Thursday, May 1, 2014

சிறுகதை,

                                      மூன்று, ஒன்று, இரண்டு.

நான்காவதாக ஒருவர்  அந்தக் கிராமத்திற்கு வந்திருந்தார். அவரின் முத்திரைப் பதிக்கும் தந்திரங்கள் பற்றியும், பேசுவதெல்லாம் நேர்மையின் உண்மையான குழைந்தைகள்போல் இருக்கும். ஆனால், ஒவ்வொரு அசைவிலும் தனக்கான லாபத்தைத் தேடிக்கொண்டே இருப்பார். பழகும் நபரிடம் பணம் இருக்கும் நோக்கம் தெரிந்தால் வாய்க்கூசாமல் லட்சங்களைக்  கடனாகக்கேட்பார். மிக முக்கியமான காரியத்திற்கு தேவையானதாகக்கூட இருக்காது. ஏதேச்சியாக விட்டு பார்க்கலாம் என்ற நோக்கம் இருக்கும். பல நேரங்களில் அவர் கேட்டது போலவேக் கிடைத்துவிடும். கிடைத்ததை வைத்து செல்வத்தில் மிதப்பவர்களுக்கு இணையாகத் தன் குடும்ப பாரமரிப்பைப் பேணுவார். சில நேரங்களில் பிறருக்கு உதவுவதுபோல் செய்வார். வெகு சீக்கிரத்தில் அவர்களிடம் இரட்டத்தனையாகப் பெறாமல் இருக்கமாட்டார்.

ஒத்திகை என்பதே இல்லாமல், நேரடியாகவே  மனிதர்கள் முன் நீதியின் நாயகன் வேடத்தை அவ்வளவு எதார்த்தமாகச் செய்வார். வாரம் முழுமையாகப் பழகிய எந்த ஒரு மேலோட்டமான நீதி, நியாயம் பேசும் நபரும், அவரைப்போல் மனத்துயரப்படாமல் யாராலும் மனிதனை பாதிக்கமுடியாது‘. என்று அவருக்கு நெருக்கமான நபர்களே அக்கிராமத்தின் மூன்று, ஒன்று போன்ற நபர்களுக்கு சொல்லியிருந்தார்கள். 

இரண்டு என்பவர், நான்காவதை  அணு, அணுவாக கண்நோக்கிக் கொண்டிருப்பவர். 2008க்குப் பிறகு  நான்காவதின் இயல்பான பூதம் வெளிவரத் தொடங்கின. அவர் செயல் கட்டுப்பாடற்ற  எல்லைகளைக் கடந்து, அநியாத்தின் மூட்டைகள் பிதுங்கிக்கொண்டிருந்தது.

அடைப்புத்தாங்காமல் அநியாயத்தின் மூட்டையின் முடுச்சுகள் தளர்ந்து அவிழ்கிறது. ஆனால், அவைகள் திறமையற்ற, தற்பெருமைக்காக சடுதியில் ஏமார்ந்து போகின்ற நிர்வாகிகளாலேயே மீண்டும்.. மீண்டும் திருப்பிக் கட்டப்படுகிறது. என்பதையும்  இரண்டு நன்கு அறிந்து வைத்திருந்தார்.

கிராமத்தில் அத்திப் பூத்தார்போலதான் அந்தத் தர்க்கம் வாய்க்கும். மூன்று, முதிர் வயதை எட்டியவர். இருக்கையில் உட்கார்ந்திருந்தார். போனவாரம் நகரத்தில் இருக்கும் இரண்டாவதின் வீட்டிற்கு வந்தபோது மருத்துவரின் ஆலோசனைப்படி வாங்கித் தந்த மெண் செருப்பு இன்னும்  புதிய தோற்றத்துடன்  இருந்தது. கருஞ்சிவப்பு, புளு கலந்த செருப்பின் பெயர் ஆங்கில எழுத்தில் அழுக்குப் படியாமல் இருந்தது. 

மூன்று, செருப்பை மிக பாதுகாப்பாய் வைத்திருப்பதாகவும், தான்  ஒன்றுக்கும், இரண்டுக்கும் தேவையில்லாமல் செலவு வைப்பதில்லை என்பதாகவும் இருந்தது. சற்று நேரத்தில் வீட்டின் குட்டிகளில் ஒன்றை கத்தி அழைத்தார். சின்ன வாண்டு முகத்தைச் சுழித்துக்கொண்டே வந்தது. “இது மதிக்கலபா“ என்று சொல்லிவிட்டு “போடி உள்ளத் தைலம் இருக்குது பாருமா கொஞ்சம் எடுத்தா“ என்றார்.

அவள் “ஆளு வந்தாப் போதும்  ஒடனே  ஆக்ஷன் தொடங்கிடுவார்“ என்று முணகிக்கொண்டேப்  போனாள்.  அவள் சொன்னது மூன்று, ஒன்று, இரண்டு எல்லோருக்கும் நன்றாகக்கேட்டது. ஒன்று, இரண்டு மட்டும் லேசாகச் சிரித்துக்கொண்டார்கள்.  மூன்றுக்கும் கேட்டது ஆனால், வெறுமனே இருப்பதைத்தவிர எதையும் செய்யமுடியவில்லை. 

ஒன்று, இடப்பக்கமாகவும்,  மூன்று வலப்பக்கமாகவும், சற்று கீழ் இறங்கி நடுவாக இரண்டும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த  கோணம் ஃ கை தலைகீழாகப் போட்டால் வரும். 

ஒன்று, தன் பேச்சைத் தொடங்கி பேசிக்கொண்டிருந்தார்.  மூன்று, முகத்தைக் கோணிக்கோணி அடிவயிற்றில் தைலம்  தேய்த்ததைப் பற்றி பெரியதாக வருத்தம் எதுவும் இல்லை. மூன்று, பல நேரங்களில் தன்னை வருத்திக்கொள்வது இயல்புதான் என்பதுபோல் இருந்தார்.

இரண்டு  மட்டும் தைலம் தேய்க்கும் லாவகத்தை அறிந்து மீண்டும் எந்த மருத்துவரிடம் அழைத்துச் செல்லப் பணிக்கப்போகிறாரோ என்று லேசான பயம் இருந்தது.

“நம்ம சர்ச்சிக்கு நான்காவதாக வந்திருக்கிறாரே, அவர், சில விஷயங்களை நல்லாத்தான் செய்யிறார். ரெண்டு நாளுக்கு முன்ன ஒரு விஷயம் பேசினாரு. பேச்சு ரொம்ப கரைக்டாத்தான் இருக்குதுபா“ என்றார் ஒன்று.

மூன்று சற்று ஆவேசத்துடன் “என்னத்தபா, கரைக்டா பேசுறாரு. அந்தாளாக்கூட வேலை செய்யிறானுங்களே, அந்த மூணு பசங்க ஒரு ஞாயிறுனா கோயிலுக்கு வரானுங்களா? கொஞ்சங்கூட கடவுள் பயம் இல்லாத நாயிங்க. நாங்க கிறிஸ்த்தவன்னு டவுன்ல போயி  கிறிஸ்த்தவன் பள்ளிக்கூடத்துல வேலை வாங்கிக்கவேண்டியது இங்க வந்து மாரியாத்தாவுக்கு கூவு ஊத்துறது. குடிச்சிப்புட்டு மோளம் அடிக்கிறது. இவனுங்களாம் மனுஷங்களாபா. அந்தப் பசங்களத்தான் இந்தாளு தலமேல தூக்கி வைச்சிங்கிறாரு.“

ஒன்றுக்கு பித்தம் தலைக்கேறியது “ இப்பிடித்தாம்பா, இந்த வீட்ல ஒவ்வொரு நாளும் வயித்துல நெருப்பக் கட்டிக்கொண்டு இருக்கவேண்டியுள்ளது. வயசான நேரத்துல எவன்னா எப்படின்னாப் போட்டும் நாம பாட்டுக்குணு கெடக்குறமானு இல்லபா. அந்தப் பையன் இப்பிடிப் போறான். இந்தப் பயைன் பொறிக்கித்தனம் பண்ணுது. அப்படியேச் சொல்றாருபா. ஏதாவது ஒண்ணு துடுக்குத்தனமா கேட்டுட்டா என்னாவுறது. அவன், அப்பா, அம்மா சம்பாதிக்கிறாங்க. சாப்பாடு போடுறாங்க. குடிக்கிறான். சீட்டாடுறான் நமக்கென்ன. மத்தவங்கள குற்றவாளியாத் தீர்மாணிக்க நாம யாரு.“ 

மூன்று இந்த வாசகமெல்லாம் தமக்குத் தெரியாததுபோல நம்மிடமே சொல்கிறான் என்பதாக நினைத்திருப்பார் ஒன்று  சொல்லிக் கொண்டிருக்கும்போதே மூன்று பார்வையைச் சிறு அலட்சியத்துடன் வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். அந்தநேரம் அநேகமாகத்தன் வாலிப சிந்தையில் இருந்திருப்பார். 

இரண்டுக்கும் சற்று சங்கடமாகத்தான் இருந்தது. ஒன்றின் வார்த்தை சரியானதாகப் படவில்லை. ஆனால், முற்றிலும் தவறு என்றும் சொல்லிவிடமுடியாது. இருந்தாலும் அவருக்கு சில வழிமுறைகள் தெரியாமல் இருக்கலாம் விளக்கவேண்டியுள்ளது என்று நினைத்து பேசினான் 

“சரி. எதிராளி குற்றவாளியாய் இல்லாமல் இருந்தால் ஒருவேளை நீ சொல்வதில் நியாயம் இருக்கிறது.  குற்றவாளியாய் இருக்கிற பட்சத்தில். அக்குற்றத்திலிருந்து அவன் வெளியேற வேண்டும் என்ற அடிப்படையில்கூட சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. சரி. நமக்கு பாதிப்பு வரலாம் என்றளவில் மற்றவனை குற்றவாளியாக நாம் சொல்லத் தேவையில்லை என்கிறாய். அந்தக் குற்றவாளியை கண்காணிக்கும்  நம் குடும்பத்தைச் சாராத வேறு ஒருவன். குற்றவாளிதான் என்று மூர்க்கமாக வாதாடுகிறான். அது சரியானதா?  என்று ஒன்றைப் பார்த்து, இரண்டு கேட்டார்.

மூன்று சற்று கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒன்று எப்போதும்போல் இயல்பாக “ ஏன்பா, நீகூட என்னபா புரியாமப் பேசுரே. மத்தவன் சொல்றான்னா. அதற்குறியதை அவன் அனுபவிக்கப்போறான். நமக்கென்னத் தலையெழுத்து. சப்போஸ், இவரு ஒண்ணு சொல்றாரு. எதிராளி சின்னத்தனமா ஒண்ணு சொல்லுவான். எனக்கு கோபம் வரும். நான் போயி அவனக்கேக்கணும். அப்புறம் மண்டைய ஒடச்சிக்கிணு அங்கபோய் நிக்கணுமா?.

ஒன்றின் வாதத்தில் ஒருதலைத் தன்மையான நியாம்தான் இருக்கிறது என்று இரண்டு உகித்ததால்  வேகு லேசாக மடை மாற்றினார்.

“நாலாவதாக வந்தவர் ஏதோ முக்கியமாகப் பேசினார் என்றாயே“

ஒன்று முழு நம்பிக்கையுடன் உரையாடிக் கொண்டிருப்பதால் இரண்டின் மடை மாற்றத்தால். எந்தத் தடையும் இல்லாமல் வாதத்திலிருந்து வழுவி. இரண்டு நினைவுபடுத்திய விஷயத்திற்கு வந்துவிட்டார். “அதான்பா, நம்ம வீட்டுக்கு மேற்கால பள்ள மது ஓரமா மூணு வீட்டு மணை இருக்குதாம். அவனுங்க மூணு பேரும் இந்துங்க. அதுல ஊர் பெருதாணக்காரனும் இருக்கிறான். நான்காவது அவர்களிடம் பேசினாராம். ‘என்னய்யா, ஊர்காரங்க நீங்க. கிறிஸ்த்தவன ஒண்ணும் மதிக்கிறது இல்ல. இந்த ஊர்ல முப்பது பேரு இந்துங்கனா. முப்பதுபேரு கிறிஸ்த்தவனும் இருக்கிறோம். ஆனா ஏரியில, குட்டையில  மீன் ஏலம் உட்டா. நீங்க மட்டும் எடுத்துக்கிறீங்க. வருஷா வருஷம் ஏரிக்கரையில் இருக்கிற மரத்தையும் ஏலம் உட்டு நீங்களே எடுத்துக்கிறீங்க.  புளியம்பழம் ஏலம் உட்டு அதையும் எடுத்துக்கிறீங்க. ஏறக்குறைய சரிபாதியா இருக்கிற எங்களுக்கு எதிலாவது பங்கு தாறீங்களா? நாங்களும் இந்த கிராமத்திலதான இருக்கிறோம்னு. சோஷியலா கேட்டு இருக்காரு. அவனுங்களும், ‘இன்னாய்யா கிறிஸ்த்தவங்க  இது வரைக்கும் எதையும் கேக்கல. நாங்களும் கொடுக்கல. இருந்தாலும், யாரு. எல்லாம் மாமன் மச்சானுங்கதானே.  வேணும்னா இந்தப் பள்ள மதுவாண்ட இருக்கிற மூணு மணையை கிறிஸ்த்தவங்களுக்குனு கொடுத்துடுறோம். வைச்சிக்குங்க. நாங்க எனாமா எழுதிக்கொடுத்துடுறோம்“ என்று மணைக்காறர்கள் நான்காவதிடம் சொல்லியிருக்கிறார்கள். நான்காவது என்னிடம் சொன்னார்.  இந்த மாதிரி பேசினேன். இந்துக்காரங்க கோயிலுக்கு சில மனணகளைத் தாரேன்னு சொல்றாங்க.  நம்ம ஆளுங்க சிலராண்ட  பேசிட்டு. அவங்களாண்ட  இருந்து எழுதி வாங்கிக்கலாம்.  

ஒன்று நான்காவது யோசனையில்  அநேகமாகக் கிரங்கிப்போய் இருக்கிறார் நான்காவதின் யோசனைகளைச் சொல்லி முடிக்கும் முன்னே மூன்றிடம் தாவினார். ஒருவேளை நான்காவது உன்னிடம் இந்த யோசனையைச் சொன்னால் நீ எந்த மறுப்பும் சொல்லாத. செய்யிங்கையானு சொல்லிடுபா“ என்று மூன்றாவதிற்கு யோசனைச் சொன்னார். கேட்டுக்கொண்டிருந்த இரண்டாவதிற்கு நான்காவதின் செயல் பெரிய விஷயமாகப் படவில்லை. இதைவிட சாமர்த்தியமாகப்பேசி எதிர் நபரை சடிதியில்  வீழ்த்தி விடுகின்ற பல வித்தைகளைக் கையாளக் கூடியவர்தான். அச்செயல் எல்லாத் தரப்பிலும் நியாயத்தைக் கடைபிடிக்கிறதா என்றால் நிச்சயம் வெகு சீக்கிரத்தில் ஏமாற்றம்தான் மிஞ்சும்.‘ என்று இரண்டு யோனைசெய்துக்கொண்டார்.

எதிர்பாராவிதத்தில் மூன்று, “அட, அந்தாளு டகுளுபா. அவுரு இப்படிச்சொன்னார், அப்படிச் சொன்னாருங்கிற“

ஒன்றுக்கு கோபத்தை அடக்க முடியவில்லை. ‘இவங்க எல்லாம் என்னதான் நெனைக்கிறாங்க. நம்மை அடி முட்டாளுனு நெனைக்கிறாங்களா? இந்த ஊர்ல என்னப்போல குடும்பத்த கவனிக்கிறவன் யாரு. ஒருத்தனக் காட்டச்சொல்லு. இந்த வயசு வரைக்கும் ஒருத்தனாண்டப் போயி ஒத்தப் பைசா கடன் கேட்டேன்னு சொல்லச் சொல்லு. என் வீட்டுப்படி ஏறி கடன் கேட்காதவன் ஒருத்தன் இருக்கானா. நாய்க்கன் கூட சில நேரம் என்னாண்ட வருவாங்க. அவ்வளவு சிக்கனமா என் உழைப்பை வச்சி வாழுறேன். நான் என்ன முள்ளமாறியா? எவனையாவது ஏமாத்தி சேக்கிறேனா? உலகம் என்னவெல்லாம் தில்லு முல்லு பண்ணி பொழைக்குது தெரியாதா? பதினைஞ்சு வருஷம் டெல்லியில வேலசெய்தேன். சென்னை, செங்கல்பட்டுனு முக்கிய நகரங்களில் இப்பவும் செய்றேன். உத்தியோகத்திலும் அவ்வளவு நல்லப்பேரு. ஆனா, இந்தக் கெழவன்கூட நம்மப் பேச்சில வயப்பட மாட்டேங்குதே‘ என்று நினைத்திருப்பார்போல சற்று இடைவெளிவிட்டு குரல் கம்மி “ எனக்கு ஒண்ணும் தெரியாத மாதிரி சொல்லாதப்பா. அந்தாளு பேசினாரு, மணைக்காரன் குடுக்கிறோம்னு சொல்றாங்க. வந்தா நல்லதுதானே. நாளைக்கு கோயிலுக்கு சொந்தமாயிருந்தா. ஏதாவது கூடம் மாதிரிக்கூடத்தான் கட்டிக்க,  பின்னாடி வரவங்களுக்கு பயன்படப்போகுது. என்கிற மாதிரிதான் நான் யோசித்தேன்.“

இரண்டிற்கு வாய்ப்புக் கிடைத்தது. “சரிணா, நீ யோசிக்கிறது நல்லதுதான். அதைத் தப்புனு சொல்லல. ஆனா, நீ கொஞ்சம் ஜாக்கிறதையா இருக்கணும். அந்தாள் மணை சம்மந்தப்பட்ட ஆளுங்களாண்ட பேசி முடிச்சிட்டு எழுதி வாங்கின பிறகு ஆயரிடம் சொல்லிக்கலாம் என்பது மிக மிகத்தவறானது. இங்க இருக்கிற ஜனங்களுக்கு நான்காவது பெரிய வாத்தியார் மாயையை ஏற்படுத் தியிருக்கிறார்கள். இப்போது அங்கியில் வேறு இருப்பதால் கடவுள்  பக்த்தர் என்கிற நம்பிக்கை வேறு குடிகொண்டிருக்கும். ஆக, நான்காவதின் சாதுர்யமான பேச்சை நம்பி மயங்கிவிடுவார்கள்.  உண்மையிலேயே யாருக்கும பாதகம் இல்லாமல் செய்ய நினைத்திருந்தால், மணைக்காறர்களிடம் பேசியபிறகு ஆயரிடம், அந்த மக்களின் விருப்பத்தை தெரிவிக்கவேண்டும். ஒரு வேளை ஆயர் சம்மதித்தால், மணை தருபவர்களை ஆயரிடம் கூட்டிச்சென்றால், இருதரப்பிற்கும் நல்ல புரிதல் ஏற்படும்.  இதைவிடுத்து தன்னுடைய சாம்ர்த்தியத்தை மட்டுமேக் காட்டவேண்டும் என்று ஏதோத் திருட்டுத்தனமாக வாங்குவதுபோல் காதுங்காதும் வச்சதுபோல் முடிச்சிக்கலாம் என்பது சரியான செயல் அல்ல.  அப்படியே எழுதி வாங்கும் சூழல் வந்தால் அனைத்தையும் சர்ச்பெயரில் எழுதிவாங்குங்கள். நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் சபையார்தான் செய்தாங்க என்று வாய்க்கூசாமல் சொல்லிவிடுவார்“

ஒன்று “ ஆமாம்பா, நான்கூட சொன்னேன். என்னையா, ஐயரை காணாத நாம பாட்டுக்கு எப்படி எழுதிவாங்கிறதுனு கேட்டேன். அதுக்கு நான்காவது  அய்யா, அந்த அய்யிரு நாடாருய்யா. நம்ம எதைச் செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிப்பாரு. நாம ஒரு நல்லத செய்ய உடமாட்டாரு. மணையை எழுதி வாங்கிட்டு  அப்புறம் சொல்லிக்கலாம். சபையில் இருக்கிற நிங்க இன்னும் ரெண்டுபேரு, உங்க அப்பா சரின்னாப்போதும். நான் பாத்துக்குவேன்னு சொல்றாருபா“

இப்போது இரண்டுக்கு கோபம் புடுங்கிக்கொண்டது. “ இவன் செய்யிறது அய்யோகியத்தனம் அதை மறைக்க ஜாதியச் சொல்றாரா. எவ்வளவு கேவலம் பார்த்தியா?  மனுஷனுக்கு பெறந்த ஊருமேல ஒரு பாசம் இருப்பதுபோல. அவனவன் ஜாதிமேலயும், உயர்வுத் தாழ்விலும் ஒரு நேசம்  இருக்கத்தான் செய்யும். ஆனா அதை,  உடல் பலத்துக்காக ஊரும், சத்து பொருளாக பாவிக்கக்கூடாது, தினந்தோறும்  கழிக்கும் மலமாகக் கருதிக்கொள்ளவேண்டும்.  ஆயர் அப்படி ஒண்ணும் இல்லை. எல்லாரையும் நேர்மையின் அடிப்படையில் ஒன்றுபடுத்தி கொண்டுசெல்கிறார். ஆனால் பொதுவாக பக்தியின் பெயரால் மனித சுதந்தரத்தை ஒடுக்கப் பார்ப்பார். அது அவர் மட்டும் செய்வதில்லை.  மதநிறுவனமாக அனைவரும் அதைக் கையாள்கிறார்கள்  என்பது உண்மைதான். இருந்தாலும் நான்காவது அப்படிச்சொல்ல எந்த அருகதையும் இல்லை.“  

மூன்று “எப்பா, காலம் ரொம்பக் கெட்டுப்போச்சி. ஒருத்தனும் கடவுளுக்கு பயந்து வேல செய்யவில்லை. வரும்போதே இதப்பெறட்டிக்கலாமா, அதைப் பெறட்டிக்கலாமானுதான் பாக்கிறான். தம்மா தம்மா துண்டுலாம் என்ன அக்குறும்பு பண்ணுதுங்க. நிறவேறுதுபா. கடவுள் சொன்ன வார்த்தைங்க ஒண்ணு ,ஒண்ணா நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

ஒன்றுக்கு முகம் மாறியது. அதை கவனித்த இரண்டு “ ஏம்பா, நீ. இன்னும் பழையக்காலத்தின் வாழ்வு முறையிலேயே இருக்கிற. உலகம் எவ்வளவு முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. சின்னப் பையன்கூட புத்திமதியத் தூக்கிக் குப்பையில போடு என்கிறான். இந்தக்காலத்துல நமக்கு மரியாதைத் தருவான் என்றெல்லாம் எண்ணக்கூடாது“

மூன்று “ஆமாம், ஆமாம் அது என்னவோ உண்மைதான்“ என்று ஆமோதித்ததார்.

ஒன்று  “ஒரு காலத்துல எங்க ஊத்துவாங்களோன்னு காத்துக்கிடந்தான். இப்ப அவன் புள்ளைங்க கம்பெனி ,அது இதுன்னு சம்பாதிக்குதுங்க. அவன்போயி மதிக்கலனா எங்க மதிப்பான்.“

இப்போது மூன்றுக்கு கோபம் வந்துவிட்டது.  “ஹிக்கும் ஊர்ல கீற பசங்களாண்ட போயிடுற. உன் பிள்ளைங்க மதிக்குதா? என்னடா வீட்ல வயசானவன் இருக்கிறானே இன்னாத் தாத்தா என்னா, ஏதுன்னு கேக்குதுங்களா? நாலு பசங்க நாலு வழியாப் போறானுங்க. நீ அதுங்கள கவனிக்காம உட்டுட்ட எனக்கென்னக் கெடக்குது போய் சேரப்போறேன். அய்யோ அவன் புள்ளைங்களானு உன்னதான் குற்றம் சொல்லப்போறாங்க.“

பேச்சு வேற எங்கோ திசை மாறுது என்பதை ஊகித்த இரண்டு“ பசங்களாண்ட ஒரு கட்டத்துக்குமேல அதையெல்லாம் எதிர் பார்க்க முடியாதுபா. உன் இயல்பில் பசங்க இல்லாதப்ப கண்டிப்பா சகஜமா இறுக்கமாட்டானுங்க.  அவர் சொல்லாம இருப்பாரா? உனுக்கு மைறைவா பசங்களாண்ட சொல்லிக் கிணுதான் இருப்பார்.“ இரண்டின் இந்தப்பேச்சு ஒன்றுக்கு சற்று கோபம் தணிப்பதாக அமைந்தாலும். முழுமையாகத் தணியவில்லை. 

ஒன்று “இப்பிடித்தாம்பா, என்ன டெங்ஷனாக்கி விட்டுடுறாரு. இவுரு உன்னும் அந்தக்காலத்திலேயே இருக்கிறாருபா. நான் புள்ளைங்களை கவனிக்கலையாம். சொல்றாருபாரு. ஒவ்வொரு நேரத்துல தூக்கிப்போட்டு மிதிக்கிறேனே அப்ப மட்டும் ஓடியாந்து குறுக்க நின்னுக்கிறியே. அப்பத்தெரிலியா, நான் பிள்ளைகளைக் கவனிக்கிறது. நாம புத்திமதி சொல்றோம். கேட்காம போறான். போட்டோம். கடவுள் கொடுத்தார். கடவுள் எடுத்தார்னு சொல்லிட்டு போறேன்.“ இதுவரை இரண்டின் முகத்தைப்பார்த்து சொல்லிக் கொண்டிருந்த ஒன்று இன்னும் கோபம் தணியாதவராக மூன்றைப் பார்த்துச் சொன்னார் “அந்தக்காலத்தில இருந்து, இந்தக்காலம் வரை நாங்க இருந்தா மாதிரியே எங்கப் புள்ளைங்களும் இருப்பாங்களா என்ன?

ஒன்றுக்கு மனதளவில் சற்று வருத்தம் வந்துவிட்டது என்பதை ஊகித்த இரண்டு. இருவரையும் இயல்பு நிலைக்கு வரவேண்டி பேசினார். “நம்ம கட்டுக்குள்ள இருக்கிற இப்ப மட்டுமில்ல அந்தக்காலத்திலிருந்தே பொது வேலைகளில் தன்னை இணைத்துக் கொண்டவர். அங்க நடக்கும் நியாய அநியாயங்களுக்காக அந்த இடங்களிலேயே பேசியவர். இப்போதும் அப்படித்தான் இருப்பார். அதுதான் அவர் குணம். இடையில் மாறிவிடாது. வேண்டு மென்றால் நியாய அநியாயங்களை அவர் பார்வையிலிருந்து மறைத்து வைக்கலாம். ஒரு வேளை நம்ம பெரியப்பாபோல அரசாங்க உத்தியோகத்தை வைத்துக்கொண்டு தன் குடும்பத்தைப் பொறுப்பாக கவனித்துக்கொண்டு வாழ்வு போகும் வழியில் வாழ்ந்திருந்தால், ரத்தத் தளர்ச்சி வராதவரை   எந்தப்பிரச்சனையும் இல்லை. 

மூன்று, ஒன்று இருவரும் இயல்பு நிலைக்கு வருவதற்கு மாறாகச் சற்று குழப்ப நிலைக்கு வந்துவிட்டார்கள். உடனே மூன்று, சமயல் செய்துக்கொண்டிருந்த மருமகளை அழைத்து “ஏம்மா, சாப்பாடு குடும்மா. இருட்டிடுச்சி சீக்கிரம் ஊட்டுக்குபோட்டும்“ என்றார்.

தர்க்கம் ஒரு முடிவுக்கு வந்தது.

மாங்காய், முருங்கை சாம்பார், பக்கத்தில் ஆம்லெட் சாப்பிட்டபிறகு இரண்டு கிளம்கினார். வழித்தடங்கள் இருட்டுகளில் முழ்கியிருந்தது. இருந்தாலும் தர்க்கத்தின் மையக்கேள்வியான  “உன்பிள்ளைங்களே மதிக்கமாட்டேங்குது. அதுங்க பாட்டுக்கினு மூர்க்கமா திரியுதுங்க“ என்ற மூன்றின்  கேள்விகள் குடைந்துகொண்டே வந்தது. இக்கேள்வி விரிவடைந்து யார் யார் குடும்பத்தின் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள். அவர்களின் தகப்பன்கள் இயல்பான குணம் எத்தன்மை உடையது என்று பரிசோதனை செய்துக்கொண்டே இருந்தது. அதன் விளைவாக ‘ பிள்ளைகள் குற்றம் செய்யும்போது மட்டும் அடிப்பதும், திட்டுவதும் அதிகளவில் பயன் தராது. பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பொது வெளிகளில் நியாத்திற்காக உறுதியுடன் பேசுவது, நடந்துகொள்வது மிக சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது‘ என்ற முடிவுக்கு வந்தார்.

ஒன்று, இயல்பிலேயே அவ்வாழ்வு முறையைத் தவறவிட்டிருந்தார், இல்லை யென்றால் நான்காவதின் சாமர்த்தியப்பேச்சில் கிரங்கியிருக்கமாட்டார்.


டேனியல் 








Saturday, April 26, 2014

மாடம்பாக்கம், அரசுமேல்நிலைப்பள்ளியும்.
ஜெயித்துவிட்ட ஆட்சியாளர்கள் செயலும்.


தேர்தல் பணிக்கு மாடம்பாக்கம் அரசுமேநிலைப் பள்ளிக்குப் போனேன். அப் பள்ளி பெரிய இடவசதிகொண்டதாக இருந்தது. பள்ளிக்கட்டிடங்கள் சுற்றி இருந்தது. நடுவான காலி இடங்களில் நிறைய மரங்கள் வைக்கப்பட்டிருந்தது. நல்ல வெயில் நேரத்தில்கூட அதன் நிழல் நன்றாக இருந்தது.

பள்ளி வளாகத்தின் இடது மூலையில் ஒரு பெரும் பகுதி பயன்படுத்தாமல், செடிகளும், கல்லுமுள்ளுகளும் நிறைந்த இடமாக இருக்கிறது. இரண்டு மூன்றுபாத்ரூம் சிறியக் கட்டிடங்கள் பாழடைந்து புதர்கள் மண்டிக்கிடக்கிறது. சற்று தள்ளி இன்னொரு சிறியக் கட்டிடம் ஐந்து கழிவறைகள் கொண்டதாக அதுதான் (லையன்ஸ் கிளப் கழிவறைக் கட்டடம்) தற்போது பயன்பாட்டிற்குள் இருப்பதாகவும் தோன்றியது.

பிரேயர் மேடைக்குப்பின்னால் ஒரு கைஅடி குழாய்பம்ப் இருக்கிறது வந்தவர்கள் எல்லாம் ஒருவேளை அதில்தான் அடித்துக்குளித்துக் கொள்ளவேண்டும் போல என்று நினைத்தேன்.

இரவு ஆக ஆக அந்த வளாகம் முழு இருளுக்குள் வந்துவிட்டது. தேர்தல் நடப்பதற்காக நான்கு டியூப்லைட் சில இடங்களில் போட்டார்கள். அவ்வளவு பெரிய வளாகத்தின் பரப்பிற்கு அந்த வெளிச்சம் காடை விளக்கைவிட மோசமாக இருந்தது.
பெரும்பாலான அறைகளில் லைட்டே இல்லை என்றால் ஃபேன் இருக்கமா? கிராம அலுவலர் பரிதாபப்பட்டு ஏழு பூத்துக்கு ஏழு பெடஸ்டல் ஃபேன் கொண்டுவந்துவைத்தார்.

வசதியற்ற அறைகளால் இரவுமுழுதும் தூக்கம் இல்லை. பல ஆண்கள் கழிவறையிலேயே குளித்தார்கள். சில பெண்ணாசிரியைகளும் பின்னாகவே வந்து பக்கத்து அறையை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
(சமத்துவம்) சற்று தொலைவில் இருக்கும் அக்கழிவறை வரை, வர பயந்த பல ஆசிரியைகள் பாரதராஜா படத்தில் வயதுவந்தபெண்ணுக்கு சேலையை பிடித்து குளிப்பாட்டுவதுபோல கைஅடி குழாய்பம்ப் அருகிலேயே சுற்றி நின்று குளித்துக்கொண்டார்கள். (அதிக இருட்டோடே) ஒருநாள் கூத்தென்பதால் இதையெல்லாம் கூட விட்டுவிடலாம்.

ஆயிரத்து இருநூறு பிள்ளைகள் ஆண்,பெண் சேர்ந்து படிக்கின்ற பள்ளியில் பள்ளிக் கட்டிடத்திற்கும் பாத்ரூம், கழிவறைக்கும் ஏகப்பட்ட தூரத்தில் அதுவும் ஒதுக்குப்புறமாக வைத்திருந்தால் எந்த பிள்ளைகள் எப்போது எங்குபோகிறார்கள் என்று கண்காணிக்கமுடியுமா? முற்றிலும் பாதுகாப்பற்றதாகவே இருக்கிறதே என்று யோசித்தேன். தேர்தல் பணிக்காகக் கட்டப்பட்ட டீயூப்லைட் இல்லை என்றால், பள்ளி முடிந்தபிறகு அந்தப் பள்ளி இருள்சூழ்ந்த காடாக மாறிவிடும்போல. பகலிள் மட்டும் அது பள்ளியாக இருந்தால் போதுமா? இரவில் ஆளற்ற இடங்களில் இருள் மட்டுமே சூழ்ந்திருந்தால், சந்தர்ப்பம் வாய்க்காத மனிதனும் சந்தர்ப்பங்களைத் தாமாக ஏற்படுத்திக்கொண்டு தவறுகள் செய்துகொள்ள வழி ஏற்படாதா?


சரியாக ஏழுமணிக்கெல்லாம் வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. எங்கள் பூத்தில் மொத்த வாக்காளர்கள் 791 காலையில் இருந்தே வாக்காளார்கள் உற்சாகமாக வந்தார்கள். நானும் தொடர்ந்து கவனித்து வந்தேன். எல்லாரும் நல்ல செல்வந்தர்கள், மிக உயர் பதவிகளிலும், நல்ல படிப்பிலும் கரைகண்டவர்களாக இருதுந்தார்கள். பிராமனக் குடும்பங்கள் அதிகமாக வந்தார்கள். நல்ல வசதியில் இருக்கும் கிறித்தவர்கள் அவ்வப்போது கொஞ்சம் வந்தார்கள். நல்ல வசதிபடைத்த இஸ்லாமியர்களும் அவ்வப்போது கொஞ்சம் வந்தார்கள். மாலை ஆறுமணியோடு 584 வாக்கு பதிவானது. அதில் ஏறக்குறைய மூன்று குடும்பம்தான் மிகவும் பின்தங்கிய குடும்பம். இரண்டே இரண்டு லோக்கல் குடிகாறர்கள்தான் அதில் இருந்தார்கள். மற்றெபடி பல பிரிவைச்சார்ந்த மிக வசதி வாய்ந்த குடும்பங்கள்தான் வந்தது.

அவர்கள் நடந்துகொள்ளும் ஒழுக்கத்தை நினைத்தால். மனம் அவ்வளவு நிறைவாக இருந்தது. ஒருவர் அவ்வளவு அழகாக உங்களுக்கு என்ன விதி வழங்கப்பட்டிருக்கிறதோ அதைபோல செய்யுங்கள் என்கிறார். நாங்கள் தொடர்ந்து பூத் சிலிப் வாங்கிக்கொண்டபோது. ஒரு குடும்பத் தலைவர் பூத் சிலிப் எங்களுக்கு வேண்டும் என்று ஆங்கிலத்தில் லாவகமாகப்பேசி, அற்கான காரணத்தையும் சொல்லிப் பெற்றுக் கொள்கிறார். இன்னொரு வயது முதிர்ந்த அம்மையார் இந்த ஆவணவே உங்களுக்குப் போதுமானது என் வாக்குரிமையை அனுமதியுங்கள் என்கிறார். இதையெல்லாம் தொடர்ந்து கண்காணித்தபோதுதான் இவர்கள் எவ்வளவு அழகு வாய்ந்த மேன்மக்களாக இருக்கிறார்கள். ஆகவேதான் தங்கள் கைகளில் அதிகாரம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் அவரவர்களுக்கு சாதகமானவர்களுக்கு ஒத்துழைக்கிறார்கள் என்று நினைத்தேன். இதுபோல ஒழுக்கம் நிறைந்தவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தால்தான் என்ன?

மக்களோடு இருக்கிறேன் என்று மக்களை ஏமாற்றுகிறவனைவிட இவர்கள் எந்தவிதத்தில் தரம் குறைந்தவர்கள். ஏன் இவர்கள் கையில்தான் வெற்றி இருந்துவிட்டுப்போகட்டுமே என்று யோசித்தேன்.

நேரம் ஆக ஆகத்தான் நேற்று மதியம் சாப்பாட்டுக்கு ஓட்டலைத்தேடி சிலத்தெருக்கள் சுற்றியபோது அப்பள்ளியைச்சுற்றி இருக்கும் குடியிருப்புகளை பார்த்தபோதும், அதிகாலை ஐந்துமணிக்கு ஒரு குளியல்சோப் வாங்க வெகுதூரம் வரை நடந்தும் கிடைக்காமல் போனது நாபகம் வந்தது. இந்த இடங்களில் வயிற்றுப் பிழப்புக்காகக்கூட சிறு வியாபாரிகள் எப்போதும் உற்பத்தியாக முடியது போல. இப்பள்ளியைச் சுற்றி இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பல சமூகத்தைச்சார்ந்த மிக வசதிவாய்ந்தவர்கள். தன் குடும்பச் சுகத்திற்காக அயராது உழைப்பவர்கள். தங்கள் அளவில் மிக நிறைவான வாழ்வு வாழ்பவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஆட்சியாளர்களே. இத்தனை ஆட்சியாளர்களுக்கு நடுவில் அரசுப்பள்ளிக் கேட்பாரற்றுக் கிடப்பதுபோலத்தான்.

ஒழுக்கச்சீலர்களாக தங்களைக்காட்டிக்கொண்டு அதிகாரம் பிடிப்பவர்கள். சிறு வியாபாரிகளையும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களையும் கண்டுகொள்ளாமல் விடப்போகிறார்கள்.

இவர்களைவிட மக்களோடு மக்களாக இருக்கிறேன். மக்களோடு ஓடிவருகிறேன் இடையில் கொஞ்சம் ஏப்பம் விட்டுக்கொள்கிறேன்
(ஏப்பத்தை, மனிதன் குசு விடுதலில் கழிக்கமுடியுமா?) 
என்கிறவன் பராவாயில்லைதானே.



Friday, February 21, 2014

விமர்சனம்,



வெள்ளையானை 4                        ஜெயமோகன்

//பேயுருவங்கள் போன்ற மனிதர்கள். கல்லறை திறந்து கிளம்பி வருபவர்கள் போல பாதி மட்கிய உடல்கள்// தற்சமயம் இந்த வார்த்தைகளை புகழ்ச்சி வார்த்தைகளாகக்கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நான் வேண்டுமென்றே உழைப்பாளி மக்களின் சார்பாக நின்று மோசமான வார்த்தைகளாகத் தேடித்தருவதாகக்கூடத் தோன்றும். ஒன்றிரண்டு இடங்களில் குழந்தைகளைக் குறிப்பிடும்போது மட்டும் ஆசிரியரின் பெருந்தன்மையால் இலக்கியத்தன்மை வெளிப்படும். மற்றபடி கடைநிலை மக்களை மேற்குறிப்பிட்டபடிதான் பெரும்பகுதி நாவல் பேசுகிறது.

அக்கால மதராஸப்பட்டினத்தைச் சுற்றி புற நகர் இடங்களின் கோரைப்பாய் தயாரிப்புக்காக விதைக்காமல் அறுக்கும் பயிர்களாக கோரைகள் ஏரிகளில் பரந்துகிடந்ததும், அறுப்பதும்  உள்ளூர் தொழில்வளாகம்போல் ஏரிகளே இருந்ததும் உணரமுடிகிறது.

ஏய்டன் ஏரிப்பகுதிகளைப் பார்க்கும்படியும், அதில் குடியிருக்கும் மக்களின் நிலையை அறிந்து கொள்வதற்காகவும் காத்தவராயனை உடன் அழைத்துச்செல்கிறார். ஏய்டன், காத்தவராயன் ஒரு பக்கமும். குப்பத்தின் ஒருசில மனிதர்கள் எதிரிலும் நிற்கிறார்கள்.  ஏய்டன்  ‘நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில்கேட்டுச்சொல்‘ என்று பணிக்கிறார். ஆரம்பத்தில் காத்தவராயன் ஒன்றிரண்டு வார்த்தைகளை மொழிபெயர்த்துச் சொல்வார். தடாலென்று காத்தவராயன் வாயை முடக்கிவிட்டு ஆசிரியர் உதவியுடன் ஏய்டன், குப்பத்தின் மக்களின் மொழி தெரிந்தவர்போல் நேரடியாக பேசத்தொடங்கிவிடுகிறார். காத்தவராயன் வாயை முடக்கி ஏய்டன் சாயலாக ஆசிரியர் பேசவேண்டிய காரணம் என்ன? 

நாவலில் வருகின்ற இரண்டு நபர்களின் தன்மைக்குறித்து பார்க்கவேண்டியிருக்கிறது. நாவல் வெளியில் அவர்கள் செயல் எப்படியிருக்கிறது. ஆனால் அவர்கள் இயல்பைக்குறித்து ஆசிரியர் வைக்கிற ஆய்வு சரியானதா? உள்நோக்கம் இல்லையா? அறம் என்பது, இருப்பவன் இல்லாதவன் காசுக்கு ஏற்றபடி கூத்தாடுவதா? நீங்கள்தான் சொல்லவேண்டும்.

//காத்தவராயனைப் போன்றவர்கள் நடைமுறைவாதிகள். அன்றாட யதார்த்தத்திற்கு அப்பால் பார்வையை விரித்துக்கொள்ளாதவர்கள்// என்று ஏய்டன் சொல்லுவதுபோல் வருகிறது. ஆசிரியரின் கட்டுக்கோப்பை மீறி தன்னைக் கட்டமைத்துக்கொள்ளும் நாவலின் பாத்திரமான ஏய்டன் நேரடியாக பேசுகிற பல இடங்களில் காத்தவராயன் அறிவுத்திறமையை மெச்சி பேசி இருக்கிறார். அவர் மீது மரியாதை இருந்ததால்தான் தன் அரண்மனையில் தனக்குச் சமமான இருக்கையில் அமரச்செய்து பேசிய நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கிறது. மேலும் காத்தவராயன் ஏய்டனுடனான பேச்சில் //பிரிட்டீஷ்  ஆட்சி என்பதே அதிகாரிகளும், பண்ணை உரிமையாளர்களும், குத்தகைதாரர்களும் சேர்ந்து அடிக்கும் ஒரு மாபெரும் கூட்டுக்கொள்ளை மட்டுந்தானே// 

//1. இந்திய முதலாளிகள் எந்தக்கொடுமைக்கும் அஞ்சாதவர்கள்.
 2. அமெரிக்கர்கள் கெட்டபேருக்கு பயப்படுவார்கள். ஆகவே நேரடியாக
    கொடுமைகளைச் செய்ய இவர்கள் துணியமாட்டார்கள்.
  3. இந்தியாவின் உயர் சாதியினதைவிட மிகமிக மேலான மனசாட்சியும், பண்பாடும் கொண்டவர்கள் இந்த வெள்ளையர்கள்//  என்று காத்தவராயன் ஒரு பரந்துபட்ட (நாடுகள் அளவில்) விஷயத்தை ஏய்டனுடன் பல இடங்களில் பேசியிருக்கிற நிலையில், காத்தவராயனை நடைமுறைவாதி யதார்த்தத்துக்கு அப்பால் பார்வையை விரித்துக்கொள்ளாதவர் என்பது யாருடைய குரலாக இருக்கும்.

ஒருவேளை காத்தவராயன் உள்ளூர்காரர்களைத் தாழ்வாகவும், வெளியூர்காரரை உயர்த்தி பேசியிருக்கலாம். அப்படி அவர் யோசித்ததற்கான காரணம் எதன்மூலம் வந்தது.

ஜெயமோகன் என்கிற ஆளுமையின் சமீபத்திய பல தொகுப்புகளை வாசித்து நண்பர்களுடன் பேசியிருக்கிறோம். ஆனால், இந்த நாவலை ஏதாவது நிர்பந்தத்தின் அடிப்படையில் எழுதினாரா தெரியவில்லை. நாவல் அங்கங்கே மேலும் நகரமுடியாமல் நிற்கிறது. அங்கு நாவலுக்கு ஒரு அபத்தமான  வாக்கியம் தேவைப்படுகிறது. அந்த இணைப்பு வாக்கியத்தைக் கொடுத்ததும்  நாவல் வேகத்துடன் தொடர்கிறது. குறிப்பாக “தொப்பியை எடுத்து தலையை நீவிக்கொண்டான்“, “ஏய்டன் பெரு மூச்சுவிட்டான், பெரு மூச்சுடன் எழுந்தான்“ என்கிற வாக்கியம் மட்டும் நாவல் முழுக்க ஏறக்குறைய இருபது இடங்களில் வருகிறது, இவைகளே நாவலை தொடர்ந்து நகர்த்த துணையிருக்கும் இணைப்புச்சொல்லாக இருக்கிறது.….

அடுத்த பதிவோடு முடியும்

குறிப்பு- விமலாதித்த மாமல்லன் இப்பதிவைக் குறிப்பிட்டதற்கு நன்றி. நாவலில் இருந்து வெளியேச்சென்றால் அவரேக்கூடக் குட்டுவார் என்ற புரிதலும் இருக்கிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு நியாயமற்ற காரணத்திற்காக இவ்வழியைப்  பின்பற்றுவதில்லை.
உண்மையிலேயே எனக்கு  ஜெயமோகனும் பிடித்தமான எழுத்தாளர்

டேனியல் 



.

Wednesday, February 12, 2014

விமர்சனம்,



வெள்ளையானை      ஜெயமோகன்  3

“நீ வைணவன் என்று சோன்னாய், ஆனால் காத்தவராயன் என்றால் சைவப்பெயர் இல்லையா?“ ஏய்டன் இந்தியாவிற்கு வந்து அதன் சூழல்களை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளாத நிலையில். இந்தியாவின் மத பேதங்களை அதன் பிரிவுகளை அவ்வளவு நுணுக்கமாக ஏய்டன் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்நிலையில் காத்தவராயன் மீது சந்தர்ப்பவாதி என்ற பிம்பத்தை நிறுவ ஆசிரியரின் குரல் லேசாக சேந்திருக்கிறது என்பதை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

இந்திய பிரிட்டீஸ் அரசாங்கம் அடிமையாக வாய்த்த மக்களின் ரத்தத்தைக்குடிக்கிறது என்கிற விஷயத்தை ஏய்டன், மிக்கின்ஸீடம் ஆலோசிப்பார். அதற்கு மிக்கின்ஸ் “பறையர்களை எல்லாரும்தான் கொல்கிறார்கள்.“ என்று மிக லேசாக பிரச்சனையை பொதுப்படையாக்கிப் பேசுவான். அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்களின் வர்க்கத்தில் இந்திய ஒட்டுமொத்த மக்கள்மீதும் (சில வகையில் எற்றத்தாழ்வுகள் இருந்தாலும்) ‘இவர்கள் கறுப்பினத்தவர்கள்‘ என்கிறப் பொதுப்படையான கருத்தும், அவர்களைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பதே பிரதானம் என்ற சூழல் இருந்திருக்கிறது. அக்காலகட்டங்களில் மிக்கின்ஸ் இந்திய உயர் சாதியினருக்கும், செல்வந்தர்களுக்கும் பயந்து குறிப்பிட்ட விஷயத்தை பொதுப்படையாக்கிச்சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது.  ஆனால் ஆசிரியர்தான் இந்திய உயர்சாதி, செல்வந்தர்கள், பறையர் மீதான தலையீட்டை மறைத்து அது மேலோட்டமான வியஷயம்போல பொதுப்படையாக கட்டமைக்கிறார்.

அடிமைப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுவிட்டால் ''சொந்த சகோதரர்களையும், தாய்த் தந்தையர்களையும் துறந்து விடுகிறார்கள். அவர்களிடம் வறட்டு ஆணவம் தலைத்தூக்கிவிடுகிறது.“ என்கிற தர்கத்தை வைத்துச்செல்கிறார். அதில் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், ‘எந்த இனக் குழுவிலிருந்து பெற்றோர்கள், அதிகமாக வெளியேத் துரத்தப்படுகிறார்கள். தன் சொந்த சகோதரனுக்கு சிறிதளவில் செலவுசெய்தப் பணத்தைக்கூட வட்டிக்கடன்போல கணக்குபோட்டு திருப்பிக்கொடுப்பது, அல்லது கேட்பது, எந்த சமூகத்தில் தற்போதும் இருக்கிறது‘ என்கிற புள்ளி விவரங்களை ஆராய்ந்தால் எல்லா மனிதனிடமும் இந்த மட்டமான புத்தி இருக்கிறது என்பது தெளிவாகிவிடும். இதில் பறையர்களிடம் மட்டுமே இக்குணம் சிறப்பம்சம் பெற்றிருக்கிறது என்பதுபோல கட்டமைப்பு ஆசிரியரின் புரிதல்.

பொதுவாக ஜெயமோகன் சாருக்கு அடித்தட்டு மக்களின் பிம்பங்களை நுணுக்கமாக, ரசனைத்தன்மையுடன் உள்வாங்குதல் கைக்கூடி வருவதில்லை. நாவலில் வருகின்ற அடிமைப்பட்ட சிறு பிள்ளைகளை வர்ணிக்கும்போது  ‘நிர்வாணம், அழுக்கு, புண், கறுப்பு, நாற்றம்‘ இப்படியான பிம்பங்களைத்தான் தொடர்ந்து வைக்கிறார். இந்த பிம்பத்தை, சாதாரண, மனிதனை நேசிக்கத்தெரியாத  மேட்டுக்குடி மனிதன்கூட இயல்பாக சொல்லிவிடுவான். அதைத்தாண்டி படைப்பாளியாக அந்தப்பிள்ளைகளின் மூக்கு எந்த விதத்தில் ஒழுகிக்கொண்டு இருக்கிறது. ஒழுகிய மூக்கை இடக்கையாளும், வலக்கையாளும் தேத்துத்தேய்த்து கன்னத்தில் ஏடு கட்டிக்கிடக்கும் கோணத்தின் நிலை என்ன? தலைமயிர்கள் சுருட்டையா? சேறு, சகதியில் விளையாடிய கால்களின் முழங்கால்வரை சேற்றின் வெடிப்பு இருந்ததா‘ போன்ற சாதாரண அவதானிப்புக்கூட கிடையாது.

ஆசிரியர்தான் பாத்திரத்தைப் படைக்கிறவன். எல்லாவற்றுக்குள்ளும் அவன் ஆளுமை இருக்கவேண்டும். ஆனால், அவனவனுக்குள், (பாத்திரங்கள்) அதற்குள் சென்று, அவனவனாக, அவைகளாகவே வெளியே வரவேண்டும் என்பது ஆசிரியருக்குத் தெரியாததல்ல. ஆனால், ஜெயமோகன் சார் இந்நாவலில் கணக்கற்ற இடங்களில் மிக வெளிப்படையாக தானே பாத்திரமாகவும், ஆசிரியராகவும் மாறிமாறி வருகிறார். ஏய்டன் வாசகம் “பிரமாண்டமான வெடிமருந்து மாலையுடன் வா“ நன்றாக கவனிக்கவேண்டும் இது நிச்யமாக ஏய்டனின் மூளையில் உதித்த வாசகமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் cபெருமந்தூர் நிகழ்வுக்கு முன் உலகின் எந்த மூலைபோராளிக்கும் மாலைபோட்டு அழிவை ஏற்படுத்துகிற உத்தி தெரிந்திருக்கவில்லை.

ஏய்டன் பஞ்சத்தை நேரில் கண்டு ஆய்வுசெய்ய செங்கல்பட்டு போகிறார். உள்ளூர் தாசில்தாரை பார்க்கவேண்டும் என்கிறார்.  “தாசில்தார் நீண்ட நாமம் போட்டிருந்த பிராமணர் வந்ததும்“ இருவரும் பேசுகிறார்கள். ஏய்டன் இங்கேத் தங்கவேண்டும் இடம் ஆய்த்தப்படுத்துங்கள் என்று சொல்லாத பட்சத்திலேயே உள்ளூர் தாசில்தார் “இன்ஸ்பெக்ஷன் பங்ளாவில் இன்னொரு தாசில்தார், அவர் மனைவியுடன் தங்கியிருக்கிறார். அவரை உடனே காலி செய்யச்சொல்லிவிடுகிறேன். நீங்க தங்கி இளைப்பாருங்க“ என்று தாமாகவே சொல்லுகிறார். 

குருட்டுத்தனமாக அதிகார மையங்களுக்கு அடிபணிந்து போவதால்தான். குடும்பத்துடன் குடியிருக்கும் தன் சக பணியாளனை நிர்தாட்சணையாக உடனே காலிசெய்துவிடுகிற யோசனையை உள்ளூர் தாசில்தார் முன்மொழிகிறார். ….

மேலும் பார்க்கலாம்….

டேனியல்

(குறிப்பு- இப்பமட்டுமென்ன வாய்தாம். வாதாடுவதில் நியாயமே இருந்தாலும். வாதாடும் வாய் எது? அதைப்பொறுத்துதானே எல்லாம் நடக்கிறது)

Monday, February 3, 2014

விமர்சனம் 2

வெள்ளையானை                                                      ஜெயமோகன்
……………………….
குறிப்பு-
என் இனமக்கள் எல்லாரும் புனிதமானவர்கள், உயர்சாதி மொத்தமும் வக்கிரம் புடிச்சவர்கள் என்று எப்போதும் ஒற்றைக்காலில் நிற்கமாட்டேன். இரண்டிலும், இரண்டும் கலந்து இருக்கிறது. இரண்டாலும் நான் தொடர்ந்து மனபலவீனம் அடைந்திருக்கிறேன். எனக்கு பிராமணியத்திலும் நல்ல நண்பர்கள் நெருக்கமாகவும், சற்று தொலைவிலும் இருக்கிறார்கள். என்சமூகத்தில்  பக்கத்திலும், நெருக்கமாகவும் பகைவர்களும், சொந்தங்களும் இருக்கிறார்கள். இத்தன்மையையுடன்தான் என்னுடைய படைப்பும், பிறரின் படைப்புகளையும் அணுகுகிறேன். இதில் விருபற்றவர்கள் என்னை நிராகரித்துபோகலாம்.
……………………………………………………………..

“சுளீரென்று சாட்டை நாக்கு எழுன்று வந்து மெல்லிய சதையை
 நக்கிச் சென்றதுபோல உணர்ந்தான் ஏய்டன்“ இந்த வாசகம் ஏய்டனும், காத்தவராயனும் சந்தித்துக்கொள்கிற முதல் உரையாடலில் வருகிறது. காத்தவராயன், வெள்ளை அடக்குமுறையாளரை நம்புகிற அளவுக்கு உள்ளூர் கங்காணிகளையும், பலம் வாய்ந்தவர்களையும் நம்பாமல் தாங்கள் படும் இன்னல்களை ஏய்டனிடம் வைக்கிற சூழலில். ஆசிரியர் ஏய்டன் சார்பாக நின்று வைக்கிற மிக அற்புதமான உவமானம். ஆனால், இந்த வாசகம் காத்தவராயனின் நியாமான வாதத்திற்கு எந்தவிதத்திலும் வலு சேர்க்கவில்லை. மாறாக நன்மை செய்ய எத்தனிப்பவர்கள் முன் எப்போதுமே துடுக்குத்தனமாக பேசுகிறவர் என்ற தொனியைத்தான் அவருக்கு உடுத்திவிடுகிறது.

ஏய்டன் கடற்கரை சாலையில் குதிரையில் போகிறார். ஒரு இடத்தில் காத்தவராயன் சந்திக்கிறார். அதற்கு முன் இருவரும் சந்தித்தது இல்லை. இருந்தாலும் ஆசிரியர் தயவால் காத்தவராயன் மீது ஏய்டனுக்கு நன் மதிப்பு கூடுகிறது. அரண்மனைக்கு அழைத்துச்செல்கிறார். ஏயடன் இருக்கையில் அமரச்சொல்கிறார். உரையாடல் தொடர்கிறது.  வாசகன் பாத்திரங்களின் வழியாக இந்நிகழ்வுகளின் உண்மைத்தன்மையை உணர்ந்துகொள்வதற்கோ, அல்லது காட்சிப்படுத்தல் மூலமாக சூழலை ஊகித்துக்கொள்ளவோ வாய்ப்புத்தரப் படவேயில்லை. இந்த இடம் மட்டுமல்ல நாவலில் அநேகமான இடங்களில் அப்படித்தான் இருக்கிறது. ஏன் இப்படி அமைந்துவிட்டது என்று நானே யோசித்தேன். என் அறிவுக்கு எட்டியது நாவல் நடக்கும் காலகட்டத்தின் ஆவணங்களை அதிக அளவில் அலசி ஆராயாமல் போயிருக்கலாம், இன்னொன்று கடந்தகால கடைநிலை மக்களின் உணர்வுகளில் அனுபவப்பூர்வமாக தன்னை இணைத்துக்கொள்ளாத நிலை இருக்கலாம். அல்லது அங்கங்கு கிடைத்தத் தகவல்களை வைத்துக்கொண்டு அதிவேகமாக நிகழ்த்தப்பட்டதாக இருக்கலாம், என்பதாகத்தான் என்னால் ஊகிக்கமுடிகிறது.

ஏய்டனின் எதிர் இருக்கையில் காத்தவராயன் அமரும்போது ஆசிரியர் ‘பிராமணர்களைத்தவிர மற்றவர்கள் இருக்கையில் அமரும்போது நெளிவார்கள், இருக்கை நுனியில் தங்களை ஒடுக்கிக்கொள்வார்கள் எதிரில் இருப்பவர்கள் தங்களை மெச்சவேண்டும் என்று நினைப்பார்கள் என்கிறத் தத்துவங்களை தாராளமாக சொல்லுவார். நான் கேட்கிறேன் பல இடங்களில் கங்காணிகள் வருகிறார்கள், வியாபாரிகள் வருகிறார்கள் வெள்ளையர் எதிரில் அமரும் சந்தர்ப்பம் நாவலில் பலநேரம் வாய்க்கிறது. அப்போதெல்லாம் இந்தத் தத்துவங்கள் உதிர்த்தால் என்ன? காத்தவராயன் இருக்கையில் அமரும்போது அந்தத் தத்துவத்தை உதிர்ப்பதால், பஞ்சத்தில் செத்த மக்களின் உள்ளதுக்கங்களை, அவர்களின் பரிதாபமான சூழல்களை ஆசிரியர் உணர்ந்துகொள்ளமுடியவில்லை. இருக்காய்

இருக்கையில் அமரும் தத்துவத்தை பொதுவாக எடுத்துக்கொண்டாலும் ஆசிரியர் ஏன் ஒற்றைத்தன்மையுடன் தூக்கிப்பிடிக்கவேண்டும். மனதில் செருக்கு, எதிர் இருப்பவர்களை எப்போதும் துச்சமாக கருதுபவன். பிறரை மதியாதவன். நானே சிந்தனைப் பிரிதிநிதி.  ஆளும் தகுதி எல்லாம் எனக்கு  என்கிற மேட்டிமையினால்கூட அத்தன்மை வர வாய்ப்பிருக்கிறது அல்லவா? அப்படி இருக்க அமருவதற்கே இப்பேர்ப்பட்ட தத்துவத்தை ஒரு பிரிவுக்கு உயர்த்தியும், ஒரு பிரிவுக்கு தாழ்த்தியும் சுமத்துவது எந்தவகையில் ஏற்புடையது?……

மேலும் பார்க்கலாம்…..

டேனியல்

Sunday, February 2, 2014

விமர்சனம்

வெள்ளையானை                                                                    ஜெயமோகன்

இந்த நாவலைக்குறித்து எனக்குள் எழுகிற கேள்விகளை ஏன் விமர்சனமாக வைக்கவேண்டும். அதனால் ஆகப்போவது எதுவுமில்லை என்று யோசித்தேன். எழுதிக்கொண்டிருக்கிற இலக்கியங்களால் மட்டும் என்ன நிகழ்ந்துவிடுகிறது. வேளிங்காத்தான் முள்ளுகளுடன்தான் விளைகிறது. வலுத்தவனின் அதிகாரம் சமூக நீதியாகத்தான் சற்றும் தொய்வில்லாமல் நடைமுறையில் தொடர்கிறது. எல்லாமே அதனதன் த...ொனியில், அதனதன் இடத்தில் தடையற்றதாய் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்ற வார்த்தைகளை ஆருதலாக எடுத்துக்கொண்டாலும், இந்நாவலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல் மருந்து கட்டுதல் என்பது வெளிப்படையான பார்வைக்குள் இருந்தாலும், அம்மக்களைக் கீழ்மைபடுத்துதலும் மறைமுகமாக இருப்பதால் அதை எனக்குத்தெரிந்த வகையில் வெளிபடுத்தாமல் இருக்கமுடியவில்லை.

ஏய்டன் என்ற அயர்லாந்து வாலிபர் மதராஸப்பட்டினத்திற்கு ராணுவ தளபதியாக வருகிறார். வந்த சொற்ப நாட்களிலேயே நாட்டின் அடித்தட்டு மக்கள் மீது கரிசனை வருகிறது. அந்த வாலிபர் ஆங்கிலேயப்படையின் கேப்டன் என்பதின் வீரியம் குறைவாகவே இருக்கிறது. மாறாக ஜெயமோகன் என்ற படைப்பாளரின் மென்மையே அப்பாத்திரம் முழுக்க ஒளிர்கிறது. கேப்டனின் ஆளுகைக்குக்கீழ் எத்தனை படைப் பிரிவு, அப்பதவிக்கான அதிகாரத்தின் வலிமை என்பதெல்லாம் மேலோட்டமாகக்கூட சொல்லத்தவறிவிட்டது என்றே நினைக்கிறேன்.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் தங்கள் சுகபோக வாழ்விற்காக பஞ்சத்தில் சாகும் மக்களை மேலும் கொடுமைப்படுத்துகிறார்கள். அதற்கு உள்ளூர் நிலச்சுவாண்தாரர்கள், மொத்தமாக வணிகம் செய்யும் செல்வந்தர்கள், ஆங்கிலேய அதிகாரங்களுக்கு நெருக்கமாக இருந்த பிராமணர்கள் அனைவருமே சேர்ந்து பஞ்சத்தில் அழிந்துகொண்டிருந்த மக்களைக் காக்கிறார்களா? அல்லது ராஜபக்ஷேவின் நவ நாகரீக இனவழிப்பை 1887லேயே தமிழகத்தில் செய்தார்களா? என்பதையே நாவல் சித்தரிக்கிறது. அதில் ஆசிரியரின் பங்கு எந்தளவுக்கு வெள்ளை நாகரீகத்தோடு இயந்து இருக்கிறது. லட்ச லட்சமாக பஞ்சத்தில் அழிந்தவர்களுக்காக ஆசிரியரின் நீதியுணர்ச்சி என்ன? தொண்நூறு விழுக்காடு ஆங்கிலேயரின் கலாச்சாரச்சூழல் எழுத்துதொனியில் வராமல், ஜெயமோகனைத்தவிர வேறு யாராவது எழுதினால் அதை கலைப்படைப்பாக ஏற்றுக்கொள்வார்களா?

ஏய்டனின் பேச்சுமொழியில் “டொரசாமி“ என்கிற ஒரே ஒரு வார்த்தையைத்தவிர (ஆங்கிலம் தெரியாது என்பதால் ஷெல்லியின் கவிதைகள் மற்றும் ஏய்டனின் ஓரிரு ஆங்கில வாசகத்தை விட்டுவிட்டேன்) நாவல் முழக்க ஆசிரியரின் தொனியே ஓங்கியிருக்கிறதே அது சரியா? ஏய்டனின் மன வெளிப்பாட்டை தன் இயல்போடு, நீதியுணர்வையும் மிக நீளமாக கட்டமைக்கிற ஆசிரியர். காத்தவராயனுக்கு அவர் பேச்சை மட்டுமே மிக சுருக்கமாக வைப்பது கடந்த காலத்தில் காத்தவராயனின் உண்மை நிலைதானா?

வெள்ளையானை வெளிப்படையாக ஐஸ்கட்டி, மறைமுகமாக வெள்ளை நிற ஆட்சியாளர்கள் என்பதாகத் தெரிகிறது அது ஒருவகையில் மதிப்புக்குறியதாகத் தென்படுவதால் கலைநயத்தின் குறியீடு என்றேகூட வைத்துக்கொள்ளலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்களையே உள் அட்டையில் கோரம் நிறைந்த நாய்களாகச் சித்தரிப்பது சரிதானா?....

பிறகு பார்க்கலாம்...

டேனியல்