இன்னும் பத்து நாளுக்குள் பூமி மண் தம்மை மூடிக்கொள்ளும் என்ற முடிவுக்கு சாந்தி வந்திருந்தாள். நேற்று மாலைவரை என் உயிரை யாரும் எடுக்க முடியாது என்று உறுதியாக நம்பியிருந்தவள்தான். இன்று இரவு ஒன்பது மணிக்கு டாக்டர் பார்வையிட வந்தார். டாக்கருக்கு மெல்லிசான உருவம். அவர் கோட்டும், பேண்டும் தொலதொலவென ஆடிக்கொண்டிருந்தது. லைட் நீல கலறில் சட்டையின் காலர் சற்று எடுப்பாக இருந்தது. கூடவே இரண்டு நர்சும் வந்தார்கள். ஒருவள் சற்று வயது முதிர்ந்தவள் குண்டாண உடல். இன்னொருத்தி இளம் வயது இருவரும் சீனியர், ஜீனியர் என்ற நிலையில் செயல்கள் இருந்தது. சின்னவள். டாக்டர் வருகிறார் எனறு அவசரமாக தன் இருப்பிடத்திலிருந்து வந்தாள் தலையின் அடையாள கவசம் சற்று ஏற்றம், இறக்கமாக இருந்தது. கையிலிருந்த சார்ட்டை டாக்டர் பார்வையில் படும்படியாக வைத்திருந்தாள். டாக்டர் சார்ட்டைப் பார்த்ததும் அவசரமாக கோட்டிலிருந்து பேனாவை எடுத்தார். சார்ட் நர்ஸ் கைக்கும், டாக்டர் இடது கைக்குமாக இருந்தது. பேனாவைத் திறக்கவில்லை. படுக்கையில் இருந்த சாந்தியின் கண் மூடியிருந்தது. முகம் உப்பியிருந்தது. கண்களின் சற்றுத்தோல் லேசாக கறுப்படைந்து இருந்தது. வயிறு மூச்சுக்காற்றை உள்வாங்கியும், வெளிஅனுப்பியும் இருந்தது. டாக்டர் அவள் முகத்தைப் பார்த்தார். குளுகோஸ் பாட்டிலின் மீது பார்வை நகர்ந்தது. குளுகோஸ் பாட்டளுக்குமேல் எந்த லேபிலும் இல்லாமல் வெறும் உடம்பாய் இருந்தது. அதில், சற்று நேரங்கழித்து ஒரு சொட்டு என்ற கணக்கில் விழுந்திருந்தது. .சீனியர் நர்ஸ், டாக்டர் கூடவே தன் அசைவுகளையும், தொடர்ந்தாள். டாக்டர் பேனாவை மீண்டும் தன் வெள்ளை கோட்டுப்பாக்கட்டில் வைத்துக்கொண்டு சீனியர் நர்ஸிடம் வாயசைத்தார். அவள், ஜீனியர் நர்ஸிடம் எதோ இன்ஜெக்சன் மட்டும் குளுகோஸில் போடச்சொன்னாள். டாக்டர் அடுத்த பெட்டுக்குச்சென்றுவிட்டார்.
ஒரு மணி நேரம் கழித்து சாந்தி இரண்டு முறை
வாந்தி எடுத்தாள். ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. அந்த நேரம்தான் கண்விழித்தாள்.
எதிரில் இருந்த உறவுகளை கிட்ட வரும்படி கண் அசைவுகளை காட்டினாள். நின்று
இருந்தவர்களில் ஒருத்தி அழுதுகொண்டே கிட்டவந்தாள். சாந்தி கைகளை தடவி நா தழுதழுக்க என் கதை சீக்கிரம் முடிஞ்சிடும்.
என் பிள்ளைகள்தான் என்னாகுமோ என்று பேச்சு சரியாக வராத நிலையிலும் சொன்னாள்.
நின்றவர்களுக்கு அழுவதைத்தவிர ஒனறும் தெரியவில்லை. செய்தி சொந்தங்களுக்கு பரவியது. விடியர்காலையில்
சாந்தி பெட்டைச்சுற்றி கூட்டம் நிறம்பி வழிந்தது. இவர்களின் நடுவில்தான் வஸ்த்தி
இருந்தாள். வஸ்த்தி, சாந்தியின் நாத்தனார் மகள். சிறு குழந்தையில் இருந்தே ராஜியின் வீட்டில் வளர்ந்தவள். மற்றவர்கள் அவளை, ஏனோ கிட்ட போ, கிட்டபோய்க் கேளு என்று அழுத்தம்
கொடுத்தார்கள். அப்படி ஒரு சந்தர்ப்பம்
வாய்க்கக்கூடாது என்றுதான் ராஜ், வஸ்த்தியை சாந்தி பக்கத்தில் அனுமதிக்காமலே
இருந்தான். தற்போது ராஜ் எங்கோ வெளியில் போன நேரம்பார்த்து உறவுக்காரர்கள்
வஸ்த்தியை சாந்தி கிட்டத்தில் அனுப்பி உன்
பிள்ளைக்கு என்ன சொல்ற, உன் வீட்டுகாரருக்கு என்ன சொல்ற என்று மரணவாக்கு றுதி
கோரிநின்றார்கள்.
வஸ்த்தியின் கையைப் பிடித்துக்கொண்டு “என்
பிள்ளைகளை பத்திரமாக பாத்துக்கோ. அதுங்க, ஏமாளிப்புள்ளிங்கோம்மா. எப்படியாவது
கரை சேர்த்துடும்மா உனக்கு புன்னியமாப்போகும். செய்வியா என்று சத்தியவாக்குறுதி வாங்கிக்கொண்டிருந்தாள். ராஜ் வந்து சேரும்போது வாக்குறுதி
முடிந்து இரு கைகளும் பிரிந்தது. மற்ற எல்லாரும் அதில் பெருத்த நிம்மதி அடைந்தார்கள்.
சாந்தி எண்ணியதும் நடந்துவிட்டது. இப்போதுதான் நடந்ததுபோல இருந்தது. அதற்குள ஏழு
வருஷம் கடந்துவிட்டது என்பது ஆச்சரியம்தான்.
உறவுகளில் எத்தனை மனக்கஷ்டங்கள்
இருந்தாலும் குடும்பத்தில் ஏதோ ஒரு முக்கிய நிகழ்வு நடத்துவதற்கு கூடிப் பேசுகிறபோதுதான்,
அவ்வுறவுகளின் அவசியம் புரிகிறது. நீண்ட வராண்டாவில் பேச்சுகள் தொடங்குகின்றன.
வாசலில் இருக்கும் வேப்ப மரத்தில் கோழிகள் ஏறுவதும் குதிப்பதுமாக இருந்தது.
சற்றுத்தள்ளி ஆண் வான்கோழி சிறு குழந்தைகளை குத்துவதற்கு துரத்திக்கொண்டிருந்தது.
அத்தெரு குழந்தைகளுக்கு அது விளையாட்டாகவே இருந்தது. வெறுமனே ஓரமாக
மேய்ந்துகொண்டிருக்கும வான்கோழிகளை ஆவ்வழியாகப்போகும ஒன்றிரண்டு குழந்தைகள்
சீண்டுவார்கள். கோழித் துரத்துவதைப்பார்த்து சிரித்துக்கொண்டு ஓடுவார்கள். சில
நேரம் சற்று கிட்டத்தில் பிள்ளைகள் மாட்டிக்கொண்டால் வான் கோழி குத்தியும்விடும். வான்கோழி,
தன் நீண்ட கழத்தை துக்கி நடக்கும்போது கம்பீரமாகதான் இருக்கும். அதன் தலையிலும்,
தொண்டையிலும் தொங்கும் செந்நிற மடிப்பு சதைகள்தான் பார்க்கச் சற்று அறுவருப்பாக இக்கும்.
ராஜ் வான்கோழியை பார்த்துக்கொண்டே பேச்சை
கவனித்தான். ராஜ் சகோதரி பேச்சைத்தொடங்கினாள். ஏற்கனவே பார்த்துவிட்டு போனவர்கள்தான்
மீண்டும் வராங்களாம். அவுங்களுக்கு வஸ்த்தியை ரொம்பப் புடிச்சிப்போச்சாம்.”
“ஆமாம், அவனுங்க பார்த்து கிழிச்சாங்க,
முன்ன பார்த்துட்டுபோயி ஆறுமாசம் ஆகுது, வரன்னு போனவங்க ஒருத் தகவலையுஞ் சொல்லல.
இப்ப வரானுங்களா? என்றார் ராஜின் அப்பா.
ராஜின் சகோதரன், “இல்லப்பா, போனமாசம் அவுங்ள
கூட்டியாந்தானே. என்னோட பிரண்டு, அவன் சொன்னபிறகுதான் தெரியுது. கலியாணத்தை
பொண்ணு ஊட்டுக்காரரையே நடத்திடச்சொல்லு. இல்லனா, இன்னும் ஒருவருஷம் கழிச்சிதான்
பண்ணமுடியும்னு சொன்னாங்களாம். தான் பெத்த புள்ளக்கி, இன்னொருத்தன கலியாணம்
பண்ணசொல்றாங்க. இவுங்களாம் கிறிஸ்த்தவங்கனு வேற சொல்லிக்கிறாங்க”
“அவுங்க பக்கம்லாம் அப்படித்தானாம். பொண்ணு
ஊட்டுக்காரன்தான் கலியாணம் பண்ணுவாங்கலாம். நாப்பது சவரண், ஐம்பது சவரண்னு
நகைபோடுவாங்கலாம். கோட்டு, சூட்டுலாம்கூட
நாமதான் எடுத்துக் குடுக்கனுமா. மாம்ள மண்டபத்தில வந்து நிப்பாராம். எல்லாரும்
செய்யிற பழக்கத்த்தான் நம்மளாண்டையும் வைக்கிறாங்க.” என்றாள் ராஜ் சகோதரி.
“என்னம்மா சொல்ற நீ, பையன் ஒரு வேலைக்கும்
போகலையாம். அவனுக்கு பொண்ண குடுக்குறோமே, நமக்குதான் அவன் போடனும். அதவிட்டுட்டு
இவ்ளோபோடு, அவ்ளோபோடு, கல்யாணம் பண்ணிவையின்னா என்ன அர்த்தம்.” என்று சற்று கோபமாகப்பேசினார்.
வராண்டாவில் பேச்சு
துவங்கியதிலிருந்து வஸ்த்தி ஒரு முறை சுத்தமாக இருந்த வராண்டாவைப்
பெருக்கிக்கொண்டே போனாள். இன்னொரு முறை ராஜீன் சகோதரரின் சின்னக்குழந்தையைக்
கூப்பிட்டு முகம் கழுவி தலைவாரி பவுடர் போட்டுவிட்டாள். மூன்றாவது முறை வீட்டில்
இருந்தரேஷன் அரியைக்கொண்டுவந்து கோழிகளுக்கு தீணிபோட்டாள். ராஜின் சகோதரி அண்ணன்
மகளை அழைத்து தண்ணீர் கொண்டுவரச்சொன்னதும், வஸ்த்தி முந்திக்கொண்டு சொம்பில்
தண்ணீர்க் கொண்டுவந்து கொடுத்து வேறு எங்கோ கவனிப்பதுபோல் இருந்தாள்.
வஸ்த்தியின்
செயல் ராஜிக்கு சிரிப்பைத் தந்தது. ஆனால், உள்ளுக்குள் சற்று
ஏமாற்றமும் நுழைந்தது. ராஜியைவிட வஸ்த்தி குறைந்தது பத்துவயது குறைவுள்ளவள்.
சாந்தி இறந்த பிறகு, வஸ்த்தியின் முழு உடமைகளும் ராஜியிடம் விடப்பட்டது. எந்த
நேரத்தில் வேண்டுமென்றாலும், ஒரே ஒரு வார்த்தை வஸ்த்தியை இங்கு அனுப்புங்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டமாகஇருக்கிறது என்று சொன்னால் போதும், எந்தவிதமான
சாக்கும் சொல்லாமல், சடங்கும் பார்க்காமல் வீட்டில் கொண்டுவந்து விட்டு
போக்க்கூடிய நிலமை. இதே நிலமைதான் ஏழு வருஷமும். ராஜின் மனதில் ஏதோ சலனம் ஏற்பட்டு
வஸ்த்தியை அழைத்துக்கொள்ளமாட்டானா? என்ற எதிர்பார்ப்பே இருந்தது. வஸ்த்தியும்
கண்டிப்பாக அப்படிதான் நினைத்திருந்தாள். அழுத்தமாக சொல்லமுடியும். ஏனென்றால்
உலகத்தின் எந்த வசீகரபிம்பத்தின் மீதும், அவளுக்கு நாட்டம் இருந்ததில்லை. இருந்ததில்லை என்று சொல்வது சரியல்ல. அதை ரசித்து, அதன் வலைகளுக்குள் விழுகிற புரிதல் இல்லை எனலாம். ஆனால்,
எல்லா வாலிப்பெண்கள் போலவே தனக்கு ஒரு குடும்பம் வேண்டும். அதுவும் தன்
வயதொத்தவர்கள் எல்லாம் பிறந்த ஊரை துறந்து செல்கிறபோது, அவள் மட்டும் இருப்பது. வேதனைத் தரக்கூடிய விஷயமாக இருந்தது. ராஜிதான் நமக்கு விதிக்கப்பட்டது. சீக்கிரம் நடந்தால் நல்லது என்கிற அளவில் இருந்தாள். மற்றபடி, தோற்றமும்,
அழகும் நல்லபடியாகத்தான் இருந்தது.
சாந்தி இறந்த
மூன்றாவது வருஷத்தில் வெளியூரில் இருந்து மிக நெருங்கிய உறவுக்காரர் வந்து
ராஜியிடம் பேசினார்கள். இப்படியே இருந்தால் எப்படி. பெண் பிள்ளை வைத்திருக்கிறாய்.
வீட்டில் அதற்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா? என்று வினவினார்கள். “நீங்கள்
சொல்வதில் எல்லாம் எனக்கு உடன்பாடு உண்டுதான். எனக்கும் ஆசைகள் இல்லை என்று சொல்லிவிடமுடியாது.
ஆனால், நீங்கள் சற்று என் நிலமையை கவனிக்கவேண்டும். நான் இயல்பாகவே, போட்ட முதலை
வளர்த்தெடுக்கிறவன் அல்ல. முதலையே எனக்காகவோ, யாருக்காகவோ அழித்துவிடுகிறவன். எல்லா நட்ப்புகளும் எனக்கு முன் நையாண்டி
காட்டிக்கொண்டு செம்மையாக நடக்கும். நான் வெறுமனே காகிதங்களை நம்பி
வாழ்கிறவன். பிள்ளைகள் பறக்க ஆரம்பித்துவிட்டால், நான் இதே இடத்தில் இருப்பேனா சொல்ல முடியாது. வஸ்த்திக்கு, மாமனார்,
மாமியார் (குறிப்பாக பெரியவர்கள்) இருந்து அலோசனையுடன் நடத்திச்செல்கின்ற குடும்பம்தான் அவள் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும். நிச்சயம் ஒரு குடும்பத் தலைவிக்கான மரியாதையை அனுபவிப்பாள். என்பதோடு
உறவுக்காறரின் தூதை அப்போதே முடித்ததை, இப்போது நினைத்தான். ஒரு வேளை நீண்ட
நாள் கை கூடாமல் வஸ்த்தி தனியாக நின்றால்,
நாம்தான் கைக்கொடுக்கவேண்டும் என்கிற உறுதியும் மனதில் வைத்திருந்தான் ராஜி.
சென்னையின்
பக்கத்தில்தான் கல்யாணம் மண்டபம் லாரி வச்சிருப்பதால், கிராமத்தின் ஜனங்கள்
அநேகமாக கிளம்பிவிடுவார்கள். ராஜின் சகோதரர். ஒரு மணிக்கெல்லாம் சாப்பாடு கொடுத்து
ஜனங்களை லாரியில் ஏற்றவேண்டும் என்று திட்டமிடப்பட்டது. ராஜி நகரத்தில் இருந்து
வருவதால் பெண்ணுக்கு அழுகு நிலையத்திலிருந்து. கவரிங் நகை செட் வாங்கிவரப் பணிக்கப்பட்டான்.
மூன்று, நான்கு ரகங்கள் காட்டப்பட்டது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை. ராஜி இதற்கு
முன்பு இத்தனை வகையான நகைகளை கண்ணால் பார்த்தேயில்லை. நகைகள் ஏதேதோ வடிவங்களில் இருந்தன. அழகு
நிலையத்தின் சேரில் இரு பெண்கள்
முகத்திற்கு ஏதோ பூசப்பட்டு, காய்களை வட்டமாக அரிந்து கண்களில் வைத்திருந்தார்கள்.
நிலையத்தில் தீடீரென்று ஆண் குரல் கேட்டதால் சற்றுப் பதட்டத்துடன் சரியாக அமர்ந்தார்கள். ராஜ் நகைகளைப்பற்றி அதிகமாக விசாரிக்கவில்லை. சில ஆரங்களில் வெள்ளை கல் உதிர்ந்து விட்டிருந்தது. பெண்கள் ஏன் இவ்வளவு
அலங்காரங்களை விரும்புகிறார்கள். விலை உயர்வுக்கும், கீழுக்கும் நடுவாக ஒரு செட்டை
எடுத்துக்கொண்டு வேகமாக கிராமத்திற்கு
வந்தான். கவரிங் நகை வருவதற்குள், ஒரிஜினல் தங்க நகைகள் அணிந்து பலபலப்பாக வெளியே
வந்தாள். வஸ்த்தியை இதற்கு முன் அப்படிப் பார்த்தில்லை. கவரிங் நகைக்காகத்தான் காத்திருந்தார்கள் போல
ராஜ் வந்தவுடன் ஒருத்தி வந்து பிடுங்கிச்சென்றாள்.
லாரியை ரோட்டிலேயே
நிறுத்துங்கப்பா, என்று ஒரு பெரியவர் குரல்கொடுத்தார். குழந்தைகள் கல்யாண
வீட்டிற்கும் லாரிக்கும திரிந்துகொண்டிருந்தார்கள். சற்று வாலிபத்தை கடந்த பெண் “என்னாடியம்மா, இம்மா நேரமாவா சிங்காரிப்பிங்க.
பொண்ணு முன்னாடி கௌம்பிச்சினா, பின்னாடியே லாரிய கௌப்பிடலாம். நல்லநேரம்
முடியறதுக்குள்ள கௌம்பனும் இல்ல.” என்றாள்.
ராஜின் சகோதரர் தன்
மனைவியை தூரிதப்படுத்தினார். “போ சீக்கிரம் கௌம்பு, பசங்கல்லாம் கௌம்பிட்டாங்களாப்
பாரு” என்றார். ராஜின் சகோதரி, ஊரில் பல பெரியவர்களை வீடு
தேடிச்சென்று சாப்பிட அழைத்துச்சென்றாள். கல்யாணத்திற்கு வராதவர்கள், சாப்பிட வர
சற்று தயங்கி நின்றார்கள். ராஜீம் வந்தவர்களை போங்கப்பா, சாப்பிடுங்க. சென்னைக்கு
போகனும் இல்ல. நேரத்தோடு போனாதனே.” என்று அவசரப்படுத்தினான்.
இப்போது வான்கோழில் ரோட்டில் சுற்றவில்லை. நிறைய குழந்தைகள் கும்பலாக ஓடுவதும் வருவதுமாக இருந்ததால். வான்கோழி பயந்து ஓரமாக திரிந்துகொண்டிருந்தது. டாடா சுமோ வந்து நின்றது. வாலிப்பசங்கள் வெற்று பந்தாவில் சொர்க்க சுகம் காணுகிறார்கள். பொண்ணுக்கு மட்டும் சுமோவா, எங்களுக்கும் இருந்தா? சும்மா கெத்தா போவோம் இல்ல. இன்னொரு மூலையில் இருந்து குரல் வந்நது.
இப்போது வான்கோழில் ரோட்டில் சுற்றவில்லை. நிறைய குழந்தைகள் கும்பலாக ஓடுவதும் வருவதுமாக இருந்ததால். வான்கோழி பயந்து ஓரமாக திரிந்துகொண்டிருந்தது. டாடா சுமோ வந்து நின்றது. வாலிப்பசங்கள் வெற்று பந்தாவில் சொர்க்க சுகம் காணுகிறார்கள். பொண்ணுக்கு மட்டும் சுமோவா, எங்களுக்கும் இருந்தா? சும்மா கெத்தா போவோம் இல்ல. இன்னொரு மூலையில் இருந்து குரல் வந்நது.
வஸ்த்தி, தாத்தாவிடம்,
மாமாவிடம், அக்காவிடம், அண்ணனிடம் போய்வருகிறேன் என்பதைச் சொல்லிக்கொண்டே வந்தாள்.
ராஜி வராண்டாவில் வேறு ஏதோவேலையாக மூலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தான். வஸத்தி தன் அலங்காரத்தை
பத்திரமாக பார்த்துக்கொள்ள. பாதையைச் சரியாகப் பார்த்து நடந்தாள். நடந்தாள். சுமோவில்
அவளுக்கான இடம் இருந்தது. அமர்ந்து கொண்டாள். ராஜ் பார்த்தான். அவள் வேறு பக்கம் பார்த்தாள். ராஜ் இப்போதும் பார்த்தான் சுமோ கிளம்பியது. ராஜிக்குத் தெரிந்த ஓட்டுநர்
என்பதால் “தம்பி, பார்த்து பத்திரமாப் போங்கப்பா“
என்றான்.
“அப்பா, வஸ்த்தி அக்காவுக்கு கலியாணம் ஆகி, நாலு மாசம் ஆயிடுச்சா?
போன் பண்ணுச்சி. அது அம்மா ஆகப்போகுதாமே?
இப்பதான் அவுங்க வீட்டுக்காரர் போன் பன்னார். சற்று கிண்டலாக
ராஜின் பிள்ளைகள் பேசினார்கள். சற்று நேரத்தில் ராஜியின் கைபேசி ஒலித்தது. ராஜ். ‘அலோ‘ என்றபோது
மறுமுனையில் குரல் தடுமாறித் தடுமாறி
பேசியது “நான் வஸ்த்தி பேசுறேன் மாமா. எங்க வீட்டுக்காரர் ஆஸ்பத்திரிக்கு
கூட்டிம்போனார். டாக்டர் நாலுமாசம்
தொடங்குது. நீ முழுகாம இருக்கிறனு சொன்னாங்க.”
“அப்படியா, ரொம்ப சந்தோஷம். ஒடம்ப
பத்திரமாப் பாத்துக்கோமா” என்று பேசி
முடித்தபோதுதான், சாந்தி, வஸ்த்தியிடம் வாங்கிய வாக்குறிதி ராஜிக்கு நாபகம் வந்தது. லேசாக சிரித்துக்கொண்டான்.
ஜே,டேனியல்.

No comments:
Post a Comment