Monday, April 16, 2012

கவிதை

            பிரிவு 

எங்கள் கண்களின்
ஒளி மோதலில்
அலைக்கொண்டுவந்த
ஈரக்காற்றைத் தரிசிக்கமுடிந்தது.

நாங்கள் வார்த்தைகளில்
உலவியதின் பலன்
வானவில் தன்மையை
விஞ்சுகிறதே அறிவுஜீவிதம், என
ஆழ்மனம் ஆர்பரித்தது

சிறு சிறுப் பொருட்களைத்தான்
பரிவர்தனைச் செய்துகொள்கிறோம்
உலக வங்கிக்கே
கடன் தந்துதவும் வல்லமை
இருப்பதாக நம்பிக்கைத் துளிர்க்கிறது.

எங்கள் முகங்களின் நேராக
முகம் சுழிக்காதவர்கள்
நெருக்கமான நண்பர் ஆகிறார்கள்.

அறிவு புகட்ட நினைப்பவர்கள்
நாங்கள் வெறுக்கத்தக்க
முதல் நபராகிறார்கள்.

இரண்டு வருஷங்கள்
ரசனை குலையாது
பேருந்து நிலையம், திரையரங்கம்
கேளிக்கைகள், கார்பரேட் நிலையம்
தர்க்காத்த சொர்க்க பூமிதான்.

திடுமெனதான்
நான் விபச்சாரி என்றேன்
நீதான்
உலகின் முதல் மோசடிக்காரன் என்றாள்
பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை
வாரத்தில் மூன்று நாள்
நாளுக்கு இரண்டு முறைவீதம்
உடல் உமிழ்தல், பெறுதல் நிகழ்ந்திருந்தது.

ஜேடி 

No comments: