‘கானகன்‘ லக்ஷ்மி சரவணக்குமார்
எதிர்ச்சொல்
பதிப்பகம். விலை-200/-
தங்கப்பன், தாய் பெண் புலியை
வேட்டையாடுவதிலிருந்து தொடங்கி, அதன் குட்டிப்புலி வளர்ந்து தங்கப்பனைப் பழிவாங்குதல் வரை நீளுகிறது நாவல்.
எனக்கு கடல், காடு,
மலைப்பகுதிகள் அவ்வளவு விருப்பம். குடும்பம், தனக்கான கடமை, என்பது தலையில் எப்போதும் அளவாக இருந்துகொண்டு
தகுதியை நிர்மானிக்கும் மயிராக இருக்கிறது. அப்படி இல்லாமல் இருந்தால்
கடல், காடு, மலையின் அப்பழுக்கற்ற காற்றை
நுகர்ந்துகொண்டு எங்கேயாவது திரியலாம். சில நேரம் நாம் வாழும் பகுதியில் அத்தகைய இயற்கைகள் அமைந்திருக்கவில்லையே என்று
ஏக்கமாக இருக்கும்.
லக்ஷ்மி சரவணக்குமார்
கானகன் வாசித்தபோது, குறைந்த பட்சம் அந்த கவலைகளை நிவர்த்தி செய்து
மிக நீண்ட நாள்கள் கானகத்தில் உலவிய அனுபவத்தையும் மன மகிழ்வையும் தந்தது.
எழுத்துப்போக்கு வாசிப்பை மிக வேகமாக கொண்டு
சென்றுவிடுகிறது. காட்டை ஒட்டி வசிக்கும் மக்களின் மூலமாக காட்டின் தன்மையை,
மேன்மையை, அதற்குள் வேட்டையாடும் நுட்பத்தை நாவல்
முழுவதும் பரப்பிக்கொண்டே செல்கிறது. ஒவ்வொரு மிருகமும் தங்களுக்கான
வேட்டையை எவ்வாறு கட்டமைத்துக் கொள்கிறது என்பதை நுணுக்கமாக வைக்கிறது. குறிப்பாக புலி தேவையில்லாமல் தொடர்ந்து வேட்டையாடுவதில்லை. யானைகளுக்கு மனிதனை பழிவாங்கும் அவசியம் ஏன் ஏற்படுகிறது. என்பதெல்லாம் வாசிப்பு சுவாரசிய்த்தை அதிகப்படுத்துகிறது.
விரிந்து கேட்பாரற்றுக் கிடந்த காடு, வேட்டையாடிய மிருகம் ருசிகண்டதுபோல மனிதன் குறைந்த முதலீட்டில் காட்டின் அபரிதமான
லாபங்களைக் கண்டடைந்ததால் கொஞ்சங் கொஞ்சமாக காட்டை தங்கள் வசம் கைப்பற்றிக்கொண்டே வந்திருக்கிறான்
என்கிற புரிதலை உணர்த்துகிறது. விளங்குகளின் வாழ்விடங்கள் அப்பகுதியின்
வாழும் மக்களின் கண்முன்னே அழிவதை நினைத்து கையறு நிலைக்குத் தள்ளப்படுவதை வேதனை பொங்க
பகிர்கிறது. காடு சூறையாடப்படுகிறதே என்கிற வேதனை ஒவ்வொருவரின்
மனதுக்குள் இருந்தாலும், கஞ்ஜா பயிர் செய்யும் முதலாளிகளின் அற்ப
கூலிக்காக அவர்கள் வாழ்வின் நெறுக்கடி பணிந்துபோகச் செய்துவிடுகிறது.
காட்டின் ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்த
வன தேவனாக சடையன் பாத்திரம் தேசாந்திரி வாழ்வாக வடிக்கப்பட்டு இருப்பது சிறப்பு. தங்கப்பனும்,
வாசியும் அங்கு இருக்கும் இனக்குழுவும் வாழ்வாதாரத்திற்காக காட்டை நேசிப்பவர்களாகவும்,
அதே சமயம் தங்கள் வாழ்வுக்கு ஆபத்து வரும்போதும்
நுட்பமான வேட்டைக்காரர்களாகவும் மாறி மாறி செயல்படுவதால்,
அம்மக்களுடைய வாழ்வு ஊசலாட்டமானது என்பதைப் பதிவுசெய்கிறது. தங்கப்பனைக்காட்டிலும்,
வாசி காட்டின் ஒரு ஜீவராசிகளையும் இழந்துபோக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறான். மனிதர்கள் வேட்டைப்
பக்குவங்களை அறிந்ததுபோலவே, மிருகங்களும் தாம் வேட்டையாடப்படப்போகிறோம்
என்பதின் நுணுக்கத்தை புரிந்து வைத்திருத்தலின் செய்திகளை வாசிக்கிறபோது
வாசக மனம் பெரும்பாலாக திருப்த்தி அடைகிறது.
நகர், கிராமப்புற இடங்களில்
சமூகம் கட்டமைத்து வைத்துள்ள அறக்கொள்கைகளால் ஆண் பெண் துணை சாத்தியமாவது கடலில் முத்து
எடுத்தல் காரியம்போல் சமூகத்தில் மூர்க்கமாக திரிகின்றபோது, நாவல்
கதைமாந்தர்கள் வாழ்வில் மிகச் சாதாரணமாக மூன்று பெண்கள் தங்கப்பனுக்கு மனைவிகளாக ஒன்றி
வாழ்தல் அந்த இனக்குழுவில் எப்படி சாத்தியமாகிறது. அதற்கு அடிப்படைக்காரணம்
என்னவாக இருக்கும்? அவைகளை இச்மூகம் கடைபிடிக்க சாத்தியம் கிடையாதா? அல்லது
அவ்வாழ்வின் சூழல் பேடியாள்களின் அறிவீன அறம் என்று ஒதுக்கிவிடுமா? என்ற
கேள்விளை எழுப்புகிறது. வாசி வாலிபத்தை அடையும் முன்னே,
ஜெமின்தார் மனைவி அவனுடன் புணர்தல். வாசி வாலிபனாகிவிட்ட
பிறகு அவன் வாழ்க்கையில் ஒரு பிணைப்பு என்பது, பெண்ணால்தான் கிடைக்கும் என ஊகிக்கின்ற
பாட்டா, அவனுக்கு சந்தோஷம் கிட்ட, இளம்
பெண்ணை அனுப்புகிறார். அவள் கர்பமாகின்றாள்,
பிறகு கலியாணம் நடக்கின்றது. இன்னொரு பக்கம் சகாயமேரி
தங்கப்பனிடம் ஓடி வந்து மனைவியாக வாழ்கின்றவள். சடையன் மனைவி அவனை விட்டு தங்கப்பனிடம் வந்து வாழ்ந்து
குழந்தையைப் பெறுகிறாள். அன்சாரி, தங்கப்பன் குடும்பத்துடன் உறுப்பினன்போல நெடுங்காலமாய் நெருங்கி இருப்பவன்.
தன்னைவிட வயது மூத்த சகாய ராணி மீது ஆசைப்படுகின்றான். முதலில் மறுப்பவள் பிறகு உறவை மேற்கொள்கிறாள்.
அதன் அடிப்படையில் தன் மூத்த சக்களத்தி மாரியிடம்
விஷயத்தைச் சொல்கிறாள். அவளும் நல்லா இரு என்று புத்தி சொல்லி
அனுப்புகின்றாள். தங்கப்பனை விட்டு இப்போது சகாய மேரி,
அன்சாரியுடன் குடும்பம் நடத்துகின்றாள்.
இந்த வாழ்முறையில் சாதி, மதம்,
சமூக்க் கட்டுக்கோப்பு புணிதம் அது, இது என்ற அறங்கள்
எல்லாமே செல்லாக்காசாக நிர்மானிக்கப்படுகிறது. எந்த குறுக்கீடும்
இல்லாமல், அவரவர் வாழ்க்கையை நிம்மதியாக, சந்தோஷமாக இயல்பாக வாழ்கின்ற வாழ்முறை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
சினிமா பாணி
சில இடங்கள் சினிமா கிளைமாக்ஸ் பாணியை
கையாண்டு இருப்பது, சற்று சோர்வாகவும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
உதாரணமாக நாவல் காலகட்டத்தை அறிந்துகொள்ள
எம்.ஜீ.ஆர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அமெரிக்கப்பயணைத்தை எடுத்துக்கொள்ளலாம். ஆனால்,
அந்த இனக்குழு மக்களின் கலாச்சாரம் என்ன? என்னமாதிரியான
உடைகள் அணிந்திருந்தார்கள், அவர்களின் அவயங்களின் கட்டமைப்பு
போன்ற சித்தரிப்புகள்
சரியாகச் சொல்லப்படவில்லை. சில இடங்களில் கோணி உடுத்தியிருந்தான் என்று
குறிப்பிடப்படுபிகிறது. ஆனாலும் அந்த ஒரு குளுவை
வைத்து பாத்திரத்தை முழுமையாக வாசகனால் உருவகப் படுத்திக்கொள்ள முடியவில்லை.
சடையனின் பயித்திய வாழ்வும், அதற்கான சூழலும் மிக
நம்பகத்தன்மையுடன் இருந்தாலும், ஒட்டுமொத்த யானைகளும் கிராமத்தைத்
தாக்க வரும்போது சடையன் யானை மீது வருவதும். சினையான மானை வேட்டையாடியதால் ஜெமின்தார்
காணாமல் போவதும். கடைசியாக குட்டிப்புலி வேட்டையாட போடப்படும் திட்டமும்.
முடிவில் தங்கப்பன் பழிவாங்கப்படுவதும் நம்பும் படியாக வாய்க்கவில்லை.
அல்லது சினிமா பாணியில் அமைந்துவிட்டது. வெகு சில இடங்கள் மட்டுமே
அப்டியான புரிதலைத்தருகின்றது. மற்றபடி கானகன் பெரும்பகுதி மனித வாழ்முறையைப் பகுதிப்
பகுதிகளாகக் கொண்டும், புணைவுகளை சரிவிகிதத்தில் கலந்தும் கொடுத்திருப்பதால் ஒரு காட்டின்
புதிய உலகத்தின் தரிசனத்தை கண்டடையச் செய்கிறது. ஆனால், எளிதில் (காட்டின் மௌனங்கள்)
புரிந்துகொள்ளமுடியாத தேசாந்திரியான இன்னொரு கோணங்கியாகவும் விளங்கிக்கொள்ளமுடிகிறது.
டேனியல்
No comments:
Post a Comment