விபத்து
தற்செயல்விபத்துக்களில்
சிக்கிக்கொண்ட உடல்கள்
சிதைவற்றதாகவேக் கிடக்கின்றது
காலம் முழுக்க
முரண்பட்ட காலங்கள்
யுகவேகமாகக் கடந்துபோக
விபத்துக்கானக் காரணங்கள்
கண்டறியப்படவில்லை
அதற்கான நிர்பந்தங்களும்
இருந்ததில்லை.
தனித்தனி பாதைகளில்
தனக்கான நியாயத்தைப்
புகுத்திக்கொண்டே
புதிய தடங்களைக் கண்டுபிடிக்கிறது
ஒன்று
அறநெறித் தேவையற்றது,
எதற்கும் பயனற்றது எனத்தள்ளி வைக்கிறது
இன்னொன்று
அதை மீறுவதில்
எனக்கு உடன்பாடு இல்லை என்கிறது.
ஆனால்,
உடல்கள் கடந்த காலத்தின்
தற்செயல் விபத்தின் மனசிதைவுகளை
மறுக்கவோ, மறக்கவோ, மாற்றவோ
முடிவதேயில்லை
உடல்கள் அலைகிறது
புதிய ஜீவியத்திற்காக
தூய சமூகம்
விபத்துக்களை நடத்தாதிருக்குமா?.
ஜேடி

No comments:
Post a Comment