கொள்ளி
அழகாக எரிந்துகொண்டிருந்தான். அவனை அப்படித்தான் ஒப்புமைச் செய்யவேண்டும். முக்கிய வேலை செய்துகொண்டிருக்குபோது, அதைச் சற்றுநேரம் நிறுத்திவிட்டு கண்ணில் படுகின்ற காகிதங்கள், குப்பை கூளங்களைக் குவியலாக்கி கொளுத்திவிடுவான்.
இப்படிச் சொல்வதால் அவனை பயித்தியம் என்று நினைத்துவிடாதீர்கள். ஆனால், பயித்தியக்கூறுகள் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. அத் தன்மை இல்லாத மனிதர்கள் யாராவது உண்டா? அவன் மற்றவர்களைப் போலவே எல்லா வேலைகளையும் ஒழுங்காகவேச் செய்தான். கடை முதலாளி எப்போதும் அவனை பாஸ் என்றுதான் அழைப்பார். மதிப்பு அடிப்படையில் அந்தப் பெயர் அமைந்ததாகத் தெரியவில்லை. தன்னிடம் வேலை செய்யும் நபருக்கு அப்படி ஒரு பெயர் வைத்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். அதனால் முதலாளி முற்போக்கான சிந்தனை உடையவர் என்று நினைத்து விடவேண்டாம். இருபத்திமூன்று வயதேதான் ஆகிறது என்றாலும் மதவாதிகளைவிடத் தீவிரமான அனுஷ்டானங்களைக் கடைபிடிப்பவர். (பரம்பரையாக திராவிடக் கட்சிகளில் முக்கியமாக உழல்பவர்.) அப்படி இருந்தும் தன் பணியாளனுக்கு பாஸ் என்று பெயர் வைத்து அழைக்கிறார் என்றால், அதற்கானத் தகுதி வேலையாளிடம் ஏதோ ஒருவகையில் இருக்கவேண்டும். ஒரு வேளை அப்படி இல்லை என்றாலும் தான் வியாபாரம் நடத்துவதில் அவன் மூலமாக கூடுதலான லாபம் கிடைக்கவேண்டும். அப்போதுதான் அப்படி அழைக்க வாய்ப்புண்டு.
மூன்று சக்கர ட்ரே சைக்களில் இருபத்தியைந்து லிட்டர் கேண்களை அடுக்கி அதன் மீது தவலைகளையும் வைத்துக்கொண்டுவருவான். அதைபோல காலை, மாலை இரண்டுவேலை தண்ணீர் எடுப்பது. இரண்டுவேலை பாத்திரங்கள் கழுவுவது. வெங்காயம் அரிவது இவனின் அன்றாட வேலையாகும். எல்லா வேலைகளையும்விட வெங்காயம் அரிவதுதான் அவனுக்கு மிகப்பிடித்தமான வேலை. கடை முதலாளி இம்மூன்று வேலைகள் தவிர்த்து, மக்களோடு உரையாடும் எந்த வேலையுமே அவனுக்கு விடமாட்டார். பொதுவாகப் பெண்கள் கடைக்கு வந்தால் முதலாளி உடனே பாஸிடம் வெங்காய பேஸனைக்கொடுத்து கடைக்கு வெளியே அனுப்பிவிடுவார். கடையில் சம்பளம் கொடுக்கிறார்கள். அது தற்போது சங்கங்களால் தீர்மானிக்கப்பட்டதாக இருக்காது. முதலாளியும் முழுதாக அவன் உழைப்பை சுரண்டிக்கொள்கிறார் என்று சொல்ல முடியாது. பாஸ்சுக்கு வெளியிடங்களில் ‘டீ’ மாஸ்டருக்கு என்ன சம்பளம். எடுபிடி வேலை செய்கிறவர்களுக்கு என்ன சம்பளம் என்பது தெரிந்திருந்தது. அவன் சம்பளத்தைப்பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை.
பாஸ் இயல்பான மாநிறத்திலிருந்து, படிப்படியாக இந்த கறுப்பு நிறத்திற்கு வந்துசேர்ந்திருக்கிறான் என்பதை எந்த நபரும் பார்த்தவுடன் சொல்லி விடலாம். முகத்தில் சதை ஒட்டி கன்ன எலும்புகள் துருத்திக்கொண்டிருந்தது. சின்ன கண்கள் இரண்டும் உள் அடங்கியிருந்தது. கீழ் உதடு சற்று பருத்து தொங்கியது போன்று இருந்தது. அவன் மூக்கின் துவாரங்கள் அதிகமாக தெரியாதபடிச் சப்பையாக இருந்து, கிளி மூக்குபோல முனைக் கூராக இருந்தது. குட்டி நாய்வாலின் முனையைப்போல் மீசை மேல்நோக்கி மடிந்திருந்தது. கழுத்தில் எதோ தாயத்துக் கட்டியிருந்தான். அடர்த்தியான முடி உருண்டையாக வாரியிருந்தான். வலக்கையில் ஒரு அங்குல அகலத்தில் செப்பு தகடு அணிந்திருந்தான். இடக்கையில் கறுப்பில் ஒன்று, சிகப்பில் ஒன்று கயிர்கள் கட்டியிருந்தான், மேலும் சில்வர், காப்பர், ரப்பர் இவற்றில் தலா ஒரு வலையம் போட்டிருந்தான். சட்டை எப்போதும் லேசாக அழுக்கைப் பூசியிருக்கும். பேண்ட் முட்டிக்குக்கீழ் மடித்துவிட்டிருப்பான். மூன்று, நான்கு நாட்கள் அதேத் துணிகள் போட்டிருப்பான். கடையில் நடமாடும்போது கெட்டவாடை அடிக்கிறது என்று யாருமேச் சொன்னதில்லை. அதை நானும் ஊகித்திருக்கிறேன். மாலை வேலைகளில் மட்டும் லேசான வேர்வை வாசம் வரும். அது எல்லா மனிதர்க்குள்ளும் வித்தியாசப் படுந்தானே.
மதிய வேளைகளில் கடையில் பார்சல் சாப்பாடு, லெமன், தக்காளி, தயிர் சாப் பிட்டு போடுவது, வேஷ்ட் கேணில் நிரம்பிவிடும். அதை குப்பைப் பகுதிக்கு எடுத்துச் செல்வான். மொத்தமாகக் கொட்டிவிட்டு வந்துவிட மாட்டான். அதிலிருக்கும், சாதம் மடித்தக் காகிதங்கள் ஒவ்வொன்றாக எடுத்து உதறிவிட்டு காகிதத்தைக் கீழேக்குவியலாகப் போடுவான். கொஞ்சம் சேர்ந்தவுடன் அதைக் கொளுத்தி, அது எரிந்து கொண்டிருக்க மேலும் ஒவ்வொன்றாக எடுத்துப்போடுவான். தீ வேகமாக எரியும். அதன் பிறகு கேணைக் கழுவிக்கடைக்குள் கொண்டுவருவான்.
அடுத்த வேலையாக மதியம் தண்ணீருக்குக் கிளம்புவான் தாலுக்காபீஸை விட்டு வெளியேரும் மூலையில் சைக்களை நிறுத்தி அங்கு கிடக்கும் சிறு சிறு காகிதங்கள், அசோக மரத்தின் காய்ந்த இலைகள் என்று ஒன்று சேர்த்து கொளுத்திவிடுவான். அந்தக் குச்சியிலேயே ஒரு பீடியைப் பத்தவைப்பான். சற்று நேரம் தனிந்தபிறகு கிளம்புவான். எந்த மூலையில் பாலாற்றுத்தண்ணீர் வரும் என்பது அவனுக்குத்தெரியும். எல்லாவற்றிலும் தண்ணீர் பிடித்தபிறகு அந்தச் சுற்று வட்டாரத்தில் எப்படியும் இரண்டு இடங்களிலாவது கொளுத்தி விடுவான். தொடர்ந்து ஏன் அப்படிச் செய்கிறான் என்பதை யாருமே கவனிக் கவில்லை. கவனித்திருந்தாலும் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று யாரும் கேட்டதில்லை. மேலும் சிறு செடியில் ரோஜாக்கள் பூப்பதுபோல் நெருப்பின் மிதமான ஜீ”வாலை எரிவதால் எதோ தூய்மைப் படுத்துகிறான் என்ற அடிப்படையில் கண்டுகொள்ள மாட்டார்கள். பொதுவாக அவரவற்கு ஆபத்துவராத எதையும் கண்டுகொள்வதில்லை அது வேறுவிஷயம். எந்தத்தெருவிற்குச் சென்று தண்ணீர் பிடித்தான் என்பது முதலாளிக்கு தெரியாது. நான்கு மணிக்குள் எல்லா பாத்திரத்தையும் நிரப்பிக்கொண்டு வரும்போது முதலாளி நிம்மதியடைவான். பாஸ் சற்றுநேரம் பொறுத்து, வெறும் டிக்காஷனை போட்டுக்குடிப்பான்.
அடுத்த வேலையாக, முதலாளி பேஷன் நிறைய இருக்கும் வெங்காயத்தை வடைக்குத் தோதாக நறுக்கக் கொடுப்பான். அந்த வேலையை செய்யத் தோதான இடம், கடையை ஒட்டி தாசில்தார் ஜீப்நிறுத்தும் கொட்டகைதான் இரவில் அவன் படுக்கும் இடமும் இதுதான். முதலில் பச்சமிளகாய் காம்புகளை நீக்கி குவியலாக வைப்பான், இப்போது வெங்காயம் தோலுரித்து சற்றுத்தள்ளி வைப்பான். குவியல் சேர்ந்தவுடன் கொளுத்திவிடுவான். தினமும் இப்படித்தான் நடக்கும். அந்தக்கொட்டகையில் இரண்டு மூன்று இடங்களில் கொளுத்திய சாம்பல்கள் இருக்கும். இன்று கொளுத்திய வெங்காயத்தோலில் சிலது ஈரத்தின் காரணமாக எரியவில்லை என்றால், அப்படியே விட்டுவைப்பான். மறுநாள் அதைத்தொடருவான். நேற்று வைத்த பச்சைமிளகாய்க் காம்புகளைச் சேர்த்து எரிப்பான். சில நேரங்களில் மெல்லிய ராகத்தில் சினிமாப் பாடல் பாடுவான். அது அவனுக்கு மட்டுந்தான் கேட்கும். சில நேரம் மிக மிகக் கேவலமான வார்த்தைகளால் பேசிக்கொண்டிருப்பான். ஆனால், வேலை பாட்டுக்கு நடக்கும். அவன் ஆட்களைப்பார்த்து பேசுவதுபோல் இருக்காது. சற்று, உற்று நோக்கினால்தான் இவ்வளவு ஆபாசமான வார்த்தைகளும் பெண்ணைப் பற்றியதாக இருக்கும். அப்படிப் பேசும்போது வார்த்தைகளைப் பல்லைக்கடித்து, அழுத்தம் கூட்டிப்பேசுவான். அவன் வாய் ஓயவே ஓயாது, அந்தநேரம் பார்த்து ஒரு பெண் முகத்தைப் பார்த்துவிட்டால் போதும் துண்டுபடும் வெங்காயத்தைத் தாண்டி நறுக்க உதவும் கட்டைக் கூட வெட்டுபடும். சொல்லவே வாய்க்கூசும் வார்த்தைகள் கூலிங்பாட்டில் கேஸ் பிரஸர்போல வெளியேறும்.
நடக்கும்போதும், உட்காரும்போதும், வேலைச்செய்யும்போதும் பெண்களின் முகத்தைப் பார்த்துவிட்டால் அந்தரங்கங்களின் பாகங்கள் சின்னா பின்ன மாகாமல் போகாது. அவன் அதிகமாகப் பிரயோகிப்பது ‘பன்னித் தெவிடியா, பன்னி ஜென்மம்’ இவைகள் வராமல் அவன் ஆக்ரோஷம் நிறைவடையாது. அவைகளை ஒன்றிரண்டு கோடிட்டுக்காட்டலாம் என்றால்கூட, என்னமோ எனக்குள் மட்டும்தான் வன்மம் இருப்பதாக கண்டுபிடிப்பார்கள். சில அறிவு ஜீவி வாசகர்கள். அதனால், பத்து நாட்கள் தண்ணீரே வராத சுழலில், மறைமுகமாக உறவு வைத்துள்ள பெண்கள் நான் முன்னால் வந்தேன், நான்தான் முன்னால் வந்தேன் என்ற பிரச்சனை வருகிறது. அப்போது அவர்கள் வாயிலிருந்துப் புரப்படும் வார்த்தைகளை நீங்களே கற்பனைச் செய்துக்கொள்ளுங்கள்.அவன் ஏன் இப்படி நடந்துக்கொள்கிறான் பெண்களைப் பார்த்தால் எதற்காக அப்படி ஒரு ஆவேசம் எழுகிறது, என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறேன் ஒன்றுமே விளங்கவில்லை. பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருக்கிறான். ஜெராக்ஸ் எடுக்க இரண்டுப் பெண்கள் வந்து நிற்கிறார்கள். பாத்திரத்தை சாதாரணமாகக் கழுவிக் கொண்டிருந்தவன். வெறி பிடித்துபோல் தேய்க்கிறான். நங் நங் என்று இடிக்கிறான். எப்போதும்போல், கேட்கமுடியாத வசவுகள். சில வார்த்தைகள் அப்பெண்களில் காதுகளில் விழுகிறது. அப்பெண்கள் அவனைப்பார்க்கிறார்கள். ஆனால், அவன் பாத்திரத்தையேப் பார்த்து தேய்கிறான். அப்பாத்திரத்திற்கு உயிர் இருந்தால் அவனின் இடித்தலால் தாங்க முடியாமல் அழுது கண்ணீர் வடிக்கும். பால் குண்டான்களைக் கழுவும் முன் அதிலிருக்கும் பால் ஏடுகளை சுரண்டி சற்று தள்ளியிருக்கும் கல்லின்மீது வைக்கிறான். ஒரு நாய் ஓடிவந்து தின்றுவிட்டு ஓடிவிடுகிறது.
இன்னொரு நாள் சைக்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு வந்து நின்றான். மற்ற நாட்களைவிட இன்று மூன்று மணிக்குள்ளாக தண்ணீர் கொண்டுவந்தான். வண்டியிலிருந்து குடத்தை இறக்கி கடைக்குள் தூக்கிவரும்போது வழியில் ஒருவர் கவனிக்காமல் நின்றிருந்தார் “ ஊம்...ஊம் என்று குரல் எழுப்புவான். வழியில் நிற்பவர் சற்று பதட்டமடைந்து விரைவாக வழிவிட்டார். சில சமயங்களில் கூட்டநெரிசலில் யாராவது கவனிக்காமல் நின்றுவிட் டிருந்தால் பெண்களை வாழ்த்தும் அதே வார்த்தைகளால் பொழிந்து தள்ளிவிடுவான். எந்தப் பிரச்சனையும் வராது. வழியில் நின்றவர் யாரை சொல்லுகிறான் என்று தெரியாமல் மிரண்டுவிடுவார். பாஸ் தண்ணீர்க் குடத்தைப்பார்த்துப் பல்லைகடித்து பேசிக்கொண்டிருப்பான்.
தண்ணீர் ஊற்றிவிட்டு ட்ரே சைக்கிளை மரத்தடியில் நிறுத்திப் பூட்டுபோடுவான். அங்கு சற்று முன் கொளுத்திய குப்பை எரிந்து முடிந்து கடைசிப் புகையை வெளியேற்றிக் கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் வந்தால் குப்பை அரைகுறையாய் எரிந்தபடி இருக்கும், அதன் புகை கடைக்குள் வருகிறதென்று, இவன் தொல்லை தாங்க முடியவில்லையே என்று முதலாளி தண்ணீர் ஊற்றி அணைத்திருப்பார், அது பாதி எரிந்தும் எரியாமலும் இருக்கும். கடையின் பின்பக்கம் தாசில்தார் ஜீப்பின் கொட்டகையில் நேற்றய வெங்காயத்தோல் பாதி எரியாமல் இருக்கும், சட்டை பாக்கட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து கொளுத்துவான். சரியாகப் பற்றாது. தீப்பெட்டியில் குச்சி தீர்ந்துபோயிருக்கும். உடனே கால் சட்டையிலிருந்து பெட்டியை எடுப்பான். அதிலும் ஒன்றிரண்டு குச்சிதான் இருக்கும். காற்று பலமாக இருப்பதால் அதுவும் ஏமாற்றிவிடும். கொட்டகையின் கீழே மூலையில் தன்னுடைய படுக்கையின் மெத்தையாக ஒரு கையிலி சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். அதைக் கிளறுகிறான் சிறியதும் பெரியதும் மாக இரண்டு சீப்புகள், ஒரு துண்டு கண்ணாடி,சின்ன கத்தி, ஒரு சிகரட், பற்கல் துலக்கும் பிரஸ், கோல்கேட் பவுடர், ஒரு ரூபாய் தேங்கா எண்ணை கவர். இவைகள் கிடக்கின்றது. அவசரமாக தீப்பெட்டியைத் தேடினான். எழுந்து வேகமாப் சென்றான். சாமான் துலக்கும் இடத்திற்கு கூரையின் மேற்பகுதியில் இருந்து ஒரு தீப்பெட்டியை எடுத்து வந்தான். அப்போது வழியில் பறந்து வந்த காகிதத்தைக் கொண்டு வெங்காயத்தோலின், அடியில் சொருகி பற்றவைத்தான். லேசாகத் தீப்பிடித்தது. “ பன்னி ஜென்மம், பன்னித்தெவிடியா” என்ற வாசகம் மந்திரங்கள் போல்சொல்லிக் கொண்டேவந்தான். புகை மட்டுப்பட்டு நன்றாகத் தீப்பிடித்தது. தீயை வளர்க்கும் விதமாக பக்கத்தில் இருந்த மிளகாக் காம்புகளையும் வெங்காயத் தோல்களையும் தீக்கு மேலே மேலே வைத்தான். தீ கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்தது.
ஏறக்குறைய ஒருமாதமாக அவனை அக்கடையில் ஆய்வுசெய்கிறேன். ஆனால் இந்த முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம் எனக்குள் திரும்பத் திரும்ப நினைவு வந்துகொண்டேயிருந்தது. அவனை, இதே தாலுக்கா வளாகத்தில் தான் பார்த்திருப்பதாக நாபகம். ஆமாம் அதேதான். ஒரு முறை ஏதோ சிலப் போராட்டங்களின் கண்துடைப்பாக திடீரென்று மணல் வண்டிகளைப் பிடித்து தாலுக்காபீஸ் முழுக்க நிறுத்தியிருந்தார்கள். (லாரிகள் பிடிபடவில்லை.) மாடுகள் ஏதோ அலுவலக வேலைவேண்டி நேர்முகத்தேர்வுக்கு வந்திருப் பதுபோல் அந்தந்த வண்டிகளில் கம்பீரமாக நின்றிருந்தது. அப்போதுதான் இவன் தன் கொழு கொழு எருதுகளை வைக்கோலால் அதன் முதுகைத் தேய்த்துக் கொண்டிருந்தான். அந்த நேரத்தில் யாரும் செய்யாததை அவன் செய்திருந்தான். அவன் மாட்டின் கால்குளம்பில் புதிதாக லாடம் கட்டியிருப்பான்போல புதிதாக ஆணி கால்குளம்பின்மீது சுருண்டிருந்தது. அப்படியே ‘டீ’க்கடைக்கு வந்து, அப்போதிருந்த முதிர் வயது முதலாளியிடம் என்னத் தலைவரே உங்க ஆட்சியில தப்பு செய்கிற மனுஷங்களைப் பிடிக்கமாட்டாங்களா? வயித்துப்பிழப்புக்கு போராடுகிற வாயில்லா ஜீவன்களைத்தான் பிடிப்பாங்களா?’ என்று ஜோக்கடித்தான். அவைகள் எல்லாம் ஞாபகம் வந்தது.
அப்படித் துடுக்குத்தனமாக இருந்தவன்தான். இந்த நிலைமைக்கு ஏன் வந்தான் கடையின் முதலாளியை கேட்டுவிடவேண்டும் என்று முயற்சி செய்யும் போதெல்லாம் அவர்களின் வியாபாரத் தீவிரம் தடுத்துக்கொண்டேயிருந்தது. அவர்களையும் குறைசொல்ல முடியாது. விபாரத்தில் சற்று முகம் கொடுத்துப் பேசினால் பத்து ரூபாய்க்கு சாப்பிட்டு, ஏழுரூபாய் பணம் கொடுத்துவிட்டுப் போகிறார்கள். அதற்காகவே முதலாளிகள் யாரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதேயில்லை. அவர்கள் ஓய்வாக இருப்பதைக் கணித்து, சற்று நிதானமாகவே பாஸின் கடந்த கால வாழ்வை விசாரித்தேன்.
முதலாளி, இன்று மதியநேரத்தில் சற்று மகிழ்ச்சியாக இருந்தார். அதற்கு முன் பாஸைப் பற்றி அடிக்கடி நான் சில குறிப்பு அறிவதுபோல கேட்டிருக்கிறேன். முதலாளியும் குளுபோல சில விஷயம் சொல்லியிருக்கிறார். இருந்தாலும் இன்று, கூட்டம் இல்லாமல் இருந்ததால் கேட்டவுடன் சொன்னார். “அவுங்க குடும்பத்தில ஏதோ பிரச்சனைணா? நல்லாதான் சம்பாதிச்சான், உனுக்குக்கூட தெரியுமே மணல் ஓட்டுனது. அவுங்க பொண்டாட்டி சரியில்ல. அந்தாள மதிக்கவேயில்ல. சொந்தக்காரப் பையன்னு செலவில்லாம, எப்படியோ கட்டிவச்சி வீட்டோட மாப்பிள்ளையாக் கிட்டாங்க. பாலாறு பக்கத்தில வீடு இருந்ததால, பொண்ணுக்கு அப்பாதான் ஒரு மாட்டுவண்டி வாங்கிக் குடுத்தாரு. அதெல்லாம் செய்த ஒண்டிக் கட்டையான மாமனாரும் போய் சேர்ந்துட்டாரு. வண்டி மாட்டவச்சி நல்லாதான் பொழைச்சான். அந்தப் பொம்பளைக்கு ஏற்கனவே எதிர்வீட்டுக் காரனோட தொடர்பு. எதிர் வீடு என்பதால் ரொம்ப நாள் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் அவளுக்குப் பிடித்தமான வாழ்வு மறைமுகமாகத் தொடர்ந்து இருந்தது. ஒரு கட்டத்தில் அக்கம் பக்கம் நபர்கள். இவனிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னவுடன் மனைவியைக் கேட்டதேயில்லை. எப்படியாவது போகட்டும் என்று இல்லை. மனைவியை நேசித்திருந்தான். இவனே அவளை விட்டு, வாங்கி சாப் பிடுகிறான் என்று சொன்னபோதுதான். மனைவியை கேட்கிறான். அவள் எந்தத் தடையும் இல்லாமல், ஆமாம் நான் அப்படித்தான் நடப்பேன் உனக்கு விருப்பம் இருந்தால் இரு இல்லையானால் உன் வழியைப் பார்த்துக்கொண்டு போ என்று சொல்லிவிட்டாள். அதைக்கேட்டவன் மறுவார்த்தை ஒன்றுமே பேசவில்லை. ஆனால், எப்போதும் போல் இருந்தான். ஒரு நாள் பகலிலேயே எதிர் வீட்டுக்காரன் இவன் வீட்டிற்குள் இருந்திருக்கிறான். இந்தாளு வண்டிய நிறுத்திட்டு வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். எதிர் வீட்டுக்காரன் சற்று அவசரம் காட்டி தன் துணிகளை அலங்கோலமாகப் போட்டுக்கொண்டு வெளியேறினான். ஆனால், தலைத்தெறிக்க ஓடவில்லையாம். மனைவி அவசர அவசரமாகத் தன் ஆடைகளைச் சரிசெய்து கொண்டாளாம். அவன் அவளை ஒன்றுமே கேட்கவில்லையாம் நேராக சமையலறைக்குச் சென்று தண்ணீர் மொண்டுக் குடித்துவிட்டு வெளியேறினானாம். அதற்குள் அவள் சடார் என்று அடுப்படிக்குள் நுழைந்து கிரோஸின் தலையில் ஊற்றி கொளித்திக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாளாம். ஐயோ குய்யோ என்று ஜனங்கள் கூடினார்களாம். அவள் கணவன் ஐய்யய்யோ என்று அடித்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று பெர்ட்சிட் எடுத்துவந்திருக்கிறான். அவள் மேல் போர்த்தி அணைக்கப்போகும்போது. அவள் சத்தமாக உன் சந்தேகபுத்தி இனியாவது நிம்மதியாக இருக்கட்டும், என்று சற்று தெருவில் ஓடினாளாம். இவன் திகைத்து நின்று மீண்டும் ஓடி அவள் மீது பெர்ட்சிட்டை போட்டு மூடி நெருப்பை அணைத்தபின் மருத்துவனைக்குத் தூக்கிச்சென் றார்களாம். ஆனால், வழியிலேயே இறந்துவிட்டாளாம். பிறகு அங்கிருக்கும் மக்கள் பிணத்தை ரொம்ப நேரம் வைத்திருக்கக்கூடாது, என்று அவசர அவசரமாக தூக்கிச் சென்று கொளுத்தி விட்டார்களாம். அதற்கு, இந்த ஆள்தான் கொள்ளி வைத்தாராம்.”
ஜே. டேனியல்

No comments:
Post a Comment