கோணங்கியின் கதை
( மிக நீண்டநாளாகக் கோணங்கியின் மொழியை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. பலரின் பயமூட்டும் வார்த்தைகளால் அது நிகழவே இல்லை. இப்படிப் பயமூட்டும்போதெல்லாம் எப்படியாவது வாசித்தேப்பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் கூடிக்கொண்டேயிருந்தது. அதன் அடிப்படையில்தான் ‘கொல்லனின் ஆறு பெண்மக்கள்’ தொகுதியை நூலகத்தில் தேடி எடுத்தேன். முதல் இரண்டு கதைகள் வாசிக்க மிக எளிதாக இருந்தது. இவ்வளவு எளிதாக இருக்கிறது. இதைப்போய் வாசிக்க முடியவில்லை என்கிறார்களே? என்று ஆச்சரியப்பட்டேன். அடுத்தக்கதையில் நுழைந்தபோது தான் கோணங்கியின் சுயரூபம் தெரிந்தது. ‘நான்கு பக்கமும் மரணவாசல்’. ‘டிட்...டிட்..டிர்ர்...டிர்ர்.. என கணினியின் பிரிண்டர் தேய்த்துக் கொண்டு எழுத்தைப் பதிவு செய்வதுபோல’ ஒரே வரியை பலமுறை படிக்கவேண்டியதாயிற்று. படிக்கும்போதெல்லாம் ஒன்றும் புரியவில்லை என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் எதோ அந்தரத்தில் மிதக்கும் அர்த்தபுஷ்டியான வாக்கியங்களைக் கொண்டுவந்து சேர்க்கிறது போன்ற பிரமை. இப்படிச்செய்வது அவருக்கு மிக சுலபமாகக் கைகூடுகிறது என்று நினைக்கிறேன். கோணங்கியின் வாக்கியங்கள் மிக பரந்த வெளியைக் கொடுத்துக்கொண்டேபோகிறது. ஒருபேராவின் போக்கைக் கண்டடைந்துவிட்டால் அதைநோக்கிப் பயணிக்கமுடியும். ஆனால், அந்த பேராவின் போக்கைக் கண்டடைய ஆழ்ந்த சிந்தனையில் பத்துமுறையாவது படிக்கவேண்டியிருக்கிறது. ஒரு வரியைப் படித்து இனம் காணமுடியவில்லை என்றால், அதற்கு முன்பாராவை மீண்டும் வாசிக்கவேண்டியிருக்கிறது. அப்படியும் விளங்கவில்லை என்றால் அதற்குக் கீழ் வரியைத் தேடிப்போகவேண்டியிருக்கிறது. இப்படித்தான் இந்த முணு பக்கக் கதையை மூன்று வாரம் படிக்கவேண்டியிருந்தது. என்னைப் பொறுத்தவரை புரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. வீட்டின் ஆட்டுக்கல்லைத்துறந்து, கிரைண்டரைத்துறந்து கடை வழியாக வரும்போது பாக்கட் மாவுக்கு மாறிவிட்டோம். ஆறுமாதம் கர்பிணியாக இருக்கும்போதே முன் பணம் கட்டிப் பள்ளியைத் தேடுகிறோம். இந்த அவசர சந்தடியை படைப்பாளி உள்பட எல்லோரும் இயல்பாக ஏற்கும்போது. இவ்வளவு நேரத்தைக் குடிக்கும் எழுத்து எந்த விளைவையும் ஏறபடுத்தாமல்கூட போக வாய்ப்பிருக்கிறது. நான் மெனக்கெட்டு, ஒவ்வொரு வரியாய் நமக்குப் புரிந்த பிரகாரம் எழுதிப்வைத்துவிட்டு பிறகு படித்துப்பார்க்கலாம் என்று யோசித்தேன். முதல் ஒரு வாரம் அப்படிச்செய்துப்பார்த்தேன். ஒரு சின்னப்பேராவைப் அவர் சொல்லும் வாசகத்தை ஊகிப்பதற்குள் உச்சந்தலையின் அத்தனை துவாரங்களிலும் ஊசிகளைக்குத்தி மயிரைப்பிடித்து தூக்குவதுபோல் ஒரு குத்தல் ஏற்படுகிறது. இந்த உபாதைகளோடு எந்த வாசகன்தான் படித்து அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். தொடற்சியாக அவர் எழுத்தின் அர்த்தத்தைத் தேடிக்கொண்டு கதையை ஒரே மூச்சில படித்துவிடுகிற வாய்ப்பு நடப்பதில்லை. அதிகப்பட்சம் இருபது நிமிஷம் அவர் வார்த்தைகளின் மூலத்தைத் தேடமுடிகிறது. அதற்குமேலும் அதில் இருந்தால் முடியைப்பிடித்து தூக்குகிறது. (இது எனக்கு ஏற்பட்ட அனுபவம்.) கோணங்கியின் இக்கதை என் சிற்றறிவுக்கு எட்டிய விதம் சுலபமான வார்த்தைகளால் அதன் அர்த்தம் மாறாமல் சொல்லிவிட்டேன் என்று சொல்லிவிடமுடியாது. ஆனால், ஒரு இருபத்தியைந்து விழுக்காடு அந்த அர்த்தம் மாறாத வார்த்தைகள்தான் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அது உண்மை என்றால் நான் செய்துபார்த்த முயற்சிக்குச் சிறு சந்தோசம். இது செய்தல் என் தொடற்சியான பணியல்ல.)

கோணங்கியின் கதையை என் இலகுவான நடையில்
சாத்தியமற்ற வாழ்க்கை
எந்த இடங்களிலும் நிறைவானதைக் காணமுடியாமல் ஒதுங்கிக்கொண்டே இருந்தேன். எதுவும் விளங்கவில்லை. அறை மூடி தனிமையில் இருப்பது தற்கொலையைத்தான் தூண்டுகிறது. பிரச்சனைக் கழுத்துவரை நெறிக்கப் படும்போது குரல் வலை ஒடுங்கி காற்றும், ஏன் பீடிப் புகைக்கூட நெஞ்சுக்குள் இறங்க மறுக்கிறது.
சுவரில் மிரண்டு ஓடும் பல்லியைப் போல என் மனமும் பதைத்து வெற்று சுவரையேப் பார்த்துக்கொண்டிருந்தது. எதற்காக நிற்கிறோம் எண்பது தெரியாத சுவராக இருந்தேன். மிகவும் சோர்ந்து சுவரில் சாய்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தேன். சுவரில் மோதி சன்னல் வழியாக வெளியேறும் புகைச் சற்று நேரத்தில் காற்றில் கலைந்து காணாமல் போகிறது. சுவரின் லேசான வெடிப்பிலிருந்து கிளம்புகிற எறும்புகளின் வரிசை சின்ன ஏறும்பு, பெரிய எறும்பு, சிறகு முளைத்தது, சிறகு முளைக்காததாகவும் ‘ஒரு சொல்லில் வருசையாக உயிரெழுத்து அளபெடுப்பதுபோல’ எறும்புகள் அசைந்து அசைந்து நகர்கிறது. இநத வரிசையில் எந்த எறும்பாக நான் இருக்கிறேன்.
மனித மனங்கள் கல்லுகள் அதை சுலபமாய் நெருங்க முயைதபடி தவிப்பும், கதறலுமாய் ஆதங்கப்படுகின்றன. யாரிடத்திலும் என் மனச்சுமையைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை, மரணத்தை அணைத்துக்கொள்ள நினைக்கிறேன் அதுவும் சாத்தியப்படாத நிலையில் இருக்கிறது. நேர் முகமாகப் பாறைகளில் ஏறிச்செல்ல முடியாது. மரணம் ஒன்றே தீர்வு எனும்படியான நினைவுதான் எப்போதும்.
அந்த எண்ணங்களில் இருந்து விடுபட நினைக்கும்போது நண்பனின் கடந்தகால உருவம் என்னை முத்தமிட்டு, ஒன்றி, மேலோங்கிய நட்பின் நினைவுகள் மீட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் அவன் இல்லாதது வேதனை அதிகமானது. வார்த்தைகள் வரவேஇல்லை. நினைவுகூர்ந்த எல்லாமே வெற்றாய் இருந்தது. தட்டுத்தடுமாறி மனம் போனபடி நடந்தேன். எப்போதும் வரும் அமைதியான அலை கரையைத்தொட்டு இழுத்ததால் சுத்தமான மணல் பாதையைப்போல் மனதில் தெளிவு பதிந்தது.
பகல் முழுதும் தனக்கு இஷ்டமானபடி நகரங்கள் செய்துகொண்டிருந்தன. நச்சுக்காற்று. முன்னோர்களின் முன்னோர்களைத் தேடி அவர்களின் வழியாக என் கொடியை தேடிப்பிடிக்க வேண்டிய ஆசை.
எளிதில் கிடைத்தத் தகவல்களில் அதற்கான ஆதாரங்கள் இல்லை. மேலே மேற்கொண்டு போக வழி இல்லை. தெருவில் அனாதையான கழுதைகள், அதன் துக்கங்களை வெளியில் சொல்லமுடியாதபடி சோகம் நிறைந்ததாக இருந்தது. மதிய வெயில் என்னைத் தாக்கியதின் புழுக்கத்தால் உடல் வேர்த்து தண்ணீராகக் கொட்டியது.
வெயில், அதைபோலவே வாழ்வும். தலையின் கொதிப்புத் தாங்கமுடியாமல் பாதையற்ற நிலையிலும் செடிகளை விலக்கிக்கொண்டு நிழலில் இளைப்பாறினேன்.
இழப்புகளுக்கிடையில்தொடரும் என் நிகழ்கால வாழ்வை நினைத்துப் பார்க்கிறேன். தனியறையில் சில சன்னல்கள். கம்பிகள். புஸ்தகங்கள். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த கதாப்பாத்திரங்களோடு முழ்கிக்கிடக்கிறேன்.
அக்கதாப் பாத்திரங்களோடு ஒன்றி தனியாய் பேசுவது கூச்சப்படவைக்கிறது.
முன்னோர்களின் வழித்தோன்றளில் ஆதாரமற்றவனாக அறிமுகமானவன் எனக்கு நெறுக்கமானவனாக வந்தான். எந்த ஆதாரத்தையும் எனக்குத்தராமல் போனவன் அவன் சாயலாய் வந்த இன்னொன்று பேசியது.
நான், நீ தேடும் அவனல்ல. உன்னைப்போலவே மனப்புழுக்கத்துடன் அலைந்த இன்னொரு மனசாட்சி.
அந்த மனசாட்சியின் உணர்வின் அனுபவத்தைக் கேட்டபோதுதான் நண்பன் பேசாமல் நிற்பதற்குக் காரணம் என்று விளங்கியது.
இப்போது எல்லா இடங்களிலும் கருமையான இருளே நிறைந்திருக்கிறது. ஒன்றுமே இல்லாத ( மாயையான) நிலையில்தான் என் முன்னோர்கள் வாழ்வாதாரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
என் உறவினர்கள் சிந்தி உறைந்துபோன ரத்தத்தின் மீது மரங்கள் வளர்ந்து காடுகளாயின. கறுமையான இருள் சூழ்ந்த இரவில், என் தந்தை பட்ட வேதனையின் சத்தம் கேட்கிறது. மரணமற்று ரகசியங்களைப் பதுக்கியிருக்கும் வாழ்வு. குத்து மதிப்பான தூரத்தில் கரைந்துக் கிடக்கும் உறவு முறையை என்னால் கணக்கிடமுடிகிறது.
அக்காலங்களில் பருவத்திற்கு வராத பெண் மனைவியரை இரவில் புணர்ந்த பதிவுகளைக் கண்டு ஆழ்ந்து நின்று, அழுது கல்லாக ஆனேன். காலங்காலமாய் நிற்கும் மலைகளில், தாடியுடன் வெகு காலத்தைப் போக்கி தொடர்ந்தது தியானம்.
சிவனின் கைலாயத்திலிருந்து ஸப்த சுரங்களை இசைத்துப் புரண்டு ஓடி வரும் நதியானேன். அகண்ட பெருவெளியில் தனக்கு விருப்பமான படி பாதையை உருவாக்கிச்செல்கிறது நதி. இருளைப் பரப்பிக்கொண்டு இரவுகள் வேகமாக வந்தன. யுகங்களாயின. யுகங்கள் அதன் வரலாறு கல்லுகளில் பதிவானது. இரக்கமற்ற தன்மையைக் கொண்ட பெண் நதியான என்னுடன் சேர்ந்து வருவதாக எண்ணுகிறேன்.
அவளுக்குள் இயற்கையாய் அமைந்த பயமையான சிந்தனைப் பிரதானமான இருள் தன்மைக் கொண்டதாக இருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் பிரதானமாய் இருந்தாள். அவள் உடல் புணர்ச்சியைக் காணாமல் இருந்தது. பெரிய பெரிய முலைகளுடன், அந்த முலைகளைக் கொண்டதாலே எல்லாம் எனக்குக் கீழ் என்ற நினைப்பு. நம்ப முடியாத இடத்தில் பொங்கி வழிகிற பாலாக இருக்கிறாள். சமாதானத்தைப் பேசுகின்ற புறாக்களின் தன்மை கொண்டவள். அவள் மிகுந்த அழகி. பிறர்தொடா முலைகள் வழியவிடுகிற கவர்ச்சியினால் பல காலைப்பொழுதுகள், சில பருவங்களும் போனதே தெரியவில்லை. மீண்டும் இருளடைந்த காடுகள், ஜீவராசிகள், பறவைகள். அனைத்துவிதப் பறவைகளின் கூட்டுச்சத்தங்கள் தனித்னியாக பதிந்து பதிந்து ஸ்படிக பாறைகள் ஆயின. நதியின் பறவைகளின் தொடர் வாழ்வு இல்லாமல் இப்போது அதன் கால்தடங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.
நதி வற்றிச் சுருங்கி மணல்வெளியானது. வெறுமையில் ஆழ்ந்துகிடக்கும் நகரங்கள். நகரங்களில் இடைவெளியில்லாத நிலையில், எந்த இடத்திலும் காங்கிரீட் கட்டிடங்கள்.
அரசு செய்லபாட்டை முழுமையாகச் செயல்படுத்த முடியாதபடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் இருக்கிறார். அதனுடன் இணைந்து செயல் படுகிறவர்கள் மிக அபத்தம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
மக்களின், காடுகளின், நதியின் வாழ்வு இருளில் முழ்கியிருந்தது. இந்நிலையில் ஆதாரமற்று வாழ்வு நகர்ந்தாலும், ஏதோ ஒரு புள்ளியில் தொடருவதற்காக பருந்தாக செயல்படவேண்டியிருக்கிறது.
குடி மக்களை இழந்த வீடு இடிந்த சுவர்களைமட்டும் வைத்திருக்கிறது. முன்னோர்களில் ஆண்கள், பெண்களை அழித்தார்கள்.
நினைவுகூர்ந்தபோது மனம் கல்லாகி மௌனத்தை விரும்பியது. முன்னோர்கள் அழுதார்கள். நிலவின் தெளிந்த அமைதி நிலை. காலத்தில் மறைந்தது அவள் உருவமா? அப்படியானால் நிலாவான அவள் எங்கே?
முறிந்த மரங்களின் நடுவே சிதைந்த நிலாவின் உருவம் வடிக்கும் ஒளிதான் கிடக்கிறது. தனிமை துயரம் அடர்ந்த இருளாய் மங்கி மங்கி சரிந்து செல்லும் பாலைவனப் பாதை. நாலு பக்கமும் மரணவாசல் அசைந்து கொண்டிருக்கிறது.
யார் யாரையோ நினைத்துக்கொண்டேன். எப்போதும் தயாராயிருக்கும் உணர்ச்சியற்ற யோனிகள் அழைத்தன. மனிதன் இல்லாத வெற்றுக் கட்டிடங்களாக வீடுகள். நான்கு பக்கமும் மரணவாசல். முன்னோர்களின் வரலாற்றில் தலைகீழாக உரிக்கப்பட்ட ஆடாகத் தொங்கினேன்.
உயிரற்றப் பொருளாய் முன்னோர்களின் வரலாற்றின் இருப்பிடத்தில் நானும ஒரு பகுதியானேன் பயனற்று தொடர்ந்தது. யுகங்களும் பருவங்களும் பனிகைகாலங்களும் மூடி உதிர்ந்தன.
இன்று நான் ஒன்றுமே இல்லாத நிலையில செயல் பட்டுக்கொண்டிருக்கும் சிறு விதை. ஒரு கிரகத்தின் கரண்டறியப்படாத நிலையில் எப்போதும், வெறுமையான நிலையில் இருந்துகொண்டிருக்கிறேன். சுய உணர்வுற்ற என் பிறந்த வெளி.
----------------------
‘நான்கு பக்கமும் மரணவாசல்’ கோணங்கி

எல்லா இடங்களிலும் இருப்பற்று மறைந்து கொண்டிருந்தேன். எதுவும் புலப்படவில்லை. அறையை மூடித் தனிமையில் இருந்தால் தற்கொலைதான். கழுத்தில் இறுகும் வெளுமையில் காற்றோ பீடிப்புகையோ கூட அடைக்கிறது.
சுவரில் நகர்ந்த பல்லியின் மருண்ட கண்களுடன் மனம் பதிந்து நகர்ந்து வெள்ளி வெளியான சுவரில் ஏறியது. சுவரைப் போல் இருந்தேன். தளர்ந்துபோய் சுவரில் சாய்ந்து பீடி குடித்துக்கொண்டிருக்கிறேன். சுவரை ஒட்டி நகரும் பீடிப்புகை ஜன்னலில் நின்று கரைந்தது. சுவர்க் கீறலுக்குள் வெளிப்படும் ஏறும்பு வரிசை. சின்ன எறும்பு பெரிய எறும்பு சிறகு முளைத்தது சிறகு முடிளக்காதது ஆயிரக்கணக்கில் உயிர்த்தொடர் அசைந்து நகர்கிறது. இந்த வரிசையில் எங்கிருக்கிறேன்.
மனங்களின் பாறைகள் உட்புக வழியின்றி முனங்கலும் கதறலுமாய்க் கொதித்திருந்தன. எங்கும் இறக்க முடியவில்லை. எட்டாத உயரத்தில் அமர்ந்திருந்து மரணம். செங்குத்துப் பாறைகளில் ஏறி முன்னே செல்ல வழுக்கும். மரணம் தீவிரத்துடன் எரிந்து கொண்டிருந்தது.
தப்பிசெல்லும் வழியில் நண்பனின் கடந்த கால உரு உயிரில் ஸ்பரிசித்து ஒன்றி வளர்ந்து ஆவியில் கலந்தது. அவன் மௌனம் இறுகலானது. வார்த்தைகள் இறந்து விழுந்தன. எதிர்பார்ப்புகளில் சருகுகள் உதிர்ந்தன. தட்டுத் தடுமாறிக் கால்களை இழுத்து நடந்தேன். மௌனத்தின் ஸ்பரிச அலை இழுத்த பாதை வறண்ட மணல் வெளியாய்ப் புதைந்தது.
கோர நகரங்களின் பிடியில் பக்ல் விரிந்தது கிடந்தது. அமிலமானக் காற்று. இறந்து கிடந்தவர்களுக்கு அடியில் என் வேர்களைத் தேடும் அலைதல்.
எதிரில் தென்பட்ட நிர்வாணமான நிழல்களுக்கு எந்த முகவிரியும் இல்லை. சாலை பிளந்து கிடந்தது. தெருவில் அனாதையான கழுதைகள், மௌனமாய் சமைந்த சோகம். மதிய வெயில் என்னை அமிலத்தில் கரைத்துத் திரவமாக்கியது.
வெயில் வெயிலென வாழ்க்கை நெற்றியைச் சுட வேலிச் செடிகளுக்கு நடுவில் கிழித்துச் சென்றது பாதை.
பிளவுக்ளுக்கிடையில் தோன்றும் என் நிகழ்கால வெளி. சில ஜன்னல்கள். கம்பிகள். புஸ்த்தகங்கள். 18ம் நூற்றாண்டுப் பிரேதங்களோடு சிறை வைக்கப்பட்டிருக்கிறேன்.
இருப்பில் உறைந்த பிரேதங்களோடு சிறை தனியே பேசுவது வெட்கமாக இருக்கிறது.
ஆதிமரத்திலிருந்து நிர்வாணமாக் ஓடிவந்த அந்நியன் என் நெற்றியில் உதடுகளை வைத்து ஸ்பரிசித்தான். திரும்பிப் பாராமல் நடந்தவனின் நிகழ் எட்டி நின்று பேசியது.
‘நான் அவனல்ல. உனக்குள் தற்கொலை செய்து கொண்ட சகமனித ஆவி’ என்றது.
ஆவியின் ஸ்பரிசம் நண்பனின் உதடுகளின் வெறுமையை உணர்த்தியது.
இப்போது தார் பூசிய இருள் எங்கும். சூன்ய வெளிப் பிளந்து என் வேர்கள் எட்டி மண்ணைத் தொடுகிறது.
என் ரத்தத்தின் பாறைக்குள் மரங்களின் அரளிப்பான காடு. கருஞ்சிறகு விரிந்த இரவில் என் தந்தை எலும்புகளின் முனகல். ஜீவகோடி ரகஸியங்களின் பாதை. தான் தோன்றியான ஆழத்தில் உறைந்த, கால விந்து எனக்குள் எட்டிப் பாய்கிறது.
ஆதிப்பெண்ணின் திறவுபடா யோனி திறந்து புணர்ந்த இரவில் லயமடைந்து வடிந்து பாறைகளைய்ச் சமைந்தேன்.மூப்படைந்த மலைகளின் தாடியுடன் காலத்தை எட்டி வளர்ந்தது தியானம்.
குருமலையில் இடிவிழுந்து முதல் கல் உருண்டு ஸப்த நதியானேன்.
ஊழிப் பெருவெளியில் பாதை வெட்டிக் கொண்டே நகர்ந்தது. நதி. கருஞ்சிறகு விரிந்த இரவுக்ள் பறந்து வந்தன. யுகங்களாயின. யுகங்கள் உறைந்து கல்லானது. கல்லை மனமாக வடித்த பெண்ணுரு நதியுடன் நடந்தது. வரும் குரல்.
அவள் தோளில் அமர்ந்த புராதனப் பறவை சிறகு விரித்து இரவாக இருந்தது. காலத்தில் வெட்டிய அவள் ரூபம். உடல் கல்லாயிருந்தது. பெரிய பெரிய முலைகளுடன், ஒளிரும் முலைகளின் அண்ணார்ந்த பார்வை, அபாந்தரத்தில் பொங்கிய பால், வெண் புறாக்களின் சடசடப்பு அவள் ரூபவதி. உண்ணாமுலை சுரந்த பாலில் பனித்துளிகளும் பருவங்களும் தோன்றி மறைந்தன. அரளித்த காடுகள் ஜீவராசிகள் பட்சிகள். பட்சிகளின் ஒலித் தொகுதிகள் படிந்து படிந்து ஸ்படிகப் பாறைகள். எசசம் விழுந்த நதிக்கரையில் பறவைகளின் கால் பதிவுகள்.
நதி வற்றிச் சுருங்கி மணல் வெளியானது. வெறுமையில் புதைந்த நகரங்கள். நகரங்களுக்கு மேல் குத்துச்செடியின் நிழலைக்கூடக் காணவில்லை.
இடிந்த கோட்டை மேல் அமர்ந்து ஒரு தனித்த காகம் கரைந்து கொண்டிருந்தது. கருமை பூசிய சிறகுகளோடு காகங்களின் பாலை வெளி.
மலர்களும் வனங்களும் நதியும் உதிர்ந்த வெளி கருப்பாய் உறைந்தது. இருளில் மறைந்த கோடுகளில் புள்ளியாய் நகரும் பருந்தின் தீவிர அலைவுகள்.
செடி முளைத்த மதில் சுவர் மட்டும். ஆதிப் பெண்ணுரு ஆதி மரம் பிளந்து மறைந்தது.
நினைவுகளின் பாறைகளுக்குள் உறைந்த மௌனம். மரங்களின் இழுகுரல் நிலவின் உமையான மரணம் மோனம். காலத்தில் மறைந்த அவள் வடிவா? ஆதி நிலா எங்கே?
மூளிமரங்களின் நடுவே சிதைந்த நிலாவின் உரு வடிந்த ஒளி. தினிமையும் சஞ்சலமும் கருக்கிருட்டாய் மங்கி மங்கிச் சரிந்து செல்லும் மணல் பாதை. நாலு பக்கமும் மரணம் அசைந்து கொண்டிருந்தது.
நிழல்கள் என்னை இழுத்துச் சென்றன. வாய் பிளந்த ருட்சத்தின் யோனிகள் அழைத்தன. மதில் சுவரில் காற்றின் ஊளை, நான்கு பக்கமும் மரணவாசல். ஆதி மரத்தில் தலை கீழாக உரிக்கப்பட்ட பிரேதமாகத் தொந்கினேன்.
படிம உயிராய்ச் சுருண்டு மீண்டும் மரத்தில் காய்த்துத் தொங்கும் கனியானேன். வற்றி உறைந்து விதையாய்ச் சுருங்கி உறக்கம் தொடர்ந்தது. யுகங்களும் பருவங்களும் பனிக்காலங்களும் மூடி உதிர்ந்தன.
இன்று நான் சூன்யத்தில் எரிந்துகொண்டிருக்கும் சிறு விதை. ஒரு கிரகத்தின் வெறுமையுடன் சதாவும் சூன்யத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன். பிரக்ஞையற்ற என் பிறந்த வெளி.
------------------------------
ஜே. டேனியல்
ஜே. டேனியல்

No comments:
Post a Comment