Friday, April 13, 2012

கவிதை

 

நீங்கள் நீங்களாகவே.....

அடிக்கடித் தெளிக்கும்
தண்ணீரினால் வாழும்
செத்தப் பூக்களைத்தான்
உம்மை நினைவில் வைத்துக்கொள்ள
மாலையாகச் சூடுகிறோம்.

பிற நலன் வேண்டி
துண்டு காகிதத்தில்
பிரசுரிப்தைக்கூடக் கற்பதில்லை

தன் பயன் சேர்க்கும்
காரணமன்றி
ஒன்று சேர்தல் நிகழ்வதேயில்லை.

வெகுண்டெழ
அசாதாரணமான நிகழ்வுகள்
சமூகத்தில்
மிக மலிவான விலம்பரப்பலகையாக
தினமும் முலைத்துக்கொண்டேயிருக்கிறது
புரட்சிகள்தான் கையாளப்படுவதேயில்லை.

எங்கோ பிய்ந்த மலர்களின் இதழ்களாய்
ஆற்றில் வருகிறார்கள்
ஒன்றிரண்டு இதழ்கள்
கரை ஒதுங்கி செழிக்கின்றன
தன் செழுமையை ரசித்துக்கொண்டே
மரித்துப்போகிறார்கள்.
கரை சேராத
இதழ்களுக்காக வருத்தப்படுவதோ,
உதவுவதோ இல்லை.


இப்போதுதான் நீங்கள்

நீங்களாகவே அவதரிக்க வேண்டும்
என மன்றாடுகின்றேன். இருந்தாலும்,
காலம் முழுக்க 
உங்கள் தனிப்பட்ட குடும்பத்தை,
சந்தோசத்தை மீண்டும் இரக்கமில்லாமல்
கோருவதற்காக வெட்கப்படுகிறேன்.

ஜேடி

No comments: