கல் மரம்
வேர் ஊன்றுகிறது
கங்கா தூங்கவில்லை. மல்லாந்து படுத்திருந்தாள். இடதுகாலுக்கு அதிகமான கணத்தைக் கொடுத்து நீட்டியிருக் கவில்லை. ஒரு வேளை அப்படி அழுத்தம் கொடுத்திருந்தால், வலதுகால் இழுத்து மடித்து நிறுத்தியிருக்கும்போது நைலான் பாய் சுருங்கியிருக்காது. அவள் வலதுகாலை மடித்து வைத்திருக்கும்போது அவளின் பளிங்குத்தொடை மினுங்கியது. ஆனால் பாவாடையுடன் சுருங்கியப் புடவை ஓரளவு தற்காப்புடன் நின்றது. அதற்கு என்னவிதமான பாடம் கற்பித் திருக்கிறாளோ, இரு கைகளும் கூட வெறுமனேதான் இதுவரை உயிரற்ற பொருள்போல பாயில் கிடந்தது. உடலைத் திருப்புவதுபோல சைகையால் வலதுகையை நெற்றியில் மடித்து வைத்தாள். அதை வேகமாக செய்தபோது ஒற்றை மார்பின் முந்தானை விலகி இறங்கியது. உடனே இடது கையை வயிற்றின் மேல்வைத்து முடிந்தளவு வயிற்றின் மறைவுகளை விலக்கி வைத்தாள்.

இரண்டு ஆள் தாராளமாகப் படுக்கின்ற பாயின் ஓரத்தில்தான் இத்தனை நிகழ்வுகளையும் நடத்திக்காட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் எல்லாமே நல்ல தூக்கத்தில் நிகழ்ந்ததுபோலவே யதார்த்தமாக நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்படித்தான் நிகழ்த்தினாள். இத்தனை நாள் சுவற்றில் அந்த மெல்லிய விளக்குகூட அணைத்து விடுவார்கள். இன்று அது எரிந்திருந்தது. அந்த விளக்கின் வெளிச்சம் யாருக்கும் கிறக்கத்தை ஏற்படுத்தும்.
செல்வம் எப்போதும் போல் தூங்கவில்லை. பாயில் இந்த கடைசிப் பக்கம் கங்காவைப் பார்த்தபடியாக ஒருகளித்துப் படுத்திருந்தான். முடிந்தளவு இரவில் யாரும்போர்வையை போர்த்திக்கொள்வதில்லை. குருப்பவுஸ் வீடு என்பதால் பகல்முழுக்க தாங்கிய வெயில் குளிர்காலத்திலும் வீட்டின் கூரை கோழி அடைகாப்பதுபோல் வைத்திருக்கும் தூங்கும்வரை புழுக்கம் தெரியும். அதற்குப் பிறகு வெயிலின் சுவடு இருக்கும், ஆனால் தூங்கியவிட்டபிறகு அதுவே சுகம் என்று சொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை. பகலிலேயே செல்வத்தின் கண் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிவது கஷ்டம் இரவில் எங்கே தெரியப்போகிறது. செல்வம் உடல் சூடாகியது அவன் பார்வை கங்காவின்மீது மேலும், கீழுமாக இருந்தது. கண்களை நன்கு திறந்தேப் பார்த்திருந்தான். லேசான நடுக்கம் வந்தது. முகம் சற்று வேர்த்துக்கொண்டே இருந்தது. கை நீளுவதற்கு முயன்றது. இப்படி புரளுவதுபோல் திரும்பி கங்காவை நோக்கி நகர்ந்தான்.
அவனின் சிறு அசைவுகளையும் அறிந்தவளாக கண்களை திறந்து மூடினாள். இப்போது செல்வம் பக்கமாக திரும்பினாள், ஆனால் கால்களை எக்காரணத் தைக்கொண்டும் அசைக்கவில்லை. இரு கால்களையும். மல்லாந்து வைத்துக் கொண்டு, இடுப்புக்குமேல் உடலை ஒருகளித்தாள். அவளுக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. ஏறக்குறைய தேர்ந்த யோகா கற்றவளாகவே தன்னை உறுமாற்றினாள். தொடர்ந்து பயிற்சி எடுப்பவர்கள். தங்கள் உடலை எப்படி வேண்டுமென்றாலும் முறுக்கலாம். பயிற்சி இல்லாதவர்கள் அப்படி முறுக்கினால் சில நேரம் எலும்புகூட உடைய வாய்ப்பிருக்கிறது. அது கங்காவுக்கு தெரியாது. இருந்தாலும் அந்நேரம் மிகுந்த இயல்பாக கைகூடியது. அவள் ஒருகளித்தபோது மார்பின் மொத்த முந்தானையும் கீழே விழுந்தது.
செல்வம் இன்னும் சற்று நகர்ந்தான். இப்போது முகம் முன்பைவிட அதிகமாக வேர்த்திருந்தது. மெல்லமாக கையை நீட்டினான். இன்னுங்கொஞ்சம் நீட்டினான். தன்னை நோக்கி நீண்டு வரும் கையை கங்கா பார்த்துக் கொண்டே யிருந்தாள். செல்வத்தின் கை நெஞ்சின் மேல் வளர்ந்திருந்த மார்பைப் பிடித்தது. கங்கா அசையவேயில்லை. அப்படியே இருந்தாள். கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.
2
செல்வம்மேல் நோக்கியப்பார்வையால் சுவர்களின் மூலைகைளையே பார்த்துக்கொண்டிருந்தான். அடிக்கடி தன் கன்னத்தின் இருப்பக்கத்தையும் சொரிந்துகொண்டும் சில நேரம் முகத்தை தேய்த்துக் கொள்கிறான். அவனைப் பார்க்கும்போது மனிதர்கள் கற்றுத்தரமுடியாத எதையோ சுவர்களிடம் கற்றுக்கொள்கிறான். என்பதுபோல் இருக்கும. அவனை அழகற்றவன் என்று சொல்ல முடியாது. பெண்களை வசீகரப்படுத்தும் அழகுள்ளவன் என்றும் சொல்லமுடியாது. கீழ் உதடு மட்டும் சற்று தடித்து இருக்கும். இந்த ஒரு வாரமாகத்தான் முகச்சவரம் செய்யவில்லை. இதற்கு முன்பெல்லாம் அவன் வயதொத்தவர்கள் குடும்பம், பிள்ளைகள் என்று இருந்தாலும், அவ்வப்போது தெருவிற்கு அழைத்து அரட்டை பேசுவார்கள். செல்வம் எல்லாரிடமும் கலகலப்பாக பேசி ஜாலியாக இருப்பான் என்பதற்காக அவனை அழைக்க மாட்டார்கள். யார் எப்படி எவ்வளவு கிண்டலாகப் பேசினாலும் மௌனமாகவும், லேசாக சிரித்தும் கிடப்பான். அதற்காகவே அவனை சூசகமாகப் பேசி அழைத்துச் செல்வார்கள்.
அப்படியிருந்தவன் இந்த மூன்றுமாதத்தில் நாளாவது முறையாக வீட்டைவிட்டு ஓடிவிட்டான். இரண்டுமுறை ஒருவாரம் கழிந்து அவனாக வந்துவிட்டான். மூன்றாவது முறை ஏதோ ஊரில் சந்தேகப் படும்படியாக சுற்றியிருந்ததால் போலீஸ் பிடித்துவிட்டார்கள். அவன் தந்த தகவலின் பிரகாரம் போலீஸ் வீட்டிற்கு தகவல் அனுப்பியது. இந்த முறைதான் யாருக்கும் தெரியாமல் கிளம்பி உள்ளுர் ரயில்வே ஸ்டேசனை அடைந்த போது, செல்வத்திற்கு அறிமுகமானவர்கள் பார்த்து விசாரித்து அழைத்து வந்தார்கள். அவர்கள் அழைத்தபோது செல்வம் எந்த மறுப்பும் சொல்லாமல் அவர்கள்கூடவே வந்துவிட்டான். இப்படி அழைத்தவுடன் வருபவன் எதற்காக அவ்வளவு தூரம்போனான் என்பதைக்கேட்டால் அவனிடம் பதில் இல்லை. வெறித்தப்பார்வையில் எதையோ தேடுவதுபோலவே சுற்றிச் சுற்றிமேலும் கீழும் பார்க்கிறான். பரந்த வெளியில் போனால் எப்படிப்பார்க்கிறானோ, அப்படித்தான் இன்று வீட்டிற்கு வந்தபிறகும் இருக்கிறான். வீட்டிலேகூட அவனால் நடப்பதை நிறுத்த முடியவில்லை.
செல்வம் மறுபடியும் ஓடிவிட்டானாம், நம்ம பக்கத்துத் தெரு முனுசாமிதான் பார்த்து அழைத்து வந்திருக்கிறான். பிரபு வந்து விசாரித்தான். செல்வம் எப்போதும்போலவே சொந்த உறவுகளைக்கூட மலங்க மலங்கப் பார்கிறான். “செல்வம் ஏண்டா இப்படிப்பண்றே. உனக்கு என்னவேணும். எதுனா சொன்னாத்தானேடா தெரியும் அப்படிப்பார்த்து சின்னதாக ஒரு ஊங்காட்டு தலுடன் உட்கார்ந்து விட்டான். அடுப்படியிலிருந்து ஸ்டவ் எரிகிற சத்தத்தையும் மீறி கங்கா அழுகிற சத்தம்கேட்டது. சிலர் தெருவிற்கு வெளியே நின்று செல்வத்தை பரிதாபத்துடன் பார்த்தார்கள்.
நானும் ஒருமாதமாகத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் காதிலேயே போட்டுக்கொள்வதில்லை. கேட்டா இப்பதான் அங்க, இங்க கடன்வாங்கி வீட்ட கட்டிடேன்கிறே. மொதல்ல நம்ம வருமானம் என்னவோ அதுக்குள்ள வாழறதுக்காண வழிய ஆரம்பத்தில இருந்தே செய்திருக்கணும், அதவிட்டுட்டு பத்து, பாஞ்சி வட்டிணு வாங்கி வீடுகட்டினது தப்பு. இப்ப எல்லாரும் எங்கள கேவலப் படுத்துறாங்கோணு, நீங்களா யாருக்கிட்டேயும் பேசாம ஒதுங்கியிருக்கிறது தப்பு. அதப்பாத்துதான் அவனும் யாருக்கிட் டேயும் பேசுறதக்கொறச்சிக்கினான். அதுக்கப்புறம் கடங்காரனுக்கு எப்படி பணத்தத்திருப்பி குடுக்கிறது என்ற பயம் அவனுக்குள்ளவும் வந்திருக்கும் அதுக்கெல்லாம்மேலாக நான் ஒண்ணு சொல்றேன், அவனுக்கு ஒரு கலியாணத்த பண்ணினா இப்படி நடக்கிறது சரியாயிடும். அதத்தான் அப்போதுதிருந்தே சொல்லுகிறேன்” என்றான்.
கங்கா வைத்திருந்த சோற்று உலை பொங்கிற்று. நான் என்ன பண்ண முடியும். எவ்வளவுதான் கஷ்டப்பட முடியும். என்மாரே கட்டியா மாறிக்குணு வருதாம் டாக்டர் சொல்லிட்டார். என்னப்பாக்குற ஆணும், பொண்ணும் என் மாரு குத்திநிக்கிறதாதான் பாக்கிறாங்க. என் ரத்தத்த எல்லாம் இழுத்துக்கொண்டு, கல்லா மாறிய வலி தினமும் சாகடிக்கிறது எனக்கு மட்டுந்தான் தெரியும்.’ இப்படி சொல்லிக்கொண்டிருந்தாலும் கங்கா பிரபு முகத்தைப் பார்க்கவில்லை. அவள் பாட்டுக்கு சோற்றை இறக்கி வடித்தாள். குழம்பு செய்யப்பாத்திரத்தை வைத்தாள். அவள் குனிந்து பாத்திரம் சூடாகிவிட்டதா என்று பார்க்கிறபோது, கண்களிலிருந்து சட்டியில் கண்ணீர் துளிக்கொட்டியது. அது சுர் என்று தீய்ந்தது. இப்போது எண்ணையை ஊற்றினாள்.
"ஆயிரம் கஷ்டம் இருக்கட்டும் அந்தக் கஷ்டத்தோட இது ஒண்ணா, நல்லதோக் கெட்டதோ ஒரு பொண்ணப் பார்த்து கட்டிவச்சிட்டா, அவன் மனநிலை சரியாப்போயிடும், நான் கண்டிப்பா சொல்றேன். ராத்திரியில ஒரு பொண்ண கட்டிப்புடுச்சி படுத்திருந்தான்னா, மனச்சுமை எல்லாம் கொறஞ் சிடும். நான் மறுபடியும் அதத்தான் திரும்பத் திரும்ப சொல்லமுடியும். அது நடக்காதவரை இப்படித்தான் எதையோ இழந்துட்டாமாதிரி இருப்பான். கங்கா நல்லா யோசனைப் பண்ணிப்பாரு அது நடக்குறதுக்கான வழிய நீதான் ஏற்படுத்தித் தரணும்” என்று சொல்லி விட்டுப்போனார்.
ஒரு வேளை இதனால்தான் இப்படி இருக்கிறானா? எனக்கு வாய்ச்சதெல்லாம் இப்படியா இருக்கும். கட்ணவன் ஒரு ஆம்பளயா தன்னிச்சையா குடும்பத்த நடத்துற திறமையில்ல. அக்கம், பக்கத்திலும் யாரும் உதவிச்செய்ய நாதியில்ல. எதேச்சியா பேசப்போனாலும் அவளாண்ட பேச்சிக்கொடுத்தா கடனா காசுக்கேட்டுடுவா என்று ஒதுங்கிப் போயிடுறாளுங்க. எதுக்கெடுத் தாலும் நான்தான்னா என்ன செய்யமுடியும்’ என்று கங்கா நொந்துக் கொண்டாள்.
ஒரே அறைப்போன்ற வீட்டில் ஒரு குறுக்குச் சுவர் மட்டும் இருந்தது. சற்று பெரியதாக இருக்கும் ஹால்போன்ற இடத்தில்தான் செல்வம் எப்போதும் படுத்துக்கொள்வான். இன்று கங்கா உள்பக்கமாக பூட்டிவிட்டாள். சமயல் செய்கின்ற ஒதுக்குப்புறமாக கங்கா படுத்திருப்பது வழக்கம். அவளோடு கணவன் தொடர்பே இல்லாது மூலையில் படுத்துவிடுவான்.“ இங்கப்பாரு, பையன் எங்கனா எழுந்து போயிடப்போறானு உள்ளபக்கமா பூட்டியிருக்கேன் சாவி என்னாண்ட இருக்குது நீ வெளிய போணும்னா என்னாண்ட கேளு. அவன் எழுந்தான்னா, வெளிய கூட்டிம்போக நானு அந்த பக்கம் படுக்கிறேன்’ கங்காவின் கணவன் எந்த நாளும் அவள் பேச்சை இமியளவும் தட்டியதில்லை. மரியாதை நிமித்தமாக இல்லை. கலியாணம் நடந்ததிலிருந்து அவள் கருத்துக்கு மறுப்பு பேசாமல் தான் இருக்கிறான். விடிகிற ஒவ்வொரு நாளும் உழைப்பது, ஒரு பைசா குறைவில்லாமல் கொண்டுவந்து அவளிடம் சேர்ப்பதுதான் அவனின் வழமை. அக்கடமையை நிறவேற்றியவனாக வந்த களைப்பில் எந்த மனக்குறைவும் இல்லாமல் சீக்கிரமாகவே தூங்கிவிட்டான்.
வீட்டில் மங்களான ஜீரோவாட்ஸ் பல்ப் எரிந்துகொண்டுதான் இருந்தது. நைலான் பாயின் ஓரமாகப் படுத்துவிட்டாள். கங்காவின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்கவேயில்லை. செல்வம் இன்னும் விட்டுவிட்டு கங்காவின் முலையை அழுத்தினான். அது கெட்டியாக இருந்தது. அவள் அசைய வேயில்லை. அவன் இப்படி பக்கத்தில் படுத்த எத்தனையோ இரவுகளில் பால் ஊட்டியிருக்கிறாள், அந்த குழந்தைத் தருணங்களில் பசியாறியிருந்தது. கங்காவிற்கு மனது நிம்மதியாயிருக்கும. இன்று அந்தக்காட்சிதான் நினைவு வந்தது. செல்வம் சற்று நேரத்தில் பழையபடி இருந்த இடத்திற்கே நகர்ந்துவிட்டான். கங்கா வெகு நேரங்கழித்து பூட்டியிருந்தக் கதவைத்திறந்து வெளியேச் சென்று மௌனமாக அழுதுத் தீர்த்தாள்.
கங்கா அவள் கணவன் இருவரும் காலையில் பிரபுவிடம் சென்றார்கள்.‘என் வீட்டுப்பத்திரத்தை அடமானம் வைத்து எப்படியாகிலும் ஒரு வாரத்திற்குள் பணம் வாங்கிக்குடுங்க நீங்க சொன்னதுபோல ஒருப்பொண்ணபாருங்க ஏதாவது கோயில், குளத்திலயாவது வச்சி முடிச்சிடலாம்’ என்றாள்.
வாழ்க்கை கைகூடுகிற வீடு தானாகவே அலங்காரத்தைக் கட்டிக்கொள்கிறது. இதமான பொழுதை வழிமொழியும் தும்பிகளாக வீட்டில் கூடுதலான ஆட்க்கள் நடமாடி ஓய்ந்துவிட்டது. செல்வத்தின் மனைவியாய் வந்தவள் நல்ல குணசாளியான பெண்தான் என்று தெருவெங்கும் பேசிக்கொண்டார்கள். அவள் செல்வத்தைவிட கறுப்புதான். ஆனால் முகக்களையாகத்தான் இருந்தாள். சுருட்டை மயிர் என்பதால் நெற்றியில் இரு பக்கமும் பிரிந்திருந்த வளையம் போன்ற மயிர்கூட அழகாகத்தான் இருந்தது. வீட்டுவேலைகளை சரியாக செய்வதற்கு தெரிந்து வைத்திருந்தாள். சற்று சுறு சுறுப்பாய் வேலைகளை செய்தாள். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் கங்கா வீட்டில் சின்ன வேலையானாலும் இப்போதுதான் வேகமாக நடக்கிறது. இதுகுறித்து கங்காவிற்கு பெருமையாக இருந்தது. இருந்தாலும் தன் மனசுக்குள்ளேயே வைத்துக்கொண்டாள். செல்வத்திற்கு அப்படி விஷேசமாக எந்த அபிப்பிராயமும் தெரியவில்லை. பொதுவாக அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் கங்காவிடத்தில் சரியாக பேசுவதில்லை என்றாலும், செல்வத்தின் மீதுள்ள அனுதாபத்தினால் ராதாவிடம் நல்லபடியாகச் சொன்னார்கள். “பையன் ரொம்ப நல்லப் பையம்மா, கொஞ்ச நாளா ஒடம்பு சரியில்ல அதனால ஒருமாதிரியா இருப்பான். போகப்போக சரியாகிடும்மா’ என்று தெருக்குழாயில் தண்ணீர் எடுக்க வரும்போது சொல்வார்கள். அது உண்மைதான் ஆயிரம் காலத்து பயிர் என்கிறார்கள். நாம இப்பதான் மண்ணுல விதயை விதைச்சிருக்கிறோம், பொறுமையாகத்தான் பசுமை திரும்பட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டுதான் எந்த மனஸ்தாபத்தையும் வெளியேக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.
தீவிரமான முன்னெடுப்பு இதுவரை நடக்கவில்லை என்பது கங்காவிற்கு தெரிந்திருந்தது. “ கொஞ்சம பொறுமையாகக்கூட நடக்கட்டும்மா. அவனா நெருங்கி வரட்டும், ஏன்னா மெரண்டு, கிரண்டு போயிடப்போரான். பக்குவமா நடந்துக்கம்மா’ என்று அநேக இரவுகளில் சொல்லியிருக்கிறாள்.
எந்த முன்னேற்றமும் இல்லாமலே மூன்று மாதங்களை கடந்துவிட்டதால் இப்போதெல்லாம் முகத்தில் விரக்த்தி தெரிந்தது. வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் ராதாவிற்கு இப்போது இல்லை. செல்வம் முன்பைவிட குண்டாகிவிட்டான். காலையில் சைக்களில் சென்று இரண்டு குடம் தண்ணீர் எடுத்துவருதோடு அவன் பணி முடிந்துவிட்டது. மூன்று வேளை சாப்பிடுவது, யாரிடமும் பேச்சிவார்த்தையே இல்லாமல் வீட்டிற்குள் ளேயே சுற்றுவது. ‘டி வி’ பார்ப்பது என்று நேரத்தைக் கழிக்கின்றான். நேரம் வீனாக கழிகிறதென்று எந்த நேரத்திலும் நினைத் திருக்கமாட்டான் என்று திடமாக நம்பலாம். அவன் திட்டமிட்டே அப்படிக் கழிக்கிறான் என்றும் சொல்லி விடமுடியாது. ஆனால் பிரபு சொன்னதுபோல், மனிதர்களைப் பார்த்தால் மலங்க மலங்க விழிப்பதிலிருந்து மீண்டுதான் இருக்கிறான். அமைதியாய் இருப்பது அவனின் ஆரம்ப இயல்பு, அதை மீட்டுக்கொண் டவனாகவே இருந்தான். உண்மையில் அவன் என்னதான் செய்கிறான் என்று கேட்கிறவர்களுக்கு மட்டும் சொல்கிறேன். தற்போது மனிதனாக செய்வது காலையில் சற்று தூரம் சென்று மலம் கழிப்பது, மூத்திரம் பெய்வதற்கு அதிகபட்சமாக வீட்டின் சுவர்பக்கமாகவே மறைவான இடத்திற்கு வருவான். பல்லைத் துலக்கிக்கொள்வான். இப்போது சற்று பராவாயில்லை. கூடுதலாகவே கடைகளுக்கு சேம்பு, பால்பாக்கட், ஏதாவது பதார்த்தம் வாங்கிவர மார்கெட்டுக்குச் சென்றுவருகிறான். இந்த ராத்திரி மட்டும் ஏன்தான் வருகிறதோ, பகளிலேகூட வேண்டுமென்றே ஆணையும், பெண்ணையும் ஏன்தான் தனியாகவிடுகிறார்களோ? என்று வருத்தப்படுவது போன்று தலையை தொங்கப்போட்டுக்கிடப்பான்.
ராதா இப்போதெல்லாம் பேச ஆரம்பித்தாள். “உனக்கு என்னதான்வேணும். ஏன் ஒரு ஆம்பளையா இருக்கமாட்டேங்கிற. ஊராமூட்டு பொண்ண கட்டியாந்து இப்படி சாகடிக்கிறீங்களே. என்னப் புடிக்கலையா. இல்ல என்னவிட அழகான பொண்ணு வேணுமா ஏதாவது சொன்னாத்தானே தெரியும்” என்று சத்தமாகவே பேசினாள். செல்வம், அவள் வேறு யாரிடமோ பேசுகிறாள் என்பதுபோல் இருந்தான். மன ஆருதலுக்காகக் கூட ஒன்றையும் சொல்ல வில்லையே என்று ராதாவிற்கு இன்னும் கோபம் அதிகமானது.
கங்காவிற்கு குடும்பம் கூடியது என்று ஒருபக்கம் மனத்திருப்தி இருந்தது. கூடவே வீட்டை அடமானம் வைத்து வாங்கிய வட்டிக்கடன் சுமையை எப்படிக் கட்டுவது, அசலை எப்படித்திருப்பித்தருவது என்பதிலேயே மனம் அதிகமாக சிந்தனை செய்தது. கங்காவின் கணவன் எப்போதும்போல் உழைக்கச் சென்றுவிடுவான். மகனின், மருமகளின் போக்கு இப்படியிருக் கிறதே என்று உள்ளுணர்வில் நினைத்தாலும் எந்த விதத்திலும் வெளிக்காட் டுவதே இல்லை. காலையில் ‘டீ’க்கொடுத்தால் குடிப்பான், கொடுக்கவில்லை என்றாலும் ஏன் இல்லை என்று கேட்கமாட்டான். ஒரு ஒயர் பையில் மதிய சாப்பாடு போட்டுக் கொடுத்தால் உடனே கிளம்பிவிடுவான். அதோடு மாலையில் எந்த காரணத்தைக் கொண்டும் ஒரு பைசாக்குறையாமல் கங்காவின் கையில் கொடுத்துவிடுவான். இரவில் படுப்பதற்கு சிறு மூலை இருந்தால் போதுமானது. விடிந்ததும் மீண்டும் நேற்றைய வேலையே புதிதாகத்தொடருவான்.
ராதா ‘நானும் ஏதாவது வேலைக்குப் போகுறேன், வீட்டில் இருப்பது சங்கடமாய் இருக்கிறது.’ என்று ஆரம்பித்தாள். சில நேரம் எந்த காரணத்திற் காகவோ, எந்த செயல்பாடுகளின் குறைபாட்டாளோ ஒருவர் மீது ஒருவருக்கு பனி படர்ந்த தோற்றம்போல் மனக்கஷ்டம் மேலோட்டமாக இருக்கிறது. இருந்தாலும் வெளிப்படுத்த ஏதோ ஒரு தடை சாத்தியத்தில் முந்திக்கொண்டு நிற்கிறது. சில நேரங்களில் தொடர்ந்து அப்படி இருக்க முடியாமல் ராதா வெளிப்படையாக “இந்த குடும்பத்தில் வந்து என்ன சுகம் கண்டேன். தண்டமாக சம்பளமில்லாத வேலைக்காரியாகத்தான் என்னால் இருக்க முடிகிறது. என் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டீர்கள். எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது.” என்று செல்வத்தின் முகத்திற்கு நேராகவே, பேசித்தீர்த்தாள்.
இது கங்காவின் காதில் விழும். “ஏம்மா இப்படியெல்லாம் பேசுற. குடும்பம்னா அப்படி, இப்படிதான் இருக்கும் அதுக்கெல்லாம் மனசு வெறுத்துக்குவியா என்ன? உனக்கு என்ன குறை வச்சியிருக்கோம் குடும்பத்தில ஆயிரம் கஷ்டம் இருந்தாலும் உன் வயித்த காயப்போடுறோமா?” என்கிற விதமாக கங்காதான் கேட்டாள்.
“ஏம்மா, என்னம்மா ஒண்ணியும் தெரியாத மாதிரி கேக்கிற, நீயும் என்னப்போல பொம்பளதானே. என் வயசத்தாண்டிதானே வந்திருக்கே. வந்த நாள்லயிருந்து என்ன அனுபவிக்கிறேன்னு தெரியாதா? எந்தப் பொண்ணுக்கும் இந்த நெலம வரக்கூடாது. ஆம்பள பொம்பளப் பொறுக்கியா, குடிகாரனா, ஏமாத்துக்காரனா கூட இருக்கலாம். அவன திருத்தி அவனோட குடும்பம் நடத்திட முடியும் என்ற நம்பிக்கைவைத்து வாழத்தொடங்குவாள். எரிகிற நெருப்பில கையக் காட்டி கன்னத்தில ஒத்திக்கிணா குளிரு மொத்தம் போயிடுமா? நானு காலத்துக்கும் அப்படியே இருக்கணும்னு, எனக்கு என்ன தலை எழுத்து.” என்று ராதா கடுமையாகவே பேசினாள். அந்த பேச்சி வீட்டிற்குள்ளேயே நடந்தது. எந்த ஒளிவு மறைவும் இன்றிதான் பேசினாள். செல்வம். உட்கார்ந்து கொண்டுதான் இருந்தான். அவன் இருக்கிறான் என்று சத்தம் கூட்டியோ குறைத்தோ பேசவில்லை. மிகவும் இயல்பாகப் பேசினாள். செல்வத்திற்கு எந்த சலனத்தையும் ஏற்படுத்வில்லை. அவன் சாதாரணமாக உட்கார்ந் திருந்தான். கங்காதான் அவனை கோபமாக “ஏண்டா எனக்கு புள்ளையா வந்துப் பொறந்தே. எல்லாப் புள்ளையும் எப்பிடியிலாம் இருக்குதுங்க. நீ மட்டும் ஏண்டா?” என்று கேட்பாள். அதற்குகூட செல்வம் ஒரு வார்த்தைப் பேசுவதில்லை.
ராதாவின் வாழ்முறையில் பெரிதாக மாற்றம் ஏதுவும் இல்லை. இப்போதெல்லாம் சின்னச் சின்ன வாக்குவாதம் தொடர்ந்து கைகூடுகிறது. “நான் எங்க வீட்டுக்கு போய்விடுகிறேன். என்னை நல்லபடியாக அனுப்பிவிடுங்கள். மருமகளின் வாழ்க்கை, குறைந்த பட்சம் ஒரு சந்ததியை உருவாக்குவதில்தானே முற்றுபெறுகிறது. இங்கே, அதை நிச்சயமாக என்னால் உங்களுக்கு தரவே முடியாது. நீங்கள் வைத்திருக்கும் பெருந்தன் மையால் அது உங்களுக்கு தேவையில்லை என்றுகூட சொல்லாம், ஆனால் என் குணநலன்களை எச்சமாக விட்டுச்செல்லவும், அல்லது எதிர்காலத்தில் முடியாதபோது பல நேரங்கள் துரத்தினாலும், சில நேரம் கடமைக் காகவாவது என் மேல் கரிசனைகாட்டுக்கிற சொந்தங்களை உருவாக்கிக் கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது.” என்று பேசினாள். இவைகள் எதுவுமே செல்வத்திடம் நேரடியாக கேட்கும் கேள்வியாக இல்லாததால் அவன் எப்போதும் போல் அமைதியாய் இருந்தான். ஒருவேளை அவன் முகத்துக்கு நேராக என்ன சொல்றே என்றிருந்தால் “ஊம், சரி.” என்ற பதிலாவது வந்திருக்கும்.
திட்டமிடுகிற வாழ்க்கை, பல நேரம் திட்டமிடாத யதார்த்த வெளியில் நமக்கெதிராக எழுந்துதான் நிற்கிறது. கங்கா மிகவும் சோர்ந்து விட்டாள். ராதாவை ஏமாற்ற வேண்டும்மென்பது அவள் திட்டமள்ள. மனிதத் தன்மைகளை எதைக்கொண்டு தீர்மானிக்க முடிகிறது. இன்னுங்கொஞ்சம் வாழலாம் என்று கண்ணுக்கு தெரிந்துவரும் பாதகங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே மனம் பலவழிகளை தூண்டி உதவிசெய்கிறது. இப்போது அவள் மார்புகள் வெடித்துவிடுகிற தன்மையை உணர்த்துகிறது. அவசர அவசரமாய் அடமானம் வைத்த வீடு வட்டியும் அசலுமாய் கூடுகிறது. எப்படியாவது நம் குலத்தை மீட்டெடுத்துவிடலாம் என்று எண்ணிய ஆசை கேள்விகுறியாக இருக்கிறது. சில நேரம் செத்துப்போகலாம் என்ற ஆவல் கூடுகிறது’ இப்படித்தான் நீண்ட யோசனையுடன். தினந்தோறும் திறந்து மூடும் நாட்களைக் கழித்தாள்.
பொதுவாக இப்பூமியில் வாழ்ந்து கடந்தவர்களை, ஏன் கடந்தார்கள்? எப்படிக்கடந்தார்கள் என்று மேலோட்டமாக திரும்பிப் பார்த்தபோது ‘வலுக்கட்டாயமாக தனக்குள் சந்தோஷத்தை புகுத்துகிறதால் 25 விழுக்காடு, சரியான துணை அமையாமல் 15 விழுக்காடு, நல்ல பிள்ளைகள் அமையாததால் பெற்றோருக்கு 30 விழுக்காடு’ என்கிற வகையில் ஆயுசை குறைத்துக்கொள்கிறார்கள். இன்னும் கூடுதலாக வாழவேண்டிய மனிதனு டைய ஆயுசு, மனித ஞானத்துக்கு புலப்படாத, கண்ணுக்கு தெரிந்தே கொலைகளாக நடந்தேறுகிறது. கங்கா, தான் மரித்துவிட்டால் வெகு சீக்கிரத்தில் கங்கா என்கிற குடும்பம் இங்கே இருந்ததற்கான தடமே இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது என்று நிச்சயமாக நம்பினாள்.
இப்போதெல்லாம் ஒரு திடமான உறுதியுடன்தான் மாறிவிட்டிருக்கிறாள். ராதா அவளுக்கு பிடிக்காத விஷயத்தை செய்தாலும் அதை இயல்பாகவே ஏற்றுக்கொள்கிறாள். ‘அப்படி செய்தது சரிதாம்மா’ என்று ஒத்துக்கொள்கிறாள். ராதாவிற்கு எதிராகவே செல்வத்தை திட்டுகிறாள். காலையில் எழுப்பி ஒரு நடைக்கு பதிலாக இரண்டு நடைத் தண்ணீர் எடுத்துவரச் சொல்லுகிறாள். குடிதண்ணீர் ஒரு நடையிருந்தாலே போதும், மற்ற செயல்பாட்டிற்கு பக்கத்தில் தெருக்குழாயில் வருகிறது. ஆனால் வேண்டுமென்றே அனுப்புகிறாள். கலியாணம் முடிந்தபிறகு நண்பர்கள் யாரும் செல்வத்தை வந்து அழைப்பதில்லை. அவன் நண்பர்கள் என்று விஷேசமாக அமைத்துக் கொண்டதில்லை. வீதிப்பிள்ளைகள் நண்பர்கள், பழகியவர்கள் தான். கங்கா அவன் நண்பர்களிடம் சென்று ‘டே, ராஜா. அவன் நல்லா இருக்கச் சொல்லலாம் , வீட்டாண்ட வந்து கூட்டிம்போவீங்க. இப்பலாம் அவனைக் கண்டுக் கிறதேயில்லை. அவன ஏதாவது வேலைக்கு கூட்டிம்போங்கப்பா. நீங்க தங்கி செய்யிற வேலையாயிருந்தாலும் பரவாயில்லை.’ என்றாள். அவனும் “இப்ப உள்ளுர்ல வேல இல்லமா வெளியூர்லதான் தங்கிசெய்யிரோம். அனுப்புரதா இருந்தா சயந்திரமே அனுப்புங்க” என்றான்.
ராதா உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. பெருங்கஷ்டத்தை சகித்துக்கொள்கிறாய். எங்களின் எந்த வேண்டுகோளையும் உனக்குப் பிடித்தமானதாய் ஏற்றுக்கொள்கிற பக்குவத்தில் இருக்கிறாய். அதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. இன்று எங்களுக்கு கலியாண நாள். இந்த நாள்ல இதுக்கு முன்னால் குடும்பத்தில வாழ்ந்தவங்கள நினைப்பது வழக்கம். அன்னிக்கு சின்னப் படையல் போடுவது வழக்கம். உனுக்கு பொடவ எடுத்தாரேன், என்ன கலர்வேணும்னு சொல்லுமா’ என்றாள். ராதா ‘எனக்கு எதுக்குமா பொடவ’ என்று எரிச்சலானாள். கங்கா, ராதாவின் பதிலை பார்த்து நின்றதால் ‘நீங்களாப் பார்த்து எந்த கலர்னா எடுத்தாங்க.’ என்றாள் ராதா.
கங்காவும் அவள் கணவனும் கிளம்பினார்கள். ‘இங்கப்பாரு கடைக்கிட்ட வந்து நீதான் நாபகப்படுத்தணும்’ என்றாள். அவள் கணவன் இன்று நல்ல வேட்டி சட்டை அணிந்திருந்தார். செருப்பை கழுவி போட்டுக் கொண்டு நடந்தார். அவர்கள் வாழ்வில் இந்தமாதிரிச் சென்று வெகுநாட்களாகிவிட்டது. மாலையில் சற்று சோர்வுடன்தான் வந்தார்கள். கங்கா கையில் ஒரு பை இருந்தது. அவள் முந்தி வேகமாக நடந்துவந்தாள். பையை ஹாலில் வைத்துவிட்டு வெளியை வந்து கைகால்களை அலம்பிக்கொண்டடாள். வந்து காய்கறி கூடைகளில் பிரித்துப் போட்டாள். கங்காவின் கணவன் இப்போதுதான் வாசலை நெருங்கினான். அவன் கையில் புதுத்துடப்பம், இன்னொரு கையில் பிளாஷ்டிக் கவர் இருந்தது. ராதா பக்கத்து பாத்ரூமில் குளித்துவிட்டு தலையில் டவளை கட்டிக்கொண்டு வீட்டில் நுழைந்தாள். கங்கா ‘அந்தக்கவரை ராதா கையிலக்குடு’ என்றாள். அவன் துடப்பத்தை கதவோரமாக வைத்துவிட்டு கவரை ராதாவிடம் கொடுத்தான். ராதா வாங்கி ஓராமாக வைத்துவிட்டு தலையைத் துவட்டினாள். தலைமயிரை தொங்கவிட்டு டவளால் தட்டியபோது தலையில் இருந்த ஈரப்பசை பனிபோல் காற்றில் கலந்தது.
“ராதா, வாளக்கருவாடு வாங்கிவந்திருக்கிறேன், இன்னக்கி நீ அடுப்பாண்ட போகாத நானே செய்யிரேன். நீ மாமா குடுத்த கவர்ல பொடவ இருக்கிதுபாரு அதை எடுத்து கட்டிக்கோ, பூவும் அதுல இருக்குது வச்சிக்குணு, காமாட்சி விளக்குல எண்ணைய ஊத்தி போட்டோ மாடத்தாண்ட வையிமா. அப்படியே ஊதுபத்தி கொளுத்திடு. சாம்ராணிப்போட்டு வீடு முழுக்கக்காட்டு’ என்றாள். ராதா, கங்கா சொன்னதையெல்லாம் செய்துகொண்டிருந்தாலும், மனசுக்குள் ஏதோ கசப்புத்தன்மை இருந்துகொண்டே இருந்தது.
கங்காவின் கணவன் வேலை செய்து வரும் நாளில் உடல் வலியை குறைக்க சூடாகத்தண்ணீர் போட்டுக் குளிப்பான். இன்றுகூட அப்படித்தான் குளித்தான், குளிப்பதற்கு கூடுதலான காரணம் நடுவீட்டின் படையலை சாப்பிடவேண்டும். நாட்கள் எப்போதும்போலவே அலங்காரத்துடன்தான் பிறக்கிறது, கழிகிறது, மனுஷன்தான் ஒவ்வொரு நாளையும் வெவ்வேறு மாதிரி அனுபவிக்கிறான். சாப்பிட்டபிறகு கங்காவின் கணவன் வாசலுக்கு நேராக வெளியில் நின்று கொண்டிருந்தான். வீட்டில் எரிந்த வெளிச்சம் அவன் மீது பிளாஷாகியிருந்தது. கங்கா ‘என்னத்துக்கு வெளியப் பாத்துங்கிற வந்துபடு, காலையில வேலைக்குப் போகவேண்டாமா’ என்றாள். ராதா ஏற்கனவே உள் அறையில் படுத்துவிட்டிருந்தாள்.
கங்கா அவள் கணவன் ஹாலில் படுத்தார்கள். ஜீரோவாட்ஸ் பல்பு அணைந்தது. இதுவரை கண்ணுக்கு உண்ணதமாய் புலப்பட்ட எதுவுமே இப்போது தெரியவில்லை. ஆனால் நிர்பந்திக்கப்பட்ட எல்லாம் இருக்கும் நிலையிலேயே இருக்கிறது. கங்கா அவன் கிட்டத்தில் நெருங்கினாள். ‘சாணி மாதிரி படுத்துங்கிறான் பாரு, யோ, எந்திரியா.போயி அவளாண்டப்படு’ அவன் சற்றுநேரம் மிரண்டு இருந்தான். மறுபடியும் கங்கா ‘எந்திரிடா, நக்கினப்பையா போயி படுடா. இல்லனா நாம குடும்பம் நடுத்தெருவுக்குத்தான் வரும்’ என்றாள். அவன் ஒன்றும் பேசாமல் எழுந்து சமையல் அறைக்குப் போனான்.
‘தெய்வமே நீதான் என் குடும்பத்தை விளங்கச்செய்யணும்’ என்று கங்கா மனதுக்குள் வேண்டினாள்.
(குறிப்பு- வாழ்வின் நடைமுறையில் இருந்துதான், புதுப்புது வார்த்தைகள் பிறந்துகொண்டே இருக்கிறது. மனிதனுக்கு இயலாமை ஏற்படுகின்றபோது சமூகம் கட்டமைத்துள்ள மிகக்கடினமான சடங்குகளை உடைத்தெறிந்து வெளிவரும் வார்த்தைகள். பல நேரம் மிகச் சரியான வாழ்வியலை காட்டிவிடுவதை மறுக்கமுடியாது.)
ஜேடி

No comments:
Post a Comment