Friday, August 7, 2015

‘நாவல்‘ அறிமுக குறிப்புகள்

//...பெஞ்சின் முழு அளவிற்கும் கண்ணாடிப் போடப்பட்டிருந்தது. இரண்டுக்கு, இரண்டு மொழு மொழுப்பான இயற்கைப்படம். பின் தோற்றத்தில் பசுந்தரைகளும், பலவிதப் பூஞ்செடிகளும், புற்களும் பார்வைக்கு மிக நெருக்கத்தில் இருந்தது. பட்டாம் பூச்சிகளும், தும்பிகளும் மன மகிழ்ச்சியுடன் பறக்கும்  சூழல் அழகாக இருந்தது. தூரக்காட்சியில், பெருமரத்தில் அடிவயிற்றில் நிறம்மாறி உயிரிகள் ஊர்ந்திருந்தது. உயிரிகளை, பார்வையாளர்கள் வெகு சீக்கிரத்தில் காணமுடியாதபடி இருந்தது. முதுமொழி வாசகம், அவ்விடத்தின் ஒட்டுமொத்த மதிப்பீட்டையும் நிர்ணயிக்கும்படியாக இருந்தது. சத்தியனுக்குத் தலைகீழாகவும், எதிர்த்திசையில் அமர்கிறவர்களுக்கு வாசிக்கும்படியாகவும் இருந்தது. ஒண்ணரை லிட்டர்த் தண்ணீர்க்கேண் பெஞ்சின் மேல், சத்தியன் சிறமப்படாமல் எடுக்கும்படி இருந்தது. பாட்டிலின் மேல் நீல நிற ஆங்கில எழுத்துக்கள் அடங்கிய ஸ்டிக்கர்ச்சுத்தப்பட்டிருந்தது. எமி, அறையில் நுழைந்தான். எல்லாவற்றையும் தன் எண்ணப்படி, சிறப்பாக முடித்திருந்த நிம்மதி சத்தியன் முகத்தில் இருந்தது.

“சார், உள்ளுக்குள்ளே வைத்திருந்து இப்படிப் பண்ணிட்டிங்கிளே சார். பத்து, பதினோரு வருஷமா, ஒரு மூத்த சகோதரனின் அன்பில் வயப்பட்டவன்போல் உங்களிடம் இருந்தேனே சார். என்ன இருந்தாலும், நான் பெருக்கிறவன், நீங்க தலைமை ஆசிரியர்னு. உங்க அதிகாரத்தைக் காட்டிட்டிங்களே சார்“...//

நான் எழுதும் நாவலில் இருந்து
ஜெடி


No comments: