திருக்குறள்
மூலமும், பரிமேலழகர் உரையும் சேர்ந்தவாறு சென்னை இந்து தியலாஜீகல்
ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர் கோ. வடிவேலுசெட்டியார்ரவர்கள் இயற்றிய
தெளியுரையும், கருத்துரையும்1904-ல் இரண்டாம் பதிப்பாக பதிப்பித்து இருக்கிறார்கள். இதை ஒரு பள்ளி நூலகத்தில் இருந்து கொண்டுவந்து
படித்தேன். அட்டை
அழுக்கடைந்திருந்தது, ஆனால் இன்னும் பெலன் குன்றாமல் இருந்தது. முறிந்துபோன
அதன் ஏடுகளைத் திறந்தபோது ஒரு கோயிலுக்குள் நுழைவதுபோன்ற உணர்வுடன்
வாசிக்கத் தொடங்கினேன்.
திருக்குறளை இதற்கு முன் வாசித்ததுக் கிடையாது. மேடைகளில் அடிக்கடி புழங்கும் பிரபலமானக்
குறள்களும், அதன் அர்த்தத்தையும் மட்டுமே அறிந்தவன். திருக்குறள் இலக்கணச்
சூட்சமங்களால் கட்டப்பட்டு மனித வாழ்வியியலில் சாதாரணமாக நிகழ்கிற நெருக்கடிகளை
அறிவுரையாகச் சொல்லுகிறது. என்பதை ஒரே வாசிப்பபில் புரிந்துகொள்ளுகிற
ஆற்றல் என்னிடம் கிடையாது.
நவீன
இலக்கிய உலகின் வால் பிடித்து அதன் சீறல்களையும், பல ஏமாற்று வேலைகளையும்
(ஏமாற்றுவேலை என்றுத் தெரியாமலே) உடன் சென்று திரிந்து பார்த்ததால் ஓரளவு
நவீனத்தின் போக்கைப் புரிந்துகொண்டேன். இந்நிலையில்தான், காலங்கடந்தும் நிற்கும் இலக்கியங்களைத்
தேடிச் சென்றேன். அதன் போக்கில் கிடைத்ததே இந்தப்புத்தகம்.
முதலில் குறளையே பிரித்துப் படிக்கத் தெரியவில்லை. தெளிவுரையில் ஒவ்வொரு
வார்த்தையையும் பிரித்துப் பொருள் தந்திருக்கிறார்கள். அதை வாசித்து, பிறகு கோ.
வடிவேலுசெட்டியார் கருத்துரையும் வாசிக்கிறேன். எனக்கு வேறு ஒரு மாதிரியாகப் புரிவதால் பரிமேலழகர் உரையைப் படிக்கிறேன். இப்புத்தகத்தை ஒரு வாசிப்பில் பல கிளைவாசிப்பாகவும், மீண்டும் இன்னொரு திருப்புதல் வாசிப்பாகவும் செய்து எனக்கு விளங்கிய விதமாக்குறிப்பு எடுத்துக் கொண்டேன். எனக்கு வேறாய்த்தெரிகின்ற குறளைப்பற்றி மற்ற அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இணையதளங்கள் மூலமாகத் தேடிப்பார்க்கிறேன். அதன் பிறகுதான், இந்த வாசிப்பின் வழியாக என் பார்வையில் எனக்குச் சரியாகப்படுவதை மட்டும் வைக்கிறேன். இப்போது ஓரளவுக்கு
குறலின் அர்த்தத்தை நேரடியாகவே ஊகிக்க முடிகிறது.
இப்புத்தகத்தை வாசிப்பதற்கு முன் என் மனதில் பிரமாண்ட உருவம் கொண்டிருந்த திருவள்ளுவர், வாசிக்க வாசிக்க அவர் மீது எனக்குக் கோபம் வந்துக்கொண்டே இருக்கிறது. அது மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.
1. “மன்னிய விழைய விழையாமை மன்னரான்
மன்னிய வாக்கந் தரும்”
2, “செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக
லான்ற பெரியா ரகத்து.”
3. “ இளைய ரினமுறைய ரெளிறிகழார் நின்ற
வொளியோ டொழுகம் படும்.”
எந்தக் காலகட்டத்திலும், எந்த நாட்டிலும் நல்ல இலக்கியவாதிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராளிகளாகவே இருந்திருக்கிறார்கள். தான் வாழும் காலத்தில் பல நூல்கள் தடைச்செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் பதினென் கீழ்கணக்கின் வரையறைக்குள் இருந்தத் திருக்குறள் மற்ற நூல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி காலங்காலமாக எவ்வளவு மோசமான ஆட்சியாளர்கள் மாறி மாறி வந்தாலும் (அண்ணா ஒருவர் மட்டும் திருக்குறளுக்கு உரை எழுதுகிறவர்கள், தங்கள் தங்கள் மனவிருப்பத்திற்கு ஏற்றார்போல உரை எழுதுகிறார்கள் என்கிறார்.) தன் கரத்தின் உயரம் போதவில்லை என்று மரக்குதிரைப் போட்டு அதன் மேல் ஏறித் திருக்குறளை தூக்கிப்பிடிப்பது ஏன்? விக்கிபீடியாவில் மற்றப் பதினேழு நூல்களையும் தேடியபோது, அதில் அறிமுகமாக ஒரு இரு பாடல் தந்து விளக்கவுரையும் தந்திருக்கிறார்கள். அதுவும் மிக அறிய கருத்துக்களைக் கொண்டதாகவும், பல்நூகளின் பாடல்கள் ஒரு வாசிப்பில்கூட பலப் பார்வையைத்தந்து இலக்கிய நயத்தைக் கூட்டுவதாகவும்தான் இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட குறள்களைச் சற்று நோக்கினால் ‘அரசன் ஆசைப்படுகின்ற எதையும் மந்திரிகள் ஆசைப்படக்கூடாது.’ தன்னுடையத் துணியைத் தானே துவைத்துக்கொண்ட அரசன் எந்தக் காலகட்டத்திலாவது இருந்திருக்கிறானா? மக்கள் பசியிலும், பட்டினியிலும் துவளும்போது. அரசன் அந்தப்புரத்தில் மாற்றான் மனைவியைச் சுவைத்துக் கொண்டிருக்கவில்லையா என்ன? இப்படி இழிசெயல் செய்கிற அரசனாக இருந்தாலும், ஏன்? அரசன் சின்னப் பையனாக இருந்தாலும் அவமதிக்கக்கூடாது, அரசன் பார்க்கிற விதமாக, சக அமைச்சர்களுடன் காதுக்கருகில் பேசக்கூடாது. என்று இலக்கியவாதி ஆட்சி எந்திரத்தைக் கடவுள் தன்மைக்குத் தூக்கி நிறுத்துவதும், (உலகம் முழுவதிலும் ராஜாக்கள் தன்னையே கடவுள் என்றுதான் சொல்லிக் கொண்டார்கள்.-ஒரு நண்பர் கூறியது) மக்களைப் பயமுறுத்தி, அரசன் தருவது கஷ்டமாக இருந்தாலும் சகித்துக்கொள்ளவேண்டும். அவரின் எந்தக் கருத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்தை மக்களுக்கும், மந்திரிகளுக்கும் கட்டமைக்கிறார். (இந்த வழி காட்டுதல்தான் தற்காலத்தில், ஆட்சியாளர்களுக்கு மறைவாக அவரைப்பற்றி தரக்குறைவாக பேசுகின்ற அமைச்சர்கள், ஆட்சியாளர் முன்னிலையில் இருக்கிறபோது முட்டிக்கொள்ளும் ஆயுதத்தை முடக்கிவைத்து நிற்பதும், சாஸ்டாங்கமாய் தரையில் விழுவதும், மக்களை வதைக்கும் திட்டங்களில் கேள்வி எழுப்பாமல் விடுவதும் நடக்கிறது)
“தனியொருவனுக்கு உணவு இல்லை எனில் ஜெகத்தினையழிப்போம்” என்கிறார் பாரதி. இதை எந்த ஆட்சியாளராவது தான் ஆளும் அறையின் தலை உச்சியில் எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்களா?
“கெடல் வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி
னாற்று பவர்க் ணிழுக்கு.”
கோ.வ,கரு- ‘ஒருவன் தான் கெடவிரும்பினால் பகைவரை நினைத்த பொழுதே அழிக்கும வல்லமையுள்ள வேந்தரிடத்துப் பிழைசெய்யக்கடவன் என்பது.’
தனி ஒருவன் அழிய விரும்பினால் தான் நினைத்த மாத்திரத்திலேயே அழிக்கக்கூடிய அரசனைப் பகைக்கக்கடவன். என்ன அநியாயம். ஒரு சாதாரணப் பிரஜை அரசனிடம் பிழைச் செய்ய விரும்புவானா? அப்படி செய்தால் என்ன நேறும் என்ற புரிதல்கூடவா இருக்காது. அதையும் மீறி ஒருவன் அரசனைப் பழிக்க வேண்டும் அல்லது அழிக்கவேண்டும் என்று நினைத்தால் அவன் மக்களுக்கான போராளியாகத்தான் இருக்கவேண்டும்.
ஒருவேளை இந்தக்காலகட்டத்தில் ராஜபக்சே இந்தக்குறளை நேரடியாகப் படித்து அர்த்தம் புரிந்துகொண்டாரென்றால் ஐ. நா சபையிலோ அல்லது எந்த நாட்டு மனித மீறல் நீதிமன்றத்திலோ அஞ்சாமல் சொல்லுவார். தமிழ் ஆட்சியாளர்கள் போற்றுகின்றப் புலவரே சொல்லியிருக்கின்றார். அவரின் பொன் வார்த்தைகளைத்தான் சிறமேற்கொண்டு நிறைவேற்றி இருக்கிறேன் என்று மனசாட்சி குற்றமடையாமல் சொல்வார்.
இப்படித் தொடர்ந்து மந்திரிகள்கூட அரசனுக்கு அடிபணிந்து நடக்கனும், எந்தக் காரணம் கொண்டும் அரசன் மனம் கசிந்துவிடக்கூடாது என்கிற திருவள்ளுவர்
1. “வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளுமென்னாந்
தகைமாண்ட தக்கார் செறின்.”
கோ. வ- கரு- ‘தவப் பெருமை யுடையாரால் கோபிக்கப்பட்ட அரசரது வாழ்வும் பொருளும விரைந்து கெடும் என்பது’
2. “இறந்தமைந்த சார்புடைய ராயினுமுய்யார்
விறந்தமைந்த சீரர் செறின்.”
கோ. வ- கரு- “‘தவமுடையார் கோபித்தல் அரண் முதலிய சார்புடையவரும் பிழையார் என்பது’
(ஏண்டா, பதினென் கீழ்கணக்கின் வரிசையில் இருந்த திருக்குறள் அணைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வேதநூலாக வந்தது என்று இதன்பிறகுதான் புரிந்தது.)
அக்காலகட்டங்களில் இலக்கிய உலகில் மாபெரும் அரசியல் கூத்துஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் நிச்சயமாக நம்பமுடிகிறது. பொருட்பாலின் அதிகபட்சமாக அரசனை தெய்வத்துக்குச் சமம் அவனை எதிர்த்தால் வாழ்வு அழியும் அப்படிசொல்லி வந்தவர் 1. தவப்பெருமை உடையார் கோபித்தாலே அரசனது வாழ்வு அழியும், (ஒருவேளை தவம் செய்கின்றவரை வம்பிக்கிழுத்த அரசன் என்றால் கூட மனசு ஆறிவிடும். தவப்பெருமையுடையார் எனும்போது, ஏதோ ஒருகாலத்தில் தவம் செய்ததின் பலனாக அப்பெருமை ஒட்டிக் கொண்டிருக்கலாம், அல்லது அவர்கள் முன்னோர்களின் வழியாக அப்பெருமை இன்னும் ஒருவருக்கு இருக்கலாம் அந்தப் பெருமையின் எச்சம் இருப்பதாலேயே அவர் கோபப்பட்டால் அரசனே அழிந்துவிடுவானா?)
2. தவம் இருப்பவர் கோபித்தால் அரண், அதைச்சார்ந்த ஆயுதம் முதற்கொண்டு எல்லாம் அழிந்து போகும் என்கிறார். (நான் தவமிருப்பாரை மதிக்கிறேன்.) எந்த உயிர்க்கும் தீங்குச்செய்யாமல் வாழ்ந்து மறைவதைக் காட்டிலும், சற்று நேர்மையாக சக மனிதனின் வாழ்வுக்காக ஏதோ ஒரு வகையில் சிறிதளவேனும் உழைக்கிறவன், சாதாரண மனிதனாய் இருந்தாலும் தவமிருப்பாரைவிட மேன்மையானவர்களாக மதிக்கலாம் அல்லவா? அப்படிப்பட்டவர்கள் அரசனுக்கு முன்பாக ஒரு அடிமையைப் போல இருக்கவேண்டும். தவமுடையாருக்கு மட்டும், அரசனே அடிமையைப்போல இருக்க வேண்டும் என்று சொல்லுவதால். அரசனுக்கு மறைவாக மதவாதிகளையும், மதவாதிக்கு மறைவாக அரசனையும் மாறி மாறி சமாதானப்படுத்தி இருக்கிறார்.
இதை நிறுபிக்கும் விதமாக, காவிரியும், கங்கையும் என்று பொருள் தருகின்ற குறளை மேற்கோள் காட்டி ‘திருவள்ளுவர் ‘வைதீகர்’தான் என்று ‘காஞ்சியின் மாகா பெரியவர்’ தன் கருத்தை முன்வைக்கிறார்.
மதவாதிகளுக்கும், திருக்குறளுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பதற்கு இன்னுங்கூட ஒரு குறிப்பு- நான் இதுவரை வாசித்தநூல்கள் அளவில் எந்த எழுத்தாளரும் இந்தளவிற்கு ஆதிதிராவிட மக்களை நேரடியாக கேவலப்படுத் தியிருக்க மாட்டார்கள். இன்னும சொல்லப்போனால் அம்மக்களை ஒரு மனிதர் களாகவே மதிக்கவில்லை. அவர்களுக்கென்று ஒரு அதிகாரத்தையே உருவாக்கி யிருக்கின்றார். ‘அவர்களின் பரிதாபத்துக்குரிய வாழ்வுமுறையை சமூகத்தின் கண்முன் வெளிக்கொண்டுவர அல்ல, மாறாக கொத்தடிமைகளாய் இருக்கும்போது சதை கீறி வழியும் ரத்தத்தை பாத்திரத்தில் மொண்டு நாய்களுக்கு பரிமார.’ அதை திருவள்ளுவர் இரக்கமில்லாமல் செய்திருக்கிறார்.
(1. “மக்களே போல்வர் கயவ ரவரன்ன
வொப்பா ரியாங்கண்ட தில்.”
பரிமேலழகர்- வடிவான் முழுதும் மக்களையொப்பர் கயவ, அவர் மக்களை யொத்தாற்போன்றே வொப்பு 1 வேறிண்டு சாதிக்கண் யாங்கண்டதிலை.
கோ.வ கரு- மக்களுங் கயவரும் குணங்களாலன்றி வடிவால் தம்முள் ஒப்பார் என்பது.
2. “நன்றறி வாறிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல் மிலர்.”
கோ.வ கரு- ‘கீழ்மக்கள் பழிபாவங்களைத்தரும் காரியங்களை அஞ்சாது செய்தும் மனம் வருந்துவதில்லை’
3. “தேவ ரனையர் கயவ ரவருந்தா
மேவன செய்தொழுக லான்.”
4. “அச்சமே கீழ்கள தாசார மெச்ச
மாவாவுண்டே லுண்டாஞ் சிறிது.”
கோ.வ கரு- கீழ்மக்களிடத்து ஆசாரம் இயல்பாகவில்லை என்பது’
5. “ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு.”
கோ.வ கரு- ‘கீழ்மக்கள் பிறர் வருத்திய விடத்தேதான் பயன் படுவர் என்பது’
6. “உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ்.”
கோ.வ கரு- ‘கீழ் மகடைத்துப் பொறாமையே குடி கொண்டிருக்கும என்பது’
7. “எற்றறி குறியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து.”
பரிமேலழகர்- “கயவர் தம்மை யாதானுமொரு துன்ப முற்றக்கால் அதுவே பற்றுக்கோடாக் விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றற்குறியர், அதுவன்றி வேறெத் தொழிற்குரியர்.”
கோ.வ கரு- ‘கீழ்மக்கள் துன்பம் நேர்தலிடத்துத் தம்மை பிறர்க்கு விற்றற் குரியவராவன்றி வேறெதற்கு முரியவராவர் என்பது’
8. “அறை பறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.”
பரிமேலழகர்- “தாங்கேட்ட மறைகளை இடந்ததோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச்சொல்லுதலான், கயவர் அறையப்படும் 6 பறையினை யொப்பர்.”
தெளி- “ தாங்கேட்ட- மறை- இரகசியங்களை, உய்த்து-( இடந்தோறுந் தாங்கிக் கொண்டுபோய், பிறர்க்கு- உரைக்கலான்- சொல்லுதலால், கயவர்- கீழ்மக்கள், அறைபறையன்னர்- அறையப்படும் பறையினையொப்பர்வார்.”
கோ.வ கரு- ‘கீழ் மக்களிடத்து ரகசியம் வெளிப்படாதிருத்தலில்லை என்பது’)
இப்படிப் பொருட்பாலின் ‘கயமை’ அதிகாரம் முழுதும் திருவாய் மொழிந்துள்ளார். திருவள்ளுவரின் குரலில் ஒலித்தக் குறளை, பிரித்துப் பிழையில்லாமல் படிக்கமுடியுமா? நீயெல்லாம் அவரைப் பேசுகிறாயே, அவர் பறையறைப்பற்றிப் பேசவில்லை. கீழ்த்தரமாக செயல் செய்யும் திருடனையும், கொலைகாரனையும்தான் பேசுகிறார், என்று சொல்லலாம். திருடனோ, கொலைகாரனோ யாரிடமும் ஆசாரம் பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு வேண்டியது, பணம். மேலும் பணம் கையில் இருக்கும்போது யாரிடத்திலும் அடிமையாய் இருக்கவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. ஆக, முழுக்க முழுக்க ஆதிதிராவிட மக்களைத்தான் குறிப்பிடுகிறார்.
1. ‘கீழ்மக்கள் பிறர் வருத்திய விடத்தேதான் பயன் படுவர் என்பது’ மனசாட்சி உள்ளவர்கள் எந்த அடையாளத்திலும் சாய்ந்துகொள்ளாமல் யோசித்தால் ‘ஒருமுறை கல் வீசினால் மறுமுறை, அந்த இடம் போக நாய்கூட யோசிக்கும் ஆனால் எவ்வளவுதான் கொடுமைப்படுத்தினாலும், தன்னை அடிமைப்படுத்து கிறவனிடமே தன் வாழ்நாளைக் கழிக்கவேண்டும் என்பது எவ்வளவு மோசமான சூழல். திருவள்ளுவர் குறிப்பிடும் அக்காலப் பறையர்கள் முக்கால் பாகம் வாயிருந்தும், தன் எஜமான் நினைத்த இடத்தில் குச்சியை அடித்துக்கட்டி. தன் சம்பத்தை மிச்சப்படுத்தும் விதமாக சிந்திகிடக்கும் வைக்கோல், தவிட்டால் அவர்கள் வயிற்றை ஆற்றுப்படுத்த உதவியிருப்பார்கள் போல. (தற்போதைய தலித்துகள் பலர், அவரவர் மதவாதத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு, அவனுக்குள்ளேயே அவனுக்கு கீழாக ஏழ்மையில் இருப்பவனை கேவளப்படுத்தி மகிழும் சூழல் பரவலாகிக் கொண்டுவருகிறது.)
இந்நிலையில் வாழ்பவன் எப்படி ஆசாரம் பார்க்கமுடியும்?. 2.‘துன்பம் வருகின்றபோது தன்னை விலைக்கு விற்றுக்கொள்கிறதைத்தவிர, வேறு எதற்கும் உதவமாட்டார்கள்’ எவ்வளவு மோசடி நிறைந்த கணிப்பு. (அவர் அப்படிச் சொல்லவில்லை. துன்பத்திற்கு ஆளானவன், சந்தற்பத்திற்கு ஏற்றார்போல தனக்குச் சாதகமாக நட்ந்து கொள்வதைத்தவிர வேறுவழி யில்லை. என்று அர்த்தம் கொண்டால் ,அடுத்தவரி எதற்கும் உதவமாட்டார்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், நடைமுறைச் சமூகத்தில் சமயத்துக்குத் தகுந்தார்போல கேடுசெயல் செயல் செய்வோரை “அவன் வாய் சாலாக்குபா, அவனத் தட்டிக்க முடியாதுபா, அவன் எப்படி வேண்டுமென் றாலும் பொழைச்சிக்குவான்’ என்று பெருமைப் படும்படியாகத் தான்பேசும்.” அதனால் திருடனையோ, கொலைகாரனையோ சொல்லியதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆக, இக்காலம் வரை சில மதவாதிகள் வர்க்கத்தில் அதிகமாகப் புழங்கும், தலித்துக்களுக்கு அறிவு மட்டு உயர்வகையானப் படிப்புக்கோ, வேலைக்கோ தகுதியற்றவர்கள். என்று சொல்லுவதற்கு இக்குறள்தான் வழித்தோன்றலாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
இவைஎல்லாவ்ற்றிகும் மேலாக, அவைகளை எல்லாம் எடுத்து சாப்பிடும் அளவுக்கு நேரடியான இழி சொல்தான் 8.“கயவர் அறைபறையன்னர்” ‘கீழ்மக்கள், அறையப்படும் பறையினையொப்ப” ‘தீயவர் அடிக்கிற (பறை) மேளத்தை ஒத்தது.’ என் அறிவிற்கு எட்டியவரை திருக்குறளில் கயமை அதிகாரம் முழுக்க வரும் (அறத்துப்பாலில் வரும் சிறியர் என்ற வார்த்தை தவிர்த்து) கயவர்- தீயவர் என்கிற கீழ்மக்கள் இழிசொல் எல்லாமே பறையர்களைக்குறிக்கும் சொல்தான். (ஆசாரம் பார்ப்பதில்லை, குட்டக்குட் குணிகின்ற நிலையை இச்சமூகம் நிர்பந்தித்து இருக்கிறது. இருந்தாலும் குட்டுகிறவனிடமே தன் உழைப்பைச் செலுத்துகிறான். துன்பம் வரும்போது தன்னையே அடிமையாக்கிக் கொள்கிறான், இந்த அப்பாவியை தீயவர் (கயவர்) என்பதுதான் திருவள்ளுவரின் அறமா? நான் எந்தளவுக்கு திருவள்ளு வரை மதிக்கிறேனோ, அந்தளவு அவர் என்னை ஒரு சாதாரண மனிதனாகவாவது நினைக்கவேண்டாமா? அப்போதுதானே இச்சமூகத்தில் சமன்பாடு ஓங்குவதற்கு லேசான புரிதலாவது ஏற்படும். நூறு குற்றவாளி தப்பிவிடலாம் ஒரு நிரபராதி தண்டிக்கக்கூடாது என்ற வாசகத்தை எல்லோரும் தூக்கிப்பிடிக்கிறோமே. ஆயிரம் குறள் அரசனுக்கும், சமூகத்துக்கும் வழிகாட்டியாக இருக்கட்டும். பத்து குறள், (அக்காலகட்டங்களில்) குரல்வலையே இல்லாத ஒரு சமூகத்தை குழிக்குள் தள்ளிவிடுவது நியாமா? அதன் பாதிப்பு இரண்டாயிரம் காலத்திற்குப் பிறகும் இன்னும் தொக்கி நிற்கவில்லையா?
திருக்குறள் தமிழர்களின் பொதுமறையாக இருக்கிறபோது. எனக்கு ஏன் இப்படிப் புரிபடுகிறது. என்று யோசித்தபோது ஒரு உண்மை வெளிப்பட்டது. ஆமாம், திருக்குறள்களில் அரசுப்பேருந்துகளிலும், பொதுமேடைகளிலும், திருமணப் பதிரிகைகளிலும் சொல்லப்படும் மிகப் பிரபலமான குறள்கள் இந்தப் புத்தகத்தில் அநேகமாக காணவில்லையே? நாம் திருக்குறளைதான் வாசிக்கிறோமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. என்ன காரணம் என்றால் நான் வாசித்தப் புத்தகத்தில் ‘பொருட்பால், காமத்துப்பால்’ மட்டுந்தான் பதிப்பித்து இருந்தார்கள். அடடா அறத்துப்பால் விட்டுட்டு இருக்கிறாங்க. அறிவாளித் தகப்னான இணயதளங்களில் தேடவேண்டியதுதான் என்று ‘தமிழ்க் களஞ்சியம்’, ‘ஈகரை தமிழ்க் களஞ்சியம்’ இன்னும் சில இணைய தளங்களை தேடினேன்.
அதில்தான் இதுவரைப் பொது இடங்களில் புழங்கும், பிரபலமான குறள்கள் எல்லா மனிதனும் மனம் திறந்து ஏற்றுக்கொள்ளும் வாழ்வியல் கொட்டிக்கிடக்கின்றன. இப்போதுதான் எனக்கு இன்னும் பலக் கேள்விகள் எழுகிறது. திருக்குறளில் அறத்துப்பாலின் குறள்களைப் பொதுவெளியில் வைப்பதுபோல், மற்ற இரு பகுதியை ஏன் தெளியுரையோடு வெளியே ஒட்டுவது இல்லை?. ‘அறத்துப்பாலை’ மட்டும் விடுத்து, மற்ற இரு பகுதியை மட்டும் சென்னை இந்து தியலாஜீகல் ஹைஸ்கூல் 1904- ல் இரண்டாம் பதிப்பாகப் பதிப்பித்துள்ளது ஏன்? எந்தக்கட்சி ஆட்சியாளர்களாக வந்தாலும் பெண்ணையும், மக்களை பயமுறுத்துகிற, வாயிழந்தவர்களை அடிமையாகவே வைத்திருக்கிற சூட்சமம் நிறைந்த பின்இரு பகுதியை நிஜவாழ்வில் கடைபிடித்து. ஓட்டுச்சேகரிக்க மட்டும் அறத்துப்பாலை பொது இடங்களில் சுவரொட்டிகளாகப் பயண்படுத்துகிறார்கள். ஆனால் மதவாதிகள் சற்று நேர்மையானவர்கள், எனக்கு ஒத்தக்கருத்தை மட்டும் நேரடியாக பரப்புரைச் செய்து ஏற்கச்செய்துவிட்டால், அதன்பிறகு எப்போதும் எனக்கு அடிமைதானே. இந்த நிலையில், திருவள்ளுவரின் கற்பனையான உருவத்தை அறத்துப்பாலுக்காக ஆழ்ந்த வயது முதிர்ந்த அறிஞராக ஏற்றுக்கொண்டாலும், பின்இரு பால்களுக்குகாக, முறுக்கு நிறைந்த ஏதோ ஒரு வாலிபனாக கடப்பாரையுடன் மசூதிமேல் நிற்கும் திருவள்ளுவராக என் மனம் கற்பனைச்செய்கிறது.
ஜேடி

No comments:
Post a Comment