Monday, July 11, 2011

நாவல்

மல‍ரில் -இதழ்  1                                போக்கு


அவ‍ரவ‍ர் வீட்டு வாசலுக்கு நேராக‍ நின்று சிலர் வேடிக்கைப் பார்த்தார்கள். மாலா தலை தெறிக்க ஓடினாள். தெருவில் படுத்திருந்த நாய் பயந்து ஓடியது.  நாய் படுத்திருந்த இடத்தில் தூசுகள் பறந்தன. அவ‍ள் ஓடிய வேகத்தில் ஒரு வீட்டின் கூரையில் உரசிவிட்டாள். வீட்டுக்காரிப் பார்த்தாள்.   மாலா பயந்து ஓடிவருவதற்காக பரிதாபப் பட்டாலும் தன் வீட்டு கூரை முறிந்து கொட்டியதில் உள்ளுக்குள் திட்டினாள்.  எந்தவீட்டிலும் அடைக்களம் கொடுக்க‍ பயந்தார்கள். சிலர் தடுக்க நினைத்தார்கள். பின்னாக அவள் அப்பா துரத்திவந்தான்.  அந்த‍ தெவிடியா வாழாம வரதுக்கு நீங்கதான் காரணம் என்று பழியை நம்மீது சுமத்துவான் என்பதற்காக யாரும் தடுக்க‍வில்லை.  
சண்முகம் மாலாவை எட்டிப் பிடித்தான். அவள் முந்தானை கைக்கு சிக்கியது.  மாலா யாரோ சுற்றிவிட்டது போல் கயிறு பிரிந்த‍ பம்பரமாக சுற்றி ஓடினாள். ஜாக்கட், பாவாடை மட்டுமே இருந்தது. தற்செயலாக பார்க்கும் ஆண்களின் பார்வைக்கே தன் மார்பகங்களின் ஆடைகளை சரிசெய்வாள். அப்படி சரிசெய்யாவிட்டால் எதிரில் வ‍ருபவ‍ன் அவ‍னவ‍ன் குளதெய்வங்களை  வேண்டாமல் இருக்கமாட்டான்.  யார் கரங்கள் ரத்த புஸ்டியாய் இருக்கிறதோ என்று பெறுமூச்சிதான் விடவேண்டும். ஆனால் மாலா இப்போது அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவ‍ள் அதிகப் படியாக கால் எவ்வளவு எட்டிப்போடமுடியுமோ அவ்வளவு எட்டிப் போட்டு ஓடினாள்.


சண்முகம், அக்கா வீட்டுக்காரரான  ஞாணராஜிக்கு மட்டுந்தான்  சற்று பயப் படுவான். ஞாணராஜ் வீட்டில் இருக்கும்போது அந்த வீட்டு பக்கம‍் போகமாட்டான்,  இதை மாலா தெரிந்து வைத்திருந்தாள். தெருவழியே நேராக ஓடி இடது பக்கமாக திரும்பியதும் ஞாணராஜ்  வீடு.  மாலாவின் நல்ல  நேரம்   ஞாணராஜ்  எருதுகளுக்கு தண்ணீர்  காட்டிக் கொண்டிருந்தார். அவ‍ள் வேகத்துக்கு ஓடி வர‍ முடியாத சண்முகம் எதிரே வந்த காங்க‍னை பார்த்து ''டே... டே அவள ம‍டக்கி புடிடா, இன்னையோட கண்ட துண்டமா  வெட்டிப் போட்டுடுறேன்.  மாலா வேகமாக ஓடினாள். தெவிடியா மாப்பி ளையப் புடிக்கலனா கலியாணத்துக்கு  முன்னாடியே  சொல்லி யிருக்கனும். இப்ப வந்து  நான் வாழமாட்டேன்னா என்ன அர்த்தம். ஏன் அவுனுது சின்னதா இருக்குதா?'' என்று திட்டிக்கொண்டு துர‍த்திவந்தார்.  அதிக‍மாக‍ மூச்சிவாங்கியது.  சண்முகத்தின் பின்னாக ஓடிவந்த மாலாவின் பெரியப்பா ச‍ற்றுநின்ற நேரம்பார்த்து கையிலிருந்த கொம்பை பிடுங்கினார். மாலாவை த‍ன் சொந்த மகளாக நேசித்தவர். அவருக்கு ஒரே பையன். அதனால் மாலாதான் நாகரத்தினத்திற்கு எல்லா உதவிகளையும்  செய்துவந்தாள். பெரியப்பாவீட்டில்தான் காலை வாசல் பெருக்குவது, தண்ணீர் எடுத்து வைப்பது எல்லா வேலைகளையும் செய்வாள். சண்முகத்தின் மனை விக்கும்,    நாகரத்தினத்தின் மனைவிக்கும் எந்த சண்டையும் இருக்காது. சிறு வ‍யதிலிருந்து தன் குடும்பத்தோடு ஊடாடிக்கொண்டு இருந்ததால் மாலா வின் கலியாணத்திற்கு ஏறக்குறைய எல்லா செலவுகளையும் நாகரத்தினமே  பார்த்தார்.


ஆண்களும், பெண்களும் கூட்டமாக கூடிவிட்டார்கள். மாலா ஓடிவந்து ஞாணராஜின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டாள். ஞாணராஜ் தன் தோளில் இருந்த துண்டைக் கொடுத்து '' நீ வீட்டுக்குள்ள‍ போ'' என்று அனுப்பினார். மாலா ஓடிவந்து ஞாணராஜிடம் தஞ்சமடைந்தபோது தொட்டியில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த எருதுமாடுகள் மிரண்டன. ஞாணராஜ் மாடுகளை தைலமரத்தில் கட்டுவதற்கு இழுத்துவந்தார். ''என்னடா இது, உன் பொண்டாட்டியா இவ. ஒரு எடத்துல கட்டிக்குடுத்த பொண்ண இப்படி தொரத்திக்கினு வர. அசிங்கமாயில்ல '' என்றார்.

சண்முகம் கோபத்தை அடக்கிக்கொண்டு "கலியாணம் பண்ணவனைவிட்டு அடிக்கடி ஆத்தா ஊட்டுக்கு ஓடியாறாளே அவள என்ன செய்யறது. அவ சரிப்பட்டு வரமாட்டா மாமா. அவள உயிரோடு வைக்கக்கூடாது. அவள அனுப்பு நீ, நான் பாத்துக்கிறேன்" என்று ஆவேசமானான். அவன் சொல்வதில் ஏதோ நியாயம் தெரிய ஞாணராஜ் தன் குரலை தாழ்த்தி "ஏம்பா நான் பேசி, அவ வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யிறேன்  நீ போப்பா" என்றார்.

வேடிக்கை பார்க்க வந்தவர்கள் ஒன்றும் நடக்கவில்லை என்பதால் அவரவர் ஏமாற்றம் கண்டு திரும்பினர்.  நடந்தோ, நடக்காமலோ இருக்கும் ஒரு விஷயத்தை ஆராய்ந்து அறியாம‍ல் யூகத்தின் அடிப்படையில் கேட்போருக்கு சுவாரசியம் குறையாமல் சொல்வது மனிதர்களின் இயல்பாய் இருக்கின்றது.


கூடிக்கூடிப் பேசிக்கொண்டார்கள். அந்தப் பொண்ணும், ரமேஷும்  காத‍லிச் சாங்க அதுதெரியாம  கலியாணம்  செஞ்சிட்டாங்க.அவளால ரமேஷ மறக்க முடியல.  எதையும் வெளியில  சொல்லவும்  முடியல. கலியாணமான ஆறுமாசம் இப்படித்தான், இரண்டு வாரத்துக்கு ஒரு முறைன்னு தாய் வீட்டுக்கு ஓடிவந்திடுவா.இதுவரைக்கும் அவ வீட்டுக் கார‍னாக்கூட படுக்கவே இல்லையாம். மாலா வீட்டுக்காரன் பார்வைக்கு எடுப்பா இருக்க மாட்டான்.ஆனா நல்ல உழைப்பாளி.முணு மாசத்துக்கு முன்னால் அவளுக்கு பேய் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள். தேடிப்போன மந்திர வாதிகளெல்லாம் அவள் உடளை உருகுலைத்து அனுப்பியதுதான் மிச்சம். ஊரில் சிலர் எப்ப‍டியிருந்த பொண்ணு இப்படி ஆன மர்ம்மென்ன‍ என்றும் சிலர் அவ‍ளுக்கு ரமேஷ் பித்து  பிடித்துவிட்டது என்றும் பேசிக் கொண்டார்கள். இதன்பிறகுதான் அவ‍சர அவசரமாய் ரமேஷுக்கு கலியாணம்  முடித்தார்கள்.   ஏறக்குறைய ரமேஷ் வீட்டாரின் காதுகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். மாப்பிள்ளையும் பொண்ணும் ஊரில் வ‍ந்தபோது தான் ரமேஷுக்கு கலியாணம் நடந்ததே தெரியும். யாருக்கும் தெரியாமலே சாமார்த்தியமா நடத்திட்டாம்பாரு. பொண்ணு  சொந்தமாயிருக்கவே கப்பு  சிப்புனு  முடிச்சிட்டாங்க"   என்று  நாய்கர் வீட்டு வ‍யல்களிலும். அம்பேத்கர் நகர் குடிநீர்  கிணறுகளிலும் ஓயாத பேச்சாய் இருந்தது.

ஞாணராஜ்  மாலாவிடம் சற்று நயமாக பேசினார். அவருக்கு ரமேஷின் சங்கதியும் தெரிந்திருந்தது. "எது  எப்படியோ, அவ‍ன்  ஒரு வாழ்வை தொடங்கிவிட்டான்.  சின்ன வயதில் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமல்ல. ஆனா உனக்கும் ஒரு வாழ்க்கை தலையில்  விழுந்திருக்கு மறந்திடாதே. அவன் உன்னை உண்மையாய்  விரும்பியிருந்தா இவ்வளவு  அவசரமாக வேற ஒரு கலியாணம் பண்ணியிருப்பானா.  மாலா நீ யோசித்துப்பாரு, நான் சொல்றேன்னேனு அவ‍சரப்படாதே. இது ரொம்ப நாளைக்கு வாழப் போரவாழ்க்கை. நான் கட்டாயப்படுத்தவே இல்லை. உன் வாழ்க்கை நல்ல படியாய் அமைவதில் உன்னை விட யாருக்கு அதிக அக்க‍றை இருக்கப்போகிறது. மாலா நீ ஒரு வாரம் இரண்டுவாரம் கூட இங்கேயே இரு. ஆனா, இதுவே நிரந்த‍ரம் இல்ல தெரிஞ்சிக்கோ".என்று குருவி தன் குஞ்சின் வாயில் உணவை தினிப்பதுபோல் தினித்தார்.

நீண்ட நேரங்கழித்து ஞாணராஜ் வெளியே வந்தார். பரபரப்புடன் காத்திருந்த வேடிக்கையாளர்கள், அவர் முகத்தையே  நோக்கினார்கள்.  சற்று முகமலர் சியாய்  இருந்தது.  சண்முகத்திடம் "ஏம்பா இனிமே பிரச்சனை ஒண்ணியும் இல்ல.  ரெண்டுவாரம் இங்க தங்கியிருந்து. அப்புறமா அவுங்க ஊட்டுக்கார ரோடு போய் வாழ்தாம்" என்றார். மாலா, சண்முகத்தின் வீட்டில் நுழையவே இல்லை. நாகர‍த்தினத்தின் வீட்டிலேயே இருந்தாள்.......
----------------------------------------
தொடர்ந்து வரும்......

No comments: