சேரி அக்காவின் தோட்டம்
சேரியின் அக்காவிற்கு
அத்தோட்டம் சொந்தமல்ல
தற்செயலாக பெருமுதலாளியால்
பாராமரிக்கப் பணிக்கப்பட்டவள்
பெரு முதலாளி நேரடியாக
சேரி அக்காவிடம் முழு பொறுப்பையும்
ஒப்படைக்கவில்லை
சற்று தூரத்தில் ஒரு மச்சுவீட்டின்
முதலியை இடை கணக்கராக
வைத்துச்சென்றார்.
தோட்டத்தின் அருகிலேயே முள் வேலி
மேற்கூரையற்ற சிறிய அறைதான்
தோட்டத்தை பண்படுத்தல் தொழிலுக்கு
சேரியின் நான்கு பையன்கள்தான்.
சேரி அக்கா பையன்களை
தம்பி என்றழைத்தாள்
உழவு மாடு இல்லாதபோது
இரு பையன்கள் தோளில்
நுகத்தடி இழுத்தார்கள்
விதையிட்டபிறகு புழுதியில்
ஒருவன் விரைத்துப்படுக்கு
ஒருவன் பிரம்பாக இழுத்தான்
ஒரு சால் முடிந்தபிறகு
இன்னொருவன் பிரம்பாக
இழுபட்டு விதை மூடினார்கள்
விளைந்தவைகளில் பங்கேதும் கேட்க்கவில்லை
மழைக்கும், வெயிலுக்கும்
தற்காத்துக்கொள்ள சேரி பையன்கள், சேரி அக்காவின்
ஓட்டு வீடுபோல் இல்லை என்றாலும்
ஓலை கூரை வேய்ந்துத் தருவாள்
ஆவலாய்க் காத்திருந்தார்கள்.
சேரி அக்கா பலகாலம்,
சேரி பையன்களை
தம்பி என்றழைப்பதை மறக்கவில்லை.
விளைந்ததை பெருமுதலாளிக்கும்,
கணக்கர் முதலிக்குக் கையளித்து
கால் இடுக்கின் நடுவாக
முழங்காலிட்டு நிற்கின்றாள்
சேரி பையன்கள்
முள் வேலியின் மேற்கூரையற்ற
சிறிய அறைக்குள்
சேரி அக்காவை
பலகாலம்போல், இன்றும்
நம்பி நுகத்தடிகளை சுமக்கிறார்கள்
சேரி அக்காவின் பராமரிப்புத் தோட்டத்தில்.
ஜேடி
No comments:
Post a Comment