இரண்டு நாள் இலவச குறும்படப் பயிற்சி
இனிதே முடிந்தது.
தமிழ் ஸ்டுடியோவின் அருண் இரண்டு நாள் இலவசப் பயிற்சி நடத்த ஒப்புக்கொண்டார். அதிலிருந்து பயம்தான் கூடிவிட்டது. எப்படி இந்தக் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது. ஆட்கள் வருவார்களா? என்ற பயம்தான். ஏற்கனவே தொடர்ச்சியாக இலக்கிய நிகழ்வுகள் நடத்தியவர்கள் பணத்தை செலவுசெய்தும் நிகழ்வுக்கேற்ற சரியான ஆட்கள் வராமல் ஏமார்ந்த கதையைத்தான் சொன்னார்கள். இருந்தாலும் சற்று கடினமாகத் திட்டமிட்டு களமிறங்கினால் ஒருவேளை வெற்றி கிட்டும் என்று நம்பினேன். அந்த நம்பிக்கை கைக்கொடுத்தது. ஆனால், உள்ளூர் வாசிகள் திட்டமிட்டு நபர்கள் வருகையை கட்டுப்படுத்த வேண்டு மென்பதற்காகவே தங்கள் வருகையை நிறுத்திக்கொண்டார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சிலர் தாங்களே வேதாந்திகள் என்று கருதிக்கொண்டிகிறார்கள். எல்லாம் கற்றறிந்தவர்க் கூட, கற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று சொல்லுகிற வார்த்தையை தங்கள் மனப்பதிவுகளில் இருந்து மறைத்து வைக்கிறார்கள். அதனால், இழப்பு இருதரப்பிலும் நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரியாமலேப் போகிறது. அழைப்பிதழ் கொடுக்கும்போது முகத்துக்கு நேராக நிச்சயமாகக் கலந்துகொள்கிறேன் என்று வாக்குறிதி தந்துவிட்டு நோட்டீஸ் கொடுத்தவர் கிளம்பும்போது கிழித்துக் குப்பையில் போடுகின்ற நபர்களாகத்தான் சிலர் இருக்கிறார்கள். அப்படிச் செய்வது ஏனோ அவர்களுக்கு மிகவும் பிடித்தமான செயலாக இருக்கிறது. ஆனால், இவர்கள் மற்றவர்களை இரக்கமற்றவர்கள், தகுதியற்றவர்கள் என்று கோஷமிடுகிறார்கள்.
மனித மூளையில் சின்ன வீம்பு, பெரிய ஆசையை, சக மனிதனோடு இணைந்து வருதலை மழுங்கடித்துவிடுகிறது. திரைப்படங்களில் ஈடுபாடு வைத்திருக்கிற உள்ளூர் நபர்கள் (தரை அரங்கம் சார்ந்த நண்பர்கள் தவிர்த்து) வரவேயில்லை. இதை குற்றமாகக் கூறவில்லை. வருவதும், வராததும் அவர்கள் விருப்பம், இதில் ஒன்று மட்டும் வெளிப்பட்டு விடுகிறது. நல்ல சிந்தனை என்பதை அரிதாரம் பூசிக்கொள்ளும் போது மட்டும் வெளிப்படுத்துகிறார்களா? என்றே கேட்கத்தோன்றுகிறது. அவர்களால் ஒரு சுமூகமான சமுதாயத்திற்கான வழியைக் கோடாகக்கூட போடமுடியுமா?.
காஞ்சிபுரம் ‘தரை அரங்கம்’ இணைந்து நடத்திய இரண்டுநாள் இலவச குறும்படப் பயிற்சி (பத்திரிகை மொழியில் சொல்ல வேண்டும் என்றால் வரலாறு காணாத வெற்றி) காஞ்சிபுரம் அளவில் ஒரு இலக்கிய நிகழ்வு இத்தனைப் பொறுப்புடன் மிக நேர்த்தியாக, பயனுள்ளதாக, மிக முக்கியமாக மேடை ஒழுங்கை புறந்தள்ளி நான் பார்த்தவரை நடந்ததில்லை.
பொதுவாக அருண், மாற்று சினமாவைக் குறிவைத்து அதற்கான முன்னோட்டப் பயிற்சியாக பல இடங்களில் தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலம் தன்னுடைய கற்றல், கற்பித்தல் முறையை மிக இயல்பாக பார்வையாளர்களுக்கு கொடுக்கமுடிகிறது. முதல் நாள் பயிற்சி தொடங்கியதும் நகரத்தின் மையப்பகுதில் மீட்டிங் ஒழுங்கு செய்ததால் வாகனங்களின் சத்தம் சற்று தடையாய் இருந்தது. கூர்ந்து கவனித்தவர்களுக்கு அது ஒரு தடையாய் இல்லை. இந்தப் பயிற்சியின் அடிப்படை நோக்கம் இரண்டு நாளில் கற்றுதேர்ந்துவிடுவதல்ல. இத்துறையில் ஆர்வமுள்ளவர்களை, அத்துறைக்குச் சரியான பாதையில் திருப்பிவிடுவதுதான். என்ற உள் கருத்தோடு நிகழ்வு தொடங்கியது. அருண் தன்னுடைய திறமையை நாள்முழுதும் வெளிப்படுத்தினார். முதலில் இத்துறைக்கு வருபவர்கள் இலக்கிய புத்தகங்களை வாசிக்கவேண்டும். வாசித்தல் மூலமாகத்தான் ஒரு நல்ல படைப்பாளியாக வரமுடியும், அதோடு பொதுவெளியில் மக்களின் செயல்பாடுகளை, எதார்த்தமாக வெளிப்படுத்தும் உணர்வுகளை கவனித்து அறிதல் வேண்டும். தொடர்ந்து தேடல் இருக்கவேண்டும் என்கிற கருத்தாடல்களை முன்வைத்து முதல் நாள் பயிற்சி இருந்தது. மேலை நாடுகளில் திரைக்கதை எப்படி உருவாக்குகிறார்கள். அதற்கான அளவுகோள்கள் என்ன? காட்சிப்பிரித்தல் எப்படி செய்யப்படுகிறது. என்னென்ன ஷாட்கள் இருக்கிறது. வெளியில் இருக்கும் பிம்பத்தை பிரேமுக்குள் சரியாக அடக்குவது எப்படி?. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி ஒருவர் சொல்லும் காட்சியை உள்வாங்கிக்கொண்டு எப்படி நடிக்கவேண்டும். போன்ற பல விஷயங்களை முதல் நாளில் கற்பித்தல் வழியாகத் தந்தார். மேலும் ஒரு குட்டிக்கதையைச் சொன்னார். அதற்கு, நீங்களே திரைக்கதை எழுதவேண்டும் என்றார். பத்து பத்து நபர் கொண்ட மூன்று குழுவைப் பிரித்து அதில் இயக்குநர், ஸ்கிரிப்ட் ரைட்டர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என்று தேர்வுசெய்தார். மறுநாள் அக்குழுவின் இயக்குநர் லொக்கேஷன் தேர்தெடுத்துப் படங்கள் எடுத்து வரவேண்டும் என்பதோடு ஒருநாள் நிகழ்வு நிறைவுற்றது.
இரண்டாம் நாள் மீண்டும் பல தொழில் நுட்பங்களை சொல்லிக்கொடுத்தார். பிறகு படம் எடுக்க குழுக்களை அனுப்பினார். மூன்று குழுக்களும் தங்கள் தங்கள் குழுநண்பர்களை அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள். அதோடு மூணரை மணிக்கு மீண்டும் கூடியது. மூன்று குழுக்களும் எடுத்தப்படத்தை திரையில் வரிசைப் படுத்தி காண்பித்ததோடு அப்படம் எப்படி வந்திருக்கிறது. எப்படி வந்திருக்கவேண்டும். இது ஒரு குறும்படம் ஆவதற்கான தகுதியிருக் கிறதா? என்றெல்லாம் பேசினார். எடுத்தப்படங்களில் குறும்படமாக வருவதற்கு வாய்பிருக்கிறது. அதுவும் முயற்சியின் தன்மையில்தான் எடுத்துக்கொள்ளமுடியும். ஆகச்சிறந்ததாக படம் வரவேண்டுமென்றால் தொடர்ந்த முயற்சி வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்தார். வந்திருந்த ஆர்வளர்கள்கள் மிக உற்சாகமாய் தங்கள் ஆக்கங்கள் முதல் முதல் திரையில் காண்கிறோம் என்ற பெருமிதத்தோடு இருந்தார்கள். சிறு பிள்ளைகள் வருங்கால படைப்பாளர்களாக மினுங்கினார்கள்.
எந்த நோக்கத்தை முன்நிறுத்தி பயிற்சியைத் தொடங்கினோமோ அது நிறைவேறியது என்பதற்கு ஆதாரமாக இரண்டாம் நாள் நிகழ்வின் இறுதியில் பல நண்பர் பகிர்ந்துகொண்ட வாசகங்களில் சில-
“நான் குறும்படம் எடுக்க ஏறக்குறைய ஒரு வருஷமாக முயன்றுவருகிறேன். அதற்கான செயலபாடுகளும் துவங்கிவிட்டோம். அதற்குமுன் இந்நிகழ்வின் அறிமுகம் கிடைத்தது. இரண்டுநாள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் இதுவரையில் எது குறும்படம் என்று நினைத்திருந்தேனோ அந்த எண்ணமெல்லாம் தகர்ந்துவிட்டது. இனி ஒரு நல்ல குறும்படம் எடுப்பதற்கான முயற்சியை புதிதாகத் துவங்கப்போகிறேன்.” என்றார்.
(வெங்கடேசன், சென்னை. வழக்குரைஞர்)
“நான் திருக்கழுக்குன்றத்திலிருந்து வந்தேன். எனக்கு சினிமாவின் மீது அதிகான காதல். நான் எப்படியாவது படத்தை இயக்கவேண்டும் என்ற அதிகமான ஆசையால் சீஷன் டிக்கட் எடுத்துவிட்டு தினந்தோறும் கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் சுற்றுவேன். பல இயக்குநர்களின் வாசல் படிகளில் காத்துக்கிடந்தேன். அவர்களெள்லாம் சினிமா பெரிய பிரமாண்டம் அது சிக்கிரம் உனக்கு பிடிபடாது என்றே அலட்சியப்படுத்திவிட்டார்கள். அப்படி இருந்த நிலையில்தான் தினமலரில் இச்செய்தியைப் பார்த்தேன். கலந்துகொண்டேன். அருண்சார் சொன்னது எதோக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டோம் இதுவேப்போதும் நேராக்ச்சென்று படம் எடுத்துவிடலாம் என்று இல்லாமல் தொடர்ந்து இலக்கியப் புத்தகங்களைத் தேடிப்படிப்பேன். இதைப்போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வேன். வாய்ப்பு வரும்போது நல்ல படம் எடுக்க முயற்சி செய்வேன்” என்று உணர்ச்சி மிகுந்த நன்றியால் சொன்னார்கள்.
இதுதான் இந்நிகழ்வின் வெற்றியாக நான் கருதுகிறேன். உள்ளூர் நண்பர்களுடன் வெளியூர் நண்பர்கள் சேர்ந்த இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு செயல்பாடுகளில் இறங்கி செயல்படவேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்நிகழ்வை ஏற்பாடு செய்தலில் இருந்து என்னுடன் ஒத்துழைப்புத்தந்த நண்பர் லோகநாதன், தரும, ரத்தினகுமார், காமராஜ், சிவா, பேனா முனைஅச்சக நண்பர் சண்முக சுந்தரம். உணவு ஏற்பாடு செய்துத்தந்த திருமதி. கவிதா இடம் அளித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே. பாலாஜி. மீனம் நகலகம் உரிமையாளர் திரு. ராஷேஸ் ஆகியோருக்கும்.
‘தினமலர்’ பத்திரிகையின் காஞ்சிபுரம் பொறுப்பாளருக்கும் தரை அரங்கின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். முக்கியமாக வெளியூர்களில் இருந்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.
ஜே.டேனியல்

No comments:
Post a Comment