வெள்ளையானை ஜெயமோகன்
……………………….
குறிப்பு-
என் இனமக்கள் எல்லாரும் புனிதமானவர்கள், உயர்சாதி மொத்தமும் வக்கிரம் புடிச்சவர்கள் என்று எப்போதும் ஒற்றைக்காலில் நிற்கமாட்டேன். இரண்டிலும், இரண்டும் கலந்து இருக்கிறது. இரண்டாலும் நான் தொடர்ந்து மனபலவீனம் அடைந்திருக்கிறேன். எனக்கு பிராமணியத்திலும் நல்ல நண்பர்கள் நெருக்கமாகவும், சற்று தொலைவிலும் இருக்கிறார்கள். என்சமூகத்தில் பக்கத்திலும், நெருக்கமாகவும் பகைவர்களும், சொந்தங்களும் இருக்கிறார்கள். இத்தன்மையையுடன்தான் என்னுடைய படைப்பும், பிறரின் படைப்புகளையும் அணுகுகிறேன். இதில் விருபற்றவர்கள் என்னை நிராகரித்துபோகலாம்.
……………………………………………………………..
“சுளீரென்று சாட்டை நாக்கு எழுன்று வந்து மெல்லிய சதையை
நக்கிச் சென்றதுபோல உணர்ந்தான் ஏய்டன்“ இந்த வாசகம் ஏய்டனும், காத்தவராயனும் சந்தித்துக்கொள்கிற முதல் உரையாடலில் வருகிறது. காத்தவராயன், வெள்ளை அடக்குமுறையாளரை நம்புகிற அளவுக்கு உள்ளூர் கங்காணிகளையும், பலம் வாய்ந்தவர்களையும் நம்பாமல் தாங்கள் படும் இன்னல்களை ஏய்டனிடம் வைக்கிற சூழலில். ஆசிரியர் ஏய்டன் சார்பாக நின்று வைக்கிற மிக அற்புதமான உவமானம். ஆனால், இந்த வாசகம் காத்தவராயனின் நியாமான வாதத்திற்கு எந்தவிதத்திலும் வலு சேர்க்கவில்லை. மாறாக நன்மை செய்ய எத்தனிப்பவர்கள் முன் எப்போதுமே துடுக்குத்தனமாக பேசுகிறவர் என்ற தொனியைத்தான் அவருக்கு உடுத்திவிடுகிறது.
ஏய்டன் கடற்கரை சாலையில் குதிரையில் போகிறார். ஒரு இடத்தில் காத்தவராயன் சந்திக்கிறார். அதற்கு முன் இருவரும் சந்தித்தது இல்லை. இருந்தாலும் ஆசிரியர் தயவால் காத்தவராயன் மீது ஏய்டனுக்கு நன் மதிப்பு கூடுகிறது. அரண்மனைக்கு அழைத்துச்செல்கிறார். ஏயடன் இருக்கையில் அமரச்சொல்கிறார். உரையாடல் தொடர்கிறது. வாசகன் பாத்திரங்களின் வழியாக இந்நிகழ்வுகளின் உண்மைத்தன்மையை உணர்ந்துகொள்வதற்கோ, அல்லது காட்சிப்படுத்தல் மூலமாக சூழலை ஊகித்துக்கொள்ளவோ வாய்ப்புத்தரப் படவேயில்லை. இந்த இடம் மட்டுமல்ல நாவலில் அநேகமான இடங்களில் அப்படித்தான் இருக்கிறது. ஏன் இப்படி அமைந்துவிட்டது என்று நானே யோசித்தேன். என் அறிவுக்கு எட்டியது நாவல் நடக்கும் காலகட்டத்தின் ஆவணங்களை அதிக அளவில் அலசி ஆராயாமல் போயிருக்கலாம், இன்னொன்று கடந்தகால கடைநிலை மக்களின் உணர்வுகளில் அனுபவப்பூர்வமாக தன்னை இணைத்துக்கொள்ளாத நிலை இருக்கலாம். அல்லது அங்கங்கு கிடைத்தத் தகவல்களை வைத்துக்கொண்டு அதிவேகமாக நிகழ்த்தப்பட்டதாக இருக்கலாம், என்பதாகத்தான் என்னால் ஊகிக்கமுடிகிறது.
ஏய்டனின் எதிர் இருக்கையில் காத்தவராயன் அமரும்போது ஆசிரியர் ‘பிராமணர்களைத்தவிர மற்றவர்கள் இருக்கையில் அமரும்போது நெளிவார்கள், இருக்கை நுனியில் தங்களை ஒடுக்கிக்கொள்வார்கள் எதிரில் இருப்பவர்கள் தங்களை மெச்சவேண்டும் என்று நினைப்பார்கள் என்கிறத் தத்துவங்களை தாராளமாக சொல்லுவார். நான் கேட்கிறேன் பல இடங்களில் கங்காணிகள் வருகிறார்கள், வியாபாரிகள் வருகிறார்கள் வெள்ளையர் எதிரில் அமரும் சந்தர்ப்பம் நாவலில் பலநேரம் வாய்க்கிறது. அப்போதெல்லாம் இந்தத் தத்துவங்கள் உதிர்த்தால் என்ன? காத்தவராயன் இருக்கையில் அமரும்போது அந்தத் தத்துவத்தை உதிர்ப்பதால், பஞ்சத்தில் செத்த மக்களின் உள்ளதுக்கங்களை, அவர்களின் பரிதாபமான சூழல்களை ஆசிரியர் உணர்ந்துகொள்ளமுடியவில்லை. இருக்காய்
இருக்கையில் அமரும் தத்துவத்தை பொதுவாக எடுத்துக்கொண்டாலும் ஆசிரியர் ஏன் ஒற்றைத்தன்மையுடன் தூக்கிப்பிடிக்கவேண்டும். மனதில் செருக்கு, எதிர் இருப்பவர்களை எப்போதும் துச்சமாக கருதுபவன். பிறரை மதியாதவன். நானே சிந்தனைப் பிரிதிநிதி. ஆளும் தகுதி எல்லாம் எனக்கு என்கிற மேட்டிமையினால்கூட அத்தன்மை வர வாய்ப்பிருக்கிறது அல்லவா? அப்படி இருக்க அமருவதற்கே இப்பேர்ப்பட்ட தத்துவத்தை ஒரு பிரிவுக்கு உயர்த்தியும், ஒரு பிரிவுக்கு தாழ்த்தியும் சுமத்துவது எந்தவகையில் ஏற்புடையது?……
மேலும் பார்க்கலாம்…..
டேனியல்

No comments:
Post a Comment