Tuesday, October 14, 2014

கட்டுரை,






‘மேலும்‘ விருதின் கூட்டம்.

நேற்று முன் நாள் மாலை (ஞாயிறு) இக்சா மையத்தில் ஜமாலனுக்கு விருது வழங்கும் விழாவிற்கு, நண்பருடன் சென்றிருந்தேன். கூட்டம் மிக திருப்த்தியாக இருந்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக மிக முக்கியமான இலக்கியம், சினிமா சார்ந்த கூட்டங்களுக்கு சென்றுகொண்டிருக்கிறோம். பல கூட்டங்களில் எட்டு மணிவரை இருந்து, பிறகு தி நகர் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக மாம்பலம் ரயில் நிலையத்தில் டிக்கட் எடுத்துக்கொண்டு, அடிச்சி, புடிச்சி ட்ரெயினப் புடுச்சி வீட்டுக்கு வருவோம், அப்ப எல்லாம்கூட கஷ்டமேத் தெரியாது. ஜாமாலன் விருது கூட்டத்தில் ஒரு தமிழ் பேராசிரியர் பின்நவீனத்துவத்தில் நம்பிக்கையற்று பேசி முடித்ததும் (பேசி முடிக்கும் முன்னே, முடிக்க வைத்து விட்டபிறகு) கிளம்பி வெளிய வந்தோம். 

எக்மோர் நடக்க நடக்க தலை வெடித்துவிடும்போல் ஒரு வலி. தாங்கவே முடியவில்லை. ஏன் இப்படியாச்சி. என்ன காரணம் தெரியவேயில்லை. இத்தனைக்கும் ஆகாத பொருள் எதையும் சாப்பிடவும் இல்லை. இருக்க இருக்க தலையை நாலுபக்கமும் யரோ, சுத்தி, கல்லு, கட்டை கொண்டு நெறுக்கி சிதறடித்துக் கொண்டிருப்பாதாகத் தோன்றியது. அதன்பிறகுதான் ஒரு விஷயம் பிடிபட்டது. இன்றையக்கூட்டம் பெரும் விஷையங்களை எதிர்பார்க்காத நேரத்தில் மொத்தமாக கொடுத்திருக்கிறது. நம் மூளை அவ்விஷயங்களை சீராக பதிவு செய்துகொள்ளமுடியாமல் மிகக் கடினமாகப் போராடி தக்கவைத்திருக்கிறது. அதனால்தான் இவ்ளவு தலைவலி என்று புரிந்தது. ஒரு கட்டத்தில் நண்பரிடமும் ரொம்ப தலை வலிக்குது என்று சொன்னேன். அவரும் சொல்லி வைத்தார்போல மூளைக்கு அதிக வேலை அதான் என்றார்.

நாகார்ஜீனன், சிவ.சு, தமிழன்பன், ஷண்முகம் போன்றோர் கடந்த இருபது வருஷமாக பேசிப்பேசி, பழுத்து அவர்களுக்குள் கனிந்த கோட்பாட்டு, கதையாடல், சொல்லாடல் சம்பந்தமான உரையாடல்களை, இவ்வளவு காத்திரமாக கேட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

நாகார்ஜீனன் பேசியவற்றில் நான் உள்வாங்கிய சில விஷயங்கள். கோட்பாட்டின் தேவை என்ன? என்று அவர் எழுப்பிய கேள்விக்கு, அவர் வாசகத்தில் இருந்து, பதில் கருத்தாக வந்த விஷயங்கள். (இதில் அவர் கூறிய வார்த்தை அப்படியே இருக்கலாம், சற்று மாறியும் இருக்கலாம்.) ‘மெட்டீரியலும், ஐடியாவும் சேருமிடம்தான் கோட்பாடு. கோட்பாடு என்பது முடிவற்றவை. எவ்விஷயத்தையும் சீராக எடுத்துக்கொள்வதில்லை. தற்போது கோட்பாடுகளில் அக்கறை இல்லை. எழுத்தாளர்கள் தங்கள் மீது முதலீடு வைத்துள்ளார்கள். ஒவ்வொருவரும் தன்னையே வெளிப்படுத்திக்கொள்கிற விஷயம் நடக்கிறது. படைப்புச்செயல் என்ன, படைப்பாளர் அதில் என்னத்தை நடத்துகின்றார் (நடத்துகின்றாரா? ஒரு வேளை கடத்துகின்றார் என்பதாகவும் இருக்கலாம்) புது விஷயத்தை படைப்புக்குள் கொண்டுவருவதுதான் மெட்டீரியல் எனப்படுகிறது. எழுத்தாளன் தங்களை இன்வெஸ்மெண்ட் செய்தலிலிருந்து வெளிவரவேண்டும். படைப்பாளி, படைப்பு, படைப்புசெயல்பட்ட இடம், காலம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.‘ என்று பேசினார்.

நண்பர் லோகநாதன் கூட்டத்திற்கு போகும்போதே சொன்னார். அக்கூட்டத்திற்கு பேசவருகிறவர்கள் எல்லோருமே ஜீனியர்ஸ்கள்தான். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. பேசும்போது புரிவதுபோல் இருக்கும் ஆனால், பல விஷயங்கள் புரியவே புரியாது. அது நம்முடைய குறைபாடாகவும் இருக்கலாம். ஏனென்றால் அவர்கள் படைப்புக்குறித்து தொடர்ந்து பேசுகிறார்கள், ஆய்வு செய்கிறார்கள் ஒப்பிட்டு பார்க்கிறார்கள். நாம் அப்படி செய்வதில்லை அதனால்கூட நமக்கு போதாமை இருக்கக்கூடும் என்றார். அது முற்றிலும் உண்மை என்றே எனக்கு படுகிறது. இருந்தாலும் அவர்கள் ஜெயமோகன், சுந்தரராமசாமி, கோணங்கி ஆகியோரைப்பற்றி படைப்பு அல்லது மதிப்பீகள் குறித்து பேசியதில் எனக்கு பல கேள்விகள் இருக்கிறது அடுத்த பகுதியில் பார்க்கலாம்.


எனக்கு புரிந்தவரையில். சட்டத்தை புணிதமாகக் கடைபிடித்துக்கொண்டு, கண்டுபிடிப்பாளர்களை, உற்பத்தியாளர்களை, திருடர்களை, நுகர்வோரை ஒரு கூட்டுக்குள் அடைத்து, அதற்குள்ளிருந்து மிஞ்சி எழும் விளைவின் வெளிப்பாட்டை புதியதொரு வாழ்விற்கான பரிசோதனை வெளி (படைப்பாக்க உத்தி) என்று பெருமகிழ்வு கொள்வது பின்நவீனத்துவம்.

சட்டம் தேவையில்லை. மனிதன் தன் மன ஒழுங்கை பிரதானப்படுத்திக்கொண்டு, அவன், சிரிப்பையும், அழுகையையும், எதிர்கால கனவுகளையும், வாழ்தலுக்கான புதிய வழிமுறைகளையும் நடிப்புத்  தன்மையற்று உள்ளதை உள்ளபடியே அப்பட்டமாக சுவாரசியத் திற்கான வகைமைகளை வைத்திருப்பது. (அதிலிருந்து ஒரு புதிய புதிய முறைகளை அங்கீகரிப்பது) நவீனத்துவம்

ஜாமாலன் விருது நிகழ்வில் விவாதங்களில் நாகார்ஜீனன்  பேசும்போது ஜெயமோகன் எங்களை ஒதுக்குப்புறமாக தள்ளிவைத்திருக்கிறார். எங்கள் கோட்பாடுகள் விசாரங்களில் அவருக்கு நம்பிக்கையில்லை. (இதை நாகார்ஜீனன் வாசகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால், இந்தக் கருத்தை வலியுறுத்தும் தொனிதான் இருந்தது.) என்கிற அடிப்படையில் பேசுகிறார். சுந்தர ராமசாமி ஒரு படைப்பைக்குறித்து விமர்சனம் செய்கிறார் என்றால். அதில் எங்கள் கோட்பாட்டின் அடிப்படையிலிருந்தும், அவைகளின் மையத்தில் இருந்தும் படைப்பை விளக்குவதற்கு அவருக்குத் தெரியாது.

கோணங்கிக்கு விளக்கு விருது கிடைத்திருக்கிறது. விருது கொடுப்பவர்கள் அவரின் எழுத்துக்கள் புரிந்துதான் விருது கொடுக்கிறார்களா? என்று விவாத்தின்போது பேசினார். மேலும் நம்மாழ்வார், விவேகானந்தர், திருக்குறள். எல்லாம் வெளியுலகுக்கு போவதற்கு ஏதோ இருக்கு, அதனால் போயிருக்கு. மற்றபடி படைப்புகள் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு போக தமிழ் படைப்புகளில் என்ன இருக்கு. என்ன இருக்கு என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

இங்கேதான் அறிவாளியாக இருந்தாலும், அவர்களுக்குள் அறியா தனங்களும் சேர்ந்தே இருப்பது இருக்கத்தான் செய்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஏதோ காரணத்தால் அமைந்துவிட்டபடி, ஒரு குழந்தைக்கு இரு தகப்பன் உரிமை கொண்டு, தெரிந்தும், தெரியாமலும் பொத்தி பொத்தி வளர்ப்பதுபோல நவீனத்துவம், பின்நவீனத்துவம், இலக்கியத்தை கையாளவேண்டும்.  அதைவிடுத்து என்னிடம், என்னிடம் வளர்ந்தால்தான் என்று தெருவில் நின்றால் அக்குழைந்தை நோஞ்சானாகத்தான் மிஞ்சும்.
ஜெயமோகன், சுந்தர ராமசாமி இவர்களை ஏதோ இலக்கியக் கத்துக்குட்டிகளைப்போல மிக லேசாக சொல்லிவிடுகிறார் நாகார்ஜீனன். படைப்பாளர்களிடம் விவாதத்திற்குறிய விஷயங்கள் இருக்கலாம் அது வேறு விஷயம். நாகார்ஜீனன் இப்படி சொல்வதற்கு அவரை எது தூண்டியிருக்கிறது. தர்கத்தின் மூலம் நிறுவப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையே காரணம் என்று நினைக்கிறேன். கோட்பாடு என்பது அறிவியல் சார்ந்து நிறுவப்பட்ட உறுதியான சட்டம் போன்றது. அதனால்தான் சட்டத்தீர்ப்பை எழுதுகிறவர்களுக்கு தன்னளவில் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ, அதேபோன்று கோட்பாடு கையகப்படுத்தி வைத்திருப்பவருக்கும், தில் குறையாதளவு நம்பிக்கையிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் மற்ற இலக்கியத்தரத்தை குறைவாக மதிப்பீடு செய்யத்துணிகிறது.

அந்த நம்பிக்கைதான் மேற்குலகுக்கு ஏற்றுமதி செய்கிற அளவுக்கு தமிழ் படைப்புகளில் ஒன்றும் இல்லை என்று முற்றாக அவரால் சொல்லமுடிகிறது. தமிழ் படைப்புகளை வெளியுலகுக்கு கொண்டு செல்வதற்கும் மெனக்கெடுவதற்கும் இங்கிருக்கும் அறிவாளிகளுக்கும், வசதி படைத்தோருக்கும் தாராளமனம் இருக்கிறதா என்பதைக்கேட்டுப் பார்க்கவேண்டும். குருமார்கள் சார்ந்தோ, மதம் சார்ந்தோ, அறம் சார்ந்தோ படைப்புகள் வெலியுலகு தாராளமாக செல்கிறதென்றால் காரணம் என்ன? குருமார், மதம், இனம் சார்ந்த பெருமை பரப்புதல் காரணத்திற்காக கூட்டாகவோ, தனிமனிதனாகவோ பெரும் முயற்சிக்கு பிறகு படைப்புகள் வெலியுலகு செல்கிறது. தமிழ் படைப்பு சார்ந்து யார், எந்த கூட்டாளிகள், கூட்டணிகள் இச்செயலை செய்ய முற்படுகிறது என்பதை நாகார்ஜீனன் அறிந்தாரா என்பது தெரியவில்லை.

இலக்கியத்தை பாடும் எல்லா இயக்கங்களில் கோட்பாட்டை கைவிடாது இருப்பவர்களானாலும், எதார்த்தத்தை கடைபிடிப்பவர்களானாலும், சகோதரத்துவத்தை கடைபிடிப்பவர்களானாலும் அவரவர்களுக்குள்ளும் எரிந்து, தணிந்த பிறகும் கணந்துகொண்டிருக்கும் நெருப்புக்கங்குகளாக விழித்து விழித்து காட்டிக்கொண்டுதான் இருக்கிறது பழிபாடல். உண்மையானது எதுவும், உண்மையாக மனிதனிடம் இல்லை. ஒருவன் பெரும்பாடைக்கடந்து மொழியை பிறர் நுகர்ந்து மகிழ்ந்து, ஆழ்ந்து, ரசனைத்தன்மையுடன் அணுகும்படிக்கொடுப்பது இலக்கியம் அல்லாமல் வேறென்னவாக இருக்கும். 

டேனியல்

No comments: