நியாயமாஆஆர்ரே நியாயமாஆ செய்யுங்க நியாயமார்ரே!
எரியும் பனிக்காடும்- பரதேசிகளும்
1939 சாலூர் கிராமம் என்று படம் தொடங்குகிறது. காலைநேரத்தில் ஒரு கிராமம் எப்படி எல்லாம் செயல்படத்தொடங்கும். மிகத்துள்ளியமாக செய்திருக்கிறார்கள். ஒரு மூலையில் பிள்ளைகள் விளையாடுவது, இன்னொரு பக்கம் பாணையில் தண்ணீர் ஊறறுவது, இன்னொருப்க்கத்தில் இயற்கை உபாதைக் கழிக்கச் செல்வது. சில பெரியவர்கள் பேசிச்செல்வது இதுமட்டுமல்லாமல், முறிந்த பன ஓலை கூரைகள் குறுக்கும் நெடுக்குமான சந்துகள் என நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். அதில் ஒட்டுப் பொறுக்கி தமுக்குப்போடுகிறான். இந்த ஒட்டுப்பொறுக்கி மிக சோம்பேரியாக, வீடு வீடாக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகிற மனம் தெளிவுடைய வாலிபன். இவன் தேயிலைத்தோட்டத்திற்கு போனபிறகு கோணி கந்தல் சட்டையாகத் தரப்படவில்லை.இந்தக் கிராமத்திலேயே கோணிக் கந்தையை உடுத்தியிருக்கிறான். மாமா, அத்தை, பெரியம்மா, பெரிய்ப்பா என்று பழகுகிறவன் இப்படிக்கோணிக்கந்தை அணிந்திருப்பது விசித்திரம்தான்.
இவன்தான் நாவலின் கதை நாயகனான கருப்பன். பஞ்சம் தலைவிரித்தாடுகிற சூழ்நிலையிலும் வேலை தேடி அலைகிற பண்புடையவன். தான் பட்டினி கிடந்தாவது பெற்ற தாயையும் மனைவிப்பிள்ளைகளையும் காப்பாற்றுகிற மன தைரியம் படைத்தவன். ஒரு போராளி குணம் படைத்தவன் தோட்டத்தில் கங்காணியின் அட்டகாசம் தாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் மனைவியை துரைமாருக்கு தாரை வார்த்து தர நினைக்கிறபோது, கங்காணியை கொலை செய்வேண்டும் என்ற நிலைக்கு வருகிறவன். இப்படிப்பட்ட பாத்திரத்தை ஒரு அரிஜன மனிதனுக்கு கட்டமைத்தால் பூமி தாங்காது என்ற அடிப்படையில்தான். பாலா நாவலின் உண்மையான பாத்திரத்தை மிகக்கேவலமாக, ஒட்டுப்பொறுக்கியாக சித்தரித்துவிட்டார். அய்யோ, இவன் நாவலில் வருகின்ற கருப்பன் அல்ல என் சுயசிந்தையில் வடிக்கப்பட்டது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் இவன்தான் நாவலிலும்/ சினிமாவிலும் நாய்க்கர்மார் டீக்கடையில் வேலைகேட்டு வெளியூருக்கு வருகிறான். விறகுபிளக்கிறான். இவன்தான் கங்காணியை முறைத்துப்பார்க்கிறப் பாத்திரம்.
இன்னும் சற்று விவரமாகச் சொல்லவேண்டுமென்றால் நாவலில் வருகின்ற கருப்பன் வள்ளி பாத்திரத்தைப் பிரித்து பாலா இரண்டுஜோடியாக்கிவிட்டார்.. கருப்பனை ஒட்டுப்பொறுக்கியாக்கி, அவனுக்கு ஒரு காதலியைக் கட்டமைத்தது, வள்ளிக்கு கல்யாணம் செய்து அவளுக்கு கணவன் பாத்திரத்தை கொடுத்திருக்கிறார். நாவலில் இருப்பதை அப்படியே எடுக்க, பாலா விஷயம் தெரியாதவரா என்ன என்றக்கேள்வியை எழுப்பலாம். சினிமா மொழிக்கென்று பல விஷயங்களை மாற்ற வேண்டியிருக்கிறது. என்று சொல்லலாம். நானும் மறுக்கிறவன் அல்ல. சினிமா பாணியை மெருகேற்ற புதியப் பாத்திரத்தை உருவாக்கினால் பரவாயில்லை. ஆனால், உண்மையாய் உழைக்கின்ற, தன் குடும்பத்தை முன்னேற்ற நினைக்கின்ற பாத்திரத்தை, ஒரு இழிவான பாத்திரம் போன்று சித்தரிப்பது நியாமா? சரி என்று ஏற்கமுடியுமா? இது நிரபராதியை வேண்டுமென்றே குற்றவாளியாய் தீர்ப்பதற்குச் சமமான செயல் அல்லவா?
போலிகள் என்றுமே ஜெயிக்காது என்பதற்கு பாலாவால் உருவாக்கப்பட்ட செயற்கையான இந்த இரு பாத்திரங்களும் கதையில் ஒரு வலுவான இடத்தைப் பெறவே இல்லை. மேலும் கதைக்களன் 1939ல் நடக்கிறது. காதல் மட்டும்-2012ன், நவ நாகரீகக் காதல். எல்லா நுணுக்கங்களையும் கையாண்ட ‘பாலா‘ ஒன்றை யோசிக்க மறந்துவிட்டடார். 1939களில் பொதுவாக பெண்களைத் தனித்து ஊரைச்சுற்றி வரவிடுவார்கள் என்பது சந்தேகம். இன்னொன்று பத்து பனிரெண்டு வயதை நெருங்கும் நிலையிலேயே கல்யாணம் முடித்துவிடுவார்களே. 13 14 வயதுவரைகூட கல்யாணம் ஆகாமல் பெண்கள் இருக்க, வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கும்போது சற்றும் உண்மையில்லாமல் ஒரு பெண் திருட்டுத்தனமாக கற்பமாகிவிட்டாள் என்பது ஏற்கவே முடியவில்லை. நாவலிலும், படத்திலும் இருக்கும் கருப்பன் என்கிற ஒட்டுபொறுக்கி, வள்ளி என்கிற கறுப்பு கண்ணி இவர்கள்தான். இரு படைப்புகளிலும் உண்மையான கதாநாயகர்கள்.
நாவலில் வள்ளி கடைசிவரை துரைகளிடமும், கங்காணியிடமும் சிக்காமலே துண்பங்களை அனுபவித்து, போராட்டங்களைச் எதிர்கொண்டு ஒரு கட்டத்தில் நோயின் பாதிப்பினால் மரித்துப்போகிறாள். ஆனால், பாலா அவளை கருப்பு கண்ணியாக்கி வலுக்கட்டயாமாக துரைகளுக்கு தத்தம் செய்துவிடுகிறார்.
இன்னொன்று, நாவலில், முக்கியமாக கூலிகளு ரேசன் முதலிய பொருட்களை விற்பனை செய்கிற நபர் செட்டியார். ஆனால், பாலா அந்த நபரை முஸ்லீமாக கட்டமைத்தது ஏன் என்றே தெரியவில்லை? மனிதனுக்கு கொடுந்துரங்களை ஏற்படுத்துகிறவன், உயர் சாதி மக்கள் அல்ல. என்று சொல்லும் விதமாக விட்டுவிட்டாரா?
நாவலில் டாக்டர் பாத்திரம். உழைப்பாளி மக்களுக்கு ஒரு விடிவெள்ளி போன்று வந்துசேர்ந்தவர். சொந்த நாட்டிற்கே மலையகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில். உள்ளுர் பணப்பேய்களும் துரைகளின் எலும்புத்துண்டுக்கும், எச்சில் சாராயத்திற்கும் அடிமை சேவகம் செய்துகொண்டு தன் சொந்த மக்களையே நெருப்பில் வாட்டிய நிலையில். டாக்டர்தான் கொஞ்ச கொஞ்சமாக நிலைமையை சரிசெய்கிறார். ஏறக்குறைய இயற்கை உபாதை கழிக்கக்கூட கம்பெனிகள் இதுவரை முயற்சி செய்யாததைக்கண்டு புலம்புகிறார். தொழிளாளர்களுககு ஆதரவாக இரவு பகல் பார்க்காமல் மருத்துவம் செய்து உழைக்கிறார். அப்படிப்பட்ட பார்திரத்தைத்தான் மிக உயரிய கலைஞனான பாலா கொஞ்சங்கூட மனசாட்சியில்லாமல் போக்கிரியும், நகைச்சுவையும் கலந்த குடிகார டாக்டராக சித்தரிக்கிறார். இன்னொரு நிலமை என்னவென்றாள் மதம்மாற்றம் செய்யகிற வேலையை முழு மூச்சாய் செய்வதுபோல் காட்டுகிறார். ஆனால், நாவலில் ஒரு இடத்தில்கூட மக்களுக்கு கடவுளைப்பற்றி போதனையோ, மதத்திற்கு ஈர்க்கும் படியான வார்த்தைகளையோ பார்க்கவேமுடியாது. மேலும் வேதனைத்தரக்கூடய விஷயம் என்னவென்றால் இதில் வருகின்ற டாக்டர்தான், ரெட் டீ ( எரியும் பனிக்காடு) என்ற நாவலையும் எழுதியவர். பி.எச் டேனியல் நாவலில் கொட்டிவைத்த தங்கங்களை மிக அழகாக பொறுக்கி நிதானமாக நீண்ட கூர்வாளாக செய்து பி.எச் டேனியலின் கல்லறையைத்தோண்டி அவரின் எலும்புகளை பொடியாக நறுக்கியிருக்கிறார் என்றால் பாலாவின் நேர்மையை என்ன சொல்வது.
நாவலின் எதார்த்தத்தை பிரிதிபலிக்காத இடங்கள். நாவலின் தொடக்கமே திருநெல்வேலி மாவட்டம் மழையின்றி பஞ்சத்தால் அடிபட்டுக்கிடக்கிறது. மயிலோடை கிராமத்தில் மக்கள் பிழைக்க வழிதெரியாமல் தவிக்கிறார்கள். இந்த நிலையில் ஏஜெண்டுகள் மூலம் பல ஊர்களில் இருந்து மக்களை நயவஞ்சகமாக பேசி மூளைசலவைசெய்து ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை அழைத்துச்செல்கிறார்கள். அழைத்துச்செல்கிறவன் வெள்ளைக்காரன் அல்ல உள்ளூர் பணத்தாசை பிடித்த மனிதர்கள்தான். அவர்கள் அநேகமாக உயர்சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சினிமா இந்த இயல்பை கடைபிடிக்கவில்லை. ஒரே கிராமத்திலிருந்து மக்களைக் கூட்டிச்செல்வதுபோல் இருக்கிறது. மேலும் பஞ்சம் பிழைக்கச்செல்கிறார்கள் என்று படித்துவிட்டு, அதற்கான காட்சிப்படுத்தல் கைவிட்டிருக்கிறார்கள். சோறு கீழும்மேலும் கொட்டி பரிமாறுகிற அளவுக்கு வசதி வாய்ப்புகள் அக்கிராமத்தில் கிடக்கிறது. கொட்டாங்கச்சி, தையல் இலை கூடையில் சோறு என்று 1939ன் பாரம்பரியத்தைக் காட்டியவர்கள். சோறு மட்டும் 2012ன் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை வெளேர் சோற்றை போடுகிறார்களேப்பா. அந்தகால கார் அரிசி, கிச்சிலிச்சம்பா, கப்பச்சம்பா பூரி அரிசி எல்லாம் கிடைக்கவில்லைபோல.
நாவலைப் படிக்காதவர்கள் பாலாவின் மிக அற்புதமான வறலாற்றுப்பதிவு என்று சொல்வார்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேன் தலித் வரலாற்றை பொதுத்தன்மை வாய்ந்ததாக சாதி, மதமற்ற மக்களின் வரலாறாக உள்நோக்கத்தோடு மாற்றியதைத் தவிர்த்துவிட்டு. ஆனால், எந்த பொதுத்தன்மை வாய்ந்த கட்டமைப்புகளும் அன்று ஆயிரக்கணக்கான கருப்பனும் வள்ளியும் அனுபவித்த துயரத்தை மீட்டுத்தரவேமுடியாது.
தமிழ் சினிமாத்துறையில் ஒரு சாரார் நான்தான் கலையை வாழவைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு உலகப் படங்களை அச்சு பிசகாமல் காப்பியடித்து பணம் சம்பாதித்துக் கொள்கிறார்கள். பாலா அப்படியெல்லாம் இல்லை. நம் சொந்த மண்ணின் அடித்தட்டு மக்களின் வாழ்வை பதிவு செய்கிறார் என்று பெருமைபட்டால் அந்த நேரம் பார்த்து இப்படி உண்மைகளை தன் விருப்பப்படி பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கி வரலாறை கட்டமைக்கிறாரே என்று வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லை.
ஒட்டுப்பொறுக்கி இதயத்தில் அன்பான காதலியின் நினைவு வாட்ட, நரகத்திலிருந்து தப்பமுடியாமல், நாதியற்ற நிலையில், பசுமைதோட்டத்தின் நடுவே (பணம், ஊடகவாய்ப்புக் கிடைத்தவனுக்கு சமூகம் சுற்றி பசுமைத்தோட்டமாகவும். அது கிடைக்காத அடித்தட்டு மனிதன் எங்கும் நகரமுடியாமல் கிடக்கும் துண்டு பாறையாகவும்தான் எனக்குத்தெரிகிறது) பாறைமீது உட்கார்ந்து, ஆதர்வாவின் உச்ச நடிப்பாக தன் முழுபலத்தையும் கூட்டி கத்துவதுபோல்.
நானும் இந்த 2013லிலும் கத்தவேண்டியிருக்கிறது “நியாயமாஆஆர்ரே தலித்தின் சரித்திரமாக இருப்பதால் கருப்பனை, ஒட்டுப்பொறுக்கியாக சித்தரிப்பது நியாயமா? நியாயமாரே. பொறிக்கியை பொறுக்கி என்றும் நேர்மையானவனை நேர்மையாகவும் சொல்வதும்தானே நியாயம் நியாயமாரே. அடித்தட்டு மக்களை கண்டுகொள்ளாமல் விடுபவரைவிட இது மோசமான செயல்தானே நியாயமாஆரே.
ஜே. டேனியல்
எரியும் பனிக்காடும்- பரதேசிகளும்
‘பாலா’ எரியும் பனிக்காடு சினிமாவாக எடுக்கிறார் என்று நண்பர்கள் சொன்னபோது அந்நாவலை நூலகத்திலிருந்து கொண்டுவந்து வாசித்தேன். பரவாயில்லை நல்ல களத்தைத்தான் தேர்வுசெய்திருக்கிறார். என்று நினைத்தேன். தற்போது, பரதேசி பார்க்க நண்பர் ஒருவர் சென்ற சனிக்கிழமை அழைத்தார். போகமுடியவில்லை. அன்றே மாலைக்காட்சிதான் பார்க்க முடிந்தது. நாவலின் பாத்திரங்கள் அதன் தன்மைக்கு இல்லாமல் மாற்றி அமைத்திருப்பது போன்று தோன்றியது. ஏட்டில் இருப்பதுபோன்றே அமைக்கமுயாதுகூட இருக்கலாம். இருந்தாலும், நாம் சரியாக வாசிக்கவில்லையோ. அன்றிரவே மீண்டும் நாவலை வாசித்தேன். ஞாயிறு மதியத்திற்குள் முடித்தேன். மீண்டும் ஞாயிறு மாலைக்காட்சி அதேப்படத்தைப் பார்த்தேன்.
பாலாவின் குழு உண்மையிலேயே மிகக்கடினமாக உழைத்து எடுத்திருக்கிறார்கள். ஒரு பெருங்கூட்டத்தை கையாண்டு, ஒன்று படுத்தி நடிக்கவைப்பது சிரமமான விஷயம்தான். கிராமம், காடு, தோட்டம் என்று எல்லா இடங்களிலும் வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார். பாலா இப்படியான வரலாறுகளை கையில் எடுப்பது வரவேற்கவேண்டிய விஷயம். சிறு குழந்தைகளில் இருந்து கிழவிகள் வரை, கொட்டாங்கச் சியிலிருந்து, கோணிப்பை வரை எதார்த்தம் மாறாமல் நிறைவேற்றியிருக்கிறார். சிலது விடுபட்டும் இருக்கிறது. சற்று மங்கிய ஒளியில் கூட, எல்லா இயற்கை வளங்களையும் ரசிக்க முடிகிறது. இரண்டு பாடல்களைத்தவிர பின்னணி இசை எதோ கலந்து கொட்டும் விதமாக இருக்கிறது. கங்கை அமரன் குரலில் இளையராஜாவை ருசித்ததுபோன்று உணர்வு இருந்தது. கூன் கிழவியின் வசைமொழி, டாக்டரின் “கர்த்தருக்குள் அய்க்கியமாயிட்டாளா? ஆகனும்” என்கிற இரட்டை அர்த்தம் தோய்ந்த வசனம் உள்பட நகைச்சுவை, சோகம் என்கிற வகையில் நாஞ்சில் நாடன் தன் பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார்.
ஆதர்வா நல்ல முறையில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகிகளும் சரி, கூன் கிழவி, குழந்தைகள், மக்களோடு மக்களாக கூட்டமாக நடந்துச் செல்லும்போதும் சரி எல்லோரிடமும் நிறைவான அனுபவத்தையே உள்வாங்கமுடிகிறது. அதற்கு பாலாவின் உழைப்புதான் காரணம். பாலா மட்டுமல்ல அவரின் கூட்டுக்குழுக்களும் காரணம் என்றும் சொல்லலாம்.

இவைகளைத் தவிர்த்து, நாவலில் வரும் பார்திரங்களின் தன்மையை ஏன் மாற்றினார்? மாற்றப்பட்டப் பாத்திரம் எது? எது? அதன் அரசியல் என்ன? இவைகளை சற்று விளக்கமாக என் அறிவுக்கு எட்டியவரை சொல்லவேண்டியது அவசியமாக இருக்கிறது. அது, என்ன பயனை ஆற்றப்போகிறது என்றாலும்கூட. சமூகத்தில் வெறுமனே கைக்கால்களை ஆட்டிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. இல்லை என்றால், நான் சீக்கிரம் புதைக்கப்பட்டும் விடலாம். விஷயத்துக்கு வருகிறேன்.
போகிற போக்கில் நாவலும், பரதேசியும் கலந்துவர வாய்ப்பிருக்கிறது, பார்த்து பின் தொடருங்கள்.

பி.எச் டேனியல் 1941 லிருந்து 1965 வரை இருபத்தி ஐந்தாண்டுகள் தேயிலைத்தோட்டத்தில் பணி புரிந்ததின் அடிப்படையில் இந்நாவலை எழுதியிருக்கிறார். மிக முக்கியமாக தொண்ணுறு விழுக்காடுக்கும் மேலாக அரிஜன மக்கள்தான் புலம்பெயர்ந்தார்கள். கொஞ்சம்பேர் நாகர்கள் அதில் சிலர் கேரள உயர்சாதி மக்கள் என்கிற புள்ளிவிவரத்தை முன்னுரையில் சொல்லுகிறார். நாவலின் உயிரோட்டமாக கருப்பன், அவன் மனைவி வள்ளி இவர்கள் தான் முக்கியப்பாத்திரம். இவர்களை வைத்துதான் நாவல் முழுக்க பயணம் செய்கிறது. உபரி பாத்திரங்களாக கங்காணி, கருப்பனுக்கு முன்பாகவே தோட்டத்தில் வேலை செய்யும் ஒரு குடும்பம். கொழுந்தனுடன் இருக்கும் ஒரு பெண். துரைமார்களுக்கு உடன் பணியாளர்களை பேசிமுடிக்கும் சற்று வயதான பெண். கூலிகளுக்கு பலசரக்கு கடன்கொடுக்கும் செட்டியார், கம்பௌண்டர், துரைகள், மற்றும் டாக்டர் இவர்கள்தான் நாவலின் முக்கியப்பாத்திரம். இப்பாத்திரங்களை பாலா எப்படி மாற்றியிருக்கிறார் என்று பார்ப்போம்.
1939 சாலூர் கிராமம் என்று படம் தொடங்குகிறது. காலைநேரத்தில் ஒரு கிராமம் எப்படி எல்லாம் செயல்படத்தொடங்கும். மிகத்துள்ளியமாக செய்திருக்கிறார்கள். ஒரு மூலையில் பிள்ளைகள் விளையாடுவது, இன்னொரு பக்கம் பாணையில் தண்ணீர் ஊறறுவது, இன்னொருப்க்கத்தில் இயற்கை உபாதைக் கழிக்கச் செல்வது. சில பெரியவர்கள் பேசிச்செல்வது இதுமட்டுமல்லாமல், முறிந்த பன ஓலை கூரைகள் குறுக்கும் நெடுக்குமான சந்துகள் என நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். அதில் ஒட்டுப் பொறுக்கி தமுக்குப்போடுகிறான். இந்த ஒட்டுப்பொறுக்கி மிக சோம்பேரியாக, வீடு வீடாக பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துகிற மனம் தெளிவுடைய வாலிபன். இவன் தேயிலைத்தோட்டத்திற்கு போனபிறகு கோணி கந்தல் சட்டையாகத் தரப்படவில்லை.இந்தக் கிராமத்திலேயே கோணிக் கந்தையை உடுத்தியிருக்கிறான். மாமா, அத்தை, பெரியம்மா, பெரிய்ப்பா என்று பழகுகிறவன் இப்படிக்கோணிக்கந்தை அணிந்திருப்பது விசித்திரம்தான்.
இவன்தான் நாவலின் கதை நாயகனான கருப்பன். பஞ்சம் தலைவிரித்தாடுகிற சூழ்நிலையிலும் வேலை தேடி அலைகிற பண்புடையவன். தான் பட்டினி கிடந்தாவது பெற்ற தாயையும் மனைவிப்பிள்ளைகளையும் காப்பாற்றுகிற மன தைரியம் படைத்தவன். ஒரு போராளி குணம் படைத்தவன் தோட்டத்தில் கங்காணியின் அட்டகாசம் தாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் மனைவியை துரைமாருக்கு தாரை வார்த்து தர நினைக்கிறபோது, கங்காணியை கொலை செய்வேண்டும் என்ற நிலைக்கு வருகிறவன். இப்படிப்பட்ட பாத்திரத்தை ஒரு அரிஜன மனிதனுக்கு கட்டமைத்தால் பூமி தாங்காது என்ற அடிப்படையில்தான். பாலா நாவலின் உண்மையான பாத்திரத்தை மிகக்கேவலமாக, ஒட்டுப்பொறுக்கியாக சித்தரித்துவிட்டார். அய்யோ, இவன் நாவலில் வருகின்ற கருப்பன் அல்ல என் சுயசிந்தையில் வடிக்கப்பட்டது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் இவன்தான் நாவலிலும்/ சினிமாவிலும் நாய்க்கர்மார் டீக்கடையில் வேலைகேட்டு வெளியூருக்கு வருகிறான். விறகுபிளக்கிறான். இவன்தான் கங்காணியை முறைத்துப்பார்க்கிறப் பாத்திரம்.
இன்னும் சற்று விவரமாகச் சொல்லவேண்டுமென்றால் நாவலில் வருகின்ற கருப்பன் வள்ளி பாத்திரத்தைப் பிரித்து பாலா இரண்டுஜோடியாக்கிவிட்டார்.. கருப்பனை ஒட்டுப்பொறுக்கியாக்கி, அவனுக்கு ஒரு காதலியைக் கட்டமைத்தது, வள்ளிக்கு கல்யாணம் செய்து அவளுக்கு கணவன் பாத்திரத்தை கொடுத்திருக்கிறார். நாவலில் இருப்பதை அப்படியே எடுக்க, பாலா விஷயம் தெரியாதவரா என்ன என்றக்கேள்வியை எழுப்பலாம். சினிமா மொழிக்கென்று பல விஷயங்களை மாற்ற வேண்டியிருக்கிறது. என்று சொல்லலாம். நானும் மறுக்கிறவன் அல்ல. சினிமா பாணியை மெருகேற்ற புதியப் பாத்திரத்தை உருவாக்கினால் பரவாயில்லை. ஆனால், உண்மையாய் உழைக்கின்ற, தன் குடும்பத்தை முன்னேற்ற நினைக்கின்ற பாத்திரத்தை, ஒரு இழிவான பாத்திரம் போன்று சித்தரிப்பது நியாமா? சரி என்று ஏற்கமுடியுமா? இது நிரபராதியை வேண்டுமென்றே குற்றவாளியாய் தீர்ப்பதற்குச் சமமான செயல் அல்லவா?
போலிகள் என்றுமே ஜெயிக்காது என்பதற்கு பாலாவால் உருவாக்கப்பட்ட செயற்கையான இந்த இரு பாத்திரங்களும் கதையில் ஒரு வலுவான இடத்தைப் பெறவே இல்லை. மேலும் கதைக்களன் 1939ல் நடக்கிறது. காதல் மட்டும்-2012ன், நவ நாகரீகக் காதல். எல்லா நுணுக்கங்களையும் கையாண்ட ‘பாலா‘ ஒன்றை யோசிக்க மறந்துவிட்டடார். 1939களில் பொதுவாக பெண்களைத் தனித்து ஊரைச்சுற்றி வரவிடுவார்கள் என்பது சந்தேகம். இன்னொன்று பத்து பனிரெண்டு வயதை நெருங்கும் நிலையிலேயே கல்யாணம் முடித்துவிடுவார்களே. 13 14 வயதுவரைகூட கல்யாணம் ஆகாமல் பெண்கள் இருக்க, வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கும்போது சற்றும் உண்மையில்லாமல் ஒரு பெண் திருட்டுத்தனமாக கற்பமாகிவிட்டாள் என்பது ஏற்கவே முடியவில்லை. நாவலிலும், படத்திலும் இருக்கும் கருப்பன் என்கிற ஒட்டுபொறுக்கி, வள்ளி என்கிற கறுப்பு கண்ணி இவர்கள்தான். இரு படைப்புகளிலும் உண்மையான கதாநாயகர்கள்.
நாவலில் வள்ளி கடைசிவரை துரைகளிடமும், கங்காணியிடமும் சிக்காமலே துண்பங்களை அனுபவித்து, போராட்டங்களைச் எதிர்கொண்டு ஒரு கட்டத்தில் நோயின் பாதிப்பினால் மரித்துப்போகிறாள். ஆனால், பாலா அவளை கருப்பு கண்ணியாக்கி வலுக்கட்டயாமாக துரைகளுக்கு தத்தம் செய்துவிடுகிறார்.
இன்னொன்று, நாவலில், முக்கியமாக கூலிகளு ரேசன் முதலிய பொருட்களை விற்பனை செய்கிற நபர் செட்டியார். ஆனால், பாலா அந்த நபரை முஸ்லீமாக கட்டமைத்தது ஏன் என்றே தெரியவில்லை? மனிதனுக்கு கொடுந்துரங்களை ஏற்படுத்துகிறவன், உயர் சாதி மக்கள் அல்ல. என்று சொல்லும் விதமாக விட்டுவிட்டாரா?
நாவலில் டாக்டர் பாத்திரம். உழைப்பாளி மக்களுக்கு ஒரு விடிவெள்ளி போன்று வந்துசேர்ந்தவர். சொந்த நாட்டிற்கே மலையகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில். உள்ளுர் பணப்பேய்களும் துரைகளின் எலும்புத்துண்டுக்கும், எச்சில் சாராயத்திற்கும் அடிமை சேவகம் செய்துகொண்டு தன் சொந்த மக்களையே நெருப்பில் வாட்டிய நிலையில். டாக்டர்தான் கொஞ்ச கொஞ்சமாக நிலைமையை சரிசெய்கிறார். ஏறக்குறைய இயற்கை உபாதை கழிக்கக்கூட கம்பெனிகள் இதுவரை முயற்சி செய்யாததைக்கண்டு புலம்புகிறார். தொழிளாளர்களுககு ஆதரவாக இரவு பகல் பார்க்காமல் மருத்துவம் செய்து உழைக்கிறார். அப்படிப்பட்ட பார்திரத்தைத்தான் மிக உயரிய கலைஞனான பாலா கொஞ்சங்கூட மனசாட்சியில்லாமல் போக்கிரியும், நகைச்சுவையும் கலந்த குடிகார டாக்டராக சித்தரிக்கிறார். இன்னொரு நிலமை என்னவென்றாள் மதம்மாற்றம் செய்யகிற வேலையை முழு மூச்சாய் செய்வதுபோல் காட்டுகிறார். ஆனால், நாவலில் ஒரு இடத்தில்கூட மக்களுக்கு கடவுளைப்பற்றி போதனையோ, மதத்திற்கு ஈர்க்கும் படியான வார்த்தைகளையோ பார்க்கவேமுடியாது. மேலும் வேதனைத்தரக்கூடய விஷயம் என்னவென்றால் இதில் வருகின்ற டாக்டர்தான், ரெட் டீ ( எரியும் பனிக்காடு) என்ற நாவலையும் எழுதியவர். பி.எச் டேனியல் நாவலில் கொட்டிவைத்த தங்கங்களை மிக அழகாக பொறுக்கி நிதானமாக நீண்ட கூர்வாளாக செய்து பி.எச் டேனியலின் கல்லறையைத்தோண்டி அவரின் எலும்புகளை பொடியாக நறுக்கியிருக்கிறார் என்றால் பாலாவின் நேர்மையை என்ன சொல்வது.
நாவலின் எதார்த்தத்தை பிரிதிபலிக்காத இடங்கள். நாவலின் தொடக்கமே திருநெல்வேலி மாவட்டம் மழையின்றி பஞ்சத்தால் அடிபட்டுக்கிடக்கிறது. மயிலோடை கிராமத்தில் மக்கள் பிழைக்க வழிதெரியாமல் தவிக்கிறார்கள். இந்த நிலையில் ஏஜெண்டுகள் மூலம் பல ஊர்களில் இருந்து மக்களை நயவஞ்சகமாக பேசி மூளைசலவைசெய்து ஒன்றும் தெரியாத அப்பாவி மக்களை அழைத்துச்செல்கிறார்கள். அழைத்துச்செல்கிறவன் வெள்ளைக்காரன் அல்ல உள்ளூர் பணத்தாசை பிடித்த மனிதர்கள்தான். அவர்கள் அநேகமாக உயர்சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சினிமா இந்த இயல்பை கடைபிடிக்கவில்லை. ஒரே கிராமத்திலிருந்து மக்களைக் கூட்டிச்செல்வதுபோல் இருக்கிறது. மேலும் பஞ்சம் பிழைக்கச்செல்கிறார்கள் என்று படித்துவிட்டு, அதற்கான காட்சிப்படுத்தல் கைவிட்டிருக்கிறார்கள். சோறு கீழும்மேலும் கொட்டி பரிமாறுகிற அளவுக்கு வசதி வாய்ப்புகள் அக்கிராமத்தில் கிடக்கிறது. கொட்டாங்கச்சி, தையல் இலை கூடையில் சோறு என்று 1939ன் பாரம்பரியத்தைக் காட்டியவர்கள். சோறு மட்டும் 2012ன் பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை வெளேர் சோற்றை போடுகிறார்களேப்பா. அந்தகால கார் அரிசி, கிச்சிலிச்சம்பா, கப்பச்சம்பா பூரி அரிசி எல்லாம் கிடைக்கவில்லைபோல.
நாவலைப் படிக்காதவர்கள் பாலாவின் மிக அற்புதமான வறலாற்றுப்பதிவு என்று சொல்வார்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேன் தலித் வரலாற்றை பொதுத்தன்மை வாய்ந்ததாக சாதி, மதமற்ற மக்களின் வரலாறாக உள்நோக்கத்தோடு மாற்றியதைத் தவிர்த்துவிட்டு. ஆனால், எந்த பொதுத்தன்மை வாய்ந்த கட்டமைப்புகளும் அன்று ஆயிரக்கணக்கான கருப்பனும் வள்ளியும் அனுபவித்த துயரத்தை மீட்டுத்தரவேமுடியாது.
தமிழ் சினிமாத்துறையில் ஒரு சாரார் நான்தான் கலையை வாழவைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு உலகப் படங்களை அச்சு பிசகாமல் காப்பியடித்து பணம் சம்பாதித்துக் கொள்கிறார்கள். பாலா அப்படியெல்லாம் இல்லை. நம் சொந்த மண்ணின் அடித்தட்டு மக்களின் வாழ்வை பதிவு செய்கிறார் என்று பெருமைபட்டால் அந்த நேரம் பார்த்து இப்படி உண்மைகளை தன் விருப்பப்படி பொய்யாக்கி, பொய்யை உண்மையாக்கி வரலாறை கட்டமைக்கிறாரே என்று வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லை.
ஒட்டுப்பொறுக்கி இதயத்தில் அன்பான காதலியின் நினைவு வாட்ட, நரகத்திலிருந்து தப்பமுடியாமல், நாதியற்ற நிலையில், பசுமைதோட்டத்தின் நடுவே (பணம், ஊடகவாய்ப்புக் கிடைத்தவனுக்கு சமூகம் சுற்றி பசுமைத்தோட்டமாகவும். அது கிடைக்காத அடித்தட்டு மனிதன் எங்கும் நகரமுடியாமல் கிடக்கும் துண்டு பாறையாகவும்தான் எனக்குத்தெரிகிறது) பாறைமீது உட்கார்ந்து, ஆதர்வாவின் உச்ச நடிப்பாக தன் முழுபலத்தையும் கூட்டி கத்துவதுபோல்.
நானும் இந்த 2013லிலும் கத்தவேண்டியிருக்கிறது “நியாயமாஆஆர்ரே தலித்தின் சரித்திரமாக இருப்பதால் கருப்பனை, ஒட்டுப்பொறுக்கியாக சித்தரிப்பது நியாயமா? நியாயமாரே. பொறிக்கியை பொறுக்கி என்றும் நேர்மையானவனை நேர்மையாகவும் சொல்வதும்தானே நியாயம் நியாயமாரே. அடித்தட்டு மக்களை கண்டுகொள்ளாமல் விடுபவரைவிட இது மோசமான செயல்தானே நியாயமாஆரே.
ஜே. டேனியல்
No comments:
Post a Comment