ஆங்கில எழுத்துரு வந்தால் ஜெயமோகன் அம்பானியாகலாம்
தி இந்துவில் ஜெயமோகன் அவர்களின் கட்டுரை வாசித்தபோது, சரி. பல வருஷஙகளுக்கு முன்பிருந்தே ஆங்கிலவழி படிக்கின்ற மாணவர்களிடம் சாதாரணமாக புழக்கத்ததில் வைத்திருப்பதைத்தான் சொல்லுகிறார் என்று இருந்தேன். அதன்பிறகு பெருவாரியாக எழுகின்ற விவாதங்களைப் படித்தேன். ஜெயமோகன் எழுதிய விளக்கக் கட்டுரையை வாசித்தேன். இரண்டாவதாக மீண்டும் தி இந்துவின் கட்டுரையை வாசித்தேன். எவ்வளவு சுலபமாக தன் குறைபாட்டில் இருந்து தப்பித்துக் கொள்ளமுடிகிறது என்று வியந்தேன்.
ஞாநி, தமிழ்செல்வன் போன்றவர்கள் ‘தற்காலத்தில் தமிழுக்கான பிரச்சனை என்ன? அதைத் தீர்ப்பதற்கான முடிவு என்ன என்பதை சொல்லாமலே இதுதான் தீர்வு என்று வைக்கிறார்‘ என்றும். தமிழை உள் நோக்கத்தோடு சீரழிக்க முனைகிறார் என்றும் தங்கள் வாதத்தை வைத்திருந்தார்கள்.
ஜெயமோகன் அவர்களின் விளக்கக்கட்டுரையில் எதிர் தரப்பினரின் கேள்விகளுக்கோ, வாதங்களுக்கோ சரியான பதிலைத் தேடவேண்டி இருக்கிறது. பிராமி, சமஸ்கிருதம், மாலாய், தென்னாப்பிரிக்கா, ரோமன், காலனியம் நிலபிரபுத்துவம், பெரியாரியம், எல்லாவற்றையும் பேசி எதிர் தரப்பினரை மிரட்டி வைத்துவிடுகிறார். அவர்கள் எழுப்பிய வாதத்திற்கோ, கேள்விக்கோ பதிலாக மிகக்குறைவான வார்த்தைகளையே விடுகிறார்.
விளக்கக்கட்டுரையில் 'ஒரு கருத்தை முன் வைத்து எதிர்வினையை பார்ப்போம், முற்போக்கினர் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள். எத்தனைபேர் பகுத்தறிவுடன் பேசுகிறார்கள்' என்று கணக்கிடுவோம். என்று சொல்வதே மிகவும் மோசமான தப்பிக்கின்ற உள்நோக்கம் கொண்டது.
ஜெயமோகனின் இந்தக்கூற்று ஞாநி, தமிழ்செல்வன் மேலும் தழிழ் பற்றாளர்களின் எதிர்ப்புக்கு வைக்கப்பட்ட நழுவும் பதிலாகத்தான் புலப்படுகிறதே ஒழிய ஒரு விவாதம் வரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டதல்ல என்று உறுதியாக சொல்லமுடியும். ஏனென்றால், மொழியை முற்றிலும் முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள், தமிழ் பற்றாளர்களின் கைகளில் மட்டுமே இல்லை என்பது அவருக்கு தெரியாததல்ல.
ஒரு வேளை தமிழ் நிலையின் எதிர்காலத்திற்கான உறுதியான முன் மொழிவை சொல்வதென்றால், முக்கியமாக அரசின், உயர் கல்வியாளர்களின், கல்வி நிறுவன முதலாளிகளின் கவனத்தை திசை திருப்ப முக்கியமான கருத்தோட்டங்களை தி இந்துவின் முதல் கட்டுரையில் வைத்திருக்க வேண்டும். உண்மையில் இதுவே நோக்கம் என்றால் நிச்சயம் புத்தக விர்ப்பனைக்கான புள்ளி விவரம் வந்திருக்காது. ஒரு வேளை அதிகம் எழுதுபவராக இல்லாமல் சொல்லியிருந்தால். அது ஒரு குறிப்பாக மட்டுமே உணரப்பட்டிருக்கும்.
ஒரு நாட்டில் நினைத்த மாத்திரத்திலே வேற்று மொழியை, தான் நினைத்த படி, நாடு முழுதும் பரப்பிவிடுகிற அரசுகளிடம், உயர்கல்வி நிறுவனங்களிடம் தன் வாதத்தை வைத்து பதிலை பெற நினைக்காமல், எண்ணைக்கு காஞ்ச தலையில் எரி நெருப்பைக் கொட்டி, புண்ணு சீக்கிரம் ஆரட்டும் என்று பொன் மொழிகளைக் கொட்டுகின்றார்.
இவைகளை எல்லாம் முடித்துக்கொண்டு கடைசியாக இரண்டாம் முறை தி இந்துவின் கட்டுரையை வாசித்தபோது. எடுத்த எடுப்பிலேயே ஆங்கில புத்தகம் வந்த நாளிலேயே 2000 ஆயிரம் பிரிதிகள் விற்கின்றது. வாலிபர்களில் அதிகம்பேர் ஆங்கிலத்திலேயே வாசிக்கிறார்கள் என்று வியந்து வியந்து எழுதுகிறார்.
தமிழில் அதிகமாக எழுதுகிறவர் என்ற அடிப்படையில் தம்முடைய புத்தகம் ஆங்கில எழுத்துருவில் வந்தால் வாலிபர்கள், ஆங்கில மொழி கற்கும் பிள்ளைகளால் விற்பனை எகிறிவிடும் என்ற யோசனையின் அடிப்படை ஆர்ம்பப் புள்ளியாகக்கூட இருக்கலாம் என்று கருதத்தோன்றுகிறது. உண்மையிலேயே விவாதத்தை எதிர்நோக்கி எழுதி இருந்தால் நிச்சயம் ஜெயமோகன் கட்டுரையின் தளம் இன்னும் கருத்தாழம் மிக்கதாக வந்திருக்கும். இங்கு புத்தகம் விற்பனைப் பற்றியோ, எவ்வளவுபேர் ஆங்கிலத்தில் வாசிக்கின்றார்கள் என்ற கணக்கெடுப்போ வந்திருக்காது.
க. KA வையும் ஒரே நேரத்தில் இரண்டையும் படிக்க சிறமப்படுகிறார்கள். ஜெயமோகன் அவர்கள் இதைச்சொல்லுவது ஆச்சரியமாக இருக்கிறது. (ஓநாயும் ஆட்டுக்குட்டியும்) சைதைன்யா எஸ். ராமகிருஷ்ணனின் அவ்வளவு கதைகளை மொழிபெயர்த் திருக்கிறாளாமே கேள்விப்படவே இல்லையா? தற்கால சிறுவர்கள் வெகு சீக்கிரத்தில் பல விஷங்களை ஒரே நேரத்தில் புரிந்து கொள்கிறார்கள். எப்போதும்போல, அரசின் சரியான கண்காணிப்புகள் இல்லாமல், கிராமத்தின் குழுந்தைகள் தான் சிறமப்படுகிறார்கள்.
''AMMAA INGKEE VAA VAA'' உலகம் சுருங்கி வருகின்ற நேரத்தில் ‘அம்மா, இங்கே‘ ஆங்கில எழுத்துருவில் எழுதும்போது எழுத்துக்கள் எண்ணிக்கை கூடுகிறது. மேலும் இந்த முறையில் புழக்கத்தில் வந்தால் ஆங்கிலமும் சரியாக கற்றுக்கொள்ளமுடியாது, தமிழ் புழக்கத்தில் இருக்குமா என்பதும் சந்தேகம்.
எழுத்துரு மாறினாலும் அது தமிழின் அர்த்தம்தானே. வேற்று மொழிக்காரன் நம்மொழியை அறிந்து கொள்வதில் இன்னும் சிக்கலை ஏற்படுத்தாதா? அப்போது மொழி தக்கவைப்பது எப்படி? ஒரு மொழியை எழுதுவதற்கு தமிழ் தெரியணும், அதற்கான ஆங்கில எழுத்துருவும் தெரியணும். சரி அப்படியே நடந்தாலும் ஆங்கில மொழியை உருப்படியாக கற்காமல் வேலை வாய்ப்புகளில் என்னத்தை சாதிக்கமுடியும். பணக்கார பிள்ளைகள் எப்படியும் ஆரம்பம் முதலே உயர் தரமான மெட்ரிக் ஆடையை அணிந்து கொண்டு மேலை நாடுகளுக்கு பயணிப்பார்கள். ஒண்ணும் இல்லாதவன் ‘ஏ பி சி.டி‘மட்டும் வச்சிக்கிணு குண்டாஞ் சட்டியிலேயே சுத்தி வரணுமா?.
தன் கல்வி நிலையை உயர் தகுதியாகக் கருதும் மெட்ரிக் கல்வி நிறுவனங்கள் தங்கள் பிள்ளைகளையும், கிராமங்கள், நகரங்களின் ஏழை எளிய பிள்ளைகளையும் சமமாக்கும் நிலை ஏற்படுமா? படிக்கும் பிள்ளைகள் எல்லாரும் எல்லா பள்ளிகளில் சேரவும், தங்களுக்கு பிடிக்காதபோது எந்த அச்சுருத்தளும் இல்லாமல் விலகவும் முடியுமா? இருக்கிற சொச்சம் சிறுதொழில்களையும் ஒரு அப்பாவித்தமிழன் தன் வாழ்வா தாரத்திற்காக, அதை தக்க வைத்துக்கொள்ள முடியுமா? அறுபது ஆண்டுகாலம் மாறி மாறி மக்களின் உணர்வுகளை மீறி ஆட்சி செய்யும் கட்சிகள் முடங்கி, சமூக அக்கறைக்காகவே உழைக்கும் ஒரு ஓட்டாண்டி தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்புக்கு வரமுடியுமா? முக்கியமா தமிழுக்கு உரிய மொழியின், அழகிய, ஆழமான, உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல், வெறும் ரெடிமேட் வத்தக்குழம்பு போல ஆங்கில எழுத்துருவில் வார்த்தைகளை வீசுவதாக இருக்குமா?
இவைகளுக்கு எல்லாம் சந்தேகமே மிஞ்சினாலும், புத்தகம் விற்பனை எகிறினால் ஒட்டு மொத்த தமிழகமும் முன்னேறி விடுமா என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது.?
ஜேடி
‘

No comments:
Post a Comment