இருட்டு
மயம்
நான் உறங்கிக்கொண்டிருக்கும்போதே
என்னை பொருட்படுத்தாமல்
தலையில் கல்லைப்போடுவதுபோல்
நிறுத்தப்படுகிறது
அறையின் மின் விசிறி
குழந்தை கதறும் குரல்கேட்டு
குளிர்ப் பதனப்பெட்டியில் உறங்கும்
வாடகை மார்பகத்தை எடுக்கிறாள்
கெட்டபிறகும்
வெண்மையாக இருக்கும்
வாடகை மார்பகம்
தீயிலிட்டபோதுதான்
குழந்தையோடு சேர்த்து
தாயும் கதறுகிறாள்
அதிகாலைதோறும்
எட்டு வயதில்
மூணு பைசா கூலிக்கு
முதலாளியிடம் முடக்கப்பட்ட வாழ்வு
கலையின் முதுகுத் தோலை
உறிக்கும் விதமாக
கையில் உயிர்த்தெழுந்தது
கூர் உளி
இருபது ஆண்டுகளாய்
இயந்திரத் துணையுடன்
அரசியல்வாதி கந்துவட்டிக்காரன்,
கையூட்டுவாங்குபவன் சிக்கன சீமான்களின்
தலைவாசலை
என் மூளையில்
வடிந்தத் தச்சு கலையால்
நிறப்பி வைத்தேன்
போவதும் வருவதும்
அதன் இயல்பானதால்
கலையின் பிரம்மாவை
காலணிபோல் கயட்டிவிட்டு
கையில் பிரஷ் ஏந்தி
காலந்தள்ளப் புறப்பட்டேன்
பெயிண்ட் வேலைக்கு.
குடி மக்கள்
குடிக்காமலே
இரவும் பகலும்
தள்ளாடுகிறார்கள்
கார்பரேட் கம்பெனிகளின்
கழிவறையில் எரிகிறது
500 வாட்ஸ் சோடியம்
கருத்தடை மாத்திரையும் காண்டமும்
கண்ட இடத்தில்
வீசாமல் இருக்க.
ஜேடி

No comments:
Post a Comment