தால் இலைகள் சிவந்திருந்தது. வெளிச்சம் பார்த்துவரும் வெண்தும்பிகளாக விளையாட்டுப் பிள்ளைகள் வருகிறார்கள். எதற்கோ விடுதலை வேண்டி குளித்த சோப்பின் வாசத்தோடு கருவறையை சுற்றுகிறார்கள். சிரித்த முகத்துடன் பார்க்கும் பூவும், அதன் வாசத்தொடும் வந்து கருவறையின் முன் நிற்கும் போது 'நகரீஸ்வரர் முகம் பிரகாசிக்கிறது. அருள் பொழிகிறார்' என்று பேசி நடக்கிறார்கள்.
கோயில் எல்லை சுவற்றிற்கும் புளியமரத்திற்கும் இடையில் கோணிகள் போட்டு முடியிருந்தார்கள்.அதை இருபகுதியாக்கி இருகுடும்பங்கள் இருந்தது கோயில் சொத்துக்களை பாதுகாக்கின்றதுபோல இந்த குடும்பங்களையும் தான் தான் பாதுகாக்கவேண்டியிருக்கிறது என்று பெருமையாக சொல்லிக் கொள்வார். இன்று குளத்தின் ஒரு மூலையிலிருந்து கோயில் இடத்தை பார்க்கின்றார். அவருக்கு மின்னல் கீற்றுபோல உதித்ததுதான் இந்த எண்ணம், அப்பா கொண்டாந்து சேத்துட்டுபோன சுடலை மட்டும்தான் எப்பவும்போல இருக்கிறான்.
குளத்தில் கால்பாகத்திற்கு மேல் சொழைப்புல் நல்ல வளமாக வளர்ந்திருந் தது. சுடலை புல் அறுத்துப்போட்டு நிமிர்ந்தபோதுதான், எஜமான் தன்னை கவணிப்பதாக உணர்ந்தான்.ஒரு விளையாட்டு அரங்கத்தில் அமரும் பென்சை போல குளத்தின் படிகள் இருந்தது. உறுதியான பாறைகளால் செதுக்கப்பட்ட படிகள் இன்னும் ஆழகுடன்தான் இருந்தது. மழை என்பவள் பருவமடையா தவளாகவே இருக்கிறாள். மக்களின் கஷ்டங்கள் அவளுக்கு புரிவதே இல்லை.
குளம் வள்ளல் பரம்பரைதான், தண்ணிரை எல்லாம் ஆவியாக்கிவிட்டு இன்று ஏதொ ஒரு முலையில் சேரும் சகதியுமாய் இருக்கின்றது. மழைகாலங்களில் சாலையிலிருந்து கழிவுகளும் ,சகதியுமாய் கலந்து விழுந்து குளத்தின் சேற் நல்ல உரமாகிப்போய் இருந்தது. குளத்தின் படிகளில் அங்கங்கே பூண்டுகள் முளைத்திருந்தது.குளத்தில் கார் டயர்களும் டூவிளர் டயர்களும் முழ்கிதன் கருமேனியை அழுக்கோடு காட்டியிருந்தது. பச்சைத்தவளைகள் கொழு கொழு வென்று பதட்டமில்லாத இடத்தில் பாதுகாவலனைப்போல் உட்கார்த்திருந்தது. சேற்றை தழுவிக்கொள்ளும் விரால்மீன் தன் பெருத்த உடலால் மென்மையான சேற்றை கலங்கடித்துச்சென்றது.
சுடலை குளத்தில் ஓரமாகபுல்லை அறுத்துக்கொண்டிருந்தான். எந்தகிராமம் சென்றாலும் ஆள் உயரத்துக்கு கழுத்து நிறைய தங்கத்தை கோத்ததுபோல் வயல்களில் பொன்னிவிளைச்சல் கம்பீரமாய் நின்றிருக்கும்.சுடலை இன்று கோயில் குத்தகைதாரரின் பசு மாடுகளுக்கு வயல்வெளி தேடிச்செல்லாமல் குளத்திலேயே அறுத்துக்கொள்வது சற்று சுலபமாய் இருந்தது. குத்தகைதாரர் கோயிலின் மொத்த இடங்களையும் பார்த்தார். 'எந்த தீர்மானமும் இல்லாமல் காலம் ஏன் இப்படி? எங்கேதான் ஓடிக்கொண்டிருக்கிறது ஒரு பதினைந்து வருடம் இத்தனைச்சிக்கிரத்தில் கடந்தகாலமாய் மாறிவிட்டதா?' ஆலமரப் பக்கம் வந்தார். ஒரு கிளையில் பெண்ணின் முகமும், இன்னொரு கிளையில் ஆங்கில எழுத்தும் உப்பி மரத்தோடு அதுவும் வளர்திருந்தது. மரத்தைச் சுற்றியிருந்த மேடை உடைந்து சிதைந்திருந்தது. அதில் இருந்த ஈச்சமரம், முதியோர் இல்லத்தை தேடுகிற வயதை எட்டியிருக்கலாம். தினந்தோறும் உதிரும் சருகுகளை கொளுத்தி கொளுத்தி புளிமரத்தின் ஒரு பகுதி தீந்து இருந்தது. அதன் காய்கள் காசநோய்க்கு ஆளாகியிருந்தது.சறுக்குமரத்தில் பூசியவண்ணங்கள் இல்லை.அதன்தாங்கிகள் இடுப்பொடிந்த நிலைதான். உலக உருண்டைபோல் செய்திருந்த விளையாட்டு சாதனம்,இப்போது தெருஓர பயித்தியக்காரனாக கேட்பாரற்று கிடந்தது. மைதானமாய் இருந்த நடுப் பகுதியில் குச்சிகளை நட்டு பிளாஸ்டிக்காகிதங்களை போட்டு முடியிருந் தார்கள். கோழிகூண்டை விட சற்று உயரமாய் இருந்தது இரு குடும்பங்களும். ஒருவாசலில் கந்தையை போட்டு இரு குழந்தைகளை கிடத்தியிருந்தார்கள். ஒரு குழ்ந்தை கை காலை உதைத்துக்கொண்டு மரத்தையே பார்த்தது. இன்னொன்று பக்கவாட்டில் படுத்து தூங்க்கிக்கொண்டுடிருந்தது.குப்பைகளை கொளுத்திய கரியில் இன்னும் இரு குழதைகள் விளையாடிக் கொண்டிருந்தது. உடல்முழுக்க கரி திட்டு திட்டாய் அப்பிக் கொண்டு கிடந்தது.அக்குழந்தைகளை குளிக்கவைக்க மாட்டார்களா என்ற கேள்வியைத்தான் எழுப்பும். வயிறு முட்டிக்கொண்டு இருந்து. ஒருவள் பக்கத்தில் அடுப்பில் சாப்பாடு செய்துக்கொண்டு இருந்தாள். அப்போது ஏதொ கரிக்கந்தைய இடுப்பில் சொருகி இருப்பதுபோல் ஒரு குழந்தையை பிடித்திருந்தாள். சந்தை முதலாளிகளின் வியாபாரக்கூச்சல் சாலையில் கவர்ச்சியான வாகனத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த பெண்கள் பொத்தலும் கந்தலையுமே உடுத்தியிருந்தார்கள்.கழுத்தில் மஞ்சள் கயிறு புத்தம் புதிதாக இருந்தது.
சுடலை புல்லு கட்டை குத்தகைதாரர் விட்டின் வாசலில் போட்டு பசு மாடுகளுக்கு கொஞ்சம் போட்டான்.அவன் தலைமயிர் கருப்பும்,வெள்ளையும் கலந்து சுருள் சுருளாய் இருந்தது. குத்தகைதாரர் முகம் சற்று விரக்தியைக் கண்டிருந்தது. சுடலையின் எதிர் புறமாக வந்தார்."சொடலை சாப்பிட்டுவடா. அந்த வெறகுலாம் பொளந்துடு, உன் பொண்டாட்டிய சாணிலாம் வாரிட்டு எடத்தலாம் சுத்தம் பன்னச்சொல்லு. நானுபோயி குத்தகப்பணம் கட்டிட்டு வந்துடுறேன்."
சுடலை சங்கடத்துடன் "சாமி சேட்ட ஊட்டு கல்யாணமா ,என்பொண்டாட்டி லைட் தூக்க போறா .அவ போட்டும் நானு ஒண்ணா மாட்டுக்கொட்டாவ சுத்தம் பண்ணிடுறேன்."
"அப்பிடியா செரி செரி பாத்துக்கோ, சொடல முக்கியமானத மறந்துட்டேன். உங்க அண்ணன அனுப்பி நம்ம செட்டியார் ஊட்டு தோட்டத்துல அடிக்கடி பாம்பு வருதாம்.பக்கத்திலதான் அதன் பொந்து இருக்குதாம், அத புடுச்சி அடிச்சிப்போட்டு வந்துடச்சொல்லு"
சுடலையிடம் சொல்லிவிட்டு குத்தகைதாரர் கிளம்பும்போது. சுடலையின் அண்ணன் மகனும் அவன் மனைவியும் வந்தார்கள். துணியில் கட்டியி ருந்தது.மீனாகதான் இருக்கும் என்பதை குத்தகைதாரர் விளங்கிக்கொண்டார். இருந்தாலும் தன் எஜமான் தனத்தை வெளிப்படுத்தினார். "டேய் இங்க வாட சயந்திரம் நம்ம செட்டியார் வீட்டுத்தொட்டத்துல பாம்பு வருதாம், அது அங்கி யேதான் இருக்குதுபோல அத புடுச்சி அடிச்சிட்டு வந்துடு.வரட்டுமா."என்று முடிப்பதற்குள்.
"இல்லபா நானு மீனு புச்சாந்துகிறேன், அத போயி வித்துட்டுவரனும்.நாங்க சாப்பிட்டு போலாம்னு வந்தோம்.எங்கப்பா வந்தா அனுப்புங்கோ" என்று மனைவியுடன் நடந்துக்கொண்டே இருந்தான்.
சற்று தொலைவில் சென்றுவிட்டசுடலையை சத்தமாக அழைத்த குத்தகை தாரர் "டேய் சொடல பாத்தியாட. நான் சொல்றதை எங்கனா மதிக்கிறானா பாத்தியா" கோயில் எடத்துல இருந்த எல்லாரையும் காலிபண்ணிட்டேன்
உங்களை மட்டும் யேண்டாவச்சிங்கிறேன். ஒரு வருஷமா ரெண்டு வருஷமா பாஞ்சிவருஷம். யாருநீங்க குடியிருக்கும் சேத்து வாடகைகட்டுவான்"
கரியநிறத்திற்கு மாறியிருந்த இரண்டு வெள்ளை கோழிகுஞ்சி பக்கத்தில் மலைபோல கொட்டிய சாணிக்குள் இரைதேடி ஓடிவந்தது."சாமி சின்ன பய்யன் தெரியாம சொல்டான் பெர்சா எத்துக்காதிங்க."
"இல்ல சொடல அந்த பையனுக்கு இன்னா? ஒரு இருபது வயசிருக்கும் இல்ல. ஒரு நாலு வருஷமாவே பய்யன் ஒரு மாதிரியாதான் இருக்கான்.தெனாவட் டான பார்வை உனக்காகவும் ,உன் அண்ணனுக்காகவுதான் பாக்குறேன். நானு உங்கள யாரோனாப்பாக்குறேன்.எந்த நல்லது பொல்லது செய்தாலும் உங்கள உட்டுட்டு சாப்புடுறோமா.வெளி நாட்டுல வேலசெய்துங்களே என் ரெண்டு பசங்க அதுங்க கூட எப்பப்பாரு உங்கள விசாரிச்சிகினுதான் கெடுக்குதுங்க."
"சாமி எங்கண்னுக்கு, எனுக்கு முன்னாடி கல்யாணம் ஆனாகூட எனக்கப்புறம் ரொம்ப நாள் கழிசிதான் கொழந்த பொறந்தது.அதனால பையன செல்லமா வளத்துடாறு. நானு அண்ணா வந்துதும் அனுப்புறேன். நீங்க அதலாம் மன்சில வெச்சிக்காதிங்க"
குத்தகைதாரர் முகம் மிகவும் இயல்பாயிருந்தது."இல்ல சொடல நானு முடிவுபண்ணிட்டேன்.உங்க அண்ணன் அவன்பொண்டாட்டி,நீ உன் பொண் டாட்டிமட்டும் இருங்க.அவனும் அவன் பொண்டாட்டியும் இருக்கக்கூடாது. தோ உங்காட்ட சொல்லிட்டேன்.உங்க அண்ணனாண்டையும் சொல்லிடுறேன். அவுங்க இந்த எடத்துல இருக்கக்கூடாது. நானு போயி குத்தகப்பணம் கட்டிட்டு வந்துடுறேன்."வேகமாகச்சென்றார்.
சாணத்தில் பெரிய பெரிய புழுவாக இருந்தது.இரு கோழிக்குஞ்சுகளுக்கு நல்ல இரை கிடைத்தது. சுடலையின் மனைவி பாத்திரத்தை கழுவி ஊற்றினாள்.ஒரு கோழிக்குஞ்சு நனைந்தது. அலறி குதித்த குஞ்சு சிலுப்பியது. சற்று தள்ளி உட்கார்ந்திருந்த சுடலையின் பார்வைக்கு இப்பொது கோழிக்குஞ்சி வெள்ளை
யாக தெரிந்தது.
"சித்தப்பா ,நாங்க மீனு வித்துட்டு அப்பிடியே சினிமாவுக்கு போயிட்டு வரோம் அப்பவாண்ட சொல்லு "என்றான்.
அண்ணன்மகன் வேட்டியும் சற்று வெள்ளையாக இருந்தது. நாம ஒருநாளும் இப்படி வெள்ளையா கட்டினதேயில்லையே! எவ்வளவு காலம் கடந்து போச்சி, அண்ணன மகன் சொன்னது சரிதானோ? நான்கூட இந்த வார்த்தையை பாஞ்சிவருஷத்துக்கு முன்னாடி சொல்லியிருக்கனுமோ? என்று தனக்குள் நொந்துக்கொண்ட சுடலை "டே ராஜா வாங்கடா குள்சிடுங்க, ஒடம்புலாம் அயுக்கா இருக்குதுபாரு" என்று முதல் முறையாக தன் பிள்ளைகளை குளிக்க அழைத்தான்.
-------------------------------------------------

1 comment:
தங்கள் பதிவை பார்த்தேன்
Post a Comment