போக்கு 4
மாணிக்கம் பள்ளியில் நீர் வார்ப்பவர். அவர் சர்வீஸ் புத்தகத்தில் அப்படித்தான் பதிவாகியிருந்தது. ஆனால் காவலர் பணியை ஏறக்குறைய இருபது வருஷங்களாக செய்திருக்கிறார். அதன்பிறகுதான் அவர் எஸ்.ஆரில் இருக்கும் பதவியை கடந்த பதினைந்து வருஷங்களாக செய்து, பணி நிறைவு விழாவில் கதாநாயகனாக அமர்ந்திருக்கின்றார். முதிர்ந்த வேப்பமரம், பூமரம் கூட்டு நிழலின் கீழமைந்த மேடை சிறப்பாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. மேடையின் கூரையில் இருபுரத்திலும் ஆலோஜின் லைட் ராட்ச்சசவெளிச்சத்தை பரப்பியிருந்தது. தரையில்இரண்டு சிட்டிங் பென்ச்போட்டு அதன்மீது கிளாத் போட்டு மூடியிருந்தார்கள். அதற்கு மேல் நடுவாக பிளவர்வாஷ் வைத்திருந்தார்கள். ஆறு சேர் ஒரேமாதிரியாகப் போடப்பட்டிருந்தது. நடுவாக மாணிக்கம் தன் மனைவியோடு அமர்ந்திருந்தார். ஏறக்குறைய புதுமணத்தம்பதியாகும்போது செய்யப்படும் சடங்குகள் சரியாகசெய்யப்பட்டது. இருவர் கழுத்திலும் வண்ண மலர்களின் மாலை. கைகளில் மலர்கொத்து இருந்தது. மாணிக்கத்தின் மனைவிப்பக்கத்தில் பள்ளியின் கல்வி அலுவலர். மாணிக்கத்தின் பக்கத்தில் தலைமை ஆசிரியர். பிற சேர்களில் வாழ்த்திப்பேச ஒருவர். ஜெபத்துடன் விழாவைத்துவங்க ஆயர் என அமர்ந்திருந்தார்கள். தாம்பாலத்தட்டில் பலவிதமான தரமுள்ள பழங்கள் வைத்து, அதன் நடுவில் ஒரு சவரன் மோதிரப் பெட்டி வைத்திருந்தார்கள் மொத்த சர்வீஸை கணக்குச்செய்த்து நிர்வாகத்தின்மூலம் பணமுடிப்பை ஒரு நீளக்கவரில் செக்காக போட்டுவைத்திருந்தார்கள்.
மேடையில் எல்லோருக்கும் மீட்டிங் நடத்துவதற்கான ஒழுங்குமுறைத்தாள் அச்சிட்டு தந்திருந்தார்கள். மேடையின் கீழ் இரு ஆண், பெண் ஆசிரியர்கள்கவிதை இல்லாமல் கவிதை நயத்துடன் காம்பியர் செய்தார்கள். ஆறிலிருந்து பன்னிரண்டு வரை மாணவர்கள் ஏறக்குறைய இரண்டாயிரம் மாணவர்கள் மேடையில் சொல்லுகிற எந்தக்கருத்துக்கும் மறுப்பு இல்லாமல் கேட்பதற்கு மட்டும் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். ஒரே கிளாசாக இருந்தாலும் அவனுக்கு இஷ்டமான நண்பனுடன் உட்கார அனுமதிக்கப்படவில்லை. அப்படியும் அடக்குமுறையில் இருந்து விடுபட்ட விதமாக, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு பிடித்தமான சேஷ்டையை செய்துக்கொண்டிருந்தார்கள். பள்ளி பாடகர் குழுவினர் இறைவாழ்த்து பாடினார்கள். வேதம் வாசிக்கப்பட்டது. ஆயர் ஜெபத்துடன் விழா துவங்கியது. முதலில் கல்வி அலுவலர் வாழ்த்துரை வழங்கினார்.
“மாணவச்செல்வங்களே என்று சம்பிரதாயமான வாழ்த்துக்களில் ஆரம்பித்தார். நான் வேலூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியின் மூலையில் ஒரு கிராமதைச் சேர்ந்தவன். எனக்கு உங்களைப் போல நகர்த்தின் மையப்பகுதியில் சிறந்து விளங்கும் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என் தந்தை சாதாரண கூலி விவசாயி. ஐந்தாவதுவரை எங்கள் கிராமத்திலேயேப் படித்தேன். ஆறாம் வகுப்பு எட்டு கிலோமீட்டர் நடந்துச் சென்றுதான் படிக்கமுடிந்தது. இப்பள்ளியின் சைக்கிள் ஸ்டேண்டை பார்த்தே ஆச்சரியப் பட்டேன். பக்கத்து தெருவிலிருந்து கூட சைக்கிள் எடுத்து வருகிறீர்கள். என் அம்மா காலையில் கூழ் கறைத்து கொடுப்பாங்க. தொட்டுக்க பாதி வெங்காயம். நான் அதை அமிர்தமாக குடித்துவிட்டு பலகையும் நோட்டுபுத்தகத்தையும் எடுத்துக்கொண்டு ஓடணும். சட்டையில் மேல் பட்டன் மட்டும்தான் இருக்கும் என்றுப் பேசினார்.
இப்படி பேசியபோதெல்லாம் மேடை நிசப்த்தமாய் இருந்தது. மேடையில் பெடஸ்ட்டல் பேன் சத்தம் தெளிவாய்க் கேட்டது. ஒரு பக்கத்தில் மாணவர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. “வீட்டில் எங்கப்பா கடந்த காலஏழ்மையை சொல்லிச் சொல்லி போர் ஏத்துவார். இங்கேயும் அதையே சொல்லி சாகடிக்கிறாரே” என்று ஒருமாணவன் இன்னொரு மாணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அவருக்கு குரல் சற்று கரகரத்தது. இந்த வலி இப்ப தெரியாது. நீங்கள் ஒருவேளை இந்த காலத்தைச் சரியாக பயண்படுத்திக் கொள்ளவில்லை என்றால் பின்னாளில் அதனுடைய வலி மிகவும் வேதனை நிறைந்ததாக இருக்கும். உங்கள் வயதொத்த எங்கள் காலங்களில் மதியத்தில் பள்ளியில் சரியான சாப்பாடு கிடைக்காது. நல்ல ஆசிரியர்கள் இருந்தாலும் போக்கு வரத்து காரணமாக கிராமங்களுக்கு ஆசிரியர்கள் வர தயங்குவார்கள். ஆனால் உங்களுக்கு அப்படியல்ல. நல்ல உடை அணிகிறீர்கள். நிறைய ஆசிரியர்கள் தொடர்ந்து போதிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் நல்ல வசதியை பெற்றுள்ளீர்கள். அப்படி இருக்கும்போது நீங்கள் நல்ல முறையில் படித்து இப்பள்ளிக்கு பெறுமைத் தேடித்தரவேண்டும்.
முப்பத்தி ஐந்தாண்டு தன் பணியை சிறப்பாக செய்து பணிநிறைவு செய்திருக்கும் மாணிக்கத்தை வாழ்த்துகிறேன். என்றபோது தலைமை ஆசிரியர் குறிக்கிட்டு தாம்பாலத்தட்டை கல்வி அலுவலரிடம் கொடுத்து தம்பதிகளுக்கு கொடுக்கச்சொன்னார். தம்பதிகள் தட்டை வாங்க ஆவலாய் நின்றார்கள். கல்வி அலுவலர் மேடையில் இருந்த அனைவரையும் அழைத்தார். எல்லோரும் தாம்பாலத்தில் கையை வைத்தார்கள். மாணவர்கள் உற்சாகம் தாங்காது கைகளைத் தட்டினார்கள். சத்தம் அடங்கவிலை. பிஈடி விசில் சத்தம் மூலைக்கு மூலை கேட்டதும். சற்று அமைதியானது மாணிக்கத்திற்கு உறவினர் பரிசுபபொருள்களைக்கொடுத்து வாழ்த்தினார்கள்.
மாணிக்கத்தோடு பணிசெய்தவர் தட்டுத்தடுமாறி வாழ்த்துரை வழங்கினார். தலைமை ஆசிரியர் “தான் இப்பள்ளிக்கு வருவதற்கு முன்பிருந்தே மாணிக்கம் இப்பள்ளியில் வேலையில் இருக்கிறார். ஒரு மரத்தை தாங்கி நிறுத்தியிருக்கும் வேர்கள் எப்படி கண்ணுக்குப் புலப்படுவதில்லையோ, அதைப்போலதான் இப்பள்ளிக்கு அநேகரின் உழைப்பும், உதவும் பண்பும் மறைமுகமாக வந்துசேர்கிறது. அப்படி சேர்கிறபோது பள்ளி அதன் இயல்பில் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்கிறது. அதற்காக யாரும் ரத்தம் சிந்தவேண்டியதில்லை. அதன் பற்களை யாராலும் பிடுங்கிப்போடவும் முடிவதில்லை. நாளுக்கு நாள் எப்போதும் எழுகிறது. அதுதான் நம் பள்ளி. இப்பள்ளியில் பணிசெய்கிற நாங்கள் தற்போதைய வழிகாட்டிகள். அவ்வளவுதான் ஒவ்வொரு கட்டத்திலும் எங்களைவிட மோசமானவர்கள் வரலாம், எங்களைவிட சிறப்பானவர்கள் வரலாம். மோசமானவர்கள், சிறப்பானவர்கள் என்று தீர்ப்பு வழங்குகிறவர்கள் மாணவர்களாகிய நீங்கள்தான். உங்கள் பார்வைக்கு மறைவாக எங்கேயும் ஓடி ஒளிந்துக்கொள்ளமுடியாது. நாங்கள் உங்களுக்காக உழைக்க மனம் மாறுகின்றோம். நீங்கள் உங்களுக்காகவே படிக்க மனம் மாறுங்கள்.” என்று மாணவர்களின் வாழ்த்துரையாகவும் முடித்தார்.
மாணிக்கம் தன் இயல்பான சில கண்ணீர்த்துளிகளுடன் ஏற்புரையை முடித்தார். நன்றியுரை ஆசிரியர் கழகத்தின் தலைவர் சொன்னதோடு பணி நிறைவு விழா முடிந்தது.
மாணிக்கம் தம்பதிகளுக்கு விருந்தினர்களுடன் மையப்பகுதியில் அமர்த்தி இலை போடப்பட்டது. சாப்பாட்டு இருக்கையில் ஆசிரியர்கள் வருசையாக அமர்ந்தார்கள். சுகந்த் இலையில் டம்ளர் வைத்து தண்ணீர் தெளித்துவந்தான். மாணிக்கத்திடம் வந்ததும் லேசான சிரிப்பு தானாக வந்தது. சர்வீஸில் இருக்கும்போது மாணிக்கமும், சுகந்த்தும்தான் ஒருவரில் ஒருவர் அதிகமான அக்கறையுள்ள நண்பர்கள். வயதில் இருவருக்கும் அதிக ஏற்ற இறக்கங்கள் உண்டு. அடிக்கடி நகைச்சுவையாகவும் பேசிக்கொள்வார்கள். இப்போது சுகந்த் எதற்காக சிரிக்கிறான் என்பது மாணிக்கத்திற்கு தெரிந்துதான் இருந்தது.
எந்தவொரு மீட்டிங்காக, பள்ளி விழாநிகழ்வாக இருந்தாலும் சாப்பாடு கொடுப்பது மரபு. பள்ளியின் ஏதோ ஒரு மூலையில் பிரியாணிதான் செய்வார்கள். அதற்கு விரகு, கிரோஸின் வாங்கிவருவதிலிருந்து. ஐந்து கிலோ பூண்டு சில நேரம் மாணவர்கள் உறித்துவிடுவார்கள். இஞ்சியை சுத்தமாகக் கழுவி கட்செய்து மைய அறைத்துத் தருவது வரை. நகராட்சியிலிருந்து வருகின்ற தண்ணீரை டேக்சாக்களில் நிறப்பிவைப்பது, இப்படியான வேலைகளை மாணிக்கம் முதல் காவலர் வரைஉள்ள நபர்கள்தான் செய்துதர வேண்டும். ஆனால் பந்தியின் போதுமட்டும் ஆசிரியர்கள்தான் முதலில் உட்காரவேண்டும். எந்த சூழ்நிலையிலும் மாணிக்கம் முதல் காவலர்வரை பந்தியில் உட்காரக்கூடாது. தவறி உட்காரும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை நம்பி உட்கார்ந்துவிட்டால் பிரியாணி செய்கின்ற பொறுப்பாளர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் சொல்லுவார்கள்.
கிளர்க் தவிர்த்து, அலுவலக உதவியாளர்கள் ஓரளவு பந்தி முடிந்த பின்னரே சாப்பிட உட்காரவேண்டும். சாப்பிட்டு முடிந்தபின்னர், ஏதாவது பாத்திரம் எடுத்துவர பணிப்பார்கள். பிரியாணி டரம்மின் பாதி மூடியதுபோல் மேல் தட்டுஇருக்கும்.அதன்மீது பிரியாணியை அள்ளிப்போட்டு வைத்திருப்பார்கள். சில நாள் பீஸ் இருக்கும். சிலநாள் ஒன்றுமே இருக்காது. பிரியாணி பொறுப்பாளர்கள் போய் பாத்திரம் எடுத்தாங்கபா என்று சத்தமாக சொல்லுவார். மாணிக்கம் முதலில் வாங்கிவிடுவார். சுகந்த் வாங்க அச்சப்படுவான். சில நேரம் வாங்கவில்லை என்றால் இப்ப கொஞ்சம் காசுசேர்ந்திடுச்சி அதான் வேணாம்கிறான்னு கேலிசெய்வார்கள். அதற்காகவே வாங்கவேண்டியதாய் இருந்தது. பாத்திரத்தை வைத்துக்கொண்டு வாங்குவதை நினைத்தால், ஊர் திருவிழா நடந்தால் சுகந்த் கிராமத்தில் வருசையாக வந்து நாய்க்கர் வீடுகளில் சோறு இனிப்பு கொழுக்கட்டை என்று வாங்கிவருவார்கள். அதை இப்போது நினைத்தான். அதற்கும், இதற்கும் என்ன வேறுபாடு? ஏன் இப்படி வாங்கவேண்டும். இப்படி வாங்குவதால்தான் தம்மை முதல் பந்தியில் உட்காரவைக்க அனுமதிப்பதில்லையா? இந்த பள்ளியை ஆண்டைகள்தான் நடத்துகிறார்களா? பள்ளியில் பணிசெய்கிறவர்கள் எல்லோரும் வந்தேரிகள்தானே இதில் யாரும் யாருக்கும் அடிமையில்லை. தலைமை ஆசிரியராய் இருந்தால் அவருக்குறிய பணியில் உண்மையாய் இருக்கவேண்டும். பெருக்குகின்றவன் அவனுக்குறிய பணியில் சரியாக இருத்தல்வேண்டும். இவர்கள் பள்ளியைவிட்டு சமூகத்திற்குள் வந்தால் எல்லாரும் சாதாரண மனிதர்கள்தான். பஸ்நிலையத்தில் தெரியாமல் யார் மீதாவது மோதிவிட்டால் திட்டுவாங்கித்தான் ஆகவேண்டும்.
சுகந்த் தன் மனதிற்குள் ஒரு முடிவை எட்டியிருந்தான். கிறுத்தவஆசிரியர் கழக செயளாளரிடம் கிறிஸ்மஸ் கெட்டு கெதருக்கு எல்லா ஆசிரியர்கள், கிளர்க்குகளிடம் வசூலிப்பதுபோல எங்களிடமும் வசூல் செய்யுங்கள். ஏன் அலுவலக உதவியாளர்வரை வசூலிக்க மறந்துவிடுகிறீர்கள். இந்த முறை காவலர் வரை எங்கள் பங்கை செலுத்துகிறோம்” என்றான்.
செயளாளர் “நீங்கள் எல்லாம் குறைவான ஊதியம் வாங்குகிறீகள் என்று விட்டுவிட்டோம். மேலும் அது உங்களுக்கு லாபமான செயல்தானே, அதை ஏன் இழக்கிறீர்கள்”. என்றார் .
“அப்படியல்ல எங்களை எங்களுக்கான உரிமையில் பங்கு கொள்ளச்செய்யாமல் இருக்கவைப்பதன் மூலம் எங்களை இழிவுபடுத்தி உங்கள் மனப்போக்குக்கு எங்களை செயல்படவைக்க வழி செய்கிறீர்கள்”. சுகந்த் கேட்டுக் கொண்டிருக்கும் போதே காவலர் என்னையும் சேருங்கசார்” என்றார்.
அலுவலக கிளர்க் “இன்னாடா பசங்களா பணங்கொழுப்பா? உங்க பேர் விடுபட்டது நல்லதுதானேன்னு விட்டுட்டு போகாத பேர சேக்கச்சொல்லி அடம் புடிக்கிறீங்களாமே” என்றார்.
செயளாளர் தலைமை ஆசிரியரிடம்சென்றார். தலைமை ஆசிரியர் அவர்கள் விரும்பினால் நாம் தடைசெய்யமுடியாது என்றார். தங்களுடைய பேச்சை மதிக்கவில்லை என்ற ஆதங்கம் கிளர்க்“ இந்த டஸ்பீனை சுத்தப்படுத்தி கொண்டா என்றார். பிறர் பார்வைக்கு தன்னை உண்மையான கிறுத்தவன் என காட்டிக்கொள்ள நினைக்கிறவன் இப்படி உடனடியாக பழிவாங்குகிறவனாக இருக்கிறான். சுகந்த் “அதெற்கென்ன சார் கொட்டி சுத்தப்படுத்திவிட்டால் போகிறது’ என்று எடுத்துச்சென்றான்.
கிறுஸ்மஸ் கெட்டுகெதரில், சுகந்த்துடன் காவலர்வரை முதல் பந்தியிலேயே உட்கார்ந்து இலையை கழுவிக்கொண்டிருந்தார்கள். பிரியாணி பொறுப்பாளர்கள் முகம் கடுப்பேறியிருந்தது. காவலர் நாம இருந்தா சர்விங்செய்ய வசதியாக இருக்கும் என்றான். சுகந்த் ஏம்பா வெளியாட்கள் யாராவது வந்து நாம சாப்பிட்டாதான் நமக்கு சங்கடம், இவனுங்க திட்டமிட்டே காலத்துக்கும் கடைநிலை ஊழியர்கள்தான் மனைவியைப்போல் பரிமாரிவிட்டு மீந்ததை சாப்பிடவேண்டும் என்று கடந்த கால கணவர் மார்களைப்போல் நினைக்கிறார்கள். அப்படி இனிமேல் இருக்கக்கூடாது. இதுவரை சர்விங் முடிச்சிட்டுதான் சாப்பிடுவோம், இனிமுதல்ல நாம சாப்பிட்டு சர்விங் பண்ணுவோம். அதுவரை பொறுப்பாளர்கள் செய்யடடும்’ என்றான்.
பிரியாணி பரிமாரப்பட்டது. காவலர் பீஸ் விழுந்ததா என்று கிளறிபார்த்தார். அடுத்து சுகந்த்துக்கு வைக்கப்பட்டது. கிளறினான். கோழிசூத் மட்டும்தான் இருந்தது. அதைப்பற்றி வருத்தம் இல்லை. முதல் பந்தியில் சாப்பிடுவது திருப்த்தியாய் இருந்தது. இந்த சுகத்தை மாணிக்கம் அண்ணன் அனுபவிக்காமலே தன் சர்வீசை முடித்துவிட்டாரே, என்று இரண்டுமாதம் கழித்து நடந்த கிறுஸ்மஸ் கெட்டுகெதரில் நினைத்துக்கொண்டான்.
ஜேடி

No comments:
Post a Comment