நேரு சிறையிலிருந்த போது தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதம்
தமிழாக்கம்: ஒ.வி.அளகேசன்
புக்ஸ் (இந்தியா)பிரைவேட் லிமிடெட்
135, பவழக்காரத்தெரு சென்னை-௧
............................................................................................................................

செல்வம் எங்கே செல்கிறது? ஜனவரி,18, 1931.
நீ முசூரியிலிருக்கும்போது நான் உனக்கு ஏழுதிய கடிதங்களில் மனிதன் முன்னேற்றம் அடைய அடைய எப்படிப் பல வகுப்புகள் தோன்றின என்று சொல்லியிருக்கிறேன். ஆதிகாலத்து மனிதர்கள் வயிற்றுச் சொற்றுக்குக்கூடத் துன்பப் பட்டு பாடு படவேண்டியவராயினர். பழங்களையும் கொட்டைகளையும் சேகரித்தார்கள். உணவைத்தேடிப் பற்பல இடங்கள் அலைந்து திரிந்தார்கள். நாளடைவில் கூட்டம் கூட்டமாகச்சேர ஆரம்பித்தார்கள். இக்கூட்டங்களை பெரிய குடும்பகள் என்றே சொல்லவேண்டும். தனியாக இருப்பதை விடக் கூடியிருப்பதில் பாதுகாப்பு அதிகமென்று கருதி அவர்கள் சேர்ந்து வாழ்ந்தும் வேட்டையாடியும் வாந்தார்கள். பிறகு ஒரு பெரிய மாறுதல் நிகழ்ந்தது. உழவுத்தொழில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பழைய நிலைமையை அடியோடு மாற்றிவிட்டது. காலம் முழுவதும் வேட்டையாடி பிழைப்பதைவிட நிலத்தை உழுது பிழைப்பாத்து மிகவும் எளிது என்று மக்கள் கண்டுகொண்டார்கள். நிலத்தை உழுதல், விதைத்தல் அறுத்தல் முதளிஎன செய்வதற்கு, ஓரிடத்தில் குடியிருக்க வேண்டும்; பழையபடி கண்ட கண்ட இடங்களில் அலைந்து திரியமுடியாது. ஆகவே, அவர்கள் தங்கள் தங்கள் நிலங்களுக்கருகில் நிரந்தரமாக வாழவேண்டி ஏற்பட்டது. இவ்வாறே ஊர்களும் பட்டணங்களும் உண்டாயின.
பயிர்த்தொழிலினால் பல்வேறு மாறுதல்கள் விளைந்தன. நிலத்திலிருந்து விளைந்த உணவுப்பொருள் முழுவதும் அவ்வப்பொழுதே பயன்படுத்தத் முடியாமல் மிச்சம் ஏற்படலாயிற்று. இம்மிச்சத்தை அவர்கள் சேமித்து வைத்தார்கள். வேட்டையாடிப் பிழைத்த பழைய வாழ்க்கையைவிட இத்தகைய வாழ்க்கையில் சற்று சிக்கல் அதிகமாயின. சில வகுப்பார் அந்த வேலையை மேற்பார்வை செய்து நிர்வகிக்கத் தலைப்பட்டார்கள். இந்த நிர்வாகிகளும் நிரு மாணிப்போரும் சிறிது சிறிதாக வலுப்பெற்று நாட்டான்மைக்காரகளும் (Patriarchs), சிற்றரசர்களும் (Rulers), அரசர்களும், பிரபுக்களும் (Nobles) ஆகிவிட்டார்கள். அவர்கள் கையில் அதிகாரம் இருந்தமையால் விளைந்த உணவுப்பொருளில் செலவழிந்ததுபோக மிகுதியில் பெரும்பாகத்தை தங்களுக்கென்று வைத்துகொண்டார்கள். இவ்வாறு அவர்கள் செல்வம் மிகுந்துவர, வயல்களில் வேலை செய்து வந்தவர்களுக்கு உயிர் வழ்வதற்கு மட்டும் போதிய உணவு கிடைத்து வந்தது. பின்னர் இந்த நிருவாகிகளும், நிருமாணிப்போரும் தங்கள் வேலையைச் செய்வதற்குக் கூடத் திறமையற்றவர்களும் சோம்பேறிகளும் ஆனார்கள். அவர்கள் ஒரு தொழிலும் செய்யாமல் தொழிலாளர்களின் உழைப்பினால் விளைந்த உணவில் பெரும்பகுதியைத் தங்களுக்கென்று எடுத்துக்கொள்வதில் மட்டும் அக்கறை காட்டி வந்தார்கள். தாங்கள் ஒன்றும் செய்யாமல் பிறருடைய உழைப்பினால் வாழ்வதற்குத் தங்களுக்கு உரிமை உண்டு என்று அவர்கள் அவர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள்.
ஆகவே,மனிதர்கள் உழுதுண்டு வாழத் தலைப்பட்ட பிறகு அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாறுதல் நிகழ்ந்தது என்பது தெரிகிறதல்லவா? உணவு தேடும் முறையை வளர்த்து அஃது எளிதில் கிடைக்கும்படி செய்த காரணத்தால் உழவுத்தொழில் மனித சமூகத்தின் அடிப்படையை அடியோடு மாற்றி விட்டது. அதனால், மக்களுக்கு ஒய்வு கிடைத்தது. வெவ்வேறு வகுப்பினர் தோன்றினர்; அவரவர் உணவை தாமே தேடவேண்டும் என்னும் அவசியம் இல்லாததால் சிலர் வேறு வேலைகள் செய்ய முடிந்தது. பல தொழில்களும் கைத்தொழில்களும் தோன்றின. அதிகாரம் மட்டும் எல்லாவற்றையும் நிருவகிக்கும் வகுப்பாரிடையே இருந்தது.
பிற்காலச் சரித்திரத்திலும், உணவையும் பிற தேவைகளையும் உற்பத்தி செய்வதற்கு புதிய முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்திருப்பதை நீ காணலாம்.
உணவைப்போலவே மனிதன் வேறு பல பொருள்களையும் விரும்பத் தொடங்கினான். ஆகவே, உற்பத்தி முறைகளில் ஏற்படும் பெரிய மாறுதல்கள் சமூகத்திலும் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தின. இதற்கு ஒரு நல்ல உதாரணம் சொல்லுகிறேன். நீராவியின் சக்தி கண்டுபிடிக்கப் பட்டதும் தொழிற்சாலைக்கு அதை பயன்படுத்தத் தொடங்கினார்கள். நீராவியின் உதவியால் புகைவண்டிகளும் கப்பல்களும் ஓட ஆரம்பித்தன. இதனால், பொருள்களை உற்பத்தி செய்யும் முறையிலும் பகிர்ந்தளிக்கும் முறையிலும் பெரிய மாறுதல் ஏற்பட்டது. தொழிலாளி சாதாரணக் கருவிகளைக்கொண்டு கையினால் செய்வதைவிட மிக விரைவாக நீராவித் தொழிற்ச்சாலைகள் பல பொருள்களை உற்பத்தி செய்யமுடிந்தது. இயந்திரம் உண்மையில் ஒரு கருவியே ஆகும். இரயில் மார்கமாகவும் நீராவிக் கப்பல்கள் மூலமாகவும் உணவுப்பொருள்களும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட பொருள்களும் தொலைவில் உள்ள நாடுகளுக்கு விரைவில் போய்சேர்ந்தன. இம்முறை உலகம் முழுவதும் எத்தகைய மாறுதலை விளைவித்திருக்க வேண்டுமென்பதை நீ எளிதில் அறியலாம்.
உலகில் உணவுப்பொருள்களையும் மற்றபொருள்களையும் மேலும் மேலும் விரைவாக உற்பத்தி செய்யும் புதிய சாதனங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த உற்பத்தி முறைகளைக் கையாளுவதால் உற்பத்தி மிகவும் அதிகரிக்குமென்றும் அதனால் உலகில் செல்வநிலை உயர்ந்து எல்லாருக்கும் நலம் உண்டாகும் என்றும் நீ நினைக்கலாம். ஓரளவுக்கு நீ நினைப்பது சரி: ஓரளவுக்கு அது சரியன்று. உற்பத்தி முறைகள் வளர்ச்சியடைய அடைய உலகத்தில் செல்வம் பெருகியிருக்கிறதென்பதில் தடையில்லை. அனால் உலகில் யாரிடம் அச்செல்வம் சென்று தங்கி இருக்கிறது? நமது நாட்டில் மிக்க ஏழ்மையும் துன்பமும் இருப்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் செல்வம் நிறைந்த நாடாகிய இங்கிலாதிற்கூட நிலைமை இப்படித்தான் இருக்கிறது. ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்? செல்வம்மெல்லாம் எங்கே செல்கிறது? நாடோறும் செல்வம் வளர்ந்துகொண்டே இருக்க, ஏழைகள் எழைகளாவே இருப்பது வியப்பாக இல்லையா? சில நாடுகளில் ஏழைகள் சிறிது நலம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் உற்பத்தியாயிருக்கும் புதிய செல்வத்தோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்பின் அவர்கள் பெற்ற நலம் மிகவும் சொற்பமே. இச்செல்வம் பெரும்பாலும் யாரிடம் செல்லுகிறதென்று நாம் எளிதில் தெரிந்துகொள்ளலாம். வழக்கம்போல் நிருவாகிகளும் நிருமாணிப்போரும் நல்ல பொருள்கள் எல்லாவற்றிலும் பெரும்பகுதியை எடுத்துக்கொள் கிறார்கள். இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் பிறர் உழைப்பின் பயனில் பெரும் பகுதியை எடுத்துக்கொள்ளும் இவ்வகுப்பினரே மற்றவர்களால் பெருமைப்படுத்தப் படுகிறார்கள். . அறிவிலிகள் சிலர், ஒருவன் தன் வாழ்க்கைக்கு தான் உழைப்பது இழிவென்று கருதுகிறார்கள். உலகில் எல்லாம் இவ்வாறு தலைகீழ்ப் பாடமாய் இருக்கின்றன. நிலத்தில் பாடுபட்டும் தொழிற்சாலையில் வேலை செய்தும் உலகத்துக்கு உணவையும் செலவத்தையும் அளிக்கும் குடியானவனும் தொழிலாளியும் ஏழைகளாய் இருப்பதில் ஏதேனும் ஆச்சரியமுண்டா? நமது நாட்டுக்கு உரிமை வேண்டுமென்று கேட்கின்றோம். ஆனால், இப்போது இருக்கும் தலைகீழ்பாடத்தை ஒழித்து உழைப்பின் பயனை உழைப்பவனுக்கு அளிக்கமுடியாவிட்டால் சுதந்திரத்தின் யாது பயன்? அரசியலைப்பற்றியும், அரசாங்கத்தை நடத்தும் முறையைப்பற்றியும், பொருளியளைப் (Eoonomics) பற் றியும் நாட்டின் செல்வம், எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்பதைப் பற்றியும் பெரிய பெரிய புத்தகங்கள் எழுதப்பட்டிருகின்றன.1 கற்றறிந்த ஆசிரியர்கள் இவற்றைப்பற்றி பேசுகிறார்கள். இவ்வாறு பேச்சும் விவாதமும் நடந்துகொண்டிருக்கும்போது உழைப்பவர்கள் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இரு நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புகழ் பெற்ற பிரஞ்சி ஆசிரிராரிகிய வால்டேர் என்பவர் அரசியல் வாதிகளைப்பற்றி பின்வருமாறு கூறினார். "நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழுது பாடுபட்டுப் பிறர் உயிர்வாழ உதவிபுரியும் மக்களைப் பசியினால் சாகடிக்கும் முறையை இவர்கள் தங்களுடைய அருமையான அரசியலில் கண்டுபிடித்துள்ளனர்".
பழங்காலத்து மனிதன் சிறிது சிறிதாக இயற்கையை அடிமைப்படுத்தி முன்னேறினான்; காட்டை அழித்து வீட்டைக்கட்டி, நிலத்தைப் பயபடுத்தினான். ஓரளவுக்கு மனிதன் இயற்கையை வென்றுவிட்டதாகக் கருதப்படுகிறான். இயற்கையை பலர் வென்றுவிட்டதாக பலர் பேசுகிறார்கள். இது வெறும் பேச்சு; இது சரியன்று. மனிதன் இயற்கையை அதிகமாக உணர உணர, அதனுடன் ஒத்துழைத்து அதைத்தன் செயல்களுக்கு பயன்படுத்திக்கொண்டான். என்று சொல்லுவது பொருத்தமாக இருக்கும். பண்டையகாலத்தில் மக்கள் இயற்கையையும் இயற்கையின் தோற்ற வேறுபாடுகளையும் கண்டு அஞ்சினர். அவர்கள் இயற்கையை உணரமுயலாமல், ஒரு காட்டுவிலங்கைச் சமாதானம் செய்து இன்புறுத்துவதுபோல, அதற்கு வழிபாடு செய்து வணங்க ஆரம்பித்தார்கள். இடியும் மின்னலும் கொள்ளைநோய்களும் அவர்களை அச்சுறுத்தின.பொங்கலிட்டு வழிபடுவதே இவற்றறை தடுப்பதற்கு வழி என்று அவர்கள் எண்ணினார்கள். சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ ஏற்பட்டால், அதை பெரிய பீடை என்றும் பலர் தெரியாமல் நினைக்கிறார்கள். அது ஒரு சாதாரண இயற்க்கை நிகழ்ச்சி என்று அறிந்துகொள்ளாமல் மக்கள் அதைப்பற்றி கவலை அடைந்து குளித்து முழ்கிப் பட்டினியிருந்து சூரியனையும் சந்திரனையும் காப்பாற்ற முற்படுகிரார்கள்! சூரியனையும் சந்திரனையும் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் வன்மை பெற்றிருக்கின்றன. நாம் அவற்றைப்பற்றிக் கவலைப்படவேண்டுவதில்லை.
மக்கள் கிராமங்களிலும் பட்டணங்களிலும் குடியேறி வாழ ஆரம்பித்தவுடன் கலை நாகரீகங்கள் தோன்றி வளர்வதைப்பார்த்தோம். உணவுப்பொருள் அதிகமாகக் கிடைக்கவே ஒய்வுநேரமும் அதிகமாயிற்று. வேட்டையாடு வதிலும் உண்பதிலுமே போழுதைபோக்காமல் வேறு நிகழ்ச்சிகளைப்பற்றியும் அவர்கள் சிந்திக்க தொடங்கினார்கள். சிந்தனை வளர வளரக் கைத்தொழிகளும், கலைகளும் சிறுது சிறிதாக வளரத்தொடங்கின. மக்கள் தொகை பெருகவே ஒருவருக்கொருவர் நெருங்கி வாழலானார். பல செயல்களின் பொருட்டு எபோதும் ஒருவரை ஒருவர் சந்தித்துப்பழகி வந்தார்கள். மக்கள் சேர்ந்து வாழவேண்டுமானால் ஒருவர் மற்றவர் மனத்தை அறிந்து ஒழுகவேண்டும். அண்டை அயலார், தோழர்கள் ஆகியோருடைய மனம் புண்படும்படியான செயலைச்செய்யக் கூடாது. செய்யின் சமூதாய வாழ்வு நடைபெறமுடியாது. உதாரணமாக, ஒரு குடும்பத்தை எடுத்துக்கொள். குடும்பம் சிறு சமூகம் போன்றது. ஒரு குடும்பம் இன்பமாக வாழ்க்கை நடத்தவேண்டுமானால் அதைச்சேர்ந்தவர்கள் ஒருவரோடொருவர் இணங்கி நடக்கவேண்டும். ஒரு குடும்பத்தச் சேர்ந்தவர்கள் அன்பு அத்தளையால் பினைக்கப்பட்டிருந்தால், இஃது எளிதாகும். அப்படியிருந்தும் சில சமயங்களில் அதை மறந்து அநாகரிகமாக நடந்துகொள்கிறோம். குடும்பத்தைவிட ஒரு பெரிய கூட்டத்திற்கு இது பொருந்தும். நம் அருகில் வாழ்வோர் நமது நகரத்தைச் சேர்ந்தவர்கள். நம் நாட்டு மக்கள் இன்னும் மற்ற நாட்டவர் எல்லோருக்கும் இது பொதுவானது.
ஆகவே மக்கள் தொகை மிகுதியானதனால் தன்னடக்கத்துடன் பிறர் நோக்கமறிந்து செல்லும் குணம் சமூக வாழ்க்கைக்கு சிறந்தது. கலை நாகரீகங்கள் என்பன இன்னின்னவை என்று அறுதியிட்டு சொல்லுவது கடினம். நான் அக்காரியத்தை மேற்கொள்ளப் போவதுமில்லை. நாகரீகம் குறிக்கும் பல பண்புகளில் தன்னடக்கமும் பிறர் மனமறிந்து ஒழுகுதலும் சிறப்பாக அடங்க்கியிருக்கிறன. ஒருவன் தன்னை அடைக்கிப் பிறர் மனமறிந்து ஒழுகானாகின், அவனை நாகரிகமற்றவன் என்று ஐயமின்றி கூறலாம்.

No comments:
Post a Comment