பி.எச் டேனியல் எழுதிய இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த இரா. முருகவேள் தனது அறிமுக உரையில் “ஆனை மலைக் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலைத் தோட்டங்களில் அடியுரமாய் இடப்பட்டவை எமது உயிர்கள். ....நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சிக்குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருக்கிறது எமது உதிரம்...” என்று ஆதவன் தீட்சன்யாவின் வாசகத்தைப் போட்டிருகிறார். இதில் ஆங்கிலேயரை மட்டும் சொல்வதில் நியாயமில்லை. தென் மாவட்டங்களின் வறட்சியின் காரணமாக ஏதோ ஒரு மூலையில் ஒருவேளை அரிசி சோற்றுக்குக் கூட வழியில்லாமல் திண்டாடும் மக்களை நயவஞ்சகமாய் ஏமாற்றி ஆசை வார்த்தைகளைக் கூறி ஆடு, மாடுகளைப் போல ஏற்றிச்சென்று திறந்த வெளி அடிமைச்சிறைகளில் (தேயிலைத் தோட்டங்களில்) அமர்த்தியது யார்? என்றக் கேள்வியோடு இந்த நாவல் எனக்கு ஏற்படுத்தியதை இங்கு பதிர்ந்துகொள்கிறேன்.
நாவல் 1925 டிசம்பர் இரவு திருநேல்வேலி மாவட்டத்தின் மயிலோடை என்ற கிராமத்தில் தொடங்குகிறது. அச்சிறு கிராமம் கொடிய பஞ்சத்தால் சுருண்டு வதங்குகின்றன. அக்கிராம மக்கள், தங்கள் குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் பல்வேறு யோசனைகளைப் பயன்படுத்தி, பிழைப்புக்கான வழிகளைத்தேடி அலைகிறார்கள். இப்படியே இருந்தால் எல்லோரும் பசியால் சாகவேண்டியதுதான் என்று கருப்பன் எண்ணுகிறான். கயத்தாறு போனால் ஏதாவது வேலை கிடைக்கும் என நம்பினான். கயத்தாறில் சுற்றியுள்ள கிராம மக்கள் எல்லாம் தங்களுக்கான காய்கறிகள், பொருள்கள் வாங்கக் கூடுகிற இடம். கருப்பன் கடை கடையாக ஏதாவது வேலையிருக்கிறதா என்று கேட்கிறான். எல்லோரும் அலட்ச்சியப்படுத்தி விரட்டுகிறார்கள். தன்னை மேம்பட்ட சாதியாக நினைத்துக்கொண்டிருக்கிற ஒரு நபர் உணவுவிடுதி வைத்திருக்கிறார். அங்கு வசதிபெற்றவர்களை தன் ஓட்டலில் பென்ச்சிலும், தலித்துகள் வந்தால் தனிக் கொட்டகையிலும் உணவு பரிமாரப்படும். அந்த முதலாளி கருப்பனிடம் கட்டை பிளக்கவேண்டும் ஆனால் இப்போது இல்லை இன்னொரு நாளைக்கு வா என்கிறான். கருப்பன் இன்றே கொடுத்தால் குடும்பத்தை பசியிலிருந்து காப்பாற்ற முடியும் என்று கெஞ்சுகிறான். முதலாளி இப்போது கட்டாயமாக மறுத்துவிடுகிறான்.
நீண்ட நேரம் கருப்பனைக் கவனித்துக் கொண்டிருக்கிற வெள்ளைக்காரனின் வாந்திகளை வந்தனம் செய்து சாப்பிட்டுத் தன் தொந்திகளை வளர்க்கும், நமக்குச்சொந்தமான உள்ளூர் வெள்ளையன். ஏசுவின் போதனைப்போல் தேயிலைத்தோட்டங்களின் சாகசங்களைப் பசுமை நிரைந்த எதிர்காலங்களை கருப்பன் மூளைக்குள் தினிக்கிறான். ஏற்கனவே வசதி வாய்ப்புகளை பெற்றுக்கொண்டவர்கள் எப்பேர்ப்பட்ட பஞ்சகாலங்களிலும் தங்கள் செல்வங்கள் குறைந்து போகாமல் இறுக்க உழைப்பாளிகளின் வயிற்றை பச்சைத்தண்ணீரால் கூட நிரப்ப மனம்மற்று, கூலிகளைக்கொண்டு தங்கள் வசதிவாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள நினைக்கிறார்கள்.
கருப்பனின் நிலையைப் புரிந்துகொண்ட சங்கரபாண்டியன் மேஸ்திரி, தேயிலைத் தோட்ட வேலைக்கு முன்பணமாக நாற்பது ரூபாய் கடனாக வாங்கித்தருகிறான். அதன் மூலம் தேயிலைத் தோட்டத்துக்கு அடிமைகளாகிறான். சொர்க்கலோகத்துக்கு அழைத்துச் செல்வதுபோல ஆயிரமாயிரம் அப்பாவி மக்களை மலையின் உச்சியில் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். தாங்கள் திரும்பிச் செல்கிறபோது செல்வச் சீமான்களாய் வீடுதிரும்புவோம் என்ற கனவுகள் வந்த கொஞ்ச நாட்களிலேயே பொய்யாய்ப்போகிறது. ஒரு செடியின் வளரும் கொழுந்தையே வளரவிடாமல் கிள்ளிப்போடுகிறவர்கள் தங்கள் வாழ்வை எப்படி வளரச்செய்வார்கள் என்று எந்தத் தொழிலாளியும் யோசிக்கவே இல்லை,
கயத்தாறில் தனக்காகப் பேசி நாற்பது ருபாய் கடன் வாங்கிக்கொடுத்ததால் தன் குலதய்வம், புத்தன், காந்தி என்றெல்லாம் காட்சிதந்த சங்கரபாண்டியன் மேஸ்திரி, மலையுச்சியில் வந்தவுடன் நானே இம்மலையின் ராட்ச்சசத் தலைவன் என்கிற விதமாகமாறிவிட்டானே என்று நினைக்கிறபோது கருப்பனுக்கு அதிற்சியாக இருந்தது. கூட்டம் கூடடமாக அழைத்து வரப்படுகின்ற மக்கள் ஒரே டெண்டுக்குள் இரண்டு குடும்பம் மூன்று குடும்பங்கள் என்று தங்கவைக்கிறார்கள். அந்த குடிலுக்குள்ளேதான் குடும்பம் நடத்த வேண்டும். கூலிகளுக்குத் தனிப்பட்ட எந்த விருப்பும் இருக்கக்கூடாது. ஆட்களின் பெயர் பதிவு செய்துவிட்டபிறகு தேயிலை எஸ்டேட்டுக்கு முழு அடிமைகளாகிவிடுகிறார்கள். அவர்களின் தகவல் தொடர்பான போஸ்ட் கார்டுகளைக்கூட கண்காணிக்கப்படுகிறது. கூலிகளின் உறவுகள் போடுகின்ற தபால்களை மேஸ்திரிகள் பிரித்து வாசிப்பார்கள். அதில் எழுதிப்பட்டிருக்கிற வாசகங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு ஏன் கடிதத்தையே மறைத்துவிட்டு கூலிகளிடம் உங்கம்மா நல்லா இருக்கிறாங்களாம், எங்களுக்கு போதுமான காசு கையில் இருக்கிறது .நீங்க பணம் ஏதும் அனுப்பவேணாம்னு சொல்லி இருக்கிறாங்க அந்த லெட்டரைப் படிச்சிட்டு எங்கோ வச்சேன் கானல என்று சொல்கிறார்கள்.
ஏற்கனவே வெள்ளையரின் கையாட்களாய் இருக்ககின்ற வியாபாரிகள் உயர்சாதி வகுப்பினர் துரைமார்களுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு கூலிகளிடம் தன் தன் மனம் போனப் போக்கில் கணக்கு சொல்லுவது என்ற நிலை இருக்கிறது காளிச்செட்டியார் மளிகை கடையில் வைக்கிற விலைதான். ஓரு முறை கடன் வாங்கிவிட்டால் வாழ்நாள் முழுவதும் அக்கடனில் இருந்து மீளவே முடியாது. கருப்பனின் கனவு நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்துகொண்டே வருகிறது.
மேஸ்திரிகள் வெள்ளை துரைகளின் நம்பிக்கைக்குரிய மனிதர்களாய் இருப்பதற்கு, தங்களுடைய சொந்த மக்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாக வேலை வாங்குகிறார்கள். வருடந்தோறும் வெயில் நாட்களில் கொடிய காச்சலில் விழுந்து குழந்தைகள் பெரியவர்கள் மரிப்பதும், மழைக்காலங்களில் நிமோனியா போன்ற நோய்களில் குவியல் குவியலாக குழந்தைகள், ஆண்கள், பெண்கள் மரித்துப்போகிறார்கள் என்பதை வாசிக்கிறபோது எவ்வளவு துயரங்கள் நடந்தேறியிருக்கிறது என்று வேதனைப்படத்தான் முடிகிறது, பெண்களுக்கு கூடுதலாக மார்பு நோய்கள் தொடங்கிவிடுகிறது. மழைகாலங்களில் மனிதனின் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் படை படையாய்க் கிளம்பிவிடும். கூலிகளின் குடிசைகளிலும் புகுந்து குடிசை வாசி மனிதர்களை வேட்டையாடுகிறது. அட்டை மனிதர்களின் கால்களிலும் கைகளிலும் ஏறி ஒட்டிக்கொள்கிறபோது அதைப்பிடித்து இழுத்தால் ரத்தம் பீரிட்டு அடிக்கும், ஒண்ணு ஒண்ணாகப் பிடுங்கி போடும்போது ரத்தம் மாலை மாலையாக வழியும் இப்படி வழிந்து அவதிப்பட்டாளும் மேஸ்திரிகள் ஒருவனையும் குடிசைக்குள் தங்கவைப்பதில்லை, வேலைக்கு போ போ என்று துரத்துவான் பெண்கள் கை கால் வீங்கக்கிடந்தாலும் கூட இரக்கமற்ற (அக்காலகட்டத்தில் ஒண்ணு ரெண்டு கணக்குக்கூட தெரியாதவர்களை இங்கிலாந்து நாட்டு பெற்றோர்கள் இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய துரத்திவிட்டார்களாம் வீட்டுக்கும் அடங்காமல், விவரமும் இல்லாத நபர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள்) வெள்ளையர்களாக மாறி நாமெல்லாம் ஒரே இனம் என்கிறவன், தன் இன மக்களையே வதைத்து எடுக்கிறார்கள் மேஸ்திரிகள்.
இருபது பேர் அல்லது ஐம்பது கொண்ட கூலிகளுக்கு ஒரு மேஸ்திரி. ஒவ்வொரு கூலியும் அதிகமானக் கொழுந்து கிள்ளி சம்பாதித்தால் அதில் இருபது இருபத்திஐந்து விழுக்காடு மேஸ்திரிக்கு கமிஷன் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு கூலிகளின் வருமானத்திற்கு தகுந்தார்போல் மேஸ்திரிகளுக்கு வருமானம் கிடைப்பதால் கூலிகளை விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார்கள்.
தோட்டங்களில் பெண்கள் வேலை செய்யும்போது வெள்ளைதுரைகள் வந்துவிட்டால் எந்த பெண் தேவையோ அவர்களைத் தூக்கி குதிரையில் வைத்துக்கொண்டுபோய்விடுவார். பெண்ணின் கணவன் இருந்தாலும் ஒன்றும் கேட்கமுடியாது கேட்டால் அவர்களைக் கடுமையான வேலை வாங்குதல் அவர்களுக்குத் தரவேண்டிய ரேஷன்களைக்குறைத்தல் குடிசையை மாற்றி ஒன்றுக்கும் உதவாத இடங்களில் தங்கவைத்தல் என்று கொடுமைக் கூடிக் கொண்டே போகும்.
அதேசமயம் வெள்ளை துரைகளையும் மேஸ்திரிகள், எழுத்தர்களின் இச்சையைப் புரிந்துகொண்டு சாமாளிக்கத்தெரிந்த பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காத உபசாரங்கள் செல்வங்கள் வந்து குவிந்துவிடுகிறது. மேலும் தோட்டங்களில் கஷ்டமான வேலைகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். கருப்பன் வள்ளி போன்ற நேர்மையான உழைப்பைச்செலுத்துகிற குடும்பங்கள் எந்த விசாரனையும் இன்றி தேயிலைத் தோட்டங்களின் பசுமைக்கு எருவாகி இருக்கிறது. இந்த பரந்த பனிக்காட்டின் ரத்தம் தோய்ந்த மணணுக்கு முதன் முதலாக ஆபிரஹாம் என்கிற டாக்டர் வருகிறார். அவர்தான் தேயிலைத் தோட்டத்தின் அக்கரமங்களைக் கண்டு கொதிக்கிறார், மனிதர்கள் மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்று பொருமுகிறார்.
கணக்கு முடிக்கும் போதெல்லாம் மேஸ்திரிகளும், கடன் தரும் காளிச்செட்டியாரும் கணக்கில்லாமல் குத்து மதிப்பாக ஏற்றிச் சொல்லும் கணக்குகளால் இரண்டு வருஷமாக தன் கிராமம் போகமுடியாமல் தவிக்கும் கருப்பன், வள்ளி இந்த வருஷமாவது எப்படியாகிலும் போய்விட வேண்டும் என்று நினைக்கும்போது, வள்ளி மிகக்கொடூரமாக நோய்வாய் படுகிறாள். புதிதாக வந்த டாக்டர் எத்தனையோ மருத்துவம் தந்தும் காப்பாற்ற முடியவில்லை வள்ளி இறந்துபோகிறாள். கருப்பன் எல்லாக் கனவுகளும் தகர்ந்த நிலையில் தனிமையாகிறான். இரண்டு நாள் கழித்து மேஸ்திரி, உன் மனைவிக்கு காரியங்கள் செய்த கடன் அதிகமாக இருக்கிறது வேலைக்கு போடே என்று சொல்வதுடன் நாவல் முடிகிறது.
சமூகத்தில் ஒருவனிடமிருந்து பொருளைக் கொள்ளையடித்து விடுகிறார்கள் அல்லது ஒருவனை உலகத்தில் இல்லாமல் கொலை செய்துவிடுகிறார்கள். ஒருவன் பொருளை முற்றிலுமாக இழந்துவிட்டால் மீண்டும் சுதாரித்துக் கொண்டு பிழைத்துக் கொள்ளலாம், அதேபோல கொலையுண்டால் ஒருவேளை ஐந்து நிமிடமோ அரைமணி நேரமோ அவன் வாழ்வு அதோடு முடிந்தவிடும், ஆனால், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களை நயவஞ்சகமாய் ஏமாற்றி நிர்கதியான இடத்தில் கொண்டுபோகிறார்கள். காலம் முழுக்க அவர்களின் பெலத்தை எல்லாம் சுரண்டிக்கொள்ளுதல், அவர்கள் வாழ்வையே அவர்களுக்கு இல்லாமல் செய்தல் என்பது ஒரு ஆட்சியாளனின் போர்க்குற்றத்தைவிட, இரக்கமற்ற தீவிரவாதத்தை விடக்கொடுமையானது.
தற்காலத்தில் எழுதப்படுகிற நாவல்கள் தங்களுடைய தொழில் முறையுக்திகள் தங்களுடைய முழுமையான கற்பனைச் சாகசங்களை முதன்மையானதாக வைத்துக்கொண்டு இடையிடையிடையில் அங்கங்கு சில சில மனிதர்களின் மேம்போக்கான வாழ்வியலை தென்படவைக்கும் முறைகளிலிருந்து ‘எரியும் பனிக்காடு’ முற்றிலும் சமூகத்தின் ரத்தமும் சதையுமான அப்பட்டமான வாழ்வியலை முன்வைக்கிறது. இதன்மூலம் பணமுதலாளிகளின் மனசாட்சியை சற்றேனும் உளுக்கிவிடுவது. தூரத்து பசுமையை நம்பி அப்பாவித்தனமாய் வந்து விழுகிறவர்களின் எண்ணத்தை யோசிக்கவைப்பது, அல்லது இவர்களே ஒரு போராட்டத்தின் மூலமாக தங்கள் நியாமான கூலிகளுடன் வாழ்வைப்பெறுவது என்பது நடந்தேறுகிற வாய்ப்பு இருக்கிறது. அக்கால எழுத்துக்கள் மிகவும் போர்குணம்மிக்கதாக இருந்தது. அதனால், சில இடங்களில் சமூகத்தை மாற்றம்கானச் செய்கிற நிகழ்வை நடத்திக்காட்டியது. அக்கால மனிதர்கள் அடக்கு முறையாள னென்றால் எந்த பச்சாதாபங்களுக்கும் செவிசாக்காமல் முற்றிலும் தங்கள் செய்லபாடே சிறந்ததென்று தனித்தன்மையுடன் நின்றார்கள். அதேபோல நீதிமான்கள் என்றாள் எந்த அநியாயத்திற்கும அடிபணியாது தூக்கு மேடைவரை ஒரே முடிவுடன் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் சிலர் எழுதும்போது மிக வீரியமான எழுத்து, மனதை ஆயுதத்தால் கீறுகிறக் காரியத்தைச் செய்தது. ஆனால், தற்போதைய சமூகம் அப்படியில்லை. ஆட்சியாளனும், பணமுதலைகளும், எல்லா மனிதர்களும் ஏன கடைநிலையில் உள்ள மனிதன்வரை தங்கள் இயல்பை வெளியில் காட்டிக் கொள்வதே இல்லை. ஒவ்வொருவருக்கும் தகுந்தார்போல செயல்பட தெரிந்து வைத்திருக்கிறார்கள். தங்கள் இயல்புத்தன்மையை நிறுவுகிற தனிமனிதன் மிகக்குறைவு. அப்படியே இருந்தாலும் அவர்களை இச்சமூகம் வெளிப்படையான பயித்தியங்கள் என்று முத்திரைக் குத்திவிடுகின்றன. ஆகவேதான், இப்படியானச் சூழலில், யாருடைய எழுத்துக்களானாலும் வெறுமனே ரசிக்கவும், நேரத்தை கடத்த வாசிக்கவுமான தளங்களாக மாறிவிட்டன. இந்தப்போக்கில் எழுத்து அல்லது படைப்பு சமூகத்தில் எந்த மாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
பி.எச். டேனியல் அக்கால கட்டங்களில் தேயிலைத்தோட்டங்களின் மக்கள் பட்ட கஷ்டங்களை மிகவும் கரிசனை உள்ளத்தோடு பதிவுசெய்திருக்கிறார். தலித்துகள், பள்ளர்கள், வசதியற்ற சில உயர்சாதி மக்கள், கேரளத்திலிருந்தும் தரகர்களால் ஆட்களைப் பிடித்து வந்துள்ளனர் என்கிற வரலாற்றின் பதிவை தெரிந்துகொள்ள முடிகிறது. ஆயிரமாயிரம் பின்தங்கிய மக்களால்தான் தேயிலைத் தோட்டத்தின் வளர்ச்சி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பணத்தாசைப் பிடித்த வெள்ளையனும், வெள்ளையனை விடக்கொடுரமாய் தங்களுடைய மக்களைத் தமிழனே வதைத்துள்ளான் என்பதை அறிகிறபோது, உலகத்தின் எந்த மூலையின் மனிதனாக இருந்தாலும் இதயத்தில் இரக்கம், ஈதல், போதும் என்கிற மனநிலையற்ற எவனையும் மனிதனாக சொல்லத்துனிய மனம் கூசவேண்டும் என்ற முடிவுக்கு வருகிறேன்.
சமீபமாக நான் வாசித்த எந்த நாவலும் இந்தளவு மனதைச் சிதைக்கவில்லை.
ஜே. டேனியல்

No comments:
Post a Comment