சிறுகதை
எவ்வளவு சொல்லியும் தாத்தா செத்துவிட்ட அவருடைய பால்ய சிநேகிதர் முகத்தை பார்த்துவர மறுத்துவிட்டார்.' செத்துட்டானா, செத்துட்டானா இனிமே என்ன கிடக்கு உச்சு கொட்டுதலோடு கட்டிலில் காலைத்தொங்கபோட்டு, இரு கைகளையும் ஊணிக்கொண்டு தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். அவர் நண்பர் கொஞ்சநாள் உடல் நலமில்லாமல் படுத்துக்கிடந்தார். அப்போது தன்வீட்டில் விசேசமாய் டிப்பனோ, கறிக்குழம்போ செய்தால் முதலில் சூடாக எடுத்துச்செல்வார். 'ஏம்பா கொஞ்சம் சாப்பிடு. அவர் பேசும் நிலையில் இல்லை யென்றாலும் இவராகவே பேசுவார். அவருக்கு கட்டில் இல்லை. தரையில்தான் படுத்திருந்தார். இடதுகையின் விரல்கள் கோணல் மாணலாக இருந்தது. முழங்கை வயிற்றில் ஒட்டிக்கொண்டு இருந்தது. முரட்டுத் தனமான வெள்ளையும் கறுப்பும் கலந்த மயிர் முகத்தின் தோலை மறைத்திருந்தது.
தாத்தா வலதுகையில் கொஞ்சமாகபிட்டு ஊட்டினார். அவரால் வாயை அதிகமாக திறக்க முடியவில்லை. முரட்டு மயிர்கள் தாத்தாவை குத்தியது. வலியை வெளிப்படுத்தும் விதமாக முகத்த விளிப்பார். நண்பருக்கு முன்று பிள்ளைகள் சென்னையில் ஒருவன், பெங்களூரில் ஒருவன், காஞ்சிபுரத்தில் ஒருவன் என தன் மனைவிப் பிள்ளைகளோடு பிழ்ப்புத்தேடி சென்று விட்டார்கள். வயதான மனைவி மட்டும் தன்னால் முடிந்த சேவகத்தை செய்துவருகிறாள் .தாத்தா கறியை பிய்த்து ஊட்டும்போது வேகமாக மென்று முழுங்கிவிட்டு இன்னும் கறிக்காக காத்திருப்பது போல வாயை வைத்துக் கொள்வார். தாத்தா கறி, மீன், விசேஷமான நேரத்தில் அவரே கொண்டுவந்து உட்டிவிடுவதோ, நண்பரின் மனைவியிடம் கொடுத்துவிடுவதோ செய்வார். மற்ற நேரங்களில் அடிக்கடி தன் மருமகளையோ, பேத்தி சங்கீதாவையோ தொந்தரவு செய்து சாப்பிட கொடுத்துவிட்டு வாங்கமா என்று வற்புருத்துவார். நண்பர் தற்போது இறந்துவிட்டார். அவரை நேரில் பார்த்துவர தயக்கம் காட்டினார். சிலர் வந்து இன்னாணா போய் பார்க்கவில்லையா? அவர் பிள்ளைங்க எல்லோரும் வந்திருக்காங்க. 'எங்கப்பன எப்பிடி எடுக்கிறோம் பாருங்கடா?பேசிங்கிராங்கணா.போயி த்தான் பாரேன் என்பார்கள். நான் இப்படி யோசித்தேன் ஒருவேளை உயிரோடு இருக்கும்போது எவனும் வந்து பார்க்க வில்லை இப்போது வந்து மார்த்தட்டுகிறார்களா? தாத்தாவுக்கு காரணம் அதுமட்டுமில்லை என்றுமட்டும் உறுதியாய் தெரிந்தது. தாத்தா எனக்கு தலை வலிக்குதும்மா. மயக்கமா இருக்குது. மார்வலிக்கிறாமாதிரி தெரியுது என்றார். எனக்கு மட்டும் தாத்தாவுக்கு அப்படி வலி இருக்கிறதா என்பதில் சந்தேகம்தான். பிணத்தை எடுத்துவிட்டார்கள் என்றதும் தாத்தாதான் முதல் ஆளாக தலைக்குளித்து வந்தார். .
தாத்தா கோவணம் கட்டிகொண்டு, வெள்ளை காடாத்துணியில் டிராயர் போட்டு மேலே நாலுமுழ வேட்டியை கட்டிக்கொண்டார். தலைமயிர் முழுமையாய் கொட்டிவிடாமல், அடர்த்தியாய் அடைத்துக்கோண்டும் இராமல் வெண்ணிறத்தில் இளமைகால ரஜினியைப்போல் ஹேர் ஸ்டெயில் இருந்தது. அவரை உற்று பார்த்தபோது தலையோடு சேர்ந்து முகத்தில் முளைக்கும் ஒவ்வொரு பகுதி மயிர்கள் மனித வாழ்க்கையை சொல்லுகிறதா? தலைப்பகுதி பூமியின் அழகியலையும், மீசை தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்வின் வீரியத்தையும், தாடி தரை நோக்கியப் பயணத்தை சுட்டுவதாகவும் மனிதனின் மயிர் வளர்ச்சி இருப்பதாகத் தோன்ருகிறது. தாத்தாவின் வெண்ணிற காய்ந்த மயிர்கள் அப்படித்தான் காட்சியளித்தது.
அப்பா எங்கள் குடும்பத்துக்கு ஒருகுறையும் வைக்கவில்லை. அம்மாவிற்கு வேண்டிய அனைத்தையும் சீராக நிறைவேற்றினார். சிறப்பு காவல்படையில் குக்காக இருப்பதால் ஓரளவு எல்லோரையும் நிம்மதியாகவே வைத்திருந்தார். அப்பாவிற்கு உடலைக்கெடுக்கிற, மனசை ஏங்கவிட்டு அல்லல் படுத்துகிற எந்த பழக்கமும் இல்லை. அம்மாவுக்கோ, தங்கைக்கோ சிறுக,சிறுக ஏதாவது பொன்னாலான நகைகளை எடுத்துக்கொடுப்பார். நான்கு பிள்ளைகள், அத்தை மகள், அம்மா, அப்பா, தாத்தா இருந்தாலும் எப்படி இவன்மட்டும் கஷ்டமில்லாமல் குடும்பம் நடத்துகிறான். ஊரார் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். அது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். சிலநேரம் அப்பாவின் பாக்கட்டில் இருக்கும் சில்லரைகள் தயவுதாட்சணியம் இல்லாமல் கொள்ளைபோகும். அச்சமயம் கடிந்துகொள்ளும் விதமாக அப்பா சொல்லுவார். சில்லரை யாருடா எடுத்தது. ஒத்த பைசாவாக இருந்தாலும் குருவி தென்ன மட்டையில் பின்னியிருக்கும் நாரை பிய்த்துவந்து கூடு கட்டுவதுபோல சேர்த்து வைக்கிறேன். அத சொல்லாமக் கொள்ளாம எடுக்கலாமா. நான் வெளியப்போனா, ரெண்டுரூபாக் கொடுத்து 'டீ' குடிக்கக் கூட யோசிப்பேண்டா. நீங்க வீனா செலவு செய்யிறீங்க. என்பார். அப்போதுதான் இவ்வளவு கஷ்டப்படுகிறாரா என்று எனக்கே புரியும்.
அப்பா சிக்கனமாக இருக்க தாத்தா கற்றுக்கொடுத்திருப்பாரா யோசித்தேன். அதற்கு சாத்தியமே இல்லை. நாங்கள் இருக்கும் இடத்தில் தாத்தாவின் நண்பர்களாய் இருந்தவர்கள், யாருக்கும் படிக்கத்தெரியாதாம் கூலி வேலைதான் செய்தார்களாம், கிராமத்தில் நான்கு, ஐந்து ஏக்கர் நிலம் வாங்கி தன் பிள்ளைகளுக்கு வைத்து இருக்கிறார்களாம். தாத்தா அந்த காலத்தில நன்று படித்தவராம், பத்து ஏக்கர் வாரத்துக்கு பயிர் வைத்தவராம். கடைசிவரை ரெண்டு செண்டு நிலம் வாங்க வில்லை. 'ஊராருக்கு கொடுத்து என்று சொல்லுவதைவிட அவர்கள் நமைபெற திரிந்ததால் ஒன்றும் சம்பாதிக்காம உட்டுட்டாரும்மா. வயசான நேரத்தில் பாக்காம உட்டுடாதிங்கமா. பாட்டி சாகும்முன்பு அம்மாவிடம் சொன்னதாக, அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறாள்.
அம்மா சொன்னது பொய்யில்லை. ஊரிலேயே தாத்தாவின் வீட்டுமனைதான் நீளம், அகலத்தில் பெரியதாம். ஒரு நேரத்தில் அப்பாவையும், சித்தப்பாவையும் சம்மதிக்கவைத்து மனையில் பாதியை பிரித்து கோயிலுக்கு எழுதிவச்சிட்டாராம். அதற்கான பணமும் வாங்கவில்லையாம். வீட்டு முன்பு கோயில் இன்றும் இருப்பதால் முற்றிலும் உண்மை என்பது உறுதியாகிறது.
தாத்தா எண்பதைக்கடந்தாலும் எங்களை சுதந்திரமாய் கையாள்வதிலும். அத்தைமகள் சங்கீதாவை உபசாரங்கள் செய்யவைப்பதிலும். குடும்பத்தின் முக்கியவிஷயங்களில் ஆலோசனை சொல்லுவதிலும், அதையே செயல்படுத்துவதற்கு எடுத்துக்கொள்கிற விதமாக, ஆளுமைசெளுத்துகிற நபராகவே குடும்பத்தில் தாத்தா இருக்கிறார். அவர் விருப்பப்படி தெருப்பக்கம் அறையில் படுக்கையை அமைத்துக்கொண்டார். அடிக்கடி முத்திரம்போக வசதியாக இருக்கிறது என்றார். கிழக்கு சூரியனை பார்த்தவாசல். கட்டிலில் கதவு முட்டுமளவுக்கு கதவைத்திறந்தால் அதிகாலை இரத்தாம்பர வெளிச்சம் தாத்தாவின் முகத்தை துடைத்து நிற்கும். பிள்ளைகளில் நான்தான் பெரியவன். தாத்தா உடல் சுகவீனப்பட்டால் கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் செல்வது. மாத்திரைகள் சாப்பிடும்போது சந்தேகம் வந்தால் விளக்கம் தருவது. காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது. என்று தாத்தா பெரும்பாலும் என்னைத்தான் அழைப்பார். சிலநேரம் தம்பிகளை அழைத்தால் காது கேட்க்காத மாதிரி நழுவிவிடுவார்கள். எப்போதாவது ஒருதரம் இன்னாத் தாத்தா என்று வருவார்கள். தாத்தா சொல்லும் வேலையை அரைகுறையாக செய்துவிட்டு மறைந்துவிடுவார்கள். தாத்தாவுக்கு திருப்த்தியாய் இருக்காது. தங்கச்சி சின்னப் பொண்ணு என்பதால் யாராவது எடுத்துவரும் தின்பண் டங்களில் கொஞ்சம் கொடுக்கவும், சங்கீதாவை கூப்பிடு, கடைக்கு போயி ஒருதைல டப்பா வாங்கியா. பள்ளிக்கோடம் போனியா? இப்படியான வேலைகளையும், கேள்விகளையும்தான் தங்கச்சியிடம் கேட்ப்பார், சொல்லுவார்.
அப்பாவிடம் 'என் பெரிய பேரன்தாம்பா நல்ல புள்ள, ரெண்டாங்கெட்டான். மத்ததுங்க கெருவிங்க ஒரு வேல சொன்னாக்கூட மறச்சிக்கினு ஓடிபூடுதுங்க.' என்பார். அந்த நேரத்தில் தம்பிகள் இருந்துவிட்டால் என்னடா கொழுப்பு பெரியவங்க ஒருவேல சொன்னா செய்யமாட்டிங்களா. ஒரு நாளைக்கு தோல உரிச்சிடுறேன் என்று கண்டிப்பார். அப்பாயிருக்கும்போது தாத்தா வேலை சொன்னால் தம்பிகள் 'இன்னாங்க தாத்தா' மிகவும் பவ்யமாகபோவார்கள். ஓரளவுக்கு வேலையும் திருப்த்தியாக செய்வார்கள்.
அந்த இடத்தில் கட்டில் போட்டு ஏறக்குறைய பத்துவருடங்கள் கடந்துவிட்டது. படுக்கையில் எறும்பு ஏறுகிரதென்று கட்டிலின் நான்கு கால்களுக்கு அடியில் தட்டு வைத்து தண்ணீர் உற்றிவைக்கச்சொல்வார். ஒருநாள் பேச்சிவாக்கில் கட்டில் செய்து முப்பது வருஷமாகிறது. நான் வாரத்திற்கு பயிர் செய்த பம்ப்பு செட்டில் பிரித்தபோது கொண்டுவந்த கைத்துண்டு. ஊர்ல இருந்த ஆச்சாரிதான் செய்துகொடுத்தார். நல்ல வேலைக்காரர். 'கடுக்கா மரம்பா உன்காலத்த பார்த்து, பேரன் காலத்தையும் பாக்கும்னு' சொன்னார். நீயும் பாத்துட்டே. சொல்லும்போது அவர் முகத்தின் சுருக்கம் குறைந்திருந்தது. சட்டென்று மாறியது. நான் பயன்படுத்த மாட்டேன் என்று கணித்தார்.
கட்டில் நான்கு அங்குலம் இடைவெளியில் வரிசையாக குறுக்கு சட்டம் போட்டிருந்தது. நீளம், குறுக்கு சட்டங்கள் இணைக்கும் இடத்தில் ஆப்புகள் சில கழண்டு இருந்தது. சரிசெய்கிற ஆச்சாரி தற்போது ஊரில் யாரும் இல்லை. நீள, குறுக்கு சட்டங்களை இணைக்கும் இடங்களில் இரும்பு கம்பிகள் போட்டு இறுக்கிவைத்திருந்தார். அப்பா பணிசெய்யும் பெட்டாலியன் டெல்லியில் தங்கியிருந்தது. ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் வருவார். அப்போதெல்லாம் உயர்ரக கம்பிளிகள், பெர்ச்சிட் வாங்கிவருவார்.
புதிதாக வாங்கிவரும்போது நானும், தம்பிகளும், அம்மாவும் ஆளுக்கொன்று எடுத்துக் கொள்வோம். நாங்கள் போட்டிபோடும்போது பெர்ச்சிட்டுக்கு தேவையே இருக்காது. ஆனால் எனது, எனது என முத்திரை குத்திவைத்துக் கொள்வோம். நாட்கள் கழிந்தபின்பு பெர்ச்சிட் எங்கெல்லாமோ கேட்ப்பாரற்றுக் கிடக்கும். அவைகள் தாத்தாவின் கட்டிலுக்கு சென்று சேர்ந்துவிடும். குறுக்கு சட்டங்கள்மேல் கனமான அட்டைகள் போட்டு அதற்குமேல் பெர்ச்சிட் போட்டிருப்பார். அப்பொழுதும் கல்லின்மேல் படுபதுபோல் இருக்கும். அதற்காகவே ஆறு, ஏழு கம்பிளிகள், பெர்ச்சிட்டாவது மடித்துப்போட்டிருப்பார். தலைப்பக்கம் ஒரு தலையணை கால்பக்கம் இரண்டு தலையணை இருக்கும். கால் வீக்கம் எடுத்துவிடுவதால் காலை சற்று ஏற்றத்துடன் வைத்து படுப்பார். தலையணைகள் முன்றுமே தலைவைக்கும் இடம்தவிர்த்து அழுக்கு படிந்திருந்தது. கம்பிளிகள், பெர்ச்சிட் மெத்தையின் அளவிற்கு இருந்தது. வெட்டப்பட்ட மரம் காலங்கடந்து கல்மரமாகி விடுவதைப்போல் தாத்தாவின் படுக்கை இறுகியிருந்தது. படுக்கையின் இடம் தவிர்த்து சுவர் ஓரத்தில் இரண்டு, முன்று சின்னச்சின்ன அட்டைப்பெட்டிகள் வரிசையாக இருந்தது. ஒரு தகரப்பெட்டி பூட்டிக்கொள்ளும்படியாக இருந்தது. அட்டைப்பெட்டிகளில் ஏதேதோ மாத்திரை சீட்டுகள், உடைந்த கண்கண்ணாடி இருந்தது. அதில் கட்டியிருந்த கயிர் மாத்திரை அட்டைகளில் பின்னியிருந்தது. இன்னும் காலி டப்பாக்கள். இன்னொருபெட்டியில் துணிகள் ஒருசில புத்தகங்கள் இருந்தது. தகரப் பெட்டியின் சாவியைமட்டும் யாரிடத்திலும் கொடுப்பதேயில்லை.
என் அத்தைமகள் சங்கீதா வேளாவேளைக்கு சாப்பாடு கொடுப்பது, அவரின் துணிகளை துவைதுக்கொடுப்பது, குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தண்ணீரை காச்சிக்கொடுப்பது போன்ற பணிகளை தவறாது செய்தாள். சங்கீதா கலியாண வயதை கடந்துவிட்டாள். தோதாக ஒருபயலும் வரவில்லையென தாத்தா ஆதங்கப்பட்டார். அந்த கொழந்ததான் என்னை கவனிச்சிக்குது. இல்லை யென்றால் போனவருஷம் வயிற்று போக்கில் விழுந்தேனே அப்பொழுதே போய்செர்ந்திருப்பேன். வருவோர் தாத்தாவை நலன் விசாரிக்கும்போது அடிக்கடி சொல்லுவார்.
நான் பன்னிரண்டாவது படித்து தவறிவிட்டபோது என்னடா இப்படி பண்ணிட்டியே. பாஸ்செய்திருந்தா மேல படிச்சிருக்கலாமே உட்டுட்டியடா. சங்கடப்பட்டார். மறுபடியும் முன்று முறை எழுதியும் கரை சேரமுடிய வில்லை. நன்றாகத்தான் எழுதினேன். திருத்துகிறவர்கள் என்ன மனநிலையில் திருத்துகிறார்களோ? அரசுத்துறை அவர்களை சுதந்தரமான மனநிலையில் விட்டுவைக்கிறதா? எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. அப்பா என்மீது நம்பிக்கை இழந்துவிட்டார். என் சித்தப்பா எதற்கும் உருப்படாத மனிதராகவே இருக்கிறார். அவர் பணிசெய்யும் பள்ளியில்தான் மூன்று முறை எழுதினேன். ஒவ்வொரு முறையும் நல்லா எழுதுடா. டியூஷன் ஒழுங்கா போறியா? வீட்டில படிக்கிறியா? வெறுமனே சுத்துரியா? கேட்டுவிட்டு தனித்தேர்வரின் அட்மிஷன் கார்டை தேடிக்கொடுப்பார். மீண்டும் நல்லா எழுதுடா என்று பத்துரூபா கொடுத்தனுப்புவார். என் மூளையில் இருந்து உதிராமல் தேர்வுத்தாள் எழுத்தால் நிறைவதற்கு எப்பொழுதும் உதவியதே இல்லை.
இப்போது அவருக்கும் தெரிந்துவிட்டது. இனி தேரமாட்டான் ஏதாவது வேலையில் அமர்த்திவிடவேண்டும் நினைத்திருப்பார் போல. சென்னை கம்பெனிக்கு முகவரி தந்து விசாரிக்க அனுப்பினார். தாத்தா, அப்பாவிடம் 'ஏம்பா வேணாம்பா. எங்க அவ்வளவு தூரம் அனுப்பபோற. காலம் ரொம்ப கெட்டுப்போய் கிடக்குது' என்றார். மறுநாள் சித்தப்பா போன்செய்து கேட்டார். தாத்தா வேண்டாம்னு சொல்லிட்டாருங்க என்றுதான் பதில் சொல்ல முடிந்தது.
படிப்பு இனி வேலைக்கு ஆகாது என்றுதான் பட்டது. நான் நண்பர்களிடம் சொல்லிவைத்தேன். நண்பன் ஒரு வாரம் தங்கி இன்சுரன்ஸ் பயிர்ச்சி எடுக்கவேண்டி அழைத்தான். காஞ்சிபுரத்தில் ஆறுபேர் அதில் நீயும் ஒருவன் என்றான். அப்பாவிடம் அதற்கான அனுமதி பெற்று தயாரானேன். தாத்தாவிடம் சொல்லிவிட்டு செல்லுவது வழமையாதளால் தெரிவித்தேன். 'எங்கோபோய் ராத்தங்கி வேலைசெய்யனுமா? உங்க அப்பன் குடும்பத்த விட்டுட்டு கண்காணாத எடத்துக்கு போய்வேலைய புடிச்சான். நீயும் அப்படிபோரியா? வேலையும் வேணாம் ஒன்னியும் வேணாம் போடா! சித்தப்பன் வரட்டும் காஞ்சிபுரத்திலேயே ஒரு வேலைய பாக்கலாம். தினமும் வீட்டுக்கு வந்தமாதிரி இருக்கும்' என்றார்.
எனக்கு தாத்தாவின் மீது கோபமாக வந்தது. தாத்தா உலகம் தெரியாதவர் இல்லை. பேருந்து வசதி குறைவாக இருந்த காலத்திலேயே தமிழ்நாட்டின் பல ஊர்களை சற்றிவந்தவர்தானாம். அவருக்கு பயம் என்பது தெரியாது. அவரது சாகசங்கள் இன்னும்பலரால் பேசப்படுகிறது. நேர்முக புகழ்ச்சி அதிகமாய் இருக்கிறதென்று நான் சலித்தும் இருக்கிறேன். அவர்காலத்தின் நகரத்திற்கும் தற்போது உள்ள நகரத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது. திடீரென்று மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது, அதைக்குறித்து எந்தவிதமான ஆச்சரியத்தையும் வெளிப்படுத்துவதே இல்லை. எந்த மருத்துவர் இருப்பாரோ? உடல் இப்படி செய்கிறது, அப்படிசெய்கிறது என்பார். அப்படி சொல்லும்போது ஏனோ எனக்கு பதற்றம் ஏற்படுவதே இல்லை. மருத்துவம் பார்த்துக்கொண்டு நேராக வீட்டுக்கு போகலாம் என்பார். தாத்தா என்னை இன்னும் சின்னப்பையனாகவே கருதுகிறாரா?
சித்தப்பா லீவில் கணினி பயிற்சிக்கு போ என்றார். எனக்கும் அது தேவையாய் இருந்தது. அப்பா அதையாவது முழுசா முடிடா என்று கட்டணம் கொடுத்தார். தாத்தாவுக்கு தெரிந்துவிட்டது. ஆமாண்டா கம்பியூட்டர் கத்துக்குனு வெளிநாட்டுக்கு போயிடு. நாங்க இங்க சாகுறோம். என் ஈடு ஆட்கள் எல்லாம் எங்கி எங்கியோ போனான். ஒண்ணும்மில்லாம திரும்பி வந்தான். தண்ணி கெடைக்காத பஞ்சத்திலையும் இந்த ஊரைவிட்டு போகல. நான் பொழைக்காமையா போயிட்டேன். அப்பன் காட்டுன வழியில அவன் புள்ளங்க போனாங்க.திரும்பி வரல.அப்பனுங்க ஊர்ல அனாதையா செத்தாங்க' என்றார்.
அப்பா கிராமத்தை கை கழுவி விடுவதை விரும்பாதவர். பல நேரம் தாத்தாவின் பேச்சை தட்டமாட்டார். அதற்கு முக்கிய காரணம் இருந்து. அப்பாவுக்கு கலியாணம் முடிந்தவுடன் ஆவடி கேம்ப்பில் வேலை கிடைத்துவிட்டதாம். வாரம் ஒருமுறைதான் வீட்டுக்கு வருவாராம். பிறகு கேம்ப்பு ஐந்துவருஷம் டெல்லி சென்றுவிட்டதாம். அப்போதெல்லாம் தாத்தா ஊரில் எந்த பழிப்பேச்சும் இல்லாமல் அம்மாவை பார்த்துக்கொண்டாராம்.
எங்களை வளர்த்தது சின்ன அத்தை என்றாலும். வீட்டில் வயதானவர் இருப்பது நான்கு பூனைப்படைக்கு சமமாகத்தான் நினைக்கிறேன். நாங்கள் வளர்ந்ததில் தாத்தாவுக்கு பொறுப்பு இருப்பதை என்னாலும் மறுக்கமுடியாது. பெற்றுக்கொள்வதிலும், திருப்பிசெலுத்துவதிலும்தான் மனித இயக்கம் அடங்கியிருகிறது. அந்த அடிப்படையில்தான் எதையும் அலட்ச்சியபடுத்துகிற வயதானபோதும்,நான் தாத்தாவை மதித்து நடக்கிறேன். நானே மதிக்கும்போது, அப்பா தாத்தாவின் பேச்சை தட்டாமல் இருப்பது ஆச்சரியம் இல்லை.
நான் உருவத்தில் சற்று குள்ளமாக இருப்பதால் என் திறமையின்மீது தாத்தாவுக்கு நம்பிக்கை வரவில்லைபோல. தொடை இடுக்குகளில் வளர்வதை கத்திரிக்கும் நிலையில் வந்துவிட்டதால் எதிர்காலத்தை நினைத்து திறமை நிருபிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். தாத்தாவின் கண் புரை உரிக்கவேண்டும், மருத்துவரின் ஆலோசனை எனக்கு வாய்ப்பாக அமைந்தது. பாண்டிச்சேரி அரவிந்த் மருத்துவமனைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. எங்களூரில் யாரும் அந்த மருத்துவமனையை அறிந்தவர்கள் இல்லை. எனக்கும் வழி தெரியாது. விசாரிப்பு அடிப்படையில் சென்று முன்று நாள் தங்கி தாத்தாவுக்கு சிகிச்சை முடித்து அழைத்து வந்தேன். பலர்வந்து தாத்தாவை விசாரித்து. கெட்டிக்கார பேரன். வாழ்த்து மழையில் குளிக்கவைத்தார்கள். இதுவரை தாத்தா மட்டும் ஒன்றும் சொல்லவில்லை. அன்னம்மா பாட்டி வந்தாள். தாத்தாவை நலன் விசாரித்தாள். 'ஆறுமாசமா முத்திப்போன கண்ணை உரிக்க வழிதெரியாம தவிக்கிறேன். பரவா இல்ல உன் கண்ண பேரன் காப்பாத்திட்டான்' என்றாள்.
தாத்தாவின் கறுப்பு கண்ணாடியின் கிழ்பகுதியில் கண்ணீர் வழிந்தது. அந்த கொழந்த இல்லனா யாருமா என்ன கூட்டிம்போவாங்க? அதுக்குத்தான் கூடவே வச்சிங்கிறேன். தாத்தா எதற்கு அழுகிறார் என்பது புரியவே இல்லை. அவரை பார்க்காதுபோல் வாசலுக்கு வெளியே வந்தேன். வாசலில் இருந்த தென்னைமரத்தின் கீற்றில், இரு ஓலைகளுக்கு இடையில் சிலந்தி வலை இருந்தது. வேகமான காற்றின் மோதலில் தன் இருப்பை முடிந்தவரை, இழந்து விடாமல் இருக்க சிலந்தி ஓயாமல் இழைகளை நூற்திருந்தது.
ஜே.டேனியல்

No comments:
Post a Comment