நாவல்
ஆல்பம்
தொடர்-சரளா 6
தொடர்-சரளா 6
அவள் ஒவ்வொரு கட்டத்தைக்
கடக்கும்போதும் அண்ணனையோ, அப்பாவையோ எந்த நிர்பந்தத்துக்கும்
ஆளாக்கவில்லை. ஏற்ற வயதில் பூப்படைந்தாள். சடங்கு முடிந்ததும்
மற்றப் பெண்களைப் போலவே கூலி வேலைகளுக்குப் போனாள். அவளுக்கு எந்த நடிகைகளின்
முன்மாதிரியும் கிட்டவில்லை. நாங்கள் முழு பாதுகாப்புத் தருகிறோம் என்று இப்போது
கம்பெனிகள் வீட்டிற்கே வந்து அழைத்துச் செல்வதுபோல் அப்போது அவளை எந்தக்
கம்பெனியும் அழைக்கவில்லை. ஒரு தலையாரியின்
வீட்டில் டேப்ரிக்காடரை சுற்றி நின்றிருந்த பெண்களும், ஆண்களும் “உள்ள ஆளு
இருக்கிறாங்கடி அதான் அவன் சொல்றத, அப்படியே திருப்பிச் சொல்லுது“என்று அதி
மேதாவித்தனமாக எல்லோரும் சொல்லிக் கொள்ளும்போது, சரளாவும் ஆச்சரியப் பட்டவர்களில் ஒருத்தியாக இருந்தாள்.
வாழ்க்கை அமைவதற்கு சிலருக்கு நீண்ட நாள் காத்திருக்க
வேண்டியுள்ளது, சிலருக்கு எந்த கஷ்டமும் இல்லாமல் மிகச்சுலபமாக முடிந்துவிடுகிறது.
மிகச் சுலபமும் அல்ல. மிகக் கஷ்டமும் அல்ல. சரளாவிற்கு திருமண ஏற்பாடுகள்
நடந்தேரின. அந்த நாட்களில் அவளுக்கென்று தனியான விருப்பம் வைத்துக்கொண்டதில்லை. அதற்காக அவளுக்கு எந்த ஆசையும் இருக்கவில்லை என்று கறாராகவும் சொல்லிவிடமுடியாது. குடும்பத்தை அதிக வருத்தப் படுத்துவதில் அவளுக்கு விருப்பம் குறைந்திருந்தது.
ஒரு சுவையான தேநீரில் கூட ஒரு குடும்ப உறவு உருவாகிறது. அப்படி இணைகிற ஆயிரக்கணக்கான ஜோடிகளில் சரளாவும் ஒருவள். வாழ்நாள் முழுவதும் சிறிது கருத்துவேறுபாடும் இல்லாமல் வாழவேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டவள் அல்ல. அவள் வருமானத்தை எதிர்பார்க்கிற கணவனாய் இருந்தாலும், கணவன் செய்கிற எந்த வன்முறைகளையும் நல்லவைகளையும் பிரித்து புரிந்துகொள்கிறவள். ஆனால், நேர்மாறான வன்தான் அவளுக்கு வாய்த்தான். மேலும் உழைக்கத் தெரியாதவன் என்றாலும், இவள் உழைத்துவந்ததையும் சேர்த்து குடித்தழிக்கும் பன்புள்ளவன். சரளா குழந்தைப் பருவத்திலிருந்தே அதிகச் செல்வாக்கு இல்லாமல் போனாலும், வயிறு காய்ந்து வளரவில்லை. எட்டாவது வரை பள்ளி அனுபவம் உண்டு.
சரளா, சண்முகத்திடம் பேசினாள். “அப்பா, நான் போவதில் உங்கள் யாருக்குமே வருத்தமில்லாதபோது நான் எங்குப்போனால் என்ன?. அண்ணன், குழந்தைப் பருவத்தில் பிஞ்சுக்கரங்களைப் பிடித்துத் தூக்கி, என் கன்னங்களை முத்தம் செய்தானா என்பது என் நினைவில் இருக்கவே யில்லை. தாயின் குடம்தூக்கித் தேய்ந்த இடுப்பில்தான். என் பிறப்புறுப்பும் தேய்ந்திருக்கிறது. நடை பயிலும் தருணங்களில் என்றாவது நீ, என்னைக் குளுப்பாட்டித் துடைத்தபோது என் பிறப்புறுப்பை கிள்ளி முத்தம் செய்திருக்கிறாயா? இவைகள் குழந்தைப் பருவத்திலேயே எனக்கு நடந்தேராதபோது. இந்நாளில் உங்களிடம் அதிகபட்ஷமாக அன்பான சிறு உரையாடலையும் எதிர்பார்க்கமுடியாது. அப்பா, உங்களில் அம்மாவின் முகம் தெரிவதால் கூச்சமற்ற வார்த்தைகளை வெளிப்படுகிறேன். நீங்கள் எனக்கு கணவனைத் தெரிந்தெடுத்தற்காக உங்கள் மீது வருத்தப்பட வில்லை. தொண்ணுத்தொண்பது நபர்கள் ஒரே தன்மையில் இருக்கும் போது யாரிடத்தில் உண்மையைத் தேடமுடியும். ஆனால், வெளிப் படையாக, மிகச்சுலபமாகத்தெரியும் அவன் குணங்களை தெரியாததுபோல் இருந்துவிட்டீர்களே அதுதான் என்னால் தாங்கமுடியவில்லை. நான் மீண்டும் தவறு செய்கிறேன். நீங்களும் தொண்ணுத்தொண்பது பேரில் ஒருவர் என்பதை அடிக்கடி மறந்துபோகிறேன். உங்களுக்கு நாபகம் இருக்கிறதா? கல்யாணம் ஆன அதேவாரத்தில் தண்டுபோல் இருந்த கைகளில், முழங்கைக்குமேல் கறுத்தக் கொப்பளங்கள் காட்டியிருக்கிறேன். அப்போது எனக்கிருந்த கூச்சத்தினால் அதேக் கொப்பளங்கள் என் தொடையின் இரு பக்கங்களிளும் புண்ணாய்க்கசிந்தன அதைச் சொல்லவில்லை. அப்பா, இப்போது சந்தர்ப்பத்துக்காய் நான் பொய் சொல்லவில்லை. என் தொடைகளில் அதன் தழும்புகள் இன்னும் சாட்சியாய் இருக்கின்றன.
அப்பா, நீங்கள் நன்றாக யோசித்துப்பாருங்கள். உங்களால் தாங்க முடியாதபடி ஏதாவது பாரத்தை ஏற்றிவைத்தேனா? உங்கள் வாழ்வாதாரத்துக்கான பொருளை விற்று ஜிமிக்கி வாங்கியதால் நீங்கள் போட்ட அரை சவரன் ஜிமிக்கிக்கூட எனக்கு பாரமாகவே இருந்தது. தோல்களின் மேல் படிந்துக்கொள்கின்ற எதுவுமே என்னுடன் கடைசிவரை வரப்போகிறதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அப்பா, உங்கள் முகத்துக்கு மறைவாகச் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும், நேரடியாகவே சொல்லிவிட்டேன். பேய்ப் பிடித்தவள் என்றக்கட்டுக்கதை எனக்குச் சில சுதந்தரத்தைக் கொடுப்பதால் அந்தப் பட்டத்தை கவனமாகப் பாதுகாக்கிறேன். இதற்கு மேலும் போ என்றால், உங்கள் ஆசைப்படி போகிறேன். மீண்டும் வருவேனா? என்பது என்கையில் இல்லை.” என்றாள். சரளாவின் கண்கள் கலங்கி வடிந்தது. சண்முகம் அழுது வடிந்தார்.
நல்லவன் வேஷந்தரித்து வந்தவன் சரளா இல்லனா ஒரு கமலா என்று வேகமாக நடையைக்கட்டினான்.
தாய்மாமன் மகன் வெளியூரிலிருந்து வந்தபோது “எப்ப வந்தே மாமா, அக்கா எப்படி இருக்கிறது“ என்றாள். அவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மூன்றுமாதம் முன்புதான் “என் சின்ன மாமாவ விட்டுட்டுபோக எப்பிடிக்கா மனசு வந்தது. பிஞ்சும் பூவுமா விட்டுட்டு போயிட்டியே அக்கா“ என்று அடித்துக்கொண்டு அழுதாள். இப்போதெல்லாம் சரளாவை யாருமே கூலி வேலைக்கு அழைப்பதில்லை. தன் பெரியப்பா வீட்டில், தன் தாய்மாமன் வீட்டில் ஏதாவது சொல்லும் வேலையைச் செய்துக்கொண்டு அவர்கள் போடும் சாப்பாடுகளைச் சாப்பிடுவாள். நாளுக்கு நாள் உருகிக்கொண்டே வந்தாள். அவள் அண்ணன், குடும்பத்தில் தண்டச் சோறுகள் கூடிவிட்டது என்று சாடிக்கொண்டிருந்தான். சண்முகத்தை பாதுகாத்துக்கொள்ளவே அவரால் முடியவில்லை. அவள் யார் வீட்டிலாவது பிழைத்துக்கொள்வாள் என்று சண்முகம் விட்டுவிட்டார். அண்ணன், குறிசொல்பவர்கள், பேய் ஓட்டுபவர்கள் கைகளில் சரலாவை ஒப்புக்கொடுத்தான். இன்னொரு மூன்று மாதங்களில் சரளா ஓடானாள். ஒண்டித்திண்ணையில் ஒரு நாள் பிணமானாள். சாவுக்கு வந்த தாய்மாமன் மகன் சரளாவின் முகத்தைப் பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் ஒரு இளம்பெண்ணின் வாழ்வு இல்லாமல் போவதற்கு யார் காரணம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
ஜே.டேனியல்
தந்தை, அவள் திருமணத்தை நல்லபடியாகத்தான் நடத்தினார்.
அவள் மிக மென்மையாகவே இருந்தாள். ஆனால், அவளுக்கு ஏற்பட்ட இரவு அனுபவங்கள் மிகக்கொடூர மிருகத்தைக்காட்டியது. அவள் சகிப்புத் தன்மையை மீறித்தான் முடியாமல்
அடிக்கடி வெளியில் ஓடிவருகிறாள். அப்படி ஓடி வரும்போது புடவையைச் சுருட்டிக்கொண்டு,
ஜாக்கட் வாய்பிளந்த நிலையில் பதட்டத்துடன் இருப்பாள். அவனின் பெற்றோர்கள் ஏதாவது
பேயின் தொடுப்பு இருக்குமா என்று ஆலோசனைச் செய்து மீண்டும் அறைக்குத்
துரத்தினார்கள். கணவனைவிட இவர்களுக்கு அது தினம் தினம் நிரைவேறவேண்டும் என்பதில்
அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். சரளாவை அந்த அறைக்கு அனுப்புவதுகூட அவளுக்கு
மனக்கசப்பைக் கொடுக்கவில்லை. இன்பத்தில் திளைக்கிற ஒரு நிகழ்வு, இந்தளவு மன நோவைக்
கொடுக்க என்னக்காரணம், யாருக்கும் தெரியவில்லையே என்று வேதனைப்பட்டாள். இதற்கிடையில் அவளுக்குப் பேய்
பிடித்திருக்கிறதென்று பரப்பப்ட்டது. இது ஒருவகையில், இரவுத்துன்பங்களில் இருந்து
விடுபட சரளாவுக்குச் சரியான மருந்தாகவே இருந்தது. இதன் பாசாங்குகளைச் சற்றே
கடைபிடித்தாள். அதுவே, அவளைத் தாய்வீட்டுக்கு அனுப்பக்காரணமானது. அது சரளாவுக்குச்
சந்தோசம்தான். இருந்தாலும் இரு பக்கத்தூற்றலும் அவள் காதுகளைப் புண்ணாக்கிக்கொண்டே
இருந்தது.
காதுகளின் புண் இதயம் வழியாகப் பாய்ந்து உடல் முழுதும்
உள் ரணமாகிக்கொண்டே இருந்தது. ஆனால், அவளின் தோல் பளபளப்பாகவே இருக்கிறதென்று
பார்க்கிறவர்கள் சொல்லிக்கொண்டார்கள். கல்யாணம் செய்துகொள்ளாமல் மனித வாழ்வு
நிறைவு பெராதா? கடைசிவரை வாழ்வதற்கு மனிதன் ஏன் ஆசைப்படவேண்டும். எல்லா உயிர்களும்
தன் வாழ்நாளை தக்கவைத்துக் கொள்வதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறதா? அல்லது அப்படி செயல் இப்படி
எல்லாம் அவள் யோசித்தாள். உனக்கு என்னத் தெரியும் அவள் சிந்தனையில்
புகுந்தாயா? என்ற கேள்வியை எழுப்பவேண்டாம். அப்படிச் சிந்தனை இருந்ததால்தான், எந்த வலிக்கும் தொடர்ந்து சகஜமாக வாழ்கிறாள்.அவளிடம் ஒருநாளும் மாறுபட்ட செயல்
வெளிப்பட்ட தேயில்லை. சின்ன பிள்ளைகள்கூட
அவளை சரளா என்றே அழைப்பார்கள். சில நேரம் கிண்டல்செய்வார்கள். கிண்டல்
செய்கிறார்கள் என்று அந்தப் பிள்ளைகளிடம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருப்பதில்லை.
யாரிடத்திலும் புகார் சொல்லுவதும் இல்லை.
அவள் மற்றப்பெண்களைப்போலவே நல்ல உடை அணிகிறாள். நன்றாக
வேலை செய்கிறாள். அந்தப்பணம் வீட்டில் கொண்டுவந்துக் கொடுத்தால்தான் அண்ணனும்
அண்ணிக்கும் முகம் மளர்கிறது. இல்லை என்றால் இரவு சாப்பாட்டுத்தட்டில் பாதி
வயிறுக்கும் பங்கம்தான். பதார்த்தங்களாக ஊறுகாய்கூடக் கிடைப்பதில்லை. கல்யாணம் செய்துக்கொண்டவனுக்கும், தாயின் குடும்பத்திற்கும் வித்தியாசமேத் தெரியவில்லை. எதையும்
அந்தந்த சந்தர்ப்பத்தில் வாழ்ந்துத் தீர்ப்பதுதான் வாழ்க்கை என்பதுபோலவே அவள்
நடைமுறை இருந்தது. ஆறுமாதம் கழித்து மிக நல்லவனாக மாறிவிட்டான்.
இப்படித்தான் அவனின் அடிபொடிகள் சொன்னார்கள். சரளாவின் தகப்பன் சண்முகம்கூட அனுப்பிவிடலாம் என்றுதான் முடிவுசெய்தார். இதன்மூலம் தன் பிள்ளை, மருகளிடம் படுகின்ற பாடுகளைச் சற்றேனும் காணாமல் இருக்கலாம் என்று நம்பினார்.
சரளா, சண்முகத்திடம் பேசினாள். “அப்பா, நான் போவதில் உங்கள் யாருக்குமே வருத்தமில்லாதபோது நான் எங்குப்போனால் என்ன?. அண்ணன், குழந்தைப் பருவத்தில் பிஞ்சுக்கரங்களைப் பிடித்துத் தூக்கி, என் கன்னங்களை முத்தம் செய்தானா என்பது என் நினைவில் இருக்கவே யில்லை. தாயின் குடம்தூக்கித் தேய்ந்த இடுப்பில்தான். என் பிறப்புறுப்பும் தேய்ந்திருக்கிறது. நடை பயிலும் தருணங்களில் என்றாவது நீ, என்னைக் குளுப்பாட்டித் துடைத்தபோது என் பிறப்புறுப்பை கிள்ளி முத்தம் செய்திருக்கிறாயா? இவைகள் குழந்தைப் பருவத்திலேயே எனக்கு நடந்தேராதபோது. இந்நாளில் உங்களிடம் அதிகபட்ஷமாக அன்பான சிறு உரையாடலையும் எதிர்பார்க்கமுடியாது. அப்பா, உங்களில் அம்மாவின் முகம் தெரிவதால் கூச்சமற்ற வார்த்தைகளை வெளிப்படுகிறேன். நீங்கள் எனக்கு கணவனைத் தெரிந்தெடுத்தற்காக உங்கள் மீது வருத்தப்பட வில்லை. தொண்ணுத்தொண்பது நபர்கள் ஒரே தன்மையில் இருக்கும் போது யாரிடத்தில் உண்மையைத் தேடமுடியும். ஆனால், வெளிப் படையாக, மிகச்சுலபமாகத்தெரியும் அவன் குணங்களை தெரியாததுபோல் இருந்துவிட்டீர்களே அதுதான் என்னால் தாங்கமுடியவில்லை. நான் மீண்டும் தவறு செய்கிறேன். நீங்களும் தொண்ணுத்தொண்பது பேரில் ஒருவர் என்பதை அடிக்கடி மறந்துபோகிறேன். உங்களுக்கு நாபகம் இருக்கிறதா? கல்யாணம் ஆன அதேவாரத்தில் தண்டுபோல் இருந்த கைகளில், முழங்கைக்குமேல் கறுத்தக் கொப்பளங்கள் காட்டியிருக்கிறேன். அப்போது எனக்கிருந்த கூச்சத்தினால் அதேக் கொப்பளங்கள் என் தொடையின் இரு பக்கங்களிளும் புண்ணாய்க்கசிந்தன அதைச் சொல்லவில்லை. அப்பா, இப்போது சந்தர்ப்பத்துக்காய் நான் பொய் சொல்லவில்லை. என் தொடைகளில் அதன் தழும்புகள் இன்னும் சாட்சியாய் இருக்கின்றன.
அப்பா, நீங்கள் நன்றாக யோசித்துப்பாருங்கள். உங்களால் தாங்க முடியாதபடி ஏதாவது பாரத்தை ஏற்றிவைத்தேனா? உங்கள் வாழ்வாதாரத்துக்கான பொருளை விற்று ஜிமிக்கி வாங்கியதால் நீங்கள் போட்ட அரை சவரன் ஜிமிக்கிக்கூட எனக்கு பாரமாகவே இருந்தது. தோல்களின் மேல் படிந்துக்கொள்கின்ற எதுவுமே என்னுடன் கடைசிவரை வரப்போகிறதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அப்பா, உங்கள் முகத்துக்கு மறைவாகச் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும், நேரடியாகவே சொல்லிவிட்டேன். பேய்ப் பிடித்தவள் என்றக்கட்டுக்கதை எனக்குச் சில சுதந்தரத்தைக் கொடுப்பதால் அந்தப் பட்டத்தை கவனமாகப் பாதுகாக்கிறேன். இதற்கு மேலும் போ என்றால், உங்கள் ஆசைப்படி போகிறேன். மீண்டும் வருவேனா? என்பது என்கையில் இல்லை.” என்றாள். சரளாவின் கண்கள் கலங்கி வடிந்தது. சண்முகம் அழுது வடிந்தார்.
நல்லவன் வேஷந்தரித்து வந்தவன் சரளா இல்லனா ஒரு கமலா என்று வேகமாக நடையைக்கட்டினான்.
தாய்மாமன் மகன் வெளியூரிலிருந்து வந்தபோது “எப்ப வந்தே மாமா, அக்கா எப்படி இருக்கிறது“ என்றாள். அவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மூன்றுமாதம் முன்புதான் “என் சின்ன மாமாவ விட்டுட்டுபோக எப்பிடிக்கா மனசு வந்தது. பிஞ்சும் பூவுமா விட்டுட்டு போயிட்டியே அக்கா“ என்று அடித்துக்கொண்டு அழுதாள். இப்போதெல்லாம் சரளாவை யாருமே கூலி வேலைக்கு அழைப்பதில்லை. தன் பெரியப்பா வீட்டில், தன் தாய்மாமன் வீட்டில் ஏதாவது சொல்லும் வேலையைச் செய்துக்கொண்டு அவர்கள் போடும் சாப்பாடுகளைச் சாப்பிடுவாள். நாளுக்கு நாள் உருகிக்கொண்டே வந்தாள். அவள் அண்ணன், குடும்பத்தில் தண்டச் சோறுகள் கூடிவிட்டது என்று சாடிக்கொண்டிருந்தான். சண்முகத்தை பாதுகாத்துக்கொள்ளவே அவரால் முடியவில்லை. அவள் யார் வீட்டிலாவது பிழைத்துக்கொள்வாள் என்று சண்முகம் விட்டுவிட்டார். அண்ணன், குறிசொல்பவர்கள், பேய் ஓட்டுபவர்கள் கைகளில் சரலாவை ஒப்புக்கொடுத்தான். இன்னொரு மூன்று மாதங்களில் சரளா ஓடானாள். ஒண்டித்திண்ணையில் ஒரு நாள் பிணமானாள். சாவுக்கு வந்த தாய்மாமன் மகன் சரளாவின் முகத்தைப் பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் ஒரு இளம்பெண்ணின் வாழ்வு இல்லாமல் போவதற்கு யார் காரணம் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
ஜே.டேனியல்
No comments:
Post a Comment