பதில் கடிதம்
நமக்கான உறவின் வர்த்தகம் தடம் புரண்டுப் போயிருக்கிற நிலையில் அன்புள்ள மாமனே உங்களுக்கு, இக்கடிதத்தை எழுதுகிறேன். ‘மாமனே’ என்பதை உயர் மதிப்பீடாகத்தான் விளிக்கிறேன். நம் உறவு சீராய் இருந்த கடந்த காலங்களில், என் மீது தாயிக்கு ஈடான அன்பு வைத்திருந்தவர் என்றும், சில நேரம் தங்களைப்போல் தன்னலம் மிக்கவர் இருக்க முடியுமா என்றும் கேட்டுக்கொண்டேதான் வாழ்க்கையைக் கடந்திருக்கிறேன். நம் இருவருக்குமான, அல்லது குடும்பத்திற்கான, அல்லது சிநேகிதர்களுக்கான உறவுகளை, மனித ஜீவித நாள்வரை ஒரே மாதிரியாக தடையின்றி வைத்துக்கொள்ள ஏதாவது சாத்தியம் இருக்கிறதா? அல்லது என்ன விதமான நடத்தையில் அப்படியான உறவை தக்க வைத்துக்கொள்ள முடியும், மிகச் சிறியவனான என்னால் அதை உணரமுடியவில்லை. பல உயர்நிலைகளில் அனுபவம் வாய்ந்த உங்களிடத்தில் வினவ முயற்சிக்கிறேன். இதை ஒரு கேள்வியாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் அனுபவத்திலிருந்து நடை முறை சாத்தியத்தையேக் கோரி நிற்கிறேன்.
மாமனே, மரணக்கைதி, கருணை மனு கோரும்போதுதான் ஜனாதிபதிக்கான அதிராத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. மாமன் முறைக்கும் அதே அதிகாரம், குடும்ப உறவுகளில் இருக்கிறதை நான் நன்கு அறிந்திருக்கிறேன். இப்போதெல்லாம் அடிக்கடி உங்களை நினைவு கூறுகிறேன். அந்த நினைவு கூறலின் பலனாக கடந்த காலங்கள் கண்முன்னே வந்து போகின்றன. நினைவில் வருகின்ற கடந்த காலங்கள், தற்போதைய நிகழ்காலத்தைப்போல வேகமாய் நகருவதில்லை. ஆமையின் வேகத்தை ஒத்திருக்கிறது. இரவு நேரங்களில் உங்கள் வீட்டுக்கு வரும்போது எவ்வளவு அன்பொழுகக் கிண்டலடிப்பீர்கள். மீனும், கறியும் விஷேஷமாக செய்த நாளில் வீட்டின் நடுக்கூடத்தில் உட்கார்த்தி உணவிட்டீர்கள். தனியாக சாப்பிட விட்டால், ஒரு அன்னியம் தெரியும் என்று நீங்களும் கூடவே சாப்பிடுவீர்கள். பரிமாறும்பொழுது உங்களுக்கு குறைவாக இட்டுக்கொண்டு, எனக்கு இரண்டு பீஸ் அதிகமாகவே வைத்துவிடுவீர்கள். விதண்டா வாதம் பேச அடிக்கடி அழைப்பீர்கள். அப்போதெல்லாம் என் மீதிருந்த அன்பினால்தான் இவைகள் நடந்ததென்று எனக்குத்தெரியாததல்ல. அதே சமயம் எப்போதெல்லாம் நிஜமான கோபம் ஏற்பட்டது என்பதையும் அறிந்தவன்தான். அபோதெல்லாம் சிறு சிறு கல் காலை தடுக்கும் நிகழ்வுபோலவேதான், அவைகள் நடந்தது. இருந்தாலும் ஒரு நீண்ட இடைவெளி என் மனைவி, அதாவது உங்கள் தங்கை இருந்தவரை ஏற்பட்டதேயில்லை.
மாமனே இப்போதெல்லாம் ஏனோ அடிக்கடி உங்களை நினைக்கிறேன். திடீர் என்ன பாசம் என்று நீங்கள் எண்ணக்கூடும். நன்றாக நினைவு கூறுங்கள். எனக்கு எதையோ செய்யப்போகிறீர்கள் என்பதற்காக நான் எப்போதாவது சர்வாங்க தகனபலியாய் கிடந்திருக்கிறேனா? நீங்கள் எதையுமே செய்யப்போவதில்லை என்பதற்காக உங்கள்வாசல் ஏறாமல் இருந்திருக்கிறேனா? எப்போதெல்லாம் அழைப்பு வந்ததோ அப்போ தெல்லாம் வந்து நின்ற நாட்கள் உண்டுதானே. இருந்தாலும், ‘நீங்கள் இக்கடிதத்தைப் படிக்கும்போது நினைக்க வாய்ப்பிருப்பதுபோல்‘ சற்று கூடுதலாகத்தான் நான் திடீரென்று தங்களை நினைக்கிறேன் என்று என்னை நானே விமர்சனம் செய்கிறேன். விமர்சனம் செய்கிற நானே, பிள்ளைகளுக்கு துணையை அங்கீகரிக்கும் நிலையில் இருப்பதால்தான். அடிக்கடி தங்களை நினைவுகூறுகிறேன் என்பது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், இந்த நினைவுகூறுதல் மேலோட்டமாக சந்தர்ப்பவாதம் என்று சட்டென்று யாராலும் சொல்லிவிடமுடியாது. அதற்குள், கடந்தகால ஆண்மா உலவிக்கொண்டே இருப்பதை, எவ்வேளையும் கடவுள் ஆவியை தரிச்க்கின்ற உங்களாலும் கண்டுணரமுடியாது. ‘இல்லை. இவன் எதையோக் குழப்பிக்கொண்டு இருக்கிறான்‘ என்று உங்களுக்குச் சொல்லத்தோன்றும். மாமனே நம்பமாட்டீர்கள் எங்களைப்போல தெளிவானவர்களை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. உலகத்தின் மிக நீண்டவாழ்வியல் கூறுகளின் வழித்தடங்களைச் சுருக்கி மிகச் சிறியதாக கக்கத்தில் வைத்துக்கொடுண்டு அலைபவர்கள். ஆனால், துண்டு பீடிக்கு கையேந்துகிறவன்கூட துச்சமாய் எண்ணுகிற பின்னணி எங்களைத் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. அது விஷயமல்ல.
என் தனிப்பட்ட பிம்பம் 1993லிருந்து 2006வரையான கால கட்டங்களில் ஒரு மாதிரியாகவும் 2006க்கு பிறகிலிருந்து ஒரு மாதிரியாகவும் உங்களுக்கு தோன்றுகிறது. முதல் கட்டத்தில் நான் தங்களுக்குப் பிடித்தமானவனாகவும். பின்வரும் காலகட்டத்தில் அயோக்கியனாகவும் நினைக்கிறீர்கள். நானல்ல, பொதுவாக மனிதன் அப்படி இருக்கவே முடியாது. நல்லவன் என்றால் கடைசிவரை நல்லவன். கெட்டவன் ஆரம்பத்திலிருந்தே கெட்டவன்தான். சமூக அனுபவங்கள், படிப்பினைகள் தங்கள், தங்கள் பாதையில் செய்ல்பாடுகளை கட்டுப்படுத்தி வைக்க மட்டுமே உதவும். இதை மேலும் உறுதி செய்துகொள்ள வேண்டுமென்றால். என் வலைதளத்தில் இதற்கான கட்டுரை இருக்கிறது. அது உங்களுக்கு சற்று, விளக்கமாக வாதிடும். அதைபார்த்து தங்கள் முடிவை மேற்கொள்ளலாம்.
மாமனே, என்னை வைத்து பிள்ளைகளை கணக்கிடவேண்டாம். அவர்களுக்குத் தனித்தனி அவயங்கள் இருக்கிறது. எனக்குப்பிடித்தமான ஒரு புத்தகம் வாங்கும்போது, மகன் ரேஷன் கடையில் சர்க்கரை போடுகிறார்கள் அதை வாங்கியிருக்கலாம் என்கிறான். புதிய முயற்சியாக தமிழில் சினிமா வந்திருகிறது பார்த்துவருகிறேன் என்றால், மூணுமாதம் கழித்து டிவியிலேயே போடுவான் என்கிறான். மகன் பல விஷயங்களில் உங்களுக்கு நெருக்கமானவனாகவே இருக்கிறான். நானும் உள்ளுக்குள் ‘சந்தோஷப் பட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், எனக்கு நல்லதென்று படுகின்ற விஷயங்களில் நான் தொடர்ந்து உழல்கிறபோது, அவ்விஷயம் பிடித்தவர்களே கண்டுகொள்ளாமல் விடுகிற போக்கு இருக்கிறது. ஆக என்போக்கில, அவனுக்கு நாட்டமில்லாமல் இருப்பது சந்தோஷம்தான். ஆனால், என் இருப்புகளை தரிசிக்க நேருகிற ஏதாவது ஒரு காலத்தில், அதன் சுகம் இன்னதென்று அறிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அதற்கான எல்லாத் தரவுகளும், ஆவணங்களும் என் அறைகளைச் சுற்றிக்கிடக்கிறது. ஆனால், அப்போது நான் இருப்பேனா, சொல்லமுடியாது. அவன் என்பாதையே சிறந்தது என்று, அதில் நடக்கவோ, உதவாத ஆவணங்கள் என்று எல்லா தடத்தையும் அழித்துவிடவோ செய்யலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால், சிறு வயது முதல் பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல் செய்யாமல் இருக்கிறான். என் பாதையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தமுடியாது. அவன் யோசனைக்கு எது நல்லது என்று படுகிறதோ, அதை முழு சுதந்திரத்துடன் செய்துகொள்ள அவனுக்கு உரிமை இருக்கிறதுதானே. அதற்குள்ளும் ஒரு நீதியின் விளக்கைக் கூடவே எடுத்துச்செல்வான் என்பதுதான் என் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதுதான் உங்களுக்கும் ஏற்புடையதான வழிமுறையாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
மாமனே, மகன் உயர்கல்வியை முடிக்கும் தருவாயில் இருக்கிறான். இதுவரை ஒரு சம்ஸ்டின் முடிவுகளையும் என் கண்ணில் காட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை. தேர்வுமுடிவுகள் தனிமனிதனின் ஒழுக்கவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக இல்லை. எனக்குத்தெரிந்த பள்ளியிலேயே காலாண்டு, அரையாண்டுக்கான பனிரெண்டாம் தேர்வுத்தாள்களை, பதினோராம் வகுப்பு மாணவர்கள் திருத்தி மதிப்பெண் வழங்குகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். இப்படியானச் செயல் எந்தத் தகுகியை நிறுபிக்க நடத்தப்படுகிறது என்றக்கேள்வி எனக்குள் இருக்கிறது. எல்லா இடங்களிலும் இந்த நிலை இருக்காது என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆகவே, தேர்ச்சியைக்காட்டும் அட்டவணைகள் எனக்கு திருப்த்தியளிப்தில்லை. இருந்தாலும், மகனை பொதுவாக கல்வியை முடிக்குமபோது எந்த அரியரும் வைத்திருக்காமல் வெளிவரவேண்டும் என்று எச்சரித்து வருகிறேன். அவனும், அது என்பாடு வெற்றியாய் முடித்து வேலையில் சேர்ந்துவிடுவேன் என்கிறான். மேலும், உங்கள் மகள் முடித்து நல்ல கம்பெனியில் வேலை செய்வதாகவும், அவளைப்போலவே எனக்கும் நடக்கும் என்று நம்பிக்கையளிக்கிறான். அவன் உயர் கல்வியை தொடங்கும்போதே அநேகப்புத்தகங்கள் உங்கள் மகள்தான் கொடுத்து உதவியிருக்கிறாள். அநேகமாக அவன் வாழ்வுக்கு வழிகாட்டுகிற செயல் என்றே நான் நம்புகிறேன். அவள் செயலை வாழ்த்தவும் செய்கிறேன். மேலும், ஒருவருக்கு, நடந்ததுபோலவே இன்னொருவருக்கு பிசகாமல் நடக்குமா என்று என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் அவன் நம்பிக்கைக்கு மாறாக வார்த்தைகளை சொல்முடியவில்லை. அப்படி நடந்துவிட்டால் எந்தத் தகப்பன் வேண்டாம் என்று சொல்லுவான். பைபிளில், ஏசுவின் தாய் மரியாளைக் குறிப்பிடும்போது ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று பொருள் சொல்வார்கள். அந்த, அர்த்தப்படுத்தல்தான் உங்கள் மகள் என்று நீங்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவள், வேலைக்குபோகிற அளவுக்கு வந்துவிட்டாளா என்று நினைக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறது. உங்கள் மகளைவிட ஒரு வயது குறைவான மகனுக்கு அக்கம்பெனியின் வேலைக்கு பயணிப்பதை எப்படித் தொடங்குவது என்ற வழிக்காட்டுதலை உங்கள் மகள் மூலமாக தெரிவிக்க முடியுமா? நல்ல பெண்ணின் வழிக்காட்டுதல் அவனுக்கான நிம்மதியான பயணத்தைக் கொடுக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. கடைசியாண்டை தொடங்கும் தருவாயிலிருந்தே அந்நிறுவன ஊழியராகிவிடுவேன் என்கிறான். முன்கூட்டி திட்டமிடுதல் தவறு என்று என்னால் சொல்லமுடியவில்லை. அது கிட்டாதபோது அதன் துயரம் மிக வேதனையாய் இருக்குமே’ என்று முன்கூட்டியே நான் அறிந்திருக்கிறேன்.
மகனின் முன்கூட்டிய திட்டமிடுதலா? என் கணிப்பின் பின்கால வேதனையா? எது சாத்தியமாக வாய்ப்பிருக்கிறதென்று நீங்கள் அனுப்பும் பதிலிலிருந்து ஆய்வு செய்துக்கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
அன்புடன் ஜேடி
ஜே. டேனியல்

பிறகு எப்படியோ, இரவு வௌவால்கள் தலை கீழாய் தொங்கிக்கொண்டே இருப்பதுபோல குற்றமற்றவனின் கூடாரத்தில் தூக்கு கயிறுக்கொப்பான தண்டனைகள், நிராகரிப்பு வடிவில் குறுக்கும், நெடுக்குமாக என்னைச் சுற்றிக்கொண்டேயிருந்தது. திரும்பத் திரும்ப யோசிக்கிறேன். பெரிதாக ஒன்றும் இல்லை. தற்போதும் பாதையில் காலைத் தடுக்கிவிடும் சின்னக்கல்தான். குணிந்து எடுத்து ஓரம்போட்டு நடக்க உங்களுக்கும் யோசனை இல்லை. நீங்கள் எடுக்காதக்கல்லை தொட்டு எடுப்பதற்கு எனக்கும் மனவிசாலம் இல்லை. யார் பெரியவர். யார், யாருக்காக குணியவேண்டும் என்று தாங்கள் கேட்கலாம். ஒரு உண்மையைச் சொல்லவேண்டு மென்றால் உங்கள் மீதான மரியாதை இன்றளவும் குறையவில்லை. நான் உங்கள் வீட்டுக்கு வருவதில், பல சிக்கல் இருக்கிறது. ஆனால், நீங்கள் அழைத்து விடுவதற்கு கொஞ்ம் மனது மட்டுமே வேண்டும். சின்ன அழைப்பை மட்டுமே ஏழு வருஷங்களாக எதிர்பார்த்தேன். யோசித்துப் பாருங்கள் நம் இருவருக்குமான இருப்பு தூர, தூரமான தேசங்களில் இல்லை. இரண்டு தெரு இடைவெளிதான். இதில் ஒருவர் முகம் ஒருவர் பார்க்காதது எவ்வளவு பெரிய சோகம்.
மாமனே இப்போதெல்லாம் ஏனோ அடிக்கடி உங்களை நினைக்கிறேன். திடீர் என்ன பாசம் என்று நீங்கள் எண்ணக்கூடும். நன்றாக நினைவு கூறுங்கள். எனக்கு எதையோ செய்யப்போகிறீர்கள் என்பதற்காக நான் எப்போதாவது சர்வாங்க தகனபலியாய் கிடந்திருக்கிறேனா? நீங்கள் எதையுமே செய்யப்போவதில்லை என்பதற்காக உங்கள்வாசல் ஏறாமல் இருந்திருக்கிறேனா? எப்போதெல்லாம் அழைப்பு வந்ததோ அப்போ தெல்லாம் வந்து நின்ற நாட்கள் உண்டுதானே. இருந்தாலும், ‘நீங்கள் இக்கடிதத்தைப் படிக்கும்போது நினைக்க வாய்ப்பிருப்பதுபோல்‘ சற்று கூடுதலாகத்தான் நான் திடீரென்று தங்களை நினைக்கிறேன் என்று என்னை நானே விமர்சனம் செய்கிறேன். விமர்சனம் செய்கிற நானே, பிள்ளைகளுக்கு துணையை அங்கீகரிக்கும் நிலையில் இருப்பதால்தான். அடிக்கடி தங்களை நினைவுகூறுகிறேன் என்பது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், இந்த நினைவுகூறுதல் மேலோட்டமாக சந்தர்ப்பவாதம் என்று சட்டென்று யாராலும் சொல்லிவிடமுடியாது. அதற்குள், கடந்தகால ஆண்மா உலவிக்கொண்டே இருப்பதை, எவ்வேளையும் கடவுள் ஆவியை தரிச்க்கின்ற உங்களாலும் கண்டுணரமுடியாது. ‘இல்லை. இவன் எதையோக் குழப்பிக்கொண்டு இருக்கிறான்‘ என்று உங்களுக்குச் சொல்லத்தோன்றும். மாமனே நம்பமாட்டீர்கள் எங்களைப்போல தெளிவானவர்களை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. உலகத்தின் மிக நீண்டவாழ்வியல் கூறுகளின் வழித்தடங்களைச் சுருக்கி மிகச் சிறியதாக கக்கத்தில் வைத்துக்கொடுண்டு அலைபவர்கள். ஆனால், துண்டு பீடிக்கு கையேந்துகிறவன்கூட துச்சமாய் எண்ணுகிற பின்னணி எங்களைத் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. அது விஷயமல்ல.
என் தனிப்பட்ட பிம்பம் 1993லிருந்து 2006வரையான கால கட்டங்களில் ஒரு மாதிரியாகவும் 2006க்கு பிறகிலிருந்து ஒரு மாதிரியாகவும் உங்களுக்கு தோன்றுகிறது. முதல் கட்டத்தில் நான் தங்களுக்குப் பிடித்தமானவனாகவும். பின்வரும் காலகட்டத்தில் அயோக்கியனாகவும் நினைக்கிறீர்கள். நானல்ல, பொதுவாக மனிதன் அப்படி இருக்கவே முடியாது. நல்லவன் என்றால் கடைசிவரை நல்லவன். கெட்டவன் ஆரம்பத்திலிருந்தே கெட்டவன்தான். சமூக அனுபவங்கள், படிப்பினைகள் தங்கள், தங்கள் பாதையில் செய்ல்பாடுகளை கட்டுப்படுத்தி வைக்க மட்டுமே உதவும். இதை மேலும் உறுதி செய்துகொள்ள வேண்டுமென்றால். என் வலைதளத்தில் இதற்கான கட்டுரை இருக்கிறது. அது உங்களுக்கு சற்று, விளக்கமாக வாதிடும். அதைபார்த்து தங்கள் முடிவை மேற்கொள்ளலாம்.
மாமனே, என்னை வைத்து பிள்ளைகளை கணக்கிடவேண்டாம். அவர்களுக்குத் தனித்தனி அவயங்கள் இருக்கிறது. எனக்குப்பிடித்தமான ஒரு புத்தகம் வாங்கும்போது, மகன் ரேஷன் கடையில் சர்க்கரை போடுகிறார்கள் அதை வாங்கியிருக்கலாம் என்கிறான். புதிய முயற்சியாக தமிழில் சினிமா வந்திருகிறது பார்த்துவருகிறேன் என்றால், மூணுமாதம் கழித்து டிவியிலேயே போடுவான் என்கிறான். மகன் பல விஷயங்களில் உங்களுக்கு நெருக்கமானவனாகவே இருக்கிறான். நானும் உள்ளுக்குள் ‘சந்தோஷப் பட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், எனக்கு நல்லதென்று படுகின்ற விஷயங்களில் நான் தொடர்ந்து உழல்கிறபோது, அவ்விஷயம் பிடித்தவர்களே கண்டுகொள்ளாமல் விடுகிற போக்கு இருக்கிறது. ஆக என்போக்கில, அவனுக்கு நாட்டமில்லாமல் இருப்பது சந்தோஷம்தான். ஆனால், என் இருப்புகளை தரிசிக்க நேருகிற ஏதாவது ஒரு காலத்தில், அதன் சுகம் இன்னதென்று அறிந்துகொள்ளும் வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அதற்கான எல்லாத் தரவுகளும், ஆவணங்களும் என் அறைகளைச் சுற்றிக்கிடக்கிறது. ஆனால், அப்போது நான் இருப்பேனா, சொல்லமுடியாது. அவன் என்பாதையே சிறந்தது என்று, அதில் நடக்கவோ, உதவாத ஆவணங்கள் என்று எல்லா தடத்தையும் அழித்துவிடவோ செய்யலாம். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால், சிறு வயது முதல் பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல் செய்யாமல் இருக்கிறான். என் பாதையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தமுடியாது. அவன் யோசனைக்கு எது நல்லது என்று படுகிறதோ, அதை முழு சுதந்திரத்துடன் செய்துகொள்ள அவனுக்கு உரிமை இருக்கிறதுதானே. அதற்குள்ளும் ஒரு நீதியின் விளக்கைக் கூடவே எடுத்துச்செல்வான் என்பதுதான் என் அசைக்கமுடியாத நம்பிக்கை. இதுதான் உங்களுக்கும் ஏற்புடையதான வழிமுறையாய் இருக்கும் என்று நம்புகிறேன்.
மாமனே, மகன் உயர்கல்வியை முடிக்கும் தருவாயில் இருக்கிறான். இதுவரை ஒரு சம்ஸ்டின் முடிவுகளையும் என் கண்ணில் காட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதில்லை. தேர்வுமுடிவுகள் தனிமனிதனின் ஒழுக்கவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாக இல்லை. எனக்குத்தெரிந்த பள்ளியிலேயே காலாண்டு, அரையாண்டுக்கான பனிரெண்டாம் தேர்வுத்தாள்களை, பதினோராம் வகுப்பு மாணவர்கள் திருத்தி மதிப்பெண் வழங்குகிறார்கள் என்று கேள்விப்படுகிறேன். இப்படியானச் செயல் எந்தத் தகுகியை நிறுபிக்க நடத்தப்படுகிறது என்றக்கேள்வி எனக்குள் இருக்கிறது. எல்லா இடங்களிலும் இந்த நிலை இருக்காது என்று என்னால் நம்ப முடியவில்லை. ஆகவே, தேர்ச்சியைக்காட்டும் அட்டவணைகள் எனக்கு திருப்த்தியளிப்தில்லை. இருந்தாலும், மகனை பொதுவாக கல்வியை முடிக்குமபோது எந்த அரியரும் வைத்திருக்காமல் வெளிவரவேண்டும் என்று எச்சரித்து வருகிறேன். அவனும், அது என்பாடு வெற்றியாய் முடித்து வேலையில் சேர்ந்துவிடுவேன் என்கிறான். மேலும், உங்கள் மகள் முடித்து நல்ல கம்பெனியில் வேலை செய்வதாகவும், அவளைப்போலவே எனக்கும் நடக்கும் என்று நம்பிக்கையளிக்கிறான். அவன் உயர் கல்வியை தொடங்கும்போதே அநேகப்புத்தகங்கள் உங்கள் மகள்தான் கொடுத்து உதவியிருக்கிறாள். அநேகமாக அவன் வாழ்வுக்கு வழிகாட்டுகிற செயல் என்றே நான் நம்புகிறேன். அவள் செயலை வாழ்த்தவும் செய்கிறேன். மேலும், ஒருவருக்கு, நடந்ததுபோலவே இன்னொருவருக்கு பிசகாமல் நடக்குமா என்று என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் அவன் நம்பிக்கைக்கு மாறாக வார்த்தைகளை சொல்முடியவில்லை. அப்படி நடந்துவிட்டால் எந்தத் தகப்பன் வேண்டாம் என்று சொல்லுவான். பைபிளில், ஏசுவின் தாய் மரியாளைக் குறிப்பிடும்போது ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று பொருள் சொல்வார்கள். அந்த, அர்த்தப்படுத்தல்தான் உங்கள் மகள் என்று நீங்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவள், வேலைக்குபோகிற அளவுக்கு வந்துவிட்டாளா என்று நினைக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறது. உங்கள் மகளைவிட ஒரு வயது குறைவான மகனுக்கு அக்கம்பெனியின் வேலைக்கு பயணிப்பதை எப்படித் தொடங்குவது என்ற வழிக்காட்டுதலை உங்கள் மகள் மூலமாக தெரிவிக்க முடியுமா? நல்ல பெண்ணின் வழிக்காட்டுதல் அவனுக்கான நிம்மதியான பயணத்தைக் கொடுக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. கடைசியாண்டை தொடங்கும் தருவாயிலிருந்தே அந்நிறுவன ஊழியராகிவிடுவேன் என்கிறான். முன்கூட்டி திட்டமிடுதல் தவறு என்று என்னால் சொல்லமுடியவில்லை. அது கிட்டாதபோது அதன் துயரம் மிக வேதனையாய் இருக்குமே’ என்று முன்கூட்டியே நான் அறிந்திருக்கிறேன்.
மகனின் முன்கூட்டிய திட்டமிடுதலா? என் கணிப்பின் பின்கால வேதனையா? எது சாத்தியமாக வாய்ப்பிருக்கிறதென்று நீங்கள் அனுப்பும் பதிலிலிருந்து ஆய்வு செய்துக்கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
அன்புடன் ஜேடி
ஜே. டேனியல்

No comments:
Post a Comment