தமிழாசிரியரின் காதுக் கருவி
நம்மையே, நம்பி இருப்பவரைக் கொலை செய்ய நினைக்கிறோம், சீக்கிரமாகவே மரணித்துப் போகிறார்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விடுகிறபோது. புலவர் என்ற பட்டப்பெயருக்கு முழுத்தகுதிவாய்ந்த தழிழாசிரியர். நேற்றுதான் இறந்துபோனார். ஒரு குடையின் கீழ் எல்லா இடங்களையும் கால் நடையாகவே கடந்துவிடுவார். வயதுக் கூட இருந்தாலும், இறந்து போகிற வயது இல்லை. ஒருதனியார்ப் பள்ளியில் பணிபுரிந்து 1993ல் ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்றாலும் பள்ளி அலுவலகத்தில் தன்னார்வமாக பணிசெய்தார். அரசின் எந்தச் சிக்கலான அரசாணைகளையும் வாசித்துத் தெளிவான விளக்கம் தருவார். அதேபோல, அவசர தபால்களை எழுதி அனுப்புவதற்கு அவரை விட்டால் ஆளில்லை. சில நேரம் முதன்மைக் கல்வி அலுவலகமோ, மாவட்டக் கல்வி அலுவலகமோ அவசரக் கடிதத்திற்கு பதில் கோருவார்கள். அந்தநேரம் தலைமை ஆசிரியர் எங்காவது மீட்டிங் சென்றிருப்பார். அந்நெருக்கடியைத் தீர்க்க, தலைமையாசிரியராக நின்று அச்சுப் பிசகாமல் குறித்தநேரத்தில் தபால் அனுப்பிவைப்பார்.

பள்ளியில் எந்தத் தேர்வுகளையும் நடத்துவதற்குச் சிறப்பான முறையில் திட்டமிடுவார். காலையில் பூத்த ரோஜா இதழ்களில் பனிமுத்து ஒட்டியிருப்பதுபோல் அவரின் கையெழுத்து இருக்கும். ஒரு தலைமை கிளர்க் செய்கிற பணிக்கு, எந்த வகையிலும் குறைவில்லாமல் செய்வார். அதற்காக பள்ளியில் மிகக்குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. வெண்மையான வேட்டி, முழுக்கை சட்டைதான் எப்போதும் அணிவார். வேட்டியை வயிற்றின் நடுப்பகுயில் ஏற்றிக் கட்டுவார். ஒருமுறைக் கட்டிவிட்டால், அவிழ்வதற்கு பயப்படும். பள்ளி வளாகத்திற்குள் வந்ததும் குடையை மடித்து ஊன்றிக்கொண்டு வருவார். இடக்கையில் ஒரு மஞ்சள் பை இருக்கும். அலுவலகத்தில் வந்ததும் குடையை ஒரு ஜன்னல் கம்பியில் மாட்டுவார். சீட்டில் அமர்ந்திருக்கும் கிளர்க்குகள் வணக்கம் வைப்பார்கள். அந்த வணக்கங்களில் வேலை இருக்கிறது என்ற கெஞ்சல் இருக்கும். கிளர்க்குகள் இல்லாத என்னைப்போன்ற நபர்கள் வைக்கும் வணக்கங்களில் சிறு கிண்டல் இருக்கும். ‘சில உதவியாளர்கள் எதுக்கு இந்தக்கிழவன் வருது, வயசான காலத்தில் எங்கனா வீட்டில் இருக்காம’ என்று முணுமுணுப்பார்கள். ஆனால், எனக்கு அரசு ஊதியம் வாங்குகிறவர்களை வேலை செய்யவைக்காமல் பாவம் எல்லாவற்றையும் இவர் செய்துகொடுக்கிறாரே என்ற வருத்தம் இருந்தாலும், அவர் வந்தால் சந்தோசம்தான். நான் அவரிடம் நண்பனிடம் கிண்டல் செய்து மகிழ்வதுபோல பேசுவேன். அவர் அதற்கு, எதிர்பதமாக கிண்டலடிப்பார். சில நேரம் தாமாசாகவே குத்தியும் காட்டுவேன். உதாரணமாக “அய்யா, ஒரு வேலைக் கற்றுத்தராதீங்க. எதுக்கு எல்லா வேலை நீங்களே இழுத்துப்போட்டு செய்யிறீங்க. உங்களுக்கு வயசாயிடுச்சி. இப்பள்ளியில் உங்களால ஒரு வாரிச உருவாக்க முடியலையே?'' என்பேன். அதை ஒப்புக்கொண்டவராக “ஏம்பா நானா செய்யக்கூடாதுன்னு சொல்றேன். நீங்ளா வந்து கத்துக்கணும்.” என்பார். இந்த உரையாடல் சிலநேரம் அவரை உறுத்தும். அதற்காகவே என்னை அடிக்கடி முக்கிய வேலைகளில் ஈடுபடுத்துவார்.
மஞ்சள் பையை தான் உட்காரும் சேருக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்வார். 'அய்யா, பையில் என்ன பலமாக இருக்கிறது. என்று பார்க்கமுற்படும்போது. ‘ஏ புளியாவெரை, ஒண்ணும் இல்லடா? கோயிலுக்கு போயிவரேண்டா’ என்பார். பையில் முழுத்தேங்காய் இருபாதியாக இருக்கும் சிறிதளவு பூவும், சில பழங்களும் இருக்கும். சில நேரம் காலையில் கோயிலுக்கு சென்று வருவார்.
அரசுத்தேர்வு நேரத்தில் விடைத்தாள் பண்டல்செய்வோம், அப்போது பைத் துணியின் வாய்ப்புறம் சற்று நீண்டு இருக்கும் அதைக் கிழித்து அய்யாவிடம் காட்டுவேன். 'அய்யா, கோவணத்திற்குச் சரியாக இருக்கும்' என்பேன். “டே, புளியாவெரை நீயே வச்சிக்க. உனக்கு உதவும் என்பார்”.
இதெல்லாம், ஒரு ரகசியம் போலவே தமாசாக நடக்கும். சற்றுத் தள்ளி பண்டல்களையே கவனித்துக்கொண்டிருக்கும் தலைமையாசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் போகாது. இருந்தாலும் வேலை நடந்தால் சரி என்று அமைதியாய் இருப்பார்கள்.
அய்யா, உள்ளாடையாக கிழித்தத் துண்டை கோவணமாகக் கட்டி அதற்குமேல் பட்டாப்பட்டி டிராயர் போடுவார். கைவைத்த வெள்ளை பணியன்தான் அணிவார். அந்தப் பணியனில் இடது மார்பில் சிறு பாக்கட் இருக்கும். அதில் காதுக்கருவி வைத்திருப்பார். ஆப்ஒயிட்டும், மஞ்சளும் கலந்த நிரத்தில் அக்கருவி இருக்கும். இரண்டு செல்போடவேண்டும். செல்போடுகிற இடத்தில் அதன் மூடி சற்று மூளியாக உடைந்திருக்கும். அதனால் சிலநேரம் செல் மேலே வந்துவிடும். அதற்காக ரப்பர் பேண்டை இரண்டு மடிப்பாகப் போடுவார். அலுவலகத்தின் சீட்டில் உட்கார்ந்த உடன் சிலர் அவரிடம் பேச்சுக் கொடுப்பார்கள். அப்போது இடக்கையால் காதை மடித்து வாயைத் திறந்த நிலையில் வைத்துக்கொண்டு ‘இன்னாமா’ என்பார். பக்கத்துச் சீட்டுக்காறர் கேட்கும்போதுகூட அப்படியேக்கேட்பார். கேட்பவர்கள் இரண்டு மூன்று முறைக் கேட்டபிறகு சற்று முகம் சுழிப்பதுபோல் பேச்சை நிறுத்தி விடுவார்கள். அதன் பிறகு, சட்டையின் பட்டனைக் கழட்டி பணியனில் இருக்கும் காதுக்கருவியை எடுத்துச் செல்லை சரியாகப்பொருத்துவார். அதன் மேல் பகுதியில் சத்தம் கூட்டும் பொத்தானை திருகி காதின் ஒயரை சரிசெய்வார். அதற்குப் பிறகு பேச்சை நிறுத்தியவர்கள் தொடருவார்கள்.
நெற்றியில் திருநீறு பட்டையாக அடித்து இரு புருவத்துக்குச் சற்று மேல் நடுவில் குங்குமப்பொட்டு வைத்திருப்பார். இடது மூக்குதுவாரம் சற்று அழுந்தியிருக்கும். வேலைத் தொடங்கும்போதும் முடிக்கும்போதும் ஷண்முகம் பட்டணம் பொடிபோடுவார். பொடி, வேலையை சரியாய்ச் செய்ய கற்றுத்தருகிறதோ என்று நான் சந்தேகப்படுவேன். மூக்கடைந்து ஒரு மெல்லிய ராகத்தோடு பேச்சு வெளியேறும். அவர் வருகைப்பதிவேட்டில் கையெழுத்து இடவேண்டியதில்லை என்றாலும் ஒரு நாள் தவறாமல் பள்ளிக்கு வந்துவிடுவார்.
சில நேரம் வீட்டிற்கு ஏற்றிச்செல்வேன். டூவீலரில் இருந்து இறங்கியதும் வலக்கையை என் தைலைக்கு மேல்தூக்கி ஆசீர்வதிப் பதுபோல் செய்துவிட்டு வீட்டில் சென்றுவிடுவார். வாசலில் அவர் துணைவியார் உட்கார்ந்திருப்பார். அவருக்கு வணக்கம் வைக்கும்போது இந்த மரியாதைதான் அவர்மூலமாக எனக்குக்கிடைத்தது என்பதுபோல் பார்ப்பார். “பிள்ளைகள் நல்லாயிருக் குதுங்களா? வீட்டில ஒரு பொம்பளை இருந்தா நல்லா இருக்கும் யோசனைப் பண்ணு.'' என்றதோடு என் விசாரிப்பை முடித்துக்கொண்டு ‘ஏம்பா, வயசான நேரத்துல உன்னால முடியாது நீ போகவேணாம்ணு சொன்னா கேக்கமாட் டிங்கிறாருபா. அந்தப்பள்ளிக்கு ஒழைச்சதுபோதாதா? நேத்துகூட ரோட்டோரமாப் போன பையனை கார்காரன் இடுச்சிட்டான். இவரு வீடு வந்து சேர்ரவரைக்கும் எனக்கு கொலை நடுங்கிப் போகுது” என்பார்.
முந்தய காலத்து பெண்கள் எவ்வளவுதான் மாபெரும் உருவங்களாக இருந்தாலும், தங்கள் கணவன்மார்களுக்கு ஒரு கோழி குஞ்சுகளைப்போல் எப்படித்தான் அடங்கிப்போகிறார்களோ? என்று நினைத்து ஆச்சரியப் படுவேன். அம்மையாருக்கு நல்ல திடகாத்திரமான உடல்! அய்யாவைவிடக் கூடுதலான உயரம்! ஆனால், தற்போது அடிக்கடிக் கால் வீங்க தவிக்கிறார்.

பொழுதுபோக்குக்காக வேலை செய்கிறேன் என்று அவர் வயதொத்த வர்களிடம் வெளியில் சொல்லிக்கொண்டாலும் தன்னுடையப் பனிரெண்டு பிள்ளைகளை கட்டிக் கரைசேர்க்கவே தொடர்ந்து அப்பணியைச் செய்துவந்தார். பிறந்தது பதினாறுப் பிள்ளைகள். மணல் கொள்ளையடித்தது நான்கு. தற்போது மனித மந்தைக்குள் தங்கியிருப்பதுதான் பனிரெண்டு. மழை, சுழல்காற்று, பூகம்பம் எல்லாவற்றையும் கடந்துதான் பிள்ளைகளை கரை சேர்த்தார். கரைசேர்த்தபிறகும் தான் ஒரு குடும்பத்தலைவன் என்ற பொறுப்பை எந்த பிள்ளைக்கும் கொடுக்கவில்லை. அய்யாவுக்கு மனசு இல்லை என்று அர்த்தமில்லை. ஒரு பிள்ளைக்கூட சொல்லிக்கொள்ளும் படியாக அரசாங்க உத்தியோகமோ நிறையப் படித்தவர்களோ அல்ல. எல்லோரையும்தான் தான் பணிசெய்தப் பள்ளியிலேயேப் படிக்கவைத்தார். இருந்தாலும் யாரும் மேல்நிலையைத் தாண்டவில்லை. சில பிள்ளைகள் அதுகூட இல்லை. எல்லாரும் கைத்தொழில்தான். ஒருவன் டூவீலர் மெக்கானிக், டெய்லர், போர்வெல் போடுவது என்று எல்லோரும் தொழில்தான் நம்பியிருக்கிறார்கள்.
அய்யா, யாரையும் பிரித்துவிடவில்லை. கலியாணம் ஆக ஆக அவர்களாக அக்கம் பக்கம் சென்று குடியேறிவிட்டார்கள். இருந்தாலும், வீட்டிற்கு வந்து காலையில் பெரிய மருமகள் எண்ணை ஊற்றிச்சென்றாள். மதியம் சின்ன மருமகள் மிளகாய்த்தூள் கொட்டிச்செல்வாள். இன்னொருத்தி மாலையில் பருப்புக்கொட்டிச் சென்றாள். வேரொருவள் இரவில் சாப்பாடுப் போட்டுச் செல்வாள். பென்சஷன் வந்தவுடன் என்னிடம் தம்பி போலாமா என்பார். நான் மளிகைக்கடைக்கு அழைக்கிறார் என்று தெரிந்துகொள்வேன். தொடர்ச்சியாக பலமாதம் நான்தான் அழைத்துச்செல்வேன். சில மாதம் கூடாமலும் போகும். பள்ளியில் மாலை நேரத்தில் ஒரு நீண்ட லிஸ்ட் எழுதுவார். நான் ''அய்யா இவ்வளவா வாங்குவீங்க என்று ஆச்சரியமாகக்கேட்பேன். ‘புளியாவெரை இது பதினைந்து நாளுக்கு வராது என்பார். அவரை கடைக்கு அழைத்துச்செல்ல இருக்கும் இந்தச்சாக்கில் “அய்யா, அந்தக் காலத்துல டியூஷன், கீஷன் இல்லையா? பள்ளி முடிச்சிட்டு போனதும், அந்தம்மாவ சொம்மா உடமாட்டிங்களா? வேற வேலையே இல்லையா? உங்கபாட்டுக்கிணு தள்ளிட்டு இருக்கிறீங்களே. என்பேன். மேலும் எப்படிக் காப்பாத்தினீங்க எனும்போது” எழுதுவதை நிறுத்தி இரண்டு கைகளாலும் புத்திப் போட்டுக்கொள்வார்.
பதினோரு பிள்ளைகளுக்கும் தன் கடமையை நிறைவேற்றியது அவர் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனைதான். கடைசியில் பெண்பிள்ளை, மட்டும்தான் டிகிரி முடித்திருக்கிறாள். அவளின் கலியாணத்தை முடித்து விட்டால் வாழ்வின் பயன் தீர்ந்துவிடும். பெண்பிள்ளைக்கு நல்ல இடத்தில் வரன் வந்துவிட்டதால் அதையும் முடித்துவிடப் போராடினார். கொஞ்ச நாளாகப் பள்ளிக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். பிள்ளைகள் திட்டுகிறார்கள் என்றுக் காரணம் சொன்னாலும். காரணம் அதுவல்ல என்றே எனக்குத் தோன்றியது. பெண்ணுக்கு கலியாண நோட்டிஸ் கொண்டு வந்தபோது கிளர்க்கிடம் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சொல்லி கண்ணீர்விட்டு அழுததை நான் கவனித்தேன். “பிள்ளைகள் அந்தக்கொழந்தைக்கு செய்ய தயங்குறாங்கமா. எல்லா எடத்துக்கும் இந்த வெயிலில் போய்வரது தலை வெடிச்சுப்போதுமா” என்றார்.
அலுவலகத்தில் ஒவ்வொருவருக்கும் பத்திரிகை வைத்தார். என்னிடம் வந்தபோது “இன்னா புளியாவெரை எப்பிடியிருக்கிற” என்றார். உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை திசைத் திருப்ப ''நல்லா இருக்கிறேன்யா. அய்யா, எதிர் ஸ்கூல் கொண்டக்கார டீச்சர் கேட்டாங்க.' என்று சிரித்தவாறு கேட்டேன்’ அவருக்கு சரியாகக்கேட்காமல் இடக்கையால் காதை அழுத்திக் கொண்டு ‘இன்னாமா’என்றார். நான் ‘அய்யா அந்த மிஷின் எங்க’ என்று சைகைசெய்து கேட்டேன். ‘ஆங்’ என்று வாயைத் திறந்தே ‘அதுவா, சரியா வேலை செய்யிலமா’. என்று உள்பணியனில் கையைவிட்டு அக்கருவியை எடுத்து அதன் தலைமீது செல்லமாகத் தட்டி, லேசாக சத்தம் கூட்டும் பொத்தானை திருகினார். ‘அய்யா, அதைத் தூக்கிப்போட்டுட்டு வேற ஏதாவது மாத்தக்கூடாதா?’ என்று மிகச் சுலபமாகக் கேட்டேன். உதட்டை லேசாக மடித்து உச்சுக்கொட்டினார். அதுதான் பதிலாக இருந்தது. பிறகு தன் பிம்பத்தை விட்டுக்கொடுக்காதவராக “ஆமாம்பா, சுத்தமா போயிடுச்சிபா. ஏதோ புது மிஷிணு வந்திருக்குதாம், ரொம்ப நாளுக்கு முன்னால என்னிடம் படிச்ச ஒருத்தர் வாங்கியாந்துக் குடுக்கிறேன்னு சொன்னாரு பாக்கலாம்” இந்த பதிலையே இதற்கு முன் இரண்டு முறை என்னிடம் சொல்லியது மீண்டும் நாபகம் வந்தது.

ஆட்டோக்காரன் வெளியில் நின்றிருந்தான். அந்த அவசரத்தில் சென்றார். குடையை மறதியாக டேபிளில் விட்டுசென்றார். அவசரமாக எடுத்துக்கொண்டு ஓடினேன். அவர் போனபிறகு, பணிக்காலத்தை சிறிதுநேரம் அசைபோட்டனர். ஒருவர் அவரிடம் படித்து அதேப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவர் சொல்லும்போது, பிள்ளைகள் வீட்டுப்பாடம் சொல்லலனா, கையின் முட்டிக்கும், தோல்பட்டைக்கும் இடைப்பட்ட சதையைப் பிடித்து திருகுவார். ஒன்றுமே செய்யாதவர் போலதான் அவரின் முகம் இருக்கும் ஆனால், உயிர்போவதுபோல வலிக்கும். சில நேரம் காதைப்பிடித்து திருகுவார். அந்த வலியை எந்தக்கொம்பாலும் கொடுக்கமுடியாது. மேல்நிலைத் தழிழ்யாசிரியர்கூட, அவரிடம்தான் பிழைத்திருத்தம் செய்ய அணுகுவார்கள். ஏன் பள்ளியே புரியாத தமிழ் வார்த்தைகளுக்கு அவரிடம்தான் அர்த்தம் கேட்பார்கள். அவர் ஓவியம் சிறப்பாக வரைவார்.” என்று சொல்லிக்கொண்டே வந்தார்.
இடையில் ஒரு கிளர்க் “பள்ளியில் யாரு ஓய்வுபெற்றாலும், அவர்தான் வாழ்த்து மலர் எழுதுவார்.”என்றார். நான், ‘வேறு எதாவது எழுதியிருக்கிறாரா? என்றபோது யாரும் பதில் சொல்லவில்லை. வீட்டுக்கு போனதும் வேறவேலையில இறங்கிடுவார்போல என்று நான் சிரித்துக்கொண்டே மெதுவாகச் சொன்னேன். அது என் அளவில் இருந்த ஊழியர்கள் கேட்டுசிரித்தார்கள்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு நான் டூவீலரில் போகும்போது ராமாஸ்கேப்பின் அருகே ஓரமாக நடந்துகொண்டிருந்தார். சற்று வேகமாகச்சென்று முன்னாடி நிறுத்தினேன். லேசாக சிரித்தவாரே என் முதுகைத் தட்டிக்கொடுத்தார். வாய்த்திறவாமலே, நன்றாக இருக்கிறாயா என்று கேட்கும்விதமாக வலதுகையை மேலேத் தூக்கினார். நான் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு ‘வாங்கையா ஃகாபி சாப்பிடலாம்’ என்று அழைத்தேன். முன்பெல்லாம் ‘டீ’ சாப்பிட நான் அழைத்தாலும், அவர் அழைத்தாலும் பில் கொடுக்கிறபோது அவர்தான் தருவார். 'அய்யா, நான் தருகிறேன்' என்றுப் பணம் எடுத்தால்கூட ‘டே வையிடா. நீயே கொறைஞ்ச சம்பளம் வாங்குறே’ என்பார்.
இந்தநேரம் அநேகமாக, அவர் பாக்கட்டில் பணம் இல்லாமல் இருக்கவேண்டும். 'வேணாம்மா, இப்பதான் சாப்பிட்டேன்' என்று சற்று மெல்ல இழுத்தார். ‘அய்யா வாங்க, ஒருரே ஒரு ஃகாபி மட்டும்’ என்று அழைத்துச் சென்றேன். அவருக்கு எப்போதுமே ராமாஸ்கேப் ஃகாபிதான் பிடிக்கும். சற்று காலியாக இருந்த இடத்தில் அமர்ந்தோம். சர்வர் வந்தார். 'அய்யா, ரசவடை சாப்பிடுறீங்களா?' தயக்கம் காட்டினார். முகம் சாப்பிடலாம் என்று சொல்வது தெரிந்தது. ஆளுக்கு ஒரு ரசவடை சொல்லிவிட்டேன். அவரை இயல்பு நிலைக்கு மாற்ற பேச்சுக்கொடுத்தேன். எப்போதும்போல் ‘இன்னாமா’ என்று வாய்திறந்தார். பிறகு கருவியைச் சற்று நோண்டினார். இப்போது மிக மோசமாக இருந்தது. நான் பேசுவதை புரிந்துகொள்ள மிகவும் சிறமப்பட்டார். அதைபோல நான் சொல்வது எல்லாம் வீணாகவே காற்றில் மிதந்துபோனது. சிலது அரைகுறையாக அவருக்கும், எனக்கும் விளங்கயது. ஆளுக்கொரு ஃகாபி சாப்பிட்டோம். பின்பாக்கட்டிலிருந்து நூறுபாய்த் தாளை எடுத்து பில் கட்டினேன். பில் கட்டுவதற்காகவே அவரைவிட சற்று முன் நடந்தேன். பணம் செலுத்துமிடத்தில் பணத்தை நீட்டியபோது, ‘இருமா, நான் தரேன்’ என்றார். இருக்கட்டும் ‘வாங்கையா’ என்று அழைத்துச்சென்று வீட்டில் விட்டேன். அவருக்கும் எனக்கும் எந்த புரிதல் இல்லாமல் போன சந்திப்பனாலும், நிச்சயமாக இருவருக்கும் மன திருப்தி இல்லாமல் போகவில்லை. நான் போகும்போதெல்லாம் வாசலில் உட்கார்ந்திருக்கும் அவர் துணைவியார் காணவில்லை. எனக்கு அப்போது விசாரிக்கத் தோன்றவேயில்லை. எதோ அவசரவேலையாக சென்றுவிட்டேன்.
கடந்த வாரம் சென்னையில் ஒரு கவிதை நூல் வெளியீட்டுக்கு சென்றிருந்தபோது நண்பர் மாலையில்தான் சொன்னார். ‘தம்பி அய்யாவின் துணைவியார் இரவு இறந்துவிட்டார்களாம் மாலையில் எடுத்துவிடுவார்கள்’. என்றார். மறுநாள் பள்ளிக்கு வந்து விசாரித்தபோது அய்யா அப்படி அழுதாராம். சிலர், இனி அய்யாவை கவனிப்பார் இல்லை. என்றப் பேச்சு பரவலாகவே பேசினார்கள். ஒரு ஆணுக்கு மாறுபட்ட பால் துணை எவ்வளவு அவசியம் என்று தோன்றியது. இந்த நிலையில்தான், அய்யா நேற்று இரவு இறந்துவிட்டதாக சொன்னார்கள். சற்றும் எதிர்பார்க்காத பேச்சாகதான் இருந்தது. நான் அதிர்ந்துபோனேன். நாளைக்கு அந்தம்மாவின் கருமாதி என்று நினைவு படுத்தினார்கள்.
பள்ளியில் முக்கியப்பணியிருந்தாலும் எப்படியாவது அய்யாவைப்பார்த் துவிடவேண்டும் என்ற ஆவல் கூடிக்கொண்டேயிருந்துது. பிறகு அலுவலகத்தில் தலைமையாசிரியர் உள்ளிட்ட நபர்கள் மாலையுடன் குழுவாகச் சென்று பார்த்தோம். வழியெங்கும் ஆண்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக இருந்தனர். பதினோரு பிள்ளைகளும் அய்யாவின் சாயலாகவே அங்கங்கு பேசியிருந்தார்கள். தலைமையாசிரியரைப் பார்த்ததும் பிள்ளைகள் சூழ்ந்து வந்தார்கள். பலருக்கு துக்கமுகம் இருக்கவில்லை. குளிரூட்டப்பட்ட பெட்டி வைத்திருந்த இடத்தில் இருந்தப் பெண்களில் யாரோ ஒருவள் மட்டும் நாங்கள் நுழைந்தவுடன் அழுதாள். எல்லோரும் அய்யாவைப்பார்த்தார்கள். நான் எல்லாருக்கும் பின்னால் நின்றிருந்ததால் சரியாகத்தெரியவில்லை. அய்யாவின் கடைசி மகள் மட்டும் தலைமாட்டில் சோகமே உருவாக நின்றிருந்தாள். எனக்கு இடம்கிடைத் தபோது பாக்ஸின் பக்கத்தில் சென்று அய்யாவின் முகத்தையே உற்றுப்பார்த்தேன். எதையோச் சொல்ல நினைக்கிறதுபோல அவர் முகம் இருந்தது. அவர் நடமாடிய நாட்களில், இவ்வளவு சோகமாக அவர் முகத்தைப் பார்த்ததேயில்லை. நான், பெரிய மனபாரத்தோடு நிமிர்ந்தபோது, அலமாரியில் செல்கள் கழட்டப்பட்டு ஒயர் அதன் பொருத்து துவாரத்திலிருந்து தனியாக பிடுங்கப்பட்டிருந்தது. யாருடைய தொடுதலும் இல்லாமல் காதுக்கருவி அலங்கோலமாய்க் கிடந்தது.
ஜே. டேனியல்
.

No comments:
Post a Comment